Thursday, June 22, 2006

ஆறுxஆறு

1)தமிழ்மணத்திலே பார்த்தால் எல்லோரும் "ஆறு" ஆறுன்னு ஓரே பேச்சுன்னு சன் டிவியில் செய்தி வாசிச்சவுடன் சரின்னு நானும் "ஆறு" போடப்பொறேன்.
2)ஆறாவது படிக்கும்போது டீச்சர்க்கிட்ட ஆறாவது நாளுல மண்டையில் அடிவாங்கி ரத்தம் வந்ததை எழுதாலமா....
3)எங்க தங்கமதுரை பத்தி எழுதாலாமா....
4)எனக்கு தங்க உங்கவழி செஞ்ச பெங்களூரு பத்தி எழுதாலமா....
5)ரகுமான்,வாலி,வைரமுத்து,கமல்,மணிரத்தினம்,ரஜினின்னு இந்த பேர பத்தி ஆறு எழுதாலமா....
6)எனக்கு சரியாக கட்டுரை எழுத வராது.என்ன பண்ணாலமுனு யோசிச்சு கடைசியில

எனக்கு பிடிச்ச ஆறு தமிழ்ப்புத்தகத்தில இருந்து ஆறு பேரை போடலாமுனு முடிவு பண்ணி இந்தா ஆறு.

1) பொன்னியின் செல்வன்
2) கள்ளிக்காட்டு இதிகாசம்
3) விஜயமகாதேவி
4) கடல்புறா
5) சிவகாமியின் சபதம்
6) வாரமலர் (வாரவாரமும்)


i)வந்தியதேவன்
அ) குந்தவையின் காதல்கணவன்...
ஆ) நந்தினியின் பார்வைக்கு மயங்கதாவன்...
இ) சூதுவாது தெரிந்தவன்...
ஈ) சோழசாம்ராஜ்யம் அமைக்க உதவியவன்...
உ) தனக்கும் ஒரு ராஜ்யம் வாங்கிகொண்டவன்...
ஊ) பொன்னியின் செல்வனின் இனிய நண்பன்...

ii)பேயதேவன்
அ) இறும்புமனுசன்...
ஆ) பாசக்கார மனுசன் (மொக்கராசு,பொஞ்சாதி மேலேயும்)
இ) நாயக்கர் செத்துப்போறாப மனுசனின் தவிப்பு...
ஈ) மகனின் சேட்டையேல்லாம் பொறுத்துப்போறது...
உ) மனிதனின் பழய நினைவுகள் (காட்டுல நடக்குற மன்மத தவம்) :-)
ஊ) உடும்புப்பிடியா நின்னு காரியம் சாதிக்கிறெது...

iii) விஜயன்
அ) அவனின் அழகான அறிமுகம் திரிலோகசுந்தரிவுடன்...
ஆ) பணியாளிடம் நண்பனுக்கான உரிய பரிவு...
இ) காதல் ராஜா (திரிலோகசுந்தரி,சுடர்விழி,சோழமங்கை)
ஈ) போர் வியூகம் (அனுராதபுர முற்றுகை)
உ) எதிரியாக இருந்தாலும் பரிவு
ஊ) வெற்றியே கைவந்த போதும் பொறுமை முழு வெற்றிக்காக...

iv) இளையப்பல்லவன்
அ) காஞ்சனாதேவியின் காதலன் (நீதிமன்ற காட்சி மறக்க முடியாதது)
ஆ) ராஜதந்திரமாக மஞ்சளழகியின் தந்தையை வீழ்த்துவது
இ) அசால்ட்டுத்தனமாக நடிப்பது...
ஈ) காரியகாரன்...
உ) வர்ணிப்புத்திறமை...
ஊ) வெற்றிவீரன்.

v) சிவகாமி
அ) நாட்டியதிறமை
ஆ) பிடிவாதப்போக்கு
இ) தியாகமனப்பான்மை
ஈ) தந்தையின் மீது பாசம்
உ) தமிழ்ப்பற்று
ஊ)இயற்கையின் மீதும் காதல்

vi) அந்துமணி
அ) முகமுடி
ஆ) நல்ல ஊர் சுற்றிவிட்டு அதைப்பற்றி பீத்துவது...
இ) ப.கே.ப.வில் ஒரு விசயம் கூட விடுவதில்லை..
ஈ) கடற்கரை கூட்டச்செய்திகள்
உ) தனித்தன்மையான விமர்சனபாங்கு
ஊ) நண்பர் குழாம்

மேலே இருக்குற எல்லாம் விசயங்களும் என்னுடைய சொந்த கருத்துக்கள்....ஏதாவது மாற்று கருத்து இருந்தா வழக்கு தொடரலாம்...!

39 comments:

said...

அப்பு, பின்னூட்டம் போடுங்க கேட்டீங்க, அதுவும் இல்லாமல் நம்ம சங்கத்துக்கு ஒரு லிங்க வேற கொடுத்து இருக்கீங்க...

அந்துமணி பத்தி எல்லாம் வலைப்பதிவில் எழுதலாமா... மக்களே...சீக்கிரம் வந்து என்னானு கேளுங்க அப்பு. செந்தழல் ரவி எங்க இருக்க.?????

said...

//ஆறாவது படிக்கும்போது டீச்சர்க்கிட்ட ஆறாவது நாளுல மண்டையில் அடிவாங்கி ரத்தம் வந்ததை எழுதாலமா.... //

குறைந்தபட்சம் ஆறு தையல் போட்டிருப்பாங்களே ??

//எங்க தங்கமதுரை பத்தி எழுதாலாமா....//

அப்படீன்னா ? அது என்னாங்கப்பா கோல்டை சேத்துக்கிட்ட...ஊர் பேர் ஏதாவது மாத்திட்டாங்களா என்ன..

பின்னூட்டம் போட்டாச்சு..

said...

வந்தியத்தேவன் பாத்திரம் எனக்கும் பிடித்தது

said...

என்ன ரவி, அந்துமணி மேட்டருக்கு ஏதும் சொல்லாமலே போயிட்டீங்க...கமான், கமான் ரவி... கமான்.

said...

//ஆறுxஆறு (இதுகாவது பின்னூட்டம் போடுங்க)//

போட்டாச்சு..

said...

சங்கத்துக்கு லிங்க் கொடுத்தாச்சுல்ல. கவலைபடாதீங்க.பின்னூட்ட பர்ப்பஸ்க்கு தான் சங்கமே.

said...

அருமையான சிக்ஸர்கள்

said...

//i)வந்தியதேவன்
ii)பேயதேவன்
v) சிவகாமி //

me too like these characters also add Poonguzhali (Ponniyen selvan).

said...

//கடல்புறா//
மஞ்சள் அழகியை ஞாபகபடுத்தி விட்டீர்கள்......

said...

///vi) அந்துமணி///

அட ஆமாம்...ஒரு குழு கூட்டத்துக்கு அவசரமா ஓடிக்கிட்டிருந்தேன்...அதான் விட்டுட்டேன்...வாரமலர் வாரவாரம் படிப்பேன் என்று சொல்லியிருந்தப்பவே கலாய்க்கலாம் என்று நினைத்தேன்...

இவர் ரொம்ப சின்னப்பையன்..அதுதான் அந்துவைப்பத்தி தெரியல..வாரமலர் படித்து, அதில் அந்துமணி என்னும் ரமேஷ் என்னும் ராமசுப்பு வை சூப்பர் ஸ்டார் என்று வரும் போஸ்ட் கார்டுகளை பார்த்து ஏமாந்த அப்பாவி மதுரைக்கார இளைஞர்..

ஒரு முறை நம்ம பதிவை படித்தால் தெளிவாகி / சூடாகி விடுவார்....

முருகன் இட்லிகடையில் சூடாக இரண்டு இட்லியும் ஒரு ஜில் ஜில் ஜிகர்தண்டாவும் அடிச்சா கூலாகிடுவார்...

said...

அந்துமணி பேரப்போட்டா தினமலத்தில பேரு வரும் என்று யாராவது சொன்னாங்களா ?

said...

அட நீங்க இவ்வளவு ஆர்வமா இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் உங்கள இந்த விளையாட்டுக்கு கூப்பிட்டிருப்பேனே..
கடல் புறா...இளையபல்லவன்...சரியாகச் சொன்னீங்க...
விஜயமகாதேவி இனிமே தான் படிக்கனும்

said...

நன்றாக உள்ளது. சரித்திர நாயகர் பாத்திரங்களின் பட்டியலில் அந்துமணி பொருந்தவில்லையே:)

said...

//அப்படீன்னா ? அது என்னாங்கப்பா கோல்டை சேத்துக்கிட்ட...ஊர் பேர் ஏதாவது மாத்திட்டாங்களா என்ன..//

அன்பின் ரவிக்கு,

எங்க ஊரு என்னிக்குமே எனக்கு தங்கம்தான்.

//இவர் ரொம்ப சின்னப்பையன்..அதுதான் அந்துவைப்பத்தி தெரியல..வாரமலர் படித்து, அதில் அந்துமணி என்னும் ரமேஷ் என்னும் ராமசுப்பு வை சூப்பர் ஸ்டார் என்று வரும் போஸ்ட் கார்டுகளை பார்த்து ஏமாந்த அப்பாவி மதுரைக்கார இளைஞர்..

ஒரு முறை நம்ம பதிவை படித்தால் தெளிவாகி / சூடாகி விடுவார்....

முருகன் இட்லிகடையில் சூடாக இரண்டு இட்லியும் ஒரு ஜில் ஜில் ஜிகர்தண்டாவும் அடிச்சா கூலாகிடுவார்...
அந்துமணி பேரப்போட்டா தினமலத்தில பேரு வரும் என்று யாராவது சொன்னாங்களா ?//ஒரு தகவல் உங்களுக்கு எனக்கு பிடிச்ச கதாபாத்திரம் பத்திதான் என் பதிவில் எழுதினேன்..!சின்னப்பையன் இருக்குற கருத்து சரியில்லை.ஏதாவது சந்துல சிந்து பாட இது இடம் கிடையாது.மன்னிக்கனும் உங்க உள்குத்து வெளிகுத்துக்கு நான் ஆள் இல்லை.
இந்த பிரச்சினை கிளப்புன அண்ணே நாகை சிவா நல்ல இரு சாமி...

said...

//தங்க மதுரை//

தங்க ரீகல் பத்தி சொல்றீங்களா??

said...

//வந்தியத்தேவன் பாத்திரம் எனக்கும் பிடித்தது //

வருகைக்கு நன்றி சின்னக்குட்டி.

said...

//அருமையான சிக்ஸர்கள் //

நன்றி வினையூக்கி... உங்க சிக்ஸர்களும் நல்ல இருந்தது.

said...

caution : not for comment :


appu... aaru pOdarathu irukkattumunga... namma blogger meeting kku vaangga..

send mail to iyappan_k@yahoo.com with your details. 15 per list la vanthachchunga

anbudan
iyappan

said...

//me too like these characters also add Poonguzhali (Ponniyen selvan). //

அனுசுயா உங்கள் வருகைக்கு நன்றி.அப்புறம் பூங்குழலிய சேர்ந்தா ஊமைதாயை போடலேன்னு வருத்தமாகிடும் அதான்.ஏன்னா அந்த கதாபாத்திரம் தான் அருண்மொழியை பொன்னியின்செல்வனாய் மாற்றியது.பூங்குழலியின் கொள்ளிவாய் பகுதி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

said...

//மஞ்சள் அழகியை ஞாபகபடுத்தி விட்டீர்கள்...... //


கோவி.கண்ணன் அவர்களுக்கு முதற்கண் வணக்கம்.
மஞ்சள் அழகியின் சாண்டில்யனின் வருணிப்பை மறக்க முடியுமா...?

said...

///ஒரு தகவல் உங்களுக்கு எனக்கு பிடிச்ச கதாபாத்திரம் பத்திதான் என் பதிவில் எழுதினேன்///

அந்த கதாபாத்திரம் சரியில்லையே ராசா...நீ இன்னும் அந்த கதாபாத்திரத்துக்கு கல்லியாணம் ஆகவில்லை..தன்னியடிக்க மாட்டார்..புகை கிடையாது...பெண் உதவியாளர்கள் உதவியோடு இங்கிலீஷ் படிக்கிற அப்பாவிசாமி அப்படின்னு நினைச்சா என் பதிவையும் / பின்னூட்டங்களையும் பார்க்கவும்...

/////மன்னிக்கனும் உங்க உள்குத்து வெளிகுத்துக்கு நான் ஆள் இல்லை.//

உள்குத்து இல்லைன்னா பதிவேது கண்ணா ?

//இந்த பிரச்சினை கிளப்புன அண்ணே நாகை சிவா நல்ல இரு சாமி...///

கன்னிவெடிபத்தி போடுறவருக்கு எப்படி கொளுத்துறதுன்னு தெரியாதா..

:) :)

said...

//அட நீங்க இவ்வளவு ஆர்வமா இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் உங்கள இந்த விளையாட்டுக்கு கூப்பிட்டிருப்பேனே..//

என்ன விளையாட்டு அது...

said...

//தங்க மதுரை//

எழுதுங்க நம்ம தங்க மதுரையைப் பற்றி. தங்க நகைப் பட்டறைகள் நிறைந்த பச்சரிசிக்காரத் தெரு எங்கள் தெரு

said...

//உள்குத்து இல்லைன்னா பதிவேது கண்ணா ?//
ரவி இதுக்கு மேலே சொல்லுறதுக்கு ஒண்ணும் இல்லை.ஆமா செந்தழல்ன்னா தீவட்டி தானே அர்த்தம்.உள்குத்து இல்லை கண்ணா...

said...
This comment has been removed by the author.
said...

//தங்க ரீகல் பத்தி சொல்றீங்களா?? //

ஏலே கப்பி அதுஎல்லாம் ரகசியம்.இப்பிடியா தங்கரிகல் பத்தி சொல்லி உடைக்கிறது.

said...

//நன்றாக உள்ளது. சரித்திர நாயகர் பாத்திரங்களின் பட்டியலில் அந்துமணி பொருந்தவில்லையே:) //

மணியன் சாருக்கு வணக்கம், உங்கள் கருத்து சரி.நான் ஏதோ தவறு செய்து விட்டதாக நினைக்க வேண்டாம்.அந்துமணி என்னை பொறுத்தவரை கதாபாத்திரம்தான்...!அதான் சேர்த்தேன்.ஆனா சரித்தர நாயகன் இல்லை நிச்சயமாக...

said...

//இந்த பிரச்சினை கிளப்புன அண்ணே நாகை சிவா நல்ல இரு சாமி...//
ராம்!
கூல்... கூல்...
இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது.
உங்களை புண்படுத்த வேண்டும் என்பதற்காக கூறவில்லை.

said...

//கூல்... கூல்...
இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது.
உங்களை புண்படுத்த வேண்டும் என்பதற்காக கூறவில்லை. //

நன்றி உங்க நாரதர் வேலைக்கு..., :-)

said...

பத்தியா மறுபடியும் நாரதர்னு சொல்லுற...

சங்கத்துக்கு லிங்கு எல்லாம் கொடுத்து இருக்க, ஆனா சங்கத்து மக்கள் எதாவது சொன்ன இப்படி கோவிக்கிறியே....

said...

நானும் போடுவேன் நெறைய்யா.........

தொடர்ந்து எழுதுங்க


//சங்கத்துக்கு ஒரு லிங்க வேற கொடுத்து இருக்கீங்க...//

said...

பின்னூட்டம் தானே இராமசந்திரமூர்த்தி அலையஸ் ராம். உங்களுக்கு இல்லாததா? எடுத்துக்கோங்க. எடுத்துக்கோங்க. :-)

ஊர்க்காரவுகளுக்கு இது கூட செய்யாட்டி எப்படி? :-)

said...

இந்தாங்க பின்னூட்டம்.

போட்டாச்சு.

கேட்டதும் கொடுப்பவளே......

கீதையின் நாயகியே.....

said...

நம்ம ஊர்க்காரங்களுக்கு இல்லாத பின்னூட்டமா, இந்தாங்க, முன்னேயே தெரியாத போச்சு. மத்தபடி நீங்க நல்லாவே எழுதறீங்க.
தங்க மதுரையைப் பத்தி எப்போ எழுதப் போறீங்க?

said...

//ஊர்க்காரவுகளுக்கு இது கூட செய்யாட்டி எப்படி? :-) //

நன்றி குமரன் ததா...

said...

ஜாதிவெறியனான என்னை சரித்திர நாயகனாக்கியதுக்கு நன்றி.

said...

நன்றி துளசி கோபால் மேடம் தங்களின் வருகைக்கு.... நீயூசிலாந்து பற்றிய உங்களின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது.

said...

//நம்ம ஊர்க்காரங்களுக்கு இல்லாத பின்னூட்டமா, இந்தாங்க, முன்னேயே தெரியாத போச்சு. மத்தபடி நீங்க நல்லாவே எழுதறீங்க.//


மிகவும் நன்றி கீதா மேடம் நானு நல்லாவே எழுதறீங்க வேற சொல்லிட்டிங்க...

//தங்க மதுரையைப் பத்தி எப்போ எழுதப் போறீங்க? //

ரெம்ப சீக்கிரமே எழுதிரேன் நீங்க அப்புறம் குமரன்சார்,கால்கரி சிவா எல்லாம் உதவி பண்ணா.... :-)

said...

வந்துட்டம்ல! பின்னூட்டம் போட்டுட்டம்ல!