Monday, July 16, 2007

பெங்களூரூ வலைப்பதிவர் சந்திப்பு - அனுபவங்கள்

சென்ற சனிக்கிழமை பெங்களூரூ லால்பார்க் பிளாக்கர் மீட்டிங், அதுவும் காலை 10.30 மணிக்கே எல்லாரும் வந்துருங்கன்னு அறிவிப்பு தட்டியெல்லாம் வைச்சிட்டு நான் போயி சேர்த்ததே 11.00 மணிக்குதாங்க. வெள்ளிக்கிழமை அதுவுமா நைட் பத்தரை மணி வரை ஆணிப்பிடுங்கிற இடத்திலே பெரிய பிராப்ளம், அதை சால்வ் பண்ணிட்டு போங்க'ன்னு டேமேஜர் சொன்னதுனாலே அதை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து நம்ம இயக்குனர் கூட சிறப்பு சந்திப்பு முடிச்சிட்டு கொஞ்ச நேரத்திலே அதாவது நடுநிசி 6 மணிக்கு செல்லா'கிட்டே இருந்து "நான் இப்போ ரயில்வே ஸ்டேசனிலே நிக்கிறேன், உங்க ரூம்'க்கு வர்றதுக்கு ஆட்டோகாரன்'கிட்டே சொல்லுங்க"ன்னு போன் வந்ததும் எழுந்துருச்சு உட்கார்ந்தது தான். அடுத்த பத்து நிமிசத்திலே நம்ம ரூம் பக்கத்திலே இருக்கிற பஸ்ஸ்டாண்ட்'லே வந்துட்டார், அவரே கூப்பிட்டு வந்தா மனுசன் வந்ததிலே லேப்டாப்'ஐ எடுத்து வைச்சிட்டு பவர்பாயிண்ட் ஸ்லைட் பண்ண ஆரம்பிச்சிட்டார். எனக்கு லைட்டா கண்ணை கட்ட கொஞ்சம் நேரம் தூங்கிட்டேன்.

அவரு அதை முடிச்சிட்டு எழுப்பி விட ரெண்டு பேரும் குளிச்சிட்டு கிளம்பி ஹோட்டலுக்கு போயி சாப்பிடறதுக்குள்ளே பத்து போன், இம்சைஅரசியும்,ஜியா'வையும் சாந்திநகர் பஸ்ஸ்டாண்ட் வரச்சொல்லி அவங்கிட்டே ஆசிரமத்து குழந்தைகளை பார்க்க போறப்போ வாங்கிட்டு போக சாக்லெட்ஸ்'ஐ பிக்பஜார்'லே வாங்கிட்டு வரச்சொல்லி அங்கயிருந்து லால்பார்க் கேட்'க்கு போறதுக்குள்ளே தீபா, பிரியா'கிட்டே இருந்து அடுத்தடுத்து போன் கால்ஸ், அதைவிட நம்ம மொக்கை மகராஜர் ரெட்பயருகிட்டே இருந்து போனிலே அவருக்கு துணையா அரைபிளேடு'ன் மறுஅவதாரமான மோகன்தாஸ் கவிஜ மடம் கட்டிய மாவீரன் ஆசீப்'ம் லால்பார்க் உள்ளே வந்து விட்டதாகவும் காத்திருக்கும் கொடுமையை சகித்து கொள்வதற்காக சிலபல கண்கவர் ஆட்டங்களை ரசித்து கொண்டிருக்கிறோமின்னு நேரடி வர்ணனை வேற....

கிளாஸ் ஹவுஸிலே தீபா,பிரியா'வும் பக்கத்து பக்கத்திலே உட்கார்ந்திருந்தாலும் ஒருத்தர்கொருத்தர் அறிமுகம் இல்லாத காரணத்தினால் பேசாமல் இருந்தனர். நானும் செல்லாவும் அங்கு போயி சேர்ந்ததும், ரெடபயர்,மோகன்,அண்ணாச்சி, எல்லாரும் அறிமுகப்படுத்தி கொண்டோம். அடுத்த கொஞ்சநேரத்திலே முதல் நாள் கையெழுத்தை பால்கோவா'வோட சாப்பிட்ட களைப்போடு ராசா வந்து சேர மழை பிடித்து கொண்டது, எல்லாரும் ஒதுங்க இடம் தேடி கண்ணாடி வீட்டுக்குள்ளே ஓட, மழைவிட்டதும் செக்யூரிட்டி அங்கயிருந்து விரட்டுனதும் ஒரு பெஞ்சு கல்லை தேடி போயி அமர்த்துட்டோம். அதுக்கப்புறம் ஐயப்பன் அவரு தங்கமணி,குழந்தை சகிதமாக வந்து சேர்ந்தார்.

அட்டெண்ட்ஸ் கொடுத்தவர்கள்:-

1) செந்தழல் ரவி
2) ஆசிப் மீரான்
3) மோகன் தாஸ்
4) அனானி 1
5) அனானி 2
6) தீபா &Mr.தீபா
7) கொங்கு ராசா
8) பத்மபிரியா
9) ஓசை செல்லா
10) ஐயப்பன்
11) ஜீ
12) இம்சை அரசி
13) சுபமுகா
14) பலூன் மாமா
15) அனானி 3



அந்த செவ்வக மேஜையில் ஐயப்பன், செல்லா கேமராக்களும் , என்னோட லேப்டாப் இடத்தை அடைத்து கொள்ள, எல்லார் காதுகளையும் செல்லா'வின் போட்டோகிராபி பற்றிய விளக்கம் அடைத்து கொண்டது. லென்ஸ், அப்சார்ப்பர், ஜீம், சப்ஜெக்ட், லோ லைட்டிங், டார்க் லைட்டிங்'னு ஒரே டெக்னிக்கல் டேர்ம்ஸ் சிதறி ஓடிக்கொண்டு இருந்தது. ஒரு மணி நேரத்தில் முடிந்து விடலாம் என ஆரம்பிக்கப்பட்ட புகைப்பட கலை பற்றிய அறிமுகம் 2.30 மணி நேரம் வரை ஆனதுக்கு முதற்காரணமே அனைவரும் சுவராசியத்துடன் ரசித்தது தான். அதை விட ஐயப்பனும் , செல்லாவும் பல மாடல் போட்டோக்களை எடுத்து செய்முறை சோதனைகளை நடத்தி காட்டினர். அதுக்கு மாட்டின செய்முறை சோதனை எலி நாந்தான்... ( போட்டோ எடுத்த சாமிகளா என்னையே வைச்சி காமெடி பண்ணிறாதிங்கய்யா)



ஆசிரமத்துக்கு போவதற்கு டைம் வேற ஆகிவிட்டதால் எல்லாரும் டாக்ஸி, பைக்கில் கிளம்பி போனோம். ரெட்பயர் நைட் ஃபிளைட்'லேய் கொரியா போயி பாம்பு சூப் சாப்பிடனும் அங்கயிருந்து அப்பிட்டு, நம்ம கொங்கு ராசா என்னை தங்கமணி வையுமின்னு வீட்டுக்கு போயிட்டாங்க.



நாங்கள் ஆசிரமம் சென்றடைவதற்கு கொஞ்சம் லேட்டாகி விட மதிய சாப்பாட்டு வேளைக்கான நேரம் கடந்தே போயிவிட்டது. அனைவரையும் வரிசையில் அமரவைக்கப்பட்டனர். பார்க்கில் கல்வெட்டு மாதிரி அசையாது நின்றவர் இங்கே பலூன்மாமா'வாக அவதாரம் எடுத்தார். அனைத்து குழந்தைகளுக்கும் பலூனில் கிரிடங்கள் செய்யப்பட்டு ஒவ்வொருத்தர்க்கும் அணிவிக்கப்பட்டது. குழந்தைகளில் சிலர் அருமையாக பாட்டு பாடியும், நடனம் ஆடியும் அசத்தினர்.








கிரீடமும், வாளும் சுமந்த கவிஜ மடத்து மஹாராஜா...




சுவாமிஜி'க்கு மட்டும் பெரிய கிரிடம்....




"நச்" புகழ் செல்லா'வுக்கே நச்'ன்னு ஒரு போட்டோ....




அதன்பின்னர் அவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுக்களும் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு பிரார்த்தனை நேரமாகி விட்டதால் அனைவரும் அங்கிருந்து மிக்க மகிழ்ச்சியுடன் கிளம்பி வந்தோம்.