Monday, June 26, 2006

தன்னிலை விளக்கம்

தமிழ் வலைப்பூ நண்பர்களுக்கு முதற்கண் என்னுடைய ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

விளக்கம்-1

என்னுடைய உருப்படியான முந்தையப்பதிவு பற்றிய தன்னிலை விளக்கம் இது. அதில் எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன்.ஆனாலும் ஏதோ ஒரு நெருடலாக அந்துமணி அமைந்துவிட்டதாக பின்னூட்டத்தில் சில நண்பர்கள் கேட்டு இருந்தனர்.சின்ன விளக்கமதற்கு நான் சிறிய வயதிலிருந்து வாரமலரில் அந்துமணியின் பகுதியை படித்து வருகிறேன்.அந்துமணியின் பின்புலம்,சாதி,இன்னும் பிற விசயங்கள் எனக்கு தேவையாக தோன்றவில்லை அவரின் எழுத்துக்களை பிடித்துப்போனதற்கு.தெளிவாகவே எடுத்து சொன்னேன் என்னை பொறுத்த வரை அந்துமணி ஒரு கதாபாத்திரமென,ஆனாலும் இன்றக்கு வந்த ஒரு பின்னூட்டம் இது

ஜாதிவெறியனான என்னை சரித்திர நாயகனாக்கியதுக்கு நன்றி.

Posted by அந்துமணி

நண்பர்கள் அனைவருக்கும் சிறிய வேண்டுக்கோள் தயவுச்செய்து சாதி மத சச்சரவு வேண்டாமே.நானும் தமிழ்வலைப்பூக்களை தொடர்ந்து படித்து வருகிறேன் ஆனால் சாதி,மதம் சண்டை இல்லாத வாசபூக்களை மட்டுமே. செந்தழல்ரவியை பற்றி ஒன்று பெங்களுரில் நடக்கும் வலைப்பதிவர் சந்திப்பில் அவருடன் சண்டை போட்டுக்கொள்வதாக மிகவும் அவையடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்

விளக்கம்-2

சும்மா ஒரு தலைப்பு கவரும் தன்மைகாக மட்டுமே ஆறுxஆறு (இதுகாவது பின்னூட்டம் போடுங்க) பெயரிட்டேன்.மற்றப்படி வேற எந்த ஒரு கீழ்த்தரமான எண்ணங்கள் இல்லை.சூடு வைத்த லக்கிலுக்கிற்கு மிகவும் நன்றி.

13 comments:

said...

ராம், உங்க போன பதிவுல நான் இந்த பின்னூட்டம் எல்லாம் படிக்கலை.. அதுனால விளக்கம் ஒன்றுக்கு ஒண்ணும் சொல்லத் தெரியலை..

விளக்கம் ரெண்டைப் பொறுத்தவரை, இந்த மாதிரி எல்லாம் கிண்டல் செய்வது வழக்கம் தாங்க.. உங்களைச் சொன்னதா அங்க யாருக்கும் தோணவே இல்லை போலிருக்கே (உங்களைத் தவிர). என்னவோ போங்க.. இந்தப் பதிவே தேவை இல்லாதது என்பது என் எண்ணம் :)

said...

//இந்தப் பதிவே தேவை இல்லாதது என்பது என் எண்ணம் //

ஆமாங்க! உங்களைன்னு குறிப்பிட்டு சொல்லி இருக்க மாட்டாங்க! எல்லாம் ஜாலியா எடுத்துகிட்டு லூஸ்ல விடுங்க நண்பா!

said...

தலைவா! சத்தியமா நான் உங்களைச் சொல்லலை.... தமிழ் வலைப்பூக்களில் நிறைய ரசிகர்களைப் பெற்றிருக்கும் பெனாத்தலார் கூட எனக்குப் பின்னூட்டம் போடுங்கப்பா என்று தமாசாக கேட்பவர் தான்.... அதுக்காக அவர் கோவிச்சிக்கிட்டாரா என்ன?

உண்மையில் நீங்க அதுமாதிரி கேட்டதே என் பதிவில் நீங்க போட்ட பின்னூட்டம் மூலமாகத்தான் எனக்குத் தெரியும்....

அந்துமணி பற்றி செந்தழல் ரவி ஒரு பதிவு போட்டிருக்காரே? பார்க்கலியா நீங்க?

said...

//உங்களைச் சொன்னதா அங்க யாருக்கும் தோணவே இல்லை போலிருக்கே (உங்களைத் தவிர). //

பொன்ஸின் வருகைக்கு நன்றி.குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்து விட்டது,ஆதனால்தான்.

//இந்தப் பதிவே தேவை இல்லாதது என்பது என் எண்ணம் :) //

பிற்காலங்களில் இந்த வலைப்பூக்களெல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டில் இடம் பெறுமானால் நான் மாசுமறுவற்றவன் என அறிவிக்கும் தன்னிலை விளக்க பதிவு அது....!
:-)

said...

சிபியண்ணே கருத்தே ஒத்துக்கிறேன்.

said...

//தலைவா! சத்தியமா நான் உங்களைச் சொல்லலை//

லக்கிலுக் நண்பரே எனக்கு எந்த கோபமும் இல்லை.

said...

//பொன்ஸின் வருகைக்கு நன்றி.குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்து விட்டது,ஆதனால்தான். பிற்காலங்களில் இந்த வலைப்பூக்களெல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டில் இடம் பெறுமானால் நான் மாசுமறுவற்றவன் என அறிவிக்கும் தன்னிலை விளக்க பதிவு அது....!
//

ராம் அண்ணே!!
நம்ம பேரையும் சங்கத்துப் பேரையும் வலைப்பூக்கள் லிஸ்ட்ல போட்டு வச்சிகிட்டு இப்படி தம்மாத்தூண்டு மேட்டருக்கு டென்சன் ஆவுரீங்களேன்னு பார்த்தேன்.

ஆனாலும் நீங்க குற்றமுள்ள நெஞ்சு, தஞ்சாவூர் கல்வெட்டுன்னு ஓவர் நினைப்ஸா இருக்கீங்க.. என்ன பண்ண..

சரி சரி.. பதிவை நல்லா ப்ரின்ட் அவுட் எடுத்து கண்ணாடி சட்டம்லாம் போட்டு மாட்டி வச்சிக்குங்க.. பிற்காலத்துல எடுத்து கல்லுல வெட்ட வசதியா இருக்கும்!! :))))

said...

பதிவே தேவையில்லைன்னு பொன்ஸ் சொன்னவுடன் அதிர்ந்து விட்டேன். பின்தான் தெரிந்தது இடுகை தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார் என்று. ஆற்றலரசியிடமே பொருட் குற்றம் எல்லாம் கண்டு பிடிக்கவில்லை. ஏதோ படிக்கும் போது தோணுச்சு சொன்னேன்.

said...

//சரி சரி.. பதிவை நல்லா ப்ரின்ட் அவுட் எடுத்து கண்ணாடி சட்டம்லாம் போட்டு மாட்டி வச்சிக்குங்க.. பிற்காலத்துல எடுத்து கல்லுல வெட்ட வசதியா இருக்கும்!! //

ஏற்கனவே பதிவுக்களின் பிரிண்டுஅவுட்டை பத்திரப்படுத்தியுள்ளேன்.அதுக்குதானே ஆபிஸ் பிரிண்டர் எல்லாம் இருக்கு... :-)

said...

அட வாங்க குமரன். உங்க பொன்னியின் செல்வன் பதிவு ரொம்ப நல்ல இருக்கு.

said...

செந்தில் குமரன்,
இந்த் மாதிரி ஒவ்வொரு இடுகைக்குப் பேரு பதிவாம்ங்க - Post.. இதெல்லாம் சேர்த்து வைக்கிறதுக்குப் பேரு வலைப்பூ - Blog.. அப்படித் தான் ரெபர் பண்றாங்க..

பொருட் குற்றம், சொற்குற்றம்லாம் சும்மா கண்ணை மூடிகிட்டு சுட்டுங்க.. அப்போ தானே தப்பா இருந்தா திருத்திக்க வசதியா இருக்கும்..

said...

நன்றி ராம்.

பொன்ஸ் நான் பதிவு என்றால் Blog என்றும் இடுகை Post என்றால் என்றும் நினைத்திருந்தேன்.

said...

ராம் நன்றி பொன்னியின் செல்வம் நன்றாக இருந்தது என்றதற்காக.

விளங்கியிருக்கும் இருந்தாலும் ஒரு தன்னிலை விளக்கம் :-)))