Friday, July 14, 2006

அடடே வாங்க.. வாங்க.... (பாகம்-1)

எதாவது புது விசயம் சொல்லிருப்பேன் நினைச்சு வந்திருந்திங்கனா என்னை மன்னிச்சுருங்க.இந்த மாதிரி எல்லாம் எழுதலாமுனு முடிவுக்கு வந்ததே லக்கிலுக் பதிவு பார்த்துத்தான்.மனுசன் ஒரு நாளைக்கி ரெண்டு பதிவு கணக்கப்போட்டுறார்.அனோகமா ஏதோ சாப்ட்வேர் கம்பெனியில் கஷ்டமான வேலை பாப்பார் போலிருக்கு.அதான் மச்சிக்கு நிறைய நேரம் கிடைக்கிது.நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.உருப்படியில்லாத ஒவ்வொரு விசயமா உருப்படியா பதிவேத்திறதுனு.

அப்பா சாமிகளா நான் எந்த இடத்திலேயும் லக்கிலுக் உருப்படியா ஒன்னும் எழுதவேல்லைனு சொல்லலை.கலகத்த மூட்டிவிட்டு கம்முன்னு கப்பளா கட்டைய கக்கத்தில் வெச்சிக்கிட்டு போயிறாதிங்க....

விசயத்துக்கு வர்றேன்.என்னானு நீங்களை படியுங்களேன். நான் அஞ்சாவது படிச்சப்போ எங்க சித்தாப்பா பைக் ஒன்னு எங்கள் குடும்ப நண்பரிடம் இருந்து வாங்கினார்.அப்போ என் சித்தாப்பா இந்த வண்டி எண் கூட்டுத்தொகை 8 வரலை அதானல கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னார்.என்னா கூட்டுத்தொகை என்னானு எனக்கு ஒரே குழப்பம்.குடும்பநண்பர் அவர்களே எனக்கு விளக்கமளித்தார்.அன்னக்கி பிடித்தது ஒரு வியாதி எந்த பைக் இல்ல காரு எந்த நம்பர் போர்டு இருந்தாலும் அதோட எண்களை கூட்டுத்தொகை பார்க்கிறது.எவ்வளவு அவசர வேலையில் வெளியே போனாலும் சரி இந்த பழக்கம் போக மாட்டேன்னு உயிரை வாங்குது.
ஒரு தடவை நானும் என் பிரண்டும் பைக்கில் சென்று வரும் போது இன்னொரு பைக் மோதி விழுந்தப்போ கூட அந்த இடிச்ச பைக்கோட எண்ணை கூட்டிப்பார்த்தேன்.இங்கே பெங்களுரு வந்ததுக்குப்பறம் அந்த கரும்மாத்தரம் ரொம்ப தான் வளர்ந்துப்போச்சு.ஏன்னா கொஞ்சநஞ்சமா வண்டிவாகனங்களிருக்கு இங்கே.

நானும் எவ்வளவோ மைண்ட் டைவர்ட் பண்ணிப்பார்த்துட்டேன்.ஹீகூம் ஒன்னும் முன்னேற்றத்த காணோம்.ஒரு தடவை டாக்டர்கிட்டே போனப்பே இதை பத்தி கேட்டேன்.அவரு போட்டார் ஒரு குண்டை.என்னனா அது ஒரு மனவியாதியாம்.அதுக்கு பேரு வேற என்னாமோ போபியான்னு சொன்னார்.அது இருந்தா இப்படிதானாம் பைசாக்கு லாயிக்கில்லாத வேலை எல்லாம் பார்க்கச்சொல்லுமாம். அதிலிருந்து எனக்கு மட்டும்தான் கடவுள் அருள் கொடுத்திருக்காரா இல்லை மத்தவங்களுக்கும் இருக்கானு ஒரு சந்தேகம்.இப்போ தீர்ந்துப்போச்சு ஏன்னா இனம் இனத்தோட சேருமுனு எங்கூரு சொலவாடை சொல்லுவாங்க.நல்ல வேளை உங்களுக்கும் அந்த போபியா இருக்கும் போல அதுதான் இதே முழுசா படிச்சிக்கிட்டு இருந்திங்க இல்ல........!!!!!!!!

இது பாகம் ஒன்னுதான்.இன்னும் நிறைய இருக்கு, ஒவ்வொண்ணா எழுதுறேன், வந்து படிங்க...நமக்கு நாமே அதரவு குடுத்தா தான் உண்டு....!

எப்போ தான் தீருமோ இந்த வியாதி நமக்கெல்லாம்..... :-)))))

(பி.கு:- குடும்பநண்பர் யார் எனில் மாண்புமிகு தவத்திரு குன்றக்குடி பொன்னாம்பல அடிகளார்.இது நடந்து 15 வருடங்களாகின்றன.இன்னமும் என் முழு பெயரையும் நினைவில் வைத்து அழைப்பார்.அவருடைய இளமை வயதிலேயே தமிழ்ப்பற்று மற்றும் பேச்சாற்றல் அருமையானது இன்னமும் கூட.என்னுடைய சிறிய வயதில் ஒரு அருமையான தாக்கத்தை ஏற்படித்திய நபர்களில் அடிகளார் முதன்மையானவர்.மேலும் அவருடைய தகவல்களை அடிகளாரின் அனுமதிப்பெற்று ஒரு பதிவிடுகிறேன்.)