Friday, August 11, 2006

பிரிவாற்றாமை



பிரிவுறுவலி நீங்க உணர்வுகள் பிரவாகமெடுத்து
உன்னை இறுக்கி அணைக்கத் துவங்குகிறேன்...
ஆனால் உந்தன் உணர்வுகள் உணர்த்தியது என்னுள்
மகவை அணைக்கும் தாயென...!




பிரிவுற்றவேளைகளில் என் நினைவுறுத்தவேண்டி
என்ன செய்வாயென கேள்விதொடுத்தாய்..?
உன் புகைபடமென்றேன் நான்,
நீயோ உன்னுடைய நகக்கீறல்கள்
எனபதிலுறுத்தாய்...!





கடிதங்களிலும்,கைப்பேசியிலும்
கவிதைகளாய் எழுதித்தள்ளுகிறாயே என
உன் வினாவிற்கு பகிரங்கமான விளக்கம் இது...

மானசீகமாய் கடவுளைத் தொழவேண்டி
ஜபிக்கும் பக்தர் வகையறாக்களில்
நானும் ஒருவன் தான்....!





கிள்ளைமொழி பேசிக் கொல்லும்,
கிளியொருத்தி குரலை கேட்டு கிளர்வுற
தொடர்புறுகிறேன்.....!
கிடைக்கும் சில மெய்நிகர் முத்தங்கள் எனக்கு...
இன்னும் சில கவிதைகள்
வாசிக்கும் உமக்கு....

17 comments:

said...

ராம்
கலக்கல்..

said...

இந்த கவிதையெல்லாம் படிச்சதுக்கு அப்புறமும் அந்த ரெண்டு பொண்ணுங்க உனக்கு ராக்கி கட்டினாங்களா?? :(

தலைப்புல ஒருக்கால் ஒரு கால் மிஸ் ஆயிடுச்சோ?

said...

நல்ல உணர்வுகளை எழுதியதில் சில வெளிப்படையான பிழைகள்!

தலைப்பு தவறு!
பிரிவாற்றாமை என இருக்க வேண்டும்.
அணைக்கத் துவங்குகிறேன்.
செய்வாயென
புகைப்படம்
நகக்கீறல்கள்
எழுதித்தள்ளுகிறாயே என்ற
பதிலுற்றாய் என்பதற்குப்படிலாக, பதிலிறுத்தாய் என வரலாம்.
கடவுளைத் தொழ வேண்டி
வகையறாக்களில்
பேசிக் கொல்லும்.


நல்ல கவிதைகள் இந்த நெறடல்களால் மாசுபட வேண்டாமே என்ற உணர்வில் சொல்லியிருக்கிறேன்
தவறென்றால் மன்னிக்கவும்.

said...

ராம்,

கவிதை நல்லா இருக்கு
ஜிகிடி படமும் நல்லா இருக்கு

said...

வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி....

said...

சோதனை பின்னூட்டம்

said...

சோதனை பின்னூட்டம் எதற்காக...?

இந்த இடுகை தலைப்பை மாற்றியுள்ளேன். அது தமிழ்மணத்தில் வருகிறதா என சோதனைபின்னூட்டம்

said...

//தலைப்புல ஒருக்கால் ஒரு கால் மிஸ் ஆயிடுச்சோ? //
மிஸ் ஆன கால் வந்துடுச்சு கப்பி

கவுஜ, ஒரு மாதிரி புரியுது நண்பா,
ரொம்ப குழப்பி பீல் பண்ண விரும்பல. ஆனா நீ பண்ணனுற பீலிங் புரியுது.
எஸ்.கே. சொல்வதை கொஞ்சம் பாரேன். உன் நல்லதுக்கே :)

said...

கவிதை நன்று.. இன்றுதான் உங்கள் வலைப்பூ பார்க்கிறேன்...

அழகிய பூ.

அள்ளித்தர நட்பூக்களுடன்,
நிலாரசிகன்.

said...

வாங்க எஸ்.கே

இவ்வளவு எழுத்துபிழை, ஒற்றுபிழைகளாய் கவிதை எழுதினதுக்கு மன்னிச்சிருங்க.

நீங்கள் அளித்த திருத்தங்கள் செய்துவிட்டேன்.

நன்றி அய்யா

said...

///
கடிதங்களிலும்,கைப்பேசியிலும்
கவிதைகளாய் எழுதித்தள்ளுகிறாயே என
உன் வினாவிற்கு பகிரங்கமான விளக்கம் இது...

மானசீகமாய் கடவுளைத் தொழவேண்டி
ஜபிக்கும் பக்தர் வகையறாக்களில்
நானும் ஒருவன் தான்....!
///

கலக்கிறீங்க...

said...

//இந்த கவிதையெல்லாம் படிச்சதுக்கு அப்புறமும் அந்த ரெண்டு பொண்ணுங்க உனக்கு ராக்கி கட்டினாங்களா??//

ஹீக்கும் அந்த பொண்ணுகளுக்கு தமிழ் படிக்கதெரியாது. தெரிச்சிடாலும் என்னா நடக்க போகுது....

என்னை மன்னிச்சுரு கப்பி, உனக்கு இவ்வளவு லேட்டா ரிபிளை பண்ணறதுக்கு...

said...

//ராம்,

கவிதை நல்லா இருக்கு
ஜிகிடி படமும் நல்லா இருக்கு //

வாங்க தம்பி,

நன்றி உங்களின் வருகைக்கும் அதன் கருத்துபதிவிற்க்கும்...

said...

//கவுஜ, ஒரு மாதிரி புரியுது நண்பா,
ரொம்ப குழப்பி பீல் பண்ண விரும்பல. ஆனா நீ பண்ணனுற பீலிங் புரியுது. //

வா புலி,
என்னா பீலிங் புரியுது உனக்கு...

//எஸ்.கே. சொல்வதை கொஞ்சம் பாரேன். உன் நல்லதுக்கே :) //

அதை செஞ்சுட்டேன்.

said...

அன்பு திரு. ராம்,
மனித நேயத்தைக் காட்டும் உங்கள் பதிவு கண்டு மனமுவந்தேன்!
தவறெனில் தான் மன்னிக்கச் சொன்னேன்!
நீங்கள் இவ்வளவு நீண்ட விளக்கம் கொடுத்து, அதனைப் பதிவிலும் இட்டு உயர்ந்திருக்கிறீர்கள்!
நன்றி எனச் சொல்லுவது தவிர, வேறு சொற்கள் கிடைக்க வில்லை!

said...

//
கலக்கிறீங்க...
//

வாங்க குமரன்,

ரொம்ப நாளைக்கப்பறம் இங்கே வர்றிங்க.....

நன்றி

said...

மிக அழகான வார்த்தைகள். மென்மை உணர்த்தும் ஓவியம் போல் உளது
உங்களின் கவிதைகள்.