காதல் அரும்பிய தருணங்கள்!!!
காலைப் பனி
ஈரம் உதிர்க்கும் இலைகள்
வெயிலறியா மரத்தடி
உன் தலையை சுமந்த என் நெஞ்சம்
கண்களிரண்டையும் கலக்கவிட்டு தொடுக்கிறாய்
கேள்விக்கணை ஒன்றை!
காதல் கொண்டதேனென்று
பேருந்து பயணமென்றில் சிறு தூக்கத்திலும்
அறியாமலே நீ விரல் சூப்பிய கணங்களை
சொல்ல வாயெடுத்தும் வேண்டாமென்று
புன்னகை துளிர்த்தேன்
புன்னகைக்கு புன்னகையையே
பதிலிறுக்கும் இந்தப் புன்னகைதான்
காரணமென்று
வார்த்தைகளின்றி புன்னகைக்கிறேன்,
சொல்லித் தெரிவதில்லை காதல்.
39 comments:
//சொல்லித் தெரிவதில்லை காதல்.//
சூப்பர் ராம்!
நல்ல அனுபவக் கவிதை!
நானா first???
தம்பி காதல் கவுஜல பின்னி பெடலெடுக்கறியே? என்னய்யா விஷேசம்???
//தம்பி காதல் கவுஜல பின்னி பெடலெடுக்கறியே? என்னய்யா விஷேசம்??? //
யக்கோவ்,
காதல் வந்துடுச்சு!
கவுஜையை எழுதி வுட்டேன்!
கவிதை எழுத ஆரம்பித்ததின் ரகசியம் என்ன ராயல்??
//சொல்லித் தெரிவதில்லை காதல். //
இந்த ஒரு வரியே போதும்.. நூறு கவிதைகளுக்கு சமம்
//தம்பி காதல் கவுஜல பின்னி பெடலெடுக்கறியே? என்னய்யா விஷேசம்??? //
ரிப்பீட்டே
//"காதல் அரும்பிய தருணங்கள்!!!//
ஒருமுறைதான் அரும்பும்னு கேள்விப்பட்டிருக்கேன்
குடுத்து வைச்சவர்தான் நீங்க
எத்தனை முறை அரும்புச்சு?
//சொல்லித் தெரிவதில்லை காதல்.//
ராம் அழகு கவிதை காதலுடன் !!! காதல் சொல்லிகொள்ளாமல் வந்து விட்டதா??:))))))
அடங்கொய்யால...ராயலு என்ன ஆச்சு திடீர்னு...சும்ம கவுஜல பின்னி பெடல் எடுக்கறீங்க :-)
//சொல்லித் தெரிவதில்லை காதல்//
அப்படி எல்லாம் விட்டுறாதீங்க...நீங்க சொல்லாம இருந்தா எப்படி தெரியும்...:-)
//குடுத்து வைச்சவர்தான் நீங்க
எத்தனை முறை அரும்புச்சு?
//
கணக்கு வைத்துக்கொள்வதில்லை காதல்.
//பேருந்து பயணமென்றில் சிறு தூக்கத்திலும்
அறியாமலே நீ விரல் சூப்பிய கணங்களை//
பள்ளிக்கூட பஸ்சில் போனது எல்லாம் நினைச்சு கவுஜ?! ஹச்சூ!!
//சூப்பர் ராம்!//
வாங்க தள,
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.... நன்றி :)
//நல்ல அனுபவக் கவிதை!//
ஆரம்பிச்சா??? கற்பனை'ன்னு சொன்னா அது அனுபவமின்னு ஆக்கியாச்சா?? நல்லாயிருங்க :)
//நானா first???//
sorry too late...
//தம்பி காதல் கவுஜல பின்னி பெடலெடுக்கறியே? என்னய்யா விஷேசம்???//
இம்சையக்கோவ்,
ஹி ஹி இது கற்பனையிலே எழுதுனதுன்னு சொன்னா நம்ப போறீங்களா??? என்ன?
//தம்பி காதல் கவுஜல பின்னி பெடலெடுக்கறியே? என்னய்யா விஷேசம்??? //
யக்கோவ்,
காதல் வந்துடுச்சு!
கவுஜையை எழுதி வுட்டேன்!//
யாரு வேலை இது???? :(
//கவிதை எழுத ஆரம்பித்ததின் ரகசியம் என்ன ராயல்??/
கதிரு,
மண்டையிலே மசாலா காலியான கவிதை எழுதுவேன்னு சொன்னேன் இல்லே???
அதிலே என்ன ரகசியம் இருக்கு??
//
இந்த ஒரு வரியே போதும்.. நூறு கவிதைகளுக்கு சமம்//
வாங்க கார்த்திக்,
வருகைக்கும் கருத்து தருகைக்கும் மிக்க நன்றி :)
//தம்பி காதல் கவுஜல பின்னி பெடலெடுக்கறியே? என்னய்யா விஷேசம்??? //
ரிப்பீட்டே//
ஒன்னும் சொல்லறதக்கு இல்லே :(
//
ஒருமுறைதான் அரும்பும்னு கேள்விப்பட்டிருக்கேன்
குடுத்து வைச்சவர்தான் நீங்க
எத்தனை முறை அரும்புச்சு?///
ஏய்யா இப்பிடி கொலைவெறி பிடிச்சு அலையிறீங்க....??
//
ராம் அழகு கவிதை காதலுடன் !!! காதல் சொல்லிகொள்ளாமல் வந்து விட்டதா??:))))))//
வாங்க குரு,
காதலும் கவிதையும் சொல்லமால் வந்தானே அழகு....
கவிதை இளவரசர் நீங்களே நம்ம பக்கம் வந்திருக்கீங்க.... சீக்கிரம் காதலும் வரட்டும் :)
//அடங்கொய்யால...ராயலு என்ன ஆச்சு திடீர்னு...சும்ம கவுஜல பின்னி பெடல் எடுக்கறீங்க :-)//
வாங்க 12B,
எவ்வளோ நாள்தான் இதெல்லாம் Draft'லே இருக்கிறது....?? :)
//அப்படி எல்லாம் விட்டுறாதீங்க...நீங்க சொல்லாம இருந்தா எப்படி தெரியும்...:-)//
ஹி ஹி கூடிய சீக்கிரமே சொல்லிறலாம் :)
//
கணக்கு வைத்துக்கொள்வதில்லை காதல்.//
அடடா மணி சூப்பர்ங்க.. :)
//பள்ளிக்கூட பஸ்சில் போனது எல்லாம் நினைச்சு கவுஜ?! ஹச்சூ!!//
கொத்ஸ்..
அப்பிடியெல்லாம் சொல்லபிடாது, நாங்கெல்லாம் பள்ளிக்கூடம் படிச்சு முடிச்சதே 2வருசத்துக்கு முன்னாடிதானே?
எப்பிடி மறக்கும், இல்லே மறந்துதான் போகுமா காதல் :)
//அப்பிடியெல்லாம் சொல்லபிடாது, நாங்கெல்லாம் பள்ளிக்கூடம் படிச்சு முடிச்சதே 2வருசத்துக்கு முன்னாடிதானே?//
என்னது? ரெண்டு வருஷம் முன்னாடி வரை விரல் சூப்புற பெண்ணை பாத்துக்கிட்டு இருந்தியா? ஹூம் என்னத்த சொல்ல.
யார் இது நம்ப இராம் தம்பியா?எப்படியாப்பா கவிதை வெள்ளமாக பெருகி ஓடுது?
//வார்த்தைகளின்றி புன்னகைக்கிறேன்,
சொல்லித் தெரிவதில்லை காதல்//
ஆமாங்க.எங்களுக்கும் புரிந்து போச்சு.உங்களுக்கும் அது வந்துவிட்டது என்று நீங்கள் சொல்லமலே வாசகர்களாகிய நாங்கள் புரிந்துக் கொள்வோம்
ம்ம்..நடக்க்ட்டும் நடக்கட்டும் :))
ஒரு பிஞ்சு பழுக்கிறதே...
ஒரு மொட்டு மலர்கிறதே..
ம்ம்ம்ம் தம்பி ராம் காதல் கவிதை எழுதுது பாருங்கோ
இன்னாபா ஆச்சு உங்களிக்கெல்லாம் ???
நீங்க கவிஜ எழுதுறீங்கோ ,வெட்டி சி எழுதுறாராம்..ஊர்ல வெயில் ஆரம்பமாயிடுச்சா??
/என்னது? ரெண்டு வருஷம் முன்னாடி வரை விரல் சூப்புற பெண்ணை பாத்துக்கிட்டு இருந்தியா? ஹூம் என்னத்த சொல்ல.//
ஹி ஹி .....
எனக்கு உங்கக்கிட்டே பிடிச்சதே இந்த நகைச்சுவை உணர்ச்சிதான் :)
/யார் இது நம்ப இராம் தம்பியா?எப்படியாப்பா கவிதை வெள்ளமாக பெருகி ஓடுது?//
வாம்மா துர்கையம்மா :)
வெள்ளமா... இது கொஞ்சம் ஓவரா இல்லே???
//ஆமாங்க.எங்களுக்கும் புரிந்து போச்சு.உங்களுக்கும் அது வந்துவிட்டது என்று நீங்கள் சொல்லமலே வாசகர்களாகிய நாங்கள் புரிந்துக் கொள்வோம்//
ஆஹா.. இதெல்லாம் வேற நடக்குதா???
//ம்ம்..நடக்க்ட்டும் நடக்கட்டும் :))/
வாப்பா கவிஞ்ஞர் கப்பிநிலவா:)
ஒன்னோட அளவுக்கு எழுதமுடியலை.... ஏதோ முயற்சித்து பார்த்தேன்,:)
//ஒரு பிஞ்சு பழுக்கிறதே...
ஒரு மொட்டு மலர்கிறதே..
ம்ம்ம்ம் தம்பி ராம் காதல் கவிதை எழுதுது பாருங்கோ///
அண்ணே,
இந்த போஸ்ட் போடுறப்போ இந்த மாசத்து முதல்'ன்னு காட்டுதே.... அதை பார்க்கலையா???
▼ 2007 (10)
▼ April (1)
o காதல் அரும்பிய தருணங்கள்!!!
//இன்னாபா ஆச்சு உங்களிக்கெல்லாம் ???//
ஹி ஹி பெங்களூரூ கொஞ்சம் ஹீட்'ஆக போச்சு... அதுதான் :)
//நீங்க கவிஜ எழுதுறீங்கோ ,வெட்டி சி எழுதுறாராம்..ஊர்ல வெயில் ஆரம்பமாயிடுச்சா??//
ஹி ஹி
கயில் ஸ்பேனரு புடிச்சவுங்க எல்லாம் மெக்கானிக்கு சொல்ற மாதிரி.....____________
...ஆஹாக் வந்துருச்சு...
வயசு ஆவுதில்லே, சட்டுபுட்டுனு செட்டில் ஆகவேணாமா?
நான்
நடந்து செல்கிறேன்
எனக்கு முன்னால்
என்
நிழல்
அது என்றுமே
நிஜத்தை விரும்பியதில்லை!
அண்ணாத்த.....கவிதை சூப்பரு ;-))
நீங்க கவிதை எழுதுவீங்களா? :-) சரி சரி.. இந்தப் பக்கமும் வந்து பாருங்க: அன்புடன் கவிதைப் போட்டி - கடைசி நாள் ஏப்ரல் 14 இந்திய நேரப்படி இரவு 12 மணி!
இளா,
ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை :(((
கோபி,
நன்றிண்ணே :)
சேது மேடம்,
இந்தமாதிரியெல்லாம் கவிதை எழுதி அனுப்பலாமா?? முதற்சுற்றுலே வெளியா வந்துறாதில்லே??? :)
கவிதைன்னு தானே சொன்னேன்.. எந்த மாதிரிக் கவிதைன்னு சொல்லலியே.. ஆனா உங்க கவிதை ஒண்ணும் அவ்ளோ மோசமில்ல ;-)
Post a Comment