2007 - எழுதியதில் பிடித்தது....
மூன்று வருடங்களுக்கு முன்னர் எங்கோ ஏதோவொன்றை தேடப்போக தமிழ்வலைபூக்களை தெரியவர அன்றிலிருந்து வேலை நேரத்தை தவிர இங்குதான் பொழுது போக்கு. அதிலும் தமிழில் முதன்முதலில் எழுதியபிறகு கிடைத்த சந்தோஷம் இருக்கே, அப்பப்பா இன்னும் பிரமிப்பு அடங்கவில்லை. அதுவும் திணமணி நாளிதழில் போட்டோவெல்லாம் வந்த அந்த பெரிய பிரமிப்பெல்லாம் இன்னும் அடங்கவில்லை. பதிவுகள் எழுத ஆரம்பித்து இரண்டுவருடங்களுக்குள் கிட்டத்தட்ட ஆறு குழுப்பதிவுகளிலும் இணைந்தாயிற்று, அதில் இன்னும் இரண்டு - மூன்று பதிவுகளில் எழுதவே ஆரம்பிக்கவில்லை. எனக்கும் டைம் மேனஜ்மெண்ட்'க்கும் ஒத்து வரவே வராது. கிடைக்கிற நேரத்தை சரியாக உபயோகப்படுத்திக்கவும் தெரியாது. போன வருடத்தில் நிறைய பதிவுகளும் சிறுகதைகளும் மதுரை மொழி நடையில் எழுதனுமின்னு ரொம்பவே மெனக்கெட்டேன். கடைசிவரை முடியாமலே போனது.
போனவருடத்தில் மொத்தமாய் வைகையில் எழுதிய நாப்பத்தி முன்று சொச்சம் பதிவுகள், சங்கத்தில் பத்து, தேன்கிண்ணத்தில் கொஞ்சம்,சுவரொட்டியில் ஒட்டியது கொஞ்சமின்னு நூறை தாண்டியது. அதில் உருப்படியாக எழுதியாக என்ன எழுதியிருக்க போறேன்னு என்னால் ஏதுவும் எடுக்கமுடியவில்லை. எதையும் உருப்படியாக செய்திருந்தால் தானே அதை எடுத்துக்காட்டி பெருமைப்படலாம். காதல் கவிதைகள் எழுதுறேன் பேர்வழின்னு படிக்கிற காலத்திலே டைரிலே கிறுக்கினதை நண்பர்கள்கிட்டே காட்டி பெருமைப்படுவேன். அதிலிருந்து ரெண்டு மூணு கவிதைகளை இங்கயும் போட்டேன். வழக்கம்போல எல்லாரும் அதை கும்முன்னு கும்மி இனிமே எந்த காதல் கவிதைகளையும் பிளாக்'லே போடவேகூடாதுன்னு கொள்கை முடிவு எடுத்துட்டேன்... :)
அப்புறம் இந்த சிறுகதைகள் எழுதியதுன்னா பிளாக்'லே எழுதிய முதல் கதைக்கே தேன்கூடு போட்டியிலே நான்காம் பரிசு கிடைக்க அந்த வேலையாவது உருப்படியாக செய்யனுமின்னு கொஞ்சநாளு மெனக்கெட்டு எழுதிய இந்த கதைக்கு வழக்கம்ப் போலே இது உன்னோட சொந்த கதையா'ன்னு கேட்டு அன்னிலிருந்து கற்பனா கதாப்பாத்திரத்தை என்னோட வருங்கால மனைவி பெயர்'ன்னு சொல்லி எங்க போனாலும் இப்போ மகா எப்பிடியிருங்கன்னு கேட்கவைச்சிட்டாங்க... :( இந்த வேலைய செய்த புண்ணியவானுகளா நல்லாயிருங்க நல்லாயிருங்க... அதற்கு பின்னர் என்னோட சித்தப்பா பொண்ணு மரணத்தை கருவாக வைத்து எழுதிய மாணிக்கமலர். அதன்பின்னர் பொழைக்கிற பொழைப்பிலே நடக்கிற விசயங்களை வைத்து எழுதிய காதல் கதையும் எழுதியதில் பிடித்ததுதான்.
ஆனால் இதையெல்லாம் மீறி எனக்கு ரொம்பவே பிடித்தது சவடன் கதைதான். அதிலே நான் எழுத வந்த விஷயத்தை தருமி ஐயா தவிர யாருக்கும் படித்த பொழுது புரியவில்லை என்று நினைக்கிறேன். மேல்சாதியை சேர்ந்த நபரும் கீழ்சாதியை சார்ந்த நபரும் நண்பர்களாக இருக்கும்பட்சத்தில் ஏதாவதொரு சந்தர்ப்பத்திலே வரும் பிரச்சினைய சுற்றியிருப்போர் எப்பிடி மேல்சாதிக்காரனுக்கு ஏத்தமாதிரி மாற்றுவார்கள் என்பதே அந்த கதையின் கரு. அதுவும் சுத்தமான மதுரை கிராமத்து மொழி நடையிலே எழுதினா மட்டுந்தான் சரியா வருமின்னு முடிவு செய்து கிட்டத்தட்ட பத்து - இருபது முறையாவது அதை திரும்ப திரும்ப படித்து சரி பார்த்து கொண்டேயிருந்தேன். கொஞ்சம் மிஸ் ஆனாலும் அது தப்பான அர்த்தத்தை இங்கே ஏற்படுத்தி விடும் என்பதால் மிகவும் கவனத்தோடுதான் அதை பப்ளிஷ் பண்ணிண்ணேன். பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லாட்டியும் பெரிய அளவுக்கு பிரச்சினைய கொண்டு வராதுனாலே அந்த கதைதான் எனக்கு ரொம்பவே பிடித்தது.... :)
இதேமாதிரி எனக்கு பிடித்ததை நீங்களும் சொல்லுங்கன்னு நான் கூப்பிட போறது எனக்கு முதல் பின்னூட்டம் இட்ட குமரன் ததா.
இவரும் ஒரு வகையிலே எனக்கு கற்று கொடுத்தவர் அவருதான் கிரேட் மொக்கை புயல் செந்தழல் ரவி
எந்த கதை எழுதினாலும் இவரை மாதிரி எப்பிடியாவது எழுதியிறனுமின்னு முடிவு பண்ணி ஆரம்பிப்பேன்,வழக்கம்ப்போலே முடியாவே முடியாது. அவருந்தான் கள்ளியிலும் பால் வடித்த ஜிரா.
இவரு கொஞ்சம் ஸ்பெசலுதான் எங்க ஊருக்காரு. என்ன பதிவு போட்டாலும் மனசார பாரட்டுவாரு. அவருதான் நம்ம மதுரையம்பதி... :)
கப்பி, இம்சையக்கா வலையுலக தபூசங்கர் நவீன்'ன்னு எல்லாரும் சொன்ன வேலைய சரியா செஞ்சுட்டேன்னு நினைக்கிறேன்... நீங்க நாலு பேரும் நான் சொன்னதை சரியாக செஞ்சுருங்க... :)
11 comments:
கிராமத்து காதல் கதை, காமக்கடும்புனல், சவடன் கதை - இதுல சவடன் கதை தான் 'மாஸ்டர் பீஸ்'!
ஆனா ஒரு மேட்டரு..இந்த வருசம் உங்க பதிவெல்லாம் விட கூகிள் டாக்ல போட்ட ஸ்டேட்டஸ் மெசெஜ் கவுஜைஸ் தான் டக்கரு :)))
மாப்பி..
எனக்கும் அந்த சவடன் கதை ரொம்ப பிடிக்கும்..
அப்புறம்
காமக் கடும்புனல் கதை கூட சூப்பர் கதை ;)))
//ஆனா ஒரு மேட்டரு..இந்த வருசம் உங்க பதிவெல்லாம் விட கூகிள் டாக்ல போட்ட ஸ்டேட்டஸ் மெசெஜ் கவுஜைஸ் தான் டக்கரு :)))//
KTM,
ஹி ஹி அப்பிடியா?? இதிலே ஏதுவும் உள்ளுக்குள்ளே இல்லை'லே??? :(
//எனக்கும் அந்த சவடன் கதை ரொம்ப பிடிக்கும்..
அப்புறம்
காமக் கடும்புனல் கதை கூட சூப்பர் கதை ;)))//
நன்றி கோபி... :)
என்னையும் இழுத்துவிட்டுடீங்களா?.. சரி, சரி, இந்த வாரகடைசில எழுதறேன்.
நாந்தான் முன்னமே சொன்னேனே?, எனக்கு பிடித்ததாக இருந்தால்தான் பின்னூட்டமே, இல்லையின்னா படிச்சுட்டு போயிகிட்டே இருப்பேன்.
அண்மையில தான் உங்க பதிவைத் தொடர்ந்து படிக்கத் தொடங்கியிருக்கேன் இராம்சந்திரமூர்த்தி (இப்படி முழுசா உங்க பேரைச் சொல்றதுல எனக்கு ஒரு மகிழ்ச்சி. :-) ). அதனால சவடன் கதையைப் படிச்சிருக்க மாட்டேன். இப்ப படிச்சுப் பாக்குறேன்.
முதல் பின்னூட்டம் போட்ட ஆளெல்லாம் நினைவு இருக்கா? எனக்கு யாரு முதல் பின்னூட்டம் போட்டாங்கன்னு போய் பாக்கணும். நிறைய வலைப்பதிவே வச்சிருக்கிறதால எதை எப்ப தொடங்கினோம்ங்கறதே மறந்து போச்சு; இதுல யாரு முதல் பின்னூட்டம்ன்னு தேடிப் பாக்குறதும் கஷ்டம் தான். :-)
ஏதோ எழுதுறேன்னு தான் இப்ப எல்லாம் எழுதுறதால உங்க அழைப்பை ஏத்துக்க முடியாத நிலைமை. சொல்பேச்சு கேக்க மாட்டேங்கறேன்னு கோவிச்சுக்காதீங்க. ஏற்கனவே ரெண்டு நண்பர்கள் சொல்லி அனுப்பிச்சாங்க. அவிங்களுக்கும் இதே தான் சொல்லியிருக்கேன். ரொம்ப பிகு பண்ணிக்கிறேன்னு நினைக்காதீங்க. தேடிப் பாக்க நேரமும் இல்லை. அப்படியே தேடிப் பாத்தாலும் எதுவும் தேறாதுன்னு ஒரு நம்பிக்கை. :-)
//நாந்தான் முன்னமே சொன்னேனே?, எனக்கு பிடித்ததாக இருந்தால்தான் பின்னூட்டமே, இல்லையின்னா படிச்சுட்டு போயிகிட்டே இருப்பேன்.//
மெளலி,
நீங்க பின்னூட்டம் போடாத பதிவெல்லாம் மொக்கை பதிவுகள்தானா??? :))
//அப்படியே தேடிப் பாத்தாலும் எதுவும் தேறாதுன்னு ஒரு நம்பிக்கை. :-)//
ததா,
தன்னடக்கமின்னா இதுதானா??? :))
எப்போ உங்களுக்கு டைம் கிடைக்குதோ அப்போ எழுதுங்க... உங்களுக்கு பிடிச்சதவிட உங்க பதிவிலே எங்களுக்கெல்லாம் பிடிச்ச பதிவுகள் நிறைய இருக்கு.... அதெய்யல்லாம் எல்லார்கிட்டேயும் கேட்டு எது பெஸ்ட்'ஓ அதை எழுதுங்க.... :)
நீ எழுதுறதப் பாத்து நானே பிரமிச்சுப் போயிருக்கேன். நீ என்னடான்னா இப்பிடிச் சொல்லீட்ட. உண்மையச் சொல்றேன். நீ ரொம்ப நல்லா எழுதுற. இன்னும் நல்லாவும் எழுதுவ. என்னுடைய வாழ்த்துகள். :)
My Fav காமக்கடும்புனல் :-)
//நீ எழுதுறதப் பாத்து நானே பிரமிச்சுப் போயிருக்கேன். நீ என்னடான்னா இப்பிடிச் சொல்லீட்ட. உண்மையச் சொல்றேன். நீ ரொம்ப நல்லா எழுதுற. இன்னும் நல்லாவும் எழுதுவ. என்னுடைய வாழ்த்துகள். :)//
ஜிரா,
நல்லாதான் உசுப்பேத்திறீங்க..... :)) கருத்துக்கு நன்னி.... :)
பாலாஜி,
நன்றிப்பா... :)
// அன்றிலிருந்து வேலை நேரத்தை தவிர இங்குதான் பொழுது போக்கு
//
நான் கூட இதுக்கான நேரம் போகத்தான் வேலைக்கு மிச்ச நேரமின்னு இல்ல நெனச்சிட்டு இருந்தேன் ;)))
எனக்கு பிடிச்சது மாணிக்க மலர் தான். அப்புறம் சவடன் கதை :)))
Post a Comment