Friday, August 25, 2006

நானும் என் (ச)முகங்களும்



மரிக்கும் மனிதங்களும், பிணம்பொறுக்கிய கொடுமைகளும்
தூங்கிஎழும் முன்னரே தலைப்புச்செய்திகளாக
செவிமடுக்கும் வேதனைகள் வேண்டாமென
உறக்கத்திலும் தொழும்கரங்கள்....!




இம்மாந்தரின் கடும்வன்மங்களும் சுடும்வசவுகளும்
தாங்கி பொறுத்தருளும் வல்லமையும்
எந்தாயிடம் உணவுவேண்டி விளிக்கும்
கண்ணீர்கோரா கலங்கிய கண்களுடன்....!




என் இணைபோட்டிதனை உருவாக்கி
அத்தொன்று பொறமைகொளச் செய்யவல்லா
உனக்குமொரு வழிதனைக் கொண்டுச் செல்லவேண்டி
உன்னைவிட உயரப்போகவேண்டியே உயர்ந்தேன்....!




பிறரிடம் தவறுகளும் வலிகளும் தரச்செய்யும்
கடுமை நிறைந்த போக்குகளுமாகிய
கறைபடிந்த வதனமாய் பெற்றோனோ
வாழ்வோட்ட காலவெளியில்....!




வானவீதிகளிலேயே திரிந்தலையும் கடவுள்களையும்
மண்வீதிகளில் வேடமணிந்த மனிதர்களையும்
எதிர்கொள்ளும் திறம்வேண்டும்
முன்னதை ஆவலுடன் பின்னதை வெறுப்பென....!




எல்லைக்கோட்டமையா வக்கிரகோரங்களும்
நிலைகுலைக்கும் கேடுதருணங்களும்
என்னுளும் எனைச்சார்ந்த வழிமக்களிலும்
களையகோரும் ஆற்றல்வேண்டி என்னின் சிந்தை....!

18 comments:

said...

ராம்!
கவிதைகளை விட படங்கள் மிகவும் அருமை. கவுஜ நமக்கு அவ்வளவா ஆகாது. இரு பல தடவை படிச்சு பார்த்து ஏதாச்சும் புரியுதா பாக்குறேன்.

இதுவரைக்கும் படிச்சதில் ஒன்னு மட்டும் தெளிவா புரியுது., தலைப்பை வைத்து பல உள்குத்துடன் இந்த பதிவை போட்டு உள்ளாய் என்று. ;)

said...

கவிதை, படங்கள் இரண்டுமே நல்லாருக்கு ராம். குழந்தையின் வாய்மொழியாக உனக்கு இருக்கும் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் நன்றாக வெளிப்படுத்திருக்கிறே. வாழ்த்துகள்.

எழுத்துப்பிழை கொஞ்சம் நெருடலா இருக்கேப்பா? கவனிக்கக் கூடாதா?

said...

//களையகோரும் ஆற்றல்வேண்டி என்னின் சிந்தை....!//நல்லா முடிச்சு இருக்கீங்க.. அற்புதமான நடை. படமும் அழகுகு ஆழகு.

said...

//ராம்!
கவிதைகளை விட படங்கள் மிகவும் அருமை. கவுஜ நமக்கு அவ்வளவா ஆகாது. இரு பல தடவை படிச்சு பார்த்து ஏதாச்சும் புரியுதா பாக்குறேன்.//

சிவா,

உன் வருகைக்கு மிக்க நன்றி... அனைவருக்கும் புரியும் எனவே எழுதினேன்.

//இதுவரைக்கும் படிச்சதில் ஒன்னு மட்டும் தெளிவா புரியுது., தலைப்பை வைத்து பல உள்குத்துடன் இந்த பதிவை போட்டு உள்ளாய் என்று. ;) //

அது ஏதும் இல்லப்பா..... :-))))

said...

//கவிதை, படங்கள் இரண்டுமே நல்லாருக்கு ராம். குழந்தையின் வாய்மொழியாக உனக்கு இருக்கும் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் நன்றாக வெளிப்படுத்திருக்கிறே. வாழ்த்துகள்.//


வாங்க கைப்புள்ள...
மிக்க நன்றி உங்களின் வருகைக்கு....!

//எழுத்துப்பிழை கொஞ்சம் நெருடலா இருக்கேப்பா? கவனிக்கக் கூடாதா? //

கட்டாயம் சரி பண்ணுறேன்....!

said...

ஹே ராம்!
ஸாரி.. உங்களை காமெடியன்னு தப்பா நினைச்சுட்டேன்!
அழுகையும் கோபமும் உங்களுக்குள் இருப்பது தெரிகிறது
வாழ்த்துக்கள்

said...

//அனைவருக்கும் புரியும் எனவே எழுதினேன்.//

என்னப்பா பண்ணுறது. நமக்கு மற்றவர்கள் அளவுக்கு கவுஜல பெரிய ஞானம் கிடையாது. அதான்.

முதல் கவுஜ நல்லா இருக்கு. கண்ணதாசனின் அவனை தூங்க விடுங்கள் என்ற கவிதையை ஞாபகப்படுத்துகின்றது. மற்றவைகளை இன்னும் பலமுறை படித்து விட்டு வரேன்.

said...

//அனைவருக்கும் புரியும் எனவே எழுதினேன்.//

என்னப்பா பண்ணுறது. நமக்கு மற்றவர்கள் அளவுக்கு கவுஜல பெரிய ஞானம் கிடையாது. அதான்.

முதல் கவுஜ நல்லா இருக்கு. கண்ணதாசனின் அவனை தூங்க விடுங்கள் என்ற கவிதையை ஞாபகப்படுத்துகின்றது. மற்றவைகளை இன்னும் பலமுறை படித்து விட்டு வரேன்.

said...

//வாங்க கைப்புள்ள...
மிக்க நன்றி உங்களின் வருகைக்கு....!

//எழுத்துப்பிழை கொஞ்சம் நெருடலா இருக்கேப்பா? கவனிக்கக் கூடாதா? //

கட்டாயம் சரி பண்ணுறேன்....! //


வேண்டாமால் == வேண்டாமென

மாந்தரின்= மாந்தரின்
பொறாமைக்கொளா= பொறாமைகொளச்
உனைவிட உயரபோக= உன்னைவிட உயரப்போக

பிறரிடம் தவறுகண்டு வலிகளைத் தரச்செய்யும்
கடுமை நிறை போக்கதனால்
கறைபடிந்த வதனமாய் மாறிடுமோ
வாழ்வோட்டக் காலவெளியில்? [முழுதும் மாற்றியதற்கு மன்னிக்கவும்!]

திரித்தலையும்= திரிந்தலையும்
கடவுள்களும்= கடவுளரையும்
மனிதர்களும்= மனிதரையும்
பின்னதை வெறுப்பென= பின்னதின் முகங்கிழிக்க

களையகோரும்= நிரம்பிடும்
)))))))))))))))))))))))))))))))))))

கருத்துகளும், படங்களும் அபாரம் !!

said...

//நல்லா முடிச்சு இருக்கீங்க.. அற்புதமான நடை. படமும் அழகுகு ஆழகு. //

இளா,

மிக்க நன்றி உரித்தாகட்டும் உங்களின் வருகைக்கு மற்றும் கருத்துக்கு

said...

//ஹே ராம்!
ஸாரி.. உங்களை காமெடியன்னு தப்பா நினைச்சுட்டேன்!
அழுகையும் கோபமும் உங்களுக்குள் இருப்பது தெரிகிறது.வாழ்த்துக்கள் //

கெளதம்,

உங்களின் வருகைக்கு மிக்க நன்றி. எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு நீங்க என்னை மறுபடியும் சீரியஸான் ஆளூன்னு தப்பா நினைத்தற்கு.... எனக்கு காமெடியா இருக்க,யாராயச்சும் கலாயக்கதான் ரொம்ப பிடிக்கும். உங்க குதிரையை மாத்தலையா இன்னும்....
:-)

இந்த கவிதைகளால்லாம் என்னோட டைரியில் இருக்கும் சில பக்கங்களின் பகுதிகள். இம்மாதிரியான சோககவிதைகள் இன்னும் நிறைய இருக்கு. அதை பிலாக்'ல் ஏற்ற சோம்பேறிதனமா இருக்கு.

said...

எஸ்.கே ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. என்னுடைய தவறுகளை சுட்டிகாட்டியதற்கு. அலுவலக வேலைகள் இன்று அதிகமாக இருப்பதால் மாலைக்குள் வேலையை முடித்துவிட்டு சரிசெய்ய முயல்கிறேன்.

said...

//என்னப்பா பண்ணுறது. நமக்கு மற்றவர்கள் அளவுக்கு கவுஜல பெரிய ஞானம் கிடையாது. அதான்.//

என்னா சிவா,

கவிதைகளை படிச்சு பர்த்து விமர்சனம் செய்ய என்ன ஞானம் தேவைப்படுகிறது உனக்கு....?

//முதல் கவுஜ நல்லா இருக்கு. கண்ணதாசனின் அவனை தூங்க விடுங்கள் என்ற கவிதையை ஞாபகப்படுத்துகின்றது.//

எந்த கவிதை தொகுப்பு'ன்னு சொன்னா நல்லா இருக்கும்....!

//மற்றவைகளை இன்னும் பலமுறை படித்து விட்டு வரேன். //

தாராளமாக வந்து கருத்துகளை சொல்... நான் எதையும் மனமுவந்து ஏற்பேன்.

said...

//வேண்டாமால் == வேண்டாமென

மாந்தரின்= மாந்தரின்
பொறாமைக்கொளா= பொறாமைகொளச்
உனைவிட உயரபோக= உன்னைவிட உயரப்போக//


எஸ்.கே. ஐயா நீங்கள் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் சரி செய்துவிட்டேன்.

//பிறரிடம் தவறுகண்டு வலிகளைத் தரச்செய்யும்
கடுமை நிறை போக்கதனால்
கறைபடிந்த வதனமாய் மாறிடுமோ
வாழ்வோட்டக் காலவெளியில்? //

இல்லை மேற்கண்டவைகள் என்னுடைய கருப்பொருளை கலைக்கிறது. தயைக்கூர்ந்து மறுமுறையும் வாசிக்கவும்.

//[முழுதும் மாற்றியதற்கு மன்னிக்கவும்!] //

நீங்கள் தயவுச்செய்து மன்னிப்பு எனும் பதத்தை என்னிடம் உபயோகபடுத்தவேண்டாமென தயவுச்செய்து கேட்டுகொள்கிறேன்.

//கடவுள்களும்= கடவுளரையும்
மனிதர்களும்= மனிதரையும்
பின்னதை வெறுப்பென= பின்னதின் முகங்கிழிக்க

களையகோரும்= நிரம்பிடும்
)))))))))))))))))))))))))))))))))))//

மேற்கண்டவைகளின் படி வார்த்தைகளை மாற்றினால் அர்த்தங்கள் வேறுமாதிரியாக தொனித்துவிடும் ஐயா...


//கருத்துகளும், படங்களும் அபாரம் !! //

எண்ணில் அடங்கா நன்றிகள் உரித்தாகட்டும் தாங்களின் இக்கருத்துக்கு.....

said...

நல்லா இருக்கு ராம் :)

said...

//நல்லா இருக்கு ராம் :) //


வா கப்பி...

நன்றியப்பா உன்னோட கருத்துக்கு....

said...

//கவிதைகளை படிச்சு பர்த்து விமர்சனம் செய்ய என்ன ஞானம் தேவைப்படுகிறது உனக்கு....?//

பதிவு சீரியஸா போயிகிட்டு இருக்கு. காமெடி பண்ண வேணாம் நினைக்கிறேன். கண்டிப்பா தெரியுனும் என்றால் சொல்லு, நான் சொல்லுறேன். கெளதம் என்ன காமெடியன் என்று சொன்னாலும் சரி.....

said...

//பதிவு சீரியஸா போயிகிட்டு இருக்கு. காமெடி பண்ண வேணாம் நினைக்கிறேன். கண்டிப்பா தெரியுனும் என்றால் சொல்லு, நான் சொல்லுறேன். //

சிவா,

எனக்கும் மத்தவங்களுக்கும் தெரியுட்டுமே... சொல்லு.

//கெளதம் என்ன காமெடியன் என்று சொன்னாலும் சரி..... //

கெளதம் உன்னைய எங்கே சொன்னார். என்னைதான் அப்பிடி நினைச்சேன்னு சொல்லிருக்கார். அதுக்கும் பதில் சொல்லீட்டேன். அந்த பதிலே அவர் ஏத்துக்கிட்டாரான்னு தான் தெரியலை.....?