Monday, June 18, 2007

எனக்கான வெளியில்.......சுயமறிதலின் போரட்டங்களில்
பறக்குமெனது ஆத்மா!

மேகக்கூட்டங்களில் கரைசலை நீர்க்கும்
வான்வெளியில் கலவாத
போரட்ட பாங்கொடு ஓப்பிட தொடங்கியதன் பயணம்
உச்சமென்னும் நிலைக்கு அடிபணியும்
நிலவிடமும்,உச்சமென்னும் நிலையொன்றை ஆளும்
ஞாயிறென்னும் மாயை தர்க்கம் கண்டு தோற்று
நிலையற்ற தன்னிலை அறிந்து திரும்பியதும்
இன்னுமொரு இரவிலும் தன் பயணத்தை தொடர
அதனின் திட்டங்களை வரையறுத்து கொண்டது.

அதன் பயணகால திட்டநடவடிக்கை வரையிலான
என் இருப்பு
குழப்பவெளிகளில் அலையும்
குருட்டு புலியின் வன்மைக்கு
ஒப்பானதே.

109 comments:

said...

தெளிவா குழப்பிட்டீங்க அண்ணாத்த!!
ஏற்கெனவே ஒரு மாதிரி இருப்பேன்,இதை படிச்ச அப்புறம் நல்லாவே முத்தி போச்சு!! :-P

said...

எப்படி?? எப்படி அண்ணா இப்படி எல்லாம்????

காதலிச்சா கவுஜ வரும்னு சொன்னாங்க!! ஆனா இது மாதிரி எல்லாம் வரும்னு சொல்லவே இல்லையே!! :-S

said...

அய்யோ நல்லாருந்த புள்ள ஆரு கண்ணு பட்டுச்சோ தெரியலயே :(((

said...

ரைட்டு புரிஞ்சுடுச்சு . நீங்களுமா?.

said...

நல்லாத்தானேப்பா இருந்த ராயலு?! ஊருக்குப் போய்ட்டு வந்ததும் இப்படி ஆகணுமா! அதாருப்பா, பெங்களூருல இருக்கிறது, புள்ளைய கூட்டிப் போய் மந்திரிச்சி வுடுங்க ;)

said...

ரஞ்சனி அண்ணியை பிரிந்த தாக்கமா?
அதுக்கு அப்பாவி பய புள்ளைங்கள இப்படி எல்லாம் கவுஜ போட்டு குழப்பலாமா?

said...

குழப்பவெளிகளில் அலையும்
குருட்டு புலியின் வன்மைக்கு
ஒப்பானதே
//

குருட்டு புலிக்கு குழப்பவெளியா இருந்தா என்ன குழப்பமில்லாவெளியா இருந்தா என்ன தல...?

said...

ஏப்பா சங்கம் வளர்த்த மதுரைக்காரா, ஏப்பா இப்படி படுத்தற.....

வைகைல தண்ணி இல்லை, உன்னோட கவிதைல சுவை இல்ல...

said...

//அதாருப்பா, பெங்களூருல இருக்கிறது, புள்ளைய கூட்டிப் போய் மந்திரிச்சி வுடுங்க ;) //

இம்சை அக்கா அண்ட் ஜி அண்ணாகிட்ட சொல்லுறேன் பொன்ஸ் அக்கா.கவலப்படாதீங்க.ராம் அண்ணாவை நம்பதான் காப்பாத்தனும்

said...

/CVR said...
தெளிவா குழப்பிட்டீங்க அண்ணாத்த!!
ஏற்கெனவே ஒரு மாதிரி இருப்பேன்,இதை படிச்ச அப்புறம் நல்லாவே முத்தி போச்சு!! :-P
//

அப்பாடா...ஒரு வழியாக இந்த உண்மையை ஒத்துகிட்டீங்களே :D உங்களுக்குப் பெரிய மனசு சிவிஆர்

said...

பொன்ஸக்கா சொன்ன மாதிரி, மந்திரிக்க போகலாமா?...நம்ம உருளைக்கிழங்கு சாயபு (அ) கோரிப்பாளையம் தர்கா மாதிரி, இங்க பெங்களூர்லயும் எடமெல்லாம் பார்த்து வச்சிருக்கேன்....

said...

அய்யனார் எங்கிருந்தாலும் வரவும்...:)

said...

//குருட்டு புலிக்கு குழப்பவெளியா இருந்தா என்ன குழப்பமில்லாவெளியா இருந்தா என்ன தல...? //

நல்ல கேள்வி.வாழ்க மின்னல்.

said...

//தெளிவா குழப்பிட்டீங்க//

CVR,

நானும் ஒரு குழப்பவாதி'ன்னு தான் இந்த கவிதை'லே சொல்ல வந்துருக்கேன்..... ஹி ஹி

//காதலிச்சா கவுஜ வரும்னு சொன்னாங்க!! ஆனா இது மாதிரி எல்லாம் வரும்னு சொல்லவே இல்லையே!! :-S//

ஏன் மேன் இந்த ரத்த வெறி எல்லாம்??? :(

said...

//
அப்பாடா...ஒரு வழியாக இந்த உண்மையை ஒத்துகிட்டீங்களே :D உங்களுக்குப் பெரிய மனசு சிவிஆர//
நான் எப்பவுமே உண்மையை ஒத்துப்பேன்!!
அண்ணாத்த மாதிரி கவுஜ போட்டு குழப்ப மாட்டேன்!! :-D

said...

//குருட்டு புலிக்கு குழப்பவெளியா இருந்தா என்ன குழப்பமில்லாவெளியா இருந்தா என்ன தல...? //

சூப்பரு... மின்னலு கலக்கிட்டீங்க...

ராயலு.. என்ன உங்க கவிதையப் பத்தி ஒன்னுமே சொல்லலையேன்னு பாக்குறீங்களா?? புரிஞ்சாதானே ஏதாவது சொல்றதுக்கு?? :((

said...

Oru mannum puriyala.. :((

said...

innoru adarkaana puli vanthiruchchu.. :-((

said...

//அய்யோ நல்லாருந்த புள்ள ஆரு கண்ணு பட்டுச்சோ தெரியலயே :(((//


கதிரு,

கண்ணு படலை... நேத்து அடர்கானகத்து புலியோட பல்லு பட்டுருச்சு....

அதுதான் இப்பிடி ஆகிப்போச்சு... :)

//வருத்தப்படாத வாலிபன். said...

ரைட்டு புரிஞ்சுடுச்சு . நீங்களுமா?. //

வ.வா,

ஹி ஹி ஆமாம்... :)

said...

@மின்னுது மின்னல்:

//அய்யனார் எங்கிருந்தாலும் வரவும்...:) //

rightuuu!!!! puliyum puliyum onnu sernthaachu!!!!

said...

@raam
//நானும் ஒரு குழப்பவாதி'ன்னு தான் இந்த கவிதை'லே சொல்ல வந்துருக்கேன்..... ஹி ஹி//

குழப்பவாதி இல்லை.அதுக்கும் மேல என்று எங்களுக்கு எல்லாம் தெரியும் அதுனால தான் எல்லாரும் இப்படி பதறி கொண்டிருக்கின்றோம்.

//ஏன் மேன் இந்த ரத்த வெறி எல்லாம்??? :( //

சிவிஆர் நிஜத்தைச் சொல்லி இருக்கார் அண்ணா...ஒத்துகோங்க

said...

துர்கா|†hµrgåh said...

நல்ல கேள்வி.வாழ்க மின்னல்.
///

என்னை வைச்சி காமெடி பண்ணலையே..:)

said...

மிகவும் தெளிவாப் புரியுது.,எனக்குப் புரியலைனு.

சோகவெளியா இது,இல்லாட்ட ஆன்ம வெளியா.:((

said...

//நல்லாத்தானேப்பா இருந்த ராயலு?! ஊருக்குப் போய்ட்டு வந்ததும் இப்படி ஆகணுமா!//

பொன்ஸ்க்கா,

இன்னவரைக்கும் எனக்கு ஒன்னும் ஆகலை....

//அதாருப்பா, பெங்களூருல இருக்கிறது, புள்ளைய கூட்டிப் போய் மந்திரிச்சி வுடுங்க ;)//

ஹி ஹி.... ஏற்கெனவே தாயத்து கட்டிட்டேன்... :)

said...

//வல்லிசிம்ஹன் said...
மிகவும் தெளிவாப் புரியுது.,எனக்குப் புரியலைனு.

சோகவெளியா இது,இல்லாட்ட ஆன்ம வெளியா.:((
//

காதல் தந்த வலியில் வந்த வெளி என்று நாங்க எல்லாரும் நினைக்குறோம் :D

said...

ஹி ஹி.... ஏற்கெனவே தாயத்து கட்டிட்டேன்... :)
///

அந்த தாயத்து வேலை செய்யவில்லை என்னிடம் தாயத்து வாங்கி ரசிதை பெற்றுக்கொள்ளவும் ஒன் யியர் வாரண்டி உண்டு....!!!

said...

//ரஞ்சனி அண்ணியை பிரிந்த தாக்கமா?
அதுக்கு அப்பாவி பய புள்ளைங்கள இப்படி எல்லாம் கவுஜ போட்டு குழப்பலாமா?/

ஜிஸ்டர்,

கவுஜ'லே என்ன குழப்பம் இருக்கு? நாந்தான் குழப்பவாதி'ன்னு சொல்லிருக்கேன்... :)

//இம்சை அக்கா அண்ட் ஜி அண்ணாகிட்ட சொல்லுறேன் பொன்ஸ் அக்கா.கவலப்படாதீங்க.ராம் அண்ணாவை நம்பதான் காப்பாத்தனும்//

அடப்பாவிகளா... ஏன் இந்த கொலைவெறி கூட்டணி எல்லாம்??? :(

said...

ஜிஸ்டர்,

கவுஜ'லே என்ன குழப்பம் இருக்கு? நாந்தான் குழப்பவாதி'ன்னு சொல்லிருக்கேன்... :)
///

கவிதையில் குழப்பம்னு யாரு சொன்னா இங்க உங்களுக்குதான் எதோனு பதறிஅடிச்சிகிட்டு ஓடிவர்ராங்க எல்லாரும் தல...:)

said...

//கவுஜ'லே என்ன குழப்பம் இருக்கு? நாந்தான் குழப்பவாதி'ன்னு சொல்லிருக்கேன்... :)//

நீங்க குழப்பவதின்னு சொன்ன விதமே குழப்பமாக இருந்ததால் நாங்க எல்லாம் குழம்பி போய் இருக்கோம்.உங்க குழப்பவாதியாக மாற்றிய அந்த அண்ணி யாரு அண்ணா?

said...

//குருட்டு புலிக்கு குழப்பவெளியா இருந்தா என்ன குழப்பமில்லாவெளியா இருந்தா என்ன தல...?//

மின்னலு,

அப்பிடியில்லை மக்கா! குழப்பவெளின்னா கல்லும் மண்ணும் நிறைச்சு இருக்கிற கஷ்டமான இடத்திலே நடக்கிற குருடன் மாதிரி'ன்னு சொல்ல வந்துருக்கேன்.... :)

//வைகைல தண்ணி இல்லை, உன்னோட கவிதைல சுவை இல்ல...//

அனானி சாமி,

எந்த சுவை'னு சொல்லு மக்கா? ஒறப்பா, புளிப்பா இல்ல கசப்பா?

சொல்லிட்டு போ, அதை வைச்சி கவுஜ எழுதிடாலாம்..... :)

said...

//அடப்பாவிகளா... ஏன் இந்த கொலைவெறி கூட்டணி எல்லாம்??? :( //

இது பாசக்கார குடும்பம்.ச்சே இந்த நேரம் பார்த்து வெட்டி அண்ணா ஊரில் இல்லமால் போயிட்டார்..ரொம்ப ஃபிலிங்க இருக்கு.

said...

அப்பிடியில்லை மக்கா! குழப்பவெளின்னா கல்லும் மண்ணும் நிறைச்சு இருக்கிற கஷ்டமான இடத்திலே நடக்கிற குருடன் மாதிரி'ன்னு சொல்ல வந்துருக்கேன்.... :)
///

சரி வந்துருக்கே அப்புறம்...????

said...

/
அப்பாடா...ஒரு வழியாக இந்த உண்மையை ஒத்துகிட்டீங்களே :D உங்களுக்குப் பெரிய மனசு சிவிஆர்//

அவரு எப்பவுமே பெரிய மனசுக்காரரு தானே தங்கச்சி.... :)

//பொன்ஸக்கா சொன்ன மாதிரி, மந்திரிக்க போகலாமா?...நம்ம உருளைக்கிழங்கு சாயபு (அ) கோரிப்பாளையம் தர்கா மாதிரி, இங்க பெங்களூர்லயும் எடமெல்லாம் பார்த்து வச்சிருக்கேன்..../

ஹிம் எங்க வர்றனுமின்னு சொல்லுப்பா... வந்துறேன்... :)

//அய்யனார் எங்கிருந்தாலும் வரவும்...:)///

மின்னலு,

அவரே ஏய்யா கூப்பிடுறே??

said...

//
சூப்பரு... மின்னலு கலக்கிட்டீங்க.../

ஜியா,

Grrrrrrrrrrrrrrrrr

//ராயலு.. என்ன உங்க கவிதையப் பத்தி ஒன்னுமே சொல்லலையேன்னு பாக்குறீங்களா?? புரிஞ்சாதானே ஏதாவது சொல்றதுக்கு?? :((/

மின்னலுக்கு சொன்ன பதிலை படிச்சி பாரு மக்கா :)

said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
said...

வந்துட்டேன் மின்னல

said...

மின்னலு,

அவரே ஏய்யா கூப்பிடுறே??
//

கஷ்டபட்டு கவிதை எழுதியிருக்கே
இத புரிஞ்சிக்கிற ஓரே ஆளு அவருதான் அவரு வந்து புரியுதுனு சொன்னா பொழச்சிபோனு உட்டுடுவோம்...:)

said...

அன்புள்ள நண்பர் இராம் அவர்களுக்கு,

இப்பவும் உங்களைப் பிரிந்து மிகுந்த கவலை அடைந்துள்ளேன்.

உடனடியாக திரும்ப வரவும்.

நல்லதொரு நண்பனின் நினைவுடன்,

சேது!

said...

இந்த புலிய ரெஜிஸ்டர் பண்ண
வழியுண்டா?

என் பேர்ல புலி ய காப்பிரைட் செய்ய எம்புட்டு செலவாகும் மக்கா

said...

நாமக்கல் சிபி said...
//மின்னலு,

அவரே ஏய்யா கூப்பிடுறே??
//

மந்திரிக்கதேன்!
//

அய்ஸ இப்படி மந்திரிச்சி தான் இப்ப அடக்கி வாசிக்கிறார்...

புலிக்கு அடங்கி இருக்கிறார்...:)

said...

//கஷ்டபட்டு கவிதை எழுதியிருக்கே
இத புரிஞ்சிக்கிற ஓரே ஆளு அவருதான் அவரு வந்து புரியுதுனு சொன்னா பொழச்சிபோனு உட்டுடுவோம்...:) //

அய்ஸ் பொய் சொல்லமால் உண்மையைச் சொல்லுங்க.உங்க கவிதைவிட பெரிய குழப்பம் இந்த கவிதை

said...

அய்யனார் said...
வந்துட்டேன் மின்னல
///

வாய்யா வா நீயாவது சொல்ல கூடாதா
சின்ன(கை)புள்ள எப்படி குழம்பிடுச்சி

said...

வார்ரே வா ராம்

ஆரம்பி ஆட்டத்த கவித ய அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிடலாம் ..ஆனா புலிய விட்டுடு
:)

said...

//அப்பிடியில்லை மக்கா! குழப்பவெளின்னா கல்லும் மண்ணும் நிறைச்சு இருக்கிற கஷ்டமான இடத்திலே நடக்கிற குருடன் மாதிரி'ன்னு சொல்ல வந்துருக்கேன்.... :)//

இதை சொல்லுறதுக்கு இந்த கவுஜைய விட்டா வேற வழியே இல்லையா????
ஏன் இந்த கொல வெறி?? :-(((

said...

அய்யனார் said...
இந்த புலிய ரெஜிஸ்டர் பண்ண
வழியுண்டா?

என் பேர்ல புலி ய காப்பிரைட் செய்ய எம்புட்டு செலவாகும் மக்கா
///

நாகை சிவாவிடம் கேட்க வேண்டிய கேள்வி..


கானக புலியை வேண்டால் காப்பிரைட் செய்ய சிபியை அனுகவும்...:)

said...

இனிமேல் கவிதைய பேப்பர்ல கூட படிக்க மாட்டேன் என்னை விட்டுடுங்க சாமீ....

said...

////அப்பிடியில்லை மக்கா! குழப்பவெளின்னா கல்லும் மண்ணும் நிறைச்சு இருக்கிற கஷ்டமான இடத்திலே நடக்கிற குருடன் மாதிரி'ன்னு சொல்ல வந்துருக்கேன்.... :)////

அப்படியா?இது இதைப் படிச்சவங்க யாருக்காச்சும் இப்படி புரிந்ததா?சொல்லுங்கப்பூ.

said...

/அய்ஸ இப்படி மந்திரிச்சி தான் இப்ப அடக்கி வாசிக்கிறார்.../

யார் சொன்னா நளைக்கு ஒரு புனைவு கதைய போட்டு கொல்லாம விடுறதில்ல உங்களை எல்லாம்

said...

//அப்பிடியில்லை மக்கா! குழப்பவெளின்னா கல்லும் மண்ணும் நிறைச்சு இருக்கிற கஷ்டமான இடத்திலே நடக்கிற குருடன் மாதிரி'ன்னு சொல்ல வந்துருக்கேன்.... :)
///

சரி வந்துருக்கே அப்புறம்...???? //

அண்ணன் மின்னலின் இந்த அறிவுபூர்வமான கேள்வியை நான் அகமகிழ்ந்து வழிமொழிகிறேன்!!!

said...

அய்யனார் said...
வார்ரே வா ராம்
///
இனி வெளங்கின மாதிரிதான்

said...

யோவ் உன்ன பாத்துதான்யா பசங்க கெட்டு போயிட்டாங்க.
எப்படியாச்சும் யாருக்கும் புரியாம எழுதிடணும்னு மெனெக்கெட்டு ஏதாச்சும் எழுதிடறாங்க.
உன்னசொல்லணும்யா

said...

யார் சொன்னா நளைக்கு ஒரு புனைவு கதைய போட்டு கொல்லாம விடுறதில்ல உங்களை எல்லாம்
///

நாங்களும் கொல்லாம விடமாட்டோம்

said...

உனக்கான களி யில்னு அடுத்த கவுஜ ரெடியாகிட்டு இருக்கு

said...

கலக்கிட்டே சந்துரூ...

சில விஷயங்களை கவனிக்கனும்.


என்ன தான் குண்டூசி நவீனத்துவமா இருந்தாலுமே கூட சொற்சுவையை விட்டுடாதீரும்.

அப்புறம்.. ஃபார்மேட்டிங்.. ஒரு பாராவுக்கும் அடுத்த பாராவுக்கும் இடைவெளி விடுங்க.. you can use some separator for that.

மத்தபடி கவுஜ ஜூப்பர். ஆசிஃப் அண்ணாச்சி கிட்ட மாலை வாங்கி மாட்டிக்கிட்டு ஜோதில (கவுஜ மடம்பா வேற எதாச்சும் நெனச்சுக்கிட்டு வெவகாரம் பண்ணாத ) ஐக்கியமாய்டு..

said...

ஆகா வெச்சிட்டான்யா ஆப்பு

said...

அண்ணன் மின்னலின் இந்த அறிவுபூர்வமான கேள்வியை நான் அகமகிழ்ந்து வழிமொழிகிறேன்!!!
///

இதற்கு பெயர் பாசமா இல்லை கொல வெறியா என்று தெரியாமல் இந்த கவிதைபோல் நானும்.....

said...

தம்பி
விரைவில் நீயும் இதுபோன்ற கவிதைகளை எழுத முயற்சிப்பாய் என நம்புகிறேன்

said...

மத்தபடி கவுஜ ஜூப்பர். ஆசிஃப் அண்ணாச்சி கிட்ட மாலை வாங்கி மாட்டிக்கிட்டு
//
மஞ்சள் தண்ணிய
தலையில ஊத்திகிட்டு தலைய சிலுப்பி நல்லா ஆட்டுங்க மத்தத நாங்க பாத்துகுறோம்...:)

said...

அய்யனார் said...
தம்பி
விரைவில் நீயும் இதுபோன்ற கவிதைகளை எழுத முயற்சிப்பாய் என நம்புகிறேன்
//

ஒரு குருப்பாதான் திரியுரானுவோலா...
அவ்வ்வ்வ்

said...

//மின்னுது மின்னல் said...
அண்ணன் மின்னலின் இந்த அறிவுபூர்வமான கேள்வியை நான் அகமகிழ்ந்து வழிமொழிகிறேன்!!!
///

இதற்கு பெயர் பாசமா இல்லை கொல வெறியா என்று தெரியாமல் இந்த கவிதைபோல் நானும்.....
//
உங்களுக்குள்ளே உறங்கிகிட்டு இருந்த கானகத்து புலியை தட்டி எழுப்பிட்டனா????
எல்லாம் இந்த கவுஜையை சொல்லனும்!!!

என் மேலே தப்பு இல்லை மக்களே!!! :-((((

said...

raam brother,inmel kavuja ellam unga kita irunthu varuma?next postku solli annupunga...tata

said...

//Oru mannum puriyala.. :((//

தங்கச்சிக்கா,

என்ன இப்பிடி சொல்லிட்டிங்க... :((

//வல்லிசிம்ஹன் said...

மிகவும் தெளிவாப் புரியுது.,எனக்குப் புரியலைனு.

சோகவெளியா இது,இல்லாட்ட ஆன்ம வெளியா.:(( //

அம்மா வருகைக்கு நன்றி..... :)

இந்த கவிதை'க்கு அர்த்தம் மரணம் வரையும் நம்ம ஆத்மா எல்லாருக்கிட்டேயும் ஒப்பிடு செஞ்சிட்டே இருக்குமின்னு சொல்ல வர்றது.... :)

ஆனா வார்த்தை பிரயோகங்களை தப்பா உபயோக படுத்திட்டேன் போலே?? அதுதான் உங்களுக்கு புரியாமே போச்சு... :)

said...

இந்த கவிதை'க்கு அர்த்தம் மரணம் வரையும் நம்ம ஆத்மா எல்லாருக்கிட்டேயும் ஒப்பிடு செஞ்சிட்டே இருக்குமின்னு சொல்ல வர்றது.... :)
//
இப்பவும்
எங்களுக்கு புரியல :(
இதுல கவிதையா வேற சொன்னா எப்படி இருக்கும் எங்களுக்கு...

said...

http://kaladi.blogspot.com/2007/06/blog-post.html

இந்தா வச்சுக்கோ.. போட்டிக்கு போட்டி.. என்னை இந்தக் கவிதையை படிக்க வச்சு கொடும பண்ணதுக்கு தண்டனையா அந்தக் கவிதையை படி


கொலை வெறியுடன்
ஜீவா

said...

கவிதை நன்றாக இருக்கிறது இராம்!

said...

//நாமக்கல் சிபி said...
This post has been removed by the author. //

பின்னூட்டத்தை தனக்கு தானே அழித்து கொள்ளும் அராஜக போக்கில் நடக்கும் தளபதியின் இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.....

said...

//இந்த புலிய ரெஜிஸ்டர் பண்ண
வழியுண்டா?//

அய்ஸ்,

எனக்கும் சேர்த்து பண்ணுங்க... :)

//என் பேர்ல புலி ய காப்பிரைட் செய்ய எம்புட்டு செலவாகும் மக்கா//

என்ன புட்டி கணக்குதான்.... :)

said...

//கஷ்டபட்டு கவிதை எழுதியிருக்கே
இத புரிஞ்சிக்கிற ஓரே ஆளு அவருதான் அவரு வந்து புரியுதுனு சொன்னா பொழச்சிபோனு உட்டுடுவோம்...:) //

அய்ஸ் பொய் சொல்லமால் உண்மையைச் சொல்லுங்க.உங்க கவிதைவிட பெரிய குழப்பம் இந்த கவிதை//

தங்கச்சி,

ஏன்மா இப்பிடியெல்லாம்???? :((

said...

/வார்ரே வா ராம்

ஆரம்பி ஆட்டத்த கவித ய அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிடலாம் ..ஆனா புலிய விட்டுடு
:)//

அய்ஸ்,

ஹி ஹி சரி விட்டுறேன்... :)

said...

//
இதை சொல்லுறதுக்கு இந்த கவுஜைய விட்டா வேற வழியே இல்லையா????
ஏன் இந்த கொல வெறி?? :-(((//

ஆஹா இந்த கவிஜ'யே படிச்சதும் கொலைவெறியா ஆகுதா?? அப்போ ஓகே... ;-)

said...

///அப்பிடியில்லை மக்கா! குழப்பவெளின்னா கல்லும் மண்ணும் நிறைச்சு இருக்கிற கஷ்டமான இடத்திலே நடக்கிற குருடன் மாதிரி'ன்னு சொல்ல வந்துருக்கேன்.... :)
///

சரி வந்துருக்கே அப்புறம்...???? //

அண்ணன் மின்னலின் இந்த அறிவுபூர்வமான கேள்வியை நான் அகமகிழ்ந்து வழிமொழிகிறேன்!!!//

யோவ்.... இது கவிதைய்யா!!! கதையா எழுதிருக்கேன்..??? அப்புறம்'ன்னு கேட்டுக்கிட்டு??? :((

said...

//மத்தபடி கவுஜ ஜூப்பர். ஆசிஃப் அண்ணாச்சி கிட்ட மாலை வாங்கி மாட்டிக்கிட்டு ஜோதில (கவுஜ மடம்பா வேற எதாச்சும் நெனச்சுக்கிட்டு வெவகாரம் பண்ணாத ) ஐக்கியமாய்டு..//

ஹி ஹி ... ஓகே... :))))

said...

இந்தக் கவிதை பல புரிதல்களை எனக்குக் கொடுக்கிறது

said...

ஹலோ மிஸ்டர்

உமரு புலவர் எங்க ராம் இந்த கவிதையை எழுதி இருக்கிறார்
இதற்க்கு கொஞ்சம் விளக்கம் தர முடியுமா?

அய்யோ அம்மா ,அப்பா வலிக்குதே ஏங்க இந்த அடி அடிக்கிறீங்க

கவிதை எழுதினவர அடிக்க முடியல அதான் உன்ன அடிக்கிறேன்...

said...

why பிளட்.....

மின்னல் same பிளட்....

said...

அங்க அடர்கானக புலி..இங்க குருட்டு புலியா??

எனக்கு ஒன்னும் புரியல..எல்லாரும் புரியலன்னு சொல்றாங்க..அப்ப கண்டிப்பா இது கவுஜயா தான் இருக்கனும்...

நல்ல கவிதை இராம் :))

said...

வேணாம் ராயலு .. அப்புறம் நானு அழுதுருவேன்.

said...

//இந்தக் கவிதை பல புரிதல்களை எனக்குக் கொடுக்கிறது//

இத விட உங்கள யாரும் இன்சல்ட் பண்ணவே முடியாது. எனக்கும் ஒன்னுமே பிரியல ராம் :(

said...

//தம்பி
விரைவில் நீயும் இதுபோன்ற கவிதைகளை எழுத முயற்சிப்பாய் என நம்புகிறேன்///

அய்ஸ்,

கதிரு தான் இதேமாதிரி பாவனா பத்தி எழுதினாப்பலேயே??? :)

said...

//இந்தா வச்சுக்கோ.. போட்டிக்கு போட்டி.. என்னை இந்தக் கவிதையை படிக்க வச்சு கொடும பண்ணதுக்கு தண்டனையா அந்தக் கவிதையை படி//

ஆஆஆ.... என்ன கொடுமை ஜீவ்ஸ் இது??? :((

said...

//கவிதை நன்றாக இருக்கிறது இராம்!//

தள,

இப்போதான் அதவே படிச்சிங்களா??? படிக்காமேலே எத்தனை கமெண்ட் போட்டுட்டிங்க???

said...

//ஜாலிஜம்பர் said...

இந்தக் கவிதை பல புரிதல்களை எனக்குக் கொடுக்கிறது //


இதை படிச்சிட்டு சந்தோஷமா தான் இருந்தேன்... ஆனா கவிதாயினி காயத்ரி கமெண்ட் படிச்சதும் தான் அர்த்தமே புரிஞ்சது... :((

ஏன் மக்கா இப்பிடியெல்லாம்?? :(

said...

/கவிதை எழுதினவர அடிக்க முடியல அதான் உன்ன அடிக்கிறேன்...//

குசும்பன்,

வைச்சுக்கிட்டே பேருக்கு சரியா தான் இருக்கீங்க.. :)

said...

//அங்க அடர்கானக புலி..இங்க குருட்டு புலியா??//

கப்பி,
ஹி ஹி ஆமாம்... :)

//எனக்கு ஒன்னும் புரியல..எல்லாரும் புரியலன்னு சொல்றாங்க..அப்ப கண்டிப்பா இது கவுஜயா தான் இருக்கனும்...

நல்ல கவிதை இராம் :))//

அடபாவி... குத்துன்னு குத்திட்டு நல்ல கவிதைன்னு நக்கலா... :(

நல்லாயிரு ;)

said...

//வேணாம் ராயலு .. அப்புறம் நானு அழுதுருவேன்.///

தருமி ஐயா...

கவிதை அவ்வளோ டச்சிங்கா இருக்கா என்ன?? :)))))

said...

//இத விட உங்கள யாரும் இன்சல்ட் பண்ணவே முடியாது. ///

கவிதாயினி,

ஏனிந்த கொலைவெறி... :((

//எனக்கும் ஒன்னுமே பிரியல ராம் :(//

அதுக்கு பேருதான் கவிதை.. :)

said...

////எனக்கும் ஒன்னுமே பிரியல ராம் :(//

அதுக்கு பேருதான் கவிதை.. :) //

thappa solliteenga raam.. idhu kavidhai illa kaaviyam.. Neenga pesaama idhukku oru konaar notes podunga.. naanga andha konaar notesoda vera yaar kittayaavadhu tuition sendhu appavaavadhu engalukku edhaavadhu puriyudhaannu paakarom ;-))

said...

என் நண்பர் இதே போல் ஒரு கவிதை(???)( ஏன் மக்கா எல்லாம் இந்த முறை முறைக்கிறீங்க!!!)
க்கு விமர்சணம் செய்ய உங்களை அழைத்து இருக்கிறேன்..வாருங்கள்
கவிஞர் ராம் ...http://kusumbuonly.blogspot.com/2007/06/blog-post_18.html
(ரெண்டு பேரும் ஒரே அலைவரிசையில இருக்காங்க போல!!!)

said...

/thappa solliteenga raam.. idhu kavidhai illa kaaviyam..//


ஊஞ்சல்ஸ்,

ஏனிந்த கொலைவெறி?? காவியம் அது இது'ன்னு ஏன் மறுபடியும் பத்த வைக்கீறிங்க?? :)

//Neenga pesaama idhukku oru konaar notes podunga.. naanga andha konaar notesoda vera yaar kittayaavadhu tuition sendhu appavaavadhu engalukku edhaavadhu puriyudhaannu paakarom ;-))//

இந்த கவிதைக்கு அர்த்தம்தானே? அனுப்பி வைக்கிறேன் பாருங்க... :)

said...

//.வாருங்கள்
கவிஞர் ராம//

அய்யா குசும்பா போதுமய்யா!!! கவிஞர்'ன்னு கூப்பிட்டு கூப்பிட்டே நல்லா லந்தை வி்டுறே... :)

said...

//படிக்காமேலே எத்தனை கமெண்ட் போட்டுட்டிங்க???//

2

said...

இராம்!

போன கமெண்டு கலாய்க்க இல்லை!

நீங்க கேட்ட கேள்விக்கு சீரியசான பதில்!

அவ்வளவுதான்!

:-x

said...

annathe ennamo solli irukeeenga..
sathyama naaan 6 thaba padichium onnumey puriala...

6th standard la tamil vaaathiyar , thirukural sollitu adhuku vilakam ketta eppadi naan thiru thiru nu mulicheno, adhu maaadhiri thaan ingaium, ippo konjam promotion aaagi, bendha bendha muzhichikittu iruken...

said...

adhukunu naaan unga kavidhai puriavey illlanu solla varala brother...

ivlo naaal tamil mattum thaan enakku nalla therium nu thalai ganadhoda irundhen.. ipo adhuvum cat on the wall range la iruku...

onnathaium urupadiavey indha gops ku theriala.. cha....

said...

annathe, neenga artham sonnadhuku appuram thaaan enakku puridhu...

ippa nallavey puridhu..

vilakathuku thanks...

paavi nee ellam oru tamilana? appadinu neenga enna ketka koodaadhu...

said...

eppadi raam ippadi ellam yosikireeenga...

i mean typical tamil words la?

said...

//
போன கமெண்டு கலாய்க்க இல்லை!

நீங்க கேட்ட கேள்விக்கு சீரியசான பதில்!

அவ்வளவுதான்!//

தள,

உண்மையே ஒத்துக்கிட்டதுக்கு மிக்க நன்றி... :))

said...

//annathe ennamo solli irukeeenga..
sathyama naaan 6 thaba padichium onnumey puriala...//


Gops,

புரியலையா??? அப்போ இது கவிதையே தான்.... :)))

//6th standard la tamil vaaathiyar , thirukural sollitu adhuku vilakam ketta eppadi naan thiru thiru nu mulicheno, adhu maaadhiri thaan ingaium, ippo konjam promotion aaagi, bendha bendha muzhichikittu iruken...//

ஹி ஹி இதுக்கு அர்த்தம் அனுப்பி வைக்கிறேன் படிச்சி பாருங்க.... :))

said...

100 potenaa

said...

/ivlo naaal tamil mattum thaan enakku nalla therium nu thalai ganadhoda irundhen.. ipo adhuvum cat on the wall range la iruku...//

ஆஹா எனக்கும் சரியா தமிழ் வராதுங்க... :(( எழுத,பேச,படிக்க மட்டுந்தாங்க ஓரளவுக்கு வரும்.

கவிதை, வெண்பா எழுதுற அளவுக்கெல்லாம் வளர்த்துக்கனுமிங்க.... :)

//eppadi raam ippadi ellam yosikireeenga...

i mean typical tamil words la?//

ஹி ஹி அதுவா வருது.... :)))

said...

//எழுத,பேச,படிக்க மட்டுந்தாங்க ஓரளவுக்கு வரும்.//

pinna enna, paduthu urula koooda seianumaaa raam?

said...

எட்டிப் பார்த்துவிட்டுப் போங்க, எட்டு எழுத கைக்கு எட்டின உங்களை எட்டிப் பார்த்துக் கூப்பிட்டிருக்கேன். :)))))))))

said...

நீங்களாவது "எட்டி நிற்காமல் எட்டு" போட்டு எட்டு எட்டி வந்து என் கிட்டே சொல்லிட்டு எட்டிப் போயிடுங்க! இந்த சிபியை நம்பினேன், கவுத்திட்டார்! :P

said...

ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராட்சசி போல் வருவேன்
நாளைக்கு நீ வந்து "எட்டு" பதிவு போடும்வரை விட மாட்டேன்." :)))))))
எம்.எஸ்.வி. குரலிலே பாடிக்கிட்டே எல்லாரும் எட்டு போடுங்க!

said...

மேடம் நான்தான் 71/2 + 1/2 போஸ்ட் (சீரியஸா) போட்டுட்டனே! அப்புறம் என்ன இங்அ வந்நது கோள் மூட்டுறீங்க?

said...

ராத்திரி நேரத்து ராட்சஷப் பேய்களும் ஸ்டார் வார்ஸ் திரும்பிப்பார்!

ஆத்திரம் கொண்டன அதிசயப் பிராணிகள் ஸ்டார் வார்ஸ் திரும்பிப்பார்!

said...

Enakku purinja maadhuriyum irukku puriyadha maaadhiriyum irukkunga Raam:)

said...

//அதன் பயணகால திட்டநடவடிக்கை வரையிலான
என் இருப்பு
குழப்பவெளிகளில் அலையும்
குருட்டு புலியின் வன்மைக்கு
ஒப்பானதே.//

மிக நல்ல படிமம்.
வாழ்த்துக்கள்