இனிய ரயில் பயணங்களில்
பெங்களுருலிருந்து மதுரை சென்ற ரயில் பயணத்தில் எனக்கு கிடைத்த நெருடல்.....
நான் மற்றும் ஒரு தம்பதிகள் மற்றும் கணவரின் தம்பி ஆகிய முன்று நபர்கள் எதிர் பெர்த்தில் மற்றொரு தம்பதிகள்.முதல் தம்பதிகள் பேச ஆரம் பித்தார்கள்.ஒரு சிறிய புன்னகை கிடைத்தது எனக்கும் மற்ற இருவருக்கும்.அத்தம்பதிகளின் பேச்சு குடும்பத்தை
பற்றியும் அவர் தம்பி வேலை பற்றியும் மற்றும் முவரின் பரஸ்பர விசாரிப்புகளாக நீண்டு கொண்டிருந்தது.அது மிகவிரைவில் கேலிப்பேச்சுகளாக மாற ஆரம்ப்பித்தது.ஒரு அரை மணி நேரம் நகைச்சுவையாக நகர்த்தது.அவர்கள் முன்று பேர்களும் இரவு உணவு உண்ண ஆரம்பித்தனர்.பிறகுதான் ஆரம்பித்தது அவர்களின் இனிய உறவுமுறைகளும் மற்றும் இதுவரை கேலியாக பேசிகொண்டுவந்தவர்கள் தங்கள் உள்ளன்பு மற்றும் விட்டுகொடுக்கும் பரஸ்பர அழைப்புகளை வெளிப்படுத்தினர்கள் .இரண்டாம் தம்பதிகள் இருக்கையில் அமரபோகும் சமயத்தில் பேசிய மூன்றே வார்த்தைகள் மட்டுமே.அவை "சூட்கேசை கீழே வை" மற்றும் "போனை குடு" கடைசியாக "தூங்காலமா"...!
எனக்கு ஏற்பட்ட சின்ன நெருடல் என்னவெனில் அவ்விரண்டு தம்பதிகளும் வயது வித்திசாயம் மிஞ்சிபோனால் நான்கு அல்லது சற்று கூட இருக்கலாம்.அது ஏன் ஒரு இறுகிய முகத்துடன் வாழ்க்கை. பொதுஇடத்தில் தங்கள் போன்றேர் மகிழ்ச்சியாக வரும்போது இவர்களுக்கு என்ன.. வேற எதுவாது பிரச்சினையால் பிரயாணமா என்றால் அதுவும் இல்லை என மறு நாள் பேசும் பொழுது திருவிழா காண செல்வதாகதான் எனவும் தெரிந்தது. மறுநாளும் குறைவான பேச்சுவார்த்தைகளே... அவை இறங்கியவுடன் எங்க வீட்டுக்கு போவாம்...... ஆட்டோவுக்கு எவ்வளவு வரும்..... சூட்கேசை எடுத்துகோ..... ஸடேசன் வந்துருச்சு இறங்கலாம்...
ஏன் இப்படி அவர்களிடம் ஒரு வித்திசாயமான மனபோக்கு அது கள்ளழகருக்கு மட்டுமே தெரியுமா என்ன.
நண்பர்களே உங்கள் விளக்கம் தாருங்களேன் கல்யாணமகாதா எனக்கு..
1 comments:
உலகில் மனிதர்கள் பலவகை.
நாம் பார்ப்பது சிலர்தான்.
தப்பு செய்வதே தெரியாமல் தப்பு செய்பவர்கள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன்.
நாம் என்ன செய்ய முடியும்? இது போல பதிவு போட்டு புலம்புவதை தவிர!
word verification எடுத்துருங்களேன்.
Post a Comment