மதுரை வலைபதிவர் சந்திப்பு
முகம் தெரியா மனிதர்கள், சில வேளைகளில் கருத்து ஒற்றுமை என்பதை பேச்சளவில் கூட ஏற்றுக்கொள்ளா மனிதர்கள், இவ்வளவு முரண்பாடுகள் நிறைந்த எங்களை ஒன்றிணைந்தது தமிழ், அதுவும் தமிழ் வலையுலகு.
சிலவேளைகளில் பேச்சு,எழுத்து அனைத்திலும் ஆங்கிலமாகி போனவுடன் எனக்கு சின்ன சலிப்பு தட்ட ஆரம்பித்தது. என்னவொரு வாழ்க்கை அதுவும் நம்முடைய தாய்மொழியில் எழுதவோ, சுயகருத்துகளை பிறரிடம் பகிர்ந்துக் கொள்ளக்கூட வழிவகை இல்லமால் போயிட்டனோ என்று???.
அப்போது அறிமுகமான வலைப்பூ உலகத்தில் சிலவகைகளை பதிய ஆரம்பித்தேன். நான் சில பதிவர்கள் பதிவுகளை படித்து சிலாகித்து இருக்கிறேன், எப்படி இவ்வளவு அருமையாக எழுதுகிறார்கள், விவாதங்கள் நடத்துக்கிறார்கள் என்று. அதையெல்லாம் நான் செய்ய முயன்று தோற்றுப்போயிருக்கிறேன்.ஆனால் அவர்களின் அன்பை சம்பாரித்து(???) அவர்களின் குழுமத்தில் ஒரு அங்கத்தினராக இடம் பிடித்திருக்கிறேன். வலைப்பூ பதிவர் சந்திப்புக்கு கலந்துக் கொள்ள சென்றேன் என்றால் என்னையும் அங்கிகரித்து உள்ளார்கள் என்றே அர்த்தம்.
எதுக்கு இம்பூட்டு பில்டப்ன்னு நீங்க கேட்கறது புரியுது, அது ஒன்னுமில்லைங்க என்னையும் ஒரு மனிசனா மதிச்சு மீட்டிங்கெல்லாம் கூப்பிட்டாங்களே அதுவும் அதை பத்தி ஒரு பதிவு வேறே போடப் போறோமின்னு ரெண்டு நாளா யோசிச்சு மேலே இருக்கிற ஒரு பாரா எழுதினேன்.:)
வலைப்பதிவர் சந்திப்புன்னா போண்டா,டீ இல்லாமல் கூட நடத்தி காட்டமுடியிமின்னு செய்து காட்டிய தருமி ஐயாவிற்கு ஒரு நன்றி. ஆனா எல்லாப்பேத்துக்கும் ஓசிலே பவண்டோ, கைமுருக்கு,அதிரசம் கிடைச்சுச்சே. முருக்கு, அதிரசம் கொண்டுவந்த மகேஷ்க்கு நன்றி.
சந்திப்பு நடைப்பெற்ற இடமான அமெரிக்கன் காலேஜே பத்தி கொஞ்சுண்டு சொல்லிக்கிறேன். இது 1881 வருடத்தில் அமெரிக்க மெசனரிகளால் துவங்கப்பட்ட கல்லூரியாகும். அக்காலத்து பாணி சிவப்பு வண்ண அழகான கட்டிடங்களும், பசுமை நிறைந்த மரஞ்செடி கொடிகளால் சூழப்பட்ட அற்புதமான வளாகம்.
நான் போறப்பா சரியா மணி 3.05 ஆச்சு. மீட்டிங்க் 3 மணிக்குன்னு சொல்லிருந்தாங்க. நமக்குதான் இந்த பஞ்சு மிட்டாயே(Functionality)பிடிக்காதே. பேருக்கு அனுமதி வாங்குறமாதிரி சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லிட்டு உள்ளே போனேன். வாசலிலே தருமி,ஞானவெட்டியன் ஐயா,பிரபு ராஜதுரை,ஜி.ராகவன்,முத்து,மகேஷ் ஆகியோர் நின்று கொண்டு இருந்தார்கள்.
தருமி ஐயா எல்லாரும் சொல்ற மாதிரி மொதல்ல இருந்த போட்டாவுக்கும் நேரில் பார்க்கிறதுக்கும் துளியும் சம்பந்தமில்லாமல்தான் இருந்தார். கொஞ்சம் நேரங்கழிச்சு வந்த வித்யாக்கா என்னா தருமி சார் நீங்க பார்க்க ராம் மாதிரி யூத்தா இருப்பிங்கன்னு பார்த்தா அதவிட ரொம்ப சூப்பரா இருக்கீங்க'ன்னு ஒரு கமெண்ட் அடிச்சார். அதிலே இருந்தது எனக்கு உள்குத்தா இல்லே தருமி ஐயாவுக்கு வெளிக்குத்தான்னு தெரியலே. எனிவே வித்யா அதை மைண்ட்லே வச்சிருக்கேன், எப்போ தேவைபடுதோ அப்போ வந்து இந்த மாதிரி பட்டும் படாமே யாருக்காவது ஒரு குத்து விட்டுக்கிறேன். அப்புறமா இவருதாங்க ஜிரான்னு சத்தியம் அடிச்சு சொல்லறவரைக்கும் அவருதான் ஜி.ராகவன்னு வித்யா நம்பவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. என்னா பண்ண போட்டோவிலே இருக்கிறமாதிரி எப்பவும் இருக்கமுடியுமா என்னா???
ராஜ்வனஜ் வந்துச் சேர்ந்ததும் கல்லூரி வளாகத்திள்ளே இருக்கிற கேண்டினுக்கு சென்றோம்,. அங்கே இருக்கிற கல்பெஞ்சிலே உட்கார்ந்து கதைக்க ஆரம்பித்தோம். அதற்க்குள் வரவனையான் அவருடைய நண்பர் சுகுணாவுடன் வந்து சேர்ந்தார். வந்ததும் மொதல் கமெண்டே "போட்டோவிலே தான் ரொம்ப அழகா இருக்கீங்க" தருமியை பார்த்து. அனைவருடைய அறிமுகபடலம் தொடங்க ஆரம்பித்தது. அதில் ஞானவெட்டியன் ஐயா தன்னைப் பற்றி சின்ன உரைதான் ஆற்றினார். அதற்கப்புறம் யாருமே அறிமுகத்துக்காக வாயே திறக்கவில்லை.
எல்லாரும் மாதிரி நானும் தொடரும் போட்டுக்கிறேன்.
ஆளாளுக்கு வந்துக்கிட்டு போட்டோவிலெதான் அழகாக இருக்கீங்கன்னு சக்கை ஓட்டு ஓட்டுறானுங்க.. இந்த பயலே மாதிரி நான் ஏன் மாத்தினேன்னா'ன்னு ஒரு போஸ்ட் போட்டு படத்தே மாத்திப்பிடணும்.
35 comments:
அன்பு இராம்,
நான் சிறுவனென எண்ணி "ஐயா! அறிமுகப்படுத்திக்கங்க" அப்படின்னு சொல்லி என்னை ஏமாற்றிவிட்டார்கள்.
அப்புறம் நேரே விவாதத்துக்குள் சென்றுவிட்டனர். என்ன செய்ய?
ஹலோ! நான் 3 மணிக்கே(தொலைபேசியிலே)வந்துட்டு
திரும்பிட்டேன்
நல்லா ஆரம்பிச்சிருக்கிங்க
அப்படியே தொடருங்க
உங்க போட்டோ எங்க ராம்?
அத போடுங்க மொதல்ல!
போண்டா சாப்பிடாமல் ஒரு வலைப்பத்ஹிவர் சந்திப்பா?
ஆச்சரியமா இருக்கே! அதிரசம், பவண்டோ, கைமுறுக்கு(மணப்பாறையா?) வித்யாசமான சந்திப்புதான்!
:-)
ராம்,
//என்னையும் ஒரு மனிசனா மதிச்சு மீட்டிங்கெல்லாம் கூப்பிட்டாங்களே அதுவும் அதை பத்தி ஒரு பதிவு வேறே போடப் போறோமின்னு ரெண்டு நாளா யோசிச்சு மேலே இருக்கிற ஒரு பாரா எழுதினேன்.:)//
மதுரைல நடக்கற மீட்டிங்கு உங்களை கூப்பிடாம விட்டா நாங்க விட்டுடுவோமா?
நீங்க போட்டோ மாத்தன பதிவ வச்சி ஒரு பதிவ போடலாம்னு பாத்தேன்... அப்பறம் அது மாறி வேற பதிவா சங்கத்துல வந்துட்டு இருக்கு ;)
சரி... அடுத்த பதிவ போடுங்க ;)
ஏனய்யா ராம்,
எப்போ (கெ)எடுத்தீங்க இந்தப் படமெல்லாம் - எனக்கே தெரியாமல்? வெளியே பதிவுலகத்தில தலைகாட்ட முடியாது போல. உங்க close up திறமைக்கு நானா தீனி? :(
//உங்க போட்டோ எங்க ராம்?
அத போடுங்க மொதல்ல!//
தம்பி! என்னப்பா இப்பிடி கேட்டுப்புட்டே? மதுரை மாநகரமே ஒம்மேல கடுப்புல இருக்காம் நீ இப்படி ஒரு கேள்வியைப் பல்லு மேல நாக்கு போட்டு கேட்டுப்புட்டேன்னு....
தருமி ஐயா பதிவுல மன்மதன் சிம்புவை நீ இன்னும் பாக்கலியா? அது யாருன்னு நினைக்கிறே?
:)
//அன்பு இராம்,
நான் சிறுவனென எண்ணி "ஐயா! அறிமுகப்படுத்திக்கங்க" அப்படின்னு சொல்லி என்னை ஏமாற்றிவிட்டார்கள்.//
வாங்க ஐயா,
வருகைக்கு நன்றி.
//அப்புறம் நேரே விவாதத்துக்குள் சென்றுவிட்டனர். என்ன செய்ய? //
:-)))
//ஹலோ! நான் 3 மணிக்கே(தொலைபேசியிலே)வந்துட்டு
திரும்பிட்டேன்//
வாங்க சிவஞானம் ஐயா,
அடடே நீங்க விர்ச்சுவலா வந்தது எனக்கு தெரியாதே... :-))
//நல்லா ஆரம்பிச்சிருக்கிங்க
அப்படியே தொடருங்க //
மிக்க நன்றி ஐயா... கண்டிப்பாக தொடருகிறேன்.
//உங்க போட்டோ எங்க ராம்?
அத போடுங்க மொதல்ல!//
வாப்பா கதிரு,
வேணாம் அந்த போட்டோ வச்சுதான் நம்ம மானம் போரமில்லே ஏறிச்சு... எதுக்கு இன்னொரு தடவை.... :-)))
//போண்டா சாப்பிடாமல் ஒரு வலைப்பத்ஹிவர் சந்திப்பா?
ஆச்சரியமா இருக்கே!//
எனக்கே இது ரொம்ப ஆச்சரியமாதான் இருந்திச்சு..:-)
//அதிரசம், பவண்டோ, கைமுறுக்கு(மணப்பாறையா?) வித்யாசமான சந்திப்புதான்//
கைமுருக்கு மகேஷ் அம்மா செய்ததாம். மிக சுவையாக இருந்தது.
// குமரன் (Kumaran) said...
:-)
//
வாங்க குமரன் ததா...
வருகைக்கு நன்றி!!!
//மதுரைல நடக்கற மீட்டிங்கு உங்களை கூப்பிடாம விட்டா நாங்க விட்டுடுவோமா? //
வாப்பா பாலாஜி,
இப்போ என்னை வச்சு நீ காமெடி, கீமடி பண்ணலெயே????
//நீங்க போட்டோ மாத்தன பதிவ வச்சி ஒரு பதிவ போடலாம்னு பாத்தேன்... அப்பறம் அது மாறி வேற பதிவா சங்கத்துல வந்துட்டு இருக்கு ;)//
அப்பிடியா உனக்கும் அந்தமாதிரி சோககதை இருக்கா.... சீக்கிரம் போடு நாங்கெல்லாம் சிரிக்கணும்... :-)))
//சரி... அடுத்த பதிவ போடுங்க ;) //
கண்டிப்பா போட்டுறேன்.
//ஏனய்யா ராம்,
எப்போ (கெ)எடுத்தீங்க இந்தப் படமெல்லாம் - எனக்கே தெரியாமல்? //
வாங்க தருமி ஐயா...
உங்களை இந்தமாதிரி போஸ் கொடுக்க வைக்க எவ்வளவு சிரமம் பட்டேன் தெரியுமா... சூப்பரா இருக்கு பாருங்க, கன்னத்திலே கை வச்சிருக்கிறே போட்டோ!!! :-)
//வெளியே பதிவுலகத்தில தலைகாட்ட முடியாது போல. உங்க close up திறமைக்கு நானா தீனி? :( //
ஹி ஹி
//வாப்பா பாலாஜி,
இப்போ என்னை வச்சு நீ காமெடி, கீமடி பண்ணலெயே????
//
இன்னும் கண்டுபிடிக்கலையா?
;)
//அப்பிடியா உனக்கும் அந்தமாதிரி சோககதை இருக்கா.... சீக்கிரம் போடு நாங்கெல்லாம் சிரிக்கணும்... :-)))
//
சோக கதையெல்லாம் இல்ல... சும்ம உங்களை கலாய்ச்ச பொண்ணுங்களுக்கு எதிரா ஒரு பதிவு போடலாம்னு பாத்தேன் ;)
சரி அந்த துன்பியல் சம்பவத்தை எதுக்கு பரப்பனும்னு விட்டுட்டேன் ;)
//உங்க போட்டோ எங்க ராம்?
அத போடுங்க மொதல்ல!//
தம்பி,
அவர் போட்டோ தருமி ஐயா பதிவிலும், வரவணையான் பதிவிலும் வந்துச்சே பாக்கலையா? ;)
//தம்பி! என்னப்பா இப்பிடி கேட்டுப்புட்டே? மதுரை மாநகரமே ஒம்மேல கடுப்புல இருக்காம் நீ இப்படி ஒரு கேள்வியைப் பல்லு மேல நாக்கு போட்டு கேட்டுப்புட்டேன்னு....//
வா தல,
ஏன் வரும்போதே என்மேலே இப்பிடி ஒரு கொலைவெறி... மதுரை மாநகரமா எங்க தெருவிலே இருக்கிற சில பேத்துக்கே என்னை அடையாளம் தெரியலை. நான் என்னா உன்னை மாதிரி பெரியபுள்ளியா எல்லாருக்கும் தெரியரதுக்கு..... :-)
//தருமி ஐயா பதிவுல மன்மதன் சிம்புவை நீ இன்னும் பாக்கலியா? அது யாருன்னு நினைக்கிறே?//
அந்த விஷமபிரச்சாரத்தே பரப்பிவிட்டது நீதானா தல... :-)
//தம்பி,
அவர் போட்டோ தருமி ஐயா பதிவிலும், வரவணையான் பதிவிலும் வந்துச்சே பாக்கலையா? ;)//
அது ரொம்ப சிறுசா இருக்கு! தருமி அய்யா போட்டொ சைசுல பெரிய போட்டாவா போடுங்க!
//தம்பி! என்னப்பா இப்பிடி கேட்டுப்புட்டே? மதுரை மாநகரமே ஒம்மேல கடுப்புல இருக்காம் நீ இப்படி ஒரு கேள்வியைப் பல்லு மேல நாக்கு போட்டு கேட்டுப்புட்டேன்னு....//
இல்லையே... கீபோர்டுல மேல வெரல வச்சிதான இந்த கேள்விய கேட்டேன்.
ராம்க்கு பின்னால மதுரை மாநகரமே திரண்டு நிக்குறத பாக்கும்போது கண்ணுல தண்ணி வருது. :))
//நானும் தொடரும் போட்டுக்கிறேன்.//
மன்மதன் சிம்புவிலிருந்து வல்லவன் சிம்புவாக....
ராயல் சூப்பர் ஸ்டார் ராம் :))
//அது ரொம்ப சிறுசா இருக்கு! தருமி அய்யா போட்டொ சைசுல பெரிய போட்டாவா போடுங்க!//
அட பாவமே!!! அதை திருஷ்டி பொம்மையா யூஸ் பண்ணப்போறீங்களா என்ன..???
//இல்லையே... கீபோர்டுல மேல வெரல வச்சிதான இந்த கேள்விய கேட்டேன். //
இந்த மாதிரியெல்லாம் நல்லா லாஜிக்காதான் பேசத்தெரியது...
//ராம்க்கு பின்னால மதுரை மாநகரமே திரண்டு நிக்குறத பாக்கும்போது கண்ணுல தண்ணி வருது. :)) //
இந்த மாதிரியெல்லாம் பேசக்கூடாதின்னு தெரியாதா என்னா???
உன்னோட கண்ணுலே தண்ணி வருது... எங்கூருலே இருந்து எனக்கு கல் வரப்போகுது. நீயெல்லாம் ஒரு ஆளூ!! உனக்கு பின்னாடி ஊரே திரண்டு வேற நிக்கனிமான்னு.....
:-))))
வாங்க ராம். உங்களைச் சந்திச்சதுல மகிழ்ச்சி. அன்னைக்கு சந்திப்பு இருக்குங்குற வெவரமே எனக்குத் தெரியாது. ஆகையால எனக்கு அது ஆச்சரிய சந்திப்புதான்.
உண்மைதான்.....லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு நாந்தான் ஜிரான்னு உறுதி படுத்துறதுக்குள்ள ஒரு வழி ஆச்சுது. கடைசியா நம்பீட்டாங்க. கண்ணாடி முகத்துக்கு இவ்வளவு பெரிய மாறுபாடு கொடுக்கும்னு இப்பத்தான் புரிஞ்சது.
//மன்மதன் சிம்புவிலிருந்து வல்லவன் சிம்புவாக....//
வாப்பா கப்பி,
வல்லவன் படத்தே பார்த்தியா??? அதுதான் அந்த கடுப்புலே என்னை கலாய்க்கிறே!!!!
//ராயல் சூப்பர் ஸ்டார் ராம் :)) //
பார்த்தியா நீயும் நானும் கொஞ்சநாளா ஒரு ஊருகாரய்ங்களா இருந்தோமில்ல்லே... இப்பிடி என்னை எக்கசக்கமா மாட்டிவிட்டுக்கிட்டு சிரிக்கிறீயே.... ??? இது நியாமா..தர்மமா..???
:)
//வாங்க ராம். உங்களைச் சந்திச்சதுல மகிழ்ச்சி. அன்னைக்கு சந்திப்பு இருக்குங்குற வெவரமே எனக்குத் தெரியாது. ஆகையால எனக்கு அது ஆச்சரிய சந்திப்புதான்.//
அடடே வாங்க ஜிரா,
உங்களை மதுரையிலே சந்திததில் மிக்க மகிழ்ச்சி... :-)
//உண்மைதான்.....லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு நாந்தான் ஜிரான்னு உறுதி படுத்துறதுக்குள்ள ஒரு வழி ஆச்சுது. கடைசியா நம்பீட்டாங்க.//
அய்யோ அது சரியான காமெடிங்க... நானும் பொய் சொல்லுறேன்னு என்னைய பார்த்துக்கிட்டே இருந்தாங்க.... :-))))
//கண்ணாடி முகத்துக்கு இவ்வளவு பெரிய மாறுபாடு கொடுக்கும்னு இப்பத்தான் புரிஞ்சது.//
:-)))
மொட்டை பாஸ் ராம் தலைமையில் நடந்த மதுரை வலைபதிவர் மாநாடு இனிதே நடைப்பெற்றதை அறிந்து உள்ளம் பூரிக்கிறது.
////ராயல் சூப்பர் ஸ்டார் ராம் :)) ///
குடுத்த காசுக்கு சரியா கூவி இருக்காங்க போல
//என்னையும் ஒரு மனிசனா மதிச்சு மீட்டிங்கெல்லாம் கூப்பிட்டாங்களே //
periya vishayam thaan raam
O makkal ella pakkamum adikadi santhikkeereenga pola..
good to know raam
//மொட்டை பாஸ் ராம் தலைமையில் நடந்த மதுரை வலைபதிவர் மாநாடு இனிதே நடைப்பெற்றதை அறிந்து உள்ளம் பூரிக்கிறது. //
வாப்பா புலி,
இது உனக்கே நியாமா இருக்கா... இப்பிடியெல்லாம் சொல்லாமா...:-)))
//குடுத்த காசுக்கு சரியா கூவி இருக்காங்க போல //
அது எப்பவுமே நடக்கிற விஷயத்தானே.... :-)))
//periya vishayam thaan raam
O makkal ella pakkamum adikadi santhikkeereenga pola..
good to know raam //
வாங்க கார்த்திக்,
மொத தடவையா நம்ம பக்கம் வந்திருக்கீங்க. ரொம்ப நன்றி.
//போட்டோவிலே தான் ரொம்ப அழகா இருக்கீங்க" தருமியை பார்த்து. // என்ற கமென் டுக்கும், தருமியின் கப்பல் கவிழ்ந்த போஸுக்கும்.. என்ன ஒரு பொருத்தம்..
தருமி, நீங்க ஏன் இந்தப் படத்தை உங்க ப்ரோபைலில் முயற்சிக்கக் கூடாது? ;)
// தருமி அய்யா போட்டொ சைசுல பெரிய போட்டாவா போடுங்க!//
அட பாவமே!!! அதை திருஷ்டி பொம்மையா யூஸ் பண்ணப்போறீங்களா என்ன..???//
ராம்,
இப்ப புரியுது ஏன் என் படத்தை இம்மாம் பெருசா போட்டீங்கன்னு... கவுத்திப்புட்டிங்களப்பா!! :(
//போட்டோவிலே தான் ரொம்ப அழகா இருக்கீங்க" தருமியை பார்த்து. // என்ற கமென் டுக்கும், தருமியின் கப்பல் கவிழ்ந்த போஸுக்கும்.. என்ன ஒரு பொருத்தம்..//
வாங்க பொன்ஸ்க்கா...
அந்த போட்டோ எடுக்கிறக்குள்ளே நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஹி ஹி அவருக்கே அந்த போட்டோ ரொம்ப பிடிச்சிருந்தாம். :-)
//ராம்,
இப்ப புரியுது ஏன் என் படத்தை இம்மாம் பெருசா போட்டீங்கன்னு... கவுத்திப்புட்டிங்களப்பா!! :( //
உங்க போட்டோ மட்டுமில்லே ஐயா... எல்லார் போட்டோவும் இருக்கு அதுக்கு ஏத்தமாதிரி கமெண்ட்'ஸிம் இருக்கு. அடுத்த பதிவிலே அதெல்லாம் போடுறேன்... :-)))
ராம்,
ரொம்ப லேட்டத்தாங்க பதிவ படிக்க முடிஞ்சது.. நல்லா எழுதி இருக்கீங்க.. நேர்ல பாத்த போதிருந்த அதே குறும்பு எழுத்திலயும்.. ம்ம்ம் கலக்குங்க..!
மதுரை சந்திப்பு மறக்க முடியாத ஒரு நல்ல நிகழ்வு..
வாழ்த்துக்கள்..
/ராம்,
ரொம்ப லேட்டத்தாங்க பதிவ படிக்க முடிஞ்சது.. நல்லா எழுதி இருக்கீங்க..//
வாங்க ராஜ்வனஜ்,
மிக்கநன்றி உங்களின் வருகைக்கும்,பாரட்டுதலுக்கும்...
//நேர்ல பாத்த போதிருந்த அதே குறும்பு எழுத்திலயும்.. ம்ம்ம் கலக்குங்க..!//
ஹி ஹி டாங்கீஸ்.. ;)
//மதுரை சந்திப்பு மறக்க முடியாத ஒரு நல்ல நிகழ்வு..//
உண்மையிலே அற்புதமான நிகழ்வு. அன்று தங்களின் வரவும் எங்களுக்கு மிக்கமகிழ்ச்சியளித்தது.
என்னங்கய்யா,
ஒரே ஒரு ஆளுடைய திருஷ்டி படம் போட்டுட்டு விட்டுட்டீங்க...மீதியெல்லாம் எங்கே..எங்கே???
அய்யா ராம்,
மீதி திருஷ்டி படங்கள் என்ன ஆச்சு?
என்ன மட்டும் இப்படி சந்தி சிரிக்க வச்சிட்டு மத்த ஆளுகளை விட்டுட்டா எப்படி?
Post a Comment