Friday, November 17, 2006

பாண்டியநாடு சோறுடைத்து!!!

மிக பழமையான தமிழகநகரங்களில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்களில் பிரதானமான இடம் மதுரை மாநகருக்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வரலாற்று ஆய்வாளர்கள் வகுத்த காலஅளவீடுகளான கிமு.களில் முந்தியே ஒரு மொழிக்கே சங்கம் வளர்ந்த பெருமைக்குரிய நகரமாகும்.



மாட மதுரை', 'மதுரை மூதூர்', 'மணி மதுரை', 'வானவர்உறையும் மதுரை', 'மாண்புடை மரபின் மதுரை', 'ஓங்கு சீர் மதுரை', 'மண மதுரை' எனப்பல்வேறு சொற்றொடர்களால் சிறப்பித்துக் கூறும் சிலப்பதிகாரம். 'மதுரைப் பெருநன்மாநகர்' என மணிவாசகர் பாடுவார் திருவாசகத்தில். 'மிக்குபுகழ் எய்திய பெரும்பெயர்மதுரை' என மதுரைக் காஞ்சி பெருமிதமுறும். 'தமிழ் கெழுகூடல்' எனப் புறநானூறும்,'பாடு தமிழ் வளர்த்த கூடல்' என இன்னுமொரு தமிழ்ப் பாடலொன்றும் மதுரையின்மாண்பினைஎடுத்துரைக்கும். (நன்றி திண்ணை)

இவ்வற்றையும் தவிர்த்து மதுரை இன்றைய நாள்களில் உணவுவிடுதிகளுக்கும் புகழ்பெற்றது என அனைத்துதரப்பு மக்களின் கருத்தாகும். அது ஒரு வகையில் உண்மையே என அந்த மண்ணைச் சேர்ந்தவன் என்றமுறையில் ஏற்றுக்கொள்வேன், பஞ்சம்பிழைக்க பெங்களுருக்கு வந்தப்போது எங்கூரு போலவே இங்கேயும் இரவில் எந்நேரமும் சிற்றுண்டி கிடைக்குமின்னு நினைத்து அந்த நினைப்பிலே மண்தான் விழுந்தது. இங்கே மிகச்சரியாக 9.30 மணிக்கெல்லாம் எல்லாக்கடைகளும் அடைக்கப்படும்.



ஆனால் எங்க மதுரையில் நள்ளிரவு ஒரு மணிக்கு நாலு இட்லிக்கு நாலுவித சட்னி,சாம்பார் ஊத்தி சாப்பிட்டு வரலாம். உணவுகளின் வியாபாரத்துக்கு இரவென்றோ பகலன்றோ எவ்வித வேறுப்பாடுகள் கிடையாது. அவ்வகையான மூன்றுவேளைகளிலும் கிடைக்கும் வரிசைப்படுத்துக்கிறேன். இவைகள் அனைத்தும் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றுப்புறத்திலே அமைந்ததுதான்.


காலை:- சிலவருடங்களுக்கு முன்னர் மதுரை மாடர்ன் ரெஸ்ட்ரண்ட்'லே வெண்பொங்கல் சாப்பிட பெரிய கீயூ'வே நீக்குமின்னு சொல்லுவாங்க. ஆனா இப்போ அந்தளவுக்கெல்லாம் இல்லை.காலை வேளைகளில் கிடைக்கும் வெண்பொங்கல்,வடை ரொம்ப நன்றாக இருக்கும். அதுவும் பொங்கலில் முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து அதிலே தூவியிருப்பார்கள். அதுவும் நாலுபேரு சாப்பிடபோயிருந்திங்கன்னா அதிலே யாருக்கு நெய்முந்திரி வந்திருக்குன்னு கண்டுபிடிச்சி சாப்பிட்டிங்கன்னா நல்லா இருக்கும். அதேமாதிரி மசால் தோசையும் ரொம்ப நல்லாயிருக்கும். தோசைக்கு தொட்டுக்கிற கிடைக்கும் மல்லிச்சட்னி,மிளகா சட்னி,புதினா சட்னி எல்லாமே நல்ல சுவையா இருக்கும். இந்த ஹோட்டல் நேதாஜிரோட்டிலே இருக்குங்க.அப்பிடியே வெளியே வந்து விசலாத்திலே ஒரு ஸ்டராங்காப்பி சாப்பிடிங்கனா போதும்.அதே நேதாஜி ரோட்டிலே இன்னோரு ஹோட்டலும் ரொம்ப பேமஸா இருந்திச்சு ஆனா இப்போ இல்லே, அதோட பேரு ஆரியபவன்.



மதியம்:- இவ்வேளைகளில் சாப்பிட நிறைய இடம் இருக்குங்க. அதுவும் தென்னிந்திய வகைகளுக்கு ரொம்ப நிறையவே இருக்குங்க. நான் சொல்லப்போறது ஒரு வடநாட்டு உணவகம், அதோட பேரு மோகன் போஜனலாயா. இங்கே நார்த்இந்தியன் தாலி'ன்னு கேட்டிங்கன்னா ஒரு பெரிய தட்டிலே நாலு சுக்கா சாப்பாத்தி தொட்டுக்க ரெண்டு,மூணு கறியும் கொடுப்பாங்க, அதுக்கு முன்னாடி அவங்க ஸ்பெசலான ரசமலாய் கொஞ்சக்காணு வாங்கி டேஸ்ட் பார்த்துறுங்க. வேணுங்கிற அளவுக்கு ரொட்டி வாங்கிசாப்பிட்டு சாதம் வாங்கி ரசமும், கெட்டிதயிரை ஊத்தி முடிச்சிட்டா வயிறு நிறைச்சிரும். அங்கேயே ஸ்வீட்பீடாவும் கிடைக்கும். இந்த விடுதி மேலக்கோபுரவாசல் வழியா வெளியே வந்திங்கன்னா அந்த பகுதி வீதியிலே தேடிக் கண்டுபிடிக்கலாம்.

இரவு:- மாலைவேளைகளில் நிறைய இடங்களிலே இட்லி,தோசையும் கிடைக்கும்.நான் சொல்லப்போறது ரொம்ப பேமஸான ஒரு ஹோட்டல், அதுவும் அரசியல் விவகாரமெல்லாம் நடந்தது. அது வேற எதுமில்லே முருகன் இட்லிகடைதான்.அங்கே போனீங்கன்னா ஒரே ஒரு ஸ்பெசல் ஐட்டமான பொடிவெங்காய ஊத்தப்பம் சாப்பிடலாம். நாங்கெல்லாம் அங்கே போனா அது மட்டுந்தான் சாப்பிடறது. ஊத்தப்பத்திலே நெய் ஊத்தி சும்மா செவக்க வேகவைச்சிருப்பாங்க, ஆர்டர் பண்ணி வரதுக்குள்ளே ரெண்டுஇட்லி நாலு சட்னி, பொடி எண்ணெய், சாம்பார் ஊத்தி சாப்பிட ஆரம்பிச்சிங்கன்னா வந்திரும். அப்பிடியே சூடா சாப்பிட்டா நல்லாயிருக்கும். இது மேலமாசிவீதியிலே இருக்கிற இம்மையிலும் நன்மை தருவார் கோவில் பக்கத்திலே இருக்கு.

கொறிக்க:- இது எல்லா ஊருகளிலும் கிடைக்கிறதுதான், ஆனா எங்க ஊருலே ஒரு ஸ்பெசலா ஜிகர்தண்டா.. இதுயென்னா கொறிக்கவான்னு கேட்கப்பிடாது. அது ஒரு டேஸ்டா இருக்கும். நல்லா வயிறு நிறைய சாப்பிட்டா இதே ஒரு கிளாஸ் அடிச்சா சும்மா சில்லுன்னு இருக்கும். அதே தயாரிக்கப் பயன்படுத்தப்படுவது பால் பொருட்களும், கடல்பாசியுக்கிறதனால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல்நலத்துக்கு கெடுதியில்லை. ஆனாலும் நம்மாளே ரெண்டு,மூணு கிளாஸ்தான் சாப்பிடமுடியும்.



இன்னோன்னு நீங்க இரயிலில் மதுரைக்கு வந்திங்கன்னா ஸ்டேசனுக்கு எதிர்தாப்பலே இருக்கிற அதாவது தங்கரீகல் தியேட்டருக்கு எதிர்ப்பாலே இருக்கிறே டவுன்ஹால் ரோட்டு முனையிலே இருக்கிற லாலா கடையிலே சுடசுட அல்வா ஒன்னே வாங்கி ஒரு விண்டை எடுத்து வாயிலே போட்டு பாருங்க. அப்புறம் மதுரையே மறக்கவே மாட்டிங்க.

46 comments:

said...

மக்களே,

இது போனமாசமே போடவேண்டிய பதிவு.... ஹீம் வேலை வேலைன்னு பார்த்து அதுவும் சனிக்கிழமைதான் போடமுடிஞ்சது.


:(

said...

ராயல்!
சைவமும் சாப்புடுவியா?

said...

எங்கப்பாரு ஒரு வாட்டி மருதை போயிட்டு வரும் போது "ஒரிஜினல் ஆதிகாலத்து நெய்மிட்டாய் கடை" அப்படீங்கற கடைலேருந்து அல்வா வாங்கியாந்தாரு. நல்ல டேஸ்டு. ஆனா பேரு தான் சரியா நெனப்பில்லை. நான் சொல்ற பேத்துல எதனா அங்க கடை இருக்காய்யா?

said...

//மிக பழமையான தமிழகநகரங்களில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்களில் பிரதானமான இடம் மதுரை மாநகருக்கு உண்டு எனபதில் மாற்றுக் கருத்து இல்லை.//

எதுக்கு இம்புட்டு மொழக்கம்! எங்களுக்குதான் தெரியுமே நீங்க ஒரு சாப்பாட்டு ராமர்னு!

வாங்கற சம்பளமெல்லாம் சோத்துக்கே போயிட்டா, நாளைக்கே ஒரு கண்ணாலம் காட்சின்னா என்னா பண்ணுவிங்க?

said...

வடக்காவணி மூல வீதியில் சுமுஹ விலாஸ்னு ஒரு ஹோட்டல் இருந்தது. அங்கே இட்லி, சாம்பார் நல்லா இருக்கும். மேலச்சித்திரை வீதியில் கோபு ஐயங்கார் கடையில் சாயந்திரம் 3 மணி முதல் 5 மணிக்குள் போடும் பஜ்ஜி, சட்னி, பக்கத்தில் ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய்மிட்டாய்க்கடை உருளைக்கிழங்கு மசாலா, அல்வா, மற்றும் சிம்மக்கல் மாடர்ன் லாட்ஜில் தூள் பஜ்ஜி, கருகப்பிலைக்காரத் தெருவில் முன்னாலே ஒரு தாத்தா இட்லி, மிளகாய்ப்பொடி கொடுப்பார், அதுவும் நல்லா இருக்கும். இன்னும் இருக்கு, அப்புறமா வரேன்.

said...

//ராயல்!
சைவமும் சாப்புடுவியா? //

வா தல,

அதென்ன பாகுபாடு... எல்லாம்தான் சாப்பிடுவேன்.

//எங்கப்பாரு ஒரு வாட்டி மருதை போயிட்டு வரும் போது "ஒரிஜினல் ஆதிகாலத்து நெய்மிட்டாய் கடை" அப்படீங்கற கடைலேருந்து அல்வா வாங்கியாந்தாரு. நல்ல டேஸ்டு. ஆனா பேரு தான் சரியா நெனப்பில்லை. நான் சொல்ற பேத்துல எதனா அங்க கடை இருக்காய்யா? //

ஆமாம் இருக்கு தல, அந்த கடை மேலக்கோபுரவாசலுக்கு எதிர்த்தாப்பலே இருக்கு...

அல்வா ரொம்ப சூப்பரா இருக்கும்....

;)

said...

//எதுக்கு இம்புட்டு மொழக்கம்! //

ஊரு பாசம்தான் கதிரு...

//எங்களுக்குதான் தெரியுமே நீங்க ஒரு சாப்பாட்டு ராமர்னு!//

ஹி ஹி..ஆனா இங்கே வந்து, வெல்லசாம்பாருக்கு பயந்தே சரியவே சாப்பிடறதில்லே... :(((

//வாங்கற சம்பளமெல்லாம் சோத்துக்கே போயிட்டா, நாளைக்கே ஒரு கண்ணாலம் காட்சின்னா என்னா பண்ணுவிங்க? //

ஏன் உனக்கு இந்த கொலவெறி... அந்த காட்சி இப்போ வேணுமின்னு யாரு அழுதா???

அதெல்லாம் நடந்திருச்சின்னா அவங்க செய்யிற எக்ஸ்பீரிமெண்ட்'க்கெல்லாம் நாமேதான் (சாப்பிடுற) சோதனைஎலி'யா ஆகிறுவோம். இந்தமாதிரி டேஸ்டா ஹோட்டல் பார்த்தெல்லாம் சாப்பிடமுடியாது......... :-(((

said...

//வடக்காவணி மூல வீதியில் சுமுஹ விலாஸ்னு ஒரு ஹோட்டல் இருந்தது. அங்கே இட்லி, சாம்பார் நல்லா இருக்கும். //

வாங்க மேடம்,

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, இந்த ஹோட்டல் இன்னும் இருக்கா???

//மேலச்சித்திரை வீதியில் கோபு ஐயங்கார் கடையில் சாயந்திரம் 3 மணி முதல் 5 மணிக்குள் போடும் பஜ்ஜி, சட்னி, பக்கத்தில் ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய்மிட்டாய்க்கடை உருளைக்கிழங்கு மசாலா, அல்வா, மற்றும் சிம்மக்கல் மாடர்ன் லாட்ஜில் தூள் பஜ்ஜி, கருகப்பிலைக்காரத் தெருவில் முன்னாலே ஒரு தாத்தா இட்லி, மிளகாய்ப்பொடி கொடுப்பார், அதுவும் நல்லா இருக்கும்.//

ஆஹா சூப்பர் மேட்டரு...

//இன்னும் இருக்கு, அப்புறமா வரேன். //

வாங்க வாங்க நான் காத்திருக்கேன்.....

:-)))

said...

என்னய்யா இது மருதை பத்திய தொடரா? உங்க ஊர்க்காரங்களை எல்லாம் காணும்?

said...

Thalaiva,
Veg pathi mattum sollittu vituteengaley.. Non-veg pathi onnum sollaliyey...!!!

said...

சூப்பர் ராம்...எதிர்வினைப் பதிவு போட விட்ருவீங்க போல ;)

மதுரைக்கு வந்த புதுசுல விடிகாலை 2,3 மணிக்கு மாட்டுதாவணி பஸ்ஸ்டாண்டுல சுடச்சுட பூரி சுட்டு அடுக்கிவச்சிருக்கறதைப் பார்த்து 'யாருமே இல்லாத நேரத்துல யாருக்குடா இப்படி சுட்டு அடுக்கி வைக்கறீங்க'ன்னு தோணும்...அப்புறம் போகப்போக தான் 'உறங்கா நகர'த்தோட ஸ்பெஷாலிட்டியே இதுதான்னு தெரிஞ்சுது ;)


ஜிகர்தண்டாவுக்கு கீழவாசல் வீதியிலயோ மகால் இருக்க தெருமுனைலயோ (சரியா ஞாபகமில்ல) ஒரு கடை இருக்குமே..மத்த இடங்களை விட அங்க சூப்பரா இருக்கும்...

said...

ராயலு, இப்போதைக்கு உள்ளேன் ஐய்யா... :-)

said...

மேலக்கோபுர வாசலிலே டெல்லிவாலா கடை ஸ்வீட்ஸை விட்டுட்டீங்க, அப்புறம் "காலேஜ் ஹவுஸ்" வெஜ் பிரியாணி அந்த நாளிலேயே ரொம்ப ஃபேமஸ். இன்னும் கோபால கொத்தன் தெருவிலே ஸ்ரீராம் மெஸ் சாப்பாடு, திருநெல்வேலி லாலா கடை, மேலமாசிவீதியில் இருந்தது, வறுபயறு மதுரை ஸ்பெஷல் ஆச்சே? எல்லாத்தையும் விட வடக்காவணி மூல வீதியிலே எங்க வீடு இருந்த மேல ஆவணி மூல வீதிக்குக் கிட்டே ஒரு டீக்கடை இருக்கும், அங்கே மசால் வடையும், டீயும் குடிச்சீங்கன்னா அது தான் சொர்க்கம். கொஞ்சம் தான் சொல்லி இருக்கேன். குட்ஷெட் வீதியிலே வல்லப ஐயர் கடைக்கு எதிரிலே போடும் காரா வடை, தவலை வடை இன்னும் இருக்கு, அப்புறம் வரேன்.

said...

//என்னய்யா இது மருதை பத்திய தொடரா? உங்க ஊர்க்காரங்களை எல்லாம் காணும்? //

வாங்க கொத்ஸ், ஆமாம் எங்க மதுரை பத்தின தொடர்தான்.
எங்க ஊருக்காரங்களுக்கு இன்னும் நான் சொல்லி விடலே. தெரிஞ்சா வந்திருவாங்க.

ஊர்ஸ்'லே மொத போணியா கீதா மேடம் வந்திட்டு திரும்ப வரன்னு சொல்லிட்டு போயிருகாங்க..... :)

said...

//Thalaiva,
Veg pathi mattum sollittu vituteengaley.. Non-veg pathi onnum sollaliyey...!!! //

வாங்க நண்பா....

இதுக்கு முந்தின பதிவே படிக்கலைய்யா??? அது பூராவுமே கவிச்சி சாப்பாட்டே பத்திதான் எழுதுனேன்.

வருகைக்கு நன்றி.

said...

ராம், மினாட்சி கபே - வடக்காவணி-மேலாவணிமுல வீதிசந்திப்பில் உள்ளதே..அத விட்டுடிங்க....

ராஜேந்திரா டிபன் சென்டர் - தெப்பக்குளத்தெருவிற்கும் காக்கா தோப்பு தெருவிற்க்கும் இடையில் இருக்கிறதே - அது மிஸ்ஸிங்.

மேலகோபுர வாசல் டெல்லிவாலா....?

ஆமா!, நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா மதுரை பிமவிலாஸ் அப்படின்னு ஒரு ஹோட்டல்....எனக்கு கேள்வி அளவில் மட்டுமே தெரியும்...ஆனால் அந்த காலத்தில் மிக முக்கியமானதாம்.

அப்புறம் அந்த பேபி ஸ்வீட்ஸ்....நேரு ஆலால சுந்தர வினாயகர் கோவில் அருகில்.....

விசாலம் காபி, கடந்த 15-20 வருடங்களில் மதுரையின் எல்லா இடங்களிலும் கடை திற்ந்த்துவிட்டனர்....

மெளலி....

said...

//சூப்பர் ராம்...எதிர்வினைப் பதிவு போட விட்ருவீங்க போல ;)//

நன்னி கப்பி, ஹி ஹி நீயும் ஒரு எதிர்வினைப் பதிவு போடுப்பா..... பார்ப்போம் ஒன்னோட செலக்டிவ் ஹோட்டல்ஸல்லாம்....... :)

//மதுரைக்கு வந்த புதுசுல விடிகாலை 2,3 மணிக்கு மாட்டுதாவணி பஸ்ஸ்டாண்டுல சுடச்சுட பூரி சுட்டு அடுக்கிவச்சிருக்கறதைப் பார்த்து 'யாருமே இல்லாத நேரத்துல யாருக்குடா இப்படி சுட்டு அடுக்கி வைக்கறீங்க'ன்னு தோணும்...அப்புறம் போகப்போக தான் 'உறங்கா நகர'த்தோட ஸ்பெஷாலிட்டியே இதுதான்னு தெரிஞ்சுது ;)//

பின்னே ராபகல் தெரியமேதான் இருந்தங்க, ஆனா இப்போ ஈவினிங் ஹோட்டல் எல்லாமே நைட்12 மணிக்கெல்லாம் அடைச்சிராங்க... :(


//ஜிகர்தண்டாவுக்கு கீழவாசல் வீதியிலயோ மகால் இருக்க தெருமுனைலயோ (சரியா ஞாபகமில்ல) ஒரு கடை இருக்குமே..மத்த இடங்களை விட அங்க சூப்பரா இருக்கும்... //

சரியாதான் சொல்லிருக்கே.. அங்கேதான் இருக்கு அந்த கடை... அந்த கடையோட பேரே "பேமஸ்" ஜிகர்தண்டா கடை'தான்.

அதேமாதிரி "காதல்"!!! படப்புகழ் கடையும் பேமஸ்தான்.. இவரு மஞ்சணக்காரதெரு, தெற்குமாசி வீதி சந்திப்பிலே இருப்பாரு......... :)

said...

//மேலக்கோபுர வாசலிலே டெல்லிவாலா கடை ஸ்வீட்ஸை விட்டுட்டீங்க,//

ஆமாம் மேடம் அது மிஸ்ஸாயிடுச்சு... மெளலி சொன்னமாதிரி பீமபுஷ்டி அல்வா'வும் விட்டுப்போச்சு.. :(

//அப்புறம் "காலேஜ் ஹவுஸ்" வெஜ் பிரியாணி அந்த நாளிலேயே ரொம்ப ஃபேமஸ். //

இப்போவும் டேஸ்ட் நல்லா இருக்கு.... அதேமாதிரி அம்மன்சன்னதி'லே இருக்கிற மனோரமா மெஸ் வெஜ் பிரியாணியும் நல்ல டேஸ்டா இருக்கும்.

சின்னவயசிலே வெள்ளிக்கிழமைக்கு கோவிலுக்கு போறேப்பா அங்கே கூட்டிட்டு போகச்சொல்லி நானும் எங்க அக்காவும் சேர்ந்து அடம்பிடிப்போம், அது இல்லேன்னா மாடர்ன் ரெஸ்டாரண்ட்,அதுவுமில்லேன்னா பாலசண்முகனந்தமிலே வடையும், காப்பியாவது வாங்கமே விடறது கிடையாது......

:-)))))

said...

//ராம், மினாட்சி கபே - வடக்காவணி-மேலாவணிமுல வீதிசந்திப்பில் உள்ளதே..அத விட்டுடிங்க....

ராஜேந்திரா டிபன் சென்டர் - தெப்பக்குளத்தெருவிற்கும் காக்கா தோப்பு தெருவிற்க்கும் இடையில் இருக்கிறதே - அது மிஸ்ஸிங். //

வாங்க மெளலி,

நிறைய இடங்கள் விட்டுபோச்சுங்க... நான் எல்லாத்தையும் சேர்த்து ஒரு பெரிய பதிவா தட்டச்சு வைச்சிருந்தேன்.

ஒரு குளறுபடிலே அதே தெரியமே டெலிட் பண்ணித் தொலைச்சிட்டேன்,

அப்புறமா திரும்ப தட்டச்சினதிலே இம்பூட்டுதான் தேறுச்சு. :(

//மேலகோபுர வாசல் டெல்லிவாலா....?//

ஆமாம் முக்கியமானதே விட்டுட்டேன்.

:(

//ஆமா!, நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா மதுரை பிமவிலாஸ் அப்படின்னு ஒரு ஹோட்டல்....எனக்கு கேள்வி அளவில் மட்டுமே தெரியும்...ஆனால் அந்த காலத்தில் மிக முக்கியமானதாம். //

எனக்கும் தெரியலங்க ... நீங்க பீமபுஷ்டி அல்வாக் கடையே தான் சொல்லிருங்கன்னு நினைச்சேன்.


//அப்புறம் அந்த பேபி ஸ்வீட்ஸ்....நேரு ஆலால சுந்தர வினாயகர் கோவில் அருகில்.....//

ஆமாம் இதுவும் மிஸ்ஸிங்.. :(

//விசாலம் காபி, கடந்த 15-20 வருடங்களில் மதுரையின் எல்லா இடங்களிலும் கடை திறந்த்துவிட்டனர்....//

நிறைய இடத்திலே இருக்குங்க இப்போ..... :)

said...

நீங்க மதுரைகாரங்களா?:)
இதுவரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி மட்டும் கேள்விபட்டிருக்கேன்..பதிவை படித்து பசி வந்துவிட்டது... :)

said...

ராம் பசிக்குற நேரத்துல்ல உன் பதிவைப் படிச்சது தப்புத்தேன்.. தப்புத்தேன்...

மதுரைக்கு வந்தா நீ சொன்ன எல்லா இடத்துக்கும் என்னியக் கூட்டிட்டு போய் பரிகாரம் தேடிக்கோ..

ம்ம் அந்த லாலா கடை அல்வா நமக்கும் பேவரீட்ப்பா.. எல்லா மதுரை ட்ரீப்ல்லயும் மிஸ் பண்ணாம அங்கிட்டு ஒரு வெட்டு வெட்டிட்டு தான் கிளம்புவேன் :)))

said...

யோவ் நிறுத்துங்கய்யா அவனவன் வேதனைல இருக்கான். இங்கிட்டு வக தொகையா எழுத்துல பொங்கிட்டு இருக்கிங்களே!

said...

\"ஆனால் எங்க மதுரையில் நள்ளிரவு ஒரு மணிக்கு நாலு இட்லிக்கு நாலுவித சட்னி,சாம்பார் ஊத்தி சாப்பிட்டு வரலாம்.\"

மதுரை தூங்கவே தூங்காதுன்னு சொல்லுவாங்க இல்ல ராம்?

\"அதாவது தங்கரீகல் தியேட்டருக்கு எதிர்ப்பாலே இருக்கிறே டவுன்ஹால்\"

ராம்,மதுரையில எங்க வழி கேட்டாலும் ஏன் ஏதாவது ஒரு தியேட்டர் பேரை சொல்லி சொல்லியே வழி சொல்றாங்க????

said...

//ராயலு, இப்போதைக்கு உள்ளேன் ஐய்யா... :-) //

12B,

அட்டடெண்ஸ் கொடுத்திட்டு அப்புறம் ஆளவே காணோம்...???

said...

//நீங்க மதுரைகாரங்களா?:)//

வாங்க தூயா,

நான் மதுரைக்காரன் தான்......... :)

//இதுவரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி மட்டும் கேள்விபட்டிருக்கேன்..பதிவை படித்து பசி வந்துவிட்டது... :) //

மதுரைக்கு சுற்றுலா வரும் சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த ஹோட்டலுக்கெல்லாம் சென்று சுவைத்து பாருங்கள்.

வருகைக்கு நன்றி..... :-)

said...

/ராம் பசிக்குற நேரத்துல்ல உன் பதிவைப் படிச்சது தப்புத்தேன்.. தப்புத்தேன்...//

வாங்க போர்வாள்,

அப்பிடியெல்லாம் சொல்லப்பிடாது... நானும் இதே பசி நேரத்திலேதான் எழுதினேன். என்ன எழுதி முடிச்சு வெல்லம் போட்ட சாம்பாரை ஊத்தி சாப்பிடணுமின்னு நினைச்சே வெறுப்பாயிடுச்சு....... :(

//மதுரைக்கு வந்தா நீ சொன்ன எல்லா இடத்துக்கும் என்னியக் கூட்டிட்டு போய் பரிகாரம் தேடிக்கோ..//

கட்டாயமா போகலாம்... நீங்க அசைவம் சாப்பிடுவீங்கன்னா கோனார் மெஸ்ஸிலே கறித்தோசையும் சாப்பிட போகலாம்.


//ம்ம் அந்த லாலா கடை அல்வா நமக்கும் பேவரீட்ப்பா.. எல்லா மதுரை ட்ரீப்ல்லயும் மிஸ் பண்ணாம அங்கிட்டு ஒரு வெட்டு வெட்டிட்டு தான் கிளம்புவேன் :))) //

நானும் தான்................. :)))

said...

//யோவ் நிறுத்துங்கய்யா அவனவன் வேதனைல இருக்கான். இங்கிட்டு வக தொகையா எழுத்துல பொங்கிட்டு இருக்கிங்களே! //

ஐயா பாவப்பட்ட ஜீவனே,

நானும் இங்கே நல்ல சோறு கிடைக்கமேதாய்யா வேதனைலே இருக்கேன். அந்த கோபத்திலேதான் எங்கூருலே இம்பிட்டு வகைதொகையா பொங்கி போடுவாய்ங்கே'ன்னு சொன்னேன். அது ஒனக்கு பொறுக்கலையா????

:-(((((

said...

சூப்பர்ங்க! என்ன சொல்லுங்க, மதுரை மதுரை தான். கீதா மேடம் கலக்கி இருக்காங்க, commentsல! எனக்கு இப்போ பசிக்குது, இந்த ஜிலேபி தேசத்துல எவ்ளோ காசு குடுத்தாலும், நல்ல சாப்பாடு கிடைக்காது. நம்ம ஊர் இட்லி - சட்னிக்கு ஈடாகாது.

said...

//மதுரை தூங்கவே தூங்காதுன்னு சொல்லுவாங்க இல்ல ராம்?//

வாங்க திவ்யா,

அது என்னோவோ உண்மைதான். ஆனா இப்போ கொஞ்சம் குறைச்சிருச்சு.

//ராம்,மதுரையில எங்க வழி கேட்டாலும் ஏன் ஏதாவது ஒரு தியேட்டர் பேரை சொல்லி சொல்லியே வழி சொல்றாங்க???? //

ஹி ஹி இதுக்கு என்னான்னு பதில் சொல்லுறதுங்க... அது எங்கூரு காரயங்கே பழக்கமுங்க.....

:-))))))))

said...

//சூப்பர்ங்க! என்ன சொல்லுங்க, மதுரை மதுரை தான். கீதா மேடம் கலக்கி இருக்காங்க, commentsல!//


வாங்க தீக்ஷ்ண்யா,

முதன்முறையா நம்மோட பதிவுக்கு வர்றீங்கன்னு நினைக்கிறேன். சொர்க்கமே என்றாலும் நம்மூரூ போலே வருமா???

//எனக்கு இப்போ பசிக்குது, இந்த ஜிலேபி தேசத்துல எவ்ளோ காசு குடுத்தாலும், நல்ல சாப்பாடு கிடைக்காது. நம்ம ஊர் இட்லி - சட்னிக்கு ஈடாகாது. //

அது உண்மைங்க.... ரோட்டோர கடையிலே இட்லி வாங்கி சாப்பிட்டாலும் அப்பிடி டேஸ்ட் இருக்கும்....

இங்கேயும் குடுக்கிறாய்ங்களே.. ரெண்டு இட்லியே ஒரு லிட்டரு வெல்லசாம்பாருலே மிதக்கவிட்டு.... :(

ஐயோ கொடுமைடா சாமியோவ்.

said...

நல்ல வேளையா நான் மதிய உணவு சாப்பிட்டுக்கிட்டே உங்க பதிவைப் படிச்சேன். இன்னும் நெறைய சொல்லலாமே ராம். இதோட நிறுத்திக்கிட்டீங்க?

said...

//நல்ல வேளையா நான் மதிய உணவு சாப்பிட்டுக்கிட்டே உங்க பதிவைப் படிச்சேன். இன்னும் நெறைய சொல்லலாமே ராம். இதோட நிறுத்திக்கிட்டீங்க? //

வாங்க குமரன்,

நானும் நிறைய எழுதிதான் வச்சிருந்தேன்.. அதே தெரியமே டெலிட் பண்ணி வைச்சிட்டேன். ரெண்டாவதா டைப் பண்ணினதிலே இவ்வளவுதான் ஞாபகமா வந்துச்சு..

தெற்குமாசி வீதி மல்லி ஹோட்டல், சுக்குமல்லி காப்பி கடை, மேலமாசி வீதி, தெற்குமாசி வீதி சந்திப்பு ஹரிவிலாஸ்,பாலசண்முகனந்தம் ஹோட்டல், கணேஷ் மெஸ், இன்னும் நிறைய ஹோட்டல்கள்,மஞ்சணக்காரதெரு புருட்சாலட் விக்கிறவரு எல்லாமே மிஸ்ஸிங்........... :-(((((

said...

முருகன் இட்லிக் கடையில கிடைக்கிற அந்த வெங்காய ஊத்தப்பத்துக்கு இணையா இன்னொரு ஊத்தப்பம் இல்லைன்னு உறுதியாச் சொல்லலாம். அது சரி...மதுரைக் கோனார் கறிதோசையை விட்டுட்டியே ராம்.

அப்புறம் பெல் ஓட்டல் கிளை தொறந்திருக்காங்க. சிவகாசிக்காரங்கதான். இப்ப மதுரைல தொறந்திருக்காங்க. தள்ளுவண்டிய நம்ம டேபிள் பக்கத்துல வந்து அங்கயே ஆம்லெட் போட்டுத் தருவாங்க. அன்னைக்கு மதுரைச் சந்திப்புக்கு வரும் முன்னாடி அங்க வெட்டீட்டுதான் வந்தேன்.

said...

//முருகன் இட்லிக் கடையில கிடைக்கிற அந்த வெங்காய ஊத்தப்பத்துக்கு இணையா இன்னொரு ஊத்தப்பம் இல்லைன்னு உறுதியாச் சொல்லலாம்.//

வாங்க ஜிரா..

அது உண்மைதான்... அடுத்த தடவை ஊருப்பக்கம் வர்றேப்பா ஒரு கொரலு குடுங்க.. நானும் வர்றேன் சேர்ந்து போய் சாப்பிடலாம்.... :)

//அது சரி...மதுரைக் கோனார் கறிதோசையை விட்டுட்டியே ராம்.//

என்னங்க போனப்பதிவே படிக்கமேதான் அதிலே பின்னூட்டம் போட்டிங்களா???? :-(((

//அப்புறம் பெல் ஓட்டல் கிளை தொறந்திருக்காங்க. சிவகாசிக்காரங்கதான். இப்ப மதுரைல தொறந்திருக்காங்க.//


அது ரொம்ப நாளா இருக்கே .....

//தள்ளுவண்டிய நம்ம டேபிள் பக்கத்துல வந்து அங்கயே ஆம்லெட் போட்டுத் தருவாங்க. அன்னைக்கு மதுரைச் சந்திப்புக்கு வரும் முன்னாடி அங்க வெட்டீட்டுதான் வந்தேன். //

ஓ அப்பிடியா அடுத்த வாரம் ஊருக்கு போயி சாப்பிடுறேன்.......... :)))

said...

எல்லாம் சரி, மதுரைக் கடைகளிலே கிடைக்கிற அந்த கோக்கோ மிட்டாயும், அச்சு முறுக்கும் விட்டுப் போச்சே? அது மதுரையின் தனிப் பாணி ஆச்சே? முன்னாலே நரசூஸ் காஃபிதான் மதுரையிலே ரொம்ப ஃபேமஸ். விசாலம் காஃபி அப்புறம் வந்திருக்குன்னு நினைக்கிறேன். அது என்ன, இ.கொ.வுக்கு என்னைப் பார்த்தா மதுரைக்காரியாத் தெரியலை? மதுரைக்காரங்க யாரையுமே காணோமேன்னு கேட்டிருக்கார். நான் ஒருத்தி "தலை(வலி)வின்னு வந்திருக்கிறதாலே தான் மத்தவங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கிறாங்க. ஹிஹிஹி. :D

said...

// வாங்க ஜிரா..

அது உண்மைதான்... அடுத்த தடவை ஊருப்பக்கம் வர்றேப்பா ஒரு கொரலு குடுங்க.. நானும் வர்றேன் சேர்ந்து போய் சாப்பிடலாம்.... :) //

போயிருவோம். ஆனா நீங்க பெங்களூருல இருக்கீகளே!

// //அது சரி...மதுரைக் கோனார் கறிதோசையை விட்டுட்டியே ராம்.//

என்னங்க போனப்பதிவே படிக்கமேதான் அதிலே பின்னூட்டம் போட்டிங்களா???? :-((( //

அழாதீக ராமு. போன பதிவுக்கும் இந்தப் பதிவுக்கும் எடவெளி கூடிருச்சா அதான் இப்பிடி. மாப்பு மன்னிப்பு மாதாங்கோயில்பட்டி இனிப்பு. :-)

said...

மதுரைக்கு உங்க கூட வரேன்... இந்த இடத்துக்கெல்லாம் கூப்பிட்டு போறீங்க....

இப்பவே நாக்குல எச்சில் ஊறுதே...

said...

//அட்டடெண்ஸ் கொடுத்திட்டு அப்புறம் ஆளவே காணோம்...???//

வந்தாச்சு வந்தாச்சு... :-)

என்னதான் காசு குடுத்து சாப்பிட்டாலும்...ரோட்டு கடை ஆயா அன்பா ஏம்பா இன்னும் ஒரு ரெண்டு இட்லி சாப்பிடுனு சொல்றது மருதைல தான்... :-)

said...

எல மதுரைல மல்லிதானே ஃபேமஸ்.. ஏம்ல எங்கூரு சமாச்சாரத்தெல்லாம் உன்கூருல ஃபேமஸ்னு போடுத..

எடுல அந்த அருவாள..

said...

//போயிருவோம். ஆனா நீங்க பெங்களூருல இருக்கீகளே!//

இருந்தா என்ன?? நீங்க கூப்பிட்டு பாருங்க... ஓசிக்கொத்து கிடைக்குதுன்னா யார்யாரோ எங்கோ போறாங்க... நான் எங்கூருக்கு வரமாட்டனோ... :)

//அழாதீக ராமு. போன பதிவுக்கும் இந்தப் பதிவுக்கும் எடவெளி கூடிருச்சா அதான் இப்பிடி. மாப்பு மன்னிப்பு மாதாங்கோயில்பட்டி இனிப்பு. :-) //

அந்த மாதங்கோயில்பட்டி இனிப்பு வர்றப்போ வாங்கிட்டு வாங்க... :)

said...

//மதுரைக்கு உங்க கூட வரேன்... இந்த இடத்துக்கெல்லாம் கூப்பிட்டு போறீங்க....

இப்பவே நாக்குல எச்சில் ஊறுதே... //

பாலாஜி, நீ நம்ம இளையதளபதி, ஒனக்கு வாங்கித் தாரமே வேறே யாருக்கு வாங்கித் தர... மதுரைக்கு வர்றப்போ சொல்லு போகலாம் எல்லாஇடத்துக்கும் , இன்னும் இதிலே சேர்க்கதே ஹோட்டலெல்லாம் இருக்கு... அங்கேயெல்லாம் போகலாம்... :)

said...

//வந்தாச்சு வந்தாச்சு... :-)//

வாங்க 12B.. நீங்க ரிட்டன் வந்து கவிஜ எழுதினேதே படிச்சேன்..... சூப்பரப்பு.... :)

//என்னதான் காசு குடுத்து சாப்பிட்டாலும்...ரோட்டு கடை ஆயா அன்பா ஏம்பா இன்னும் ஒரு ரெண்டு இட்லி சாப்பிடுனு சொல்றது மருதைல தான்... :-) //

அது உண்மைங்க.... அந்தமாதிரி பாசமா சாப்பாடு பரிமாறது ஸ்டார் ஹோட்டலிலே கூட கிடைக்காது... :(

said...

//எல மதுரைல மல்லிதானே ஃபேமஸ்.. ஏம்ல எங்கூரு சமாச்சாரத்தெல்லாம் உன்கூருல ஃபேமஸ்னு போடுத..//

யாருப்பே புது ஆளு.. மொததடக்க நம்ம பக்கம் வந்திருக்கே... நல்லாயிருக்கா அம்புட்டும், அடிக்கடி வந்து ஏதாவது சொல்லிட்டி போ...

ஆனா எங்கூருலே மல்லிப்பூ' தான் பேமஸினா... அப்புறம் பூவா'க்கு பேமஸ் இல்லையா... ஒருதடவை வந்து பாரு, மக்கா அப்புறம் தெரியும்.... :)

//எடுல அந்த அருவாள.. //

ஏலேய்.. எங்களுக்கேவா, அருவா செய்யுற ஊருக்காரய்ங்கிட்டேவா... ஆமா நீ எந்த ஊரு சாமி...??

said...

//
பாலாஜி, நீ நம்ம இளையதளபதி, ஒனக்கு வாங்கித் தாரமே வேறே யாருக்கு வாங்கித் தர... மதுரைக்கு வர்றப்போ சொல்லு போகலாம் எல்லாஇடத்துக்கும் , இன்னும் இதிலே சேர்க்கதே ஹோட்டலெல்லாம் இருக்கு... அங்கேயெல்லாம் போகலாம்... :)//

இன்னும் கொஞ்ச நாள்ல அங்க வந்துடுவேன்.. அப்பறம் அங்கதான் டேரா.. நல்லா எல்லா ஹோட்டலும் போயி வெளுத்து வாங்கிடலாம் ;)

said...

//ராம் said...

யாருப்பே புது ஆளு.. மொததடக்க நம்ம பக்கம் வந்திருக்கே... நல்லாயிருக்கா அம்புட்டும், அடிக்கடி வந்து ஏதாவது சொல்லிட்டி போ...//

கண்டிப்பா ராயலு...

//ஆனா எங்கூருலே மல்லிப்பூ' தான் பேமஸினா... அப்புறம் பூவா'க்கு பேமஸ் இல்லையா... ஒருதடவை வந்து பாரு, மக்கா அப்புறம் தெரியும்.... :)//

கண்டிப்பா வந்து ஒரு கை பாத்துப் புடுவோம்.

//ஏலேய்.. எங்களுக்கேவா, அருவா செய்யுற ஊருக்காரய்ங்கிட்டேவா... ஆமா நீ எந்த ஊரு சாமி...?? //

இந்த சமூகம் நெல்லைல இருந்து கெளம்புனது. என்னய்யா... அல்வா என்கூரு மேட்டருன்னு சொல்லும்போதே புரிஞ்சிக்க வேண்டாம். அப்புறம் மருதையத் தவிர எந்தூருகாரன் அருவான்னு சொல்லுவான்.

said...

ரொம்ப நாள் கழிச்சு மதுரையை சுத்தி பாத்த மாதிரி இருந்தது. தேங்க்ஸ் பாஸ்.