ஆத்தா! நானும் சுடர் ஏத்திட்டேன்!!!
ஒலிம்பிக்'லே ஒவ்வொரு கண்டமா சுடரை தூக்கிட்டு ஒடி இன்னொருத்தவங்கிட்டே சேர்த்து அவங்களையும் ஒடவைக்கிறமாதிரியே, ஒருத்தருக்கு இன்னொருத்தர் கேள்விகேட்டு அவரு இன்னொருத்தருக்கு கேள்வி கேட்டு வர்ற சங்கிலிதொடர் இங்கே தேன்கூட்டு சுடர் பதிவா ஆகிருக்கு, முதலிலே ஏத்துனது வெட்டிவீரர் பாலாஜி, அவரு நம்ம 12B'கிட்டே குடுக்க, அவரும் வழக்கம்போலே நக்கல்நையாண்டி எல்லாம் பண்ணிமுடிச்சிட்டு அதை நம்ம அகில உலக வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தின் தல'கிட்டே கொடுக்க அதை அவரு இப்போ என்கிட்டே குடுத்துருக்காரு,
தல,
எனக்கு சின்னவயசிலே படிச்ச குறளு ஒன்னு சட்டுன்னு ஞாபகம் வந்துச்சு,ஆனா அதுக்கு சரியா அர்த்தம் வேற தெரியலை.
சரின்னுட்டு நம்ம மன்னார்'கிட்டே கேட்டேன், அவரு என்னா சொல்லிருக்காருன்னா..
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். [517- தெரிந்து வினையாடல்]
இப்ப ஒனக்கு ஒரு காரியம் நடந்தாவணும். அத்தயும் இன்னொருத்தர் பண்ணணும்னு நெனக்கற நீ. இன்ன பண்றதுன்னு யோசி. இந்தக் காரியத்தை இன்னின்னாருதான் பண்ண முடியும்னு ஒரு லிஸ்டு போட்டு, அதுல யாரு இதுக்கு தோதா வரும்னு முடிவு பண்ணு. அந்தாளக் கூப்ட்டு 'என் ராசா! நீஇதான் கண்ணு இந்தக் காரியத்தச் சேய்யனும் எனக்காவ'ன்னு சொல்லி அவங்கிட்ட கொடுத்திடு. நீ நம்பினதுக்கே அவன் ஒனக்காவ சுத்தபத்தமா முடிச்சுக் கொடுப்பான்.
நீ எம்மேலே இம்புட்டு நம்பிக்கை வைச்சு என்னையும் மனிசனா மதிச்சு அஞ்சு கேள்வி கேட்டுருக்கே... எல்லாரும் ஒன்னய அடிக்கடி சொல்லுறமாதிரி நானும் சொல்லுறேன்.
"நீ ரொம்ப நல்லவரு தல"
1. குரூ...பெங்களூருதல்லி நிமகே இஷ்டமான, ப்ரீத்தியான நாலு சமாச்சாரங்கள் சொல்ல பேக்கோ.
ஏழித்தினி பிடி..
I) இங்கே இருக்கிற பசுமையான இயற்கைசூழல், எல்லா இடத்திலும் சின்ன அளவாவது ஒரு பூங்கா ஒன்னு இருக்கும்.
II) கர்நாடக மக்களின் மொழிவளமை. தாய்மொழிக்கு முன்னுரிமை தரதோடு மட்டுமில்லாமே இந்தி, இங்கிலிஸ்'ன்னு எல்லாமொழியையும் ஆரம்பகல்வியிலே இருந்தே ஆரம்பிக்கிறது.
III) ஹி ஹி பொண்ணுங்க.....
IV) டிராபிக் ஜாம்:)
2. அவ்வப்போது ராயலைக் கவிதை எழுதத் தூண்டுதலாக இருப்பது என்ன?
மண்டையிலே மசாலா காலியாகிறப்போ அந்த தப்பை பண்ணுவேன், அதிலே இந்த காதல் கவிதை எழுதுறேன்னு சொல்லி படிக்கிற எல்லாரையும் நிறைய தடவை வெறுப்பேத்தி இருக்கேன்.
3. உன்னோட வாழ்க்கையில நடந்த, இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி மீண்ட மாதிரி ஏதாவது ஒரு சம்பவம்/அல்லது நகைச்சுவை சம்பவம் ஒன்னைச் சொல்லப்பா?
ஒன்னா? ரெண்டா ? நிறைய தடவை நடத்துருக்கு, அதைக்கூட நான் ஏன் மாத்தினேன்னா?ன்னு பதிவை போட்டு செய்வினை வைக்கிறவங்களை தேடிப்போயி என் சொந்தசெலவிலே வைச்சிக்கிட்டேனே???
இப்போ லேட்டஸ்டா ஒன்னு சொல்லினுமின்னா போனவாரம் வெள்ளிக்கிழமை ஜிரா விட்டிலே சின்ன வலைப்பதிவர் மீட்டிங் நடத்துச்சு, நான் அவரு வீட்டுக்கு முன்னபின்னே போனது கிடையாது, அதுனாலே சரியா வழியும் தெரியாது, ஒரு இடத்திலே இருத்துட்டு அவருக்கே போன்பண்ணி நீங்களே வந்து என்னை பிக்கப் பண்ணிட்டு போயிருங்கன்னு சொன்னேன், சரி அவரு வர்றவரைக்கும் ஏன் சும்மா இருப்போமின்னு விவசாயிக்கு போன்பண்ணி நீங்க எங்கே இருக்கீங்கன்னு கேட்டேன், அவரு அதுக்கு "நானு ரொம்ப பிசி, நீங்க எங்க இருக்கீங்கன்னு கேட்டுட்டு அப்பிடியா எல்லாரையும் போய் மீட் பண்ணிட்டு போன் பண்ணுங்க"ன்னு சொல்லி வைச்சிட்டாரு.
ஜிரா வீட்டுக்கு போனா அங்கே பெரிய கோஷ்டியே உட்கார்த்து கும்மியடிச்சிட்டு இருத்துச்சு, முத்து தமிழினி, நாமக்கல் சிபி , கொலைவெறி படை தலைவர் செந்தழல் ரவி, காதல்முரசு அருட்பெருங்கோ, ஓமப்பொடி சுதர்சன், வீட்டுக்கு ஓனரு ஜிரா, அப்புறம் இன்னொரு எக்ஸ்டரா'வா ஒரு உருவம் உட்கார்த்திருச்சு, அவரை பார்த்ததும் சரியா யாருன்னு மட்டுபடலை, கிட்டத்தட்ட அரைமணி நேரமா பேசிட்டு இருந்தோம், ஆனா எல்லாரும் என்னைப் பார்த்து ஹி ஹி'ன்னு ஒருமாதிரியா தான் சிரிச்சுட்டு இருந்தாங்க...
கடைசியிலே முத்து "என்னா ராம் எல்லாரையும் சரியா அடையாளம் கண்டுபிடிச்சு பேசினீங்க..!ஆனா இந்த ஆசாமியை விட்டுட்டிங்க?"ன்னு கேட்டாரு, எனக்கு அவர யாருன்னே தெரியலை? இருந்தாலும் ஒரு Guess'க்கு இளா'வான்னு கேட்டேன், ஆனா மனுசன் என்னை கலாய்ச்சு தொங்கப்போடனும்மின்னே குரலை கூட மாத்தி ஆளை அதை வச்சு கூட கண்டுபிடிச்சிறகூடாதுன்னு பெரிய வில்லத்தனமெல்லாம் பண்ணிருந்தார். அங்கே இருந்த எல்லாப்பேரும் திட்டம் போட்டு என்னை ஓட்டி எடுக்கனுமின்னு பெரிய பிளான்'டோ இருந்திருக்காங்க. இளா'வுக்கு நான் போன் பண்ணுறோப்போ அவரு ஜிரா வீட்டுலே உட்கார்த்திருக்காரு. அதுவுமில்லமே நான் பேசினதை ஸ்பிக்கர்'லே வேற பொட்டு விட்டுருக்காரு.
கிட்டத்தட்ட ஒரு வருசமா பழக்கமிருந்தாலும், சங்கமின்னு வேறே ஒரே இடத்திலே கும்மியடிச்சாலும் இப்பொதான் நேரா பார்க்கிறேன். ஹீம் என்னபண்ண? விட்றா! விட்றா !இந்தமாதிரி பல்பு வாங்கிறது நமக்கு மொததடவையான்னு மனசை தேத்துக்கிட்டேன். எல்லாரும் ஹெக்கெபிக்கென்னு சிரிச்சு முடிச்சதும் வழக்கம்போலே ஒரு வீரவசனம் "நான் உள்ளே வர்றப்பவே நினைச்சேன், நீங்க இளாவான்னு கேட்கலாமின்னு தோணுச்சு"ன்னு உதார் விட்டேன்.
4. மிசஸ் ராயல் பத்தி மிஸ்டர் ராயலின் கனவுகள் என்னென்ன?
அது கனவு எல்லாம் இல்லை....தவம்ன்னு கூட வைச்சுக்கலாம். காரணம் என்னான்னா என்னாலே ஒரு சரியான முடிவு எடுக்கமுடியாது, அப்பிடியே எடுத்தாலும் எங்கேயாவது ஒரு இடத்திலே மாட்டிக்கிட்டு பே'ன்னு முழிப்பேன், அதுவுமில்லாமே மெனக்கெட்டு ஊதி ஊதி எரிச்சா எரியிற வாழைமட்டை மாதிரி வேறே நானு,ஒருத்தர் தார்குச்சியை வெச்சுக்கிட்டு அடியை போட்டு விரட்டுனா தான் என்னைலே வேலையே பார்க்கமுடியும். அதுனாலே என்னை வழிநடத்துற எஜமானியா என்னோட மிஸ்ஸஸ் வரனுமின்னு ஆசை இருக்கு.
5. தமிழ் திரையுலகில் உங்களைக் கவர்ந்த இரு திரைப்படக் காட்சிகளைச் சொல்லவும். ஏன் பிடிச்சிருக்கும்னும் சொல்லணும்?
I) இப்போ திடீரென்னு முளைச்சு நான் லிட்டில், பாட்டிலு சூப்பர்ஸ்டார்'ன்னு சவுண்ட் விடுறாய்ங்கே, நம்மளோட எப்பவும் சூப்பர்ஸ்டார் நடிச்ச படமான 'ஆறிலிருந்து ஆறுபது வரை' எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலே ஒரு காட்சியிலே ஏழ்மை நிலையிலே இருக்கிற கதாநாயகன் தன்னோட சகோதரி வீட்டுக்கு போறோப்ப தன்னால் இயன்றவரையிலே வாங்கிட்டு போனதை அவள் உதாசினப்படுத்திரதும், அதுக்கு ரஜினி தன்னோட இயலாமையை நினைச்சிட்டு அப்பிடியே கலங்கின கண்களோடு வெளியே வருவார். மேலும் அவருமேலே தங்கை இன்னும் சுடுவார்த்தைகளை பிரயோகிப்பாள். அதையும் அமைதியா கேட்டுட்டு வெளியே வருவாரு..... இப்போ எங்கேய்யா எங்க தலைவர்...???
II) பதினாறு வயதினிலே படத்திலே வர்ற "ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் மட்டும் வளர்க்கலை! அதுக்கு பதிலா என்னை வளர்த்துச்சு!!!" வசனத்தை நாமே நிறைய இடத்திலே கேட்டுருப்போம். ஆனா அந்த வசனம் வர்ற சூழ்நிலையான கதாநாயகி எந்தவொரு ஆதரவும் இல்லாமே உடல்நிலை சரியில்லாத நிலையிலே அருகிலே இருந்து அவளை கமல் கவனித்துவிட்டு அப்பிடியே தூங்கிருவாரு. ஸ்ரீதேவி கண்முழிச்சு பார்த்து சந்தேகம் + அருவெருப்பு பார்வையோட பார்க்கிற அந்த தருணத்திலேதான் கமல் அந்த வசனம் பிரயோகிப்பார்.
அப்பாடி அஞ்சு கேள்விக்கும் பதில் சொல்லுறதுக்குள்ளே மண்டை காய்ச்சுருச்சுடா சாமியோவ்... இப்போ நான் வேற அஞ்சு கேள்வி கேட்கணுமா???யாரை பிடிக்கிறது, அவங்ககிட்டே என்ன கேட்கிறதுன்னு ஒரே கன்பியூசனு? "ஐயோ ஐயோ'னு உட்கார்ந்து அழாத குறையா இருந்தேன்." ஏன்னா நாப்பாட்டுக்கு எதாவது விளையாட்டா கேட்கப்போக அது வேறமாதிரி அவங்க புரிஞ்சுக்கிட்டா என்னப்பண்ணுறதுன்னு பயம் வேற தொத்திக்கிருச்சு. ரொம்ப நேரமா யோசிச்சு கடைசியா சிக்கினவங்க நம்ம கவிதா'க்கா.
ஓகே ஓவர் டூ கவிதா
1) இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. குறளுக்கு அர்த்தம் தெரியுமாக்கா?
2) அணிலு அணிலுன்னு சொல்லுறீங்களே... அது உங்க மல்டிப்பிள் பர்சனாலிட்டியிலே ஒன்னா?
3) இப்போ இருக்கிற வட்டத்தை தாண்டி நீங்க ரசிக்கிற விஷயங்கள் என்னென்ன?
4) இன்னவரைக்கும் நீங்க நினைச்சு நினைச்சு சிரிக்கிற சம்பவம் என்ன? (அதை படிச்சா எங்களுக்கும் சிரிப்பு வரணும்)
5) ஒரு கற்பனை:- டயம் மிஷின் கிடைச்சு அதிலே நீங்க பின்னோக்கி போகலாமின்னு சொன்னா எந்த வயசை தேர்த்தெடுப்பீங்க?
அப்பாடி நம்ம வேலை முடிஞ்சு போச்சு... குறளோட ஆரம்பிச்சமாதிரி அதை வைச்சே முடிச்சிறேன்.
குறளுக்கு அர்த்தம் சொன்ன மன்னாரு'க்கு அவரு வீட்டு முக்குலே இருக்கிற கடையிலே டீயும், பீடிகட்டும் ஓசியிலே எத்தனை தடவை வேணுமின்னாலும் வாங்கிக்கலாம். அதுக்கு ஆகிற செலவை தல தன்னுடைய சொந்த பணத்திலிருந்து அளிப்பார்.
"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்." [104-- செய்ந்நன்றி அறிதல்]
நீ ஒரு ஆளுக்கு ஒரு நல்ல காரியம் பண்றேன்னு வையி. அதென்னமோ ஒன்னியப் பொருத்தவரைக்கும் ரொம்ப சின்ன காரியமா இருக்கலாம். ஆனா, அத்தோட மகிமையப் புரிஞ்சவனுக்கு அது ஒரு மலையளவுக்கு பெருசாத் தெரியும். இன்னா காரியம் செஞ்சுப்புட்டேப்பான்னு ஒன்னியக் கொண்டாடிருவான்.
58 comments:
//அதுனாலே என்னை வழிநடத்துற எஜமானியா என்னோட மிஸ்ஸஸ் வரனுமின்னு ஆசை இருக்கு.//
Amen
ராயல்,
கலக்கல் சுடர்ஸ் ஆஃப் பெங்களூர்ப்பா. ரொம்ப நல்லாருக்கு.
:)
//ஆனா இந்த ஆசாமியை விட்டுட்டிங்கன்னு கேட்டாரு, எனக்கு அவர யாருன்னே தெரியலை? இருந்தாலும் ஒரு Guess'க்கு இளா'வான்னு கேட்டேன்//
என்கிட்ட சொன்னியே..."ஷெர்வின் ஃபேஸ்கட்ல ஒருத்தரு ஒக்காந்திருக்கும் போதே அவரு இளாவாத் தான் இருக்கும்னு சந்தேகப் பட்டேன்"னு, அதை ஏன் கண்ணு பப்ளிக்கா ப்ளாக்ல போடலை?
:))
ஆகா...ராமும் பதிவு போட்டாச்சா? சுடர் நல்லாத்தான் எரியுது.
அன்னைக்கு வீட்டுக்கு வந்ததுல இருந்து பம்பிக்கிட்டு உக்காந்திருந்தது இதுனாலதான. உண்மை வெளியில வந்துருச்சே!
அன்னைக்கு உங்கள எல்லாத்தையும் சந்திச்சதுல மகிழ்ச்சி.
அடுத்து கவிதா என்ன சொல்றாங்கன்னு பாப்போம்.
////அதுனாலே என்னை வழிநடத்துற எஜமானியா என்னோட மிஸ்ஸஸ் வரனுமின்னு ஆசை இருக்கு.//
உன் நல்ல மனசுக்கு தார்க்குச்சியால நெறைய அடி வாங்கி சந்தோஷமா இருப்பே ராசா.
:)
//III) ஹி ஹி பொண்ணுங்க.....//
Nalllaa valiyureenGka Raam.. iNthaangka handkerchief.. thodachchikkOnGga.. hehehe..
ராம், சுடர் பிரகாசமா ஏத்திட்டீங்க.
ரொம்ப நல்லா பதிவாயிருக்கு.
நல்ல மனைவி அமைய வாழ்த்துகள்.
//அதுனாலே என்னை வழிநடத்துற எஜமானியா என்னோட மிஸ்ஸஸ் வரனுமின்னு ஆசை இருக்கு.//
Amen //
போர்வாளு,
என்ன இந்த ஒத்தவரி கமெண்ட்... கல்யாணம் ஆகிட்டா இப்பிடிதான் ஆகிறுவோமோ???? :)
நல்ல ஜாலியான பதில்கள் இராம்!
பெங்களூருல பிடிச்ச நாலு விஷயம்னு கேட்டதும் மூனாவதா சொன்னதையே நான்கு முறை சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன் ;)
//மண்டையிலே மசாலா காலியாகிறப்போ //
உங்களுக்கு ரொம்ப திறந்த மனசு..அதனால தான் காலியாயிடுது :))
/இந்தமாதிரி பல்பு வாங்கிறது நமக்கு மொததடவையான்னு மனசை தேத்துக்கிட்டேன்.//
புண்பட்ட மனசை எதை வச்சு ஆத்தனீங்க? ;)
//மிசஸ் ராயல்//
இன்னும் 4 மாசம் தானே...தார்க்குச்சியோட வந்துடுவாங்க..வெயிட் பண்ணுங்க ;)
6-to-60 அது செமத்தியான சீன்..ஞாபக்ப்படுத்திவிட்டதுக்கு டாங்க்ஸ்
குரல் விடறதோட குறளும் சேர்த்து விட்டிருக்கீங்க...சுடர் நல்லா பிரகாசிக்குது :)
//ராயல்,
கலக்கல் சுடர்ஸ் ஆஃப் பெங்களூர்ப்பா. ரொம்ப நல்லாருக்கு.
:) //
தல,
ரொம்ப டாங்கீஸ்..... என்னையும் மனுசனா மதிச்சு கூப்பிட்டதுக்கும் இன்னோரு டாங்கீஸ் :)
/என்கிட்ட சொன்னியே..."ஷெர்வின் ஃபேஸ்கட்ல ஒருத்தரு ஒக்காந்திருக்கும் போதே அவரு இளாவாத் தான் இருக்கும்னு சந்தேகப் பட்டேன்"னு, அதை ஏன் கண்ணு பப்ளிக்கா ப்ளாக்ல போடலை?
:)) //
நமக்குள்ளே நடந்த தனிப்பட்ட உரையாடல் தொடர்புகளை இப்பிடி பொதுவில் சொன்னதுக்கு என்னுடைய கண்டனங்களை பதிக்கின்றேன். :(
//ஆகா...ராமும் பதிவு போட்டாச்சா? சுடர் நல்லாத்தான் எரியுது.//
வாங்க ஜிரா,
ரொம்ப நன்றிங்க..
//அன்னைக்கு வீட்டுக்கு வந்ததுல இருந்து பம்பிக்கிட்டு உக்காந்திருந்தது இதுனாலதான. உண்மை வெளியில வந்துருச்சே!//
ஹி ஹி... தல நல்லா போட்டு வாங்கிட்டாரு.... வேறவழியே இல்லேமே ஒத்துக்கிட வேண்டியதா போச்சு....
ஆமாம் நீங்க மசாலா காலியானதை தானே கேட்கீறீங்க.... :)
//அன்னைக்கு உங்கள எல்லாத்தையும் சந்திச்சதுல மகிழ்ச்சி.//
எனக்கும் மிக்க மகிழ்ச்சி, நீங்க குடுத்த கேப்பை இனிப்பு உருண்டையும் நல்லா இருத்துச்சு.. :)
//அடுத்து கவிதா என்ன சொல்றாங்கன்னு பாப்போம்.//
கவிதாக்கா எங்கே இருக்கீங்க???
/உன் நல்ல மனசுக்கு தார்க்குச்சியால நெறைய அடி வாங்கி சந்தோஷமா இருப்பே ராசா.
:) //
தல,
ஏன் ஒனக்கு அது விழாதா.....
/Nalllaa valiyureenGka Raam.. iNthaangka handkerchief.. thodachchikkOnGga.. hehehe.. //
மை ஃபிரண்ட்,
முதன்முறையா வந்திருக்கீங்க.....
ஹி ஹி.... எவ்வளவுதான் தொடச்சிட்டே இருக்கிறது....
பிரிகேட் ரோட் இந்தியாவின் இளம்பூக்களின் வாசலுன்னு சும்மா'வா சொன்னாங்க... :)
//ராம், சுடர் பிரகாசமா ஏத்திட்டீங்க.
ரொம்ப நல்லா பதிவாயிருக்கு.//
வாங்க அம்மா, --/\--
தாங்களின் வருகைக்கும் பாராட்டுதலும்
மிக்க நன்றி.
//நல்ல மனைவி அமைய வாழ்த்துகள். //
உங்களின் ஆசிர்வாதம் அதற்கு துணைபுரியட்டும் :)
//நல்ல ஜாலியான பதில்கள் இராம்!//
வாப்பா கப்பி நிலவா,
நன்றிப்பா:)
//பெங்களூருல பிடிச்ச நாலு விஷயம்னு கேட்டதும் மூனாவதா சொன்னதையே நான்கு முறை சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன் ;)//
எல்லாநேரத்திலேயும் உண்மையை மட்டும் பேசுறமாதிரி இருக்கமுடியுமா என்ன??
//மண்டையிலே மசாலா காலியாகிறப்போ //
உங்களுக்கு ரொம்ப திறந்த மனசு..அதனால தான் காலியாயிடுது :))//
ஹி ஹி டாங்கீஸ்
//புண்பட்ட மனசை எதை வச்சு ஆத்தனீங்க? ;)//
வழக்கம்போல 3.50 குடுத்து தங்க இராசா வடிகட்டியை வச்சுதான் :)
//மிசஸ் ராயல்//
இன்னும் 4 மாசம் தானே...தார்க்குச்சியோட வந்துடுவாங்க..வெயிட் பண்ணுங்க ;)//
நீ என்னப்பா தப்பா டைப் பண்ணி வைச்சுருக்கே... மாசம் இல்லே வருசம்...
சரி எங்கதையே விடு, இந்த மாசியிலே கல்யாணமா இல்லே வைகாசியா, சீக்கிரம் இந்தியா வந்து சேருப்பா.. உனக்காக இருவீட்டாரும் வெயிட்டிங்க்....
//6-to-60 அது செமத்தியான சீன்..ஞாபக்ப்படுத்திவிட்டதுக்கு டாங்க்ஸ்//
அப்போ நடிச்ச தலைவனை நாமே டயலாக் பேசவிட்டே தொலைச்சிட்டோம் :(
//குரல் விடறதோட குறளும் சேர்த்து விட்டிருக்கீங்க...சுடர் நல்லா பிரகாசிக்குது :) //
அதுக்கு உதவிய மன்னார்'க்கு நன்றி சொல்லிக்கிறேன்.
சும்மா குறள்ல ஆரம்பிச்சு பூந்து வெளயாடிட்டீங்க ராயலு..கலக்கல் சுடர் :-)
//அதுனாலே என்னை வழிநடத்துற எஜமானியா என்னோட மிஸ்ஸஸ் வரனுமின்னு ஆசை இருக்கு//
சொன்னாலும் சொல்லாட்டியும் அவங்கதான் எஜமானி..அத நம்ம நினைச்சாலும் மாத்த முடியாது... :-)
//ஏன் ஒனக்கு அது விழாதா.....//
தல வரவன் போறவன் கிட்ட எல்லாம் வாங்குறார்...அவரோட அம்மனிகிட்ட உரிமயா கேட்டு வாங்குவார் :-)
//பிரிகேட் ரோட் இந்தியாவின் இளம்பூக்களின் வாசலுன்னு சும்மா'வா சொன்னாங்க... :)//
இப்படி பழசயெல்லாம் ஞாபகப் படுத்துறீங்களே.... ஜொள்ளுப் பாண்டிதான் நம்மள உசுப்பேத்துறார்னா நீங்களுமா???
அப்புறம் சுடரெல்லாம் பளிச்.. பளிச்...
அடுத்தது பாப்போம்... கவிதாக்காவோட ஒலிம்பிக்ஸ... :))
இளா உங்கள வச்சி காமெடி பண்ணது சூப்பர்...
ஆஹா இதான் சுடரா?
சுற்றும் விழி சுடரா!
நல்லா இருக்கெ இந்த விளையாட்டு.
ராம் கலக்கல் பதில்கள்.
//சும்மா குறள்ல ஆரம்பிச்சு பூந்து வெளயாடிட்டீங்க ராயலு..கலக்கல் சுடர் :-)//
வாங்க 12B,
ரொம்ப நன்றிங்கோ... உங்க ஸ்டைலிலே ஒரு போஸ்ட் போடனுமின்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை :)
//அதுனாலே என்னை வழிநடத்துற எஜமானியா என்னோட மிஸ்ஸஸ் வரனுமின்னு ஆசை இருக்கு//
சொன்னாலும் சொல்லாட்டியும் அவங்கதான் எஜமானி..அத நம்ம நினைச்சாலும் மாத்த முடியாது... :-)//
அனுபவம் பேசுது :)))))))
//ஏன் ஒனக்கு அது விழாதா.....//
தல வரவன் போறவன் கிட்ட எல்லாம் வாங்குறார்...அவரோட அம்மனிகிட்ட உரிமயா கேட்டு வாங்குவார் :-)//
Super 12B...
ROFL
//இப்படி பழசயெல்லாம் ஞாபகப் படுத்துறீங்களே.... ஜொள்ளுப் பாண்டிதான் நம்மள உசுப்பேத்துறார்னா நீங்களுமா???//
வாங்க ஜி,
என்ன இப்பிடி சொல்லிட்டிங்க.. அங்கேவா செட்டிலாக போறீங்க... இன்னும் கொஞ்சநாளிலே "போன மச்சான் திரும்பி வந்தான்"கிறே கதையா இங்கேதான் வரப்போறீங்க.. அப்புறம் வழக்கம்போலே இட்லிவடை + வெல்லசாம்பார் , மதியம் ரொட்டி + வெல்லம் போட்ட சாம்பார், ரசமின்னு தான் வாழ்க்கை ஓடப்போகுது :)
//அப்புறம் சுடரெல்லாம் பளிச்.. பளிச்...//
ரொம்ப டாங்கீஸ் :)
//அடுத்தது பாப்போம்... கவிதாக்காவோட ஒலிம்பிக்ஸ... :))//
கவிதாவும் அணிலும் ரெடியா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்... :)
//இளா உங்கள வச்சி காமெடி பண்ணது சூப்பர்... //
என்ன வில்லத்தனம் அந்தாளுக்கு :(
//ஆஹா இதான் சுடரா?
சுற்றும் விழி சுடரா!
நல்லா இருக்கெ இந்த விளையாட்டு.//
வாப்பா கதிரு,
ஒனக்கும் வரும் இந்த சுற்று விழி சுடர்... அப்போ போட்டுத் தாக்கு :)
//ராம் கலக்கல் பதில்கள்.//
டாங்கீஸ்ப்பா, ஆமா எதை கலக்குன பதிலு?? :)
மன்னாரிடம் இரு குறளுக்குப் பொருள் வேண்டும் எனக் கேட்ட போது இப்படி ஒரு கலக்கலான பதிவுக்குத் தான் அது என அவனுக்கும் தெரியவில்லை; எனக்கும் தெரியவில்லை!
'ராமுத்தம்பி ரொம்ப நல்லா யூஸ் பண்ணிருக்குப்பா குறளை' என மயிலை மன்னார் மிகவும் மகிழ்ந்தான்.
அதுவும் அந்த இளா காமெடி படித்து விட்டு வி.வி.சி.!!
நல்ல பதிவு சுடர் ராம்.முதல் முதலாக உங்கள் பதிவைப் படிக்கிறேன். திருக்குறள் விளக்கங்கள் அருமை. என் போன்ற பல்புகளுக்கு மெட்ராஸ் பாஷைல சொன்னாத்தான் புரியும்.
ராயல்,
அருமையான பதிவு!!!
இன்னும் 4 மாசத்துல கல்யாணமா??? சீக்கிரம் சொல்லுங்க.. அப்பதான் டிக்கெட் புக் பண்ண முடியும்...
அப்படியே மருதையில வைங்க... எனக்கு மருதையில நல்ல சாப்பாடு சாப்பிடனும்னு ரொம்ப நாளா ஆசை :-)
வணக்கம் ராம்
கலக்கல் சுடர் :))
//மன்னாரிடம் இரு குறளுக்குப் பொருள் வேண்டும் எனக் கேட்ட போது இப்படி ஒரு கலக்கலான பதிவுக்குத் தான் அது என அவனுக்கும் தெரியவில்லை; எனக்கும் தெரியவில்லை!//
வாங்க SK ஐயா,
எல்லாமே ஒரு சஸ்பென்ஸ்க்காக தான் நானு மன்னாரு கையிலே சொல்லலே.... ஆங் :)
//'ராமுத்தம்பி ரொம்ப நல்லா யூஸ் பண்ணிருக்குப்பா குறளை' என மயிலை மன்னார் மிகவும் மகிழ்ந்தான்.//
ரொம்ப நன்றி SK ஐயா & மன்னார்
//அதுவும் அந்த இளா காமெடி படித்து விட்டு வி.வி.சி.!! //
ஹி ஹி... நானே இப்போகூட அதை நினைச்சு சிரிச்சேன்... :)
//நல்ல பதிவு சுடர் ராம்.முதல் முதலாக உங்கள் பதிவைப் படிக்கிறேன்.//
வாங்க சந்திரசேகரன்,
மிக்கநன்றி உங்களின் முதன்வருகைக்கு,
மீண்டும் வருகை தாருங்கள்.... :)
//திருக்குறள் விளக்கங்கள் அருமை. என் போன்ற பல்புகளுக்கு மெட்ராஸ் பாஷைல சொன்னாத்தான் புரியும். //
அந்த விளக்கங்கள் நம்ம மன்னாரு எழுதுனதுங்க..... :)
//ராயல்,
அருமையான பதிவு!!!//
டாங்கீஸ் வெட்டி,
//இன்னும் 4 மாசத்துல கல்யாணமா??? சீக்கிரம் சொல்லுங்க.. அப்பதான் டிக்கெட் புக் பண்ண முடியும்...//
ஐயா தம்புடு அது மாசம் இல்லை..வருசம்... :)
//அப்படியே மருதையில வைங்க... எனக்கு மருதையில நல்ல சாப்பாடு சாப்பிடனும்னு ரொம்ப நாளா ஆசை :-) //
மருதையிலேதான் கல்யாணம், கவலையே வேணாம், தடல்புடல் விருந்தே சாப்பிடலாம். :)
/வணக்கம் ராம்
கலக்கல் சுடர் :)) //
வாங்க கோபிநாத்,
வணக்கம் , முதன்முறையாக வந்திருக்கீங்க...
மிக்க நன்றி
இராயலு,
கலக்கிட்டேமா... அதுவும் மனைவி பற்றிய கேள்வியில் சேம் Blood. ஆனாலும் உன்னை விவசாயி இப்படி கலாச்சி இருக்க கூடாது.
ராம், கலக்கல் போங்க...சும்மா சொல்ல கூடாது, நீங்க கொஞ்சம் சுவாரசியமான ஆளு தான்..
நல்லாவே சுடரை ஏந்தி ஓடி இருக்கீங்க ராம்.. சாரி ராயல் ராம்..
குறள் விளக்கங்கள் டாப்
ராயலு,
நல்லாத்தான் ஏத்தியிருக்க இந்த சுடரை! (சிங்காரவேலன் கமல் ஸ்டைலில் படிச்சிக்கோ!):))
ஆமா, மூணு குறள் போட்டு இருக்கையே, அதை எல்லாம் அழகா அலகிட்டு பார்த்து இருக்கலாமில்ல.
அப்படியே உன் பங்குக்கு இந்த சந்தர்ப்பம் தந்த தலைக்கு ஒரு வெண்பா, அடுத்து வரும் அலைக்கு ஒரு வெண்பா அப்படின்னு போட்டுத் தாக்கி இருக்க வேண்டாம்?
என்னப்பா,எல்லாம் எங்க ஓடறீங்க? இருங்கப்பா.....ச்சே, இப்படி நம்மைக் கண்டாலே ஓடறாங்களே. என்ன மேட்டருன்னே தெரியலையே!
ஜிரா வீட்டில நல்லா பல்பு வாங்கியிருக்கிங்க போல :)))
நீங்க நினைச்ச மாதிரி Mrs.Royal அமைய வாழ்த்துக்கள் :)
// ஹி ஹி பொண்ணுங்க.....// மட்டுமில்ல, பந்தா எதுவும் காட்டாமல் நம்மளயும் மதிச்சு, சிரிச்சு மாத்தாடும் பெண்கள்!
//ஐயா தம்புடு அது மாசம் இல்லை..வருசம்... :)
//
நானும் இப்படித்தேன் சொல்லீட்டு திரிஞ்சேன்...கடைசில நாலு நாள்ல அமுக்கிட்டாய்ங்க...சாக்ரதயா இருங்கப்பு :-)
பதில்கள் அனைத்திலும் அருமை, உண்மை. !
வாழ்த்துக்கள் !
//இராயலு,
கலக்கிட்டேமா... அதுவும் மனைவி பற்றிய கேள்வியில் சேம் Blood. ஆனாலும் உன்னை விவசாயி இப்படி கலாச்சி இருக்க கூடாது.//
வாப்பா சந்தோஷ்,
என்னம்மா கண்ணு, கஞ்சி கொடுத்து கேட்கிற பக்கத்திலே தப்பிச்சு ஓடிட்டியே...
ஏய்யா பதிவுலே எவ்வளோ நிறைய விஷயமிருக்கு, அதெல்லாம் விட்டுட்டடு நான் பல்பு வாங்கினது தான் கண்ணுக்கு தெரிஞ்சதா????
:))
//ஹீம் என்னபண்ண? விட்றா! விட்றா !இந்தமாதிரி பல்பு வாங்கிறது நமக்கு மொததடவையான்னு மனசை தேத்துக்கிட்டேன்.//
Aathaa Raamuku Special oru Aapu vechutein.
//ராம், கலக்கல் போங்க...சும்மா சொல்ல கூடாது, நீங்க கொஞ்சம் சுவாரசியமான ஆளு தான்..//
வாங்க தூயா,
உண்மையிலே சுவாரசியமான சொல்லாடலுக்கு உரிய மனிதர் நம் நண்பர் வரவனையான் செந்தில் தான் :)))
வருகைக்கு மிக்க நன்றி :)
//நல்லாவே சுடரை ஏந்தி ஓடி இருக்கீங்க ராம்.. சாரி ராயல் ராம்../
வாங்க கார்த்திக்,
நன்றி தங்களின் வருகைக்கும் கருத்து தருகைக்கும் :)
//குறள் விளக்கங்கள் டாப்//
மன்னாருக்கு கணக்கில்லா நன்றிகள்....
//ராயலு,
நல்லாத்தான் ஏத்தியிருக்க இந்த சுடரை! (சிங்காரவேலன் கமல் ஸ்டைலில் படிச்சிக்கோ!):))//
வாங்க கொத்ஸ்,
நன்றி..... :)
//ஆமா, மூணு குறள் போட்டு இருக்கையே, அதை எல்லாம் அழகா அலகிட்டு பார்த்து இருக்கலாமில்ல.//
ஆஹா.. அது வேறயா??? அதெல்லாம் உங்ககிட்டே வெண்பா வடிக்க வர்றப்போ செய்யிறேன்.... அலகு, சொலகு எல்லாம் பண்ணினேன்னு வைங்க இந்த பய பிளாக்கே சும்மா படிச்சுதான் பார்ப்போமின்னே வர்றவங்களும் வரமாட்டாங்க :)
//அப்படியே உன் பங்குக்கு இந்த சந்தர்ப்பம் தந்த தலைக்கு ஒரு வெண்பா, அடுத்து வரும் அலைக்கு ஒரு வெண்பா அப்படின்னு போட்டுத் தாக்கி இருக்க வேண்டாம்?//
தல'க்கு ஒரு வெண்பா.. அவருக்கு வெண்பா மாலையே கட்டி சூட்டணும் சீக்கிரமே... :)
//என்னப்பா,எல்லாம் எங்க ஓடறீங்க? இருங்கப்பா.....ச்சே, இப்படி நம்மைக் கண்டாலே ஓடறாங்களே. என்ன மேட்டருன்னே தெரியலையே!//
என்ன மேட்டரு.... மொத ரெண்டு வரியை தவிர மிச்ச எல்லாம் டீச்சருக ஸ்கூலிலே படுத்தி எடுக்கிற கணக்கா சொல்லி வைச்சிருந்தா????? :)
//ஜிரா வீட்டில நல்லா பல்பு வாங்கியிருக்கிங்க போல :)))//
வாங்க இம்சை அரசி,
முதன்முறை வருகைக்கு மிக்க நன்றி.... :)
ஹிம் பல்பு வாங்கிறது என்ன முதன்முறையா என்னா??? :)))
//நீங்க நினைச்ச மாதிரி Mrs.Royal அமைய வாழ்த்துக்கள் :)//
டாங்கீஸ்ங்கோ :)
//// ஹி ஹி பொண்ணுங்க.....// மட்டுமில்ல, பந்தா எதுவும் காட்டாமல் நம்மளயும் மதிச்சு, சிரிச்சு மாத்தாடும் பெண்கள்!//
வாங்க தெனாலி,
அடடா நீங்களும் பெங்களூரூ'ஆ...?
முதன்முறை வருகைக்கு மிக்க நன்றி...
BTW நீங்கள் உதட்டை குவிக்கும் போது யாராவது இன்னும் டப்பிங் கொடுக்குறாங்களா???? :)))))
//நானும் இப்படித்தேன் சொல்லீட்டு திரிஞ்சேன்...கடைசில நாலு நாள்ல அமுக்கிட்டாய்ங்க...சாக்ரதயா இருங்கப்பு :-)//
12B.
ஏங்க.. இப்பிடியெல்லாம் பீதியை கிளப்புறீங்க....... :(((
//பதில்கள் அனைத்திலும் அருமை, உண்மை. !
வாழ்த்துக்கள் !//
சுந்தர்,
முதன் வருகைக்கும் தங்களின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி...
//Aathaa Raamuku Special oru Aapu vechutein.//
விவசாயி,
ஹிஹி.. இதெல்லாம் எங்க வீரவாழ்க்கையிலே சகஜமிண்ணே :))))
Helo!
Very, very good
Tank you
/ஜிரா வீட்டுக்கு போனா அங்கே பெரிய கோஷ்டியே உட்கார்த்து கும்மியடிச்சிட்டு இருத்துச்சு, முத்து தமிழினி, நாமக்கல் சிபி , கொலைவெறி படை தலைவர் செந்தழல் ரவி, காதல்முரசு அருட்பெருங்கோ, ஓமப்பொடி சுதர்சன், வீட்டுக்கு ஓனரு ஜிரா, அப்புறம் இன்னொரு எக்ஸ்டரா'வா ஒரு உருவம் உட்கார்த்திருச்சு, அவரை பார்த்ததும் சரியா யாருன்னு மட்டுபடலை, கிட்டத்தட்ட அரைமணி நேரமா பேசிட்டு இருந்தோம், ஆனா எல்லாரும் என்னைப் பார்த்து ஹி ஹி'ன்னு ஒருமாதிரியா தான் சிரிச்சுட்டு இருந்தாங்க.../
ஹா ஹா ஹா யாருமே அந்த சந்திப்ப பதிவு போடலையேன்னு நெனச்சுட்டு இருந்தேன்...
சுடர்ல உனக்குனு இப்படி ஒரு கேள்வியக் கேட்டு உன் வாயிலையே வந்துடுச்சா? பாவம்யா நீ...
இதே மாதிரி பற்பல பல்புகள் வாங்க வாழ்த்துக்கள்!!! :)
/Helo!
Very, very good
Tank you //
ஐயா வெள்ளகார தொரை என்ன புரிஞ்சததுன்னு குட்'ன்னு சொல்லிருக்கீங்க....???
//ஹா ஹா ஹா யாருமே அந்த சந்திப்ப பதிவு போடலையேன்னு நெனச்சுட்டு இருந்தேன்...//
வாங்கய்யா காதல் முரசு,
முதன்முறை வருகைக்கு மிக்க நன்றி...
//சுடர்ல உனக்குனு இப்படி ஒரு கேள்வியக் கேட்டு உன் வாயிலையே வந்துடுச்சா? பாவம்யா நீ...//
தள போடுறேன்னு சொல்லிட்டு வேற பக்கம் பார்த்திட்டு போயிட்டாரு....
நானே அதை பதிவிலே சேர்த்து சொந்த செலவிலே செய்வினை வாங்கி வைச்சிக்கிட்டேன் :)
//இதே மாதிரி பற்பல பல்புகள் வாங்க வாழ்த்துக்கள்!!! :) //
இந்த மாதிரி வாழ்த்துக்களெல்லாம் நமக்கு புதுசா என்னா??? :)
அது என்னமோ தெரியலை, குறளுக்கு அர்த்தம் சொல்ல எல்லாருமே மன்னாரைக் கூப்பிடறீங்க! புதுசாக் குறளுக்கு "மன்னார் உரை"ன்னு ஒண்ணு வந்திருக்கா என்ன?
சுடர் ஏத்திட்டீங்க.. இங்க பாருங்க.. இன்னுமொரு மொக்கைப் பதிவுக்கு வாய்ப்பு :))
//அது என்னமோ தெரியலை, குறளுக்கு அர்த்தம் சொல்ல எல்லாருமே மன்னாரைக் கூப்பிடறீங்க! புதுசாக் குறளுக்கு "மன்னார் உரை"ன்னு ஒண்ணு வந்திருக்கா என்ன? //
வாங்க மேடம்.... மன்னாரு நமக்கு ரொம்ப பிரண்ட்'லே, அதுதான் அவரை கூப்பிட்டு அர்த்தம் கேட்டோம்... :)
Post a Comment