Saturday, July 5, 2008

கேள்வி-பதில்களும்.... கேள்விகளும்..!

இம்சையக்காவின் இம்சையான நாலு கேள்விகளுக்கு என்னாலே முடிஞ்ச அளவுக்கு பதில் சொல்லியிருக்கேன். கொஞ்சம் விவகாரமா கேட்டாலும் பதில் சொல்லுறப்போ நிறைய கூல்'ஆ பதில் சொல்லியிருக்கேன்... பெங்களூரூலே குளிர ஆரம்பிச்சிருங்க.... ஹி ஹி ஹி

1. 'சின்னத்தல'-ன்னு பேரு வாங்கிட்டு வா.வ.சங்கம் பக்கம் எட்டிப் பாக்காமலே இருக்கீங்களே ஏன்?

அப்பிடியெல்லாம் இல்லை. ஆபிஸ் வேலை கொஞ்சம் அதிகமாக இருந்ததுனாலே சரியா பங்கெடுக்க முடியலை. ஆனா சங்கத்தோட இரண்டாம் ஆண்டு போட்டிக்கான வேலைகளிலே மற்ற சங்கத்து உறுப்பினர்கள் கூட வேலை செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன்.

2. ஒரு பெரிய ப்ரொபஷனல் கொரியர் ச்சே... ப்ரொபஷனல் போட்டோகிராபர் ஆயிட்டு வரதால இந்த கேள்வி. பின்நவீனத்துவமா புலிக் கவுஜ, எலிக் கவுஜனு எழுதற உங்களால பின்நவீனத்துவமா போட்டோ எடுப்பது எப்படினு சொல்ல முடியுமா? அதில் புனைவு ஃபோட்டோ கூட முடியுமா? அப்படியே புனைவு, பின்நவீனத்துவம்னா என்ன அது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னு மூத்தப் பதிவர் நீங்க சொன்னா எங்களை மாதிரி தெரியாத ஆளுங்க தெரிஞ்சுக்குவோம்.


போட்டோ எடுக்கிற பைத்தியம் காலேஜ்'லே படிக்கிறப்பவே வந்துருச்சு, இங்கன வந்ததுக்கப்புறம் நம்ம குரு CVR கூட சேர்ந்ததும் கொஞ்சம் முத்தியே போச்சு.. அப்புறம் பின்நவினத்துவமான் போட்டோ எடுத்துட்டு சொல்லுறேன்.

புனைவு'ன்னா எனக்கு முழுசா தெரியாது. தெரிஞ்ச வரைக்கும் சொல்லனுமின்னா "கொஞ்சமான உண்மைதகவல்களை வெச்சு மிகைப்படுத்தி எழுத்துக்களை சிருஷ்டிக்கிறதுக்கு தான் புனைவு". இது சரியா தப்பான்னு மத்தவங்க சொல்லட்டும்.

பின்நவினத்துவத்துக்கும் விளக்கம் சொல்ல ஆரம்பிச்சா பத்து பக்கத்துக்கு எழுதனும்... நான் அதுக்கு உண்மைதமிழன் இல்லை. ஹி ஹி

பின் நவினத்துவத்துக்கும் புனைவுக்கும் உள்ள வித்தியாசமின்னா "பின் நவினத்துவ எழுத்துக்கள் படிக்கிறவன் இன்னும் பத்து இருபது வருசம் கழிச்சு எழுத்து முறை இப்பிடிதான் இருக்குமோ'ன்னு தலை பிச்சிக்க வைக்கனும்"

புனைவு கதைகள் படிக்கிறவனுக்கு சிறிய உண்மைதகவல்களை வைச்சிக்கிட்டு இடம்,காலம் எல்லாத்தையும் துல்லியமாக எழுதி வாசகனின் நம்பகதன்மைக்கு எடுத்து செல்லனும்.

இப்போ ரெண்டுக்கும் உள்ளே வித்தியாசம் புரியுதா??? :))


3. காதல் பத்தி என்ன நினைக்கறீங்க? ரஞ்சனி மகாவுடனான பேச்சு வார்த்தை எந்த அளவில் இருக்கு?

அது சரி.... அதெல்லாம் உங்களைமாதிரியான இம்சை புடிச்சவங்க உருவாக்கிய புனைவுதானே??? அது அப்பிடியே அந்தளவு'லே தான் இருக்கு.... :))

4. வலையுலகுக்கு வந்தது மூலம் உங்களுக்கு கிடைச்சதா நினைக்கற விஷயங்கள் என்ன?

ஆபிசு'லே 40 மணி நேரம் பொட்டி முன்னாடி உக்கார்ந்து இருக்கிறத தாண்டி வீட்டிலே நிறைய நேரம் பொட்டியை திறந்து உட்கார்ந்து இருக்கேன். நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. இன்னும் வேற என்ன சொல்ல இருக்கு! புத்தகங்களை புரட்டி வாசிக்கிற அனுபவத்தை இழந்து எலிக்குட்டிய நகர்த்தி படிக்கிறதுதான் அதிகமாக ஆகி இருக்கு.... :(


இனி இந்த தொடர் கேள்விகள் சங்கிலி அமிரகத்து புலி, அதுவும் அடர்கானகத்து புலி, பின்நவினத்துவத்தின் சிங்கம் அய்யனார்'க்கு நகர்த்தப்படுகிறது.

1) பின்நவினத்தின் வரையறைகள் எதுவும் வகுக்க்பபட்டு இருக்கிறதா? அப்பிடியெனில் அந்த வரையறைகளுக்குள் உங்களின் எழுத்து பயணிக்கிறதா?

2) வெகுஜன எழுத்துக்கள் மாதிரி உங்களின் படைப்புகள் இல்லை? அதுமாதிரியாக உன்னால் எழுதவே முடியாதா? என உங்களை நோக்கி எழுந்த நண்பர்களின் விமர்சனங்களுக்கு என்ன பதில்?

3) உங்களின் படைப்புகளை அச்சுப்புத்தகமாய் வெளியிடுவதற்கு ஏதேனும் உத்தேசம் உள்ளதா? ஆம் என்றால் எப்போ? இல்லையெனில் ஏன்??

4) இணையம் எழுத்தும், பின்ன இத்யாதியும் தாண்டி குடும்பஸ்தானாக ஆன பினனரும் உங்களின் ஆரம்பகாலத்து மாதிரி வீரியமாக எழுதமுடிகிறதா?

33 comments:

said...

ஆஹா சூப்பர்!

said...

ஹா ஹா சூப்பர்!

said...

கேள்வி பதில்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கிறது:)

said...

///இனி இந்த தொடர் கேள்விகள் சங்கிலி அமிரகத்து புலி, அதுவும் அடர்கானகத்து புலி, பின்நவினத்துவத்தின் சிங்கம் அய்யனார்'க்கு நகர்த்தப்படுகிறது///


அய்யனார் சிங்கம்னா அப்படியே மிச்சம் உள்ளவங்கள் எல்லாம் யாருன்னு சொல்ல முடியுமா?

said...

\\ஆபிசு'லே 40 மணி நேரம் பொட்டி முன்னாடி உக்கார்ந்து இருக்கிறத தாண்டி வீட்டிலே நிறைய நேரம் பொட்டியை திறந்து உட்கார்ந்து இருக்கேன். நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. இன்னும் வேற என்ன சொல்ல இருக்கு! புத்தகங்களை புரட்டி வாசிக்கிற அனுபவத்தை இழந்து எலிக்குட்டிய நகர்த்தி படிக்கிறதுதான் அதிகமாக ஆகி இருக்கு.... :(
\\

ரைட்டு...;))

அடுத்து எங்க ஏரியா ஆளா!!...சூப்பரு ;)))

said...

///கோபிநாத் said...
\\ஆபிசு'லே 40 மணி நேரம் பொட்டி முன்னாடி உக்கார்ந்து இருக்கிறத தாண்டி வீட்டிலே நிறைய நேரம் பொட்டியை திறந்து உட்கார்ந்து இருக்கேன். நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. இன்னும் வேற என்ன சொல்ல இருக்கு! புத்தகங்களை புரட்டி வாசிக்கிற அனுபவத்தை இழந்து எலிக்குட்டிய நகர்த்தி படிக்கிறதுதான் அதிகமாக ஆகி இருக்கு.... :(
\\

ரைட்டு...;))

அடுத்து எங்க ஏரியா ஆளா!!...சூப்பரு ;)))///


கோபி நீ எப்படி விடுபட்டு போன கேள்வி பதில் தொடரில்(யாராவது கோபி கிட்ட கேளுங்கப்பா)

said...

மூனாவது கேள்விக்கு சின்னதல ராம் உண்மை தகவலை மூடி மறைச்சதை இங்கே வன்மையாக கண்டிக்கிறேன். :-))))

said...

//
கோபி நீ எப்படி விடுபட்டு போன கேள்வி பதில் தொடரில்(யாராவது கோபி கிட்ட கேளுங்கப்பா)//

ஆமா.. இந்த மாத கோட்டா காலியா இருக்கு. யாராவது கோபிண்ணனை மாட்டி விடுங்கப்பா. :-)

said...

நி.நா,

ரொம்ப நன்றிண்ணே..... :)

அம்பிண்ணே...

வளரே நன்னி... :)

said...

//கேள்வி பதில்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கிறது:)//

ஆமாம்.. தாயக்கட்டையிலே "ஆறு" விழுந்துச்சு... அதுதான் அடுத்த கட்டத்துக்கு போயிருச்சு... :)


//
ரைட்டு...;))

அடுத்து எங்க ஏரியா ஆளா!!...சூப்பரு ;)))/

கோபி,

நன்னி...... ரீப்பிட்டே போடாமே போயிட்டியே.... :)))

said...

///.:: மை ஃபிரண்ட் ::. said...
மூனாவது கேள்விக்கு சின்னதல ராம் உண்மை தகவலை மூடி மறைச்சதை இங்கே வன்மையாக கண்டிக்கிறேன். :-))))///

மூணாவது கேள்வி பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ஆனாலும் .:: மை ஃபிரண்ட் ::. கண்டிச்சா கண்டிப்பா அதில அர்த்தம் இருக்கும்:). அதனால நானும் வன்மையா கண்டிக்கிறேனுங்கோ!

said...

///இராம்/Raam said...
//கேள்வி பதில்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கிறது:)//

ஆமாம்.. தாயக்கட்டையிலே "ஆறு" விழுந்துச்சு... அதுதான் அடுத்த கட்டத்துக்கு போயிருச்சு... :)///

அந்த பக்கத்தில் இருந்து பதில் வந்த உடனே தெரியும் என்ன மாதிரியான கட்டம்னு:)

said...

ராம் பதில்கள் விரைவில்

ஆனா ஏன் இந்த கொலவெறி :)

said...

ஆகா கலக்கிட்டிங்க ராமண்ணே...:))

said...

//
"பின் நவினத்துவ எழுத்துக்கள் படிக்கிறவன் இன்னும் பத்து இருபது வருசம் கழிச்சு எழுத்து முறை இப்பிடிதான் இருக்குமோ'ன்னு தலை பிச்சிக்க வைக்கனும்"//

:)) !!!!

said...

///
புனைவு கதைகள் படிக்கிறவனுக்கு சிறிய உண்மைதகவல்களை வைச்சிக்கிட்டு இடம்,காலம் எல்லாத்தையும் துல்லியமாக எழுதி வாசகனின் நம்பகதன்மைக்கு எடுத்து செல்லனும்.///

அப்புறம்...;)

said...

///
இப்போ ரெண்டுக்கும் உள்ளே வித்தியாசம் புரியுதா??? :))///

?;)
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்
:))

said...

@ நிஜமா நல்லவன்...
///
கேள்வி பதில்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கிறது:)///

ஆமா அய்யனார்கையில மாட்டியிருக்கு...

ஆர்வமா இருக்கு...!

said...

@ நிஜமா நல்லவன்...

///.:: மை ஃபிரண்ட் ::. said...
மூனாவது கேள்விக்கு சின்னதல ராம் உண்மை தகவலை மூடி மறைச்சதை இங்கே வன்மையாக கண்டிக்கிறேன். :-))))///

மூணாவது கேள்வி பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ஆனாலும் .:: மை ஃபிரண்ட் ::. கண்டிச்சா கண்டிப்பா அதில அர்த்தம் இருக்கும்:). அதனால நானும் வன்மையா கண்டிக்கிறேனுங்கோ!////

நானும்...

said...

@ அய்யனார்

//
ராம் பதில்கள் விரைவில்

ஆனா ஏன் இந்த கொலவெறி :)//

அண்ணே பதில்கள் திருப்தியா இருக்கணும்...
எதிர்பாத்துக்கிட்டிருக்கேன்...

நன்றி..

said...

//மூனாவது கேள்விக்கு சின்னதல ராம் உண்மை தகவலை மூடி மறைச்சதை இங்கே வன்மையாக கண்டிக்கிறேன். :-))))///


MM2,

திங்காத சோத்துக்கு எங்கம்மா ருசி சொல்லுறது???

இது எங்கூரூ பாசை.... :)


//ஆமா.. இந்த மாத கோட்டா காலியா இருக்கு. யாராவது கோபிண்ணனை மாட்டி விடுங்கப்பா. :/
கோபி....
யாராவது தப்பி தவறி நீ நல்லவனா கெட்டவனா'ன்னு கேட்டுப்புட்டா "மர்மயோகி'யின் கதையும், குசேலன் விமர்சனமும், இளையராஜாவின் ஆதிக்கமும், பின்னே பின்னூட்ட ரீப்பிட்டே வரலாறும்"ன்னு பதிவு ஒன்னை போட்டு ஜீலை மாசத்தை ஓட்டிறப்போறான்.... :)))

said...

அய்ஸ்,


கொலைவெறி'ல்லாம் இல்லை.... உங்ககிட்டே ஏதோ கேட்கனுமின்னு தோணுச்சு.. அவ்வளோதான்... :)



தமிழன்,

சக்கை குத்து குத்துறீங்க!!! எந்த ஊருண்ணே நீங்க????? :)

said...

பின் நவீனத்துவத்துக்கும், புனைவுக்கும் கொடுத்துள்ள விளக்கம் சூப்பர். ஆமா யாருங்க அது ரஞ்சனி மகா?

said...

@ இராம்..

\\
தமிழன்,
சக்கை குத்து குத்துறீங்க!!! எந்த ஊருண்ணே நீங்க????? :)\\

தமிழன் இல்லாத ஊர் எதண்ணே உலகத்துல! தமிழ் or தமிழன் என்றவுடனே உங்களுக்கு நினைவுக்கு வருகிற முக்கியமான ஊர்ல ஒரு ஊருதான் என்னோட ஊரு கண்டுபிடியுங்க பாப்போம்...

said...

///இராம்/Raam said...
யாராவது தப்பி தவறி நீ நல்லவனா கெட்டவனா'ன்னு கேட்டுப்புட்டா "மர்மயோகி'யின் கதையும், குசேலன் விமர்சனமும், இளையராஜாவின் ஆதிக்கமும், பின்னே பின்னூட்ட ரீப்பிட்டே வரலாறும்"ன்னு பதிவு ஒன்னை போட்டு ஜீலை மாசத்தை ஓட்டிறப்போறான்.... :)))///


ரிப்பீட்டேய்....!

said...

///தமிழன்... said...
///
இப்போ ரெண்டுக்கும் உள்ளே வித்தியாசம் புரியுதா??? :))///

?;)
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்
:))////

தமிழ் அண்ணே நீங்க ராம் சொன்னா சரியா இருக்கும்னு நம்புறதால நான் நீங்க சொல்லுறதை நம்புறேன்.

said...

எலே ராமு.. இம்புட்டு பொறுப்பானவனாய்யா நீய்யி.. புல்லரிக்கிது ராசா...

said...

// rapp said...

பின் நவீனத்துவத்துக்கும், புனைவுக்கும் கொடுத்துள்ள விளக்கம் சூப்பர். ஆமா யாருங்க அது ரஞ்சனி மகா?//

வாங்க கவுஜாயினி'க்கா..... மகா'ன்னா நான் எழுதின கதையோட கதாநாயகி...

ரஞ்சனி name rhyming'க்கு இங்கயிருக்கிற இம்சைக எல்லாம் சேர்ந்து கெளப்பிவிட்டது..... :((

விளக்கம் போதுமா??

said...

கிங்/தமிழன்,

உங்க புரெப்பலிலே பார்த்துட்டேன்.... வருகைக்கு மிக்க நன்னி... :))


சஞ்செய் தாத்ஸ்,

என்னய்யா சொல்ல வர்றீரு???

said...

//அதெல்லாம் உங்களைமாதிரியான இம்சை புடிச்சவங்க உருவாக்கிய புனைவுதானே???//

இப்டி சொன்னா விட்ருவோமா...உண்மை நிலவரம் தெரியறவரைக்கும் நம்ம தல உண்ணா விரதம் இருப்பார்னு அறிவிக்கறேன்.. :-)

said...

//விளக்கம் போதுமா??//
ஹி ஹி, ரொம்ப நன்றிங்க. விளக்கங்களுக்கு விளக்கேத்தும் இராம் அவர்கள் வாழ்க வாழ்க

said...

ராமண்ணே.. அது யாரண்ணே ரஞ்சனி மகா?? அண்ணியா? சொல்லவே இல்லை?? :)

said...

//தளபதி said...
ராமண்ணே.. அது யாரண்ணே ரஞ்சனி மகா?? அண்ணியா? சொல்லவே இல்லை?? :)
//

ஒரு சின்ன திருத்தம் "அண்ணிகள்"
:-)