நான் ஏன் மாத்தினேன்னா
இதுவும் நான் எப்பவும் எழுதுறமாதிரி சுயபுராணந்தான். அதுவும் பெரிய சோககதை வேறங்க. என்னா நாங்க உன்னோட பதிவு படிக்கிறதே ஒரு கொடுமையான சோகம்தான்னு யாருப்பா புலம்புறது. அப்பிடியெல்லாம் பேசப்பிடாது, நாளப்பின்னே வந்துப் போற இடமா இல்லயா, நான் வேற உங்க பதிவுக்கெல்லாம் வரணுமா இல்லியா, அதுனாலே என்னாடோ சோகத்திலே நீங்களும் இப்போ கலந்துகங்க, அப்புறமா உங்களுடோதே எடுத்து விடுங்க, நானும் வந்துக்கிறேன். இதத்தான் வள்ளுவரய்யா என்னா சொல்லிருக்காருன்னா....
"நகுதற் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு."
குறளிலே இருக்கிறமாதிரி உங்களோட கருத்தே சொல்லிவீங்கன்னு நினைக்கிறேன். சரி இவ்வளவு பில்டப் போதும், விஷயத்துக்கு வர்றேன். ஒரு விஷயம் உங்களுக்கெல்லாம் ஆச்சரியமா இருந்திருக்கும், என்னாடா திடீரென்னு ப்ரொப்பல் போட்டோவே மாத்திடானேன்னு....!?
நானும் என்னோட பிரண்டும் கொஞ்சநாளைக்கி முன்னாடி பெங்களூரு போர(Forum)மில்லே இருக்கிற லேண்ட்மார்க்கில்லே புத்தகம் வாங்கலாமின்னு போயிருந்தோம். நாங்கல்லாம் எப்போ அங்கே போனால்லும் தமிழ்புத்தகங்கள் இருக்கிற பக்கத்திற்குத்தான் போறது. அதுக்கு என்னா காரணமின்னு நான் சொல்லமே உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமின்னு நினைக்கிறேன். அன்னிக்குன்னு பார்த்து பொன்னியின் செல்வனோட இங்கிலிபிஸ் பதிப்பு அந்த பகுதிலே இருந்துச்சு. நான் சும்மா இருக்கமாட்டமே அதை எடுத்து என்னோட பிரண்டுக்கிட்டே டேய் இதை வாங்குவோமான்னு கேட்டேன், எதுக்குன்னா அங்கே நாலு பொண்ணுங்க எங்களை மாதிரி புஸ்தகம் பொறுக்கிக்கிட்டு இருந்தாங்க. சரி அதுககிட்டே படம் காமிக்கிலாமின்னு.
பாவிபய நான் கேட்டகேள்விக்கு அவன் பதில் சொல்லனுமின்னு
"ஏண்டா நாமேதான் ஏற்கெனவே அதைத்தான் தமிழிலேயே படிச்சிட்டுட்டொமில்லே அதுமில்லேமா இதைப் படிச்சால்லும் உனக்கு புரியப்போகுதா" ன்னு கேட்டுப்பிட்டான்.
அப்பவாச்சிம் சும்மா நான் இருந்திருந்தா கொஞ்சநஞ்ச மானமாவது மிச்சிருக்கும்.,
"ஏன் நம்மக்கிட்டேதான் டிக்சனரி இருக்கே, இதெ எழுத்துக்கூட்டி வாசிச்சு அதிலே அர்த்தம் பார்த்துக்கிலாம்"ன்னு சொல்லித்தொலைச்சேன்.
அவ்வளவுதான் அந்த கட்டடமே இடிச்சுப் போறமாதிரி ஹெக்கேபுக்கேன்னு சிரிச்சுத் தொலைச்சானுவே எல்லா பயலுவேல்லும், சரி பரவாயில்லே நமக்கும் ஹீயூமர் சென்ஸ் இருக்குன்னு நினைச்சு நானும்தான் சேர்ந்தே சிரிச்சுத்தொலைச்சேன்.
அதிலே ஒரு பொண்ணு பிரண்டுஸ் படத்திலெ விஜய் விடாமே சிரிக்கிறமாதிரி சிரிச்சிக்கிட்டே அதுகூட வந்த இன்னோரு பொண்ணுக்கிட்டே இந்த கோமாளிதாண்டி பிலாக்கெல்லாம் எழுதுறதுன்னு சொல்லிட்டா. எனக்கு வந்திச்சே கோவம் அப்பிடியே ஒன்னும் பேசமே கொள்ளமெலெ அங்கெயிருந்து வந்திட்டேன். நம்மளை மாதிரி ஆளுக்கெல்லாம் பேசுறத விட காரியத்தைதான் செய்யனுமின்னு மறுநாளே போட்டோவே தூக்கீட்டேன். என்னோட உண்மையான போட்டோ இருந்தா தானே இப்பிடி காமெடி பண்ணுவாய்கே.
"ஹே இப்போ என்னா செய்வீங்க.... இப்போ என்னா செய்வீங்க...."
சரி போட்டோவே தூக்கியாச்சு, வேறே என்னாதான் வைக்கலாமின்னு யோசிச்சு யோசிச்சு ஒருவழியா கடைசிலே நம்ம தல கூப்பிடறமாதிரி கொஞ்சம் ராயலா வேணுங்கறதுனாலே இந்த ரிச்சிரிச் படத்தை போட்டேன்.ரிச்சிரிச் பத்தி சொல்லுணுமின்னா சொல்லிக்கிட்டே போவணும். எனக்குப் பிடிச்ச கார்ட்டூன் கதாபாத்திரத்திலே இந்த பயதான் கொஞ்சம் இன்ஸ்பிரேசனெ ஏறபடுத்தினே கதாபாத்திரம் அது. அவனைமாதிரியே நாமெல்லும் பெரிய பணக்காரனா ஆவனுமின்னு.....!
உங்களுக்கு இந்த பயபுள்ளேயே பத்தி நல்லா தெரிச்சிருக்குமின்னு நினைக்கிறேன், டாலரும் தங்ககாசுமா வாழுற பயப்புள்ளே, நமக்கு யாராவது பழனிக்கோ இல்ல திருப்பதிக்கோ போயிட்டு வந்தா வாங்கிட்டு வர்ற சாமி படம் போட்ட டாலர்தானே தெரியும்.
அப்பிறம் இன்னொரு விஷயம் இன்னொரு என்னை கவர்ந்த கார்ட்டூன் கதாபாத்திரத்திமின்னா வாரமலரில்லே வந்த ஒருத்தன் (பேரு என்னான்னு மறந்துப் போச்சு) எதையாவது வரைந்தானா அப்பிடியே உண்மையாகவே வருமில்லே, அந்த கதாபாத்திரமும் எனக்கு ரொம்பபிடிக்கும்..... உங்களுக்கெல்லாம் எந்த எந்த கதாபாத்திரங்கள் பிடிக்குமின்னு சொல்லுங்க பார்ப்போம்.
34 comments:
நமக்கு டாம் அண்ட் ஜெர்ரி தான். நம்ம எல்லாம் அதுக்கு மேல என்னிக்கி வளர்ந்திருக்கோம் :)
ஆனாலும் அந்த டிக்ஷ்னரி சமாச்சாரம் சூப்பரப்பூ.. நீங்க சும்மாவா வந்தீங்க? ஒரு தமிழ் புத்தகத்தை எடுத்து சிரிச்சதுங்கள்ல ஒண்ணை அதைப் படிச்சுக் காட்டச் சொல்லியிருந்தா தெரிஞ்சிருக்கும் அசடு எப்படி வழியுறாங்கன்னு!
இப்பெல்லாம் பொண்ணுங்க நல்லா விவரமா இருக்காங்கன்னு படிச்சேன்.
அது உண்மைதாம்போல:-)))))))))))
ராம்,
உன்னோட பொழப்பு இப்படிதானா சிரிப்பா சிரிக்கணும்..... :)
விஜயராஜன்,
இராயல்,
பதிவு ப்ரொஃபைல் படம் மாத்துனதுக்குப் பின்னாடி இப்படி ஒரு சோகமா? ஆனா உன் உண்மையான படத்தைப் புள்ளைங்க கண்டுபிடிச்சு கமெண்ட் அடிச்சதுங்னா நீ அதை மாத்திருக்கக் கூடாதுப்பா. எதாவது நல்லது கூட என்னைக்காச்சும் நடந்துருக்கலாம்.
:)
எனக்குப் புடிச்ச கார்ட்டுன் கேரக்டர் டாம் & ஜெர்ரி. All Time Favourite.
கோமாளின்னு சொன்ன பொண்ணை ஒரு கேள்வி கூட கேக்காம சும்மா வந்திருக்க..ம்ம்ம்...என்னமோ போ...
நமக்கு புடிச்ச கார்ட்டூன் டாம் அண்ட் ஜெர்ரி தான்பா...
Dextors laboratory, XMen, Powerpuff girls, Justice league, Alladin, Scooby doo கார்ட்டூன் நெட்வோர்க்கா பார்த்து தள்ளின காலம் உண்டு இப்பவும் பார்க்கறதுண்டு ஆனா முந்தி அளவுக்கு இல்லை.
ஆகா.. இந்த பவர் puff கர்ல்ஸ் பத்தி சொன்னதும் நினைவு வருது..
காலேஜ்ல நானும் இன்னும் ரெண்டு பொண்ணுங்களும் சேர்ந்து தான் ஒரு கேங்கா சுத்துவோம்.. ஷாப்பிங், சேர்ந்து படிக்கிறதுன்னு அப்பப்போ சேர்ந்துகிட்டு அழும்பு பண்ணுவோம்.. இதைப் பார்த்துட்டு எங்க க்ளாஸ் பையன் ஒருத்தன் எங்களை பவர் பஃப் கர்ல்ஸ்னு பேர் வச்சிருந்தான்.. அதுக்காகவே அந்த கார்ட்டூன் பார்க்கணும்னு ஆசை.. இதுவரை ஒரு முறை கூட பார்த்ததில்லை... ம்ம்ம்..
சரி, ராம், உங்க ப்ளாக் பேரே "செந்தமிழ் வாசிக்கும் நண்பருக்கு" தானே, அந்த மேரியக்காங்களுக்கு (பீட்டருக்கு பெண்பால்? ;)) எப்படி இது தெரிஞ்சிது? ;)
//நமக்கு டாம் அண்ட் ஜெர்ரி தான். நம்ம எல்லாம் அதுக்கு மேல என்னிக்கி வளர்ந்திருக்கோம் :)//
வாங்க பப்பியக்கா, எனக்கும் ரொம்ப டாம்&ஜெர்ரி கார்ட்டூன் பிடிக்கும்.
இந்த லிங்கலே போயிப் பாருங்க, சூப்பரான டாம்&ஜெர்ரி கேம் இருக்குங்க...
//ஆனாலும் அந்த டிக்ஷ்னரி சமாச்சாரம் சூப்பரப்பூ.. நீங்க சும்மாவா வந்தீங்க? //
வேற என்னா பண்ணுறது... அதுகப் பூராவும் தமிழ்நாட்டு கன்வெண்ட் ஸ்கூல்லே படிச்சு ஆஞ்சநேயரு ஆன கேசுங்க... நானெல்லாம் மாநகரட்சி மஞ்சணக்கார ஆரம்ப பள்ளிதானே....
அதுனாலேதான்...:-)))
//ஒரு தமிழ் புத்தகத்தை எடுத்து சிரிச்சதுங்கள்ல ஒண்ணை அதைப் படிச்சுக் காட்டச் சொல்லியிருந்தா தெரிஞ்சிருக்கும் அசடு எப்படி வழியுறாங்கன்னு! //
கடைசியா அதுக்கெல்லாம் இங்கிலிஷ் படிக்க தெரியும் எனக்கு தெரியாதின்னு சொல்லிப்பிட்டீங்களா.....
//இப்பெல்லாம் பொண்ணுங்க நல்லா விவரமா இருக்காங்கன்னு படிச்சேன்.
அது உண்மைதாம்போல:-))))))))))) //
வாங்க வாங்க துளசியம்மா, எவ்வளவு நாளாகிப் போச்சு நீங்க என்னோட பதிவுக்கு வந்து, ரொம்ப சந்தோசமா இருக்கும்மா....
விபரமா அய்யா சாமி அடுத்தவனை நக்கல் பண்ணுறதிலே பசங்களை விட பொண்ணுங்கதான் இப்போ மொத இடம்...... :-)))))
//ராம்,
உன்னோட பொழப்பு இப்படிதானா சிரிப்பா சிரிக்கணும்..... :)
விஜயராஜன், //
வாங்க சார் வாங்க,
நான் கேட்டனா கேட்டனா இல்லே சொல்லுங்க நான் கேட்டனா இத உங்ககிட்டே.....
//இராயல்,
பதிவு ப்ரொஃபைல் படம் மாத்துனதுக்குப் பின்னாடி இப்படி ஒரு சோகமா? //
பின்னே இருக்கதா.... நாலு நாளா சோறு சாப்பிட்டமே கூட இருந்தேன், வெறும் சப்பாத்தியே மட்டும் வறட்டு வறட்டுன்னு எப்பிடி சாப்பிடுறதுன்னு மறுபடியும் இந்த வெல்லசாம்பாரை ஊத்தி சோறு சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்..... ஹீக்கும்
//ஆனா உன் உண்மையான படத்தைப் புள்ளைங்க கண்டுபிடிச்சு கமெண்ட் அடிச்சதுங்னா நீ அதை மாத்திருக்கக் கூடாதுப்பா. எதாவது நல்லது கூட என்னைக்காச்சும் நடந்துருக்கலாம்.
:)//
தல இதுக்கு நீயீ சிந்தூர்காட்டிலிருந்து நேரா வந்து என்னையே சப்புன்னு நாலு சாத்து போட்டுட்டு போயிருக்கலாம்.
ஆங் இப்போ ஒன்னு புரியுது நீ ஏன் போட்டோ போடலேன்னு.... ஓ நிறைய பொண்ணுங்க திரியீதுகளா, ம் ரவுண்ட் கட்டுதுக போல உன்பின்னாடி புள்ளகே.... :-))
//எனக்குப் புடிச்ச கார்ட்டுன் கேரக்டர் டாம் & ஜெர்ரி. All Time Favourite. //
உனக்கு யாராவது அடிவாங்குறதின்னா ரொம்ப பிடிக்குமே...... :-))))
//கோமாளின்னு சொன்ன பொண்ணை ஒரு கேள்வி கூட கேக்காம சும்மா வந்திருக்க..ம்ம்ம்...என்னமோ போ...//
வாப்பா கப்பி,
நான்தான் சொன்னனே அதுககெல்லாம் கான்வெண்ட்'ல படிச்சு கம்பியீட்டர் ஆஞ்சநேயரு ஆனதுக, நானெல்லாம் மாநகராட்சிதான்னு.... அதுகலே பார்த்தலே நல்லா தெரிச்சி போச்சு பூரா தமிழ்நாட்டு பொண்ணுங்கதான், ஆனா என்னா பீட்டரு தெரியுமா,
"சேல் வீ பய் 'சமைக்கலாம் வாங்கோ' புக்.. இட்ஸ் வாஸ் வெரி நைஸ்யா"
அந்தப் பொண்ணுககிட்டே ஏதாவது கேட்கலாமின்னு தான் நினைச்சேன். ஆனா அதுகபாட்டுக்கு வீ டோண்ட் நோ டமில்ன்னு சொல்லிருச்சுகன்னா நமக்கு வேற இங்கிலிபிஸ் தெரியாது, அதுனாலே தானெ பேசமயே வந்தேன்.
//நமக்கு புடிச்ச கார்ட்டூன் டாம் அண்ட் ஜெர்ரி தான்பா... //
இனமில்லோய்
//வேற என்னா பண்ணுறது... அதுகப் பூராவும் தமிழ்நாட்டு கன்வெண்ட் ஸ்கூல்லே படிச்சு ஆஞ்சநேயரு ஆன கேசுங்க... நானெல்லாம் மாநகரட்சி மஞ்சணக்கார ஆரம்ப பள்ளிதானே....
அதுனாலேதான்...:-)))//
ராம்,
இங்க தான் நீ தப்பு பண்ணீட்ட... அதுங்க உன் போட்டோவ பாத்து உன்ன நியாபகம் வெச்சிருக்குங்கனா... கண்டிப்பா நம்மல மாதிரி கேஸாத்தான் இருக்கனும்!!!
சும்மா பில்ட் அப் கொடுக்கறத்துக்காக மாடர்ன் ட்ரஸ் போட்டு அலையுங்க... நம்பிடாத!
அந்த பொண்ணு உன் ரசிகையாக் கூட இருக்கலாம்!!! யார் கண்டா??? அப்படியே பேசி போன் நம்பர் வாங்கிருப்பியா???
ப்ரொபைல்ல போட்டு போட்ட இதெல்லாம் வேற நடக்குதா???
//Dextors laboratory, XMen, Powerpuff girls, Justice league, Alladin, Scooby doo கார்ட்டூன் நெட்வோர்க்கா பார்த்து தள்ளின காலம் உண்டு இப்பவும் பார்க்கறதுண்டு ஆனா முந்தி அளவுக்கு இல்லை. //
வாங்க குமரன்,
ஆகா நம்ம இனமா ஆகீட்டிங்க போங்க....
எனக்கும் டெக்ஸ்டர்ஸ் பார்த்துட்டு விஞ்ஞானி ஆகணுமின்னு எங்கப்பா வச்சிருந்த FM ரேடியாவை பிரிஞ்சு மேஞ்சு அவருக்கிட்டே நாலு மாத்துதான் வாங்கினேன்.
ஸ்கூப்டூ'விலே வர்றே ஸ்கராப்பிடூ எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆமா அதை மாதிரிதான் நானும் முந்திரிக் கொட்டை மாதிரி முந்தி போயீ உதை வாங்கி உட்கார்த்திருப்பேன்.
விடுங்க பாஸ், அதுங்க எப்பவுமே அப்படிதான். நமக்கு இதெல்லாம் புதுசா என்ன?
அப்புறம் எனக்கு புடிச்ச கார்ட்டூன்ன்னு பாக்க போனா, எதுவுமே இல்ல. இப்ப வந்த எந்த கேரக்டரும் பிடிக்கலை. முதலில் எல்லாம் தூர்தர்ஷன்ல ஜங்கில் புக்னு ஒரு கார்ட்டூன் போடுவாங்க அதில வர்ற
குட்டிப்பையன ரொம்ப பிடிக்கும் பேரு
கூட மறந்து போச்சு. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க!
//ஆகா.. இந்த பவர் puff கர்ல்ஸ் பத்தி சொன்னதும் நினைவு வருது..
காலேஜ்ல நானும் இன்னும் ரெண்டு பொண்ணுங்களும் சேர்ந்து தான் ஒரு கேங்கா சுத்துவோம்.. ஷாப்பிங், சேர்ந்து படிக்கிறதுன்னு அப்பப்போ சேர்ந்துகிட்டு அழும்பு பண்ணுவோம்..//
ஆகா இது வேறயா... அதுதான் இங்கேனே இவ்வளோவா....:-)
//இதைப் பார்த்துட்டு எங்க க்ளாஸ் பையன் ஒருத்தன் எங்களை பவர் பஃப் கர்ல்ஸ்னு பேர் வச்சிருந்தான்.. //
ஆஹா ஸ்மார்ட்பாய், கரிக்கிட்டா வைச்சிருக்கான்,
ஒன்னத்துக்குமே உதவாத பொண்ணுங்கன்னு நல்லாவே அவனுக்கு தெரியுமோ. ஒரு எக்சாமில்லாயவது கொஞ்சமாவது பேப்பரை காட்டிருக்கணும், இல்லே உங்கக்கிட்டே இருந்த பிட்'யாவது கொடுத்திருக்கணும்.... :-(
//அதுக்காகவே அந்த கார்ட்டூன் பார்க்கணும்னு ஆசை.. இதுவரை ஒரு முறை கூட பார்த்ததில்லை... ம்ம்ம்..//
பார்காதீங்க...அப்புறம் உண்மை தெரிஞ்சிரும்...:-))))
//சரி, ராம், உங்க ப்ளாக் பேரே "செந்தமிழ் வாசிக்கும் நண்பருக்கு" தானே, அந்த மேரியக்காங்களுக்கு (பீட்டருக்கு பெண்பால்? ;)) எப்படி இது தெரிஞ்சிது? ;) //
ஹீ ஹீ பப்பியக்கா ஆனாலும் நீங்க சூப்பர் இன்டலிஜெண்ட்'க்கா... என்னானா நான்தய்யேன் சொன்னனே அது தமிழ்புத்தகமிருக்கிற பகுதின்னு.....
இருந்தாலும் நீங்க இருந்தாலும் அதுகளுக்கு இப்பிடி சப்போட் பண்ணக்கூடாது, எனக்கு ஆழுகாச்சியா வருது.........:-(((((
//மேரியக்காங்களுக்கு (பீட்டருக்கு பெண்பால்? ;)) //
யூ டூ பொன்ஸ்
ஹீஹீ உங்களோடதான்,
Tom & Jerry தான் எனக்கு ரொம்ப பிடித்த Cartoon. கிட்டத்தட்ட எல்லோரும் Tom & Jerry இரசிகர்கள் மாதிரி தெரியுது.
//ராம்,
இங்க தான் நீ தப்பு பண்ணீட்ட... அதுங்க உன் போட்டோவ பாத்து உன்ன நியாபகம் வெச்சிருக்குங்கனா... கண்டிப்பா நம்மல மாதிரி கேஸாத்தான் இருக்கனும்!!! //
வாய்யா பாலாஜி,
சரியாதான் சொன்னே நீ, நாமளாவது தமிழ்மீடியத்திலே படிச்சிட்டு வீ டோண்ட் நோ இங்கிலிபிஸ்'ன்னு சொல்லுறோம், அதுக வீ டோண்ட் நோ டமில்'ன்னு சொல்லுச்சுக.....
//சும்மா பில்ட் அப் கொடுக்கறத்துக்காக மாடர்ன் ட்ரஸ் போட்டு அலையுங்க... நம்பிடாத! //
ஹீ ஹீ நம்பலே நானு.... :-)))
//அந்த பொண்ணு உன் ரசிகையாக் கூட இருக்கலாம்!!! யார் கண்டா??? அப்படியே பேசி போன் நம்பர் வாங்கிருப்பியா???//
இல்லப்பா அதெல்லாம் நான் பண்ணலே.... உனக்குதான் தெரியுமே...நாமெல்லாம் பேசுறேதே நமக்குள்ளே தானே பொண்ணுக'ன்னா கை காலெல்லாம் உதறுவெமில்லே....
//ப்ரொபைல்ல போட்டு போட்ட இதெல்லாம் வேற நடக்குதா??? //
ஆமாப்பா அந்த கொடுமையே எங்கே போயிச் சொல்லணுமின்னுதான் இங்கே வந்து சொன்னேன்..... :-)))
//விடுங்க பாஸ், அதுங்க எப்பவுமே அப்படிதான். நமக்கு இதெல்லாம் புதுசா என்ன?//
வாப்பா கதிரு..... ஹீ ஹீ நம்ம இனமில்லேய் நீயீ
//அப்புறம் எனக்கு புடிச்ச கார்ட்டூன்ன்னு பாக்க போனா, எதுவுமே இல்ல. இப்ப வந்த எந்த கேரக்டரும் பிடிக்கலை. முதலில் எல்லாம் தூர்தர்ஷன்ல ஜங்கில் புக்னு ஒரு கார்ட்டூன் போடுவாங்க அதில வர்ற
குட்டிப்பையன ரொம்ப பிடிக்கும் பேரு
கூட மறந்து போச்சு. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க! //
அவன் பேரு மோக்கிலீ' ப்பா
//Tom & Jerry தான் எனக்கு ரொம்ப பிடித்த Cartoon. கிட்டத்தட்ட எல்லோரும் Tom & Jerry இரசிகர்கள் மாதிரி தெரியுது//
வாங்க குறும்பன், நீங்க சொன்னது சரி தான், டாம் & ஜெர்ரி பார்க்கதா ரசிக்கதா ஆளூக யாரு இருக்கா...:-)
இப்பிடி ஆளாளுக்கு கார்ட்டூன் கேரக்டர் படமா
போட்டிங்கன்னா இனி புதுசு புதுசா தேட வேண்டி இருக்குமேப்பா.
"இனிமே லேண்ட்மார்க் பக்கம் போகமாட்டேன்"
அப்படின்னு நூறு தடவை கையில எழுதி
அத ஸ்கேன் செஞ்சு போடணும், ஆமா சொல்லிப்புட்டேன்
//வேறே என்னாதான் வைக்கலாமின்னு யோசிச்சு யோசிச்சு ஒருவழியா கடைசிலே நம்ம தல கூப்பிடறமாதிரி கொஞ்சம் ராயலா வேணுங்கறதுனாலே இந்த ரிச்சிரிச் படத்தை போட்டேன்//
ராயல், நீயாச்சும் நான் சொன்ன படி கேட்டிருக்கியேய்யா...அதை நெனச்சா புல் அரிக்குதுப்பா...நல்லாருய்யா நல்லாரு.
என்னப்பா ராயலு! நீ சொல்லிக் குடுத்த மாதிரியே கமெண்ட் போட்டுட்டேனா இல்ல வாங்கின காசுக்கு மேலேயே கூவிட்டேனா?
:)
//இப்பிடி ஆளாளுக்கு கார்ட்டூன் கேரக்டர் படமா
போட்டிங்கன்னா இனி புதுசு புதுசா தேட வேண்டி இருக்குமேப்பா.//
வாங்க பெருசு, என்னா இப்பிடிச் சொல்லீட்டிங்க.... இன்னும் நிறைய யாரும் உபயோகபடுத்ததா படங்கள் இருக்குங்க,
//"இனிமே லேண்ட்மார்க் பக்கம் போகமாட்டேன்"
அப்படின்னு நூறு தடவை கையில எழுதி
அத ஸ்கேன் செஞ்சு போடணும், ஆமா சொல்லிப்புட்டேன் //
ஏன் பெருசு எதுக்கு இம்பூட்டு பெரிய தண்டனை எனக்கு.... யார் என்னா சொன்னாலும் திரும்ப அங்க போகத்தான் செய்றேன்..... ஹீஹீ
//ராயல், நீயாச்சும் நான் சொன்ன படி கேட்டிருக்கியேய்யா...அதை நெனச்சா புல் அரிக்குதுப்பா...நல்லாருய்யா நல்லாரு.//
என்னா தல உனக்காக இதைகூட செய்யாட்டி எப்பிடி..... :-))))
அப்புறம் ரொம்ப புல்லரிச்சா உடம்பு பூராவும் சாம்பலே தேச்சு கிணத்திலே குளிச்சுரு தல... சரியா போயிறும்,
//என்னப்பா ராயலு! நீ சொல்லிக் குடுத்த மாதிரியே கமெண்ட் போட்டுட்டேனா இல்ல வாங்கின காசுக்கு மேலேயே கூவிட்டேனா?//
நான் கேட்டானா முருகேசா இத
//எனக்குப் புடிச்ச கார்ட்டுன் கேரக்டர் டாம் & ஜெர்ரி. All Time Favourite.
///
எனக்கு புடிச்ச இன்னொரு கார்ட்டுன் கேரக்டர் கை____
இல்ல வேணாம்..அப்புறம் சொல்றேன் :))
//எனக்கு புடிச்ச இன்னொரு கார்ட்டுன் கேரக்டர் கை____//
ஏலேய் கப்பி, தல ஊருக்குள்ளே இல்லேனேதும் உனக்குச் சேட்டையா போச்சா, தல திரும்பி வந்ததும் எந்த ஒட்டகம் அவரை கடிச்சு வச்சதோ அந்த ஒட்டகத்தே வச்சே உன்னைய கடிக்கச் சொல்லப் போறாப்பலே சாக்கிரதை.......
//இல்ல வேணாம்..அப்புறம் சொல்றேன் :)) //
ஏன் இப்போ சொல்லு நாங்க நீ ஒட்டகத்திட்டே கடி வாங்குறதே பார்க்கணும்.
என்னோட ஓட்டு டாம் அண்ட் ஜெர்ரிக்குத்தான்,
அப்புறம், இன்னொருத்தரு, பேர்தெரில ஆனா, ஆள் ஒல்லி பிச்சானா இருப்பாரு, தேவப்படுறப்பா ஒரு டப்பா நெறய ஏதோ கீரய (அப்பிடின்னு நெனக்கிறேன்) சாப்பிட்ட ஒடனேயே பெரிய பயில்வானா மாறி அந்த பொன்னு மின்னாடி சாகசம் செய்வார்.
அப்புறம் டொனால்ட் டக்,
//என்னோட ஓட்டு டாம் அண்ட் ஜெர்ரிக்குத்தான்,//
வாங்க லிவிங்ஸ்மைல் வித்யா,
எல்லோருக்கும் பிடித்தமான கதாபாத்திரங்கள் அவை இல்லயா.....
//அப்புறம், இன்னொருத்தரு, பேர்தெரில ஆனா, ஆள் ஒல்லி பிச்சானா இருப்பாரு, தேவப்படுறப்பா ஒரு டப்பா நெறய ஏதோ கீரய (அப்பிடின்னு நெனக்கிறேன்) சாப்பிட்ட ஒடனேயே பெரிய பயில்வானா மாறி அந்த பொன்னு மின்னாடி சாகசம் செய்வார்.//
அந்த தலைவர் பேரு பாப்பாயீ(popye). அவரோட வாழ்க்கை வரலாற்றை இங்கே போயிப் பாருங்க,
ராம்,
சே! ஒவ்வொரு புரோஃபைல் ஃபோட்டோவுக்கும் பின்னாலே இவ்வளவு பெரிய சட்டி நிறைய சோகரசம் இருக்கா? எப்படியோ என்னையும் ஓச்சிட்டீங்க...புறமுதுகைக் காட்ட வச்சிட்டீங்களே'ப்பு! : (
//அந்த தலைவர் பேரு பாப்பாயீ(popye). அவரோட வாழ்க்கை வரலாற்றை இங்கே போயிப் பாருங்க,
//
ஏன்,
எங்க ப்ரோபைல்ல இருக்குனு சொல்ல மாட்டீங்களா???
வித்யாக்கா சொன்னது என்னோட ப்ரொபைல்லத்தான்... சரியாக்கா???
Hahahahhahahaha பாவம்பா நாம...இதுக்கு தானாக்கும் நாம இந்த படம் போடுற வேலைக்கே போறதில்லை! Hahahahhaha
படம் காட்டினதுக்கு இது தேவை தானோ? :-) (வெட்டிப்பயல் பதிவிலிருந்து இங்கே வந்தேன்)
ஹா..ஹா.. சூப்பரு..:)
ஆனா //கருத்து கந்தசாமிகளா வாங்க!! வாங்க!!//
நான் அவன் இல்லைங்கோ...
Post a Comment