அபி அப்பாவும் நானும்....
என் சோகக் கதையே கேளு தாய்குலமே'கிற பாட்டுதான் இப்போ டெய்லி வேலை செய்யுற இடத்திலே கேட்கிட்டு இருக்கேன். கொஞ்சநாளுக்கு முன்னாடியே சொந்த செலவிலே போயி செய்வினை வைச்சிக்கிட்டே கணக்கா எங்க கம்பெனி நெட்வொர்க்'லே செக்யூரிட்டி அதிகப்படுத்தமின்னு வெள்ளக்கார தொரை'க்கு மயில் அனுப்ப, அவன் அடுத்த பத்தே நாளிலே கூகிள் சேட்,மெயில்,யாகூ மெயில்.பிளாக்கிங்க்'ன்னு எல்லாத்துக்கும் ஃபீயுஸ் பிடுங்கிட்டான். அதிலேயிருந்து ஆபிஸிலே வேலையை பார்க்க முடியலைங்க. என்னிக்காவது ஏதாவது கிளண்ட் நெட்வொர்க் கிடைச்சு சேட்'லே லாகின் பண்ணினப்போ நம்ம அமீரகத்து கைப்புள்ள வந்து பிங் பண்ணினாரு... விட்டுருவோமா அவரே???
அபி அப்பா:- "என்னாய்யா? ஒனக்குள்ளே அப்பிடியொரு சோகம்... இந்த பாட்டெல்லாம் கேக்குறே? அதை கஸ்டம் மெசஜா வேற போட்டுருக்கே?"
நான்:- "அண்ணே இந்த பரந்த விரிந்த பெண்களூரூலே எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் இல்லேண்ணே??"
அ.அ:- "அப்பிடிண்ணே நீங்க எனக்கொரு கேர்ள்ஃபிரண்ட் வேணுமிடா'ன்னு பாய்ஸ் பாட்டுலே கேட்கனும்? நீ ஏன் 1986ல் வந்த பாக்கியராஜ்/சுலக்ஷனா நடிச்ச தூறல் நின்னு போச்சு படத்திலே இருந்து பாட்டு கேட்கிறே? அதுவும் சுலக்ஷனா அறிமுகமான அதுமில்லாமே அவங்களுக்கு அப்போ 16 வயசு'ப்பா! அந்த பாட்டே கூட நம்பியார்/பாக்கியராஜ் பாடுவாங்க. அப்புறம் நம்ம செந்தில் கூட கோரஸ் பாடுவாரு..பாக்கியராஜின் மப்லர்&கழி சண்டை பேமஸ் அந்த படத்துலஇன்னும் வேண்டுமா டீடெய்ல்???மூச்சு வாங்குது??
நான்:- "அண்ணே எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம்? ஒன்னே கேட்டா பதினொண்ணு'னு சொல்லுறீங்க??"
அ.அ:- "தம்பி அதெல்லாம் நம்ம தங்கமணி'கிட்டே தலையிலே அடிவாங்கதினாலே இப்போ கொஞ்சம் தெளிவா இருக்கு... கொஞ்சம் கூட கலங்கவே இல்ல...."
நான்:- "அண்ணே! கல்யாணம் ஆகிட்டா அப்பிடியெல்லாம் கலங்கி போயிருவோமா?"
அ.அ:- "யோவ் தம்பி அப்பிடியெல்லாம் வெவகாரமா'லாம் கேள்வி எழுப்பப்பிடாது! புரியுதா? அடிவாங்கினாலும் சரி பூரிகட்டையோ இல்லே சில்வர் கரண்டி ஒடைச்சி போனாலும் வெளியே வர்றப்போ ஒன்னுமே நடக்காத மாதிரி இருந்துரணும்... அவ்வளோதான் அப்புறம் எப்பிடி நாமே கலங்கிருக்கோமின்னு மத்தவங்களுக்கு தெரியப்போகுது?"
நான்:- "துருபிடிச்ச இரும்பு பொட்டி மாதிரி இருந்த கண் ரெண்டேயும் நீங்க வாக்குமூலம்கிற சாவியாலே தொறந்திட்டிங்கண்ணே?" ஏண்ணே நீங்க ஆல் இந்தியா ரேடியோ'லே நீயூஸ் வாசிக்கிறதுக்கு அப்ளை பண்ணதா கேள்விப்பட்டேனே? அது உண்மையா??"
அ.அ:- "யோவ் இப்போ நீ பாரட்டுறீயா? இல்ல கலாய்க்கீறீயா?? ஒனக்கெல்லாம் நான் வாங்கிறமாதிரி வாங்கினதாதான் புத்தி வரும் ஆமாம் சொல்லிட்டேன்!"
நான்:- "அண்ணே! எங்கவீட்டிலே பொண்ணு பார்க்கபோறேன்னு எங்க ஊருக்குள்ளே கலவரம் பண்ணிட்டு இருக்காங்க..."
அ.அ:- "ஓ அப்பிடியா! நான் வேணுமின்னா நல்ல பொண்ணா பார்த்து சொல்லவா?"
நான்:- "அண்ணே அது எப்பிடிண்ணே? உங்களுக்கு நல்ல பொண்ணு பார்க்க தெரியும்?"
அ.அ:- "யோவ் தப்பா புரிஞ்சுக்காதே? நான் சொல்லவந்தது இப்போ என்னைமாதிரி ஒனக்கும் நல்ல பொண்ணா? இப்பொ என்னை உங்க அண்ணி அடிச்சி தொவைச்சி காயப்போட்டாலும் மதியம் சாப்பிடுறதுக்கு சோத்தை தட்டிலே வைப்பாங்க... அந்தமாதிரி நல்ல பொண்ணா'ன்னு சொல்ல வந்தேன்....
நான்:- "எப்பிடிண்ணே இம்புட்டு சோகத்தையும் தாங்கிட்டு சிரிப்பா'லாம் எழுதுறீங்க?"
அ.அ:- "அப்பிடி இல்லாமே உள்ளுக்குள்ளே இருக்கிர சோகத்தை பூராவும் எழுதுனானே ஊருக்குள்ளே போறேப்போ சோத்துக்கே ஜிஞ்சா அடிக்கனும்... சரிய்யா, ஒனக்கு பார்க்கிற பொண்ணு நம்ம தீபா வெங்கட் மாதிரி ஒசரமா செவப்பா பார்த்திருவோமா?"
நான்:- "என்னா? அந்தம்மா நான் பத்தாவது படிக்கிறோப்பே ஏதோ நாடகத்திலே மூக்கு சிந்திட்டு இருந்துச்சு, இன்னமு அதை தான் பண்ணிட்டு இருக்கு? அவங்களை மாதிரி'ன்னு சொல்லுறீங்களே? ஒங்களுக்கே நல்லாயிருக்கா?"
அ.அ:- "ஐயா. ராசா அந்த அம்மணிக்கு என்னாய்யா? அவங்களுக்கு இன்னமும் கல்யாணம் கூட ஆகலை.... அவங்கமட்டும் ஹீம்'னு ஒத்த வார்த்தை சொல்லட்டும்! நான் கலியாணம் கட்டிக்கிறேன்."
நான்:- "...."
அ.அ:- "என்னாய்யா ஒன்னுமே சொல்லமாட்டங்கிறே?"
நான்:- "இல்ல ஒங்க வீட்டு நம்பரை தேடிட்டு இருந்தேன்... இதானான்னு பார்த்து சொல்லுங்க... 98*********.. அட ரிங் போகுது.. இப்போ நீங்க சொன்னத அப்பிடியே வரிக்கு வரி அண்ணி'கிட்டே சொல்லுறேன்"
அ.அ:- "யோவ் நல்ல இருக்கிற குடும்பத்திலே குண்டு வைக்காதீய்யா? அய்யய்யோ இங்க இப்போ மொபல் சிக்னல் வேற கிடைக்கலேயே?? ஏதாவது சொல்லி கலவரத்தை மூட்டி விட்டுறாதேய்யா?"
29 comments:
என்னமாதிரி இளவட்டம் பாவனா மேல ஆசைப்படறது நியாயம். அவருக்கு ஏன் இந்த வயசில தீபா வெங்கட்டு மேல அம்புட்டு பாசம்??
என்னோட கருத்து என்னன்னா?
செத்த கிளிக்கு எதுக்குய்யா சிங்காரம்??
தம்பி ராம்! நல்லா இருப்பா நல்ல இருப்பா! ஆப்பு யாருக்கு வைக்க போறியோ அவங்களை விட்டே சீவி தர சொல்லும் உன் டெக்னிக் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! வெல்டன் கீப் இட் ஆப்பு!;-))
ஆனா ஒன்னு! இனி சேட்டுல நான் வாயே தொறக்க மாட்டேன் உன் கிட்ட!
தம்பி உனக்கு இருக்குடீ!
கிவ் அண்ட் டேக் பாலிசியா :)))
அ.அ:- "யோவ் தம்பி அப்பிடியெல்லாம் வெவகாரமா'லாம் கேள்வி எழுப்பப்பிடாது! புரியுதா? அடிவாங்கினாலும் சரி பூரிகட்டையோ இல்லே சில்வர் கரண்டி ஒடைச்சி போனாலும் வெளியே வர்றப்போ ஒன்னுமே நடக்காத மாதிரி இருந்துரணும்... அவ்வளோதான் அப்புறம் எப்பிடி நாமே கலங்கிருக்கோமின்னு மத்தவங்களுக்கு தெரியப்போகுது?""
அபி அப்பாவின் அனுவத்தை எல்லாம் புக்கா போட்டா எப்படி இருக்கும்?
நான்:- "அண்ணே இந்த பரந்த விரிந்த பெண்களூரூலே எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் இல்லேண்ணே??"
நீங்க பார்க கொயந்த புள்ள மாதிரி இருக்கீங்க தல பேசாம மீசைய வரைஞ்சுடுங்க:)
அபி அப்பா said...
ஆனா ஒன்னு! இனி சேட்டுல நான் வாயே தொறக்க மாட்டேன் உன் கிட்ட!
சேட்டுல வாய் தொறக்க மாட்டேன்
மார்வாடில வாய் தொறக்க மாட்டேன்னு கிட்டு ...எப்பவும் ஓப்பன்லதானே இருக்கு அது எப்ப குளோஸ் செய்யுறீங்க
//என்னமாதிரி இளவட்டம் பாவனா மேல ஆசைப்படறது நியாயம்.//
ஏலேய் கதிரு,
ஒன்னையே தான் அந்த பாவனா தான் அண்ணா'ன்னு சொல்லிருச்சே அப்புறம் என்ன இன்னமும்???
ஆஹா, ஆஹா, ரொம்ப நல்லா இருக்கு! அபி அப்பா நிஜமாவே இப்படித் தான் பேசுவார், அது தெரியும், ஆனால் உங்களுக்கு கர்ல் ஃபிரண்டையே இல்லைனு சொன்னா நம்ப முடியவில்லை, நம்ப முடியவில்லை, நம்ப முடியவில்லை, ரஞ்சனினு ஒரு ராகம் இருக்கே அது தெரியுமா? சிவரஞ்சனி படம் பார்த்தாச்சா? மனோரஞ்சிதம் பூனு சொன்னால் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு கேள்விப் பட்டேனே? சிபி, சிபி, எங்கே ஆளே காணோம்? இந்த ராயல் சொல்ற பொய்யை உடைங்க!
/தம்பி ராம்! நல்லா இருப்பா நல்ல இருப்பா! ஆப்பு யாருக்கு வைக்க போறியோ அவங்களை விட்டே சீவி தர சொல்லும் உன் டெக்னிக் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! வெல்டன் கீப் இட் ஆப்பு!;-))//
ஹி ஹி .... என்னாண்ணே, இதுக்கே'வா...
இன்னொரு பார்ட் போடலாமின்னு இருக்கேன்.. :)
/ஆனா ஒன்னு! இனி சேட்டுல நான் வாயே தொறக்க மாட்டேன் உன் கிட்ட!//
அப்பிடியா... :)
/./தம்பி உனக்கு இருக்குடீ!//
கதிரு மறக்காமே நாளைக்கு போயி வாங்கிக்கோ...
அண்ணே என்னோமோ இருக்குன்னு சொல்லுறாரு.. :)
/கப்பி பய said...
கிவ் அண்ட் டேக் பாலிசியா :))) ///
கப்பி நிலவா,
ஒனக்கும் இதேமாதிரி ஒரு நாள் இருக்குடி... அந்த நாள் எங்க எல்லாருக்கும் திருநாள்.. :)
//அபி அப்பாவின் அனுவத்தை எல்லாம் புக்கா போட்டா எப்படி இருக்கும்?//
பொஸ்தக கடை வாசலிலே பெரிய கியூ நிக்கும்..
இந்த ஹாரிபாட்டர் பொஸ்தகத்துக்காக ஒலகமே காத்துக் கெடந்த மாதிரி... :))
//நீங்க பார்க கொயந்த புள்ள மாதிரி இருக்கீங்க தல பேசாம மீசைய வரைஞ்சுடுங்க:)//
அப்பிடியெல்லாம் வரைஞ்சிட்டா தண்ணி பட்டா அழிச்சிறாதா???
//சேட்டுல வாய் தொறக்க மாட்டேன்
மார்வாடில வாய் தொறக்க மாட்டேன்னு கிட்டு ...எப்பவும் ஓப்பன்லதானே இருக்கு அது எப்ப குளோஸ் செய்யுறீங்க//
குசும்பா,
சூப்பரு...
/ரஞ்சனினு ஒரு ராகம் இருக்கே அது தெரியுமா? சிவரஞ்சனி படம் பார்த்தாச்சா? மனோரஞ்சிதம் பூனு சொன்னால் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு கேள்விப் பட்டேனே? சிபி, சிபி, எங்கே ஆளே காணோம்? இந்த ராயல் சொல்ற பொய்யை உடைங்க!///
தலைவலி,
யாராவது ஒங்கிட்டே இதே கேட்டாங்களா??
Grrrrrrrrrrrrrrrrrr
அட ராம் என்னா இது உங்களுக்கு ஒரு கேர்ள் ப்ரெண்டு இல்லியா?? ஹெஹெஹெஹெஹே இதுதாங்க நம்பர் ஒன் ஜோக் !!:))))
//அ.அ:- "ஐயா. ராசா அந்த அம்மணிக்கு என்னாய்யா? அவங்களுக்கு இன்னமும் கல்யாணம் கூட ஆகலை.... அவங்கமட்டும் ஹீம்'னு ஒத்த வார்த்தை சொல்லட்டும்! நான் கலியாணம் கட்டிக்கிறேன்."
//
ஆத்தீ... அ.அ.க்கு வாங்குற அடி பத்தலையாக்கும்.
//அட ராம் என்னா இது உங்களுக்கு ஒரு கேர்ள் ப்ரெண்டு இல்லியா?? ஹெஹெஹெஹெஹே இதுதாங்க நம்பர் ஒன் ஜோக் !!:))))//
வாங்க பாண்டிண்ணே,
ரொம்பநாள் கழிச்சு நம்ம பக்கத்திலே வந்தீருக்கீங்க.... ??
ஜோக்'ம் இல்ல... கேக்'ம் இல்ல. .... அதுதான் உண்மைங்க... :)
//ஆத்தீ... அ.அ.க்கு வாங்குற அடி பத்தலையாக்கும்.//
காட்டாறு,
எம்புட்டு வாங்கினாலும் தொடச்சிட்டு போயிட்டே இருப்போமில்ல... :))
அபி அப்பா
என்னாப்பா நடக்குது இங்க
ஒன்ன நம்பி நான் பல மேட்டர் சொல்லிட்டேன் எல்லாத்தையும் அழிச்சிடு...:(
எச்சூஸ் மீ, என்ன நடக்குது இங்கே, இதுக்கு ஏதோ வரலாறு, புவியியல் இருக்கும் போல இருக்கே. என்னான்னு சொல்லுங்க ப்ளீஸ்
அய்த்தான் உங்களுக்கு என் மேல இம்புட்டு ஆசையா
தெரியாம போயிட்டே
தெரிஞ்சிருந்தா ராமை லவ் பண்ணியிருப்பேனா...!!!!
செத்த கிளிக்கு எதுக்குய்யா சிங்காரம்??
//
யார பாத்து செத்த கிளி அப்படினு சொல்லுற என்னையா அய்த்தானையா
எம்புட்டு வாங்கினாலும் தொடச்சிட்டு போயிட்டே இருப்போமில்ல... :))
//
சிங்கமுனா அப்படிதான் இத வேற வெளியில சொல்லிகிட்டு
:)
ரஞ்சனி said...
:)
//
ஒனக்கு சிரிப்பாடி கேட்குது
இருக்குடி உனக்கு ஆப்பு
நாங்க அடிச்சி ஆடலாமா?
அபி அப்பாவின் அனுவத்தை எல்லாம் புக்கா போட்டா எப்படி இருக்கும்?
//
புக்கா போட முடியுமா..???
அவரு தொறந்தா முட மாட்டாரே..வாயை
புக்கு பத்தாதே என்ன கொடுமை ராம்
\\நான்:- "அண்ணே! எங்கவீட்டிலே பொண்ணு பார்க்கபோறேன்னு எங்க ஊருக்குள்ளே கலவரம் பண்ணிட்டு இருக்காங்க..."\\
மாப்பி ராம்க்கு ரெண்டு பூரிகட்டை பார்சல் ;-)))
Post a Comment