Tuesday, October 10, 2006

Goooood Morrrrrning Chenaaaaaaaai

என்னா தலைப்பை பார்த்து குழம்பமா இருக்கா???. அது ஒன்னுமில்லேங்க ஒரு மாசத்துக்கு முன்னாடிப் பார்த்த ஹிந்தி படத்தோட எபக்ட்'ங்க அது. படம் பேரு என்னானா லெஹெ ரஹோ முன்னாபாய்... (திரும்பவும் முன்னாபாய்). இப்போ அதுக்கும் இந்த தலைப்புக்கும் சம்பந்தம் என்ன???? சம்பந்தம் வரவைச்சிருவோம். நம்ம தமிழ்த் திரை கலையுலக ஞானி பத்மஸ்ரீ கமலஹாசன் நடித்த வசூல்ராஜா MBBS படத்தோட ஒரிஜினல் வெர்சனான முன்னாபாய் MBBS'வோட வித்தியசாமான கதைதளம் தான் இந்த லெஹெ ரஹோ முன்னாபாய்...

ஹி ஹி இப்போ புரிச்சிருச்சா, இது ஒரு படக்குறிப்பு பதிவு.



முதல் படத்தோட ரெண்டாம் பாகமோன்னு போய் உட்கார்ந்தால் அது இல்லவே இல்லையின்னு சொல்லும்படியான காட்சிஅமைப்புக்களில் நிமிர்ந்து உட்காரவைக்கிறார்கள். படத்திலே கதையின்னு பார்த்தா மஹாத்மா காந்தியின் அஹிம்சாக் கொள்கைகளை நடைமுறை வாழ்க்கையில் உபயோகப் படுத்த முடியுமா என்ற தர்க்க ரீதியான முரண்பாட்டு கேள்விகளுக்கு முயன்ற அல்லது இயன்றவரை பதில் அளித்துள்ளது இக்கதைகளமும் கதைமாந்தர்களும்.

உதாரணத்திற்கு காந்தியாக நடித்த திலிப்'ன் நடிப்பும் முக பாவனைகளும் அருமை. காந்தி என்றதும் டாக்குமெண்ட்ரி படமான்னா கண்டிப்பாக இல்லை. இது ஒரு முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம்.

ஏதோ ஒரு புத்தகத்திலெ காந்தி சொன்னதா ஒன்று படித்த ஞாபகம் வருது.. "நான் இவ்வளவு காலம் உயிர் வாழ முக்கியக் காரணமே என்னுடைய நகைச்சுவை உணர்வு இருப்பதனால் தான்" அதை மெய்பிக்கும் வகையில் அருமையான காட்சியமைப்புகள். அதுவும் ஆரம்பத்தில் இருந்து சிரிப்பு சரவெடிகள் தான்.

"காந்தியை பத்தி ஏதாவது உனக்குத் தெரியுமா சர்கீயூட்" அப்பிடின்னு சஞ்சய்தத்(முன்னா) சர்கீயூட்டான வர்சிக்கிட்டே கேட்ப்பாரு. அதுக்கு வர்ஸி "அர்ரே பய்யா நோட்டு வாலா..."

அப்பிடின்னா படத்திலே காந்தியே வேறமாதிரியாக கொண்டுப்போயிறுவாங்ன்னு பீதி கிளம்பதான் செய்தது.ஆனா இந்தக் காட்சிக்கு அடுத்து உண்மையிலே காந்தியை பற்றி அறிந்துக் கொள்ள சஞ்சய்தத் ஒரு லைப்ரேரி சென்று காந்தியீசத்தே படிக்கச் செல்வார். அதிலிருந்து காந்தி தன்னுடைய கண்முன்னாடி இருப்பதாக உணர்க்கிறார். (இது ஒரு மனநோய் என்று பயந்து ஒரு மனோதத்துவ நிபுணரிடம் போவதாக கூட ஒரு காட்சி உள்ளது).


இவ்வாறாக விர்சுவல் காந்தியின் உதவியோடு காந்தியவாதி ஆவதும் ரேடியாவில் சில நேயர்களின் பிரச்சினைக்கு தீர்வுச் சொல்வதும்தான் இக்கதை.



அத்தீர்வுகளில் ஒரு சின்ன உதாரணம்.

"என்னுடைய அப்பா பணம் முழுவதையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தேன். ஆனால் அது முழுவதும் நஷ்டமாகி விட்டது, இதை எப்பிடி என் தந்தையிடம் சொல்வது, அதை சொல்வதும் நான் தற்கொலைச் செய்துக் கொள்வதும் ஒன்றுதான். ஆகவே நான் இப்பொழுது தற்கொலைச் செய்துக் கொள்ளபோகிறேன்."

இதற்கு முன்னா+காந்தியின் பதிலாக "நீ பணம் முழுவதையும் இழந்தாய்.. சரி ஆனால் உன்னை இழக்க என்ன காரணம், பணம் போனது அது ஒரு வியாபாரத்தினால் தான் அன்றி உன்னால் அல்ல."

"சரி இதை என் தந்தையாரிடம் எப்பிடிச் சொல்ல, பணமில்லா வாழ்க்கையை நினைத்து பார்க்கமுடியுமா இங்கே?"

"உன் தந்தையிடம் போனைக்குடு... ஐயா நீங்கள் உங்கள் பணம் முழுவதையும் இழந்து விட்டிர்கள்!! உங்க பணம் போனா என்ன
உங்க பையன் இருக்கான்லே!! அதற்காக அவனை அடிக்காதீங்க!! அவனை அடிச்சீங்கன்னா வாழ்க்கை முழுசும் உங்ககிட்ட உண்மையே பேச மாட்டான்!!பணம் போனாலும் நீங்கள் உங்கள் மகனை இழக்க வில்லை. ஏனெனில் இதன்பின் ரயில்ல தலையைக் கொடுத்திருப்பான். அவன் தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கவில்லை!!! ஆகவே விரைவில் உங்கள் பணம் திரும்ப கிடைக்கும் அது உங்கள் மகனின் உழைப்பில்"

எந்த ஒரு தவறோ அல்லது தோல்விக்கோ தற்கொலை தீர்வு அல்ல. என்பதை விளக்கும் காட்சியின் சிறிய எடுத்துக்காட்டு உரையாடல்கள் தான் மேற்கண்டவைகள். இதுப்போல் பல அருமையான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.




அப்புறம் ஹீரோயின் பற்றி சொல்லனுமின்னா அதுக்கு ஒரு தனிப் பதிவு தான் போடணும். வித்யாபாலனாம் அவங்க பேரு இதிலே கேரளத்து பெண்குட்டி வேறே, நிறைவான நடிப்பை படத்தில் அளித்துள்ளார்.

அதுவும் அவருடைய ரேடியோ ஸ்டைல் வார்த்தையான "Goooood Morrrrrning Mumbai" கேட்கிறப்பவே சூப்பரா இருக்குப்போய். அவருடைய செகண்ட் இன்னிங்ஸ் வீடுதான் இக்கதையின் ஒரு அங்கமாக இருக்கு.



மொத்தத்தில் அருமையான படம் சாமியோவ் இது.....!!!!!

"This is the Era of the Bollywood Sequels"

சரி மறுபடியும் தலைப்புக்கு வர்றேன். இந்த படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்தால் நடிக்கப் போவது நம்முடைய கலைஞானிதான். அதில் நடிக்கப் போகும் ஹீரோயின் சொல்லப்போகும் வசனம்தான் இது. ஹீரோயினா நமக்குத் தெரிஞ்ச இன்னொரு கேரள பெண்குட்டியான அசினை போடுங்கப்பா.. ..
ஹி ஹி..

நம்மளை மாதிரி விமர்சனம் எழுதினவங்க.
குமரன்
சந்தோஷ்
கழகப் போர்வாள்
துபாய் தங்ககம்பி
பினாத்தல் சுரேஷ்
விக்கிபீடியா