காதல் அரும்பிய தருணங்கள் - II
வழக்கமான இனியதொரு மாலைவேளையில்
கேள்விகளின் பிறப்பிடமான உன்னிடமிருந்து
காதல் கொண்டதேனென்று
இன்னுமொரு தரம் கணை
நினைவுட்டலில் என்மனம் பின்னோக்கி,
அதொரு கார்த்திகை மாதம்
வீதியில் விளக்கேற்றும் பெண்களில்
தனியொரு பிரகாசமாய் உன்னின் விழிச்சுடர்!
நம் பரஸ்பர பார்வை பரிமாற்றங்களின்
மையமாய் ஒளிச்சுடர்.
கருக்கலின் பிறகு கதிரவன் மின்னும்
பாங்காய் என்னின் இருள் மனதிலிருந்து
காதலின் ஒளி ஏற்றிய தினமது!
எதுகைகளிலும் மோனைகளிலும்
சொல்லி தெரிவதில்லை காதல்.
40 comments:
me the firstuu??
அடுத்த வருசம் மருத'க்கு ஜோடியா வந்திருங்க.... போய் சாமி தரிசனம் பண்ணிட்டு வந்திரலாம் :)
::))))
//
எதுகைகளிலும் மோனைகளிலும்
சொல்லி தெரிவதில்லை காதல்.
//
அதுதான் எங்களுக்கு தெரியுமே
உனக்கு கதல் வந்தது...:)
என்ன ராயலு வெள்ளிகிழமை ரொம்ப பொங்கிருச்சோ....கவுஜ சும்மா சரம் மாதிரி வருது :-)
//.:: மை ஃபிரண்ட் ::. said...
me the firstuu??
//
அதுதான் உங்களுக்கு எல்லோரும் விட்டு கொடுத்திட்டாங்களே...இன்னும் என்ன கேள்வி :-)
ஆகா ஆகா!!
அருமையான கவிதை தலைவா!!
//தனியொரு பிரகாசமாய் உன்னின் விழிச்சுடர்
நம் பரஸ்பர பார்வை பரிமாற்றங்களின்
மையமாய் ஒளிச்சுடர்.
//
நல்ல வர்ணனை!! :-)
//கருக்கலின் பிறகு கதிரவன் மின்னும்
பாங்காய் என்னின் இருள் மனதிலிந்து
காதலின் ஒளி ஏற்றிய தினமது!
//
அழகான உவமை!! :-)
//எதுகைகளிலும் மோனைகளிலும்
சொல்லி தெரிவதில்லை காதல்.
//
இது நச்!!!:-)
வாழ்த்துக்கள்! :-))
mmmmmmm ithu Kalyana season illai, athan Kaadhal ponguthu kavinjarukku.
//me the firstuu??//
தங்கச்சிக்கா,
நீங்கதான் ஃபர்ஸ்ட் :)
//அடுத்த வருசம் மருத'க்கு ஜோடியா வந்திருங்க.... போய் சாமி தரிசனம் பண்ணிட்டு வந்திரலாம் :)
::))))//
மின்னலு போன பதிவிலே போட்ட பின்னூட்டத்தை இங்க போட்டு சிரிக்கிறே??? :)
//அதுதான் எங்களுக்கு தெரியுமே
உனக்கு கதல் வந்தது...:)//
ஐயா சாமி ... இது கறபனையிலே எழுதுனது சாமியோவ்.... சொன்னா நம்புங்க...
//
ஐயா சாமி ... இது கறபனையிலே எழுதுனது சாமியோவ்.... சொன்னா நம்புங்க...
///
மீசை அரும்பிய தருணங்களில்
காதல் அரும்ப தருணங்கள் பார்த்தது
மார்கழி குளிரையும் பொருற்படுத்தாது
கோலங்களில் அவள் கோலங்களை
காண......
அப்டி இப்டி புலம்ப வேண்டியது
அதனால
நல்லா சவுண்டா கூவு நம்பிடுறோம்.....:)
"எதுகைகளிலும் மோனைகளிலும்
சொல்லி தெரிவதில்லை காதல்."
சீரியஸா எழுதினிங்க போல? நம்ம பய புள்ளக எல்லாம் வழக்கம் போல போட்டு தாக்குதுங்க! நிஜம்ம்மா சொல்ரேன்.. நல்லா இருக்கு!
:-(
no more love poems.முடியல விட்டுருங்க அண்ணா.இனிமேல் தத்துவ கவிதையாக எழுதுங்க.உங்க கவிதை நல்லதான் இருக்கு.காதல் வந்துருச்சா அண்ணா?அண்ணி யாரு?
//
காயத்ரி said...
சீரியஸா எழுதினிங்க போல? நம்ம பய புள்ளக எல்லாம் வழக்கம் போல போட்டு தாக்குதுங்க! நிஜம்ம்மா சொல்ரேன்.. நல்லா இருக்கு!
//
என்ன பன்னுறது நல்லாயிருக்குனு உண்மையை சொன்னா அப்புறம்...
"காதல் அரும்பிய தருணங்கள் - III"
நாலு ஐந்துனு வரும் அதனால...
துர்கா|thurgah said...
காதல் வந்துருச்சா அண்ணா?அண்ணி யாரு?
ரீப்பீட்டே
புரிந்தும் புரியாத மாதிரி..
இந்த வரிகளுக்கு அர்த்தம் கூற முடியுமா?
//
எதுகைகளிலும் மோனைகளிலும்
சொல்லி தெரிவதில்லை காதல்.
//
"எதுகைகளிலும்... மோனைகளிலும்"
அப்படி என்றால் என்ன??
நச்சுன்று இருக்குதாம்
பட் எனக்குத்தான் புரிய மாட்டேங்குது..
:-(
நேசமுடன்..
-நித்தியா
//என்ன ராயலு வெள்ளிகிழமை ரொம்ப பொங்கிருச்சோ....கவுஜ சும்மா சரம் மாதிரி வருது :-)//
12B,
ஹி ஹி இந்த வாரம் அந்த பக்கமே போகவே இல்லை... :)
//அதுதான் உங்களுக்கு எல்லோரும் விட்டு கொடுத்திட்டாங்களே...இன்னும் என்ன கேள்வி :-)//
அதேதான்..... :))
//ஆகா ஆகா!!
அருமையான கவிதை தலைவா!!//
நன்றி காதல் ஆராய்ச்சியாளரே :)
//mmmmmmm ithu Kalyana season illai, athan Kaadhal ponguthu kavinjarukku.//
தலைவலி,
ஏனிந்த கொலைவெறி.... நம்ம கைப்பு'க்கு கல்யாணம், எனக்கில்லை :)
//மீசை அரும்பிய தருணங்களில்
காதல் அரும்ப தருணங்கள் பார்த்தது
மார்கழி குளிரையும் பொருற்படுத்தாது
கோலங்களில் அவள் கோலங்களை
காண......//
மின்னலு கவுஜ சூப்பரு... :)
//அப்டி இப்டி புலம்ப வேண்டியது
அதனால
நல்லா சவுண்டா கூவு நம்பிடுறோம்.....:)//
சாமிகளா! சொன்னா நம்புங்கய்யா! நான் என்ன பதிவு போட்டாலும் அதை நகைச்சுவை/நையாண்டி'ன்னு வகைப்படுத்தவே ஒரு கும்பல் சுத்துது!!!!
அதுக்கு நீதான் பெரிய பாஸ்'ன்னு நினைக்கிறேன் மின்னலு :(
//"எதுகைகளிலும் மோனைகளிலும்
சொல்லி தெரிவதில்லை காதல்."
சீரியஸா எழுதினிங்க போல? நம்ம பய புள்ளக எல்லாம் வழக்கம் போல போட்டு தாக்குதுங்க! நிஜம்ம்மா சொல்ரேன்.. நல்லா இருக்கு!//
முதன்முறை வருகைக்கு மிக்க நன்றி காயத்ரி,
என்னப்பண்ண? நான் என்னப் பதிவு போட்டாலும் அதை காமெடியா ஆக்குனுமின்னே ஒரு கோஷ்டிக தொரத்துறாங்க... :)
//இனிமேல் தத்துவ கவிதையாக எழுதுங்க.//
வாங்க துர்க்கா'க்கா,
அந்தமாதிரியெல்லாம் எழுததெரிஞ்சா ஏன் இந்தமாதிரியெல்லாம் எழுதப்போறேன்.... :)
//உங்க கவிதை நல்லதான் இருக்கு.காதல் வந்துருச்சா அண்ணா?அண்ணி யாரு?//
சும்மா இருக்குறவய்ங்களை நல்லாவே தூண்டிவிட்டு போயிட்டிங்களா? நல்லாயிரு தாயி :(
//என்ன பன்னுறது நல்லாயிருக்குனு உண்மையை சொன்னா அப்புறம்...
"காதல் அரும்பிய தருணங்கள் - III"
நாலு ஐந்துனு வரும் அதனால...///
ஹை... மின்னுலு நீ சொன்னாலும் சொல்லட்டியும் நாங்க போடுவோமில்லை :)
//துர்கா|thurgah said...
காதல் வந்துருச்சா அண்ணா?அண்ணி யாரு?
ரீப்பீட்டே//
போதுமிய்யா...இதொட நிறுத்திக்கோவோம்..... முடியலை... இப்பவே தாங்கமுடியலை :(
First time to ur blog ..
NIce kavidha and nice uvamaigal...
//புரிந்தும் புரியாத மாதிரி..
இந்த வரிகளுக்கு அர்த்தம் கூற முடியுமா?
//
எதுகைகளிலும் மோனைகளிலும்
சொல்லி தெரிவதில்லை காதல்.
//
"எதுகைகளிலும்... மோனைகளிலும்"
அப்படி என்றால் என்ன??
நச்சுன்று இருக்குதாம்
பட் எனக்குத்தான் புரிய மாட்டேங்குது..
:-(
நேசமுடன்..
-நித்தியா//
வாங்க நித்தியா!
காதலன் காதலி'கிட்டே தனக்கு அவ மேலே காதல் வந்தா காரணம் சொல்லுறோப்போ விழிச்சுடர், கதிரவன் ஒளி, கருக்கல் பொழுதுன்னு உவமை சொல்லிறப்போ இன்னும் இன்னுமின்னு வார்த்தைகளை மட்டுமே சொல்லி தெரியவைக்கமுடியாது'ன்னும் அதுவும் தமிழ் மொழியிலே இருக்கிற எதுகை,மோனையெல்லாம் கூட சொல்லி தன்னோட காதலை வார்த்தை ஜாலங்களிலே புரிய வைக்கமுடியாது, இது ஒரு உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடு'ன்னு சொல்லுறதுக்குதான் "சொல்லி தெரிவதில்லை காதல்'ன்னு முடிச்சேன்...
ரொம்பவே அழகா கவிதை எழுதனுமின்னா உங்களை மாதிரி கவிதாயினி'தாலே தான் முடியும், நானெல்லாம் இப்பிடித்தான் மொக்கையாதான் எழுதுவேன்... ஹி ஹி
முதன்முறை வருகைக்கு மிக்க நன்றிங்க.... :)
:-) அப்படி இல்லை..
அடடா.. கடிக்காதீங்கப்பா..
உங்கள் பதிவு.. மற்றும்.. உங்கள் நண்பர்களின்
பதிவு படிக்கும் போது..
பல நான் அறியாத.. சொற்களை.. படிக்கிறேன்..
அர்த்தம் தேட.. அகராதியும் புரட்டுகிறேன்..!
தமிழ்மண்ணுடன்.. மக்களுடன் வளர்ந்து இருந்தால்
தமிழ் இன்னும் கொஞ்சம் நல்லாவே.. வந்திருக்கும்..!
ம்..கற்றது கொஞ்சம்..
..ம் என் கவிதை.. அழகா இருக்கலாம்.. ஆனால்
உங்கள் கவிதை.. அருமையா.. அறிவா.. தமிழா.. இருக்கிறது..
சிந்திக்க வைக்கிறது...தமிழ்பற்றை அதிகரிக்கிறது..
வாசித்து முடிந்ததும்... அந்த.. எழுத்து.. வார்த்தை.. சிந்திக்க
வைக்கிறது என்றால் அதுஅல்லவா கவிதை?..
எந்த ஆக்கமாய் இருந்தாலும்.. அது மனதை வருடினால்.. அது
சிறந்தது.. என்று நான் நினைக்கிறேன்..
நன்றி..
நேசமுடன்..
-நித்தியா
வாழ்க தங்கமணி ;-)))
ராயாலு! சித்திரைத்திருவிழாவில் ஏதோ ஒரு செவப்புக் கலரு ரிப்பன்கிட்ட மாட்டிக்கிட போல?
உன் கவிதை புரியுது! ஆனால் அதற்கான விளக்கம் தான் புரியவில்லை!:)))
ராம் கவிதைனா அர்த்தமெல்லம் சொல்லுற, பின் எப்படி இதை கவிதைனு சொல்லுறதாம்?, என் அகராதியில் கவிதைக்கு அர்த்தம் எழுதுறவனுக்கும் தெரியக்கூடாது:))படிக்கிற ஒவ்வொருவரும் புதுப் புது விளக்கம் கண்டுபுடிக்கனும், நாம வழக்கம் போல் ஒன்னும் விளங்காம அடுத்த கவிஜய எழுதனும்!:)))
அன்புடன்...
சரவணன்.
//உங்கள் பதிவு.. மற்றும்.. உங்கள் நண்பர்களின்
பதிவு படிக்கும் போது..
பல நான் அறியாத.. சொற்களை.. படிக்கிறேன்..
//
நித்தியா அக்கா! உங்கள் நண்பர்களின் பதிவுனு சொல்லு"ராங்"களே "உங்கள் நண்பன்" பேரும் அந்த புரியாத லிஸ்டில் இருக்கா என்ன?:))))
இராம்,இது புதுக்கவிதை,யாரும் வெண்பா இங்கு
எழுதரதில்லை,எதுகை மோனை கவிதைக்கு
அழகு.காதவிக்கில்லை என்று நாங்களே சொல்லிடிங்க
தொடருங்க கவிதை மழையை,வாழ்துக்கள்.
//தமிழ்மண்ணுடன்.. மக்களுடன் வளர்ந்து இருந்தால்
தமிழ் இன்னும் கொஞ்சம் நல்லாவே.. வந்திருக்கும்..!
//
நித்தியா,
இங்க பதிவுலகிலே இன்னுமே நல்லாவே தமிழ் கத்துக்கலாம்.... :)
//.ம் என் கவிதை.. அழகா இருக்கலாம்.. ஆனால்
உங்கள் கவிதை.. அருமையா.. அறிவா.. தமிழா.. இருக்கிறது..
சிந்திக்க வைக்கிறது...தமிழ்பற்றை அதிகரிக்கிறது..
வாசித்து முடிந்ததும்... அந்த.. எழுத்து.. வார்த்தை.. சிந்திக்க
வைக்கிறது என்றால் அதுஅல்லவா கவிதை?..///
ஹி ஹி அப்பிடியா..... நன்றி நன்றி...
கவிதைன்னு சொல்லி ஒரு மொக்கை கவிஜ'யா எழுதிட்டேன்னு ரொம்பவே ஃபீல் பண்ணேன்...... இப்போ அது இல்லை... :)))
kavitha... kavitha... kavitha...
annaatchi kalaki potteenga...
vaikai thiruvizakku oorukku porennu santhosamaa kelambi nikumpothe nenatchen... ennamo visesamnu.. nadathunga annaatchi...
sari... treat eppo??
தருணங்களா? கொஞ்சம் உதைக்கிதே.... ஒரு தடவ தானே காதல் பூக்கும். அப்போ, அது தருணம்னுதானே சொல்லணும். ஏன் 'கள்'னு வருது?? என்ன ராம்? எத்தன?
//ஹை... மின்னுலு நீ சொன்னாலும் சொல்லட்டியும் நாங்க போடுவோமில்லை :)
//
நீங்க போட்டாலும் போடாட்டியும் நாங்களும் போட்டு தாக்குவோம் இல்ல...:-)
//First time to ur blog ..
NIce kavidha and nice uvamaigal...//
முதன்முறை வருகைக்கும் பாரட்டுதலுக்கும் நன்றி ராஜி... :)
// கோபிநாத் said...
வாழ்க தங்கமணி ;-))) //
மாப்பு சீக்கிரமே இருக்குடி ஒனக்கு ஆப்பு.....
// எதுகைகளிலும் மோனைகளிலும்
சொல்லி தெரிவதில்லை காதல்
//
எலேய் தம்பி என்ன விஷேசமா???
மறக்காம இன்விடேஷன் அனுப்பணும். சரியா??? ;)))
//
அதொரு கார்த்திகை மாதம்
வீதியில் விளக்கேற்றும் பெண்களில்
தனியொரு பிரகாசமாய் உன்னின் விழிச்சுடர்!
நம் பரஸ்பர பார்வை பரிமாற்றங்களின்
மையமாய் ஒளிச்சுடர்.
//
kalakkure makka... epdi ipdi ellam...
/ராயாலு! சித்திரைத்திருவிழாவில் ஏதோ ஒரு செவப்புக் கலரு ரிப்பன்கிட்ட மாட்டிக்கிட போல?//
சரா,
திருத்தம்...... ஒரு செவப்புக் கலரு இல்லை.... பல :)
//உன் கவிதை புரியுது! ஆனால் அதற்கான விளக்கம் தான் புரியவில்லை!:)))//
ஹி ஹி
//ராம் கவிதைனா அர்த்தமெல்லம் சொல்லுற, பின் எப்படி இதை கவிதைனு சொல்லுறதாம்?, என் அகராதியில் கவிதைக்கு அர்த்தம் எழுதுறவனுக்கும் தெரியக்கூடாது:))படிக்கிற ஒவ்வொருவரும் புதுப் புது விளக்கம் கண்டுபுடிக்கனும், நாம வழக்கம் போல் ஒன்னும் விளங்காம அடுத்த கவிஜய எழுதனும்!:)))//
அதுசரி போன பின்னூட்டத்திலே சொன்னமாதிரி நான் என்ன பதிவு போட்டாலும் அதை நகைச்சுவை/நையாண்டி'ன்னு வகைப்படுத்த ஒரு கும்பல் கொலைவெறியோட தொரத்துது... அதிலே நீயும் ஒரு ஆளுதானே :)
//நித்தியா அக்கா! உங்கள் நண்பர்களின் பதிவுனு சொல்லு"ராங்"களே "உங்கள் நண்பன்" பேரும் அந்த புரியாத லிஸ்டில் இருக்கா என்ன?:))))///
சரா,
நீ இல்லமேயா?? :)
/தொடருங்க கவிதை மழையை,வாழ்துக்கள்.//
நன்றிங்க உலகம் சுற்றும் வாலிபியே :)
//kavitha... kavitha... kavitha...
annaatchi kalaki potteenga...
vaikai thiruvizakku oorukku porennu santhosamaa kelambi nikumpothe nenatchen... ennamo visesamnu.. nadathunga annaatchi...
sari... treat eppo??/
ஏலேய் ஜியா,
ஏய்யா இந்த கொலைவெறி பிடிச்சே அலையிறீங்க?? :(
//தருணங்களா? கொஞ்சம் உதைக்கிதே.... ஒரு தடவ தானே காதல் பூக்கும். அப்போ, அது தருணம்னுதானே சொல்லணும். ஏன் 'கள்'னு வருது?? //
யோவ்!
பதிவை படிச்சா அனுவிக்கனும், ஆராயக்கூடாது'ன்னு பெரிய அறிஞர் சொல்லிருக்காறே? அது தெரியாதா உனக்கு??? :)
/
நீங்க போட்டாலும் போடாட்டியும் நாங்களும் போட்டு தாக்குவோம் இல்ல...:-)//
12B,
என்னது டெவில்ஷோ'வா??? :)
//எலேய் தம்பி என்ன விஷேசமா???
மறக்காம இன்விடேஷன் அனுப்பணும். சரியா??? ;)))//
யக்கா,
நீங்க இல்லாமே என்னோட கல்யாணமா???
அப்போ நீங்க ரங்கமணியோட கண்டிப்பா வரணும்...
//kalakkure makka... epdi ipdi ellam...//
நன்றி ஊர்ஸ் :)
//12B,
என்னது டெவில்ஷோ'வா??? :)//
பக்கார்டி....பக்கார்டி (தகடு...தகடு ஸ்டைல்ல படிங்க) :-)
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
//பக்கார்டி....பக்கார்டி (தகடு...தகடு ஸ்டைல்ல படிங்க) :-)//
இதுக்கு நாங்க சிரிக்க மட்டுந்தான் செய்யுவோம்... :))
கதிரு,
ஒன்னோட மொகரக்கட்டைக்கு கவிதை ஒரு கேடா'ன்னு வார்த்தையா டைப் பண்ணாமே பெரிய சிரிப்பான் போட்டு சிரிச்சப்பவே தெரிஞ்சுக்கிட்டேன்....
நன்றி மக்கா...
//
ஒன்னோட மொகரக்கட்டைக்கு கவிதை ஒரு கேடா'ன்னு வார்த்தையா டைப் பண்ணாமே பெரிய சிரிப்பான் போட்டு சிரிச்சப்பவே தெரிஞ்சுக்கிட்டேன்....
//
கவுஜ சூப்பரு... :)
Post a Comment