லிவிங்ஸ்மைல் வித்யாவுடன் நேரடி சந்திப்பு
சென்ற சனிக்கிழமை மதுரையில் லிவிங்ஸ்மைல் வித்யாவை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது.வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் செய்து மேடத்திடம் அனுமதி வாங்கினேன்.சனிக்கிழமை மாலை ஏழுமணிக்குள் சந்திக்கலாம் என்று.ஆனால் பஸ்ஸில் சென்ற அலுப்பில் அன்று மதியம் தூங்கி இரவு ஏழுமணிக்குத்தான் எழுந்தேன்.மிகவும் தயக்கத்துடன் போனை ஒத்தி எடுத்து மேடம் மன்னிஞ்சிருங்க கொஞ்சம் தூங்கிட்டேன்.நீங்க கோவித்துக்கொள்ளாமல் சர்வோதயா இலக்கியப்பண்ணை இப்போது வரமுடியுமா என்றேன், ஓ தாரளமா என எதிர்முனையில் பதில் வந்தவுடன்தான் அப்பாடா என்றிந்தது.ஆனா 9.30க்குள் அவர் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றுவிடவேண்டும் என ஒரு கண்டிசனுடன்.
எட்டு மணிக்குத்தான் நானும் அவரும் சர்வோதயா போய்ச்சேர்ந்தோம்.எதாவது ஒரு சந்திப்பு நிகழும்பொழுது பின்ணனி இசையில் யாராவது ஒருத்தர் குறித்து விளக்கவுரை வாசிப்பர்.அட்லிஸ்ட் ஒரு மியூசிக்காவது வரும்.எங்களுக்கும் நல்ல மியூசிக்கா தான் கொடுத்தய்ங்கே.ஹீம் சார் அலைஒசை எங்கேருக்கு... அண்ணே கடல்ப்புறா எங்கேருக்குனு. நான் லிவிங்ஸ்மைல் வித்யாப்பத்தி புத்தகக்கடையில் ஒன்றும் கேட்கவில்லை.ஏனெனில் 8.30மணிக்கு மிகச்சரியாக அக்கடை பூட்டிவிடுவேர் எவ்வளவு பெரிய வியாபரமெனிலும்.அவருக்கு நம் தமிழ் வலைப்பூக்கள் நண்பர்கள் சார்ப்பாக புத்தகங்கள் பரிசளிக்கலாம் என்று என்னுடய தேர்வாக வைரமுத்துவின் கவிதாயினி காக்கைப்பாடினியாரின் சரித்திரம் சொல்லும் வில்லோடு வா நிலவே எடுத்துக்கொடுத்தேன்.அவர் என்னோமோ இரண்டு புத்தகங்களை செலக்ட் செய்தார்.நான் வழக்கம் போல் சாண்டில்யன் முன்று புத்தங்களை தூக்கிவந்தேன்.புத்தகக்கடையிலே சிலர் அவள்விகடனில் வந்தவர் போல் உள்ளதே என தங்களுக்குள் விசாரித்துக்கொண்டிருந்தனர்.
புத்தக பர்சேஸ் முடித்தவுடன் அருகிலிருக்கும் ஹோட்டல் சென்று பின்னனி இசையாக இட்லி,மூனு தோசைன்னு சத்தத்துடன் சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தோம்.வித்யா சொல்லுங்க அவள்விகடனில் சொல்லாததை இப்போ என்று கேட்டவுடன் என்னை ஒரு மொறை மொறைச்சிட்டு என்னோட பேரு வித்யா இல்ல...லிவிங்ஸ்மைல் வித்யான்னார்.ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி என்பேரு பக்கிரி இல்லை பிக்பாக்கெட் பக்கிரினு கர்ச்சிப்பை வெச்சு ஒரு ஸ்டைல் செய்வார்.அதுப்போல் இவரும் செய்வாரனு பயந்தேதான் போனனேன்.அவரும் அதே போல் ஒரு கர்ச்சிப்பை ஸ்டைலாதான் கழுத்தில் கட்டி இருந்தார்.எனவே தமிழ்க்கூறும் நல்லுலகத்திற்கு ஒரு வேண்டுகோள் வித்யாவை லிவிங்ஸ்மைல் வித்யா என்றே தயவுச்செய்து அழைக்கவும்.
என்னைப்பற்றியும் என் குடும்பத்தையும் விசாரித்தார்.நானும் அவரைப்பற்றியும் விசாரித்தேன்.அப்படியே பேச்சு வலைப்பூக்களை பற்றிவந்தது.பிடித்தவலைப்பதிவரில் பொன்ஸ்,உஷா,துளசி கோபால் ஆகியோரை குறிப்பிட்டுச்சொன்னார்.எனக்கு பெங்களுர் வலைப்பூ சந்திப்பில் கிடைத்த பின்னூட்ட அட்வஸை அவருக்கும் கொடுத்தேன்.மரணத்தை பற்றி கவிதையை விசாரித்தப்போது அது தனக்கு வாழ்க்கை தந்த அனுபவத்தின் சில வரிகள் என்றாள். சென்னையிலிருந்த அனுபவங்கள் பூனே சென்ற அனுபவங்கள் பற்றியும் விவரித்தாள்.இன்னும் நிறைய விசயங்களை பதிவேத்த போவதாகவும் சொன்னாள்.ஒரு நிமிடம் ஆடிதான் போனனேன்.சில விசயங்களை நான் சொல்லி உங்களுக்கு தெரிவதைவிட அவளின் எழுத்துக்கள் புரியவைக்கும் நமக்கு மிக நேர்த்தியாக.அதற்க்குள் சில மணித்துளிகள் கரைந்து ஒன்பதரை தொட ஆரம்பித்தவுடன் ரயில்சப்வே வழியாக அவளின் விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.இப்பொழுது ரயிலும்,பயணிகளும் சேர்ந்து எழுப்பும் ஒசைகளுடன்....
கடந்தவை பற்றி பேசி அவளை மேலும் மேலும் கஷ்டப்படுத்த வேண்டாமேனே அப்புறம் உங்க எதிர்கால லட்சியங்களை சொல்லுங்களேன் என்றவுடன் மிகவும் ஆர்வத்துடன் விவரிக்க ஆரம்பித்தார்.தன்னைப்போல் உள்ளவர்களை பற்றியும் அவர்களை பற்றி வந்துள்ள படைப்புகளை சேகரிப்பதாகவும் சில மற்ற விசயங்களும் எடுத்துரைத்தாள்.இதற்கு நிறைய செலவாகும் பட்சத்தில் என்ன செய்வது சிலரிடம் பணஉதவி நாடலமே என கேட்டேன்.அவளின் அதற்கு தந்த பதில் மிகவும் ஆச்சாரியமுட்டியது.வள்ளவப்பெருத்தகையின் வினை பற்றிய குறள் தான் நினைவுக்கு வந்தது.கடைசியாக உலகத்தின் இடுச்சொற்களான அவன்,அவள்,அது என்பதில் அது என்றிலிருந்து அவள் என்றே உலகம் மாற்றி அழைக்க ஆரம்பித்தது எப்படி இருக்கிறது என கேட்டவுடன் அய்யோ எதோ தவறான கேள்விக்கேட்டு விட்டதாக பயந்து மனது துடித்தது.ஆனாலும் சிறிதும் தயக்கமோ கோபமோ இன்றி அவளிடம் இருந்து தெறிந்தன வார்த்தைகள்.
விவரிக்க இயலாத சந்தோசமாதான் இருந்தது.அதற்கு தான் இவ்வளவு போரட்டங்களும்.இந்நிலை எனக்கு மட்டுமில்லை, இவ்வுலகில் என்னைப்போல் இருக்கும் மற்றவர்களும் தங்கள் நிலை மாறி முன்னுக்கு வரவேண்டுமென.
ஆயிரத்தில் ஒருத்தி என்பதை சும்மா சொல்ல வில்லை.அவளின் மனஉறுதி வலிமையின் அடுக்குகள் சேர்ந்த கோட்டைதான் எனக்கு புரிந்தது.நம்மைப்போல் பெற்றோர்,குடும்பமென பாதுக்காப்பு வாழ்க்கையில் சாதனை புரிவது மிகவும் எளிது.ஆனால் உலகம் ஒதுக்கிய தருணங்களிலும் தானும் ஒரு பிரஜை என அதுவுமொரு வெற்றி பிரஜையாக நிருபித்தவள் அவள்.
உங்களுக்கும் எனக்கும் ஒரு நல்ல சகோதரதோழியாய் ஒரு இனிய வரவு அவள்.விடை பெற்றேன் விடுதியின் வாசலிருந்து அப்போது... இப்பொது ஒரு கனமான ஆனால் நிறைவான மனதுடன்.....