Tuesday, October 10, 2006

Goooood Morrrrrning Chenaaaaaaaai

என்னா தலைப்பை பார்த்து குழம்பமா இருக்கா???. அது ஒன்னுமில்லேங்க ஒரு மாசத்துக்கு முன்னாடிப் பார்த்த ஹிந்தி படத்தோட எபக்ட்'ங்க அது. படம் பேரு என்னானா லெஹெ ரஹோ முன்னாபாய்... (திரும்பவும் முன்னாபாய்). இப்போ அதுக்கும் இந்த தலைப்புக்கும் சம்பந்தம் என்ன???? சம்பந்தம் வரவைச்சிருவோம். நம்ம தமிழ்த் திரை கலையுலக ஞானி பத்மஸ்ரீ கமலஹாசன் நடித்த வசூல்ராஜா MBBS படத்தோட ஒரிஜினல் வெர்சனான முன்னாபாய் MBBS'வோட வித்தியசாமான கதைதளம் தான் இந்த லெஹெ ரஹோ முன்னாபாய்...

ஹி ஹி இப்போ புரிச்சிருச்சா, இது ஒரு படக்குறிப்பு பதிவு.முதல் படத்தோட ரெண்டாம் பாகமோன்னு போய் உட்கார்ந்தால் அது இல்லவே இல்லையின்னு சொல்லும்படியான காட்சிஅமைப்புக்களில் நிமிர்ந்து உட்காரவைக்கிறார்கள். படத்திலே கதையின்னு பார்த்தா மஹாத்மா காந்தியின் அஹிம்சாக் கொள்கைகளை நடைமுறை வாழ்க்கையில் உபயோகப் படுத்த முடியுமா என்ற தர்க்க ரீதியான முரண்பாட்டு கேள்விகளுக்கு முயன்ற அல்லது இயன்றவரை பதில் அளித்துள்ளது இக்கதைகளமும் கதைமாந்தர்களும்.

உதாரணத்திற்கு காந்தியாக நடித்த திலிப்'ன் நடிப்பும் முக பாவனைகளும் அருமை. காந்தி என்றதும் டாக்குமெண்ட்ரி படமான்னா கண்டிப்பாக இல்லை. இது ஒரு முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம்.

ஏதோ ஒரு புத்தகத்திலெ காந்தி சொன்னதா ஒன்று படித்த ஞாபகம் வருது.. "நான் இவ்வளவு காலம் உயிர் வாழ முக்கியக் காரணமே என்னுடைய நகைச்சுவை உணர்வு இருப்பதனால் தான்" அதை மெய்பிக்கும் வகையில் அருமையான காட்சியமைப்புகள். அதுவும் ஆரம்பத்தில் இருந்து சிரிப்பு சரவெடிகள் தான்.

"காந்தியை பத்தி ஏதாவது உனக்குத் தெரியுமா சர்கீயூட்" அப்பிடின்னு சஞ்சய்தத்(முன்னா) சர்கீயூட்டான வர்சிக்கிட்டே கேட்ப்பாரு. அதுக்கு வர்ஸி "அர்ரே பய்யா நோட்டு வாலா..."

அப்பிடின்னா படத்திலே காந்தியே வேறமாதிரியாக கொண்டுப்போயிறுவாங்ன்னு பீதி கிளம்பதான் செய்தது.ஆனா இந்தக் காட்சிக்கு அடுத்து உண்மையிலே காந்தியை பற்றி அறிந்துக் கொள்ள சஞ்சய்தத் ஒரு லைப்ரேரி சென்று காந்தியீசத்தே படிக்கச் செல்வார். அதிலிருந்து காந்தி தன்னுடைய கண்முன்னாடி இருப்பதாக உணர்க்கிறார். (இது ஒரு மனநோய் என்று பயந்து ஒரு மனோதத்துவ நிபுணரிடம் போவதாக கூட ஒரு காட்சி உள்ளது).


இவ்வாறாக விர்சுவல் காந்தியின் உதவியோடு காந்தியவாதி ஆவதும் ரேடியாவில் சில நேயர்களின் பிரச்சினைக்கு தீர்வுச் சொல்வதும்தான் இக்கதை.அத்தீர்வுகளில் ஒரு சின்ன உதாரணம்.

"என்னுடைய அப்பா பணம் முழுவதையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தேன். ஆனால் அது முழுவதும் நஷ்டமாகி விட்டது, இதை எப்பிடி என் தந்தையிடம் சொல்வது, அதை சொல்வதும் நான் தற்கொலைச் செய்துக் கொள்வதும் ஒன்றுதான். ஆகவே நான் இப்பொழுது தற்கொலைச் செய்துக் கொள்ளபோகிறேன்."

இதற்கு முன்னா+காந்தியின் பதிலாக "நீ பணம் முழுவதையும் இழந்தாய்.. சரி ஆனால் உன்னை இழக்க என்ன காரணம், பணம் போனது அது ஒரு வியாபாரத்தினால் தான் அன்றி உன்னால் அல்ல."

"சரி இதை என் தந்தையாரிடம் எப்பிடிச் சொல்ல, பணமில்லா வாழ்க்கையை நினைத்து பார்க்கமுடியுமா இங்கே?"

"உன் தந்தையிடம் போனைக்குடு... ஐயா நீங்கள் உங்கள் பணம் முழுவதையும் இழந்து விட்டிர்கள்!! உங்க பணம் போனா என்ன
உங்க பையன் இருக்கான்லே!! அதற்காக அவனை அடிக்காதீங்க!! அவனை அடிச்சீங்கன்னா வாழ்க்கை முழுசும் உங்ககிட்ட உண்மையே பேச மாட்டான்!!பணம் போனாலும் நீங்கள் உங்கள் மகனை இழக்க வில்லை. ஏனெனில் இதன்பின் ரயில்ல தலையைக் கொடுத்திருப்பான். அவன் தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கவில்லை!!! ஆகவே விரைவில் உங்கள் பணம் திரும்ப கிடைக்கும் அது உங்கள் மகனின் உழைப்பில்"

எந்த ஒரு தவறோ அல்லது தோல்விக்கோ தற்கொலை தீர்வு அல்ல. என்பதை விளக்கும் காட்சியின் சிறிய எடுத்துக்காட்டு உரையாடல்கள் தான் மேற்கண்டவைகள். இதுப்போல் பல அருமையான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அப்புறம் ஹீரோயின் பற்றி சொல்லனுமின்னா அதுக்கு ஒரு தனிப் பதிவு தான் போடணும். வித்யாபாலனாம் அவங்க பேரு இதிலே கேரளத்து பெண்குட்டி வேறே, நிறைவான நடிப்பை படத்தில் அளித்துள்ளார்.

அதுவும் அவருடைய ரேடியோ ஸ்டைல் வார்த்தையான "Goooood Morrrrrning Mumbai" கேட்கிறப்பவே சூப்பரா இருக்குப்போய். அவருடைய செகண்ட் இன்னிங்ஸ் வீடுதான் இக்கதையின் ஒரு அங்கமாக இருக்கு.மொத்தத்தில் அருமையான படம் சாமியோவ் இது.....!!!!!

"This is the Era of the Bollywood Sequels"

சரி மறுபடியும் தலைப்புக்கு வர்றேன். இந்த படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்தால் நடிக்கப் போவது நம்முடைய கலைஞானிதான். அதில் நடிக்கப் போகும் ஹீரோயின் சொல்லப்போகும் வசனம்தான் இது. ஹீரோயினா நமக்குத் தெரிஞ்ச இன்னொரு கேரள பெண்குட்டியான அசினை போடுங்கப்பா.. ..
ஹி ஹி..

நம்மளை மாதிரி விமர்சனம் எழுதினவங்க.
குமரன்
சந்தோஷ்
கழகப் போர்வாள்
துபாய் தங்ககம்பி
பினாத்தல் சுரேஷ்
விக்கிபீடியா

59 comments:

said...

ஏலேய் ராம்!
உனக்கு ஹிந்தி தெரியுமா?
அப்படி தெரியும் என்றால் நீ தமிழ் இன விரோதியா... இல்ல துரோகியா...நீ, சே...சே... உன்ன போய் என் நண்பன் என்று இம்புட்டு நாளா நினைச்சுட்டு இருந்தேனே.... நீ எல்லாம்.... உன்ன எல்லாம்.....

said...

உன்ன அப்படி எல்லாம் திட்டலாம் என்று தான் வந்தேன், ஆனால் போட்டு இருந்த பாருய்யா ஒரு அழகான பெண்குட்டி படம்.

அந்த நோக்குனவுடன் எந்த மனசு குளிந்து. பனி காத்து அடிச்சு, சாரம் மழை பெய்து....

அந்த படம், இ தமிழ்நாட்டில் 300 டேஸ் ஒட்டி, எந்த தமிழ் மானத்தை நிலை நிறுத்தும்......

said...

வித்யா பாலனுக்காகத்தான் படமே பார்த்தேன்...

மற்றபடி சொல்லிக் கொள்ள ஒன்றும் புதிதாக இல்லை. சீக்வெல் எனபதைத் தவிற.

said...

ஒரு சந்தேகம்: ஏன் எல்லாமே 2 ரூபாய் தபால்தலையா வடிவமைச்சிருக்காங்க?

ஒரு பாராட்டு: தலைவி படம் போட்டதுக்குத்தான் ;)

ஒரு கேள்வி: படம் வசனமெல்லாம் புரிஞ்சுதான் பார்த்தீங்களா?

ஒரு புரளி: சூப்பர் ஸ்டார் நடிக்கப் போறதா எங்கயோ படிச்சேனே...

ஒரு முடிவு: இத்தனை பேர் நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாங்க...படத்தை எப்படியாவது பார்த்துடனும். ;)

said...

//ஏலேய் ராம்!
உனக்கு ஹிந்தி தெரியுமா?
அப்படி தெரியும் என்றால் நீ தமிழ் இன விரோதியா... இல்ல துரோகியா...நீ, சே...சே... உன்ன போய் என் நண்பன் என்று இம்புட்டு நாளா நினைச்சுட்டு இருந்தேனே.... நீ எல்லாம்.... உன்ன எல்லாம்..... //


வாப்பா புலி,

வர்றப்பவே பிரச்சினையே கெளப்பிட்டு வர்றீயே. நான் இந்தி படம் பார்த்ததில் தமிழின துரோகியா...??? அப்போ ஸ்பானிஷ் படம் பார்த்து விமர்சனம் எழுதிறவர் எந்த வகை துரோகிப்பா....??? :-))))

said...

//உன்ன அப்படி எல்லாம் திட்டலாம் என்று தான் வந்தேன், ஆனால் போட்டு இருந்த பாருய்யா ஒரு அழகான பெண்குட்டி படம்.//

ஹி ஹி ரொம்ப சோக்க கீதுப்பா அந்த பெண் குட்டி படத்திலே... இன்னொரு தடவை படம் பார்க்கணும். அனோகமா sub-title போட்ட DVD வந்தவுடனே பார்த்தீரேன்.

//அந்த நோக்குனவுடன் எந்த மனசு குளிந்து. பனி காத்து அடிச்சு, சாரம் மழை பெய்து....//

எனக்கும் தாப்பா... :)))

//அந்த படம், இ தமிழ்நாட்டில் 300 டேஸ் ஒட்டி, எந்த தமிழ் மானத்தை நிலை நிறுத்தும்...... //

கட்டாயம் இதே படம் தமிழில் எடுத்த கண்டிப்பாக ஓடும்.. இன்னும் மிச்சம் வசனங்களெல்லாம் புரியும்... :-))))

said...

//வித்யா பாலனுக்காகத்தான் படமே பார்த்தேன்...//

வாங்க வஜ்ரா... --/\--

நீங்களுமா...
ச்சூப்ப்ர்ரா இருக்குங்க அந்த பெண்குட்டி... :-))))

//மற்றபடி சொல்லிக் கொள்ள ஒன்றும் புதிதாக இல்லை. சீக்வெல் எனபதைத் தவிற. //

உங்கள் கண்ணோடத்திலே சொல்ல்லிறீங்க.... நன்றி உங்களின் கருத்துக்கு....

said...

ஓ நீங்களும் அசின் பேனா? என்னுடைய சாய்ஸீம் அதே வித்யா பாலன் ரோலுக்கு.

ரொம்ப நல்ல படம் ஹிட் ஆனதில் ரொம்ப சந்தோஷமா இருக்கு

said...

ராம் நான் செய்ய முடியாத ஒண்ணை நீ செஞ்சியிருக்க அதை நினைச்சு என் கண்ணு கலங்குது அப்பூ.. வித்யா பாலன் படத்தை அப்லோட் பண்ண முடியாம விமர்சனத்தை வெறுமனே போட வேண்டியதாப் போச்சு... நீ கண்ணுக்குக் குளிர்ச்சியா போட்டு பின்னிட்ட ராசா..

said...

//ஒரு சந்தேகம்: ஏன் எல்லாமே 2 ரூபாய் தபால்தலையா வடிவமைச்சிருக்காங்க?//

வாப்பா கப்பி,

உன் சந்தேகம் நியமானதுதான். ஆனா "தானத்திலே கிடைச்ச மாட்டை பல்பிடிச்சுப் பார்த்தனாம்"ன்னு பழமொழி ஞாபகம் வந்திருச்சு.

அதுனாலே நான் எங்கே இருந்து இதே எடுத்தனோ அங்கே போய் இந்த சந்தேகத்தே கேட்கலை.... :-)))

//ஒரு பாராட்டு: தலைவி படம் போட்டதுக்குத்தான் ;)//

டாங்கீஸ்ப்பா

//ஒரு கேள்வி: படம் வசனமெல்லாம் புரிஞ்சுதான் பார்த்தீங்களா?//

ஹி ஹி சீக்ரெட் ஆப் 'இந்தி'யா

//ஒரு புரளி: சூப்பர் ஸ்டார் நடிக்கப் போறதா எங்கயோ படிச்சேனே...//

அது புரளிதான். ;-)

//ஒரு முடிவு: இத்தனை பேர் நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாங்க...படத்தை எப்படியாவது பார்த்துடனும். ;) //

பாருப்பா நல்லபடந்தான் என்னைப் பொறுத்த வரைக்கும்.... :-)))

said...

//ஓ நீங்களும் அசின் பேனா? என்னுடைய சாய்ஸீம் அதே வித்யா பாலன் ரோலுக்கு. //

அட வாங்க குமரன்,

அசின் பேன்'ன்னு சொல்லி ஒரு வட்டத்திற்க்குள்ளே போயி சிக்கிக்கிறதுதில்லைங்க..

எங்கே அழகு இருக்கோ அங்கே ஐக்கியமாகிறதுதான் நம்ம பாலிஸி...
;-)

//ரொம்ப நல்ல படம் ஹிட் ஆனதில் ரொம்ப சந்தோஷமா இருக்கு //

:-))))

said...

ராம்,
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு!

விமர்சனம் கலக்கல் ராம்.

அதுவும் கடைசியா ஒருவார்த்தை இருக்கே, துபாய் தங்ககம்பி.
இதுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்ய போறேன்.

said...

//ஒரு பாராட்டு: தலைவி படம் போட்டதுக்குத்தான் ;)//

ய்யோவ் கப்பி!
யாரு யாருக்கு தலைவி, ஒண்ணு புதுசா வரக்கூடாதே
உடனே தலைவியாக்கிடுவீங்களே.

said...

//ராம் நான் செய்ய முடியாத ஒண்ணை நீ செஞ்சியிருக்க அதை நினைச்சு என் கண்ணு கலங்குது அப்பூ..//

வாங்க தேவ்,

ரொம்ப டாங்கீஸ்ங்க, எதுக்கு கண்ணெல்லாம் கலங்கிட்டு... தலய காணோமின்னு வருத்தமா என்னா...??

//வித்யா பாலன் படத்தை அப்லோட் பண்ண முடியாம விமர்சனத்தை வெறுமனே போட வேண்டியதாப் போச்சு...//

என்ன ஒரு சோதனை.. வேதனை.. நீங்கள் அதற்காக கடுமையா உழைச்சிருக்கணும்... :-)))


//நீ கண்ணுக்குக் குளிர்ச்சியா போட்டு பின்னிட்ட ராசா.. //

ஹி ஹி மருக்கா இன்னொரு டாங்கீஸ்
:-))

said...

தம்பி...ஏற்கனவே உன் மேல ஒரு பிராது பெண்டிங்க்ல இருக்கு...வேணாம்..தப்புக்கு மேல தப்பு செய்யாதே ;))

said...

விமர்சனம் சூப்பர்... வித்யாபாலன் அதவிட சூப்பர்...

//அப்போ ஸ்பானிஷ் படம் பார்த்து விமர்சனம் எழுதிறவர் எந்த வகை துரோகிப்பா....??? //
கப்பி,
இதுக்கு பதிலே சொல்லல...

said...

//ய்யோவ் கப்பி!
யாரு யாருக்கு தலைவி, ஒண்ணு புதுசா வரக்கூடாதே
உடனே தலைவியாக்கிடுவீங்களே. //
தம்பி,
எங்க போனாலும் கப்பிய தாக்கற... இது சரியில்லையே!!!

ஏற்கனவே நீ சேச்சிகளை பத்தி தப்பா பேசனத தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டாங்க...

ஜாக்கிரதையா இருந்துக்கோ... அடுத்து ஸ்பானிஷ் மக்களையும் பகைச்சுக்க பாக்கற!!!

said...

படங்கள் நல்லா இருக்குங்களே. அம்மணி படத்தை ரொம்ப தேடினீங்களோ?

said...

//அப்போ ஸ்பானிஷ் படம் பார்த்து விமர்சனம் எழுதிறவர் எந்த வகை துரோகிப்பா....??? :-))))
//

ஹேய் யூ வாட் இஸ் திஸ்?? :)))

said...

//ராம்,
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு!

விமர்சனம் கலக்கல் ராம்.//

வாப்பா கதிரு,

வரும்போதே பாட்டு பாடிக்கிட்டே வர்றீயே.... :-))

//அதுவும் கடைசியா ஒருவார்த்தை இருக்கே, துபாய் தங்ககம்பி.
இதுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்ய போறேன். //

அதெல்லாம் உண்மைதானே!!!! நீ துபாய் தங்ககம்பி தானே...

அங்கே இருந்து எப்போ கம்பி நீட்டிட்டு ஓடி வரப் போறே.... :-))))

said...

//ய்யோவ் கப்பி!
யாரு யாருக்கு தலைவி, ஒண்ணு புதுசா வரக்கூடாதே
உடனே தலைவியாக்கிடுவீங்களே. //

தம்பி உணர்ச்சி வசப்படதே... அப்புறம் கப்பி ஸ்பானிஷ் ரசிகையர் மன்ற தலைவிகள் எல்லாம் கோவிச்சிக்கப் போறாங்க...

எங்கோ படிச்சதா ஞாபகம் கப்பிக்கு உருகுவே'லே ரசிகையர் மன்றம் இருக்கிறதா..... உண்மைதானா கப்பி... :-)))

said...

//தம்பி...ஏற்கனவே உன் மேல ஒரு பிராது பெண்டிங்க்ல இருக்கு...வேணாம்..தப்புக்கு மேல தப்பு செய்யாதே ;)) //

அது என்னாப்பா....???

said...

//விமர்சனம் சூப்பர்... வித்யாபாலன் அதவிட சூப்பர்...//

வாப்பா பாலாஜி... சூப்பருன்னு சொன்னதுக்கு டாங்கீஸ்ப்பா... :-))

said...

//தம்பி,
எங்க போனாலும் கப்பிய தாக்கற... இது சரியில்லையே!!! //

அதுதாப்பா, ஏதோ அவங்களுக்குள்ளே கொடுக்கல் வாங்கல் பிரச்சினைன்னு நினைக்கிறேன்.....
உண்மைதானா கப்பி & தம்பி

//ஏற்கனவே நீ சேச்சிகளை பத்தி தப்பா பேசனத தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டாங்க...//

ஓ அதுதான் மேட்டரா...!!!

//ஜாக்கிரதையா இருந்துக்கோ... அடுத்து ஸ்பானிஷ் மக்களையும் பகைச்சுக்க பாக்கற!!! //

ஓவர் டூ கப்பி..!!!

said...

//தம்பி...ஏற்கனவே உன் மேல ஒரு பிராது பெண்டிங்க்ல இருக்கு...வேணாம்..தப்புக்கு மேல தப்பு செய்யாதே ;))//

பார்வைய விசாலமாக்குங்கப்பா!

சேச்சிகள மட்டுமெ ரசிச்சதால, இப்போ மும்பைகிளி
ஒண்ணாச்சும் பீல்டுல இருக்கா?

ரசிச்சா ஒரேயடியா ரசிப்பீங்க, இல்லன்னா ஓரங்கட்டிடுவிங்க
இது என்ன கப்பி ஞாயம்?

சேச்சிகளுக்கு விரோதமான ஒருவராக என்னை மாற்ற கப்பி
முயல்கிறார், யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்

said...

வெட்டிப்பயல் said...
//ய்யோவ் கப்பி!
யாரு யாருக்கு தலைவி, ஒண்ணு புதுசா வரக்கூடாதே
உடனே தலைவியாக்கிடுவீங்களே. //
தம்பி,
எங்க போனாலும் கப்பிய தாக்கற... இது சரியில்லையே!!!

//ஏற்கனவே நீ சேச்சிகளை பத்தி தப்பா பேசனத தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டாங்க...

ஜாக்கிரதையா இருந்துக்கோ... அடுத்து ஸ்பானிஷ் மக்களையும் பகைச்சுக்க பாக்கற!!!//

வெட்டி நீயும் கூட சேர்ந்துகிட்டு.... ஏன் இந்த கொலவெறி?
நாம எல்லாம் ஒரே மண்ல இருந்து வந்தவங்க, நீங்களே இப்டி
எண்ணைய ஊத்தினா எப்டி?

said...

//படங்கள் நல்லா இருக்குங்களே. அம்மணி படத்தை ரொம்ப தேடினீங்களோ? //

வாங்க விவாசாயி,

இதுக்காக நைட்டெல்லாம் கண்ணு முழிச்சு பார்த்து ஆபிஸிலே ஓவர் டைம் எல்லாம் செஞ்சுதான் படமெல்லாம் தேடி கண்டுபிடிக்க முடிஞ்சது.... :-))))

said...

//ஓ அதுதான் மேட்டரா...!!!//

கண்ணால் காண்பதும் பொய்.
காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரிப்பதே மெய்.

அப்பாவி
தம்பி

said...

//இதுக்காக நைட்டெல்லாம் கண்ணு முழிச்சு பார்த்து ஆபிஸிலே ஓவர் டைம்//
புரியுது, அதுக்கான் பலன் கைமேல சேச்சே பதிவு மேல தெரியுது. சேச்சியெங்கில் கொறச்ச இஷ்டமோ?

said...

//நாம எல்லாம் ஒரே மண்ல இருந்து வந்தவங்க, நீங்களே இப்டி
எண்ணைய ஊத்தினா எப்டி// என்னாங்கய்யா மண்ணு, பெட்ரோலுன்னு.. ஈராக்குக்கா போகபோறீங்க?

said...

//ஹேய் யூ வாட் இஸ் திஸ்?? :))) //

கப்பி நீ என்னோமோ புரியதா பாஷேலே பேசுறே...

ஒன்னுமே விளங்கலே... :-)))

said...

//நான் இந்தி படம் பார்த்ததில் தமிழின துரோகியா...??? அப்போ ஸ்பானிஷ் படம் பார்த்து விமர்சனம் எழுதிறவர் எந்த வகை துரோகிப்பா....??? :-)))) //

நீ கப்பி பயல இந்த வம்புல இழுத்து விட பாத்தாலும், நான் அசர மாட்டேன். நான் நேரா மேட்டருக்கு வரேன். எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு ஆகனும். தமிழ்நாட்டில ஸ்பானிஷ் எதிர்ப்பு போராட்டம் நடந்துச்சா இல்ல இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்துச்சா. நான் எம்புட்டு சிரீயஸ் ஒரு கேள்வி கேட்டா, அதுக்கு நீ என்ன சொல்லனும் சாரி சிவா அண்ணன் ஒரு தப்பு நடந்து போச்சு, கேரளத்து பைங்கிளி பாக்கும் ஆர்வத்தில் எந்த மொழி படம் தெரியாம பாத்துட்டேன். இனிமேல் இது போல நடக்காதுனு சொல்லி இருக்க வேண்டும். ஆனா நீ தேவையில்லாம கிண்டல் அடித்து இருக்க. எனக்கு இங்கன கோபம் அப்படியே கொப்புளிச்சுக்கிட்டு இருக்கு இங்கன....
இதுக்கு என்ன பதில் சொல்ல போற....
சீக்கிரம் எதாச்சும் சொல்லி என் மனச சாந்தப்படுத்து. இல்லாட்டி இங்கன ஒரு பெரிய ரணகளம் நடக்கும். ரத்த ஆறே ஒடும் சொல்லிட்டேன்

said...

//பார்வைய விசாலமாக்குங்கப்பா!

சேச்சிகள மட்டுமெ ரசிச்சதால, இப்போ மும்பைகிளி
ஒண்ணாச்சும் பீல்டுல இருக்கா?//

கதிரு கலக்கிறே போ..... ஆனாலும் நீ என்னொமோ இன்னும் கேரளத்து கப்பகிழங்குகளுக்கு எதிரியா இருப்பியோன்னு தோணுது... :-)))

//ரசிச்சா ஒரேயடியா ரசிப்பீங்க, இல்லன்னா ஓரங்கட்டிடுவிங்க
இது என்ன கப்பி ஞாயம்?//

இப்போ பதிலே சொல்லு கப்பி...

//சேச்சிகளுக்கு விரோதமான ஒருவராக என்னை மாற்ற கப்பி
முயல்கிறார், யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் //

நான் நம்பமாட்டேன் இதை.... :-)))

said...

//புரியுது, அதுக்கான் பலன் கைமேல சேச்சே பதிவு மேல தெரியுது. சேச்சியெங்கில் கொறச்ச இஷ்டமோ? //

விவசாயி,

நான் இந்த பதிவுக்கு மொதல்லே ஜான்வீ'யிம் பின்னே ஞானும்'ன்னு தான் பேரு வைக்கலாமின்னு இருந்தேன்.

said...

//எண்ணைய ஊத்தினா எப்டி// என்னாங்கய்யா மண்ணு, பெட்ரோலுன்னு.. ஈராக்குக்கா போகபோறீங்க? //

என்னங்க விவசாயி நீங்க?

மண்வாசனை தெரியாத ஆளா இருக்கீங்களே :(

நாங்கள்லாம் ஒரே ஊரு. அத சொன்னேன்.

said...

//பார்வைய விசாலமாக்குங்கப்பா!

சேச்சிகள மட்டுமெ ரசிச்சதால, இப்போ மும்பைகிளி
ஒண்ணாச்சும் பீல்டுல இருக்கா?
//

ரசிச்சா ஒரேயடியா ரசிப்பீங்க, இல்லன்னா ஓரங்கட்டிடுவிங்க
இது என்ன கப்பி ஞாயம்?
//
எங்க பார்வையெல்லாம் விசாலமாத் தான் இருக்கு...யாரையும் ஓரங்கட்ட சொல்லலை...ஆனா சேச்சிகளைப் பத்தி நீங்க சொன்னது தப்பா இல்லையா??? ;)

//
சேச்சிகளுக்கு விரோதமான ஒருவராக என்னை மாற்ற கப்பி
முயல்கிறார், யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்
//
நான் மாற்ற வேண்டாம்..உங்களுக்கு நீங்களே போதும் ;))

said...

//சேச்சிகள மட்டுமெ ரசிச்சதால, இப்போ மும்பைகிளி
ஒண்ணாச்சும் பீல்டுல இருக்கா?//
தம்பி,
இப்படி இனம் பிரிச்சி ரசிக்கிற இனமா நாமா??? எல்லா அழகையும் ரசிக்கணும்...

என்ன ராமண்ணா, நான் சொல்றது சரியா???

said...

//எங்க பார்வையெல்லாம் விசாலமாத் தான் இருக்கு...யாரையும் ஓரங்கட்ட சொல்லலை...ஆனா சேச்சிகளைப் பத்தி நீங்க சொன்னது தப்பா இல்லையா??? ;)//

நான் எங்கயா சொன்னேன்?

அப்டி என்னா சொன்னேன்? வித்யா பாலன் வித்யாசமா
கேரளக்கிளிகள விட அழகா இருக்காங்கனுதான சொன்னே.
இதுக்கே பிராது குடுத்தா எப்டி?

இந்த பிஸ்கோத்து மேட்டருக்கெல்லாம் பிராது குடுத்தா
நாலு பேரு பஞ்சாயத்த தப்பா பேச மாட்டாங்க?

சின்னப்புள்ளத்தனமா இருக்கே!

said...

//நீ கப்பி பயல இந்த வம்புல இழுத்து விட பாத்தாலும், நான் அசர மாட்டேன். நான் நேரா மேட்டருக்கு வரேன்.//

வா சீக்கிரம் உன்னை யாரு பிடிச்சு நிப்பாட்டிக்கிட்டு இருக்கிறது... ??

// எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு ஆகனும். தமிழ்நாட்டில ஸ்பானிஷ் எதிர்ப்பு போராட்டம் நடந்துச்சா இல்ல இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்துச்சா. //

இந்தி எதிர்ப்பு போராட்டதான்... சாரிப்பா நான் வரலாறுலே வீக்...:(((

//நான் எம்புட்டு சிரீயஸ் ஒரு கேள்வி கேட்டா, அதுக்கு நீ என்ன சொல்லனும் சாரி சிவா அண்ணன் ஒரு தப்பு நடந்து போச்சு, கேரளத்து பைங்கிளி பாக்கும் ஆர்வத்தில் எந்த மொழி படம் தெரியாம பாத்துட்டேன். இனிமேல் இது போல நடக்காதுனு சொல்லி இருக்க வேண்டும்.//

அதை மட்டும் சொல்லமாட்டேனே....

// ஆனா நீ தேவையில்லாம கிண்டல் அடித்து இருக்க. எனக்கு இங்கன கோபம் அப்படியே கொப்புளிச்சுக்கிட்டு இருக்கு இங்கன....
இதுக்கு என்ன பதில் சொல்ல போற....//

என்னா பதிலே சொல்ல... உனக்கும் கப்பிக்கும் என்னா கொடுக்கல் வாங்கல்ன்னு தெரியணும்.... ???

//சீக்கிரம் எதாச்சும் சொல்லி என் மனச சாந்தப்படுத்து. இல்லாட்டி இங்கன ஒரு பெரிய ரணகளம் நடக்கும். ரத்த ஆறே ஒடும் சொல்லிட்டேன் //

சிவா உனக்கு இன்னும் இந்த வித்யாபாலனோட போட்டோவெல்லாம் அனுப்பி வைக்கீறேன்..... :-))))

said...

//தம்பி,
இப்படி இனம் பிரிச்சி ரசிக்கிற இனமா நாமா??? எல்லா அழகையும் ரசிக்கணும்...//

பின்னே நாமே என்னிக்குமே ஒரு வட்டத்துக்குள்ளே போயி மாட்டிக்க கூடாது.

//என்ன ராமண்ணா, நான் சொல்றது சரியா??? //

ஹி ஹி ஆமாம்ப்பா

said...

//என்னா பதிலே சொல்ல... உனக்கும் கப்பிக்கும் என்னா கொடுக்கல் வாங்கல்ன்னு தெரியணும்.... ???
//

நீங்க பண்ண தப்புக்கு என்னை வம்புக்கு இழுக்காதீங்கப்பு..கொடுக்கல் வாங்கலெல்லாம் எதுவுமில்ல..நாம வேணா எதுனா தனியா ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்கலாம் ;))

said...

//இதுக்கு என்ன பதில் சொல்ல போற....
சீக்கிரம் எதாச்சும் சொல்லி என் மனச சாந்தப்படுத்து. இல்லாட்டி இங்கன ஒரு பெரிய ரணகளம் நடக்கும். ரத்த ஆறே ஒடும் சொல்லிட்டேன்//

இவ்வளவு நேரமாக இந்த பின்னூட்டத்தை வெளியிடாத
திரு, மேதகு. ராம் அண்ணனை மென்மையாக
கண்டிக்கிறது இந்த சேச்சிகள் முன்னேற்ற சங்கம்.
சிவாவின் நியாயமான இந்த மனக்குமுறலுக்கு
பதில் அளிக்குமாறும் இந்த சங்கம் வலியுறுத்துகிறது.

இப்படிக்கு
சே.மு.க தலைமையகம்
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி
துபாய்.

said...

//அப்டி என்னா சொன்னேன்? வித்யா பாலன் வித்யாசமா
கேரளக்கிளிகள விட அழகா இருக்காங்கனுதான சொன்னே.
இதுக்கே பிராது குடுத்தா எப்டி?//


அடபாவி கவுத்திட்டியே.....


//இந்த பிஸ்கோத்து மேட்டருக்கெல்லாம் பிராது குடுத்தா
நாலு பேரு பஞ்சாயத்த தப்பா பேச மாட்டாங்க?//

இங்கே யாருப்பா நாட்டாமை.... ஆலமரம், நெளிஞ்ச சொம்பு எல்லாம் இருக்குலே.... ???

said...

//நீங்க பண்ண தப்புக்கு என்னை வம்புக்கு இழுக்காதீங்கப்பு..கொடுக்கல் வாங்கலெல்லாம் எதுவுமில்ல..நாம வேணா எதுனா தனியா ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்கலாம் ;)) //

வர்ரே வா கப்பி,
என்னாமா ஆக்ட் குடுக்கிறே நீயீ... மொதல்லே உனக்கும் தங்ககம்பிக்கும் ஏதோ கொடுங்கல் வாங்கலில் தகறாறு...அப்புறமா புலிக்கிட்டே ஏதோ டீல் போலே.... ;-)

இப்போ என்கிட்டேயா... வேணாம் ராசா, வாங்குற சம்பளம் கூவுறதுக்கு மட்டுமே செலவு பண்ணபிடாது...
:-)))

said...

//இவ்வளவு நேரமாக இந்த பின்னூட்டத்தை வெளியிடாத
திரு, மேதகு. ராம் அண்ணனை மென்மையாக
கண்டிக்கிறது இந்த சேச்சிகள் முன்னேற்ற சங்கம்.
சிவாவின் நியாயமான இந்த மனக்குமுறலுக்கு
பதில் அளிக்குமாறும் இந்த சங்கம் வலியுறுத்துகிறது.

இப்படிக்கு
சே.மு.க தலைமையகம்
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி
துபாய். //

அட கடவுளே இது என்னா புது கெரகம் ஜிங்க் ஜிங்க்ன்னு ஆடி வருது....

ஏய் தங்ககம்பி போட்டாச்சு!! போட்டாச்சு!!..... எத்தனை!!!

said...

//நீ கப்பி பயல இந்த வம்புல இழுத்து விட பாத்தாலும், நான் அசர மாட்டேன். நான் நேரா மேட்டருக்கு வரேன்.//

பத்த வச்சவன் ஓடிட்டானாம், பாக்க வந்தவன் மாட்டிகிட்டானாம்
அதுமாதிரி இருக்கு கப்பி உன்னோட நிலைமை. :))

said...

//அப்டி என்னா சொன்னேன்? வித்யா பாலன் வித்யாசமா
கேரளக்கிளிகள விட அழகா இருக்காங்கனுதான சொன்னே.
இதுக்கே பிராது குடுத்தா எப்டி?//


//அடபாவி கவுத்திட்டியே.....//

ராமண்ணே அதில உள்குத்து வச்சிருக்கேன் பாக்கலியா?
வித்யா பாலன் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான்
தீவாளி, பொங்களுக்கு கூட கேரளா பக்கம் போனதில்ல :))
அப்படி இருக்க வி.பா ஒரு சேச்சியே அல்ல!

said...

தம்பி,
யார ஏமாத்த பாக்கற???

நீ இப்படியா சொன்ன???
//அப்டி என்னா சொன்னேன்? வித்யா பாலன் வித்யாசமா
கேரளக்கிளிகள விட அழகா இருக்காங்கனுதான சொன்னே.
இதுக்கே பிராது குடுத்தா எப்டி?
//

நீ சொன்ன டயலாக் இதோ
//சேச்சிக்கு உண்டான எந்த அடையாளமும்
இல்லாமல் இருக்கிறார் அதனாலே ரசிக்க முடிகிறது//

இந்த ஸ்டெட்மெண்ட வாபஸ் வாங்கிக்கோ :-)

said...

//இந்தி எதிர்ப்பு போராட்டதான்... சாரிப்பா நான் வரலாறுலே வீக்...:(((//

மக்கா... இங்கன பாருங்க.. ஒருத்தர் தமிழனோட வரலாறே தெரியாதுனு சொல்றாரு...

மதுரைல இருந்து வந்துட்டு இப்படி சொல்லலாமா???

புத்தக கண்காட்சில போயி கண்ட புக் எல்லாம் வாங்குனீரு... தமிழ் வரலாறு பத்தி தெரிஞ்சிக்கனும்னு புத்தகம் வாங்கனும்னு தோனல...

said...

சரி அதெல்லாம் விடுங்க வித்யா பாலன் முன்னேற்றக் கழகத்தின் தலைவரா இப்போ ராமை தேர்தெடுக்கலாமா வேண்டாமா? அதை சொல்லுங்க.

said...

//பத்த வச்சவன் ஓடிட்டானாம், பாக்க வந்தவன் மாட்டிகிட்டானாம்//

இதே பழமொழியை சென்னையில் வேறுமாதிரி சொல்வார்கள்...

, .................. ஓடிட்டானாம், ஒண்ணுக்கு அடிச்சவன் மாட்டிக்கிட்டானாம் என்று

அன்பு ராம், கோடிட்ட இடத்தை நிரப்புக :-)

said...

//மக்கா... இங்கன பாருங்க.. ஒருத்தர் தமிழனோட வரலாறே தெரியாதுனு சொல்றாரு..//

யோவ் வெட்டி,

குழப்பத்தை உண்டு பண்ணதய்யா.... புலி என்னத்தை கேட்டப்பாலே நீ என்ன இடைசெருகல் கேள்வியே திணிக்கிறே... :-))))


//மதுரைல இருந்து வந்துட்டு இப்படி சொல்லலாமா???//

அதுக்கு மதுரை என்ன செய்தது...!!!

said...

//சரி அதெல்லாம் விடுங்க வித்யா பாலன் முன்னேற்றக் கழகத்தின் தலைவரா இப்போ ராமை தேர்தெடுக்கலாமா வேண்டாமா? அதை சொல்லுங்க.//

அகில உலக சே.மு.க தலைமையகம் இங்க சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடியில் இருக்கு
சம்பந்தமே இல்லாம பெங்கலூர்ல இருக்கறவருக்கு பதவியா?
ஒருக்காலும் அனுமதிக்க முடியாது.

said...

//இதே பழமொழியை சென்னையில் வேறுமாதிரி சொல்வார்கள்...

, .................. ஓடிட்டானாம், ஒண்ணுக்கு அடிச்சவன் மாட்டிக்கிட்டானாம் என்று//

:))

said...

//இந்த ஸ்டெட்மெண்ட வாபஸ் வாங்கிக்கோ :-) //

vetti,

We are coming from same sand, why kolaveRi?

said...

//அன்பு ராம், கோடிட்ட இடத்தை நிரப்புக :-) //

ஹி ஹி வேணாம் லக்கிண்ணே...

நீங்க நம்ம எல்லா பேருக்கும் நல்ல பிரண்ட்ஸ்..... :-)))))

said...

//சரி அதெல்லாம் விடுங்க வித்யா பாலன் முன்னேற்றக் கழகத்தின் தலைவரா இப்போ ராமை தேர்தெடுக்கலாமா வேண்டாமா? அதை சொல்லுங்க.//

அப்போ நான் தலைவன் இல்லீயா....????

said...

//vetti,

We are coming from same sand, why kolaveRi? //

ஆகா ஏதோ ஒரு வெள்ளைக்கார தொரை ஒருத்தரு நம்ம பிலாக்'லாம் படிச்சி பின்னூட்டம் போட்டுறுக்காருப்பா....!!!!

டாங்கீஸ் தொரை...... :-)))

said...

தம்பி, கப்பி, வெட்டி(நல்ல ரைமிங்கா வருதுப்பா), உங்கள் ஆதரவுக்கு நன்றி. சில பல காரணங்களாம் என்னால் இந்த ஆட்டத்துல சரியா கலந்துக் முடியவில்லை. அதுவும் இல்லாமல் அன்பு, நட்பு, பண்பு போன்ற பல வார்த்தைகளை கொண்டு சிலர் விளையாடிய காரணத்தாலும் இந்த ஆட்டத்தை தொடர விரும்பவில்லை.

நம்ம பயபுள்ள எங்கயும் போக போவது இல்லை. அடுத்த தபா பாத்துக்கலாம்.