இது ஒரு "எதிர்வினை" பதிவு
For every action, there is an equal and opposite reaction....
சர் ஐசக் நீயூட்டன் என்ற விஞ்ஞானி சொல்லிருக்காருன்னு பள்ளிக்கூடத்திலே படிக்கிறோப்போ பாடபொஸ்தகத்திலே படிச்சேன். அதுக்கப்புறமா அதே பத்தியே சுத்தமா ஞாபகமே இல்லாமாலே போயே போச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்தப் பதிவே படிச்சேதும் இந்த வெள்ளைக்கார தொரை கண்டுப்பிடிச்சு சொன்ன அந்த "எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு"க்கிற தத்துவம் தீடீரென்னு மண்டையிலே பல்பு எரிஞ்ச கணக்கா வந்திருச்சு.
அவரு சொன்ன அசைவப்பதிவிலே கொஞ்சுண்டுதான் அசைவம் இருத்துச்சு, ஆனா மக்கா இது பூராவுமே அசைவம்தான், அப்புறமா படிச்சுப் பார்த்துட்டு என்னா இது பூராவும் கவிச்சியா இருக்குது நீங்க எதிர்வினை கொடுக்கப்பிடாது ஆமா... அதுக்குதான் மொதல்லே உஷர்ரா சொல்லிக்கிறேன். இதுப்பூராவுமே அசைவம்தான், என்னாடா திரும்ப திரும்ப சொல்லுறேன்னு பார்க்காதிங்க... இது எங்கூரு ஸ்டைல்ப்போய்.
எங்கூருக்கு மதுரை, மருதை.மதுரோய்,அப்பிடின்னு நிறைய பேரு வச்சு சனங்க கூப்பிடுவாங்க, அதுக்கும் காரணம், பெருமை,நாட்டுப்புறகதைகள், புராணக்கதைகள் இருக்குங்கய்யா!. இன்னொரு பெருமையும் இருக்குங்க ,அதுஎன்னானா எங்கே எந்த இடத்திலே எந்தநேரத்திலேயும் வேணுமின்னாலும் வயித்துக்கு போடுக்கிற இரை ருசியா கிடைக்குமுங்க. தூங்கநகருக்குள்ளே எங்கே சுத்துனாலும் ஒரு முக்குச்சந்துலேயாவது ஒரு பொரட்டா கடையாவது, பாட்டி இட்லிக்கடையாவது இருந்துரும். அதிலே கொஞ்சமா எனக்குத் தெரிச்சே நல்லா ருசியா இருக்கிற மூணுக்கடையே சொல்லுறேன்.
இப்போ பஸ்ஸ்டாண்டை மாத்திட்டாலும் மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு வர்றே பெரியார் பஸ்ஸ்டாண்ட்க்கு வந்துதான் ஆகணும்.அதுனாலே அதை மையமா வச்சு ஹோட்டல் வழியே சொல்லுறேன். எப்போவது ஊருப் பக்கம் வர்றப்போ இதெயெல்லாம் ஞாபகம் வச்சு கடைக்கு போயி டேஸ்ட் பண்ணிப் பார்த்துருங்க!!!!
கறித்தோசை:- பேரே கொஞ்சம் வித்தியசமா இருக்கா. இது சிம்மக்கல் கோனார் மெஸ்ஸிலே கிடைக்கும். அது எங்கே இருக்குன்னா மதுரை பஸ்ஸ்டாண்ட்க்கு அடுத்து ரயில்வே ஸ்டேசன்.. அதே ஒட்டி போகிற மெயின் ரோட்டிலே அப்பிடியே நடந்திங்கன்னா அடுத்ததா போஸ்ட்டாபீஸ் அப்பிடியே நெட்டா பிடிச்சு வந்துருக்குங்க, எங்கயும் வளையவேணாம், ஒரே நெட்டா நடத்துறே வேண்டியதுதான். கடைசியா சிம்மக்கல் ரவுண்டாணாக்கிட்டே வந்துருவீங்க. அங்கே நாலு ரோடு பிரியும் அதிலே தமிழ்ச்சங்க ரோட்டுக்கு அடுத்த ரோட்டிலே சென்ட்ரல் லைப்பேரிக்கு எதிர்த்தாப்பலே கோனார் மெஸ் இருக்கு.
அங்கே போயி உட்கார்த்திட்டு ஒரு கறித்தோசை ஆர்டர் பண்ணிருங்க. அது எப்பிடி இருக்குமின்னா ஆனியன் தோசைலே ஆனியன்க்கு பதிலா கறிவருவலே சும்மா தளதளன்னு கொழம்போட இருக்குமில்லே அதே அப்பிடியே தோசைலே போடுருப்பாங்க. சும்மா அடிப்பாகம் நல்லா செவக்க வெந்தவுடனே அதே திருப்பிப் போட்டு தோசமாவும்,கறிவருவலும் ஒன்னா சேர்ந்து வெந்து, ஆகா சூப்பரப்பு. சட்னி,குருமா எதுவும் இல்லேமே ஹார்லிக்ஸ் விளம்பரத்திலே சொல்லுறமாதிரி அப்பிடியே சாப்பிடலாம்.
வெங்காயக் குடல்:- இதுவும் நல்லா டேஸ்டியான சமாச்சாரம்தான். இது எங்கேன்னா யானைக்கல் பஸ்ஸ்டாப்க்கு முன்னாடி இருக்கிற எதிர்த்து.எதிர்த்து இருக்கிற ரெண்டு ஹோட்டலேயும் கிடைக்குமுங்க. சின்னவெங்காயத்தே பொடிபொடியா நறுக்கி, ஆட்டுக்குடலே ஃபிரை பண்ணிக் கொடுப்பாங்க, அப்பிடியே நாலு பொரட்டாவே பிச்சுப்போட்டு குழம்புக்களை ஊத்தி இதேயும் சேர்த்து சாப்பிடமின்னா ஆஹா சொகமய்யா!!!!
ஈரல் மிளகுரோஸ்ட்:- ஹி ஹி இதே எழுதுறப்போ எனக்கே எச்சில் ஊறிருச்சுங்க. இது தெற்குமாசி வீதி சின்னக்கடைவீதிலே இருக்கிற ராபியா மெஸ்ஸிலே கிடைக்கும். நாலு பெசல்பொரட்டா, பெப்பர் ஈரல் ரோஸ்ட்ன்னு ஆர்டர் சொன்னா போதும், சும்மா கும்முன்னு சாப்பிட்டு வந்திரலாம், ரோஸ்ட்லே என்னா விஷேமின்னா ஈரலே மொத்தல்லே வேகவைக்கிறப்போ வெறும் உப்பு மட்டும் போட்டு வேகவைச்சு அப்புறமா தோசக்கல்லிலே அதெ பொடி,பொடியா நறுக்கி, அதிலே நிறைய பெப்பரை போட்டு வறுத்து அது பதமா கொஞ்சக்காணு எண்ணையே ஊத்தி அதே அப்பிடியே வாழையிலைலெ கொண்டுவந்து கொடுத்தவுடனே அதிலே ஒரு துண்டை எடுத்து சுடசுட வாயிலே போட்டா ஆகா.....
ருசியா சாப்பிடுறவங்களுக்கு இன்னும் ஹோட்டல் நிறைய இருக்கு.. அதே அடுத்த பதிவிலே போடுறேன். ஆனா கோவிஞ்சுக்காதிங்க, அது சைவம்தான். மதுரையிலே இருந்துட்டு ஜிகர்தண்டா, தெற்குமாசி வீதி சுக்குமல்லி காப்பி, மாடர்ன் ரெஸ்டாரண்ட் வெண்பொங்கல் பத்திச் சொல்லலேன்னா செத்து சொர்க்கத்துக்கு போனாலும் எனக்கு சோறுத்தண்ணி கூட கிடைக்காது. அதே அடுத்தப் பதிவிலே சொல்லுறேன்.
111 comments:
நல்ல அனுபவிச்சுதான் எழுதி இருக்கீங்க. சாப்பிட்ட மக்கள்ஸ் என்ன சொல்லறாங்கன்னு பார்க்கலாம்.
ராயலு!
கோனார் மெஸ் அகமதாபாத்துல எங்கனா இருக்கான்னு கேட்டு சொல்லுப்பா...படிக்கும் போதே கறி தோசை கேட்டு நாக்கு ஊற ஆரம்பிச்சிடுச்சு. என்னை மாதிரி இல்லாத பட்டவங்களை இப்படி வெறுப்பேத்தறது நியாயமா?
:)
இதெல்லாம் ரொம்ப சாப்பிட்ட வர எதிர்வினை பத்தி எல்லாம் பதிவு போட்டுடாதீங்க சாமிங்களா.
சொல்ல மறந்துட்டேன்...பதிவு டாப் டக்கர்.
:)
அய்யோ பசிக்குதே...
அம்மம்மா பசிக்குதே...
டேய் சிம்ரன் ஆப்பக்கடைக்கு போன் போடுறா டோய்!
வெள்ளிக்கிழமையதுவுமா கவிச்சிய தொடக்கூடாதுன்னு நினைச்சேன். நல்லா தேடி வந்தேன்யா இங்க.
நல்ல சுவையான பதிவு ;-))))
//நல்ல அனுபவிச்சுதான் எழுதி இருக்கீங்க. //
அடடே வாங்க கொத்ஸ்,
ஹி ஹி மதுரை நாக்குலே, நல்லா ருசி பார்ந்திருமில்லே..... வருகைக்கு நன்றி....
//சாப்பிட்ட மக்கள்ஸ் என்ன சொல்லறாங்கன்னு பார்க்கலாம். //
மக்களே வாங்க கொத்ஸ் அழைக்கிறார் !!!
//ராயலு!
கோனார் மெஸ் அகமதாபாத்துல எங்கனா இருக்கான்னு கேட்டு சொல்லுப்பா...//
வா தல,
உனக்கு ஒன்னும் இதிலே கோவம் இல்லியே, உன்னோட வினைக்கு எதிர்வினை புரிஞ்சதிலே.... :)))
அங்கே ஒரு சேட்டம்மா காஞ்சே ரொட்டி விக்குதாம், போயி வாங்கி சாப்பிடு!!!!
//படிக்கும் போதே கறி தோசை கேட்டு நாக்கு ஊற ஆரம்பிச்சிடுச்சு. என்னை மாதிரி இல்லாத பட்டவங்களை இப்படி வெறுப்பேத்தறது நியாயமா?//
நீயாயமா... அப்பிடின்னா???? எனக்கும்தான் நாக்கு ஊறுது... அடுத்தவாரம் ஊருலே போயிச் சாப்பிடுவேனே!!!!!
:))))))
//இதெல்லாம் ரொம்ப சாப்பிட்ட வர எதிர்வினை பத்தி எல்லாம் பதிவு போட்டுடாதீங்க சாமிங்களா. //
ஹி ஹி அதெல்லாம் செய்யமாட்டோம் கொத்ஸ்.... :-)
//சொல்ல மறந்துட்டேன்...பதிவு டாப் டக்கர். :) //
ரொம்ப டாங்கீஸ் தல....
//அய்யோ பசிக்குதே...
அம்மம்மா பசிக்குதே...//
வாங்க கதிரு, ஏன் வர்றேப்பா பசியோட வர்றீங்க... :)))
//டேய் சிம்ரன் ஆப்பக்கடைக்கு போன் போடுறா டோய்!//
எனக்கும் சேர்த்து ரெண்டு ஆப்பம்,ஆட்டுக் கால் பாயா சொல்லுங்க!!!
//வெள்ளிக்கிழமையதுவுமா கவிச்சிய தொடக்கூடாதுன்னு நினைச்சேன். நல்லா தேடி வந்தேன்யா இங்க. //
ஹி ஹி சாப்பிடனுமின்னு தோணிட்டா அதிலே நாளு கிழமை எதுக்கு பார்க்கணும்!!!! ;)
//படிக்கும் போதே கறி தோசை கேட்டு நாக்கு ஊற ஆரம்பிச்சிடுச்சு. என்னை மாதிரி இல்லாத பட்டவங்களை இப்படி வெறுப்பேத்தறது நியாயமா?//
Repeat. aparam ethumathri illatha pattavangalaellam kutitu vanthu oooooooooo nu ala arambichiduvom..
//Anonymous said...
நல்ல சுவையான பதிவு ;-)))) //
அனானி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!
//எனக்கும் சேர்த்து ரெண்டு ஆப்பம்,ஆட்டுக் கால் பாயா சொல்லுங்க!!!//
அங்க நாட்டுக்கோழி பிரியாணியும், சிக்கன் லாலிபாப்பும் ஜூப்பரா இருக்கும்!
ஆட்டுக்கால் பாயாவும், ஆப்பமும் சுமாராதான் இருக்கும்.
டுமீல்குப்பம் பக்கத்துல ஒரு தோணி நிக்குது அங்கிட்டு போனிங்கன்னா பாஸ்போர்ட், விசா இல்லாம துபாய் வந்துறலாம்.
ஓகேவா!
நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம். :))
ராயல்ஜி,
நீங்க சொன்ன எல்லா கடைகளுக்கும் நானும் போய் இருக்கேன்...ஆனா அங்க போய் பசங்க ரவுண்டு கட்டி அடிக்கறதை பக்கத்துல உட்கார்ந்து வேடிக்கை பார்க்கறதோட சரி...பசங்க நல்லா ரசிச்சு சாப்பிடுவானுங்க..நல்லாத்தான் இருந்திருக்கனும்...
பெல் ஓட்டலை விட்டுட்டீங்க???
ஏம்பா ராம், எத்தனை முறை என்கிட்ட இட்டிலி சாப்பிட்டுருப்பே, என்னய பத்தி ஒரு வரியாச்சும் எழுதினியா?
இந்த ஆயாவை மறந்திட்டியா?
//Repeat. aparam ethumathri illatha pattavangalaellam kutitu vanthu oooooooooo nu ala arambichiduvom.. //
வாங்க சந்தோஷ்,
நம்ம பக்கம் மொதமுறையா வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்..
கூப்பிட்டு வாங்க சீக்கிரம்... சேர்ந்து அழுவோம்.... :-))))))
//அங்க நாட்டுக்கோழி பிரியாணியும், சிக்கன் லாலிபாப்பும் ஜூப்பரா இருக்கும்!
ஆட்டுக்கால் பாயாவும், ஆப்பமும் சுமாராதான் இருக்கும்.//
என்னாப்பா சொல்லுறே... இம்பிட்டு கிடைக்குதா துபாயிலே... ம் கொடுத்து வச்சே மக்கா...இங்கேனே பிரியாணிலேயும் வெல்லம் போடுறாய்ங்கே!!!!
//டுமீல்குப்பம் பக்கத்துல ஒரு தோணி நிக்குது அங்கிட்டு போனிங்கன்னா பாஸ்போர்ட், விசா இல்லாம துபாய் வந்துறலாம்.//
ஆகா சூப்பரு ஐடியா, அப்பிடியே வந்துறேன்!!!!
//ஓகேவா!
நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம். :)) //
இது ஏதோ கள்ளகடத்தல் கோஷ்டி ஆளுக பேசிக்கிறமாதிரிலே இருக்கு!!!!
//போஸ்ட்டாபீஸ்//
விட்டா பீஸ் பீஸா பிரிச்சி போட்டுடுவீங்க போலருக்கு!
தபால் ஆபிஸ்
போஸ்ட் ஆபிஸ்
தந்தி அலுவலகம்.
இப்படி ஏதாச்சும் ஒண்ண எழுதியிருக்கலாமே!
இதெல்லாம் அநியாயம் அக்கிரமம்...
ஆமாம் சொல்லிட்டேன்... இப்படியெல்லாம் வெறுப்பேத்தக்கூடாது...
நாக்குல எச்சில் ஊறுது...
//ராயல்ஜி,
நீங்க சொன்ன எல்லா கடைகளுக்கும் நானும் போய் இருக்கேன்...ஆனா அங்க போய் பசங்க ரவுண்டு கட்டி அடிக்கறதை பக்கத்துல உட்கார்ந்து வேடிக்கை பார்க்கறதோட சரி...பசங்க நல்லா ரசிச்சு சாப்பிடுவானுங்க..//
வாப்பா ஜாவா கவிஞ்ஞர் கப்பிநிலவா!!
உங்க பிரண்டுக கிட்டே கேட்டு பாருப்பா எப்பிடி டேஸ்ட் இருக்குமின்னு!!!
//நல்லாத்தான் இருந்திருக்கனும்...//
உண்மையிலே நல்லா இருக்கும்ப்பா!!!
//பெல் ஓட்டலை விட்டுட்டீங்க??? //
இல்லே அது காஸ்ட்லியான ஓட்டல்'றேனலே விட்டுட்டேன்!!!
உலகின் ஏக உணவு கப் நூடுல்ஸை மறுப்பவர் நரகத்திற்கு தான் போவர். ( ஏன்யா இப்படி எல்லாம் பதிவு போட்டு வெறுப்பேத்துறீங்க? அவனவன் கப் நூடுல்ஸையே ஒழுங்கா சமைக்கத் தெரியாம திண்டாடுறான். இந்த பர்கர் எல்லாம் வாய்க்குள்ளயே போக மாட்டேங்குது.)
கொத்தனாருக்கு : கப் நூடுல்ஸை தண்ணி ஊத்திட்டு கொதிக்க வைக்கணுமா இல்ல தண்ணிய கொதிக்க வைச்சு ஊத்தணுமா?
-கப்நூடுல்ஸ் ரசிகர் மன்ற தலைவன்
ஏங்க ராயலு, எங்கள் எல்லாம் வெறுப்பேத்தனும்னே இந்த் பதிவு போட்டு இருக்கீங்களா...நல்லவே இருக்குங்க ஆப்போஸிட் ரியேக்சன்...வயிறு எறுயுது...நல்லா இருங்கப்பு :-)
நான் கூட கவுச்சின உடனே வேற மாதிரி கவுச்சியோனு நினைச்சேன்...உண்மையான கவுச்சு தான...இங்கன் உக்காந்துக்கிட்டு இத பாத்து பெருமூச்சு மட்டும் தான் உட முடியும்...எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணனோ :-)
//இல்லே அது காஸ்ட்லியான ஓட்டல்'றேனலே விட்டுட்டேன்!!! //
நாங்களும் யாராவது ட்ரீட் கொடுத்தா தான் அந்த பக்கம் போவோம்.. ;))
ஆஹா..ராம்..இவ்ளோ ஐயிட்டத்தை சாப்பிடாம..இல்ல..படிக்காம எப்படி விட்டேன்.. எப்பா ஒண்ணொன்னும் ஒரு சுவை பா ட்ராம்
\"அது எங்கே இருக்குன்னா மதுரை பஸ்ஸ்டாண்ட்க்கு அடுத்து ரயில்வே ஸ்டேசன்.. அதே ஒட்டி போகிற மெயின் ரோட்டிலே அப்பிடியே நடந்திங்கன்னா அடுத்ததா போஸ்ட்டாபீஸ் அப்பிடியே நெட்டா பிடிச்சு வந்துருக்குங்க, எங்கயும் வளையவேணாம், ஒரே நெட்டா நடத்துறே வேண்டியதுதான். கடைசியா சிம்மக்கல் ரவுண்டாணாக்கிட்டே வந்துருவீங்க. அங்கே நாலு ரோடு பிரியும் அதிலே தமிழ்ச்சங்க ரோட்டுக்கு அடுத்த ரோட்டிலே சென்ட்ரல் லைப்பேரிக்கு எதிர்த்தாப்பலே கோனார் மெஸ் இருக்கு."/
Direction எல்லாம் O.K தான், எவ்வளவு தூரம்[km/mile] நடக்கனும்னு சொல்லிட்டா வசதியா இருக்கும்.
//சிம்மக்கல் இட்லிக்கடை ஆயா said...
ஏம்பா ராம், எத்தனை முறை என்கிட்ட இட்டிலி சாப்பிட்டுருப்பே, என்னய பத்தி ஒரு வரியாச்சும் எழுதினியா?
இந்த ஆயாவை மறந்திட்டியா? //
வா ஆயா,
உனக்குஎன்னோட பிலாக்'கெல்லாம் பத்தி தெரியுமா... உனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுன்னுல்லே சொல்லிருக்கே???
வாழ்க வளமுடன். இதெல்லாம் ஒங்கூருக்கு வந்தன்னைக்குச் சொல்லாதீங்க. இப்பச் சொல்லுங்க. :-((((((((((((((((
//இதெல்லாம் அநியாயம் அக்கிரமம்...
ஆமாம் சொல்லிட்டேன்... இப்படியெல்லாம் வெறுப்பேத்தக்கூடாது...
நாக்குல எச்சில் ஊறுது... //
வாய்யா பாலாஜி,
ஏதோ என்னாலே ஆன பொதுத்தொண்டு.... புதரகத்திலே இருந்து வந்ததும் நம்முரு பக்கம் வா... போயி இதெல்லாம் ஒரு பிடிபிடிச்சிருவோம். ;)
//உலகின் ஏக உணவு கப் நூடுல்ஸை மறுப்பவர் நரகத்திற்கு தான் போவர். ( ஏன்யா இப்படி எல்லாம் பதிவு போட்டு வெறுப்பேத்துறீங்க? அவனவன் கப் நூடுல்ஸையே ஒழுங்கா சமைக்கத் தெரியாம திண்டாடுறான். இந்த பர்கர் எல்லாம் வாய்க்குள்ளயே போக மாட்டேங்குது.)//
ஹி ஹி ஏய்யா இம்பூட்டு உனக்கு கோவம். நான் என்னோமோ டெய்லி போயி சாப்பிடுறமாதிரி, நானே என்னிக்காவது ஊருப்பக்கம் போனாதாய்யா அதெல்லாம் சாப்பிடுவேன்.
//கொத்தனாருக்கு : கப் நூடுல்ஸை தண்ணி ஊத்திட்டு கொதிக்க வைக்கணுமா இல்ல தண்ணிய கொதிக்க வைச்சு ஊத்தணுமா?
-கப்நூடுல்ஸ் ரசிகர் மன்ற தலைவன் //
இதேப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே எங்கள் தானைத் தலைவரு, வெண்பா பாவலர், கொத்ஸ்'பாய் விரைவில் பதிவேத்துவார்.
//ஏங்க ராயலு, எங்கள் எல்லாம் வெறுப்பேத்தனும்னே இந்த் பதிவு போட்டு இருக்கீங்களா...நல்லவே இருக்குங்க ஆப்போஸிட் ரியேக்சன்...வயிறு எறுயுது...நல்லா இருங்கப்பு :-) //
வாங்க சியாம்,
ஹி ஹி ஏதோ என்னாலே ஆனா ஒரு எதிர்வினை கொடுத்தேன் தல பதிவுக்கு!!! ;)
//நான் கூட கவுச்சின உடனே வேற மாதிரி கவுச்சியோனு நினைச்சேன்...//
இல்லே அதெல்லாம் இல்லேங்க!!!
//உண்மையான கவுச்சு தான...இங்கன் உக்காந்துக்கிட்டு இத பாத்து பெருமூச்சு மட்டும் தான் உட முடியும்...எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணனோ :-) //
நானுதாங்க பாவம் பண்ணிருக்கேன் போலே அதுதான் ஊருப் பக்கம் போறேப்பா மட்டும்தான் சாப்பிடமுடியுது!!! அப்பிடியே போனாலும் வீட்டுச் சாப்பாட்டை சாப்பிடதான் ஆசையா இருக்கே தவிர, ஹோட்டலுக்கு போயி சாப்பிடமினுக்கிறது கம்மிதாங்க!!!!
//நாங்களும் யாராவது ட்ரீட் கொடுத்தா தான் அந்த பக்கம் போவோம்.. ;)) //
நம்ம இனத்தோட மான மரியாதையே
கட்டி காத்திட்டே கப்பிநிலவா!!!
ஓ சாரி ஸ்மால் மிஸ்டேக்
ஜாவா கவிஞ்ஞர் கப்பிநிலவா!!!
;)
//ஆஹா..ராம்..இவ்ளோ ஐயிட்டத்தை சாப்பிடாம..இல்ல..படிக்காம எப்படி விட்டேன்.. எப்பா ஒண்ணொன்னும் ஒரு சுவை பா ட்ராம் //
வாங்க கார்த்திக்,
மதுரையிலே இருந்தோப்பே இதே பத்தி கேள்விப்பட்டதில்லேயா???
எல்லாமே சூப்பரா இருக்குமுங்க!!!!!
//Direction எல்லாம் O.K தான், எவ்வளவு தூரம்[km/mile] நடக்கனும்னு சொல்லிட்டா வசதியா இருக்கும். //
வாங்க திவ்யா.
மொததடவையா நம்ம பக்கம் வந்திருக்கீங்க... வரவு நல்வரவாக...
அது கொஞ்சம் தூரம்தாங்க.... கணக்கா சொல்லுனும்மின்னா 3or4 Km இருக்குமுங்க.... பஸ்ஸில்லே போனிங்கன்னா பெரியார் பஸ்ஸ்டாண்ட்லிருந்து முணே ஸ்டாப்தான்,
மொதஸ்டாப்:-ரயில்வே ஸ்டேசன்
ரெண்டாவது:-சேதுபதி ஸ்கூல்
மூணாவது:- சிம்மக்கல்
//வாழ்க வளமுடன். இதெல்லாம் ஒங்கூருக்கு வந்தன்னைக்குச் சொல்லாதீங்க. இப்பச் சொல்லுங்க.
:-(((((((((((((((( //
வாங்க ஜிரா,
நீங்க வந்தப்போ ஏதோ முக்கியமான விசயமா கிளம்பிப்போயிட்டிங்க.... கொஞ்சம் நேரம் இருந்திருக்கன்னா அப்பிடியே சிம்மக்கல் போயி கறித்தோசை சாப்பிட்டு இருக்கலாம்!!!! சரி பரவாயில்லே அடுத்த வர்றேப்பா கண்டிப்பா போயிரலாம்!!!!
;)
//வா ஆயா,
உனக்குஎன்னோட பிலாக்'கெல்லாம் பத்தி தெரியுமா... உனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுன்னுல்லே சொல்லிருக்கே???//
என் பேராண்டி நீ எழுதுற அத படிக்காம இருக்க முடியல.
அதனால ரெண்டு மாதத்தில் தமிழ் படிக்க எழுத அப்படின்னு ஒரு ஸ்மால் கோர்ஸ் ஜாயின் பண்ணி படிச்சேன்.
அதான் இப்ப பின்னூட்ட கயமை செய்யிறதுக்கு வசதியா இருக்கு!
:))
//இது ஏதோ கள்ளகடத்தல் கோஷ்டி ஆளுக பேசிக்கிறமாதிரிலே இருக்கு!!!! //
ஏண்ணே
டுமீல்குப்பத்திலருந்து கள்ள தோணி புடிச்சி துபாய் வர்றவங்க என்ன ராணுவ ரகசிய ஒப்பந்தத்துலயா கையெழுத்து போட போறோம்???
எல்லாம் அதுக்குதான்!
கறுப்பு தொப்பி!
சிவப்பு ரோஜா!
அமாவாசையன்னிக்கு நிலா!
இந்த மூணு கோடு வேர்டையும் மறந்துடாதிங்க!
ஜாக்கிரதையா வரணும்!
//சிம்மக்கல் இட்லி கடை ஆயா அகெய்ன் said... //
ஆயா இங்கிலிபிஸ் வேறே பின்னிறியே..???
//என் பேராண்டி நீ எழுதுற அத படிக்காம இருக்க முடியல.
அதனால ரெண்டு மாதத்தில் தமிழ் படிக்க எழுத அப்படின்னு ஒரு ஸ்மால் கோர்ஸ் ஜாயின் பண்ணி படிச்சேன்.//
பார்றா கிழவி இதெல்லாம் வேறேயா???
//அதான் இப்ப பின்னூட்ட கயமை செய்யிறதுக்கு வசதியா இருக்கு!//
அடகடவுளே அப்போ அவன்கூட சேர்ந்திட்டியா நீயி... சரி அடுத்த பதில் போடதே நான் பப்ளிஷ் பண்ணமாட்டேன்.
:)
//ஏண்ணே
டுமீல்குப்பத்திலருந்து கள்ள தோணி புடிச்சி துபாய் வர்றவங்க என்ன ராணுவ ரகசிய ஒப்பந்தத்துலயா கையெழுத்து போட போறோம்???//
கதிரு அதெல்லாம் வேறே செய்யலாமின்னு ஐடியா இருக்கா என்னா???? சரி போங்க நான் வர்ற்ப்போ கொஞ்சம் கவனிச்சிங்க!!!
//எல்லாம் அதுக்குதான்!
கறுப்பு தொப்பி!
சிவப்பு ரோஜா!
அமாவாசையன்னிக்கு நிலா!
இந்த மூணு கோடு வேர்டையும் மறந்துடாதிங்க! ஜாக்கிரதையா வரணும்!//
ஓகே கரிக்கிட்டா சொல்லிறேன். ஆனா சரியான இடத்தே சொல்லவே இல்லேயே???? குறுக்கு தெருவா... இல்லே விவேகானந்தர் மெயின் வீதீயா???
//ஓகே கரிக்கிட்டா சொல்லிறேன். ஆனா சரியான இடத்தே சொல்லவே இல்லேயே???? குறுக்கு தெருவா... இல்லே விவேகானந்தர் மெயின் வீதீயா???//
அய்யய்யே குறுக்கு தெருவுக்கெல்லாம் தோணி வராது நீங்கதான் வண்டி புடிச்சி அங்க வரணும்.
ஏரியா உள்ள வந்ததும் இந்த பாட்ட பாடுங்க...
அன்பு மலர்களே....
நம்பி இருங்களே.....
நாலை நமதே.... இந்தா நாடும் நமதே....
இந்த பாட்ட ஒரக்க பாடுனீங்கன்னா எங்கிட்டு இருந்தாலும் ஓடி வருவேன்.
தமிழ்நாட்டுக்கே இந்த பாட்டுதான் குடும்ப பாட்டு!!! :))
ராம்,
முதல் இடத்துக்கு போகனும் என்று பலதடவை முயற்சி பண்ணியும் இதுவரை போக வில்லை.
இரண்டாவது இடத்துக்கு போகும் ஐடியா இல்ல, ஏன்னா நம்க்கு குடல் பிடிக்காது.
முணாவது இடத்தை கேள்விப்பட்டது இல்லை, இந்த தடவை வந்து ஒரு பிடி பிடிச்சுட வேண்டியது தான்
//தமிழ்நாட்டுக்கே இந்த பாட்டுதான் குடும்ப பாட்டு!!! :)) //
நம்ம குடும்ப பாட்டை ஏன் ராமுக்கு சொல்லுறீங்க தம்பி. அவரு ராயலு ஆங்கில பாட்டு மட்டும் தான் பாடுவேன் அடம் பண்ணினாலும் பண்ணுவாரு. ஆங்கில பாட்டுக்கு எங்க போவது நாம். அப்படியே இருந்தாலும் அதை நாம் எப்படி பாடுவது சொல்லுங்க
//அய்யய்யே குறுக்கு தெருவுக்கெல்லாம் தோணி வராது நீங்கதான் வண்டி புடிச்சி அங்க வரணும்.//
நான் அப்பிடியா கேட்டேன்... ஏங்க அநியாத்துக்கு இப்பிடியா கேட்கிறது... சரி ஓகே, அங்கே டாக்ஸி இருக்குமில்லே, அதிலே ஏசி இருக்குமில்லே... ஏன்னா நமக்கு சூடு ஆவாது... அப்புறம் முக்கியமா நான் வந்தது டாக்ஸிக்கு கொடுக்க உங்ககிட்டே காசு இருக்கா???
//ஏரியா உள்ள வந்ததும் இந்த பாட்ட பாடுங்க...
அன்பு மலர்களே....
நம்பி இருங்களே.....
நாலை நமதே.... இந்தா நாடும் நமதே....
இந்த பாட்ட ஒரக்க பாடுனீங்கன்னா எங்கிட்டு இருந்தாலும் ஓடி வருவேன்.
தமிழ்நாட்டுக்கே இந்த பாட்டுதான் குடும்ப பாட்டு!!! :)) //
ஓகே பாடிறேன்... தலைவர் MGR பாட்டுதானே... பாடிட்டா போச்சு.. ஆனா சொன்னமாதிரியே வந்திருனும், இல்லேன்னா நான் பாடின பாட்டுக்கு யாராவது காசு போட்டுற போறாய்ங்கே!!!! அப்புறம் புதுத் தொழில்ன்னு போயிறமாதிரி ஆகிறும். ;)
//முதல் இடத்துக்கு போகனும் என்று பலதடவை முயற்சி பண்ணியும் இதுவரை போக வில்லை.
இரண்டாவது இடத்துக்கு போகும் ஐடியா இல்ல, ஏன்னா நம்க்கு குடல் பிடிக்காது.
முணாவது இடத்தை கேள்விப்பட்டது இல்லை, இந்த தடவை வந்து ஒரு பிடி பிடிச்சுட வேண்டியது தான்//
டோட்டலா சாப்பிட்டதே இல்லன்னு சொல்லு புலி!
தலய சுத்தி மூக்க தொடுவாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன், மூக்க சுத்தி தலய தொடறத இப்பதான் பாக்குறேன்!
எதுக்கு இவ்ளோ பெரிய பில்டப்பு?
//ராம்,
முதல் இடத்துக்கு போகனும் என்று பலதடவை முயற்சி பண்ணியும் இதுவரை போக வில்லை. //
வாப்பா புலி,
ஸ்டாரா ஜொலிச்சுட்டு இப்போதான் இங்கிட்டு வர்றே.. சரி நம்ம ஊருப் பக்கம் வர்றேப்பா சொல்லு சேர்ந்து போயி ரவுண்ட் கட்டி அடிப்போம். :)
//இரண்டாவது இடத்துக்கு போகும் ஐடியா இல்ல, ஏன்னா நம்க்கு குடல் பிடிக்காது.//
சரி பிடிக்கல்லைன்னா விட்டுருப்பா... ஆனா அது நல்லா டேஸ்டா இருக்கும்ப்பா!!!
//முணாவது இடத்தை கேள்விப்பட்டது இல்லை, இந்த தடவை வந்து ஒரு பிடி பிடிச்சுட வேண்டியது தான் //
இது நம்ம ஏரியாதாப்பா, வா மொதல்நாளுலே கறித்தோசை, அடுத்தநாளு இங்கே போயி சாப்பிடுவோம்.
ஓடி வா என்னருமை புலியே சூடானிலிருந்து சீக்கிரமே ஓடிவா.... ;)
//அப்புறம் புதுத் தொழில்ன்னு போயிறமாதிரி ஆகிறும். ;) //
புது தொழிலா, ஏன் இந்த பொழப்பு உனக்கு,
விட்ட தொழில மறுபடியும் பாக்கும்படி ஆயிட போகுதுனு சொல்லு, ஒத்துக்க்றேன், அதை விட்டுட்டு இப்படி யாரும் இல்லனு நினைச்சுக்கிட்டு நம்ம தம்பி அண்ணனை ஏமாத்த பாக்குற பாத்தியா?
//ஸ்டாரா ஜொலிச்சுட்டு இப்போதான் இங்கிட்டு வர்றே.. சரி நம்ம ஊருப் பக்கம் வர்றேப்பா சொல்லு சேர்ந்து போயி ரவுண்ட் கட்டி அடிப்போம். :)//
ரவுண்ட் கட்டி அடிப்போம் சரி, அப்படியே நான் சொன்ன மல்லி மேட்டரு அதையும் மறந்துடாதே....
//ஓடி வா என்னருமை புலியே சூடானிலிருந்து சீக்கிரமே ஓடிவா.... ;) //
ஒடி வந்தா எப்படிப்பா சீக்கிரம் வருவது. அதனால பிளைட்ல வரேன் ஒகேவா....
//நம்ம குடும்ப பாட்டை ஏன் ராமுக்கு சொல்லுறீங்க தம்பி. அவரு ராயலு ஆங்கில பாட்டு மட்டும் தான் பாடுவேன் அடம் பண்ணினாலும் பண்ணுவாரு. ஆங்கில பாட்டுக்கு எங்க போவது நாம். அப்படியே இருந்தாலும் அதை நாம் எப்படி பாடுவது சொல்லுங்க //
அப்படியா சொல்லவேல்ல!
டுங்கில் டுங்கில் லிட்டில் ஸ்டார்...
இது ஓகேவா?
//எதுக்கு இவ்ளோ பெரிய பில்டப்பு? //
இது எல்லாம் கொடுத்தான்யா நம்மள மதிக்குறாங்க....
என்ன பண்ணுறது உன் அளவுக்கு எனக்கு திறமையும் கிடையாது, அறிவும் கிடையாது..... அதான் அந்த பொழப்பு...(பில்டப்பு கொடுப்பது தான்)
//அப்படியா சொல்லவேல்ல!
டுங்கில் டுங்கில் லிட்டில் ஸ்டார்...
இது ஓகேவா? //
இதுவும் கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தாலும் ராயலுக்காக யாரும் வாத்தியாரை புடிச்சு கத்துக்குறேன்... என்னப்பா ராயல் உனக்கு ஒகேவா....
தம்பி அண்ணன், இந்த பாட்டை பாடுவதால் சிம்புவுடன் ஏதும் பிரச்சனை வராதே...
50 நானா?
அப்போ நாந்தான் 50
ஹையா! நான் தான் 50.
ராயல் என் கமெண்டு அம்பதாவதா இல்லன்னா...இங்கே ஒரு கொலை வுழும்.
முதல் போணி செய்த இலவசகொத்தனாருக்கும், ஐம்பதாவது போணி சிறப்பாக செய்த தம்பிக்கும் ராயல் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்!
நன்றி நவில்தல் நன்று! :))
//முதல் போணி செய்த இலவசகொத்தனாருக்கும், ஐம்பதாவது போணி சிறப்பாக செய்த தம்பிக்கும் ராயல் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்!
நன்றி நவில்தல் நன்று! :)) //
தூஊஊஊஊஊஊ
இந்த பொழப்புக்கு ......
சீ,....
//நம்ம குடும்ப பாட்டை ஏன் ராமுக்கு சொல்லுறீங்க தம்பி. அவரு ராயலு ஆங்கில பாட்டு மட்டும் தான் பாடுவேன் அடம் பண்ணினாலும் பண்ணுவாரு. ஆங்கில பாட்டுக்கு எங்க போவது நாம். அப்படியே இருந்தாலும் அதை நாம் எப்படி பாடுவது சொல்லுங்க //
ஏலே புலி,
என்மேலே ஏன்ய்யா உனக்கு இந்த கொலைவெறி.. இல்லே தெரியமே கேட்கிறேன்!!!! என்மனத்தே பொதுவிலே வச்சு வாங்கிறீயே.. எனக்குதான் இங்கிலிபிஸ் தெரியதே... அப்புறம் எப்பிடி பாட்டு வேறே பாடுறது...
நான் என்னா தல'யா, "நான்கு சியாமள மங்கைகள்" தொரைப் பாட்டு கேட்கிறதுக்கு....???
ராயல்"ராம்"!
நம்ம ஊரும் மதுரைக்குப் பக்கத்துல பரமக்குடிதான்,
ஆனா அப்படியே கோயம்புத்தூர் பக்கம் வந்து செட்டில் ஆயிட்டதால இதெல்லம் சாப்பிடாம மிஸ் பண்ணிட்டேன், (அதனால என்ன? வரப்போர மிஸ்ஸ பண்ணச் சொல்லி சாப்பிட்டுக்கலாம்)
அடுத்த முறை மதுரைப் பக்கம் வந்ததும் மறக்காம சாப்பிட்டுகிறேன்!
அன்புடன்...
சரவணன்.
//ஹையா! நான் தான் 50.//
இல்ல இல்ல ஹய்யா இல்ல :-)
//ராயல் என் கமெண்டு அம்பதாவதா இல்லன்னா...இங்கே ஒரு கொலை வுழும். //
இப்ப இங்கன ஒரு கொலை விழந்தே ஆகனும்... குறைந்தப்பட்சம் ஒரு தென்னைக்குலையாச்சும் சொல்லிட்டேன்....
//ராயல் என் கமெண்டு அம்பதாவதா இல்லன்னா...இங்கே ஒரு கொலை வுழும். //
இந்த சின்ன சின்ன மேட்டருக்கெல்லாம் கொல பண்ணா கம்பெனிய பத்தி மக்கள் என்ன நினைப்பாங்க??
இப்புட்டு கோவம் ஆகாதுய்யா!
தம்பி, "புலிப்பாண்டி" நாகையார் மற்றும் "ராயல்" ராம், உங்களின் காமெடி கமெண்டுகள் அருமை!
அன்புடன்...
சரவணன்.
//ராயல் என் கமெண்டு அம்பதாவதா இல்லன்னா...இங்கே ஒரு கொலை வுழும்.//
மோகன், நீங்க ஒரு நியாஸ்தன், மானஸ்தன், தர்ம்ஸ்தன், இன்னும் என்ன என்ன இருக்கோ அத்தனை ஸ்தன், நீங்க சொன்ன சொல்லை காப்பாத்துனும், அதுவும் இப்பவே, இங்கவே.....
நான் இங்கன தான் வெயிட்டிங்.... ஸ்டார்ட் மியுஸிக்....
//இந்த சின்ன சின்ன மேட்டருக்கெல்லாம் கொல பண்ணா கம்பெனிய பத்தி மக்கள் என்ன நினைப்பாங்க??
இப்புட்டு கோவம் ஆகாதுய்யா! //
மேட்டரு சின்னதா, பெரிசா க்குறது இங்கன முக்கியம் இல்ல, நம்ம கைப்புள்ள சொல்லி அதை நடக்காம இருப்பது தான் மேட்டரு... இதுக்கு ஒரு நியாயம் கிடைத்தே ஆக வேண்டும்....
//தம்பி, "புலிப்பாண்டி" நாகையார் மற்றும் "ராயல்" ராம், உங்களின் காமெடி கமெண்டுகள் அருமை!
அன்புடன்...
சரவணன். //
வாய்யா, எங்கள் , உங்கள் நண்பன் சரா.... எங்க ரொம்ப நாளா ஆளை காணாம். சரி சரி நீயும் ஜோதியில் வந்து ஐக்கியம் ஆவு....
//புது தொழிலா, ஏன் இந்த பொழப்பு உனக்கு,
விட்ட தொழில மறுபடியும் பாக்கும்படி ஆயிட போகுதுனு சொல்லு, ஒத்துக்க்றேன், அதை விட்டுட்டு இப்படி யாரும் இல்லனு நினைச்சுக்கிட்டு நம்ம தம்பி அண்ணனை ஏமாத்த பாக்குற பாத்தியா? //
புலி போதும் இதோட நிறுத்திக்குவோம், என்னோட இமேஜ் டோட்டல் டேமேஜ்!!!
//ரவுண்ட் கட்டி அடிப்போம் சரி, அப்படியே நான் சொன்ன மல்லி மேட்டரு அதையும் மறந்துடாதே....//
கவலைப்படாமே வாப்பா தெற்குமாசி வீதிலே சுக்குமல்லி காப்பி வாங்கி தரேன்!!!
//ஒடி வந்தா எப்படிப்பா சீக்கிரம் வருவது. அதனால பிளைட்ல வரேன் ஒகேவா.... //
ஓகே எப்பிடியாச்சும் வந்து சீக்கிரம் சேருப்பா ... குவிக்!!!!:)
//இது எல்லாம் கொடுத்தான்யா நம்மள மதிக்குறாங்க....
என்ன பண்ணுறது உன் அளவுக்கு எனக்கு திறமையும் கிடையாது, அறிவும் கிடையாது..... அதான் அந்த பொழப்பு...(பில்டப்பு கொடுப்பது தான்) //
ஹி ஹி இதுக்கு நீ வேணுமின்னு சொல்லுறது புலி... பச்சப்புள்ள மாதிரி உண்மையே டக்குன்னு ஒத்துக்கிட்டியே!!!
//வாய்யா, எங்கள் , உங்கள் நண்பன் சரா.... //
ஆஹா!!! இந்தா ஆரம்பத்துலயே ஆரம்பிச்சுட்டங்கல்ல!!!
//எங்க ரொம்ப நாளா ஆளை காணாம். சரி சரி நீயும் ஜோதியில் வந்து ஐக்கியம் ஆவு.... //
காணம போனதப் பத்தி தன்னிலை விளக்கமா ஒரு தனிப் பதிவே போட்டுட்டேன் , நீர் தான் வரலை!:(
ஆமா ஜோதில வந்து ஐக்கியமாக சொல்லுறீரே , ஜோதிங்கிறது வினைச் சொல்லா இல்லை பெயர்ச் சொல்லா?:))
அன்புடன்...
சரவணன்.
//மோகன், நீங்க ஒரு நியாஸ்தன், மானஸ்தன், தர்ம்ஸ்தன், இன்னும் என்ன என்ன இருக்கோ அத்தனை ஸ்தன், நீங்க சொன்ன சொல்லை காப்பாத்துனும், அதுவும் இப்பவே, இங்கவே.....
நான் இங்கன தான் வெயிட்டிங்.... ஸ்டார்ட் மியுஸிக்....//
விட்டா சேர் போட்டு உக்காந்திருவே போலருக்கு! கெளம்புய்யா கெளம்பு!
//தம்பி, "புலிப்பாண்டி" நாகையார் மற்றும் "ராயல்" ராம், உங்களின் காமெடி கமெண்டுகள் அருமை!//
வாங்க சரா!
திரும்பவம் வந்ததுல ரொம்ப சந்தோஷம்! வந்ததும் வாழ்த்துவேற சொல்லிட்டிங்க
நெம்ப டேங்ஸ்!
//புலி போதும் இதோட நிறுத்திக்குவோம்,//
ஏன் நிறுத்தனும், ஏதுக்கு நிறுத்தனும். அப்படியே நிறுத்தனும் என்றால் அவனை நிறுத்த சொல்லு, இல்லாட்டி இவனை நிறுத்த சொல்லு,
அப்பால நான் நிறுத்துறேன்....
// என்னோட இமேஜ் டோட்டல் டேமேஜ்!!! ///
இது என்ன புதுசா இருக்கு.... சொல்லவே இல்ல இது எல்லாம் உன்கிட்டு இருக்கு என்று....
//அப்படியா சொல்லவேல்ல!
டுங்கில் டுங்கில் லிட்டில் ஸ்டார்...
இது ஓகேவா? //
அடபாவமே என்ன இந்த பாட்டெல்லாமா நீங்க ஞாபகம் வைச்சிருக்கே கதிரு.... ;)
//இதுவும் கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தாலும் ராயலுக்காக யாரும் வாத்தியாரை புடிச்சு கத்துக்குறேன்... என்னப்பா ராயல் உனக்கு ஒகேவா....//
நான் என்னாந்தய்யா இப்போ பண்ணுறது... அங்கிட்டு போனாலும்,இங்கிட்டு போனாலும் ஒரே பொதுமாத்தா தாய்யா விழுது இன்னிக்கு, மதுரையின்னா அப்பிடித்தானு நினைச்சிக்கிட்டு போயிரவேண்டியதுதான்!!!
//தம்பி அண்ணன், இந்த பாட்டை பாடுவதால் சிம்புவுடன் ஏதும் பிரச்சனை வராதே... //
ஆஹா இதென்ன புது கெரகம்???
//ஆமா ஜோதில வந்து ஐக்கியமாக சொல்லுறீரே , ஜோதிங்கிறது வினைச் சொல்லா இல்லை பெயர்ச் சொல்லா?:))//
என்ன கொடுமை இது சரவணன்???
பேரு ஜோதி வெனைக்கு கேக்கவே வேணாம். அண்ணாச்சி ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே
//தம்பி said...
50 நானா? //
//கைப்புள்ள said...
ஹையா! நான் தான் 50.//
அது யாருக்கு வந்துச்சின்னு தான் தெரியலே!!!! உங்க ரெண்டுபேத்துக்கும் அந்த பெருமையை பிரிச்சு எடுத்துக்கோங்க!!!
//ராயல் என் கமெண்டு அம்பதாவதா இல்லன்னா...இங்கே ஒரு கொலை வுழும். //
தென்னைக் கொலையா, பனங் கொலையா தல???? எதின்னு சீக்கிரமா சொல்லு.. அதெ கொண்டுவறதுக்கு டிரை பண்ணுறேன்!!!
//ராயல்"ராம்"!
நம்ம ஊரும் மதுரைக்குப் பக்கத்துல பரமக்குடிதான்,//
அடடே வாங்க நண்பா,
திரும்பி வந்ததிலே மகிழ்ச்சி.. உங்கள் தொழில் நல்லபடியாக செழித்தோங்க எல்லாம்வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன்.
//ஆனா அப்படியே கோயம்புத்தூர் பக்கம் வந்து செட்டில் ஆயிட்டதால இதெல்லம் சாப்பிடாம மிஸ் பண்ணிட்டேன், (அதனால என்ன? வரப்போர மிஸ்ஸ பண்ணச் சொல்லி சாப்பிட்டுக்கலாம்)
அடுத்த முறை மதுரைப் பக்கம் வந்ததும் மறக்காம சாப்பிட்டுகிறேன்!
//
கண்டிப்பாக சாப்பிட்டு பார்த்திட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க சரவணா.... ;)
ராயல்,
ஒரு நல்ல பதிவுல பின்னூட்ட கயமைத்தனமா பண்ணறே? உன்னை பாத்து நான் வெக்கப்படறேன்...வேதனை படறேன்...வருத்தப்படறேண்டா கண்ணா!!
:(
//முதல் போணி செய்த இலவசகொத்தனாருக்கும், ஐம்பதாவது போணி சிறப்பாக செய்த தம்பிக்கும் ராயல் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்!
நன்றி நவில்தல் நன்று! :)) //
அட பாவமே இது என்னாய்யா இங்கே ஒரு புது பூதமென்னு கிளம்புது????
// நாகை சிவா said...
//முதல் போணி செய்த இலவசகொத்தனாருக்கும், ஐம்பதாவது போணி சிறப்பாக செய்த தம்பிக்கும் ராயல் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்!
நன்றி நவில்தல் நன்று! :)) //
தூஊஊஊஊஊஊ
இந்த பொழப்புக்கு ......
சீ,.... //
தேவைதானா இல்லே எனக்கு இது தேவைதானா..... கதிரு இப்போ திருப்திய்யா??????
//தம்பி, "புலிப்பாண்டி" நாகையார் மற்றும் "ராயல்" ராம், உங்களின் காமெடி கமெண்டுகள் அருமை!//
ரொம்ப நன்றி நண்பா சரவணா!!!!
//ஆமா ஜோதில வந்து ஐக்கியமாக சொல்லுறீரே , ஜோதிங்கிறது வினைச் சொல்லா இல்லை பெயர்ச் சொல்லா?:))//
ஆஹா இது ஒரு நல்ல கேள்வி... இங்கே பெயர்காரணமாக எதுவும் மேட்டர் இல்லதானலே அது வினைச்சொல்'தான்...... ;)))
//ஆஹா இது ஒரு நல்ல கேள்வி... இங்கே பெயர்காரணமாக எதுவும் மேட்டர் இல்லதானலே அது வினைச்சொல்'தான்...... ;))) //
நாம் இங்கு ஒரு முக்கியமான பெயர் ஒற்றுமை விளக்கத்தை கவனிக்க வேண்டும்(?!), ஜோதி விசயத்தில் பெயர் அடிபட்ட அண்ணாச்சி வைத்திருந்த ஹோட்டலின் பெயர் சரவணபவன்,
"ஜோதி"காவை திருமணமுடித்துள்ள நடிகர் சூர்யாவின் உண்மையான பெயரும் சரவணன்.(ஹி ஹி என் பெயரும் அதுவே):)))
(பி.கு: என் அறிவுஜோதி கண்டு யாரும் ஆனந்தக் கண்ணீர் விட வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகின்றீர்கள்):))))
அன்புடன்...
சரவணன்.
//ராயல்,
ஒரு நல்ல பதிவுல பின்னூட்ட கயமைத்தனமா பண்ணறே? உன்னை பாத்து நான் வெக்கப்படறேன்...வேதனை படறேன்...வருத்தப்படறேண்டா கண்ணா!! :( //
என்னா தல.. புது குண்டுப் போடுறே... இங்கே எங்க கயமைதனம் இருக்கு..????
நீ நேத்துப் பார்த்த விசு படத்துக்கு இப்பிடி ஒரு எதிர்வினையா....???? ;)
//பி.கு: என் அறிவுஜோதி கண்டு யாரும் ஆனந்தக் கண்ணீர் விட வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகின்றீர்கள்):))))//
நாங்க விடுவோம். எப்பிடி உங்களுக்கு இம்பூட்டு அறிவுன்னு???? ;)
ஆஹா ராம் இப்போவே நாக்கிலே ஜம் ஊறுதே கறிதோசைய நெனச்சா!!! போன தடவை கோனார் மெஸ்ஸிலே லைட்டா ரெண்டு முட்டைக்கறி தோசையை அப்படியே குடல் கொழம்பு உட்டு சாப்பிடச்சொல்ல ஆஹா கண்ணுல காரத்தோட சாப்பிடுறதால கண்ணீர் ஆனந்தகண்ணீரா முட்ட வாயிலே ஜலம் ஊற ஆஹா என்னா ஒரு டேஸ்ட்டு என்னா ஒரு டேஸ்டு. போ ராமு இப்படியெல்லாம் மூடை கெளப்பிகிட்டு :((
அட்ரெஸ்-லாம் நோட் பண்ணிக்கிட்டம்ல சீக்கிரமே அட்ரசையும் மாத்திருவோம்...
வந்துட்டேன்!!
அம்பது போட்ட அண்ணன் ராமை வாழ்த்தி அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக ஒரு ஸ்மால் கவித...
ஆயாகடைல அக்கவுண்ட் வச்ச அண்ணனே...
அறுசுவையை தரணி முழுதும் தேடும் காதல் மன்னனே...
வலைப்பதிவாளர் மாநாடுகளின் வாலிப கண்ணனே...
நீ பெங்களூரில் இருப்பதால் குளிர் ஆகிப்போச்சி
மருதையில் இல்லாது போனதால் தரையே வெடிச்சி போச்சி
கடைசி வரைக்கும் நீயே எங்களின் உயிர் மூச்சி
அடுத்த தேர்தலில் அண்ணன் தலைமையில் புடிச்சிடுவோம் ஆச்சி! ஆச்சி!! ஆச்சி!!!
பாசமுடன்
ராயல் ராம் ரசிகர் மன்ற தொண்டர்கள்.
//ஆஹா ராம் இப்போவே நாக்கிலே ஜம் ஊறுதே கறிதோசைய நெனச்சா!!! //
ஆஹா வாங்க பாண்டியண்ணே!!!
மொத தடவையா நம்மே பக்கம் வந்திருக்கீங்க... வரவு நல்வரவு ஆக..
//போன தடவை கோனார் மெஸ்ஸிலே லைட்டா ரெண்டு முட்டைக்கறி தோசையை அப்படியே குடல் கொழம்பு உட்டு சாப்பிடச்சொல்ல ஆஹா கண்ணுல காரத்தோட சாப்பிடுறதால கண்ணீர் ஆனந்தகண்ணீரா முட்ட வாயிலே ஜலம் ஊற ஆஹா என்னா ஒரு டேஸ்ட்டு என்னா ஒரு டேஸ்டு. போ ராமு இப்படியெல்லாம் மூடை கெளப்பிகிட்டு :(( //
ஹி ஹி முட்டைத் தோசைதான் சாப்பிட்டிங்களா... அடுத்த தடவை போறேப்பா கறித்தோசை சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்க.. டேஸ்ட் எப்பிடியிருக்குன்னு????
//அட்ரெஸ்-லாம் நோட் பண்ணிக்கிட்டம்ல சீக்கிரமே அட்ரசையும் மாத்திருவோம்... //
வாங்க லி.ஸ்.வித்யா,
போயிச் சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க!!!! ;)
//வந்துட்டேன்!!//
வாப்பா கதிரு,
அதுக்குள்ளே சிம்ரன் ஆப்பகடையிலே ஆப்பமும், செட்டிநாட்டு சிக்கன் கொழம்பும் சாப்பிட்டு வந்தாச்சா...
;)
//அதுக்குள்ளே சிம்ரன் ஆப்பகடையிலே ஆப்பமும், செட்டிநாட்டு சிக்கன் கொழம்பும் சாப்பிட்டு வந்தாச்சா...//
இல்லிங்க அங்க சாயந்திரத்துக்கு மேல போனாதான் ஒரு கிக்கே இருக்கும் எதிர்த்தாப்புலயே பார்க் இருக்கு கொஞ்ச நேரம் சுத்தினோம்னான் கரெக்டா இருக்கும்.
நூறாவது பின்னூட்டமிடும் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு செட் கறித்தோசை எங்கிருந்தாலும் DHL இல் பார்சல் அனுப்பப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது.
யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.
//அம்பது போட்ட அண்ணன் ராமை வாழ்த்தி அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக ஒரு ஸ்மால் கவித...//
ஏய் யாருப்பா நீயி என்னை பழி வாங்கிமின்னே திரியிறேயா என்னா???? இதிலே கவிஜ வேறேயா????
//ஆயாகடைல அக்கவுண்ட் வச்ச அண்ணனே...
அறுசுவையை தரணி முழுதும் தேடும் காதல் மன்னனே...
வலைப்பதிவாளர் மாநாடுகளின் வாலிப கண்ணனே...
நீ பெங்களூரில் இருப்பதால் குளிர் ஆகிப்போச்சி
மருதையில் இல்லாது போனதால் தரையே வெடிச்சி போச்சி
கடைசி வரைக்கும் நீயே எங்களின் உயிர் மூச்சி
அடுத்த தேர்தலில் அண்ணன் தலைமையில் புடிச்சிடுவோம் ஆச்சி! ஆச்சி!! ஆச்சி!!!
பாசமுடன்
ராயல் ராம் ரசிகர் மன்ற தொண்டர்கள். //
மவனே என் கையிலே நீ சிக்கினே உன்னை பிச்சி பிடுவேன் பிச்சி!!.... கவிஜ ஒரு கேடா என்னோட மொகரை கட்டைக்கு...??? :(
//யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும். //
ஆஹா அடுத்த பிரச்சினையே கிளப்பியாச்சா??? இன்னும் அம்பது போட்ட ஆளே இன்னும் தெரியலே... இதிலே நூறாவது ஆளுக்கு கறித்தோசை பார்சல் DHLலேயா விளங்கிருமய்யா.... இல்லே நாறிரும்மய்யா!!!!!
;)
மே ஐ கம் இன்??
//யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.
//
100 மட்டும் தான் ஸ்பெஷலா?? எங்கள் தஙகரீகல்..ச்சே தங்க ராயல் எல்லாருக்கும் கறி தோசை பார்சல் அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்
//ஆஹா அடுத்த பிரச்சினையே கிளப்பியாச்சா??? இன்னும் அம்பது போட்ட ஆளே இன்னும் தெரியலே... //
கைப்பு தான்..இதிலென்ன சந்தேகம்?? வேற யாருன்னா முன்னாடி வந்து நின்னுடுவீங்களோ???? தூக்கிறுவோம்...
தல கைப்பு தற்கொலை படை எதுக்கு வச்சிருக்கோம்???
//மே ஐ கம் இன்?? //
ம் வாய்யா கப்பி,
//100 மட்டும் தான் ஸ்பெஷலா?? எங்கள் தஙகரீகல்..ச்சே தங்க ராயல் எல்லாருக்கும் கறி தோசை பார்சல் அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன் //
ஙொய்யாலே அந்த பார்சலை மொதல்லே மாண்டிவியா'க்கு தாய்யா அனுப்பி வைச்சு டெஸ்ட் பண்ணனும்... அது நல்லாயிருக்கா.... நாறிப்போயிருச்சான்னு???
:-)
//ஙொய்யாலே அந்த பார்சலை மொதல்லே மாண்டிவியா'க்கு தாய்யா அனுப்பி வைச்சு டெஸ்ட் பண்ணனும்... அது நல்லாயிருக்கா.... நாறிப்போயிருச்சான்னு???
:-)
//
நீங்க அனுப்பற பார்சலை எல்லாம் நாங்க தொறந்து சாப்பிடுவோம்னு வேற நினைச்சுட்டிருக்கீங்களா?? ஹய்யோ ஹைய்யோ ;))
//ஆயாகடைல அக்கவுண்ட் வச்ச அண்ணனே...
அறுசுவையை தரணி முழுதும் தேடும் காதல் மன்னனே...
வலைப்பதிவாளர் மாநாடுகளின் வாலிப கண்ணனே...//
தம்பி,
இயற்சீர் வெண்டளைக்கும் வெண்சீர் வெண்டளைக்கும் நடுவாப்புல ஒரு புளிமாங்கா மிஸ் ஆவுது பாரு. கவனிக்காம விட்டுட்டியா? அந்த வெண்பால இந்த வரியையும் சேத்துக்க.
ஆயாகடைல அக்கவுண்ட் வச்ச அண்ணனே...
அறுசுவையை தரணி முழுதும் தேடும் காதல் மன்னனே...
வலைப்பதிவாளர் மாநாடுகளின் வாலிப கண்ணனே...
மதுரை மண்ணில் பிறந்த மன்மதனே
இப்ப கரெக்டா இருக்கும் பாரு...நான் எதுக்கு சொல்றேன்னா...என்ன தான் நாம பப்ளிக் ரீச்சுக்காக லோக்கலா எழுதுனாலும்...இலக்கணம் நம்ம உயிர் மூச்சில்லையா?
//கைப்பு தான்..இதிலென்ன சந்தேகம்?? வேற யாருன்னா முன்னாடி வந்து நின்னுடுவீங்களோ???? தூக்கிறுவோம்...//
இப்போ புலி இல்லேன்னு நீ அதிகமா பேசுறேன்னு நினைக்கிறேன். புலி வர்றட்டும் பேசிப்பார்க்கலாம்.
(பி.கு:- புலி பசிக்குதுன்னு புளியோதரை சாப்பிடப்போயிருக்கு)
//தல கைப்பு தற்கொலை படை எதுக்கு வச்சிருக்கோம்??? //
அடப்பாவிகளா இது தல'க்கு தெரியுமா??? ;)
//இப்ப கரெக்டா இருக்கும் பாரு...நான் எதுக்கு சொல்றேன்னா...என்ன தான் நாம பப்ளிக் ரீச்சுக்காக லோக்கலா எழுதுனாலும்...இலக்கணம் நம்ம உயிர் மூச்சில்லையா?//
தலன்னா தலதான்!
எல்லாத்திலயும் புலியா இருக்கியே எப்படி தல?
//தம்பி,
இயற்சீர் வெண்டளைக்கும் வெண்சீர் வெண்டளைக்கும் நடுவாப்புல ஒரு புளிமாங்கா மிஸ் ஆவுது பாரு. கவனிக்காம விட்டுட்டியா? அந்த வெண்பால இந்த வரியையும் சேத்துக்க.//
அய்யோ தல உனக்கு என்னா ஆச்சு.. .தீடீரென்னு வெண்பா, கருப்பா'ன்னு கிளம்பிட்டே.... கொத்ஸ்'கிட்டே சேர்ந்திருக்கிறே கடைசி பெஞ்சு விசிலடிச்சான் ஸ்டுடண்ட் நீதானா அது... ? :)
//ஆயாகடைல அக்கவுண்ட் வச்ச அண்ணனே...
அறுசுவையை தரணி முழுதும் தேடும் காதல் மன்னனே...
வலைப்பதிவாளர் மாநாடுகளின் வாலிப கண்ணனே...
மதுரை மண்ணில் பிறந்த மன்மதனே//
மண்ணாங்கட்டின்னு எங்கேயாவது சேர்த்துக்கோ... சரியா இருக்கும் தளை தட்டமே!!!
///இப்ப கரெக்டா இருக்கும் பாரு...நான் எதுக்கு சொல்றேன்னா...என்ன தான் நாம பப்ளிக் ரீச்சுக்காக லோக்கலா எழுதுனாலும்...இலக்கணம் நம்ம உயிர் மூச்சில்லையா? //
இல்லே உன்னையெல்லாம் வண்டு கடிச்சிருக்க கூடாது.. பெரிய டைனோசர் கடிச்சி வைச்சிருக்கணும்...!!! ;)))
//தலன்னா தலதான்!
எல்லாத்திலயும் புலியா இருக்கியே எப்படி தல?//
ஐயோ ரொம்ப புகழறியே தம்பி! கூச்சமா இருக்குப்பா.
சரி இப்போதைக்கு ராயல் நூறு அடிக்க ஒதவி பண்ணுவோம். 100 ஆச்சா ராயலு?
//தல 100 போடுவதற்காக இது 99!//
அயோக்கிய அப்ரெண்டீஸு,
இப்படி கமெண்டு போட்டு நீ 100 அடிச்சிட்டியே...
:(
ராயலு மறுபடியும் என்னைய இப்படி அசிங்கப் படுத்திட்டியே?
////தல 100 போடுவதற்காக இது 99!//
அயோக்கிய அப்ரெண்டீஸு,
இப்படி கமெண்டு போட்டு நீ 100 அடிச்சிட்டியே...
:(//
கமெண்டை எல்லாம் வேற அழிக்கிறியா? பின்னூட்ட போலிஸ்கார் வந்தா ஒனக்கு தர்ட் டிகிரி தான். மறந்துடாதே. அப்புறம் கறி தோசை இல்ல களி தான் கெடக்கும்.
//அயோக்கிய அப்ரெண்டீஸு,
இப்படி கமெண்டு போட்டு நீ 100 அடிச்சிட்டியே...
:(
ராயலு மறுபடியும் என்னைய இப்படி அசிங்கப் படுத்திட்டியே? //
சங்கத்தின் சிங்கங்களே இதுல கூட்டு சதி எதுவும் இல்ல!
தல ஏதேச்சையா வந்தாரு 50ம் போட்டாரு(?), 100ம் போட்டாரு
அதான் தல...
எப்போ வருவாரு எப்டி வருவாருன்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்தில கரெக்டா வந்திடுவாரு!!
//மவனே என் கையிலே நீ சிக்கினே உன்னை பிச்சி பிடுவேன் பிச்சி!!.... கவிஜ ஒரு கேடா என்னோட மொகரை கட்டைக்கு...??? :( //
நான் சொல்லல..
ராயலுக்கு தன்னடக்கம் ஜாஸ்தின்னு! :)
ஆட்டோ சென்று கொண்டிருக்கிறது 100 போட்ட தலையை அழைத்து வர..
வந்த வுடனே நொங்கிற வேண்டியதுதான்...
கறிதோசைய சொன்னேம்பா! தல மேல கை வெக்கிற அளவுக்கு யாருக்கு தெகிரியம் இருக்கு?
//அடப்பாவிகளா இது தல'க்கு தெரியுமா??? ;) //
இந்த சின்ன சின்ன மேட்டர் எல்லாம் தலக்கி தெரிஞ்சா கோவப்படுவாரு.
உங்களுக்குதான் தலய பத்தி தெரியுமே.
அவருக்கு கோவம் வந்தா பூமியே தாங்காது, ரத்த ஆறு ஓடும்..
வாழ்த்தியமைக்கு நன்றி ராயலு!
உனக்கும் வாழ்த்துக்கள்(100 அடிச்சதுக்கு)!!!
அன்புடன்...
சரவணன்.
//அயோக்கிய அப்ரெண்டீஸு,
இப்படி கமெண்டு போட்டு நீ 100 அடிச்சிட்டியே...
:(//
தல உனக்காக இதுகூட செய்யாட்டி என்னா நாங்கெல்லாம் உசுரோட வாழ்ந்து என்னா புண்ணியம்????
;)
//கமெண்டை எல்லாம் வேற அழிக்கிறியா? பின்னூட்ட போலிஸ்கார் வந்தா ஒனக்கு தர்ட் டிகிரி தான். மறந்துடாதே. அப்புறம் கறி தோசை இல்ல களி தான் கெடக்கும். //
ஆமா இப்போ மட்டும் என்னா இங்கே வாழுது??? வெல்லசாம்பாரும், மைதா ரொட்டியும் அந்த களி'க்குதான் சமம் தான்!!!
:-(((((
//வாழ்த்தியமைக்கு நன்றி ராயலு!//
இந்த நன்றிக்கு நன்றி!!!
//உனக்கும் வாழ்த்துக்கள்(100 அடிச்சதுக்கு)!!!
அன்புடன்...
சரவணன். //
இப்போ வாழ்த்துக்களுக்கு நன்றி!!!!
//நல்ல சுவையான பதிவு //
வருகைக்கும், பாராட்டுதலுக்கும் நன்றி காண்டீபன்!!
கால், வால் , ஈரல் என்றே வருகின்றதே..இலை, குழையில் எதாச்சும் இல்லையா?
//கால், வால் , ஈரல் என்றே வருகின்றதே..இலை, குழையில் எதாச்சும் இல்லையா? //
வாங்க தூயா... நல்ல அழகான வித்தியாசமான பெயர்.
நீங்க கேட்கிறதே பத்தியும் பதிவு போட்டுடேன்ங்க.... :)
Post a Comment