Wednesday, May 30, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 6

சிந்தாநதி'யின் ஞாபகம் -1

வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2

CVR'ன் ஞாபகம் 3

ஜி'யின் ஞாபகம் - 4

கடைசியாக இம்சை அரசியின் ஞாபக மீட்டல்கள்:-

காவேரிக்கோ ஏதேதோ புரியாத உணர்வுகள் எழ ஆச்சர்யத்தில் இருந்து மீள முடியாதவளாய் குழம்பியபடி அமர்ந்திருந்தாள்.

==================-oOo-==================

திருமணத்திற்கு சென்று வந்ததிலிருந்து காவேரிக்கு ஓரே ஆச்சரியமாக இருந்தது. அன்று ஒரே ஒரு நாள் சில நிமிடங்கள் பேசி சென்றவன் எதற்காக இப்பிடி என்னை பற்றி எல்லா விபரங்களையும் சேகரிக்கனும், தான் தெரிஞ்சுக்கிட்டதை ஏன் சந்தர்ப்பம் எதிர்பார்த்து என்கிட்டே வந்து சொல்லனும், சே இந்த ஆம்பிளக எல்லாருமே இப்பிடிதான் இருக்காங்கன்னு மனதில் நினைத்துக் கொண்டாள். அச்சமயம் அவ்வழியே வந்த வசந்த் அவளிடம் வலிய வந்து பேச்சு கொடுக்கிறான்.

"ஹாய் காவேரி? என்ன பலத்த யோசனை?"

"ஹாய் வசந்த்! அதெல்லாம் ஒன்னுமில்லை! சும்மாதான் உட்கார்ந்து இருக்கேன், தட்ஸ் ஆல்"

"ஹிம் ஐ நோ! ஒன்னோட பெர்சனல் டீடெய்ல்ஸ் எதுக்கு நான் கலெக்ட் பண்ணேன்னு டவுட் இருக்கு? சரியா?"

"ஆமாம்! ஒங்களுக்கு...ம் ம் ஒனக்கு எதுக்கு இந்த வேலை?"

"அட நானா கேட்கலை தாயே! ஒன்னோட ஃப்ரண்ட் உமா'கிட்டே பேசிட்டு இருந்தேன், அவ சரியான ஓட்டை வாய் போலே! நான் ஒன்னு கேட்டா எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டா! அதுவுமில்லாமே சொல்லி முடிச்சிட்டு ஐ யம் ஸ்டெரைக்ட் ஃபார்வேர்ட்'ன்னு சொல்லுறா! நல்ல ஃபிரண்டா தான் பிடிச்சி வைச்சிருக்கே!"

"ஓ எல்லாம் அந்த ஓட்டைவாயி வேலைதானா? தென் ஓகே! அன்னிக்கு சடனா எல்லா டீடெல்ஸ் சொன்னதும் எனக்கு கொஞ்சம் டவுட் வந்துச்சு,"

"ஹிம் என்ன டவுட்?"

"ம்ம் சொல்லுறேன்! ஓகே வசந்த், கொஞ்சம் படிக்க வேண்டியது இருக்கு, அப்புறமா மீட் பண்ணலாம்"

இச்சந்திப்புக்கு பின்னர் தினமும் வகுப்பு முடிந்ததும் இருவரும் மாலையில் குறைந்தது 2 மணிநேரம் பேசி கொள்வதை பழக்கமாக்கி கொண்டனர்.கல்லூரி வளாகத்திலும், காவேரி தங்கியிருக்கும் ஹாஸ்டலிலும் காவேரி மற்றும் வசந்த்'யும் இணைந்து பேசுவதுதான் ஹாட் டாபிக்'ஆக இருந்தது, அதை நினைத்து காவேரியோ, வசந்தோ சட்டை செய்யாமல் இருந்தது தான் எல்லாருக்கும் மிக்க ஆச்சரியமாகவும், இன்னமும் பேசுவதற்கு தூண்டுக்கோலாகவும் இருந்தது, வசந்த் சில சமயங்களில் தன்னை பற்றி வரும் வார்த்தைகளுக்கு அமைதியாக சென்றாலும் காவேரி பற்றி வரும் சில கமெண்ட்களுக்கு மிகவும் கோபப்பட்டு சில சமயம் சண்டைக்கும் போகலானான்.

"என்னடி காவேரி? ஒன்கிட்டே நிறையவே மாற்றம் தெரிய ஆரம்பிச்சிருக்கே?" இப்பிடியொரு குதர்க்கமான கேள்வியோடு ஆரம்பித்தாள் உமா,

"நீ என்ன கேட்கவாறேன்னு எனக்கு கொஞ்சம் விளங்குது? அந்த வசந்த் நம்மோட கிளாஸ் கூட கிடையாது? ஏன் அவன்கிட்டே ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கேன்னு கேட்குறதுக்காக மாற்றமின்னு ஓரே வார்த்தையிலே கேட்டு பார்க்கிறே? அப்பிடிதானே?"

"வாவ்...கிரேட்'டீ! நான் என்ன கேட்கனுமின்னு நினைச்சனோ அதை நீயே சொல்லிட்டே? மரியாதையா சொல்லிரு?"

"Nothing Special உமா! Moreover நீ இப்பிடி பேசுறதும்,குதர்க்கமா கேள்வி கேட்கிறதையும் பார்க்கிறப்போ ரொம்ப வித்தியாசமா நான் ஃபீல் பண்ணுறேன்!"

"காவேரி! யூ மிஸ்டேக்கன் மீ! நார்மலா எல்லாருக்கும் வர்ற சந்தேகந்தான் எனக்கும் வந்துச்சு, ஐ யம் ஸ்டெரைக்ட் ஃபார்வேர்ட், ஸோ நான் கேட்டுட்டேன்!"

"ஹிம்! எங்களுக்குள்ளே அதெல்லாம் இல்லை! அப்பிடியே நடந்தாலும் நான் ஃபர்ஸ்ட் ஒனக்குதான் சொல்லுவேன்! ஓகே?"

உமா நேரடியாகவே வசந்த்'க்கும் தனக்கும் இருக்கும் உறவை பற்றி கேட்டதும் சற்று கோபப்பட்டாலும், அவன் மீது இவளுக்கு காதல் ஏதுவும் வந்துவிட்டதா என கூட கொஞ்சமே குழம்பிதான் போனாள். சரி இதை பற்றி அவனிடமே மறுமுறை சந்திக்கும் பொழுது பேசிக்கொள்ளலாம், என முடிவு செய்து கொள்கிறாள்.

"வசந்த்! நான் இப்போ கொஞ்சம் கன்பீயூசன் ஸ்டேஜ்'லே இருக்கேன்'ப்பா! உமா என்கிட்டே வந்து நீ வசந்த் லவ் பண்ணுறீயான்னு கேட்கிறா? வாட் த ராங் வித் அஸ், நாமே நார்மலா தான் இருக்கோம், ஏன் அவங்களுக்கு அப்பிடியொரு டவுட் வருது? டூ யூ ஹாவ் எனி ஐடியா?"

"காவேரி, இந்த லைப் அதாவது காலேஜ் கேம்ப்ஸ்'க்குள்ளே ஒரு பொண்ணும் பையனும் பேசிக்கிட்டா அது லவ் தான்னு கன்பார்ம் பண்ணுவாங்க... Free'யா விடு, எதுக்கும் டென்சன் ஆவாதே? By the way நானே இதை பத்தி பேசலாமின்னு இருந்தேன்! நீயே பேசிட்டே!"

"ச்சே! என்ன உலகம்'டா சாமி! வசந்த் நீயே சொல்லிருக்கே! நீ வீட்டுக்கு ஓரே பையன், அதுனாலே எந்த உறவுமுறை பாசமும் இல்லை, அதுவுமில்லாமே ரொம்பதூரத்திலே இருந்து வந்து இங்க நீ தங்கி படிக்கிற! அதேமாதிரி நிலைமைதான் எனக்கும், எனக்கு அம்மா கிடையாது, தம்பி,தங்கை,அண்ணன்,அக்கா'ன்னு எந்த பந்தபாசமும் கிடையாது, இப்போ இவங்கல்லாம் பேசுறதே பார்க்கிறோப்போ எனக்கு ஒரு ஃபிரண்ட்'ம் இல்லாமே போயிரும் போல இருக்கு!"

"அட ரொம்பதான் ஃபீல்'ஐ போடுறே? ஃFree'யா விடு! Be normal....காதல் வந்ததுக்கு காரணகாரியங்கள் சொல்லாலாம், ஆனா நமக்குள்ளே இருக்கிற நட்பை பத்தி எடுத்து சொல்லுறதுக்கு என்ன காரணம் சொல்லுவே? அவங்க என்ன சொன்னாலும் விட்டு தள்ளிட்டு போயிட்டே இரு, ஒருத்தருக்கு நீ பதில் சொல்ல ஆரம்பிச்சேனா எல்லாருக்கும் பதில் சொல்லிட்டே இருக்கனும். நம்ம மேலே தப்பான அபிப்ரயாத்தை வளர்ந்தவங்க அவங்கதான், நாமே இல்லை, அவங்களா அதை மாத்திக்குவாங்க...."

"ஹிம் நீ சொல்லுறதும் சரியாதான் இருக்கு வசந்த, ஆனா சிலசமயங்களிலே நான் செய்யுறது எனக்கே சரியா தப்பான்னு குழப்பம் வரும். அந்தமாதிரி சமயங்களிலே முடிவெடுக்க முடியாமே திணறப்போ நீ எனக்கு ஆதரவு கொடுக்கிறே? அழனுமின்னு தோணுனாலும் தோள் கொடுக்கிறே? சிரிக்கனுமின்னா கூட சேர்ந்து சிரிக்கிறே? நீ கிரேட்'டா!"

"ஓ இதை வைச்சிதான் இந்த கவிதை எழுதினேயா? , அதை சிலசமயம் விடாமே படிச்சிட்டே இருப்பேன்!"

"அப்பிடியா? எந்த கவிதை?"

"ஆறுதல் சொல்ல நீ இருந்தால்,
அழுவதில் கூட சுகம் உண்டு."

"ஹி ஹி அது நான் எழுதலை! ஒரு இடத்திலே சுட்டது...!"

"அடபாவி, ஒன்னை போய் பெரிய கவிதாயினி'ன்னு நினைச்சேன்னே? அப்போ இதை எழுதினதும் நீயில்லையா?

தந்தை அடித்ததை
தாயிடம் சொல்லி அழும்
பிள்ளை போல..

என் மார்பில் சாய்ந்து
தேம்பிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!

"இது எழுதினது நாந்தான்"

"ஹிம் இந்தமாதிரி நட்பை மையமா வைச்சு எழுதுனா கவிதைகளை வைச்சு தான் ஒன்கிட்டே ஃபிரண்ட்ஷிப் வைச்சிக்கனுமின்னு தோணுச்சு காவேரி"

"ஹிம் ஃபிரண்ட்ஷிப் வைச்சிக்கிறதுக்கு ரீசன் சொல்லுறே? நல்லாயிரு! சரி இப்போ நான் கிளம்புறேன்!"

இப்பொழுது கொஞ்சம் தெளிவான சிந்தனையோடு தன்னுடைய அறைக்கு காவேரி செல்கிறாள். அங்கே தன் அப்பா போன் பண்ணினதாகவும் வந்தால் பேச சொன்னதாகவும் உமா சொல்லியதால் போன்பூத்'க்கு செல்கிறாள் காவேரி.

"ஹலோ அப்பா நல்லாயிருக்கீங்களா?"

"ஹிம் நான் நல்லாயிருக்கேன்.. யாரு கூட காவேரி பேசிட்டு இருந்தே? உமா என்னோமோ சொல்லுறா? எனக்கு எதுவும் பிடிபடலை?"

"ஹய்யோ! அதெல்லாம் ஒன்னுமில்லப்பா! அவ ஏதாவது விளையாட்டுக்கு சொல்லிருப்பா? நீங்க எதுவும் நினைச்சிக்காதீங்க?"

"சரிம்மா! ஒடம்பை நல்லா பார்த்துக்கோ! நல்லா படி! போனை வைச்சிறேன்"

எப்பவும் தன்னிடம் நன்றாக பேசும், இன்று சரியாக பேசாத காரணத்தை தெளிவாக ஊகித்தாள் காவேரி. தான் இல்லாத நேரத்தில் வந்த போனில் தேவையில்லாத விஷயங்களை பேசி அப்பாவிடம் குழப்பத்தை உண்டு பண்ணியிருப்பது உமா வேலைதான்.

"உமா! அப்பாகிட்டே என்ன சொன்ன?"

"நான் ஒன்னுமே சொல்லலையே? ஏன் போன் பண்ணிட்டு வந்ததும் இப்பிடியொரு கேள்வி கேட்கிறே?"

"சந்தேகமா யார்கிட்டே இவ்வளவு நேரமா பேசிட்டு இருந்தேன்னு எங்கப்பா கேட்டாரு? எப்பவும் அந்தமாதிரியெல்லாம் கேள்வி கேட்கமாட்டார் தெரியுமா? நான் எத்தனை தடவை ஒன்கிட்டே சொல்லிட்டேன், இன்னும் நீதான் புரிஞ்சுக்காமே வசந்த்யும் என்னையும் தப்பா நினைச்சிட்டு இருக்கே?"

"காவேரி! திரும்ப திரும்ப ஒரேமாதிரி சொல்லி போரடிக்காதே! ப்ளிஷ் டெல் மீ எஸ் ஆர் நோ?"

"கட்டாயமா அதுக்கு என்னாலே தெளிவா பதில் சொல்லமுடியும்... நோ..நோ..."

"அப்புறம் எதுக்கு ரெண்டு பேரும் காலநேரம் இல்லாமே பேசிட்டே இருக்கீங்க...? எனக்கு தெரிஞ்சு கிளாஸ் ஹவர்ஸ் போக, ஒன்னை இங்க ஹாஸ்டலிலே பார்த்ததே கிடையாது, எல்லாநேரமும் அவனோட தான் அந்த மரத்தடி கிழே பேசிட்டு இருக்கீங்க! அந்த மரத்தடிக்கு கூட இப்போ பசங்க வசந்தகாவேரி மரமின்னு பேர் வைச்சிட்டாங்க தெரியுமா?"

"உமா! உமா!! எத்தனை தடவைதான் நான் சொல்லுறது, நமக்கு தானா அமையுற உறவுமுறைகளான அம்மா தவிர்த்து எதாவது ஆதாயம் இருக்குமின்னு எதிர்ப்பார்ப்பு'லே தான் இருப்போம். அண்ணா'ன்னா நம்மை படிக்க வைப்பான், நாமே படிச்சு முடிஞ்சதும் வேலை வாங்கி கொடுப்பான், நல்ல வாழ்க்கையை அமைஞ்சு தருவான்'ன்னு நம்மளையறியமாலே எதிர்பார்க்கிறோம், அது அவங்ளோட கடமைன்னு நாமே அதை சொல்லி தப்பிச்சுக்கலாம், இந்தமாதிரி நிறையவே நம்ம உறவுமுறைகளுக்கு எடுத்துக்காட்டு கொடுத்துட்டே போகலாம். ஆனா நட்புன்னு வர்றோப்போ தான் அதுக்கு எதையும் எதிர்பார்த்து ஏற்படுத்திக்க முடியாது. வசந்த் கூட வந்த நட்பு சாதாரணமா தான் இருந்துச்சு, ஆனா சில சம்பவங்களிலே அது இன்னமும் ஸ்டராங்'கா ஆகிருச்சு,"

"என்னோமோ காவேரி! சினிமா டயலாக் மாதிரியெல்லாம் பேசுறே? அப்பிடி என்னா ஒங்க ஃபிரண்ட்ஷிப்'லே ஸ்ட்ராங்'க்கின இன்ஸிண்ட் நடந்துச்சு?"

"ஹிம்! என்ன பேசுனாலும் அதை கிண்டல் பண்ணுறதே ஒன்னோட வேலையா போச்சு, ஒரு நாள் நம்ம காலேஜ் கிரவுண்ட்'லே சைக்கிளிலே ரவுண்ட் அடிச்சிட்டு இருந்தேன், அப்போ என்னயறியாமலே என்னோட துப்பட்டா சைக்கிள் சக்கரத்திலே சிக்கி அய்யோ அதே சொல்லவே முடியலை, துப்பட்டாவே சுடி'யோட பின் பண்ணிருந்ததுனாலே அதுவும் சேர்ந்து இழுந்து கிழிச்சு போச்சு,என்னோட நிலைமையே அப்போ நினைச்சு பாரு, எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுருப்பேன் அங்க இருந்த பசங்க முன்னாடி, அங்க விளையாடிட்டு இருந்த வசந்த்'தான் தன்னோட ஷர்ட்'ஐ கொடுத்து ஹெல்ப் பண்ணினான், அப்போ சில ஆம்பிளக'கிட்டே இருக்கிற அந்த விகல்ப புத்தி அவன்கிட்டே சுத்தமா இல்லை. இன்னமும் நிறைய இருக்கு, அவனை நீங்கல்லாம் சொன்னமாதிரியெல்லாம் கற்பனை பண்ணி பார்க்கமுடியலை, எங்கக்கிட்டே ரெண்டு பேர் நடுவே இருக்கிறது சுத்தநட்பு... அவ்வளோதான்,"

"காவேரி! என்னாடி ஒரு எக்ஸ்டரா-ஆர்டெனரி கேர்ள் மாதிரி பிஹெவ் பண்ணுறே"

"நான் ஆர்டெனரி கேர்ள் தான், வாழ்க்கையிலே நடக்கிற விஷயங்களை சாதாரணமா அதோட போக்கிலே வாழ்ந்துட்டு தான் இருக்கேன், ஆனா என்னை சுத்தியிருக்கிற சில பேர் புரிஞ்சுக்காமே தான் நான் ஒரு எக்ஸ்டரா-ஆர்டெனரியா'ன்னு நினைக்கிறாங்க... அதை நான் தப்புன்னும் சொல்லலை... "

==================-oOo-==================

நண்பர்களே! இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும். இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும். இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும். ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்த அத்தியாயத்தை உளி கொண்டு செதுக்க அண்ணன் செதுக்கல் மன்னன் தேவ் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்....... ;-)

பி.கு:- கதை'க்கு தேவைப்பட்ட கவிதைகளை G3 செய்ய அனுமதி வழங்கிய கவிதாயினி காயத்ரி அக்கா வாழ்க! வாழ்க!!

42 comments:

said...

ம். நல்லா போகுது கதை!

வசந்த் காவேரி இடையில நட்பு மட்டும்தான்னு அழுத்தம் திருத்தமா சொல்ல வறீங்க!

இப்பதான் வினோத்க்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்!

அடுத்தவரு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்!


அதேமாதிரி வசந்தும் ரஞ்சனிக்கு துரோகம் பண்ணாம இருந்தா சரிதான்!

said...

நல்லாயிருக்கு கைப்ஸ்:-))

said...

hey ram hey ram

yenna appu pinitinga
kavidai bale bale super

backi

said...

hey ram

super kalakkitinga
kavidai pramadam

said...

வாழ்த்துக்கள் தலைவரே!!
தேவ் அண்ணே என்ன சொல்லுறாருன்னு பார்ப்போம்!! :-)

said...

Kadha super... :-)

Aana adha friendshipaavae maintain pannadhu kalakkals :-))

Naan lastla pinkurippa paakavae illa :P

said...

கலக்கிட்டீங்க ராம்... செதுக்கல் தேவ் கும்முன்னு செதுக்குவாரு...

said...

கலக்கல் ராயல்..

அடுத்து கதை மன்னனா??? சூப்பர்

தேவ் அண்ணா,
டோட்டலா கதையை மாத்திடுங்க... நேர் கோடுல போறது ஒரு மாதிரி இருக்கு

said...

//ம். நல்லா போகுது கதை!

வசந்த் காவேரி இடையில நட்பு மட்டும்தான்னு அழுத்தம் திருத்தமா சொல்ல வறீங்க!//

தள,

அதே அதே.... :)

//இப்பதான் வினோத்க்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்!

அடுத்தவரு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்!//

வெயிட் பண்ணுங்க.... காவேரி மணவாளன் வினோத்'ஆ இல்ல வேறயாரவதான்னு அடுத்த பாகங்களை எழுதுறவங்க சொல்லட்டும் .... :)


//அதேமாதிரி வசந்தும் ரஞ்சனிக்கு துரோகம் பண்ணாம இருந்தா சரிதான்!//

என்ன சொல்ல வர்றீங்க....??

said...

/நல்லாயிருக்கு கைப்ஸ்:-))//

தொல்ஸ்'ண்ணே,

கதையே படிக்காமே சங்கத்தை விட்டு லிவுலே போன புல்லுருவி கிளப்பி விட்ட புரளியை நம்பி அந்த பேரை வேற சொல்லி வேற கூப்பிடுறீங்க??? :(((

கைப்புள்ள'கிறது ஒரு கதாபாத்திரம் அதை மோகன்ராஜோ இல்ல என்னை வைச்சோ குழப்பிக்காதீங்க....

said...

//hey ram hey ram

yenna appu pinitinga
kavidai bale bale super

backi///


//hey ram

super kalakkitinga
kavidai pramadam//

அனானி,

கவிதைகளை எழுதனது காயத்ரி, பதிவிலே லிங்க் கொடுத்துருக்கேன் பாருங்க...

வருகைக்கு நன்றி....

said...

//வாழ்த்துக்கள் தலைவரே!!
தேவ் அண்ணே என்ன சொல்லுறாருன்னு பார்ப்போம்!! :-)//

நன்றி லவ் சைண்டிஸ்ட்....

said...

//Kadha super... :-)

Aana adha friendshipaavae maintain pannadhu kalakkals :-))//

ஊஞ்சல்ஸ்,

நன்றி....

//Naan lastla pinkurippa paakavae illa :P//


ஹி ஹி நீங்க பார்க்கலைன்னா என்ன? எல்லாரும் பார்த்துட்டாங்களே.... ;-)

said...

//கலக்கிட்டீங்க ராம்... செதுக்கல் தேவ் கும்முன்னு செதுக்குவாரு..//


நன்றி மக்கா,

அண்ணன் செதுக்கல்ஸ்'க்குதான் நானும் வெயிட்டிஸ்.. :)

said...

நான் சொல்லணும்னு நினைச்சுட்டு வந்தேன். சிபி சொல்லிட்டார். நான் அதை வழிமொழிகிறேன். ஹிஹிஹி, காலையிலே இருந்து "சொர்க்கமே என்றாலும் நம்மூரு போல் வருமா?" போட்டிருக்கீங்களா? ஊர் நினைப்பாவே இருக்கு எனக்கும். :(
ஹிஹிஹி, உங்க பதிவுக்கு.

said...

//கலக்கல் ராயல்..//

ஏலேய் வெட்டி,

கதையே படிக்காமே ஒத்த வரியிலே கருத்து சொல்லுறேன் பேர்வழி'ன்னு இந்த டெம்பிளேட் வேர்ட்'ஐ வைச்சிக்கிட்டு அலையிறே போல இருக்கு? நல்லாயிரு.. :)

//அடுத்து கதை மன்னனா??? சூப்பர்

தேவ் அண்ணா,
டோட்டலா கதையை மாத்திடுங்க... நேர் கோடுல போறது ஒரு மாதிரி இருக்கு//

அதுக்குள்ளே என்ன அவசரம் மேன்? ஆரம்பத்திலே'வா காவேரி லவ் பண்ணி வீட்டே விட்டு ஓடிப்போயி பத்து வருசமாச்சு'ன்னு எழுத முடியும்.......

டி.வி'யிலே தொடர் எல்லாம் நீ பார்க்கமாட்டியா? நம்ம தள'கிட்டே கேட்டுப்பாரு? எல்லா தொடர் கதையேயும் சொல்லுவார்... :)

said...

//நான் சொல்லணும்னு நினைச்சுட்டு வந்தேன். சிபி சொல்லிட்டார். நான் அதை வழிமொழிகிறேன். ஹிஹிஹி, //தலைவலி,

முதன்முறையா கலகம் பண்ணாமே வழிமொழியிறீங்க.... அதுக்கே பெரிய நன்றி..... :)

//காலையிலே இருந்து "சொர்க்கமே என்றாலும் நம்மூரு போல் வருமா?" போட்டிருக்கீங்களா?//


பின்னே பதினஞ்சு நாள் லிவு'லே எடுத்துருக்கோம், சாப்பிட தூங்க, ஹி ஹி நல்லாவே பொழுது போகுது.... :)


//ஊர் நினைப்பாவே இருக்கு எனக்கும். :(//

வாங்க சீக்கிரமே.... :)


//ஹிஹிஹி, உங்க பதிவுக்கு.//

நீங்க சிரிக்கிறதை பார்த்தா மொக்கை'ன்னு சொல்லுறமாதிரி இருக்கே??? :)

said...

கைப்புள்ள'கிறது ஒரு கதாபாத்திரம் அதை மோகன்ராஜோ இல்ல என்னை வைச்சோ குழப்பிக்காதீங்க....
//

இது என்ன புதுகதை அப்ப நீங்க கைப்ஸ் இல்லையா...:(

said...

பின்னே பதினஞ்சு நாள் லிவு'லே எடுத்துருக்கோம், சாப்பிட தூங்க, ஹி ஹி நல்லாவே பொழுது போகுது.... :)
///

யாருக்கு தெரியும் நீ தூங்க விடமாட்டியே யாரையும்....!!!!

said...

கதை நல்லா இருக்கு...!!

said...

//கதையே படிக்காமே ஒத்த வரியிலே கருத்து சொல்லுறேன் பேர்வழி'ன்னு இந்த டெம்பிளேட் வேர்ட்'ஐ வைச்சிக்கிட்டு அலையிறே போல இருக்கு? நல்லாயிரு.. :)//

கதையை படிக்காமலா நேர் கோட்டுல போகுதுனு சொன்னேன்...

//அதுக்குள்ளே என்ன அவசரம் மேன்? ஆரம்பத்திலே'வா காவேரி லவ் பண்ணி வீட்டே விட்டு ஓடிப்போயி பத்து வருசமாச்சு'ன்னு எழுத முடியும்.......

டி.வி'யிலே தொடர் எல்லாம் நீ பார்க்கமாட்டியா? நம்ம தள'கிட்டே கேட்டுப்பாரு? எல்லா தொடர் கதையேயும் சொல்லுவார்... :)//

இப்ப நான் என்ன கதைல லவ் வேணும்னா சொன்னேன்... ஒரு சீனியர், ரேகிங், ஸ்ட்ரைக் இல்ல ஏதாவது ஒரு கொல இந்த மாதிரி த்ரில்லிங்கா ஏதாவது போட்டா பரவாயில்லை

said...
This comment has been removed by the author.
said...

//இது என்ன புதுகதை அப்ப நீங்க கைப்ஸ் இல்லையா...:(//

மின்னலு,

தெளிவாதானே சொல்லிருக்கேன்? அப்புறம் என்ன இல்லையா'ன்னு எடக்கு கேள்வி???

//யாருக்கு தெரியும் நீ தூங்க விடமாட்டியே யாரையும்....!!!!//

ஹி ஹி

//கதை நல்லா இருக்கு...!!//

நன்றி... நன்றி

said...

//இப்ப நான் என்ன கதைல லவ் வேணும்னா சொன்னேன்... ஒரு சீனியர், ரேகிங், ஸ்ட்ரைக் இல்ல ஏதாவது ஒரு கொல இந்த மாதிரி த்ரில்லிங்கா ஏதாவது போட்டா பரவாயில்லை//

ஹி ஹி இதெல்லாம் அடுத்த பாகம் எழுதுறவங்க எழுதறாங்களான்னு தெரியலையே இப்போ???

தேவ்'ண்ணே என்ன செதுக்க போறார்'ன்னு வெயிட் பண்ணி பார்ப்போம்... :)

//கவிதை எழுதி கொடுத்த சொர்ணா அக்காவிற்கும் பாராட்டுக்கள் ;)//

பாவய்யா அந்த அக்கா.... ;-) அவங்களும் தூள் படமெல்லாம் பார்த்து இருப்பாங்க... :)

said...

ஹேய்.. கதை ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு!! இதுக்கு தான் கவிதை கேட்டிங்களா? உருப்படியா யூஸ் பண்ணினதுக்கு தேங்க்ஸ்ப்பா!!

//கவிதை எழுதி கொடுத்த சொர்ணா அக்காவிற்கும் பாராட்டுக்கள் ;)//

ஹலோ.. உங்களுக்கும் எனக்கும் எதாச்சும் முன் ஜென்ம விரோதம் இருக்குங்களா?

said...

//நான் சொல்லணும்னு நினைச்சுட்டு வந்தேன். சிபி சொல்லிட்டார்//

என் பின்னூட்டத்தின் கடைசி வரியைத்தானே சொல்றீங்க மேடம்?

said...

//நல்லாயிருக்கு கைப்ஸ்:-)) //

அபி அப்பா! என்ன இது இராமைப் போய் கைப்ஸ் னு சொல்றீங்க!


கைப்ஸ் போஸ்டுக்கு இராம் வந்திருக்கார் அவ்வளவுதான்!

said...

//அதேமாதிரி வசந்தும் ரஞ்சனிக்கு துரோகம் பண்ணாம இருந்தா சரிதான்!

என்ன சொல்ல வர்றீங்க....??
//

வசந்த் கேரக்டரை நீங்கன்னு நினைச்சிட்டேன்!

எப்படியோ ரஞ்சனிக்கு துரோகம் பண்ணாம இருந்தா சரி!

ஓ! உங்ககிட்டே பிராமிஸ் வேற பண்ணி இருக்கேனில்லே!

அப்ப ரஞ்சனி பத்தி இனிமே நான் பேசமாட்டேன்!

இராம் நீங்கதான்! ஆனா ரஞ்சனி பத்தி நான் பேசமாட்டேன்!

said...

// காயத்ரி said...

ஹேய்.. கதை ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு!! இதுக்கு தான் கவிதை கேட்டிங்களா? உருப்படியா யூஸ் பண்ணினதுக்கு தேங்க்ஸ்ப்பா!!

//கவிதை எழுதி கொடுத்த சொர்ணா அக்காவிற்கும் பாராட்டுக்கள் ;)//

ஹலோ.. உங்களுக்கும் எனக்கும் எதாச்சும் முன் ஜென்ம விரோதம் இருக்குங்களா? //

மன்னிச்சிடுங்க காயத்ரி...

நான் G3 அக்கானு நினைச்சிட்டேன்...

நான் அந்த கமெண்டை தூக்கிடறேன்.

said...

ராயல்,
ஏன் என் கமெண்டை பப்ளிஷ் பண்ண மாட்றீங்க.

காயத்ரி அக்கா,
திரும்பவும் சொல்றேன்.. Really Sorry... G3னு பேர் பார்த்துட்டு அவுங்கதானு நினைச்சிக்கிட்டேன்...

said...

//ஹேய்.. கதை ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு!! இதுக்கு தான் கவிதை கேட்டிங்களா? உருப்படியா யூஸ் பண்ணினதுக்கு தேங்க்ஸ்ப்பா!!//


வாங்க கவிதாயினி,

கதைக்கு தேவைப்படுதுன்னு சொல்லிதானே கவிதை கேட்டேன்.... வருகைக்கு நன்றி.... :)

//கவிதை எழுதி கொடுத்த சொர்ணா அக்காவிற்கும் பாராட்டுக்கள் ;)//

ஹலோ.. உங்களுக்கும் எனக்கும் எதாச்சும் முன் ஜென்ம விரோதம் இருக்குங்களா?//

இல்லாட்டியும் இந்த ஜென்மத்திலே விரோதத்தை உண்டாக்குவோம்.... :)

said...

//என் பின்னூட்டத்தின் கடைசி வரியைத்தானே சொல்றீங்க மேடம்?//

தள,


இப்போ இது ரொம்ப முக்கியமா???? :(

//அபி அப்பா! என்ன இது இராமைப் போய் கைப்ஸ் னு சொல்றீங்க!


கைப்ஸ் போஸ்டுக்கு இராம் வந்திருக்கார் அவ்வளவுதான்!///

எத்தனை தடவை சொன்னாலும் ஒங்களுக்கெல்லாம் விளங்கமாட்டேங்கிது? என்ன பண்ண? என்னோமோ செய்யுங்க..... :((

//வசந்த் கேரக்டரை நீங்கன்னு நினைச்சிட்டேன்!//

ஹிம், நினைச்சுக்கோங்க... நல்ல கேரக்டர் தானே இது .... :)

//அப்ப ரஞ்சனி பத்தி இனிமே நான் பேசமாட்டேன்!

இராம் நீங்கதான்! ஆனா ரஞ்சனி பத்தி நான் பேசமாட்டேன்!//


Grrrrrrrrrrrr...

said...

//
மன்னிச்சிடுங்க காயத்ரி...

நான் G3 அக்கானு நினைச்சிட்டேன்...

நான் அந்த கமெண்டை தூக்கிடறேன்.//

ஏய்யா அந்த கமெண்ட்'ஐ டெலிட் பண்ணே??? நல்லாதானே இருந்துச்சு.... :)

//ராயல்,
ஏன் என் கமெண்டை பப்ளிஷ் பண்ண மாட்றீங்க.//

வீட்டுலே பொட்டியை தூக்கினாலே திட்டுறாங்க'ப்பா.... :(( என்ன பண்ண பத்துநாளா நம்ம Sony செல்லம் காட்சிப்பொருளாதான் கிடக்கு.... :(

//காயத்ரி அக்கா,
திரும்பவும் சொல்றேன்.. Really Sorry... G3னு பேர் பார்த்துட்டு அவுங்கதானு நினைச்சிக்கிட்டேன்...//

அட Free'அ விடுப்பா...:) அவங்க ஒன்னும் ஃபீல் பண்ணமாட்டாங்க, G3 பண்ண'ன்னு பதிவிலே போட்டுருந்தது என்னான்னா Copy & Paste'ன்னு அர்த்தம்.... :)

ஊஞ்சலக்கா அந்த C&P 'லே பெரிய எக்ஸ்பர்ட்...

இந்த காயத்ரி பெரிய கவிதாயினி, கவிதைகள் எல்லாம் படிச்சு பாரு... கலக்கிருப்பாங்க

said...

//
ஏய்யா அந்த கமெண்ட்'ஐ டெலிட் பண்ணே??? நல்லாதானே இருந்துச்சு.... :)//

ராயலண்ணே,
தெரியாதவங்களை ஓட்ட கூடாது. அதனால அதை தூக்கியாச்சு. அதுவுமில்லாம அந்த பேர் G3 அக்காக்கு செட் பண்ணியாச்சு.

//
ஊஞ்சலக்கா அந்த C&P 'லே பெரிய எக்ஸ்பர்ட்... //
பொட்டி தட்டற எல்லாருமே அதுல எக்ஸ்பர்ட் தான் :-)

//
இந்த காயத்ரி பெரிய கவிதாயினி, கவிதைகள் எல்லாம் படிச்சு பாரு... கலக்கிருப்பாங்க//
ஆமா ராயலண்ணா...

உங்களுக்கு இனிமே செம போட்டி தான்.

said...

நான் எங்கே கலகம் பண்ணாமல் போனேன்? அது நம்ம வேலையே இல்லையே? அதான் முதலிலேயே சொன்னேனே? சிபி சொல்றதை வழி மொழியறென்னு! அப்போ என்ன அர்த்தம்? ரஞ்சனி பத்தி நானும் பேச மாட்டேன், பேச மாட்டேன், பேஏஏஎசவேஏஏ மாட்டேன்னு தானே!:P ஒரு நிமிஷம் எனக்கே சந்தேகமாப் போச்சு, பின்னூட்டம் போட்டது நாமதானேன்னு! நீங்க ட்யூப்லைட்டுனு தெரியும், இருந்தாலும் இவ்வளவு மோசமான ட்யூப்லைட்டுனு தெரியாது! :D

said...

//அதுவுமில்லாம அந்த பேர் G3 அக்காக்கு செட் பண்ணியாச்சு//

@வெட்டி : என்னமோ அந்த பேர நான் காபிரைட் போட்டுட்ட மாதிரி சொல்றீங்க??

said...

//நான் எங்கே கலகம் பண்ணாமல் போனேன்? அது நம்ம வேலையே இல்லையே? ////ஒரு நிமிஷம் எனக்கே சந்தேகமாப் போச்சு, பின்னூட்டம் போட்டது நாமதானேன்னு!//


அதேதான்! நானும் முதலில் வந்தது போலி தலைவலியோன்னு நினைச்சிட்டேன்!

said...

சொர்ணாக்கா என்ற பெயர் பொன்ஸ் அவர்களுக்கு மட்டுமே காப்பிரைட், டீ ரைட், பூஸ்ட் ரைட், ஹார்லிக்ஸ் ரைட், ஓவல் ரைட் எல்லாம் செய்யப் பட்டிருக்கிறது என்பதை கடுமையாக வலியுறுத்திக் கூற கடமைப் பட்டிருக்கிறேன்!

said...

Ellarum sonnadhaey dhaan naanum solluraenga..
Kadha nalla poagudhu..
Between,Kaveri and Vasanth Friendship mattum dhaan irukku nu superaa solli irukkeenga ...

Kaverikku Vasanthkkum frndship strong aanathukku oru incident solli kalakiteenga...

Aana Vinod enna aanarunu adhukku apuram yaarumae thodaralayae.....

said...

/நீங்க ட்யூப்லைட்டுனு தெரியும், இருந்தாலும் இவ்வளவு மோசமான ட்யூப்லைட்டுனு தெரியாது! :D//

தலைவலி,

ஏன் இப்பிடி ரகசியத்தை எல்லாம் வெளியே சொல்லிட்டு திரியிறீங்க??? :(

said...

//ஏன் இப்பிடி ரகசியத்தை எல்லாம் வெளியே சொல்லிட்டு திரியிறீங்க??? :(
//

அதானே! ஊரறிஞ்ச ரகசியத்தை நீங்க வேற தனியா ஏன் சொல்லுறீங்கன்னு எங்க அண்ணன் வருத்தப் படுறார்!

said...

//நீங்க ட்யூப்லைட்டுனு தெரியும், இருந்தாலும் இவ்வளவு மோசமான ட்யூப்லைட்டுனு தெரியாது! :D
//

:-))
bro ithu ellathukum therinchu poocha...naan ninaichen ennaku mathumthaan theriyumnu.
additions info:raam oru fuis poona tube light