Tuesday, September 18, 2007

விழிகளின் அருகினில் வானம்!

"வினோத் என்னோட கியூபிக்கல்'க்கு கொஞ்சம் வரமுடியுமா?" போனில் கார்த்திக் அழைத்ததும் வினோத்'க்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது, எதாவது சொல்லவதாக இருந்தாலும் நேராக தன்னோட இடத்துக்கு வந்துதானே பேசுவான்? ஏன் தீடீரென்று அவன் கியூபிக்கலுக்கு கூப்பிடுறான்? கொஞ்சம் பிரச்சினையான விவகாரமா இருக்கும் போலே'ன்னு மனசுக்குள்ளே நினைத்துக்கொண்டு கார்த்திக் கியூபிக்கல் சென்றடைந்தான் வினோத்.

"வினோத், நேத்து நைட் நம்ம கிளைண்ட் போன் செஞ்சு காச்சி எடுத்துட்டாண்டா! நம்ம அரைமண்டயன் ஆன்சைட் கோ-ஆர்டினர்'ம் சேர்ந்துக்கிட்டு ஜால்ரா கொட்டிட்டான்! கிளைண்ட் எதிர்பார்த்த அளவுக்கு நம்ம ப்ராஜெக்ட் குவாலிட்டி கொடுக்கலை! அதுவும் டைம்க்குள்ளே எந்த டெலிவரியும் தரலை! இதுவரைக்கும் பே பண்ணின அமெண்ட் எல்லாம் வேஸ்டான மாதிரி ஃபீலிங்'ன்னு நம்ம சீனியர் மேனஜர்'யையும் வைச்சிகிட்டே போன் கான்பிரன்ஸ்'லே சொல்லிட்டான்."

"என்னாடா கார்த்தி சொல்லுறே? இப்பிடியெல்லாம் அவன் பேசுற அளவுக்கு நாமே என்ன தப்பு பண்ணினோம்? நம்ம டெலிவரி'யெல்லாம் சில சமயங்களிலே லேட்டா ஆனாலும் சரியாதான் அவங்க கேட்கிற எல்லாமே செஞ்சு அனுப்பி இருக்கோமே?"

"ஹிம் சம்திங் பிராப்ளம் இன் அவர் டீம் வொர்க், நான் இதுக்கு யாரையும் பிளேம் பண்ண விரும்பலை! கார்த்தி இன்னிக்கு ஆப்டர் லஞ்ச் மீட்டிங் அரெஞ்ச் பண்ணமுடியும்மா? இதே அங்க வைச்சி டிஸ்கஸ் பண்ணிக்கலாம்..."

"ஹிம் ஓகே'டா அரெஞ்ச் பண்ணிறேன்"ன்னு குழப்பங்களும் ஆச்சரியங்களும் கலந்த உணர்ச்சியுடன் தன்னிடம் வந்து சேர்ந்தான் வினோத்.

வினோத்'ம் கார்த்தியும் ஓரே பள்ளியிலிருந்து இன்ஜினியிரிங் காலேஜ் வரை ஒன்றாக படித்து சென்னை தனியார் மென்பொருள் நிறுவனமொன்றில் கேம்பஸ் இண்டர்வீயூ மூலம் வேலை பெற்றனர். அதே கம்பெனியிலே நாலு வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து இருவரும் அவர்களின் ப்ராஜெக்ட் லீடர் என பதவி உயர்வு பெற்றுள்ளனர். கார்த்திக் வினோத்'ஐ விட ஒரு படி மேலே இருந்தாதாலும் அவர்களின் க்ளையண்ட் ப்ராஜெக்ட்'லே ஆரம்பத்திலே இருந்தாலும் இதில் மெயின் லீட்'ஆக இருந்தான்.

"Friends, we got bad feedback from client side. i don't know why that's caused, Please ensure our job is need to be done before dead line."ன்னு பேசிட்டு கன்பரெண்ஸ் ஹால்'லிருந்து வெளியேறி விட்டான் கார்த்திக்.

மீட்டிங் முடிந்ததும் கார்த்திக் மிகவும் சோர்ந்து உட்கார்ந்து இருந்ததே கண்டதும் வினோத்'க்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது, சின்னவயசில் இருந்து அவனுடன் பழகிவந்தவன் முறையில் மிகவும் அக்கறையுடன் அவனை பற்றிய நினைவலைகளில் மூழ்கினான். ஆறாம் வகுப்பிலிருந்து காலேஜ் இறுதியாண்டு வரை ஒன்றாக ஹாஸ்டலில் ஒன்றாக தங்கியவன் என்ற முறையில் அவனை பற்றி அனைத்தும் தெரிந்து வைந்திருந்தான்.கார்த்திக் சிறுவயதிலே தன்னுடைய தாய் இழந்திருந்ததினால் அவரது அப்பா சென்னையில் ஹாஸ்டல் இணைந்த பள்ளியொன்றில் சேர்ந்து விட்டுருந்தார். கார்த்திக்கு ஐந்து வயது வித்தியாசமுள்ள ஒரே ஒரு அக்காவிற்கும் இவர்கள் பிளஸ்டூ படிக்கும் போது கல்யாணம் ஆகிவிட்டது. யாரிடம் அநாவசியமான பேச்சோ, எதாவது கேளிக்கை பொழுதுப்போக்கிலும் சற்றும் ஆர்வமாய் இல்லாமால் படிப்பில் கவனமாகவே இருந்து பள்ளிக்கூடத்திலேயும்,கல்லூரியிலும் முதல் மாணவனாக தேறியிருந்தான். வேலையிலும் சேர்ந்ததிலே இருந்து கவனமாகவும் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வேலை செய்த காரணத்தினாலும்,ப்ராஜெக்ட் விஷயமாக கிட்டத்தட்ட மூன்று வருடங்களில் வெளிநாட்டில் வேலை செய்தானலும் மிகவும் விரைவாக அவனது டீம்'க்கு லீட்'ஆக ஆக்கப்பட்டான். கார்த்திக் தன்னுடைய வாழ்க்கையில் தோல்வியை சந்திறாத காரணத்தினாலே இந்த ஒரு விஷயத்துக்கு கூட மனதொடிந்து இருக்கிறான் என வினோத் முடிவுக்கு வந்தான்.

"வினோ! ஏன் என்னாச்சு? ஏன் கார்த்தி ரொம்ப அப்செட்'ஆ இருக்காங்க? ரொம்ப பிரச்சினையா ஆச்சா?'ன்னு தாமரை குரல் கேட்டு நிமிர்த்தான் வினோத்.

"ஏன் நீ இந்த உலகத்திலே தான் இருந்தே? காலையிலிருந்தே இதேபத்தி தானே பேசிட்டு இருக்கோம், அப்புறமா என்னா வந்து பிரச்சினையா? அப்செட்டா'ன்னு குசலம் விசாரிக்கிறே?"

"ஏய்? என்ன நக்கலா? என்ன நடத்துச்சுன்னு கேட்டேன்? கார்த்தி ஏன் அப்செட்'ன்னு கேட்டேன்? அதுக்கு ஏங்க நீங்க சலிச்சிக்கீறிங்க?"

"அம்மா தாயே! ஒனக்கு அவனை பத்தி ஏதாவது ஒன்னு தெரிஞ்சுக்கனும்? அதுக்கு என்னாவெல்லம் சொல்லி கேட்கிறே? ஒன்னோட ஆளை நேத்து நைட் மீட்டிங்'லே வெள்ளைக்காரன் தொவைச்சி காயப்போட்டுட்டான், அதுவுமில்லாமே நம்ம டீம் ப்ராஜெக்ட் பத்தி டிஸ்சாடிஸ்பிகேசன் வேற சொல்லிருக்கான், அதே கேட்டதிலே இருந்துதான் பய பயங்கர அப்செட், காலை டிபன் சாப்பிட்டானா'ன்னு கூட தெரியலை? என்னா கேட்டாலும் கொஞ்சம் தனியா இருக்கவிடுன்னு அங்கே உட்கார்ந்து இருக்கான்..."

"ஹிம் நீங்க போயி அவரே சாப்பிட கூட்டிட்டு போங்களேன் பிளிஸ்!"

"ஆமாம் நான் சொன்னதும் கேட்கப்போறானா? அவன் அப்பிடிதான் சின்னவயசிலே இருந்தே எந்த தோல்வியோ இல்ல அந்தமாதிரியான சூழ்நிலையிலோ வாழ்ந்து பழகதாவன்! அதுதான் ஒருத்தர் ஒன்னு சொன்னதும் பயலுக்கு பயங்கரமா பொத்துக்கிட்டு வந்து மூஞ்சிய தூக்கி வைச்சிட்டு இருக்கான். நாமே சொல்லி கேட்கமாட்டான், அவனோட அக்கா விஜிக்கா'வுக்கு போன் பண்ணி சொன்னதான் சரியா இருக்கும்"

"ஹிம் பண்ணிசொல்லுங்க... யாராவது கொஞ்சம் ஆறுதலா பேசினாதான் அவருக்கும் நல்லாயிருக்கும்..."

"அநியாத்துக்கு அவன் மேலே அக்கறை எடுத்துக்கிறியே'ம்மா! ஆனா அவன் ஒன்னை கொஞ்சம்கூட மதிக்கமாட்டேன்கிறான்! நீ அவனை லவ் பண்ணுறேன்னு கூட சொல்லிட்டேன்! அதுக்கும் அவன் மசியிறே மாதிரி தெரியலையே! இவனுக்கு எப்போ கல்யாணம் ஏற்பாடு பண்ணலாமின்னு அவங்க அக்கா போன் பண்ணுறோப்பேயும் கேட்பாங்க, இந்த மடையன் எதுக்கும் மாட்டேன்கீறான். என்னந்தான் மனசிலே வைச்சிருக்கான்னு தெரியலை?"

"எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா இல்லயா?? அவங்களே கூப்பிட்டு போயி சாப்பிட வைங்க"

"உத்தரவு மகாராணி!"

"டேய் கார்த்தி! இன்னும் நீ நார்மல் ஆகலையா? அடுத்த மீட்டிங்'குள்ளே நாமே அவங்க கொடுத்த ரீக்வெயர்மெண்ட் முடிச்சிறாலாம்.. இப்போ வந்த சின்ன ஃபீட்-பேக் இப்பிடி ஃபீல் பண்ணிட்டு இருக்கீயே?"

"இல்ல வினோத்! அந்த க்ளைய்ண்ட் எப்பவும் நம்மக்கிட்டே நேரா பேசமாட்டான், அங்க இருக்கிற கோ-ஆர்டினேடர்'கிட்டே ஏதாவது சொல்லுவான். நாமே அவன்கிட்டே இருந்து இன்புட் வாங்கி வேலை செஞ்சுக்கிட்டு இருந்தோம். ஆனா இது எனக்கு என்னோமோ நம்ம ப்ராஜெக்ட்'ஐ கேன்சல் ஆகிறமாதிரி இருக்கு? இது எங்க நடந்த தப்புன்னு தெரியலை. அந்த கோ-ஆர்டினடர் கொல்டி எதாவது சொதப்பிட்டனா'னு தெரியலை? நாமே அவன்கிட்டே எதுவும் தகறாறுகூட பண்ணலேயே? நம்ம சீனியர் மேனஜர் கான்பரெண்ஸ்'லே இருக்கிறப்போ வந்த கம்பைளண்ட்'ஐ நினைச்சி ரொம்ப ஃபீல்'ஆ இருக்கு?"

"கார்த்தி.. இதுதான் உன்க்கிட்டே இருக்கிற பிரச்சினை, ஒரு சின்னவிஷயமானலும் சரி, பெரிய விஷயமானலும் சரி, ரொம்பவே போட்டு மனசை குழப்பிக்கிறே? கொஞ்சம் ஃபீரியா வீட்டு அப்புறம் பார்ப்போமின்னு எதையும் செய்யமாட்டேங்கிறே? இப்போ ஒன்னும் இந்த ப்ராஜெக்ட் விட்டுட்டு நீ போ! வேற ரீசோர்ஸ் வைச்சி நாங்க பார்த்துக்கிறோமின்னு சொல்லலையே?"

"ஓ அப்பிடி வேற சொல்லிருக்கனுமின்னு சொல்லுறீயா?"

"அடேய் எல்லாத்தையும் ரொம்ப சீரியஸா எடுத்துக்காதே'டா! இப்போ இது இல்லாமே போச்சுன்னா நம்மாளே உசுரு வாழமுடியாதுன்னு நினைக்கிறீயா? இல்லல்லே? என்னை பொறுத்தவரைக்கும் இது நம்மாளோட மிஸ்-அண்டர்ஸடாண்டிங்'லே வந்தமாதிரி தான் தெரியுது! போன மீட்டிங்'லே அந்த கொல்டியோட பிகேவியர் சரியில்லை! அவந்தான் ஏதோ சொல்லிருக்கான்!"

"what ever it maybe! நம்மக்கிட்டேயும் தப்பு இருக்குல்ல! டெட்-லைன் முன்னாடி ஏதாவது நாமே டெலிவரி பண்ணிருக்கோமா சொல்லு? இவ்ளோ பிரச்சினை வைச்சிக்கிட்டு அவனை நாமே எதுக்கு தப்பு சொல்லனும்?"

"சரி'டா.. அது எல்லார் மேலேயும் இருக்கிற தப்புதானே? நீ ஏன் அதுக்காக உனக்கு மட்டும் தண்டனை கொடுக்கிறே? நீ மட்டும் தண்டனை அனுவிக்கிறது இங்கயிருக்கிற முக்கியமான ஆளுக்கு பிடிக்கலை'லே?"

"என்ன??? யாரு உன்கிட்டே அந்த நெட்டை கொக்கு தாமரை வந்து கவலை பட்டாளா என்னா??"

"ஹிம் ஆமாம் இப்போ என்னாடா? அவந்தான் உன்னை பார்த்து கவலைப்படுவா? வேற யாரு இருக்கா இங்க பக்கத்திலே?"

"ஏன் நீ என்னை பத்தி ஃபீல் பண்ணமாட்டியா?"

"அடேய் நானாந்தானே வந்து உன்கிட்டே பேசிட்டு இருக்கேன். ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொருவிதமான அக்கறை செலுத்துவாங்க... எல்லாரடேயும் அன்பையும் வாங்கினுமிடா! உனக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு! நீ என்னந்தான் மனசிலே நினைச்சிட்டு இருக்கே'னு யாருக்கும் புரியலை! விஜிக்கா போன் பண்ணுறப்போ எல்லா டைமிலும் அவனை பார்த்துக்கோ! எப்போ கல்யாணமின்னு அவன்கிட்டே பேச்சு எடுக்கலாமின்னு உன்னை வேற என்னை நோட்டம் பார்க்க சொல்லிருக்காங்க"

"ஓ! அக்கா இந்த வேலையெல்லாம் உன்னை பார்க்க சொல்லிருக்கா? எனக்கே அந்த ஐடியா வந்தா சொல்லுறேன்னு சொல்லிருக்கேன்'லே! அப்புறமென்னா.. சும்மா சும்மா எப்பவும் அதை பத்தியே பேச்சு"

"சரி வெளக்கெண்ணே... இப்போ நீ வர்றீயா! சாப்பிட போகலாம்"

வினோத் பேச்சை மீறாத கார்த்திக் அவனுடன் புட்கோர்ட்'க்கு நடக்கலான். வினோத்'ம் அவன் மனதிற்குள் கார்த்திக் நாமே சொன்னதை கேட்டுக்கிறான், இவனை சீக்கிரம் கல்யாணத்துக்கு சம்மதம் பண்ணவைக்கனுமின்னு நினைத்து கொண்டான்.

"கார்த்திக் உனக்கு வேணுமிக்கிறத நீ ஆர்டர் பண்ணிக்கோ! நான் உன்னை விட்டு சாப்பிட்டுட்டேன், எனக்கு ஒரே ஒரு லைட் டீ மட்டும் ஆர்டர் பண்ணு. போன் பண்ணிட்டு வந்திறேன்"

"ஹலோ மகாராணி, தாமரை செல்வி, உன்னோட ஆளு சாப்பிட ஆரம்பிச்சாச்சு! இப்பவே மணி 4'க்கு மேலே ஆச்சு, நீயும் தயவு செய்து சாப்பிடு மகாராணி"

"வினோத்... யாருக்கிட்டே பேசிட்டு வர்றே? டீ வந்துருச்சு! எடுத்துக்கோ"

"நான் யாருக்கிட்டேயோ பேசினா உனக்கு என்னாடா? பேசாமே சாப்பிடு!"

இதுக்கு மேலே என்ன கேள்விகேட்டாலும் பதில் சொல்லமாட்டான்'ன்னு கார்த்திக்'க்கு நல்லாவே தெரியும். சாப்பிட்டு முடித்து ஆபிஸிக்குள் அவனது அக்கா மொபலில் அழைந்ததும் விரைந்து தன்னுடைய இடத்தில் அமர்க்கிறான்.

"ஹலோ அக்கா சொல்லு! நீ எப்பிடிருக்கே? மாமா எப்பிடிருக்காரு? பிள்ளைகளெல்லாம் நல்லா இருக்காங்க இல்ல?"

"எல்லாரும் நல்லா இருக்கோம்! நீ எப்பிடி இருக்கேன்னு சொல்லு? ஆபிஸிலே ஏதோ பிரச்சினை, நீ சாப்பிடமே கூட இருக்கேன்னு வினோ சொன்னான்? உண்மையா அது?"

"மடையன் என்னாத்தயாவது சொல்லுவான்! ஹிம் கொஞ்சம் பிரச்சினைதான், அதுதான் லேட்டா சாப்பிட போனேன், இப்போதான் சாப்பிட்டே வந்தேன், நீ சரியா கால் பண்ணுறே?"

"எதுக்குடா இவ்வளோ லேட்'ஆ சாப்பிடுறே?அதுக்குதான் காலகாலாத்திலே கல்யாணம் பண்ணிக்கோடா'ன்னு சொன்னா கேட்கவே மாட்டெங்கிறே? என்னந்தாண்டா உன்னோட மனசிலே நினைச்சிட்டு இருக்கே? நாங்க எது சொன்னாலும் நீ கேட்கவே கூடாதுன்னு முடிவு பண்ணி வைச்சிருக்கியா?"

"அக்கா! இப்போ எதுக்கு இவ்வளோ கோவப்படுறே? நாந்தான் எனக்கு அந்த ஃபீலிங் வந்ததும் சொல்லுறேன்னு சொல்லிருக்கேன்'லே? பின்ன என்னா?"

"ஹிம் இப்பிடிதான் கடைசி ரெண்டு வருசமா சொல்லிட்டு இருக்கே? நானும் மலைக்கோட்டை சாரதாஸ் போறப்போலாம் இந்த பட்டுச்சேலைய தம்பி கல்யாணத்துக்கு எடுத்துக்கலாமின்னு நினைச்சிட்டு வர்றேன், இப்பிடியே இந்த ரெண்டுவருஷமா எல்லா டிசைன்'ம் போயிருச்சு.."

"உன்னோட கஷ்டம் உனக்கு? வேற என்னத்த சொல்லுறது?"

"ஆமாம் எந்தம்பி'க்கு கல்யாணம் பண்ணி வைக்கவேணாமா? அப்பா கூட உன்னோட கல்யாணத்தை பத்திதான் எப்பவும் நினைச்சிட்டு இருக்காரு. அப்புறமிடா வர்றபோற பொண்ணுக்கு எடுக்கப்போற பட்டுச்சேலை பார்டர்'டோட எனக்கு கொஞ்சம் பெருசா எடுக்கனுமின்னு இப்பவே சொல்லிக்கிறேன்'ப்பா!"

"எடுக்கலாம்! எடுக்கலாம்.... காஞ்சிப்புரத்துக்கே போயி நெய்ய குடுத்தே வாங்கலாம்.. இப்போ நான் வேலை பார்க்கபோறேன். போனை வைச்சிரு!"

"டேய் கார்த்தி! விஜிக்க்கா போன் பண்ணாங்களா?"

"வாடா வா! நீ தான் போன் பண்ணி எல்லாத்தையும் சொன்னியா?"

"ஆமாம், நாங்கெல்லாம் சொல்லி நீ கேட்டுற போறியா என்னா? அதுதான் போன் பண்ணி சொன்னேன்!"

"நல்லாந்தான் வேலை பார்க்கிறே? இப்போ நான்மட்டும் இன்னும் சாப்பிடல'ன்னு சொல்லிருந்தேன்னா அக்கா இந்நேரம் அழுதுருக்கும்! நான் இப்போதான் சாப்பிட்டு உள்ளே வர்றேன்னு சொன்னதும் வழக்கம்போலே சாரதாஸ், பட்டுச்சேலைன்னு கல்யாணப் பேச்சை எடுத்துட்டு போனை வைச்சிருன்னு வைச்சிருச்சு!"

"கார்த்தி இந்த வாரம் சனிக்கிழமை எதுவும் பிளான் வைச்சிருக்கியா என்ன? ஃபீரியா இருந்தா சொல்லு! உன்னோட அபார்மெண்ட்'க்கு நான் வர்றேன்"

"வீக்கெண்ட் ஊருக்கு போலாமின்னு இருந்தேன், சரி நீ வா, நான் சாயங்காலத்துக்கு மேலே ஊருக்கு போயிக்கிறேன்."

அந்த வார சனிக்கிழமையில் கார்த்திக் குடியிருக்கும் அபார்ட்மெண்ட்'க்கு சென்றடைந்தான் வினோத்.

"கார்த்தி வந்த விஷயத்தை நேரடியாகவே கேட்டுறேன்! நீ கல்யாணம் பண்ணிக்கிறதிலே என்ன பிரச்சினை?"

"வினோத் எவ்வளவு தடவை'டா நான் ஒரே மாதிரி பதிலை திரும்ப திரும்ப சொல்லிட்டே இருக்கிறது??"

"ஏன் அமெரிக்கா போனப்போ எதாவது வெள்ளக்காரி'கிட்டே மனசை கொடுத்துட்டு வந்துட்டியா? அதுதான் பத்து பக்கத்திலே யாருக்கோ மெயில் அனுப்பிட்டு இருக்கீயா டெய்லி?"

"ஹிம் மண்ணாங்கட்டி! அதெல்லாம் அங்க பழகின ஃபிரண்ட்ஸ்'க்கு அனுப்புறதுடா? இதெல்லாம் சந்தேகப்பட்டு கேட்பீயா நீ?"

"பின்ன என்னாடா? தேய்ச்சு போன ரிக்கார்ட் மாதிரி ஒரே வார்த்தையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தா? கேட்க்கிற எங்களுக்கு வெறுப்பா ஆகாதா? உனக்கு உண்மையிலே தாமரையே பிடிக்கலையா? ஸ்டெரைக்ட் ஃபார்வேட்'ஆ சொல்லு?"

"இதென்னா தூது வந்து கேட்கிறமாதிரி இருக்கு?"

"ஆமாம் அப்பிடியே வைச்சிக்கோ?"

"சரி அப்போ நானும் அப்பிடியே பதில் சொல்லிக்கிறேன்.... இப்போதைக்கு எதுவும் என்னாலே பதில் சொல்லமுடியாது!"

"அதான் ஏன்னு சொல்லு?"

"என்னா ஏன் ஏன்னு கேட்டா நான் எப்பிடி வளர்த்தேன்னு உனக்கு நல்லாவே தெரியும்? என்னோட பத்துவயசிலே அம்மா இறந்துட்டாங்க, எங்க அக்கா'வுக்கு அப்போ பதினஞ்சு வயசு, அவளுக்கும் ஒன்னும் தெரியாது, ரெண்டு பேரையும் ஹாஸ்ட்லிலே சேர்த்து எங்கப்பா படிக்க வைச்சாரு! நீயும் நானும் ஓரே ஹாஸ்டலிலே தானே தங்கி படிச்சோம், எனக்குதான் அம்மா இல்ல, உனக்கு ரெண்டு பேரு இருந்தும் ஏன் ஹாஸ்ட்லிலே சேர்த்துவிட்டு மாசமாசம் வந்து உன்னை பார்த்துட்டு போறங்கன்னு நினைப்பேன், அப்போல்லாம் உங்கம்மா என்னை பார்த்து சிரிப்பாங்க பாரு, அதை எப்பவும் நினைச்சிட்டு இருப்பேன், லீவுலே ஊருக்கு போறப்போ அக்கா கூட இருக்கிறப்போ அவகூட இருக்கிறப்போயும் எங்க அம்மா பக்கத்திலே இருக்கிறமாதிரி நினைச்சிக்குவேன்."

"சரி கார்த்தி, நீ அம்மா இழந்ததினாலே அந்த வருத்தம் இருக்குன்னு சொல்லுறே? சரி அதுக்கும் கல்யாணம் வேணாமின்னு சொல்லுறதுக்கும் என்னாடா காரணம் இருக்கு?"

"அதுதான் சொல்லுறேன், நான் சின்னவயசிலே இழந்த அந்த தாய்மை உணர்வை என்னோட மனைவி வந்து தரனுமின்னு எதிர்பார்க்கிறேன்! அவ்வளவுதான்"

"கார்த்தி இங்கதான் நீ தப்பு பண்ணுறே? தாய்மை தர்ற பொண்ணு கிடைக்குமின்னு காத்திருக்கிறேன்னு சொல்லுறது தப்பான எண்ணமிடா! ஆணும் பொண்ணும் சமமின்னு சொல்லிக்கிற பொண்ணுகளுக்கிட்டே அவங்க செலுத்துற பாசத்திலே நாமே சமம்'ஐ இல்லாடா? நீ அன்னிக்கு சாப்பிடலைன்னதும் ரொம்பவே வருத்தப்பட்ட தாமரையும் சரி, நீ சொன்னமாதிரி இன்னும் சாப்பிடமே மட்டும் இருந்தேன்னு சொல்லிட்டா விஜிக்கா அழுதுருக்குமின்னு சொன்னியா அதெல்லாம் பாசமா இல்ல உன்மேலே வைச்சிருக்கிற அக்கறையினாலோ வந்தது இல்லாடா? அவங்ககிட்டே இயற்கையா இருக்கிற அந்த தாய்மையான பண்பினாலே தாண்டா"

"உன்னோட வார்த்தைக்களை ஒத்துக்கிறேன் வினோ! ஆனா தாமரை மேலே எனக்கு அப்பிடியொன்னும் ஈர்ப்பு வரலையே"

"அடபாவி இதுக்கொரு லெக்சர் செண்டி டயலோக்'கோட கொடுக்கனுமா என்ன? தகரடப்பா'க்குள்ளே கூழாங்கல்லை போட்டு உருட்டுனாப்பலே குரலு, பனைமரத்திலே கால்வாசியே வெட்டி எடுத்துட்டு அதுக்கு துணி மாட்டி விட்ட மாதிரி உருவத்தை வைச்சிக்கிட்டே ஒன்னை ஒரு பொண்ணு லவ் பண்ணுது'ன்னா அது பெரிய விஷயமில்லயா?

"அடபாவி இப்பிடி கலாய்க்கீறியே?"

"ஹிம் அதுதான் சொல்லுறேன், அந்த பொண்ணே எவ்வளோ தூரம் இறங்கி வந்து உன்னயே விரும்புறேன்னு சொல்லுறா! நீ ரொம்பதான் பிகு பண்ணிட்டு இருக்கே? பொண்ணே நம்மக்கிட்டே சொல்லிட்டா நாமே ஆம்பிள்ளதனத்தை காட்டுனுமின்னு மாட்டேன்னு ஒரு வேளை சொல்லுறீயோ?"

"சே சே அதெல்லாம் இல்ல! இப்போதைக்கு என்ன சொல்லுனுமின்னு தோணலையே எனக்கு"

"அதுதாண்டா நீ சொன்னமாதிரி பாசத்தோட அந்த பொண்ணு அன்னிக்கு டைம்'க்கு வாங்க சாப்பிட போலமின்னு கூப்பிட்டா அவளை நீ போயி சாப்பிடுன்னு சொல்லிட்டு வீம்புக்கென்னே ஒரு மணி நேரம் கழிச்சி போவியே? அவ என்னிக்காவது சமைச்சி கொண்டு வந்து சாப்பிடுங்கன்னு சொன்னா இல்ல இப்போ பசியில்லை திருப்பி விடுவே! முதலிலே இதெல்லாம் பார்க்கிறப்போ உன்னை கண்டா அவளுக்கு கோவந்தான் வந்துச்சாம், ஆனா இப்போல்லாம் ஒரு குழந்தையாட்டம் தான் நீ அடம்பிடிக்கிறேன்னு சமாதானமா போறாளாம்"

"என்னை குழந்தைன்னு யாரு சொன்னது?"

"எல்லாமே அந்த நெட்டை கொக்கு தான்"

"ஹிம் அவளுக்கு அவளோ சேட்டையா? நான் வேணாமின்னு சொன்னா அது குழந்தை மாதிரி அடம்பிடிக்கிறதா என்ன?"

"பின்னே... அன்னிக்கு ஆபிஸிலே சின்ன பிரச்சினைக்கு நீ டென்சனா ஆகி உட்கார்ந்து இருந்தோப்பே நீ நார்மலா ஆகிருனுமின்னு அவ தவிச்ச தவிப்பு இருக்கே! தட்டிலே வைச்ச சோத்தை எல்லாத்தயும் நம்ம குழந்தை சாப்பிடறனுமின்னு தவிக்கிற அம்மா'வோட எக்ஸ்பிரஷ்ன்ஸ்'டா! அதெல்லாம் எங்க உனக்கு தெரியப்போகுது?"

"டேய் வினோ! எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிரு போதும்! இதென்னும் நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறமாதிரி நீயும் அனுபவிடா'ன்னு சொல்லுறமாதிரி இல்லயே?"

"ஆஹா சரியான டைமிலே ஞாபகப்படுத்திட்டே? நான் இப்பவே கிளம்புறேன், அம்மணி வேற மேட்னி ஷோ போனுமின்னு சொன்னா? எதாவது தீயேட்டருலே டிக்கட் கிடைக்குதான்னு பார்த்துட்டு அவளை போயி கூட்டிட்டு போகனும்..."

"ஹிம் இந்த கேள்வி கேட்டதும் தான் உன்னோட ஆளு ஞாபகம் வருதா என்ன? சரி நீ கிளம்பு... நீ இருந்தா இன்னிக்கு டி-நகர் அஞ்சப்பர்'லே போயி லஞ்ச் சாப்பிடலாமின்னு இருந்தேன், உனக்குதான் முக்கியமான வேலை இருக்கே?"

திங்கள்க்கிழமை அலுவலகம் வந்ததிலிருந்து வீனோத்'க்கு வெகு ஆச்சரியம் காத்திருந்தது, எவ்வளவு சொல்லியும் லைட் கலர் சட்டை போடவே மாட்டான், இன்னிக்கு போட்டு வந்துருக்கான், அதுவுமில்லாமே என்னிக்கும் இல்லாமே இன்னக்கு காலையிலே ஹெட்-செட் மாட்டி பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கான்.

"ஹாய் வினோ, தாமரை எங்கடா இருக்கா? ஓ இங்கதான் இருக்கீங்களா மேடம், வாங்க காப்பி சாப்பிட புட்-கோர்ட் போலாமா?"

"என்னாச்சு இவருக்கு, இன்னிக்கு தீடீரென்னு வெளியே எல்லாம் கூப்பிடுறார்ன்னு வெகுஆச்சரியமாய் கிளம்பினாள் தாமரை.

"ஹலோ அக்கா! நாந்தான் கார்த்தி பேசுறேன், நாமே சீக்கிரமே உனக்கு காஞ்சிப்புரம் போயி பட்டுச்சேலை நெய்ய குடுத்துறாலாம்"ன்னு சொல்லி மகிழ்ச்சியாக தாமரையுடன் புட்-கோர்ட்க்கு விரைந்தான் கார்த்திக்.

அவனுடைய சிஸ்ட்ம் ஹெட்-போனில் மெல்லிதாய் காற்றில் கரைந்து கொண்டிருந்ததொரு கானம்.

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதன்முதல் அனுபவமோ?

35 comments:

said...

me the firstuu

said...

போட்டாச்சுல முதல் கமேண்ட்..

said...

ராமு, இப்போ பதிவை படிச்சே ஆகணுமா? பதிவு ரொம்ம்ம்ம்ப நீட்டா இருக்கே? :-(

said...

:)) சூப்பர்.. அசத்திட்டீங்க :)

// நானும் மலைக்கோட்டை சாரதாஸ் போறப்போலாம் இந்த பட்டுச்சேலைய தம்பி கல்யாணத்துக்கு எடுத்துக்கலாமின்னு நினைச்சிட்டு வர்றேன், இப்பிடியே இந்த ரெண்டுவருஷமா எல்லா டிசைன்'ம் போயிருச்சு.."
//

ஆனாலும் இது கொஞ்சம் ஓவரு :P

said...

சூப்பரு!!
அப்போ போன வீக்கெண்ட் உங்க நண்பர் பேசி உங்க மனசை மாத்தீட்டாரா??
அதை அப்படியே பதிவா வேற போட்டுடீங்க!!
புரியுது புரியுது!!
அண்ணியை கேட்டதா சொல்லுங்க!!
சீக்கிரமா கல்யாணப்பத்திரிக்கையும் அனுப்பி வைங்க!!!
வாழ்த்துக்கள்!! :-D

said...

எழுத்து ந.....வேண்டாம்ப்பா நமக்குள்ள்ள எதுக்கு பிரச்சனை:-))

said...

ந்தா பார்ரா! ராம் அண்ணா போய் ராமுவாம்ல!! ராம் நான் சொன்னேன்ல உங்களுக்கு வர வர வயசு கம்மியாகிட்டே வருது!!

said...

:)

said...

என்ன மாப்பி காதல் மழை பொழியுது....(கதையில சொன்னேன்) :)

said...

Raam.. ellaam sari... aana onsite -coordinatora thaan romba kalaaitchitteenga.. athu mattumthaan enakku pudikkave illa :((((

said...

வாழ்த்துக்கள் ராம்!

said...

"ஹை, சொல்லவே இல்லையே, எப்போ கல்யாணம்? மணிப்ரகாஷ் மாதிரி, சொல்லாமல் கல்யாணம் பண்ணிக்காதீங்க, அநியாயமா ஒரு சாப்பாடு போயிடுச்சு. :P

said...

//நானும் மலைக்கோட்டை சாரதாஸ் போறப்போலாம் இந்த பட்டுச்சேலைய தம்பி கல்யாணத்துக்கு எடுத்துக்கலாமின்னு நினைச்சிட்டு வர்றேன், இப்பிடியே இந்த ரெண்டுவருஷமா எல்லா டிசைன்'ம் போயிருச்சு.."//

மதுரை ஹாஜி மூசான்னு இல்ல வரணும்.. எப்படியோ வாழ்த்துக்கள்டா தம்பி....

நான் கூட மதுரை பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு டோய் :)))

said...

அண்ணே இது கதை மாதிரியே இல்ல.. :)

காவியம் மாதிரி இருக்கு.

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

me the firstuu///

அம்மா மாரியாத்தா,

எத்தனை மணிக்கு போஸ்ட் போட்டாலும் வந்து சாமியாடுறீயா? எப்பிடிம்மா இப்பிடியெல்லாம்??

/ராமு, இப்போ பதிவை படிச்சே ஆகணுமா? பதிவு ரொம்ம்ம்ம்ப நீட்டா இருக்கே? :-(///

ஒன்னும் அவசரம் இல்ல... :)

//
G3 said...
:)) சூப்பர்.. அசத்திட்டீங்க :) //

நன்றி சொர்ணாக்கா... :)

said...

/சூப்பரு!!
அப்போ போன வீக்கெண்ட் உங்க நண்பர் பேசி உங்க மனசை மாத்தீட்டாரா??
அதை அப்படியே பதிவா வேற போட்டுடீங்க!!
புரியுது புரியுது!!
அண்ணியை கேட்டதா சொல்லுங்க!!
சீக்கிரமா கல்யாணப்பத்திரிக்கையும் அனுப்பி வைங்க!!!
வாழ்த்துக்கள்!! :-D/


லவ்சைண்டிஸ்ட்,

ஹிம் கதையே படிச்சா அதை ஏன் மேன் என்னோட சேர்த்து பார்க்கீறீங்க??? :(

//அபி அப்பா said...

எழுத்து ந.....வேண்டாம்ப்பா நமக்குள்ள்ள எதுக்கு பிரச்சனை:-))//

தொல்ஸ்ண்ணே,

படிக்காட்டியும் போஸ்ட் போட்டவங்களை ஊக்கப்படுத்த நீங்க கமெண்ட் போடுறேதே நினைக்கிறப்போ ... அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

/ILA(a)இளா said...

:)//

விவ்,

இந்த மர்மபுன்னகை'க்கு அர்த்தம் புரிந்தது. அடுத்தமுறை உருப்படியா எழுத முயற்சிக்கிறேன்... :)

// கோபிநாத் said...

என்ன மாப்பி காதல் மழை பொழியுது....(கதையில சொன்னேன்) :)//

அப்பிடியா மாப்பி....

said...

//ஜி said...

Raam.. ellaam sari... aana onsite -coordinatora thaan romba kalaaitchitteenga.. athu mattumthaan enakku pudikkave illa :((((//


ஏலேய்ய் ஜியா,

ஆன்சைட்'லே போயி இருந்துக்கிட்டு நீங்க பண்ணுற அக்கப்போர் இருக்கே.... அதுக்கே பத்து கதை எழுதலாம்.... :)

//இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள் ராம்!//

கொத்ஸ்,

ஏனிந்த கொலைவெறி.... :(

said...

// கீதா சாம்பசிவம் said...

"ஹை, சொல்லவே இல்லையே, எப்போ கல்யாணம்? மணிப்ரகாஷ் மாதிரி, சொல்லாமல் கல்யாணம் பண்ணிக்காதீங்க, அநியாயமா ஒரு சாப்பாடு போயிடுச்சு. :P//

தலைவலி,


மதுரையிலே தான் எல்லாமே நடக்கும்.... வந்துருங்க.... :)

//
மதுரை ஹாஜி மூசான்னு இல்ல வரணும்.. எப்படியோ வாழ்த்துக்கள்டா தம்பி....//

அண்ணே,

கதாநாயகன் சொந்த ஊரு திருச்சி... :)

//நான் கூட மதுரை பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு டோய் :)))//

அப்பிடியா?

said...

//தம்பி said...

அண்ணே இது கதை மாதிரியே இல்ல.. :)

காவியம் மாதிரி இருக்கு./

கதிரு,

கூடிவைச்சி கும்மியடிக்கனுமின்னு பேசி வைச்சதுக்கபுறம் மொக்கை'ன்னு சொன்னா என்ன? காவியம்'ன்னு லந்து விட்டா என்ன?

எல்லாம் ஒன்னுந்தானே?? :(

said...

////தம்பி said...

அண்ணே இது கதை மாதிரியே இல்ல.. :)

காவியம் மாதிரி இருக்கு.///

இதை நான் வழிமொழிகிறேன்..

ராம் அண்ணா.. எப்படிண்ணா இப்படி எல்லாம்?

said...

/இதை நான் வழிமொழிகிறேன்..

ராம் அண்ணா.. எப்படிண்ணா இப்படி எல்லாம்?/


ஏலேய் புலி,

ஏய்யா இப்பிடியெல்லாம் அடுத்தவன் உருவாக்கின கலவரத்திலே ஊர்வலம் போறே??

கதிருக்கு சொன்னதுதான் ஒனக்கும்..... சூடான் வெயிலிலே காஞ்சு கருகி போ..... :(

said...

வர வர எல்லோரும் கதைங்கர பேர்ல சொந்த மேட்டர எழுதறீங்க...

நல்லாயிருங்கண்ணா

வாழ்த்துக்கள்...

ம் நல்லாயிருக்கு...

said...

//நாகை சிவா said...

////தம்பி said...

அண்ணே இது கதை மாதிரியே இல்ல.. :)

காவியம் மாதிரி இருக்கு.///

இதை நான் வழிமொழிகிறேன்..

ராம் அண்ணா.. எப்படிண்ணா இப்படி எல்லாம்?//

ரிப்பீட்டேய்!!!

(இன்னும் படிக்கல.. படிச்சிட்டு சொல்றேன்)

இருந்தாலும் சொல்லிவெச்சிக்கறேன்...

வாழ்த்துக்கள்!!!

said...

//வினோத்'ம் கார்த்தியும் ஓரே பள்ளியிலிருந்து இன்ஜினியிரிங் காலேஜ் வரை ஒன்றாக படித்து சென்னை தனியார் மென்பொருள் நிறுவனமொன்றில் கேம்பஸ் இண்டர்வீயூ மூலம் வேலை பெற்று அதே கம்பெனியிலே நாலு வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து இருவரும் அவர்களின் ப்ராஜெக்ட் லீடர் என பதவி உயர்வு பெற்றுள்ளனர்//

இவ்வளவு பெரிய தொடர் படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு. கொஞ்சம் உடைச்சி உடைச்சி போட்டிருக்கலாம்...

கதைல ஏதோ மிஸ்ஸாகற மாதிரி இருக்கு :-(

(முதல்ல ப்ராஜக்ட் பத்தி கொஞ்சம் வள வளனு பேசற மாதிரி இருக்கு)

said...

//கதாநாயகன் சொந்த ஊரு திருச்சி... :)//

//வைகை
மதுரையிலிருந்து இன்னுமொரு.........//

வைகையை பைப் வெச்சு திருச்சிக்கு திருப்பிவிட்டுட்டாங்களா?

said...

//உனக்கு காஞ்சிப்புரம் போயி பட்டுச்சேலை நெய்ய குடுத்துறாலாம்"//

வாங்கண்ணே..கொடுத்துருவோம்..எப்ப வரீங்க? :))

said...

/வர வர எல்லோரும் கதைங்கர பேர்ல சொந்த மேட்டர எழுதறீங்க...

நல்லாயிருங்கண்ணா

வாழ்த்துக்கள்...

ம் நல்லாயிருக்கு../


JK,

சொந்தக்கதை'ன்னா சோகக்கதையா தான் எழுதமுடியுங்க..... :(

said...

வெட்டி,


வாழ்த்துக்கள் சொல்ல இன்னும் டைம் இருக்கு'ப்பா... :)

கதையிலே ஏதோ ஒன்னு மிஸ் ஆகலை.... எல்லாமே மிஸ் ஆயிருச்சு, அடுத்தமுறை எழுதுறப்போ உருப்படியா எழுத முயற்சிக்கிறேன்..... :)

said...

////கதாநாயகன் சொந்த ஊரு திருச்சி... :)//

//வைகை
மதுரையிலிருந்து இன்னுமொரு.........//

வைகையை பைப் வெச்சு திருச்சிக்கு திருப்பிவிட்டுட்டாங்களா?//


ஹய்யோ.... ஆராய்ச்சி பண்ணி கண்டுப்பிடிச்சிட்டாரு...... :)

said...

/கப்பி பய said...

//உனக்கு காஞ்சிப்புரம் போயி பட்டுச்சேலை நெய்ய குடுத்துறாலாம்"//

வாங்கண்ணே..கொடுத்துருவோம்..எப்ப வரீங்க? :))///

செல்லம், பாசவெள்ளத்தை கொஞ்சம் அணைப் போட்டு நிப்பாட்டேன்.... :(

said...

Good One Raam!

\'தகரடப்பா'க்குள்ளே கூழாங்கல்லை போட்டு உருட்டுனாப்பலே குரலு, பனைமரத்திலே கால்வாசியே வெட்டி எடுத்துட்டு அதுக்கு துணி மாட்டி விட்ட மாதிரி உருவத்தை வைச்சிக்கிட்டே ஒன்னை ஒரு பொண்ணு லவ் பண்ணுது'ன்னா அது பெரிய விஷயமில்லயா?/

super aah kalaikireenga Raam, enjyd reading ur story.

Divya.

said...

//Good One Raam!

\'தகரடப்பா'க்குள்ளே கூழாங்கல்லை போட்டு உருட்டுனாப்பலே குரலு, பனைமரத்திலே கால்வாசியே வெட்டி எடுத்துட்டு அதுக்கு துணி மாட்டி விட்ட மாதிரி உருவத்தை வைச்சிக்கிட்டே ஒன்னை ஒரு பொண்ணு லவ் பண்ணுது'ன்னா அது பெரிய விஷயமில்லயா?/

super aah kalaikireenga Raam, enjyd reading ur story.

Divya.//


திவ்யா,

நன்றி........

மனசுக்குள் மத்தாப்பு மறுபடியும் எப்போ ஆரம்பிக்க போகுது???

ஒங்க ரசிகர்களான நாங்க எல்லாரும் வெயிட்டிங்.... :)

said...

Difft difft ellarum sollura adhae software engineer lifela irukura kaadhala solli asathureenga:)

said...

Romba Romba Super a !!! Chance e illa...