Monday, August 13, 2007

பெங்களூரூ மலர் கண்காட்சி - படங்கள்

சென்ற வார இறுதியில் பெங்களூரூ லால்பார்க்'லில் நடைப்பெற்று கொண்டு இருக்கும் மலர் கண்காட்சிக்கு சென்று வந்த பொழுது எனது மூணாவது கண்ணில் சிக்கிய படங்களில் சில..



வெள்ளை செம்பருத்தியா??



வண்ணகலவை மலர்...



கிளிக்கும் போது பறக்க ஆரம்பித்த தேனீ....




சிவப்பு.....??


மஞ்சள் மலர்



கொள்ளை அழகு...


















மலர் விண்கலம்....






மலர்களினாலே காதல் சின்னம்...




நீரூற்று'க்குள் மலர்கள்.

Thursday, August 9, 2007

அபி அப்பாவும் நானும்....

என் சோகக் கதையே கேளு தாய்குலமே'கிற பாட்டுதான் இப்போ டெய்லி வேலை செய்யுற இடத்திலே கேட்கிட்டு இருக்கேன். கொஞ்சநாளுக்கு முன்னாடியே சொந்த செலவிலே போயி செய்வினை வைச்சிக்கிட்டே கணக்கா எங்க கம்பெனி நெட்வொர்க்'லே செக்யூரிட்டி அதிகப்படுத்தமின்னு வெள்ளக்கார தொரை'க்கு மயில் அனுப்ப, அவன் அடுத்த பத்தே நாளிலே கூகிள் சேட்,மெயில்,யாகூ மெயில்.பிளாக்கிங்க்'ன்னு எல்லாத்துக்கும் ஃபீயுஸ் பிடுங்கிட்டான். அதிலேயிருந்து ஆபிஸிலே வேலையை பார்க்க முடியலைங்க. என்னிக்காவது ஏதாவது கிளண்ட் நெட்வொர்க் கிடைச்சு சேட்'லே லாகின் பண்ணினப்போ நம்ம அமீரகத்து கைப்புள்ள வந்து பிங் பண்ணினாரு... விட்டுருவோமா அவரே???

அபி அப்பா:- "என்னாய்யா? ஒனக்குள்ளே அப்பிடியொரு சோகம்... இந்த பாட்டெல்லாம் கேக்குறே? அதை கஸ்டம் மெசஜா வேற போட்டுருக்கே?"

நான்:- "அண்ணே இந்த பரந்த விரிந்த பெண்களூரூலே எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் இல்லேண்ணே??"

அ.அ:- "அப்பிடிண்ணே நீங்க எனக்கொரு கேர்ள்ஃபிரண்ட் வேணுமிடா'ன்னு பாய்ஸ் பாட்டுலே கேட்கனும்? நீ ஏன் 1986ல் வந்த பாக்கியராஜ்/சுலக்ஷனா நடிச்ச தூறல் நின்னு போச்சு படத்திலே இருந்து பாட்டு கேட்கிறே? அதுவும் சுலக்ஷனா அறிமுகமான அதுமில்லாமே அவங்களுக்கு அப்போ 16 வயசு'ப்பா! அந்த பாட்டே கூட நம்பியார்/பாக்கியராஜ் பாடுவாங்க. அப்புறம் நம்ம செந்தில் கூட கோரஸ் பாடுவாரு..பாக்கியராஜின் மப்லர்&கழி சண்டை பேமஸ் அந்த படத்துலஇன்னும் வேண்டுமா டீடெய்ல்???மூச்சு வாங்குது??

நான்:- "அண்ணே எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம்? ஒன்னே கேட்டா பதினொண்ணு'னு சொல்லுறீங்க??"

அ.அ:- "தம்பி அதெல்லாம் நம்ம தங்கமணி'கிட்டே தலையிலே அடிவாங்கதினாலே இப்போ கொஞ்சம் தெளிவா இருக்கு... கொஞ்சம் கூட கலங்கவே இல்ல...."

நான்:- "அண்ணே! கல்யாணம் ஆகிட்டா அப்பிடியெல்லாம் கலங்கி போயிருவோமா?"

அ.அ:- "யோவ் தம்பி அப்பிடியெல்லாம் வெவகாரமா'லாம் கேள்வி எழுப்பப்பிடாது! புரியுதா? அடிவாங்கினாலும் சரி பூரிகட்டையோ இல்லே சில்வர் கரண்டி ஒடைச்சி போனாலும் வெளியே வர்றப்போ ஒன்னுமே நடக்காத மாதிரி இருந்துரணும்... அவ்வளோதான் அப்புறம் எப்பிடி நாமே கலங்கிருக்கோமின்னு மத்தவங்களுக்கு தெரியப்போகுது?"

நான்:- "துருபிடிச்ச இரும்பு பொட்டி மாதிரி இருந்த கண் ரெண்டேயும் நீங்க வாக்குமூலம்கிற சாவியாலே தொறந்திட்டிங்கண்ணே?" ஏண்ணே நீங்க ஆல் இந்தியா ரேடியோ'லே நீயூஸ் வாசிக்கிறதுக்கு அப்ளை பண்ணதா கேள்விப்பட்டேனே? அது உண்மையா??"

அ.அ:- "யோவ் இப்போ நீ பாரட்டுறீயா? இல்ல கலாய்க்கீறீயா?? ஒனக்கெல்லாம் நான் வாங்கிறமாதிரி வாங்கினதாதான் புத்தி வரும் ஆமாம் சொல்லிட்டேன்!"

நான்:- "அண்ணே! எங்கவீட்டிலே பொண்ணு பார்க்கபோறேன்னு எங்க ஊருக்குள்ளே கலவரம் பண்ணிட்டு இருக்காங்க..."

அ.அ:- "ஓ அப்பிடியா! நான் வேணுமின்னா நல்ல பொண்ணா பார்த்து சொல்லவா?"

நான்:- "அண்ணே அது எப்பிடிண்ணே? உங்களுக்கு நல்ல பொண்ணு பார்க்க தெரியும்?"

அ.அ:- "யோவ் தப்பா புரிஞ்சுக்காதே? நான் சொல்லவந்தது இப்போ என்னைமாதிரி ஒனக்கும் நல்ல பொண்ணா? இப்பொ என்னை உங்க அண்ணி அடிச்சி தொவைச்சி காயப்போட்டாலும் மதியம் சாப்பிடுறதுக்கு சோத்தை தட்டிலே வைப்பாங்க... அந்தமாதிரி நல்ல பொண்ணா'ன்னு சொல்ல வந்தேன்....

நான்:- "எப்பிடிண்ணே இம்புட்டு சோகத்தையும் தாங்கிட்டு சிரிப்பா'லாம் எழுதுறீங்க?"

அ.அ:- "அப்பிடி இல்லாமே உள்ளுக்குள்ளே இருக்கிர சோகத்தை பூராவும் எழுதுனானே ஊருக்குள்ளே போறேப்போ சோத்துக்கே ஜிஞ்சா அடிக்கனும்... சரிய்யா, ஒனக்கு பார்க்கிற பொண்ணு நம்ம தீபா வெங்கட் மாதிரி ஒசரமா செவப்பா பார்த்திருவோமா?"

நான்:- "என்னா? அந்தம்மா நான் பத்தாவது படிக்கிறோப்பே ஏதோ நாடகத்திலே மூக்கு சிந்திட்டு இருந்துச்சு, இன்னமு அதை தான் பண்ணிட்டு இருக்கு? அவங்களை மாதிரி'ன்னு சொல்லுறீங்களே? ஒங்களுக்கே நல்லாயிருக்கா?"

அ.அ:- "ஐயா. ராசா அந்த அம்மணிக்கு என்னாய்யா? அவங்களுக்கு இன்னமும் கல்யாணம் கூட ஆகலை.... அவங்கமட்டும் ஹீம்'னு ஒத்த வார்த்தை சொல்லட்டும்! நான் கலியாணம் கட்டிக்கிறேன்."

நான்:- "...."

அ.அ:- "என்னாய்யா ஒன்னுமே சொல்லமாட்டங்கிறே?"

நான்:- "இல்ல ஒங்க வீட்டு நம்பரை தேடிட்டு இருந்தேன்... இதானான்னு பார்த்து சொல்லுங்க... 98*********.. அட ரிங் போகுது.. இப்போ நீங்க சொன்னத அப்பிடியே வரிக்கு வரி அண்ணி'கிட்டே சொல்லுறேன்"

அ.அ:- "யோவ் நல்ல இருக்கிற குடும்பத்திலே குண்டு வைக்காதீய்யா? அய்யய்யோ இங்க இப்போ மொபல் சிக்னல் வேற கிடைக்கலேயே?? ஏதாவது சொல்லி கலவரத்தை மூட்டி விட்டுறாதேய்யா?"

Thursday, August 2, 2007

PORTRAITS - போட்டிக்கு தான்..........

விடுப்பட்ட சிங்கம் #1




#2




போன வருசம் எடுத்த போட்டோ'வுக்கு இந்த வருசம் ரிவெஞ்சா???

கவுண்டமணி படத்திலே வர்ற வசனத்தாங்கய்யா ஞாபகத்துக்கு வருது.... :(


எங்ககிட்டேயும் கேமரா இருக்குல்லே.... :)

Monday, July 16, 2007

பெங்களூரூ வலைப்பதிவர் சந்திப்பு - அனுபவங்கள்

சென்ற சனிக்கிழமை பெங்களூரூ லால்பார்க் பிளாக்கர் மீட்டிங், அதுவும் காலை 10.30 மணிக்கே எல்லாரும் வந்துருங்கன்னு அறிவிப்பு தட்டியெல்லாம் வைச்சிட்டு நான் போயி சேர்த்ததே 11.00 மணிக்குதாங்க. வெள்ளிக்கிழமை அதுவுமா நைட் பத்தரை மணி வரை ஆணிப்பிடுங்கிற இடத்திலே பெரிய பிராப்ளம், அதை சால்வ் பண்ணிட்டு போங்க'ன்னு டேமேஜர் சொன்னதுனாலே அதை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து நம்ம இயக்குனர் கூட சிறப்பு சந்திப்பு முடிச்சிட்டு கொஞ்ச நேரத்திலே அதாவது நடுநிசி 6 மணிக்கு செல்லா'கிட்டே இருந்து "நான் இப்போ ரயில்வே ஸ்டேசனிலே நிக்கிறேன், உங்க ரூம்'க்கு வர்றதுக்கு ஆட்டோகாரன்'கிட்டே சொல்லுங்க"ன்னு போன் வந்ததும் எழுந்துருச்சு உட்கார்ந்தது தான். அடுத்த பத்து நிமிசத்திலே நம்ம ரூம் பக்கத்திலே இருக்கிற பஸ்ஸ்டாண்ட்'லே வந்துட்டார், அவரே கூப்பிட்டு வந்தா மனுசன் வந்ததிலே லேப்டாப்'ஐ எடுத்து வைச்சிட்டு பவர்பாயிண்ட் ஸ்லைட் பண்ண ஆரம்பிச்சிட்டார். எனக்கு லைட்டா கண்ணை கட்ட கொஞ்சம் நேரம் தூங்கிட்டேன்.

அவரு அதை முடிச்சிட்டு எழுப்பி விட ரெண்டு பேரும் குளிச்சிட்டு கிளம்பி ஹோட்டலுக்கு போயி சாப்பிடறதுக்குள்ளே பத்து போன், இம்சைஅரசியும்,ஜியா'வையும் சாந்திநகர் பஸ்ஸ்டாண்ட் வரச்சொல்லி அவங்கிட்டே ஆசிரமத்து குழந்தைகளை பார்க்க போறப்போ வாங்கிட்டு போக சாக்லெட்ஸ்'ஐ பிக்பஜார்'லே வாங்கிட்டு வரச்சொல்லி அங்கயிருந்து லால்பார்க் கேட்'க்கு போறதுக்குள்ளே தீபா, பிரியா'கிட்டே இருந்து அடுத்தடுத்து போன் கால்ஸ், அதைவிட நம்ம மொக்கை மகராஜர் ரெட்பயருகிட்டே இருந்து போனிலே அவருக்கு துணையா அரைபிளேடு'ன் மறுஅவதாரமான மோகன்தாஸ் கவிஜ மடம் கட்டிய மாவீரன் ஆசீப்'ம் லால்பார்க் உள்ளே வந்து விட்டதாகவும் காத்திருக்கும் கொடுமையை சகித்து கொள்வதற்காக சிலபல கண்கவர் ஆட்டங்களை ரசித்து கொண்டிருக்கிறோமின்னு நேரடி வர்ணனை வேற....

கிளாஸ் ஹவுஸிலே தீபா,பிரியா'வும் பக்கத்து பக்கத்திலே உட்கார்ந்திருந்தாலும் ஒருத்தர்கொருத்தர் அறிமுகம் இல்லாத காரணத்தினால் பேசாமல் இருந்தனர். நானும் செல்லாவும் அங்கு போயி சேர்ந்ததும், ரெடபயர்,மோகன்,அண்ணாச்சி, எல்லாரும் அறிமுகப்படுத்தி கொண்டோம். அடுத்த கொஞ்சநேரத்திலே முதல் நாள் கையெழுத்தை பால்கோவா'வோட சாப்பிட்ட களைப்போடு ராசா வந்து சேர மழை பிடித்து கொண்டது, எல்லாரும் ஒதுங்க இடம் தேடி கண்ணாடி வீட்டுக்குள்ளே ஓட, மழைவிட்டதும் செக்யூரிட்டி அங்கயிருந்து விரட்டுனதும் ஒரு பெஞ்சு கல்லை தேடி போயி அமர்த்துட்டோம். அதுக்கப்புறம் ஐயப்பன் அவரு தங்கமணி,குழந்தை சகிதமாக வந்து சேர்ந்தார்.

அட்டெண்ட்ஸ் கொடுத்தவர்கள்:-

1) செந்தழல் ரவி
2) ஆசிப் மீரான்
3) மோகன் தாஸ்
4) அனானி 1
5) அனானி 2
6) தீபா &Mr.தீபா
7) கொங்கு ராசா
8) பத்மபிரியா
9) ஓசை செல்லா
10) ஐயப்பன்
11) ஜீ
12) இம்சை அரசி
13) சுபமுகா
14) பலூன் மாமா
15) அனானி 3



அந்த செவ்வக மேஜையில் ஐயப்பன், செல்லா கேமராக்களும் , என்னோட லேப்டாப் இடத்தை அடைத்து கொள்ள, எல்லார் காதுகளையும் செல்லா'வின் போட்டோகிராபி பற்றிய விளக்கம் அடைத்து கொண்டது. லென்ஸ், அப்சார்ப்பர், ஜீம், சப்ஜெக்ட், லோ லைட்டிங், டார்க் லைட்டிங்'னு ஒரே டெக்னிக்கல் டேர்ம்ஸ் சிதறி ஓடிக்கொண்டு இருந்தது. ஒரு மணி நேரத்தில் முடிந்து விடலாம் என ஆரம்பிக்கப்பட்ட புகைப்பட கலை பற்றிய அறிமுகம் 2.30 மணி நேரம் வரை ஆனதுக்கு முதற்காரணமே அனைவரும் சுவராசியத்துடன் ரசித்தது தான். அதை விட ஐயப்பனும் , செல்லாவும் பல மாடல் போட்டோக்களை எடுத்து செய்முறை சோதனைகளை நடத்தி காட்டினர். அதுக்கு மாட்டின செய்முறை சோதனை எலி நாந்தான்... ( போட்டோ எடுத்த சாமிகளா என்னையே வைச்சி காமெடி பண்ணிறாதிங்கய்யா)



ஆசிரமத்துக்கு போவதற்கு டைம் வேற ஆகிவிட்டதால் எல்லாரும் டாக்ஸி, பைக்கில் கிளம்பி போனோம். ரெட்பயர் நைட் ஃபிளைட்'லேய் கொரியா போயி பாம்பு சூப் சாப்பிடனும் அங்கயிருந்து அப்பிட்டு, நம்ம கொங்கு ராசா என்னை தங்கமணி வையுமின்னு வீட்டுக்கு போயிட்டாங்க.



நாங்கள் ஆசிரமம் சென்றடைவதற்கு கொஞ்சம் லேட்டாகி விட மதிய சாப்பாட்டு வேளைக்கான நேரம் கடந்தே போயிவிட்டது. அனைவரையும் வரிசையில் அமரவைக்கப்பட்டனர். பார்க்கில் கல்வெட்டு மாதிரி அசையாது நின்றவர் இங்கே பலூன்மாமா'வாக அவதாரம் எடுத்தார். அனைத்து குழந்தைகளுக்கும் பலூனில் கிரிடங்கள் செய்யப்பட்டு ஒவ்வொருத்தர்க்கும் அணிவிக்கப்பட்டது. குழந்தைகளில் சிலர் அருமையாக பாட்டு பாடியும், நடனம் ஆடியும் அசத்தினர்.








கிரீடமும், வாளும் சுமந்த கவிஜ மடத்து மஹாராஜா...




சுவாமிஜி'க்கு மட்டும் பெரிய கிரிடம்....




"நச்" புகழ் செல்லா'வுக்கே நச்'ன்னு ஒரு போட்டோ....




அதன்பின்னர் அவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுக்களும் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு பிரார்த்தனை நேரமாகி விட்டதால் அனைவரும் அங்கிருந்து மிக்க மகிழ்ச்சியுடன் கிளம்பி வந்தோம்.

Thursday, July 12, 2007

மாணிக்க மலர்

"ஏண்டா எந்திருடா! இன்னிக்கு ஆபிஸிலே மீட்டிங் இருக்குன்னு 9 மணிக்கெல்லாம் போறேன்னு நைட் தூங்குறப்போ சொல்லிட்டு இப்போ 8 மணி வரை தூங்கினா எப்பிடி??"ன்னு ரூம்மேட் கத்தின கத்துலே எழுந்து உட்கார்ந்தான் சந்துரு.

"இன்னும்தான் ஒன் அவர் இருக்குலே! அதுக்குள்ளே கத்தி ஊரை கூட்டுறே? டீ போட்டாச்சா?"

"இவரு பெரிய தொரை ! மகாராசா எழுந்திருச்சதும் பெட் காப்பியோட எழுப்பி விடனுமா? அப்பிடியே பாத்ரூமை பார்த்து ஓடி போயிரு! சீக்கிரம் குளிச்சிட்டு கெளம்பு! நாங்கெல்லும் ஆபிஸிக்கு போகனும்!"

நண்பன் வினோத் போட்டு வைத்த டீ'யை குடித்து விட்டு காலைக்கடன்களை முடித்து விட்டு ஆபிஸிக்கு கிளம்பினான் சந்துரு.

"ஹலோ! நான் இப்போ மீட்டிங்'லே இருக்கேன்! நான் அப்புறமா கால் பண்ணுறேன்!"

"என்னடா சந்துரு! காலநேரமில்லாமே வூட்பீ கூடதான் போனிலே பேச்சுன்னா! மீட்டிங்'லே கூடவா"ன்னு கிண்டல் பண்ணிய கொலிக்'ஐ கடுப்புடனே பார்த்தான்.

"ஏய் நைட் தான் போனிலே மீட்டிங் முடியறதுக்கு 10 மணி ஆகுமின்னு சொன்னேன்'லே! அப்புறம் எதுக்கு கட் பண்ண பண்ண திரும்ப கால் பண்ணுறே???"

"ஐயோ அது எனக்கு தெரியுங்க! காலையிலிலே உங்க அம்மாவும், அக்காவும் போன் பண்ணினாங்க! ஒங்க சித்தப்பா பொண்ணு ரூபி'க்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குதாம், நேத்து மதியத்திலே இருந்து ஒன்னுமே அவ சாப்பிடலையாம்! உங்கக்கிட்டே சொன்னாங்களா?" இது சந்துருவின் வருங்கால மனைவி சுதா.

"நேத்து மதியம் அக்கா போன் பண்ணுறப்போ சொன்னுச்சு! நான் இந்த வாரம் சனி,ஞாயித்துக்கிழமையிலே வந்து பார்க்கிறேன் சொல்லிருந்தேனே! இப்போ எப்பிடி இருக்காளாம்?"

"அதுதான் தெரியலைங்க! நான் போய் பார்த்துட்டு மதியவாக்கிலே போன் பண்ணிச்சொல்லுறேன்! இப்போ போயி வேலையே பாருங்க"

சுதா போன் பண்ணியதில் இருந்து சந்துருவுக்கு வேலை ஒன்றுமே ஓடவில்லை. ரூபி என்று செல்லமாக அழைக்கப்படும் ரூபிணி அவன் சித்தப்பா'வின் மூன்றாவது பொண்ணு. பன்னிரண்டு வயசும், எட்டு வயசும் ரெண்டு பொண்ணுங்க இருக்கும்போது மூணாவது பையன் கொஞ்சம் தள்ளி பிறந்தா நல்ல சுகப்போகத்தை கொடுப்பான் அந்த வாரிசு'ன்னு ஏதோ ஜோசியர் சொன்னாங்க'கிறதினாலே சித்தி கர்ப்பமா இருங்கான்னு அக்கா அவன்கிட்டே சொன்னப்போ சந்துரு'வுக்கு பத்திக் கொண்டு வந்தது.

"என்னாக்கா ஒனக்கே ரெண்டு பசங்க இருக்காங்க! அதுவுமில்லாமே எனக்கு கல்யாணம் வேற பண்ணப்போறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க? இப்போ போயி நம்ம சித்தப்பா,சித்திக்கு இன்னொரு குழந்தையா?"

"அதுனாலே என்னாடா? நம்ம எல்லார் வீட்டிலேயும் ஆம்பிளை பசங்க இருக்கீங்க! அந்த சித்தப்பா வீட்டிலே இல்லலே? நீ எதுவும் வாயை வைச்சிட்டு சும்மாயிருக்காமே என்னத்தயாவது வெடுக்கென்னு சொல்லிறாதே?" இப்பிடி அக்கா சொன்னப் பிறகு அதை பற்றி பெரிதாக அவன் ஒன்னும் எடுத்துக் கொள்ளவில்லை.

எல்லாரும் ஆண் பிள்ளை என எதிர்பார்த்து பிறந்தது பெண் பிள்ளை என்று தெரிந்து சித்தி ஆஸ்பத்திரியிலே கத்தி அழுதுதை அம்மாவும் மூக்கு சிந்திக்கிட்டே சொன்னப்போ ஒன்னுமே தோணவில்லை அவனுக்கு! அவள் பிறந்த மறுநாள் அப்பா போன் பண்ணி அவள் இராசி,நட்சத்திரம், பாதம் எல்லாமே தன்னோடது ஒன்னா இருக்குன்னு சொன்னப்போது தான் மிகவும் ஆச்சரியமாகவும்,பாசமும் பொங்கி வர அவளை பார்ப்பதற்கு பெங்களூரூலே இருந்து மதுரை போய் பார்த்து வந்தான். பளிச்சென்னு முகக் களையும் அழுத்தம் திருத்தமான மூக்கு முழியுமான குழந்தை அவன் மனதிலே பளிச்சென்னு ஒட்டிக்கொண்டது. அதன் பின்னர் ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் இவனை பார்த்ததும் அவள் அழத் தொடங்குவதும், சித்தியும்,தங்கைகளும் "ஒன்னை ஏதோ வேத்து ஆளா நினைக்கிறா போல"ன்னு சொல்லுவதும் அடுத்தமுறை வரும் பொழுது நல்லா பழகிறலாமின்னு தனக்கு தானே சமதானப்படுத்தியதும் நினைவுக்கு வந்து போனது.

அவளின் முதல் பிறந்தநாளுக்கு டிரெஸ் வாங்கி கொண்டு போனதை சரியாக நினைவு வைத்து இரண்டாம் பிறந்தநாளுக்கும் சரியாக போன் பண்ணி கேட்டதும், நேரில் சென்று பார்க்கும் பொழுது சித்தி பின்னாடி போய் ஒழிந்து கொண்டு எட்டிப்பார்ப்பதும், தனக்கு பொண்ணு பார்க்க போகும் பொழுது நாட்டாமை படத்திலே மனோரமா பேசிய டயலாக்'யும் பேசி காட்டி எல்லாரையும் கலகலக்க வைத்ததையும், அவளின் குறும்புகளை நினைத்துக் கொண்டே அவனையறியாமலே கண்கள் கலங்குவதும், மனது எதிலேயும் நிலைப்பெறாமல் இருந்ததையும், மதிய சாப்பாட்டு நேரத்தில் அனைவரும் சாப்பிட அழைத்தும் பித்து பிடித்தவனாகவும் நொடிக்கொரு முறை அவள் நலம் பெற வேண்டுமென கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தான்.

செல்போனில் தம்பி நம்பர் பார்த்ததும் சற்றே பதறிய படியே கால் அட்டெண்ட் பண்ணினான் சந்துரு.

"ஹலோ! எப்பிடிடா இருக்கா இப்போ?"

"ஹிம் இப்போ பேச ஆரம்பிச்சிருச்சு! ஆனா ஒன்னுமே சாப்பிடலை! பால், ஜீஸ்'ன்னு எதோ கொஞ்சமா காலையிலே குடிச்சாளாம். இப்போதான் சித்தாப்பா'கிட்டே போன் பண்ணி வீட்டுக்கு வாங்க'ப்பா'ன்னு சொன்னாளாம். சித்தப்பா இப்போதான் எனக்கு போன் பண்ணி சொன்னார். நான் வீட்டிலே போயி பார்த்துட்டு கால் பண்ணுறேன்!"

"சரி வீட்டுக்கு போனதும் போன் பண்ணு! காலையிலே இருந்தே மனசை சரியில்லை!"

போனிலே பேசுனதுக்கப்புறம் மனதுக்கு கொஞ்சம் தெம்பாக உணர்ந்த சந்துரு தன்னுடைய மதிய சாப்பாட்டுக்கு சென்று வந்து தன்னுடைய வழக்கமான அலுவலக வேலையை தொடர ஆரம்பித்தான். இந்த வீக் அப்டேட் மீட்டிங்கிலே நிறைய பெண்டிங் இஸ்யூஸ் இருப்பதை கண்டு, அதை ஃபிக்ஸ் பண்ணுவதிலே குறியாக இருந்தாலும், மனதோரத்தில் ரூபிணி நலம்வேண்டி பிராத்தனையிலும் ஈடுப்பட்டு கொண்டே இருந்தான். தீடீரென அடித்த செல்போன் மணியை அணைத்து காதில் வைத்தான்.

"ஹலோ!"

"..."

"ஹலோ ராஜா!"

"..."

"டேய்.. யாரு இது?"

"......"

"எதுக்குடா அழுவுறே? என்னாடா ஆச்சு?"

"சந்திரா நம்ம ரூபி நம்மளை விட்டுட்டு போயிட்டா'டா!"

"டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்! என்னடா சொல்லுறே? இப்போதானாடா கொஞ்சநேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி பேச ஆரம்பிச்சாடா'ன்னு சொன்னே? என்னாடா நடத்துச்சு?"

"ஹிம்ம்ம்ம்ம்ம்... சித்தப்பாவுக்கு மட்டும் போன் பண்ணி வரச்சொல்லைடா! நம்ம அக்கா,அம்மா,அப்பா எல்லாருக்கும் போன் பண்ணி வரச்சொல்லிருக்கா? எல்லாரையும் ஒன்னா பார்த்துட்டு நம்மளை விட்டு போயிட்டா'டா!"

"அப்போ எல்லாரையும் கூப்பிட்டு பார்த்தவா என்னை மட்டும் பார்க்கமே போயிட்டாளே? தெய்வமே அவ என்கிட்டே பேசி பார்த்தது இல்லியே? எனக்கு இப்பிடியொரு சோதனையா?"

"டேய்... அப்பா பேசனுமின்னு சொல்லுறாங்க! இரு போனை கொடுக்கிறேன்!"

"ஹலோ அப்பா என்னாச்சு? என்ன நடக்குது அங்க? பக்கத்திலே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறதுக்கு என்னா? மதியத்திலே இருந்து என்னப்பண்ணிட்டு இருந்தீங்க??"

"அடேய் சந்திரா! எல்லாம் முடிஞ்சு போச்சு! இப்போ ஆஸ்பத்திரி வாசலிலே தான் நிற்கிறோம். நாங்க இங்கன அழக்கூட தெம்பில்லாமே இருக்கோமிடா! அந்த பச்சை குருத்து உசுரை விட்டு அஞ்சு நிமிசம் கூட ஆவலை! எதும் பேசுற நிலைமை'லே நாங்க இல்ல! இன்னும் 2 - 3 மணி நேரத்திலே அவளை கொண்டு அடக்கம் பண்ணப்போறோம்."

"என்னாது! நான் வந்திறேன்ப்பா, அதுவரைக்கும் இருங்க!"

"டேய், இப்போ ஒனக்காக எல்லாம் இப்போ காத்துக்கிடக்க முடியாது, அவ ஒடம்பு ஏற்கெனவே விறைச்சுப் போச்சு, இனிமே வைச்சிருக்க வேணாமின்னு டாக்டர் சொல்லிட்டாங்க! அக்காவும் திருச்சி சித்தப்பா'வும் வந்ததும் நாங்க போயி அடக்கம் பண்ணிட்டு வந்துருவோம். இன்னும் ஒனக்கு 40 நாளிலே கல்யாணம், அதுனாலே நீ அங்கன இங்கன'லாம் அலைய வேணாம், இப்போ நான் எதுவும் பேசுற நிலைமையிலே இல்ல!"

"அப்பா! என்னா சொல்லுறீங்க? நான் வரவேணாமா? அவ கடைசியா ஒங்க எல்லாரையும் பார்த்துருக்கா! நான் அவளை கடைசியா ஒருதரம் பார்த்துகிறேனே? கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்கப்பா! நான் இப்பவே சென்னை ஃபிளைட் பிடிச்சு வந்து அங்க இருந்து ஏதாவது மதுரை ஃபிளேட் பிடிச்சு எப்பிடியாவது நைட்குள்ளே ஊருக்கு வந்துறேன். அப்பா... பிளிஷ், எனக்காக இதை மட்டும் செய்யுங்க? இப்போ சித்தப்பா'கிட்டே போனை கொடுங்க, நான் பேசணும்..."

"நீ ஒன்னும் பண்ணவேணாம்! சித்தப்பா பேச்சே வரமாட்டாமே ஒட்கார்த்துருக்கான், அவன்கிட்டே என்னாடா பேசப்போற? பேசாமே இரு! இன்னும் ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு வந்து பாரு.... இப்போ எதுவும் என்னாலே பேசமுடியாது."

அப்பா வெடுக்கென்னு பேசி போனை வைத்ததும் ஏறக்குறைய பைத்தியம் பிடித்த நிலைமையிலே இருந்தான், இம்மாதிரியான அவசர ஆத்திரத்துக்கு கூட நேரத்துக்கு போகமுடியாத தன்னுடைய வேலை , மற்றும் தனிமையை நினைத்து அழக்கூட திரணியில்லாமால் மனது கனத்துப் போனான்.

இரண்டு நாள் கழித்து ஊருக்கு சென்றப்போது நேராக சித்தப்பா வீட்டுக்கு கூட மனதில்லாமல் தன்னுடைய வீட்டுக்கே சென்றான் சந்துரு.

"டேய் சந்திரா... இங்கப்பாரு எல்லாமே முடிஞ்சுப்போச்சு! இனி அங்கப்போயி எதுவும் என்னாச்சு? எதாச்சு'னு கேள்வி கேட்காதே? ரெண்டு நாளா சித்தி அழுது அழுது மயக்கமாகவே கெடந்தா, இப்போதான் ஏதோ எழுந்து ஒட்கார்ந்துருக்கானு சொன்னாங்க! ரொம்ப முக்கியமா நீ கலங்கி அழுதுறாதடா! அந்த வீடே நாங்க அழுது சிந்துன கண்ணிரா தான் இருக்கு...! போய் பார்த்துட்டு சித்தி,சித்தப்பாவேயும் சாப்பிட சொல்லு! நீ சொல்லியாவது சாப்பிடறாங்கன்னு பார்ப்போம்"

"ஹிம் சொல்லுறேன்!"

"சந்திரா, என்னாடா எல்லாமே முடிஞ்சதுப்புறம் வந்துருக்கே, அடக்கம் சரியா பண்ணியாச்சான்னு சோதனை பண்ண வந்தியா? இல்ல நீ வாங்கிக்கொடுத்த டிரெஸ் இருக்கா இல்லையான்னு பார்க்க வந்தியா? அன்னிக்குக்கூட சந்துரு'ண்ணே வாங்கின டிரெஸ் எடு! நான் போட்டுக்கிறேன்னு சொல்லிட்டே ஒன்னையே பார்க்கமே போயிட்டா!" தன்னை பார்த்ததும் இப்பிடி சொல்லி அழும் சித்தப்பாவை தேற்றுவதா இல்லை "ஒன்னை பார்த்ததும் ஒளிஞ்சுக்க ஒரு ஜீவன் இல்லாமே போயிருச்சே'ன்னு ஈனஸ்வரத்திலே அனத்துக்கிற சித்தியை சமாதானப்படுத்துவதா, எப்பவும் அண்ணே! அண்ணே'ன்னு காலை சுத்திக்கொள்ளும் தங்கைகள் இருவர் இப்போழுது மெல்ல தலையை தொங்கப்போட்டுக்கிட்டு அழுவதை சமதானப்படுத்துவதா என பயங்கர குழப்பத்திலே உட்கார்த்திருந்தான். அப்பா சொன்னமாதிரியே நாமும் அழுதுவிட்டால் இங்கு இன்னமும் துக்கம் பெரிதாகி விடுமென தன் உணர்ச்சிகள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தான். சந்துருவுக்கு அனைவரும் அழும் இடத்தில் தான் மட்டும் அழாமல் இருப்பது தான் கல்நெஞ்சனா என கூட சந்தேகம் வர ஆரம்பித்தது. தன் வீட்டுக்கு சென்று இன்னும் மற்ற விபரங்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம், இங்கிருக்கும் பட்சத்தில் தன்னை பார்த்து மேலும் இவர்கள் அழுவார்கள் என்ற காரணத்தில் தன் வீட்டை நோக்கி விரைந்தான்.

"அப்பா.. இந்த சூழ்நிலையிலே எப்பிடிப்பா கல்யாணம் நடத்துறது? இன்னும் ஆறு மாசம் கழிச்சி தேதி குறிங்க!"

"இல்லே அதெல்லாம் வேணாம் சந்திரா! நேத்தே நான் போயி ஜோசியரை பார்த்து பேசியாச்சு! கல்யாணத்தை தள்ளிப்போட வேணாமின்னு சொல்லிட்டார், ,"

"என்னப்பா சொல்லுறீங்க? ஏன்? எழவு நடந்த குடும்பத்திலே இருந்து இன்னும் கொஞ்சநாளிலே கல்யாணமுன்னு சொன்னா நல்லாவா இருக்கு? எனக்கு பிடிக்கலை? கல்யாணத்தை கொஞ்சநாள் கழிச்சு வைங்க"

"அடேய்.. சொன்னதை கேளுடா! ரூபிணி செத்து மண்ணுக்குள்ளே போகலடா! நம்ம மனசுக்குள்ளே தெய்வமா நிறைச்சுட்டா! வானத்திலே இருந்து தெய்வம் வந்தா நான் உங்களோட தெய்வமின்னு சொல்லி நிருப்பிச்சிட்டு போகும்? இந்தமாதிரி குறை வாழ்வு தேவதைதான் நாங்க ஒங்க எல்லாருக்கும் தெய்வமின்னு வாழ்ந்து நிருபிச்சி காட்டிட்டு போயிருக்கு"ன்னு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார் சந்துருவின் அப்பா..."

இதற்கு மேலும் அப்பாவிடம் மேலும் பேசமுடியாது என நினைத்துக்கொண்டு பெரியவர்கள் எடுத்த முடிவை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாலும், வெகு விமரிசையாக நடத்தப்பட வேண்டிய தன்னுடைய கல்யாணம் வெகு எளிமையாக நடத்தப்பட்டது குறித்து ஆறுதல் அடைந்தான். சந்துரு திருமணத்திற்கு பிறகு சிறிதுசிறிதாக இயல்பு வாழ்க்கைக்கு அந்த குடும்பம் பழக்கப்படுத்தி கொண்டாலும் அவளது மரணம் எல்லாரிடம் எதாவதொரு சமயத்தில் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது. அதற்கு தக்கவாறு சந்துரு மனைவி கர்ப்பகமாக இருந்தப் பொழுது பெங்களூர் வந்து கவனித்துக் கொண்டு மாதம் வந்ததும் ஊருக்கு பத்திரமாகவும் அழைத்து போனாள் சித்தி. அவர்கள் சென்ற் இரண்டாம் மாதத்தில் ஒரு மதிய வேளையில் வலி வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்க போகிறோம் என தகவல் வந்ததும் ஃபிளைட் பிடித்து ஊருக்கு போய் சேர்ந்தான், இன்னும் 20 - 30 நிமிசத்திலே குழந்தை பிறந்துருமின்னு நர்சம்மா சொல்லிட்டு போனதும், பிறக்கும் குழந்தை குடும்பத்தின் முதல் வாரிசு என்பதனால் முதலில் பார்க்கவேண்டுமென்று கூடியிருந்தனர். அவனுக்கான அமைதியை கிழித்துக் கொண்டு புகுந்தது புதிய சத்தமென்று, வெள்ளைத்துணியில் மலர்ந்த மொட்டென்று அலங்காரம் என்பதை இல்லாமல் தேவதையாக சிரித்து கொண்டுருந்தது.

"அம்மா! அப்பிடியே சுதா ஜாடை'ம்மா" இது அக்கா

"இல்ல சந்துரு ஜாடைதான்! இங்கப்பாரு இடதுகன்னத்திலே அவனுக்கு இருக்கிறமாதிரி மச்சமிருக்கு" இது சித்தி

"மூக்கு பெரிசா இருக்கிறத பார்த்தா அவ அப்பத்தா மாதிரி இருக்கா!" இது அப்பா

"இப்பவே எல்லாரையும் மொறைச்சு,வீராப்பா பார்க்கிறா? அப்போ இது உங்க ஜாடைமாதிரி தானே இருக்கா?" இது அம்மா

"இல்ல! இல்ல! இது நம்மகிட்டே வாழ்ந்த மாணிக்கமலரின் மறு பிறப்பு"ன்னு சொல்லி முதன்முதலாக ரூபிணி'க்காக அழுதான் சந்துரு.

Monday, July 9, 2007

போங்கடா! நீங்களும் ஒங்க வேலையும்.....

நம்ம அருமை பெருமையெல்லாம் அடுக்கோ அடுக்கி பதிவா போட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறதையெல்லாம் சொல்லுடா'ன்னு கூப்பிட்ட இத்தனை பேரையும் மதிச்சு பதிவை போடமுடியாமே ஆபிஸிலே வேலையை தவிர வேற எதையும் பண்ணக்கூடாதுன்னு எல்லாத்திலேயும் ஃபீயூஸ் பிடுங்கிட்டானுக! அவனுக கிட்டே சண்டை போட திராணியில்லாமே இப்பிடிதான் தலைப்பு வைச்சிக்க முடியுது... :(

1) கப்பி பய
2) தலைவலி
3) தருமி ஐயா
4) மணிகண்டன்
5) கவிதாயினி
6) கொல்லிமலை ஜே.கே




என்னையும் மதிச்சு கூப்பிட்ட அவங்க பாசத்தை நினைச்சி ஆனந்த கண்ணிரு பெருக்கெடுத்து ஓடுதுங்க.அந்த வெள்ளத்தை தடுத்து நிறுத்திட்டு வந்தா நம்ம ஆனைக்குட்டி லேப்டாப்'லே ஒட்கார்ந்துட்டு அடம்பிடிக்கிது, அதை ஓரமா ஒரு இடத்திலே பார்க் பண்ணிட்டு நம்மோட ஒலக சாதனைகளை ஒவ்வொன்னா எடுத்து விடுறேன். கல்லை விட்டு அடிக்கிறதா இருந்தா ஒவ்வொருத்தரா அடிக்கனும், இப்பிடியெல்லாம் மொத்தமா எல்லாம் சேர்ந்துக்கிட்டு அடிக்கப்பிடாது. டேமேஜ் ரொம்ப பலமா ஆகுதுலே.... :)

1) எங்கன இருந்தாலும் வேஷ்டி இல்ல கைலி, சட்டையோட தான் இருக்கிறது. பெங்களூரூலே தம்பி வேலைப் பார்க்குதே கொஞ்சம் நல்லாலாம் டிரெஸ் போட சொல்லக்கூடாதா'ன்னு எங்க தெருக்காரங்க அம்மா'க்கிட்டே சொல்லிட்டே இருப்பாங்க. ஹிம் அதுக்கு அவங்க ரிக்கார்டட் டயலாக் " பண்டி பய எதைச் சொன்னாலும் கேட்டு தொலையுறான் இல்ல"

2) படிச்சது என்னோமோ கணக்கிலே இளங்கலை பட்டம். ஆனா பார்க்கிறது கம்ப்யூட்டரிலே வேலை. நாமே எடுத்த மார்க்'லாம் இஞ்சினீயர் சீட்டு எல்லாம் கொடுக்கமுடியாது'ன்னு சொல்லிட்டாலும் நாங்கெல்லும் என்னத்தயோ படிச்சி கம்ப்யூட்டர் ஆஞ்சுனேயர் ச்சீ இஞ்சினீயர் ஆகியாச்சுலே...

3) எங்கப்போனாலும் நாமே பேசுற பேச்சு, அப்புறம் பண்ணுற நொணநாட்டியத்தை வைச்சே இது மருதயிலே இருந்து கிளம்புனது'னு ஈஸியா எல்லாரும் கண்டுப்பிடிச்சிருவாய்ங்கே.

4) அப்புறம் இந்த கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன்னு என்னத்தயோ பண்ணக்கிட்டு இருக்கிறது! என்னோட டைரியை படிச்ச ஒரு நல்லவர் ஒங்களுக்கு நல்ல மொழி வளமை??? இருக்குன்னு சொல்லிப்பிட்டார். ஹி ஹி இனி ஒங்க பாடுதான் பெரும் திண்டாட்டம்.

5) பசங்க எல்லாரையும் ஓட்டி லந்து விடுறதுதான் மொத வேலையே! ஒரு பயப்புள்ள கல்யாணத்துக்கு போய் அவனை மேடையிலே வைச்சே செமயா லந்தை விட்டு இன்னவரைக்கும் அவன் எங்கக்கிட்டே பேசுறதே இல்லை.

6) டெக்னாக்லாஜிலே எக்ஸ்பர்ட் ஆகுறேன் பேர்வழின்னு என்னத்தயாவது போட்டு நொண்டோ நொண்டி அதை ஒன்னுமில்லாமே ஆக்கி ஒப்பேத்துறது பெரிய சாதனை மக்கா... எங்கப்பாரு அடிஅடின்னு அடிச்சும் இன்னவரைக்கும் அது குறைஞ்சப் பாடு இல்ல...

7) எத்தனதடவை தான் சொல்லுறதுன்னே தெரியலை.. இப்பவும் சொல்லிக்கிறேன், பொஸ்தகத்தை படிக்க ஆரம்பிச்ச அதை கீழே வைக்கிறதே இல்ல. சின்னவயசிலே அம்புலிமாமா படிக்கிறோப்போ எங்கப்பார் சொல்லுவாரு.. "இந்த பயலை வீட்டிலே விட்டுட்டு போனா திருடன் வந்து திருடிட்டு போனாலும் அவன் பாட்டுக்கு படிச்சிட்டு இருப்பான்!"

8) இதுதாங்க என்னோட அருமை பெருமையெல்லாம் என்னை எல்லாருக்கும் அடையாளம் காட்டுறது. அது என்னான்னா என்னோட சோம்பேறித்தனம். எல்லாரும் ஒன்னா கூடி எங்கய்யாவது வெளியா போலமின்னு இருந்தா நாந்தான் லாஸ்டா நிப்பேன். அம்புட்டு சுறுசுறுப்பான சோம்பேறி.

Thursday, June 28, 2007

பெங்களூரூ வலைப்பதிவர் சந்திப்பு

வணக்கம் நண்பர்களே,


சமீப காலங்களாக வலைபதிவர் சந்திப்பு பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று கொண்டு இருப்பது வரவேற்கதக்கதே.

அந்த வகையில் பெங்களூரூலும் வலைபதிவர் சந்திப்பை வரும் ஜீலை மாதம் 14ம் தேதி சனிக்கிழமை லால்பார்க்'லில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் சற்றே
மாறுப்பட்ட முறையில் இல்லாதவர்களுக்கு உதவும் ஒரு நிகழ்ச்சியாகவும் போட்டோகிராபி பற்றிய சிறிய அறிமுகங்களுடன் நடத்தலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அன்று தினம் காலையில் சந்திப்பு'க்கு பிறகு பெங்களூரூலில் இருக்கும் ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று நம்மால் இயன்ற உதவிகளை செய்து வரலாம். வாய்ப்புக்கள் சரியாக அமையும் பட்சத்தில் அவ்வில்லத்திலே நமது
மதிய உணவு வேளையை அவர்களுடன் சேர்த்து கழிக்கலாம். இதற்கு உங்களின் மேலான கருத்துக்களும் மற்றும் ஆலோசனைகள உங்களுக்கு தெரிந்த இல்லத்தை பற்றிய விபரங்கள் இருந்தாலும் அளிக்கலாம்.

மேலும் புகைப்பட கலை பற்றிய சிறிய அறிமுகத்தை நண்பர் நச்.செல்லா, மற்றும் வெண்பா வாத்தி ஜீவ்ஸ் அளிக்க உள்ளனர்.





இடம்:- பெங்களூரூ லால்பார்க் நாள்:- 14 - 07 -2007 நேரம்:- காலை 10.00

உங்களின் வருகையை உறுதி செய்ய பின்னூட்டத்தில் தகவல்களை அளியுங்கள்.

மேலும் தகவல் தொடர்புகளுக்கு

Monday, June 18, 2007

எனக்கான வெளியில்.......



சுயமறிதலின் போரட்டங்களில்
பறக்குமெனது ஆத்மா!

மேகக்கூட்டங்களில் கரைசலை நீர்க்கும்
வான்வெளியில் கலவாத
போரட்ட பாங்கொடு ஓப்பிட தொடங்கியதன் பயணம்
உச்சமென்னும் நிலைக்கு அடிபணியும்
நிலவிடமும்,உச்சமென்னும் நிலையொன்றை ஆளும்
ஞாயிறென்னும் மாயை தர்க்கம் கண்டு தோற்று
நிலையற்ற தன்னிலை அறிந்து திரும்பியதும்
இன்னுமொரு இரவிலும் தன் பயணத்தை தொடர
அதனின் திட்டங்களை வரையறுத்து கொண்டது.

அதன் பயணகால திட்டநடவடிக்கை வரையிலான
என் இருப்பு
குழப்பவெளிகளில் அலையும்
குருட்டு புலியின் வன்மைக்கு
ஒப்பானதே.

Wednesday, May 30, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 6

சிந்தாநதி'யின் ஞாபகம் -1

வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2

CVR'ன் ஞாபகம் 3

ஜி'யின் ஞாபகம் - 4

கடைசியாக இம்சை அரசியின் ஞாபக மீட்டல்கள்:-

காவேரிக்கோ ஏதேதோ புரியாத உணர்வுகள் எழ ஆச்சர்யத்தில் இருந்து மீள முடியாதவளாய் குழம்பியபடி அமர்ந்திருந்தாள்.

==================-oOo-==================

திருமணத்திற்கு சென்று வந்ததிலிருந்து காவேரிக்கு ஓரே ஆச்சரியமாக இருந்தது. அன்று ஒரே ஒரு நாள் சில நிமிடங்கள் பேசி சென்றவன் எதற்காக இப்பிடி என்னை பற்றி எல்லா விபரங்களையும் சேகரிக்கனும், தான் தெரிஞ்சுக்கிட்டதை ஏன் சந்தர்ப்பம் எதிர்பார்த்து என்கிட்டே வந்து சொல்லனும், சே இந்த ஆம்பிளக எல்லாருமே இப்பிடிதான் இருக்காங்கன்னு மனதில் நினைத்துக் கொண்டாள். அச்சமயம் அவ்வழியே வந்த வசந்த் அவளிடம் வலிய வந்து பேச்சு கொடுக்கிறான்.

"ஹாய் காவேரி? என்ன பலத்த யோசனை?"

"ஹாய் வசந்த்! அதெல்லாம் ஒன்னுமில்லை! சும்மாதான் உட்கார்ந்து இருக்கேன், தட்ஸ் ஆல்"

"ஹிம் ஐ நோ! ஒன்னோட பெர்சனல் டீடெய்ல்ஸ் எதுக்கு நான் கலெக்ட் பண்ணேன்னு டவுட் இருக்கு? சரியா?"

"ஆமாம்! ஒங்களுக்கு...ம் ம் ஒனக்கு எதுக்கு இந்த வேலை?"

"அட நானா கேட்கலை தாயே! ஒன்னோட ஃப்ரண்ட் உமா'கிட்டே பேசிட்டு இருந்தேன், அவ சரியான ஓட்டை வாய் போலே! நான் ஒன்னு கேட்டா எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டா! அதுவுமில்லாமே சொல்லி முடிச்சிட்டு ஐ யம் ஸ்டெரைக்ட் ஃபார்வேர்ட்'ன்னு சொல்லுறா! நல்ல ஃபிரண்டா தான் பிடிச்சி வைச்சிருக்கே!"

"ஓ எல்லாம் அந்த ஓட்டைவாயி வேலைதானா? தென் ஓகே! அன்னிக்கு சடனா எல்லா டீடெல்ஸ் சொன்னதும் எனக்கு கொஞ்சம் டவுட் வந்துச்சு,"

"ஹிம் என்ன டவுட்?"

"ம்ம் சொல்லுறேன்! ஓகே வசந்த், கொஞ்சம் படிக்க வேண்டியது இருக்கு, அப்புறமா மீட் பண்ணலாம்"

இச்சந்திப்புக்கு பின்னர் தினமும் வகுப்பு முடிந்ததும் இருவரும் மாலையில் குறைந்தது 2 மணிநேரம் பேசி கொள்வதை பழக்கமாக்கி கொண்டனர்.கல்லூரி வளாகத்திலும், காவேரி தங்கியிருக்கும் ஹாஸ்டலிலும் காவேரி மற்றும் வசந்த்'யும் இணைந்து பேசுவதுதான் ஹாட் டாபிக்'ஆக இருந்தது, அதை நினைத்து காவேரியோ, வசந்தோ சட்டை செய்யாமல் இருந்தது தான் எல்லாருக்கும் மிக்க ஆச்சரியமாகவும், இன்னமும் பேசுவதற்கு தூண்டுக்கோலாகவும் இருந்தது, வசந்த் சில சமயங்களில் தன்னை பற்றி வரும் வார்த்தைகளுக்கு அமைதியாக சென்றாலும் காவேரி பற்றி வரும் சில கமெண்ட்களுக்கு மிகவும் கோபப்பட்டு சில சமயம் சண்டைக்கும் போகலானான்.

"என்னடி காவேரி? ஒன்கிட்டே நிறையவே மாற்றம் தெரிய ஆரம்பிச்சிருக்கே?" இப்பிடியொரு குதர்க்கமான கேள்வியோடு ஆரம்பித்தாள் உமா,

"நீ என்ன கேட்கவாறேன்னு எனக்கு கொஞ்சம் விளங்குது? அந்த வசந்த் நம்மோட கிளாஸ் கூட கிடையாது? ஏன் அவன்கிட்டே ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கேன்னு கேட்குறதுக்காக மாற்றமின்னு ஓரே வார்த்தையிலே கேட்டு பார்க்கிறே? அப்பிடிதானே?"

"வாவ்...கிரேட்'டீ! நான் என்ன கேட்கனுமின்னு நினைச்சனோ அதை நீயே சொல்லிட்டே? மரியாதையா சொல்லிரு?"

"Nothing Special உமா! Moreover நீ இப்பிடி பேசுறதும்,குதர்க்கமா கேள்வி கேட்கிறதையும் பார்க்கிறப்போ ரொம்ப வித்தியாசமா நான் ஃபீல் பண்ணுறேன்!"

"காவேரி! யூ மிஸ்டேக்கன் மீ! நார்மலா எல்லாருக்கும் வர்ற சந்தேகந்தான் எனக்கும் வந்துச்சு, ஐ யம் ஸ்டெரைக்ட் ஃபார்வேர்ட், ஸோ நான் கேட்டுட்டேன்!"

"ஹிம்! எங்களுக்குள்ளே அதெல்லாம் இல்லை! அப்பிடியே நடந்தாலும் நான் ஃபர்ஸ்ட் ஒனக்குதான் சொல்லுவேன்! ஓகே?"

உமா நேரடியாகவே வசந்த்'க்கும் தனக்கும் இருக்கும் உறவை பற்றி கேட்டதும் சற்று கோபப்பட்டாலும், அவன் மீது இவளுக்கு காதல் ஏதுவும் வந்துவிட்டதா என கூட கொஞ்சமே குழம்பிதான் போனாள். சரி இதை பற்றி அவனிடமே மறுமுறை சந்திக்கும் பொழுது பேசிக்கொள்ளலாம், என முடிவு செய்து கொள்கிறாள்.

"வசந்த்! நான் இப்போ கொஞ்சம் கன்பீயூசன் ஸ்டேஜ்'லே இருக்கேன்'ப்பா! உமா என்கிட்டே வந்து நீ வசந்த் லவ் பண்ணுறீயான்னு கேட்கிறா? வாட் த ராங் வித் அஸ், நாமே நார்மலா தான் இருக்கோம், ஏன் அவங்களுக்கு அப்பிடியொரு டவுட் வருது? டூ யூ ஹாவ் எனி ஐடியா?"

"காவேரி, இந்த லைப் அதாவது காலேஜ் கேம்ப்ஸ்'க்குள்ளே ஒரு பொண்ணும் பையனும் பேசிக்கிட்டா அது லவ் தான்னு கன்பார்ம் பண்ணுவாங்க... Free'யா விடு, எதுக்கும் டென்சன் ஆவாதே? By the way நானே இதை பத்தி பேசலாமின்னு இருந்தேன்! நீயே பேசிட்டே!"

"ச்சே! என்ன உலகம்'டா சாமி! வசந்த் நீயே சொல்லிருக்கே! நீ வீட்டுக்கு ஓரே பையன், அதுனாலே எந்த உறவுமுறை பாசமும் இல்லை, அதுவுமில்லாமே ரொம்பதூரத்திலே இருந்து வந்து இங்க நீ தங்கி படிக்கிற! அதேமாதிரி நிலைமைதான் எனக்கும், எனக்கு அம்மா கிடையாது, தம்பி,தங்கை,அண்ணன்,அக்கா'ன்னு எந்த பந்தபாசமும் கிடையாது, இப்போ இவங்கல்லாம் பேசுறதே பார்க்கிறோப்போ எனக்கு ஒரு ஃபிரண்ட்'ம் இல்லாமே போயிரும் போல இருக்கு!"

"அட ரொம்பதான் ஃபீல்'ஐ போடுறே? ஃFree'யா விடு! Be normal....காதல் வந்ததுக்கு காரணகாரியங்கள் சொல்லாலாம், ஆனா நமக்குள்ளே இருக்கிற நட்பை பத்தி எடுத்து சொல்லுறதுக்கு என்ன காரணம் சொல்லுவே? அவங்க என்ன சொன்னாலும் விட்டு தள்ளிட்டு போயிட்டே இரு, ஒருத்தருக்கு நீ பதில் சொல்ல ஆரம்பிச்சேனா எல்லாருக்கும் பதில் சொல்லிட்டே இருக்கனும். நம்ம மேலே தப்பான அபிப்ரயாத்தை வளர்ந்தவங்க அவங்கதான், நாமே இல்லை, அவங்களா அதை மாத்திக்குவாங்க...."

"ஹிம் நீ சொல்லுறதும் சரியாதான் இருக்கு வசந்த, ஆனா சிலசமயங்களிலே நான் செய்யுறது எனக்கே சரியா தப்பான்னு குழப்பம் வரும். அந்தமாதிரி சமயங்களிலே முடிவெடுக்க முடியாமே திணறப்போ நீ எனக்கு ஆதரவு கொடுக்கிறே? அழனுமின்னு தோணுனாலும் தோள் கொடுக்கிறே? சிரிக்கனுமின்னா கூட சேர்ந்து சிரிக்கிறே? நீ கிரேட்'டா!"

"ஓ இதை வைச்சிதான் இந்த கவிதை எழுதினேயா? , அதை சிலசமயம் விடாமே படிச்சிட்டே இருப்பேன்!"

"அப்பிடியா? எந்த கவிதை?"

"ஆறுதல் சொல்ல நீ இருந்தால்,
அழுவதில் கூட சுகம் உண்டு."

"ஹி ஹி அது நான் எழுதலை! ஒரு இடத்திலே சுட்டது...!"

"அடபாவி, ஒன்னை போய் பெரிய கவிதாயினி'ன்னு நினைச்சேன்னே? அப்போ இதை எழுதினதும் நீயில்லையா?

தந்தை அடித்ததை
தாயிடம் சொல்லி அழும்
பிள்ளை போல..

என் மார்பில் சாய்ந்து
தேம்பிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!

"இது எழுதினது நாந்தான்"

"ஹிம் இந்தமாதிரி நட்பை மையமா வைச்சு எழுதுனா கவிதைகளை வைச்சு தான் ஒன்கிட்டே ஃபிரண்ட்ஷிப் வைச்சிக்கனுமின்னு தோணுச்சு காவேரி"

"ஹிம் ஃபிரண்ட்ஷிப் வைச்சிக்கிறதுக்கு ரீசன் சொல்லுறே? நல்லாயிரு! சரி இப்போ நான் கிளம்புறேன்!"

இப்பொழுது கொஞ்சம் தெளிவான சிந்தனையோடு தன்னுடைய அறைக்கு காவேரி செல்கிறாள். அங்கே தன் அப்பா போன் பண்ணினதாகவும் வந்தால் பேச சொன்னதாகவும் உமா சொல்லியதால் போன்பூத்'க்கு செல்கிறாள் காவேரி.

"ஹலோ அப்பா நல்லாயிருக்கீங்களா?"

"ஹிம் நான் நல்லாயிருக்கேன்.. யாரு கூட காவேரி பேசிட்டு இருந்தே? உமா என்னோமோ சொல்லுறா? எனக்கு எதுவும் பிடிபடலை?"

"ஹய்யோ! அதெல்லாம் ஒன்னுமில்லப்பா! அவ ஏதாவது விளையாட்டுக்கு சொல்லிருப்பா? நீங்க எதுவும் நினைச்சிக்காதீங்க?"

"சரிம்மா! ஒடம்பை நல்லா பார்த்துக்கோ! நல்லா படி! போனை வைச்சிறேன்"

எப்பவும் தன்னிடம் நன்றாக பேசும், இன்று சரியாக பேசாத காரணத்தை தெளிவாக ஊகித்தாள் காவேரி. தான் இல்லாத நேரத்தில் வந்த போனில் தேவையில்லாத விஷயங்களை பேசி அப்பாவிடம் குழப்பத்தை உண்டு பண்ணியிருப்பது உமா வேலைதான்.

"உமா! அப்பாகிட்டே என்ன சொன்ன?"

"நான் ஒன்னுமே சொல்லலையே? ஏன் போன் பண்ணிட்டு வந்ததும் இப்பிடியொரு கேள்வி கேட்கிறே?"

"சந்தேகமா யார்கிட்டே இவ்வளவு நேரமா பேசிட்டு இருந்தேன்னு எங்கப்பா கேட்டாரு? எப்பவும் அந்தமாதிரியெல்லாம் கேள்வி கேட்கமாட்டார் தெரியுமா? நான் எத்தனை தடவை ஒன்கிட்டே சொல்லிட்டேன், இன்னும் நீதான் புரிஞ்சுக்காமே வசந்த்யும் என்னையும் தப்பா நினைச்சிட்டு இருக்கே?"

"காவேரி! திரும்ப திரும்ப ஒரேமாதிரி சொல்லி போரடிக்காதே! ப்ளிஷ் டெல் மீ எஸ் ஆர் நோ?"

"கட்டாயமா அதுக்கு என்னாலே தெளிவா பதில் சொல்லமுடியும்... நோ..நோ..."

"அப்புறம் எதுக்கு ரெண்டு பேரும் காலநேரம் இல்லாமே பேசிட்டே இருக்கீங்க...? எனக்கு தெரிஞ்சு கிளாஸ் ஹவர்ஸ் போக, ஒன்னை இங்க ஹாஸ்டலிலே பார்த்ததே கிடையாது, எல்லாநேரமும் அவனோட தான் அந்த மரத்தடி கிழே பேசிட்டு இருக்கீங்க! அந்த மரத்தடிக்கு கூட இப்போ பசங்க வசந்தகாவேரி மரமின்னு பேர் வைச்சிட்டாங்க தெரியுமா?"

"உமா! உமா!! எத்தனை தடவைதான் நான் சொல்லுறது, நமக்கு தானா அமையுற உறவுமுறைகளான அம்மா தவிர்த்து எதாவது ஆதாயம் இருக்குமின்னு எதிர்ப்பார்ப்பு'லே தான் இருப்போம். அண்ணா'ன்னா நம்மை படிக்க வைப்பான், நாமே படிச்சு முடிஞ்சதும் வேலை வாங்கி கொடுப்பான், நல்ல வாழ்க்கையை அமைஞ்சு தருவான்'ன்னு நம்மளையறியமாலே எதிர்பார்க்கிறோம், அது அவங்ளோட கடமைன்னு நாமே அதை சொல்லி தப்பிச்சுக்கலாம், இந்தமாதிரி நிறையவே நம்ம உறவுமுறைகளுக்கு எடுத்துக்காட்டு கொடுத்துட்டே போகலாம். ஆனா நட்புன்னு வர்றோப்போ தான் அதுக்கு எதையும் எதிர்பார்த்து ஏற்படுத்திக்க முடியாது. வசந்த் கூட வந்த நட்பு சாதாரணமா தான் இருந்துச்சு, ஆனா சில சம்பவங்களிலே அது இன்னமும் ஸ்டராங்'கா ஆகிருச்சு,"

"என்னோமோ காவேரி! சினிமா டயலாக் மாதிரியெல்லாம் பேசுறே? அப்பிடி என்னா ஒங்க ஃபிரண்ட்ஷிப்'லே ஸ்ட்ராங்'க்கின இன்ஸிண்ட் நடந்துச்சு?"

"ஹிம்! என்ன பேசுனாலும் அதை கிண்டல் பண்ணுறதே ஒன்னோட வேலையா போச்சு, ஒரு நாள் நம்ம காலேஜ் கிரவுண்ட்'லே சைக்கிளிலே ரவுண்ட் அடிச்சிட்டு இருந்தேன், அப்போ என்னயறியாமலே என்னோட துப்பட்டா சைக்கிள் சக்கரத்திலே சிக்கி அய்யோ அதே சொல்லவே முடியலை, துப்பட்டாவே சுடி'யோட பின் பண்ணிருந்ததுனாலே அதுவும் சேர்ந்து இழுந்து கிழிச்சு போச்சு,என்னோட நிலைமையே அப்போ நினைச்சு பாரு, எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுருப்பேன் அங்க இருந்த பசங்க முன்னாடி, அங்க விளையாடிட்டு இருந்த வசந்த்'தான் தன்னோட ஷர்ட்'ஐ கொடுத்து ஹெல்ப் பண்ணினான், அப்போ சில ஆம்பிளக'கிட்டே இருக்கிற அந்த விகல்ப புத்தி அவன்கிட்டே சுத்தமா இல்லை. இன்னமும் நிறைய இருக்கு, அவனை நீங்கல்லாம் சொன்னமாதிரியெல்லாம் கற்பனை பண்ணி பார்க்கமுடியலை, எங்கக்கிட்டே ரெண்டு பேர் நடுவே இருக்கிறது சுத்தநட்பு... அவ்வளோதான்,"

"காவேரி! என்னாடி ஒரு எக்ஸ்டரா-ஆர்டெனரி கேர்ள் மாதிரி பிஹெவ் பண்ணுறே"

"நான் ஆர்டெனரி கேர்ள் தான், வாழ்க்கையிலே நடக்கிற விஷயங்களை சாதாரணமா அதோட போக்கிலே வாழ்ந்துட்டு தான் இருக்கேன், ஆனா என்னை சுத்தியிருக்கிற சில பேர் புரிஞ்சுக்காமே தான் நான் ஒரு எக்ஸ்டரா-ஆர்டெனரியா'ன்னு நினைக்கிறாங்க... அதை நான் தப்புன்னும் சொல்லலை... "

==================-oOo-==================

நண்பர்களே! இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும். இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும். இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும். ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்த அத்தியாயத்தை உளி கொண்டு செதுக்க அண்ணன் செதுக்கல் மன்னன் தேவ் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்....... ;-)

பி.கு:- கதை'க்கு தேவைப்பட்ட கவிதைகளை G3 செய்ய அனுமதி வழங்கிய கவிதாயினி காயத்ரி அக்கா வாழ்க! வாழ்க!!

Thursday, May 17, 2007

கிராமத்திலிருந்து ஒரு காதல் கதை

விடிஞ்சாலும் விடிஞ்சுடும் போலே இருக்கேன்னு சொல்ல ஆரம்பிக்கிற நேரமது, ஒழவு மாட்டை கையிலே பிடிச்சிட்டு தோளிலே கலப்பை போட்டுக்கிட்டு சம்சாரிக நடக்கிறப்போ நாமே இனிமே கூட்டிலே இருக்கக்கூடாதுன்னு எல்லா பறவைகளுக்கும் தெரிஞ்சு போச்சு. குட்டிபறவைகள் தன்னோட தாய் பறவை கொண்டு வரப்போற இரைக்கு காத்துட்டு இருக்குற நேரத்துக்கு முன்னாடியே கத்த ஆரம்பிச்சிருச்சக, அதுக கத்துன கத்துலே மரமும் மெல்ல அசைஞ்சு கொடுத்து ஒங்களை நானு தாங்கிட்டு இருக்கேன்னு தன்னோட இருப்பை சொல்லுக்கிட்டுச்சு, மரத்துக்கு கிழே இருக்கிற பொதர்'ல ஒடகார்ந்து கிடந்த காதல் பறவக ரெண்டுகளுக்கும் தெரிஞ்சு போச்சு கொஞ்சநேரத்துக்கு பிரியப்போறமின்னு அதுகளும் பேச முடிக்கப்போகுதுக.

"ஏண்டி! சும்மா நொண நொண'ன்னு பேசிட்டே இருந்தா! இன்னும் 4 மணிநேரத்திலே காலேஜ் ஆரம்பிச்சிரும்! இப்போ போயி பஸ்ஸை பிடிச்சா தான் நான் போயி சேருவேன்! பேசிமுடி! நானு கிளம்பனும்!"

"ஆத்தி! ரொம்பத்தான் கொணட்டுற! ஏம்மாமன் சீமையிலே போய் படிக்கப்போறன்னா வந்து ஒட்கார்ந்து கிடக்கோம்! இங்கயிருந்து போயி இன்னோரு பொட்டக்காட்டுலே இருக்கிற காலேஜ்'க்கு போவப்போற? அதுக்கு எதுக்கு இம்புட்டு அலட்டலு?"ன்னு தன்னுடைய அத்தைமகன் சரவணனிடம் மகாலெட்சுமி என்ற வாயாடி சொல்லிமுடிந்தாள். சரவணன் திண்டுக்கல் அருகே இருக்கிற பொறியல் கல்லூரி மாணவன், இவளும் அவனும் சில வருடங்களாக ஒருவர்கொருவர் காதலிக்கின்றனர், மகாலெட்சுமி் அப்பாவின் உடன்பிறந்த தங்கை மகன்தான் சரவணன், அதுவுமில்லாமால் சரவணனின் சொந்த அக்காவை தான் மகாலெட்சுமி அண்ணனுக்கு கல்யாணம் செய்திருந்தார்கள்.

"அடியே எருமை மடியிலே இருந்து எந்திரி மொதல்ல! நான் கிளம்புறேன், வெள்ளிக்கிழமை ராவுலே பார்க்கலாம்!"

"என்னா மாமா! கிளம்புறீயா? சரி நீ வர்றவரைக்கும் ஈரம் காயாத அளவுக்கு ஒன்னை கொடுத்துட்டு போ?"

"அடியேய்! எந்திருடி! யாரோ வர்றமாதிரி இருக்குடி?"

"ஹிம் யாரு வர்றப்போற இங்க? இந்த நேரத்திலே? எல்லாமே ஒன்னோட ஒடப்பொறப்பு என்னோட நாந்துனா சிறுக்கிதான்"

"ஏலே! எவடி அது என்னோட தம்பியை கக்கத்துலே போட்டு கசக்கி பிழிச்சிட்டு கெடக்குறது?"ன்னு கோபம் கொண்டவளாய் அங்கே வந்தாள் சரவணன் அக்கா சாந்தி.

"ஆமாம்.. ஒன்னோட தம்பி பஞ்சாரத்திலே சிக்காத சேவலு! நாங்க கக்கத்திலே பிடிச்சு எங்க வீட்டுக்கு தூக்கிட்டு போயிறோம்! ஏன் மதினி அது மட்டும் ஒனக்கு கழுகுக்கு மூக்கு வேர்த்தமாதிரி சரியா எங்களை தேடி வந்துறே?"

"நாயத்துக்கிழமை ராப்பொழுது பூராவும் தூக்கமா மணி 4ஆனதும் ஓடி வறேலே! அதுமாதிரிதான் நானும் நீ வந்த ஒருமணி நேரம் கழிச்சி வந்துருவேன்!"

"யக்கா! நல்லவேளை நீ வந்து இந்த ராட்சசி'கிட்டேயிருந்து காப்பத்துனே? நான் கிளம்புறேன், இப்போ போனாந்தான் மருத போயி சேர்த்து அங்கயிருந்து காலேஜ் பஸ்ஸை பிடிச்சி சரியா காலேஜ்'க்கு போகமுடியும்! வெள்ளிக்கிழமை சாயுங்காலம் வந்துறேன்!"

"ஏய் இந்தா! நான் கேட்டதை கொடுக்கமே போறீயே? எல்லாமே ஒன்ன சொல்லனும்! எங்கண்ணனை போட்டு பாடப்படுத்துறேன்னு பத்தாமே என்னையும் உசுரே வாங்குற? போய் இப்போ நல்லா தூங்கு?"

"தம்பி நீ கெளம்புடா! இந்த பொசக்கெட்டவளா நான் இழுந்துட்டுப் போறேன்! ஏண்டி யாருடி உசுர வாங்குறா? ஒங்க நொண்ணன் தான் நோண்டுறதுதான் பெருசா இருக்கு? இதிலே நீ வேற?"

"ஏய் இங்கப்பாரு! ஒன்னோட தொம்பி படிச்சி முடிஞ்சதும் நாங்க அவனுக்கு படிச்சப்பிள்ளய தான் கட்டிக்கொடுப்போமின்னு எங்காது படவே பேசிட்டு திரியுற? எனக்கு அது பிடிக்கலை! அவ்ளோதான் சொல்லிட்டேன்!"

"ஆத்தி! மாரியாத்தா! என்ன பண்ணிறிருவே? எங்கப்பன் என்ன சொல்லுதோ? அதத்தான் எந்தம்பி செய்வான்!"

"ம்ம் என்னபண்ணுவேனா? அந்த கெழவனை சோத்துலே உப்புஒறைப்பு போடாமே சோத்தை போட்டுந்தான் கொல்லணும்! விஷம் வைச்சாவா நீங்கல்லாம் சாகப்போறீங்க?"

"சிறுக்கி! எங்கவீட்டுக்கே வரலை? அதுக்குள்ளே எங்கப்பனுக்கு ஒழுங்கா கஞ்சி ஊத்தமாட்டேன்னு சொல்லுறீயே? எந்தம்பிக்கு நல்லபொண்ணாந்தாண்டி பார்க்கணும்"

"பார்ப்பே! பார்ப்பே! அதுக்கப்புறம் ஒன்னோட மொகத்தை சுடுப்பாறையிலே வைச்சி தேய்க்கமே விடமாட்டேன் நானு"

"அடியேய்! வீடு வந்தாச்சு! போய் செவன்னேன்னு மேவேலையே பாரு!"

"ம்ஹீக்கும் இவளுக மட்டும் அத்தை மகனை தொரத்தி தொரத்தி லவ் பண்ணுவாங்களாம் அவியங்களே கலியாணமும் பண்ணிக்குவாங்களாம்! நாங்க பண்ணா மட்டும் வந்துறாளுக எடஞ்சலை கொடுக்கிறதுக்கு"

மகாலெட்சுமிக்கு அந்த நாளும் அதற்க்கப்புறம் வரும் நாலு தினங்களும் வெறுமையாக கழிந்தது, அவளுக்கு இருக்கும் சந்தோஷமான தினங்களான சனி ஞாயித்துக்கிழமைகள் தான். சரவணனுக்கு காலேஜில் ஸ்பெசல் கிளாஸோ, இல்லை வேறு எதாவது வேலை இருந்தால் ஊருக்கு வரமாட்டான், அத்தினங்களில் இவள் சாப்பிடவே மாட்டாள்.வெள்ளிக்கிழமை ராத்திரி பத்துமணிக்கே சரவணன் வந்தாலும் அவனை பார்த்துட்டு வந்துட்டு தான் அன்னிக்கு ராத்திரியே தூங்குவாள். அந்தா இந்தா'வென்று வெள்ளிக்கிழமையும் வந்துவிட்டது. ஆனால் அவளுக்கு முன்னாடியே சரவணனை பார்க்க கிளம்பிவிட்டாள் அவள் மதினி சாந்தி.

"ஏண்டா தம்பி! இன்னும் படிப்பு முடிய ஏழெட்டு மாசந்தானே இருக்கு? ஒன்னோட தோஸ்த் ஏதோ படிப்புக்காக என்னோமோ பொரஜக்ட் அது ராக்கெட் பண்ணப்போறன்னு ஏதோ சென்னை,பாம்பே போறேன்னு சொன்னான்? நீ எங்கயும் போவலியா?"

"யக்கா அது பேரு பொரஜக்ட் இல்ல! பிரஜெக்ட்! நான் இங்கேனதான் மருதயிலே பண்ணப்போறேன்! இன்னும் ஆறுமாசந்தான் அதுக்கப்புறம் சுத்தமா படிப்பு முடிஞ்சிரும்! வேலையும் கிடைச்சிருமின்னு நினைக்கிறேன்."

"அப்போ நீ எந்த வெளியூருக்கும் போவலியா? இந்த பக்கிசிறுக்கியே பார்க்கதானே இங்கேயே அந்த பொரஜக்டை பண்ணுறேன்னு சொல்லுறே?"

"ஐயோ சும்மா இரு! அப்பன் காதிலே ஏதுவும் விழுந்து தொலைஞ்சிர போவுது! அதுப்பாட்டுக்கு உடுக்கை அடிக்காமலே சாமியாடும்"

"ஏய் என்னாடா? படிக்கிற இடத்துலே எல்லாப்பயலுவெல்லும் வெளியூர் போறாங்கன்னா நீ போகாத காரணம் அதுதானா? ஏதாவது படிக்கிறதுலே கோளாறு வந்துச்சுன்னு வை அப்புறமா ரவை ரவையா உரிச்சு உப்புக்கண்டம் போட்டு ஊருக்கே விருந்து வைச்சுருவேன் ஆமாம்"ன்னு தன்னுடைய வழக்கமான பாணியிலே திட்டி முடித்தார் சரவணன் அப்பா சுப்பையா.

"அதெல்லாம் இல்லப்பே! மருதக்குள்ளே எங்களுக்கு அதெல்லாம் கிடைக்கிது! இனிமே வெளியூரெல்லாம் போவவேண்டியதில்லை! யக்கா கிளம்பு நீயி! நானும்கூட வர்றேன் ஒன்னோட வீட்டுக்கு"

சாந்தி வீட்டை நோக்கி செல்லும் ஒத்தயடி பாதையில இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

"யக்கா நான் ஒன்னை கேட்கணும். உண்மையா பதிலை சொல்லுவியா?"

"கேளுடா? பதில் சொல்லுறேன்!"

"ஒனக்கு மகா'வே பிடிக்கலையா? எதுக்கு அவக்கூட ஓயாமே வைஞ்சிட்டே இருக்கே? அதுவுமில்லாமே எனக்கு வேற பொண்ணுதான் பார்க்க போறேன்னு சொல்லிட்டு வேற இருக்கே?"

"அதெல்லாம் பொய்க்குதான்! நீயும் அவளும் பழகுறதுலேயோ கல்யாணம் பண்ணிக்கிறதிலேயோ எனக்கு எந்த பிரச்சினையும் இல்லடா? நீங்க ரெண்டு பேரும் வரைமுறையில்லாமே காடுக்கரை, கமலக்காலு நெழலு'ன்னு ஒதுங்கி கெடந்தா அப்புறம் என்ன எங்களுக்கெல்லாம் மருவாதை இருக்கு? அதுதான் அடிக்கடி வந்து கண்டிக்கிறேன். அதுவில்லாமே அவ ஒரு விஷக்காரி அவளையெல்லாம் அப்பிடி வளர்ந்து கொண்டுவந்தாதான் என்னோட தம்பிக்கு வாழ்க்கை நல்லாயிருக்கும்."

"ம்ஹீம் ரெண்டு பேரும் ஒரேமாதிரி தான் பதில் சொல்லுறீங்க. அவ ஒன்னோட சடமுடியை பிடிச்சு தினமும் ஆட்டுனாதான் சாப்பிடுவேன்னு சொல்லுறா?"

"அப்பிடியெல்லாம் சொல்லுறாளா? தம்பி படிக்கிற காலத்திலே சரியா படிச்சி முடிஞ்சுறா? எதையாவது மனசை போட்டு கொழப்பிட்டு கோட்டை விட்டுறாதே? அப்பனுக்கு வெவசாயமும் அழிச்சி போச்சு! ஒன்னை படிக்க வைக்கிறேன்னு கெணறு கெடந்த தோட்டத்தையும் வித்து புடுச்சு, என்னத்தையே இருக்கிறத வைச்சி இப்போ ஜீவனை ஓட்டிக்கிட்டு இருக்கு நம்ம குடும்பம்! நீ தலையெடுத்துதான் இனிமே நாமெல்லாம் தழைக்கனும், ஒன்னை இந்தளவுக்கு படிக்க வைக்க நம்ம அப்பன் ரொம்ப சிரமப்படுதுடா! நீ சீக்கிரமே சம்பாரிச்சு அதை இன்னும் கொஞ்சநாளிலே சும்மா இருக்கவிடுடா"

"யக்கா! அதல்லாம் கவலையே படாதே! நீ சொன்னமாதிரி இன்னும் ஏழெட்டு மாசந்தான் படிப்பு முடிஞ்சிரும் , அதுக்குள்ளே கெம்பஸ் செலக்சனிலே வேலை கிடைச்சிருமின்னு நம்புறேன்! அதுக்கப்புறம் பிரச்சினையே இல்லை! என்ன வேலைன்னு கிடைச்சா வெளியூரிலே தான் வேலை கிடைக்கும் அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு!"

"ஆக ஒனக்கு அவளை பார்க்கமே இருக்கிறது தான் கஷ்டமா இருக்கும்! எங்களை பார்க்காதது எல்லாம் அப்பிடி இருக்காதா?"

"இதுக்கு நான் என்ன பதில் சொல்ல? எல்லார்த்தையும் பார்க்கமே இருக்கிறதும் கஷ்டந்தான். நம்ம அப்பன் முன்னமாதிரியெல்லாம் ஏன் என்னை வையிறதே இல்ல?"

"அதுக்கு என்ன தெரியப்போகுது! நீ படிக்கிறே என்ன மார்க் வாங்குறேன்னு? இனி இங்கன வந்தா இவ பின்னாடியே திரியறேன்னு சொல்லாமே சொல்லி திட்டும்? இப்போதான் நீயி படிச்சி முடிக்கப்போறே? அதுமில்லாமே சீக்கிரமே வேலையும் கெடைச்சிருமின்னு தெரியவந்ததும் இப்போல்லாம் செவனேனு சந்தோஷமா இருக்கு"

"யக்கோவ்! ராட்சாசி வர்றா! ஒன்னோட தலைமுடியை தயாரா வைச்சிக்கோ! பிடிச்சி ஆட்டத்தான் இம்புட்டு வேகமா வர்றா?"

"அடியேய் சிறுக்கி! பத்துமணிக்கு என்னாடி ஒனக்கு இங்கேன வேலை?"

"ஆங் என்னோட பிருத்துவிராசரு குருதயிலே வர்றாரு, அவரை எதிர்கொண்டு மணமாலை வாங்கப்போறேன்! எனக்கு முன்னாடியே ஒன்னோட தொம்பிய பார்க்க போயிட்டியா'க்கும்?"

"யாத்தி மாரியாத்தா! ஒன்க்கிட்டே பேசணுமின்னு தாண்டி அவனே இங்கன வாறான்! அவன்கிட்டே என்னான்னு கேளு! நானு இங்கெனந்தான் நிக்கிறேன்"

"அடிய்யே மகா! நான் சொல்லுறதை கேட்டு அழுவாதே? இன்னும் படிப்பு முடிய கொஞ்சநாளுந்தான் இருக்கு! அதுனாலே நான் இங்க வாரவாரமெல்லாம் வந்து பார்க்கமுடியாது! அதுக்கப்புறமும் வேலைக்கு இண்டர்வியூ அதுஇதுன்னு நிறைய வேலை இருக்கு! அதுதான் ஒன்னை பார்த்துட்டு சொல்லிட்டு போலாமின்னு வந்தேன்!"

"ம்ம் எனக்கு ஏற்கெனவே இது தெரியும்! நீ இங்க இனிமே அடிக்கடி வர்றமாட்டேன்னு என்னோட ஃபிரண்ட் சொல்லிட்டா! அவளும் ஒன்னமாதிரி தானே படிக்கிறா! நாந்தான் வயசிலே ஒழுங்க படிக்காமே இப்போ சாணி பொறுக்கிறேன்"

"படிப்பை முடிஞ்சு வந்ததும் எங்கப்பன்'கிட்டே சொல்லி அனுமதி வாங்கிதரதுக்கு சாந்தியக்கா பொறுப்பு ஏத்துக்கிச்சு! அதுனாலே சந்தோஷமா இருடி!"

"ஓ என்னோட நாந்துனா அதெல்லாம் செய்யுறாங்களா? கணக்குவழக்கு இல்லாமே திட்டந்தான் தெரியுமின்னு தான் நெனைச்சேன்!"

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னுடைய கல்லூரி இறுதி படிப்புக்குண்டான வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு கல்லூரி கேம்ப்ஸ் செலக்சனிலும் பெரிய கம்பெனி வேலைக்குண்டான அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தன்னோட ஊருக்குள் வருகிறான் சரவணன். உறுதி அளித்தப்படியே சாந்தி அவளோட அப்பாவிடம் தன்னோட தம்பி,மகாலெட்சுமி கல்யாணத்தை பத்தி பேசுகிறாள்.

"யப்பே! தம்பியும் படிச்சி முடிச்சிட்டான்! அவனுக்கு வேலையும் கிடைச்சிருச்சுன்னு வேற சொல்லுறான்! இனிமே அவனுக்கு எந்நாந்துனா கொண்டி மாடு மகா'வே முடிஞ்சி வைச்சிரலாமா?"

"ஏந்தாயி அதுக்கு நானு அனுமதிக்கமாட்டேன்னு சொன்னா நீ என்ன பதில் சொல்லுவே?"

"ம்ம் என்னாப்பே இப்பிடி கேட்கிறே?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல தாயி! நான் இன்னைவரைக்கும் அந்த பயலே ஆளாக்கி பார்க்கனுமின்னு தான் கண்டிப்பா இருந்தேன், காலேஸு போறன்னு சொன்னாங்கிறதுக்காக காடு கரையே வித்துதான் கொடுத்தேன், இவனும் ஒழுங்கதானே போயிட்டு வந்துட்டு இருந்தான், ஒன்னோட கலியாணத்துக்கப்புறம் பயக்கிட்டே மாத்தம் வந்துதான் அவனை சத்தம் போட்டுட்டே இருந்தேன், என்னோட சொல்லுக்காக தானோ என்னோவோ ஏதோ படிச்சி முடிச்சிட்டான், வேலையும் வாங்கிப்பிட்டேன்னு சொல்லுறான். ஒன்னே ஒன்னு ஆத்தா! நான் பெத்த ரெண்டுலே ஒன்னுக்கூட தரிசா போயிறக்கூடாதுன்னு நான் கடவுளா கும்பிடற இந்த மண்ணுக்கிட்டே வேண்டிக்கிட்டே இருப்பேன். விதை நெல்லை வித்துதான் சோறு பொங்கி திங்கனுமின்னு சொன்னா திங்காமே சாவான் வெவசாயி, என்னை மாதிரி மண்ணை நம்பி பொழைச்சனுவனுக்கு அதே வித்து அடுத்த விதை முளைக்க வைக்கனுமின்னு இருந்துச்சு, அது பதறா போயிரக்கூடாதுன்னு தான் பொத்தி வளர்த்தேன், இப்போ விளைஞ்சு அது கதிரா தான் வந்துருக்கு. இன்னவரைக்கும் கொழு கொம்பா நான் நின்னுட்டேன். அப்பனா இருந்து மவனே வளர்த்து காட்டிட்டேன், இனிமே ஏட்டிலே சொன்னமாதிரி அவன் என்னை ஒலகத்துக்கு அடையாளம் கட்டுவானுன்னு நம்புறேன், அவனோட ஆசைக்கோ விருப்பத்துக்கோ என்னிக்குமே குறுக்கிலே நிக்கமாட்டேன்"

இவ்வாறு சுப்பையா சொல்லி முடிந்ததும் அங்கே வந்து சேருகிறாள் மகா.

"ஆத்தி அப்பே! தம்பி மேலே இம்புட்டு பாசமா தான் இருந்தியா! வேதாந்தி மாதிரி ஒலக ஞானமெல்லாம் பேசுறே? கேட்டியாடி கொண்டிமாடு மகா! எங்கப்பு ஒங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிறுச்சு"

"ஹிம்! அது அப்போ பேசிட்டு இருக்கிறோப்பவே வந்துட்டேன்! அதுதானே சொன்னனே? நீங்களாம் விஷக்கார குடும்பம் ஒங்களுக்கெல்லாம் விஷம் வைச்சாலும் கொல்லமுடியாது! இனி இந்த பெருசுக்கு பழையசாதமும்,புளிச்சாறும் போட்டு கொன்னாத்தான் உண்டு."

Monday, May 14, 2007

ஆகீத்தா! ஐவத்து!!!

வாரம் பூராவும் அநியாயத்துக்கு வேலை வேலைன்னு கண்ணுமண்ணு தெரியாமே பார்த்து பார்த்து கண்ணெல்லாம் பூத்து போச்சு, சரி நாமெல்லும் எங்கனயாவது போய் F5 ஆகிட்டு வரலாமின்னு பெங்களூரூ (பன்னேர்கட்டா) தேசிய மிருககாட்சி சாலைக்கு ஒரு குரூப்பாதாய்யா கிளம்பிபோனோம்.

நம்மளை பேச்சுலர் வாழ்க்கையே வெறுப்பேத்துற மாதிரி எல்லா பயலுகளும் ஜோடியோட திரியுறானுக!

ஹிம் என்னத்த சொல்ல அது ஒரு இம்சையா போச்சுங்க..... :(


நம்ம முன்னோரெல்லாம் பார்க்க மிருகக்காட்சி சாலைக்கெல்லாம் போயிருக்கியா'னு நம்ம பயப்புள்ள போன் போட்டு விசாரிச்சான்! அவன் எதுக்கு அப்பிடி கேட்டானுன்னு ஒரு இடத்திலே நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க!



(பி.கு:- செவப்பு கலருலே இருக்கிறது நானு விட்ட சவுண்டு)





அமைதியாதானே இருக்கோம், எதுக்கு அந்த சைட்லே இருந்து ஒரு போட்டோ?




இந்த சைட்லே இருந்து போட்டோ!! நாங்கெல்லாம் ஆம்பிளக'டா மண்டயா!




ஓ! ஆம்பி்ளக எலலாம் இவ்வளோ அழகா இருப்பாங்களா??? :)




உங்களுக்கு யாருங்க ஆபிசர் வெள்ளை பெயிண்ட் அடிச்சது??



சார்! கொஞ்சம் கேமரா பக்கத்திலே வாங்களேன்....!




இன்னும் கொஞ்சம் பக்கத்திலே வாங்க!!!




ஏன் சார்!! ஒங்களுக்கு எலும்புகறி பிடிக்காதா???





ஒன்னோட மொகரகட்டை'கெல்லாம் நான் போஸ் கொடுக்கமுடியாது...




இவனுகளுக்கு பொழுது போகலன்னா கேமேரா'வா தூக்கிட்டு வந்துறானுக? பெரிய புரொபசனல் கொரியர் மண்டயனுக!





சிபி'கிட்டே நீங்கதான் தொடை கறி கேட்டிங்களா???





பொழப்பு கெட்டவன் எதை போட்டோ எடுக்கிறான் பாரு???



அய்யோ!! அய்யோ!! பார்த்துட்டான்! பார்த்துட்டான்!!



தம்பி! ஒனக்கு இந்த டீ.ஆர் தெரியுமா?



ராசா அவருக்கிட்டே சொல்லி வை!



என்னாவா?? நேத்து ரெண்டு பசங்க வந்து என்னை பார்த்து "ஹைய்யா! டீ.ஆர்'ன்னு சவுண்ட் விடுறாய்ங்க!!



அதை கேட்டுட்டு எங்க கரடி இனத்துக்கே வந்து அவமானமா நாங்கெல்லாம் நினைக்கிறோம்.





தூரமா நின்னா எங்களுக்கு எப்பிடி தெரியும்? பக்கத்திலே வாம்மா மின்னலு?




சொன்னப்பேச்சை கேட்டு பக்கத்திலே வர்றீயா??? வாம்மா !! வா!!





டாய் ஓடிப்போயிரு! இல்லை, வரிக்குதிரை'கிட்டே கடி வாங்கி செத்தவன்னு பேரு வாங்கிறாதே?




"ஹலோ! எதுக்கு இப்பிடி கோவிச்சுக்கீறீங்க? நீங்க ஆம்பிளயா? பொம்பளயா'ன்னு கேட்டதுக்கு இப்பிடியா கோவம் வரும்?"





வந்துட்டானுக! கம்பி வழியா போட்டோ எடுக்க!




அடேய்! ஏண்டா நீயும் திங்க ஒன்னுமே வாங்கிட்டு வரலையா??




மழை பெய்ஞ்சா ஒங்க புள்ளியெல்லாம் அழிச்சிறாதா??



உங்களுக்கு யாருங்க ஆபிசர்! பல் விளக்கி விடுவாங்க?





அடேய்! கூண்டுக்கு வெளியே நிக்கிறோமின்னு திமிரா?



இவிய்ங்களுக்கு போஸ் கொடுத்து கொடுத்தே டயர்டாகி போச்சு..




ஹைய்யா! இப்போ போட்ட சோமாஸ் குளிக்கிது...,



ஓடி வந்துரு! யாரு குளிச்சாலும் பார்க்கிறாய்ங்க போக்கத்த பசங்க.....




அடேய்! நான் இப்போ சாப்பிட போறேன்... அதை போட்டோ எடுத்து வச்சு அதுக்கு ஒரு கமெண்ட் போட்டு வைக்காதே!




ஏலே! அரைடவுசரு சொன்னா கேளுடா!




விடு! விடு! அவனை பார்த்தாலே தெரியலை! திருந்தாத ஜென்மமின்னு!



ஹிம்! இப்போ பாரு ! சைட்'லே பொட்டிய தூக்கிட்டு வந்துட்டான்!




ஒன்னையெல்லாம்!




இந்த மரத்தை பிடுங்கி அடிச்சாதான் திருந்துவே ராஸ்கல்....



நோ கமெண்ட்ஸ்... ஹி ஹி