Friday, October 27, 2006

மதுரை வலைபதிவர் சந்திப்பு

முகம் தெரியா மனிதர்கள், சில வேளைகளில் கருத்து ஒற்றுமை என்பதை பேச்சளவில் கூட ஏற்றுக்கொள்ளா மனிதர்கள், இவ்வளவு முரண்பாடுகள் நிறைந்த எங்களை ஒன்றிணைந்தது தமிழ், அதுவும் தமிழ் வலையுலகு.

சிலவேளைகளில் பேச்சு,எழுத்து அனைத்திலும் ஆங்கிலமாகி போனவுடன் எனக்கு சின்ன சலிப்பு தட்ட ஆரம்பித்தது. என்னவொரு வாழ்க்கை அதுவும் நம்முடைய தாய்மொழியில் எழுதவோ, சுயகருத்துகளை பிறரிடம் பகிர்ந்துக் கொள்ளக்கூட வழிவகை இல்லமால் போயிட்டனோ என்று???.

அப்போது அறிமுகமான வலைப்பூ உலகத்தில் சிலவகைகளை பதிய ஆரம்பித்தேன். நான் சில பதிவர்கள் பதிவுகளை படித்து சிலாகித்து இருக்கிறேன், எப்படி இவ்வளவு அருமையாக எழுதுகிறார்கள், விவாதங்கள் நடத்துக்கிறார்கள் என்று. அதையெல்லாம் நான் செய்ய முயன்று தோற்றுப்போயிருக்கிறேன்.ஆனால் அவர்களின் அன்பை சம்பாரித்து(???) அவர்களின் குழுமத்தில் ஒரு அங்கத்தினராக இடம் பிடித்திருக்கிறேன். வலைப்பூ பதிவர் சந்திப்புக்கு கலந்துக் கொள்ள சென்றேன் என்றால் என்னையும் அங்கிகரித்து உள்ளார்கள் என்றே அர்த்தம்.



எதுக்கு இம்பூட்டு பில்டப்ன்னு நீங்க கேட்கறது புரியுது, அது ஒன்னுமில்லைங்க என்னையும் ஒரு மனிசனா மதிச்சு மீட்டிங்கெல்லாம் கூப்பிட்டாங்களே அதுவும் அதை பத்தி ஒரு பதிவு வேறே போடப் போறோமின்னு ரெண்டு நாளா யோசிச்சு மேலே இருக்கிற ஒரு பாரா எழுதினேன்.:)

வலைப்பதிவர் சந்திப்புன்னா போண்டா,டீ இல்லாமல் கூட நடத்தி காட்டமுடியிமின்னு செய்து காட்டிய தருமி ஐயாவிற்கு ஒரு நன்றி. ஆனா எல்லாப்பேத்துக்கும் ஓசிலே பவண்டோ, கைமுருக்கு,அதிரசம் கிடைச்சுச்சே. முருக்கு, அதிரசம் கொண்டுவந்த மகேஷ்க்கு நன்றி.



சந்திப்பு நடைப்பெற்ற இடமான அமெரிக்கன் காலேஜே பத்தி கொஞ்சுண்டு சொல்லிக்கிறேன். இது 1881 வருடத்தில் அமெரிக்க மெசனரிகளால் துவங்கப்பட்ட கல்லூரியாகும். அக்காலத்து பாணி சிவப்பு வண்ண அழகான கட்டிடங்களும், பசுமை நிறைந்த மரஞ்செடி கொடிகளால் சூழப்பட்ட அற்புதமான வளாகம்.

நான் போறப்பா சரியா மணி 3.05 ஆச்சு. மீட்டிங்க் 3 மணிக்குன்னு சொல்லிருந்தாங்க. நமக்குதான் இந்த பஞ்சு மிட்டாயே(Functionality)பிடிக்காதே. பேருக்கு அனுமதி வாங்குறமாதிரி சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லிட்டு உள்ளே போனேன். வாசலிலே தருமி,ஞானவெட்டியன் ஐயா,பிரபு ராஜதுரை,ஜி.ராகவன்,முத்து,மகேஷ் ஆகியோர் நின்று கொண்டு இருந்தார்கள்.



தருமி ஐயா எல்லாரும் சொல்ற மாதிரி மொதல்ல இருந்த போட்டாவுக்கும் நேரில் பார்க்கிறதுக்கும் துளியும் சம்பந்தமில்லாமல்தான் இருந்தார். கொஞ்சம் நேரங்கழிச்சு வந்த வித்யாக்கா என்னா தருமி சார் நீங்க பார்க்க ராம் மாதிரி யூத்தா இருப்பிங்கன்னு பார்த்தா அதவிட ரொம்ப சூப்பரா இருக்கீங்க'ன்னு ஒரு கமெண்ட் அடிச்சார். அதிலே இருந்தது எனக்கு உள்குத்தா இல்லே தருமி ஐயாவுக்கு வெளிக்குத்தான்னு தெரியலே. எனிவே வித்யா அதை மைண்ட்லே வச்சிருக்கேன், எப்போ தேவைபடுதோ அப்போ வந்து இந்த மாதிரி பட்டும் படாமே யாருக்காவது ஒரு குத்து விட்டுக்கிறேன். அப்புறமா இவருதாங்க ஜிரான்னு சத்தியம் அடிச்சு சொல்லறவரைக்கும் அவருதான் ஜி.ராகவன்னு வித்யா நம்பவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. என்னா பண்ண போட்டோவிலே இருக்கிறமாதிரி எப்பவும் இருக்கமுடியுமா என்னா???



ராஜ்வனஜ் வந்துச் சேர்ந்ததும் கல்லூரி வளாகத்திள்ளே இருக்கிற கேண்டினுக்கு சென்றோம்,. அங்கே இருக்கிற கல்பெஞ்சிலே உட்கார்ந்து கதைக்க ஆரம்பித்தோம். அதற்க்குள் வரவனையான் அவருடைய நண்பர் சுகுணாவுடன் வந்து சேர்ந்தார். வந்ததும் மொதல் கமெண்டே "போட்டோவிலே தான் ரொம்ப அழகா இருக்கீங்க" தருமியை பார்த்து. அனைவருடைய அறிமுகபடலம் தொடங்க ஆரம்பித்தது. அதில் ஞானவெட்டியன் ஐயா தன்னைப் பற்றி சின்ன உரைதான் ஆற்றினார். அதற்கப்புறம் யாருமே அறிமுகத்துக்காக வாயே திறக்கவில்லை.


எல்லாரும் மாதிரி நானும் தொடரும் போட்டுக்கிறேன்.



ஆளாளுக்கு வந்துக்கிட்டு போட்டோவிலெதான் அழகாக இருக்கீங்கன்னு சக்கை ஓட்டு ஓட்டுறானுங்க.. இந்த பயலே மாதிரி நான் ஏன் மாத்தினேன்னா'ன்னு ஒரு போஸ்ட் போட்டு படத்தே மாத்திப்பிடணும்.

Tuesday, October 10, 2006

Goooood Morrrrrning Chenaaaaaaaai

என்னா தலைப்பை பார்த்து குழம்பமா இருக்கா???. அது ஒன்னுமில்லேங்க ஒரு மாசத்துக்கு முன்னாடிப் பார்த்த ஹிந்தி படத்தோட எபக்ட்'ங்க அது. படம் பேரு என்னானா லெஹெ ரஹோ முன்னாபாய்... (திரும்பவும் முன்னாபாய்). இப்போ அதுக்கும் இந்த தலைப்புக்கும் சம்பந்தம் என்ன???? சம்பந்தம் வரவைச்சிருவோம். நம்ம தமிழ்த் திரை கலையுலக ஞானி பத்மஸ்ரீ கமலஹாசன் நடித்த வசூல்ராஜா MBBS படத்தோட ஒரிஜினல் வெர்சனான முன்னாபாய் MBBS'வோட வித்தியசாமான கதைதளம் தான் இந்த லெஹெ ரஹோ முன்னாபாய்...

ஹி ஹி இப்போ புரிச்சிருச்சா, இது ஒரு படக்குறிப்பு பதிவு.



முதல் படத்தோட ரெண்டாம் பாகமோன்னு போய் உட்கார்ந்தால் அது இல்லவே இல்லையின்னு சொல்லும்படியான காட்சிஅமைப்புக்களில் நிமிர்ந்து உட்காரவைக்கிறார்கள். படத்திலே கதையின்னு பார்த்தா மஹாத்மா காந்தியின் அஹிம்சாக் கொள்கைகளை நடைமுறை வாழ்க்கையில் உபயோகப் படுத்த முடியுமா என்ற தர்க்க ரீதியான முரண்பாட்டு கேள்விகளுக்கு முயன்ற அல்லது இயன்றவரை பதில் அளித்துள்ளது இக்கதைகளமும் கதைமாந்தர்களும்.

உதாரணத்திற்கு காந்தியாக நடித்த திலிப்'ன் நடிப்பும் முக பாவனைகளும் அருமை. காந்தி என்றதும் டாக்குமெண்ட்ரி படமான்னா கண்டிப்பாக இல்லை. இது ஒரு முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம்.

ஏதோ ஒரு புத்தகத்திலெ காந்தி சொன்னதா ஒன்று படித்த ஞாபகம் வருது.. "நான் இவ்வளவு காலம் உயிர் வாழ முக்கியக் காரணமே என்னுடைய நகைச்சுவை உணர்வு இருப்பதனால் தான்" அதை மெய்பிக்கும் வகையில் அருமையான காட்சியமைப்புகள். அதுவும் ஆரம்பத்தில் இருந்து சிரிப்பு சரவெடிகள் தான்.

"காந்தியை பத்தி ஏதாவது உனக்குத் தெரியுமா சர்கீயூட்" அப்பிடின்னு சஞ்சய்தத்(முன்னா) சர்கீயூட்டான வர்சிக்கிட்டே கேட்ப்பாரு. அதுக்கு வர்ஸி "அர்ரே பய்யா நோட்டு வாலா..."

அப்பிடின்னா படத்திலே காந்தியே வேறமாதிரியாக கொண்டுப்போயிறுவாங்ன்னு பீதி கிளம்பதான் செய்தது.ஆனா இந்தக் காட்சிக்கு அடுத்து உண்மையிலே காந்தியை பற்றி அறிந்துக் கொள்ள சஞ்சய்தத் ஒரு லைப்ரேரி சென்று காந்தியீசத்தே படிக்கச் செல்வார். அதிலிருந்து காந்தி தன்னுடைய கண்முன்னாடி இருப்பதாக உணர்க்கிறார். (இது ஒரு மனநோய் என்று பயந்து ஒரு மனோதத்துவ நிபுணரிடம் போவதாக கூட ஒரு காட்சி உள்ளது).


இவ்வாறாக விர்சுவல் காந்தியின் உதவியோடு காந்தியவாதி ஆவதும் ரேடியாவில் சில நேயர்களின் பிரச்சினைக்கு தீர்வுச் சொல்வதும்தான் இக்கதை.



அத்தீர்வுகளில் ஒரு சின்ன உதாரணம்.

"என்னுடைய அப்பா பணம் முழுவதையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தேன். ஆனால் அது முழுவதும் நஷ்டமாகி விட்டது, இதை எப்பிடி என் தந்தையிடம் சொல்வது, அதை சொல்வதும் நான் தற்கொலைச் செய்துக் கொள்வதும் ஒன்றுதான். ஆகவே நான் இப்பொழுது தற்கொலைச் செய்துக் கொள்ளபோகிறேன்."

இதற்கு முன்னா+காந்தியின் பதிலாக "நீ பணம் முழுவதையும் இழந்தாய்.. சரி ஆனால் உன்னை இழக்க என்ன காரணம், பணம் போனது அது ஒரு வியாபாரத்தினால் தான் அன்றி உன்னால் அல்ல."

"சரி இதை என் தந்தையாரிடம் எப்பிடிச் சொல்ல, பணமில்லா வாழ்க்கையை நினைத்து பார்க்கமுடியுமா இங்கே?"

"உன் தந்தையிடம் போனைக்குடு... ஐயா நீங்கள் உங்கள் பணம் முழுவதையும் இழந்து விட்டிர்கள்!! உங்க பணம் போனா என்ன
உங்க பையன் இருக்கான்லே!! அதற்காக அவனை அடிக்காதீங்க!! அவனை அடிச்சீங்கன்னா வாழ்க்கை முழுசும் உங்ககிட்ட உண்மையே பேச மாட்டான்!!பணம் போனாலும் நீங்கள் உங்கள் மகனை இழக்க வில்லை. ஏனெனில் இதன்பின் ரயில்ல தலையைக் கொடுத்திருப்பான். அவன் தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கவில்லை!!! ஆகவே விரைவில் உங்கள் பணம் திரும்ப கிடைக்கும் அது உங்கள் மகனின் உழைப்பில்"

எந்த ஒரு தவறோ அல்லது தோல்விக்கோ தற்கொலை தீர்வு அல்ல. என்பதை விளக்கும் காட்சியின் சிறிய எடுத்துக்காட்டு உரையாடல்கள் தான் மேற்கண்டவைகள். இதுப்போல் பல அருமையான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.




அப்புறம் ஹீரோயின் பற்றி சொல்லனுமின்னா அதுக்கு ஒரு தனிப் பதிவு தான் போடணும். வித்யாபாலனாம் அவங்க பேரு இதிலே கேரளத்து பெண்குட்டி வேறே, நிறைவான நடிப்பை படத்தில் அளித்துள்ளார்.

அதுவும் அவருடைய ரேடியோ ஸ்டைல் வார்த்தையான "Goooood Morrrrrning Mumbai" கேட்கிறப்பவே சூப்பரா இருக்குப்போய். அவருடைய செகண்ட் இன்னிங்ஸ் வீடுதான் இக்கதையின் ஒரு அங்கமாக இருக்கு.



மொத்தத்தில் அருமையான படம் சாமியோவ் இது.....!!!!!

"This is the Era of the Bollywood Sequels"

சரி மறுபடியும் தலைப்புக்கு வர்றேன். இந்த படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்தால் நடிக்கப் போவது நம்முடைய கலைஞானிதான். அதில் நடிக்கப் போகும் ஹீரோயின் சொல்லப்போகும் வசனம்தான் இது. ஹீரோயினா நமக்குத் தெரிஞ்ச இன்னொரு கேரள பெண்குட்டியான அசினை போடுங்கப்பா.. ..
ஹி ஹி..

நம்மளை மாதிரி விமர்சனம் எழுதினவங்க.
குமரன்
சந்தோஷ்
கழகப் போர்வாள்
துபாய் தங்ககம்பி
பினாத்தல் சுரேஷ்
விக்கிபீடியா

Friday, October 6, 2006

கல்யாணக் களை

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துச்சுங்க. அது என்னா கல்யாணக் களை கல்யாணக் களைன்னு சொல்லுறாய்ங்களே அப்பிடின்னா என்னான்னு, நாலஞ்சு பெருசுகளை கூப்பிட்டுக் கேட்டுப் பார்த்தேன். ஒன்னு எனக்கு ஆப்பு வக்கிற கணக்கா சரிப்பா உங்கப்பன்க்கிட்டே சொல்லி சிக்கிரம் கால்கட்டு போடச் சொல்லுறேன்னு சொன்னுச்சு. அட கெரகத்தே நமக்கு நாமே திட்டத்தின்படி ஆப்புவைச்சிக்கிற வேணாமின்னு தெரியமா கேட்டுட்டேன்னு சொல்லி ஓடியாத்திட்டேன். அப்புறம் நம்ம பட்டிக்காட்டு பெருசுக்கிட்டே கேட்டேன். அவரு அதுக்கு ஒரு புது விளக்கவுரை கொடுத்தாரு, என்னானா

"நல்லா விளைஞ்சு கிடைக்கிற வயக்காட்டுலே தேவையில்லமே இருக்கிற செடி,பதறுகளை தான் நாங்கெல்லாம் களைன்னு சொல்லுவோம், ஆனா கல்யாணக் களை'ன்னா உன்னைமாதிரி இளந்தாரி பயலுவெல்லாம் ஒனத்துக்கும் உதவாத களையா மாறிப்போயிடக் கூடாதுன்னு தாப்பா அப்பிடி சொல்லுறது"

அடபாவிங்களா ஒரு ஆளும் உருப்படியான விளக்கம் கொடுக்கமாட்டிங்களா, அப்பிடியே கொடுத்தாலும் நமக்கேதாய்யா ரிப்பிட்டுன்னு வருது. சரி என்னா பண்ணுறது சுயமாவே சிந்திச்சு நம்மகூடவே திரிஞ்ச நாலுப் பயப்புள்ளகளை கவனிச்சிப் பார்த்ததில்லே சின்ன க்ளு கிடைச்சது.

என்னோட கொலிக் ஒருத்தன் எப்பவும் சாயம் போன கலருலே ஒரு சட்டை அப்புறம் பேகிபேரல் பேண்ட்ன்னு தினமும் ஆபிஸ்க்கு வருவான். என்னாய்யா நீ எவ்வளவு பெரிய ஆளூ, நல்லா நாலு டிரெஸ் எடுத்து அதே போட்டுக்கிட்டு வரக்கூடாதா'ன்னா கேட்டா இந்த சட்டை என்னோட மொதல் செமஸ்டருலே எடுத்தது... இந்த பேண்ட்சர்ட் நான் +2 பாஸ் பண்ணினதுக்காக எங்க மாமா எடுத்து கொடுத்ததுன்னு லெக்சர் குடுப்பான்.அந்த லெக்சருக்கே பயந்தே எதுவுமே கேட்குறதில்லே. ஆனா இப்போ பயப்புள்ள கலரு கலரா டிரெஸ் போட்டுக்கிட்டு வர்றான். கூலிங்கிளாஸ், புது கேமரா செல்போன் வித் ஃப்ளுடூத்'ன்னு ஹைடெக்கா வேறே மாறிபோயிட்டான், சும்மாயிருக்க மாட்டாமே என்னாப்பா தீடீரென்னு மாறீட்டேன்னு கேட்டேன். அதுக்கு அவன் ஆமாம் என்னோட வுட்பீ'யோட கட்டளைங்கறான். இந்த மொபைல் அவங்க வாங்கி கொடுத்தது, அதிலே ஆட்இன் கார்டு போட்டு பேசிக்கிட்டு இருக்கோமில்லேன்னு உலகத்துக்கு தேவையான செய்தியே வேற சொன்னான்.

அடபாவி ஒரு செங்கல்கல்லு சைஸ் செல்'லே தூக்கிட்டு வெயிட்டான பார்ட்டியா இருந்தியே! என்னா ஆச்சுடா மக்கா உனக்கு??
பேசுங்கடா நல்லா பேசுங்க! செல்லுலே பேசியே செவிட்டு பயலா போயித் தொலைங்கடா...!

இன்னொரு பயப்புள்ள இவனும் என்கூடதான் குப்பை கொட்டுறான். இவனோட பேரே கல்லுளிமங்கன்னு வச்சிருக்கலாமின்னு நினைக்கத்தோணும். ஒரு முக்கியமான விஷயத்துக்குகூட வாயே தொறக்கமாட்டான். எதானச்சிம் ஒன்னுகேட்டா "ஓ இஸிட்" "ஓகே" இவ்வளவுதான் பதில்லுன்னு சொல்லி மெதுவா காத்தோட உளறுவான். ஆனா என்னா ரசாயான மாற்றம் நடத்துச்சோன்னு தெரியலே இப்போ பயப்புள்ளே நான்ஸ்டாப்'ஆ பேச ஆரம்பிச்சிட்டான். ஒருநாளு சாப்பிடறே நேரத்திலே எப்பிடி இருக்கு இந்த லைப்புன்னு கேட்டுத்தொலைச்சேன். பேசினான் பார்க்கணும் அய்யோ சாமி அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கான். ஓரமா கிடைக்கிற தீட்டின ஆப்புலே நாமே தேடிப் போயி உட்கார்த்தே கதையா பே..பே...ன்னு முழிச்சிக்கிட்டு சோத்தே தின்னேன்.

எங்கூரு பய ஒருத்தன் எப்பவுமே தேமே'ன்னு தான் திரிவான். நல்லநாளு பொல்லநாளுன்னு பார்த்தாலும் மொகத்திலே யாருக்கிட்டேயோ ரெண்டு அடிவாங்கின மாதிரியே திரிஞ்சுக்கிட்டுதான் இருப்பான். இப்போ போனவாரம் ஊருக்குப் போனப்போ ஒரு சாவுவீட்டிலே பார்த்தேன். அவன் பாட்டுக்கு எல்லாத்துக்கிட்டெயும் சிரிச்சிப் பேசிக்கிட்டு இருந்தான். அடபாவி கல்யாணவீட்டிக்கு வந்தா கூட சிரிக்க மாட்டான் ஆனா இங்கே எழவு வீட்டிலே வந்து எல்லா பயலெயும் லந்து விட்டு சிரிக்கிறானே'ன்னு அவனே தனியா கூப்பிட்டு போயி என்னாடா ராசா என்னா ஆச்சு உனக்குன்னு கேட்டேன். அதுதாண்டா கல்யாணம் காட்சின்னு சொல்லுறது'ன்னு பதில் சொன்னான். சரிதான் நமக்கெல்லாம் அதப்பத்தி என்னா தெரியப் போகுதுன்னு செவனேன்னு வந்திட்டேன்.

டிஸ்கி:-

இதெல்லாம் வயித்தெரிச்சல் வந்து நான் போடலேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.

கல்யாணக் களை'ன்னா கிழ்கண்டவைகள் தான் :-

1) நல்லா அழகான பயலுக பூராவும் அசிங்கமா டிரெஸ் பண்ண ஆரம்பிச்சிருவானுங்க!
2) புது டெக்னாலாஜியே உபயோகப் படுத்த ஆரம்பிச்சிருவானுங்க!
3) வாய் கிழிச்சுப் போற அளவுக்கு பேச ஆரம்பிச்சிருவானுங்க!
4) கேட்கிறவன் உண்மையா நம்ம பேசுறதே கேட்கிறானாகூட தெரியாமே பேசி கொல்லுறானுவே!
5) குறையாமே பத்து மணி நேரமாவது போன்லேயே பேசுறாய்ங்கே!