Monday, September 24, 2007

ஹைய்யா...கெலிச்சிட்டோம்........ :)

கிரிக்கெட் விளையாட்டில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் பங்குப்பெற்ற இறுதியாட்டாத்தை கண்டுகளித்த சந்தோஷத்திடன் இடப்படும் பதிவு. ஜெயிக்க வேண்டிய மேட்ச்'ஐ இப்பிடி கோட்டை விட்டுருக்கனுகளே, இவனுகளே என்னத்த சொல்லித் தொலைக்கிறது'ன்னு புலம்ப வைச்சிருவானுகளோன்னு வேற பயம். இன்னிக்கு சாயங்காலம் அஞ்சுமணிக்கே ஆபிஸிலே பாதி பேத்த காணாம். அம்புட்டு பயப்புள்ளகளும் வீட்டுக்கு ஓடிப்போயி டிவி முன்னாடி உட்கார்ந்துருச்சுக. ம்ம் ஜெயிச்சா வின்னர் தோத்தா ரன்னர்'ன்னு தான் பார்க்க ஆரம்பிச்சதினாலே பெரிய எதிர்பார்ப்பு ஒன்னும் வரலைன்னு பொய் சொல்லிட்டு தான் மேட்ச் பார்க்க வேண்டிய சூழ்நிலை.

நம்ம பசங்க மேலே அப்பிடியொரு நம்பிக்கை...........

ஹிம் இம்புட்டு எதிர்பார்ப்பு'ஐ ஏற்படுத்திட்டு அந்த அளவுக்கு விளையாட்டு தொலைச்சானுக'ன்னு பார்த்தா எழவு அதுவும் இல்ல... கெளதம் காம்பீர்'ஐ தவிர எல்லாபயலுகளும் சொத்தையா ஆடி பேட்டிங்'லே கவுத்திட்டானுக... கவுதம் காம்பீர்'க்கு அடுத்து உருப்படியா ஸ்கோர் பண்ணினது RP.சர்மா தான். காம்பீர் 75ம் RP.சர்மா 30'ம் எடுக்க அந்தா இந்தா'ன்னு ஐந்து விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் இந்தியா எடுத்தது.




சரி அந்தா இந்தா'ன்னு ஆடி முடிச்சி சரக்கே தூக்கிட்டு சந்தைக்கு வந்தாச்சி, வியாபாரத்தையாவது ஒழுங்க செய்யுவானுகளா, இல்ல இங்கனயும் சொதப்பிருனுவாங்கன்னு பயந்துதான் ஆட்டமே பார்க்க ஆரம்பிச்சோம். முதல் ஓவரிலே RP.சிங் ஹபிஸ்'ஐ தூக்க இன்னொரு பக்கம் இம்ரான் நசிர் நாலாபக்கமும் பாலை விரட்டிக்கிட்டு இருந்தவும் இல்லாமே ஸ்ரீசந்த்'ஐ தொவைச்சி காயப்போட்டுட்டான். மூணாவது ஓவர்'லே கம்ரான் அக்மல்'ஐ சிங் போல்ட்-அவுட் பண்ண ஆட்டம் சூடுகண்டது. இந்த அமளிதுமளியிலும் இம்ரான் சுத்திட்டு இருந்தான், ஒன்னோ ரெண்டோ எடுக்கிறோம்'ன்னு ஓட உத்தப்பா எறித்த டைரக்ட் ஷட்'லே ரன் -அவுட், இப்போ ஆட்டம் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இதன் பின்னர் மிக சாதாரணமாக நகர்ந்த பாகிஸ்தான் ரன் சேர்க்கிறத ஜோகிந்தர் யூனிஸ்-கான்'ஐ கழட்ட வெற்றி இந்தியா பக்கம் நகர ஆரம்பித்தது.

பதான் சோயிப் மாலிக்'ஐ தூக்க உள்ளே வந்தார் சிக்ஸர் சிங்கம் அப்ரிடி. வந்த மொத பால்'லே சிக்ஸர் தூக்குறேன் பேர் வழி'ன்னு மிட்-அப்'லே ஸ்ரீசாந்த்'கிட்டே கேட்ச் கொடுத்துட்டு குகைக்கு திரும்பிருச்சு சிங்கம். அந்தா இந்தான்னு இந்தியா மாதிரி பாகிஸ்தானேயும் மூணு இலக்கத்துக்கு நகர்த்திட்டு போன மிஸ்பா-அல்-உக் ,யாசிர்-அரபாத் ஜோடியை பதான் பிரிக்க இன்னும் கொஞ்சம் இந்திய வெற்றி ஜெகஜோதியா தெரிஞ்சது. ஆனா மிஸ்பா-அல்-உக்'லே என்னமோ உள்ளே நுழைச்ச கதையா வரிசையா மூணு சிக்சர் அடிச்சி வயித்திலே புளியை கரைக்க ஆரம்பிச்சிட்டான்.

கடைசி மூணு ஓவர்'லே 35 ரன்கள் தேவைக்கிறப்போ ஸ்ரீசாந்த் போட்ட முதல் பால்'லே சிக்ஸ்ர்... ரெண்டாவது பால் வைடு... அஞ்சாவது பால் சிக்ஸ் ஜெகஜோதியா எரிஞ்ச விளக்கு அணையப் போகுதா:( அப்பா தங்கமே எதாவது பண்ணுடா'ன்னு இருந்தா ஸ்ரீசாந்த் ஸ்டிக் ஒன்னை கழட்டி தூக்கி எறிச்சிட்டான்...... :)

இன்னும் கொடுமை'க்குன்னு கடைசி ஓவரு'லே 13 ரன்ஸ் வேனுமின்னு போட்ட ரெண்டாவது பால்'லே சிக்ஸ்ர் அடுத்த பால்'லே கேட்ச்'னு பயபுள்ள அல்-ஹக் அவுட் ஆக இந்தியா வெற்றி பெற்றது


வேகமாக அடிச்சது... புரியலைன்னா மன்னிச்சோங்க மக்கா....

37 comments:

Anonymous said...

nee adichitta sixer kannu! Great commentary man. How fast!great!

osai chella

வெட்டிப்பயல் said...

eppadi ivvalavu seekirama adichi poateenga???

கோபிநாத் said...

ஏய்ய்ய்ய்ய்ய்...சூப்பர் வெற்றி ;))

வெட்டிப்பயல் said...

comment moderation illaiya???

CVR said...

அட அட அடா!!
என்ன வேகம் வேகம்!!!

பத்திரிக்கை துறையில் வேலை செய்ய வேண்டிய அளுப்பா நீயி!!!

எல்லோரும் சண்டை சச்சரவுகளை மறந்து கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு அளித்த இந்திய கிரிக்கெட் அணிக்கு நன்றி!!!
வாழ்த்துக்கள் தோழர்களே!!! :-)

Arunkumar said...

ivalo fasta va?
oors, kalakkite :)

HAIL INDIA !!!

கோபிநாத் said...

\\வெட்டிப்பயல் said...
eppadi ivvalavu seekirama adichi poateenga???\\

எல்லாம் கடமை வெட்டி... ;))

ILA (a) இளா said...
This comment has been removed by the author.
இராம்/Raam said...

ஒசை செல்லா,

இதுக்கு பத்து நிமிசம் ஆச்சு... ஆனா அதுக்கு கோவியார் முந்திக்கிட்டார்..... :)

அபி அப்பா said...

என்ன ஃபாஸ்ட் என்ன ஃபாஸ்ட், பதிவ சொன்னம்ப்பா! வாழ்த்துக்கள் ராம், எல்லாருக்கும்!!

Avanthika said...

Wooww anna.....i am so Happppppppppppppyyyyyyyyyyyyyyyy
:-))))))))))))

Anonymous said...

I felt ashamed, when our indian folks disgraced our country flag, by jumping on it...

Naattu kodiye kila pottu athu mela mela rendu moonu per vizhunthu... :-(

ILA (a) இளா said...

All the Best!

Sundar Padmanaban said...

//கெலிச்சிட்டோம்//

யோவ். நீயெல்லாம் மதுரையாய்யா? கெலிச்சுட்டோமாமுல்ல கெலிச்சுட்டோம்? செயிச்சத இப்படியா குண்டக்க மண்டக்க சொல்றது?

:-)

இலவசக்கொத்தனார் said...

சூப்பர்.

நம்ம பசங்க விளையாட்டும், இந்த பதிவைப் போட்ட உம்ம வேகமும்!!

யாழ் Yazh said...

ivalavu fasta? eppadinga ithallam

இராம்/Raam said...

//வற்றாயிருப்பு சுந்தர் said...

//கெலிச்சிட்டோம்//

யோவ். நீயெல்லாம் மதுரையாய்யா? கெலிச்சுட்டோமாமுல்ல கெலிச்சுட்டோம்? செயிச்சத இப்படியா குண்டக்க மண்டக்க சொல்றது?

:-)//

சுந்தர்,

மருத தமிழிலே சொல்லனுமின்னா ஏலேய் மக்கா செயிச்சிப்பிட்டோம்'லே'ன்னு தான் சொல்லிருக்கனும்...


அவசரத்திலே அடிச்சது அதுதான் எதையும் பார்க்கலை... :))

Geetha Sambasivam said...

வாழ்த்துக்கள். ஆனால் ரொம்பக் குதிக்காதீங்க, இந்திய அணி கிட்டே கொஞ்சம் எச்சரிக்கையோடவே இருந்துக்கணும்! :P

ச.சங்கர் said...

அண்ணாச்சி
மாச்சை ரொம்ப டென்சன்லதான் பாத்துருக்க்ஈங்கன்னு தெரியுது..மிஸ்பா உல் ஹக்...மிசாப் உல் ஹக் ஆயிட்டாரு..
///கடைசி மூணு ஓவர்'லே 35 ரன்கள் தேவைக்கிறப்போ பதான் போட்ட முதல் பால்'லே சிக்ஸ்ர்... ///

அந்த ஓவரைப் போட்டது ஸ்ரீசாந்துங்கண்ணா...தம்பி இங்கன விட்டதைத்தான் கடைசி பந்துல புடுச்சாருங்கோவ்:)

இரூந்தாலும் மாட்ச்சை நல்லா வர்ணனை பண்ணியிருக்கீங்க..பாராட்டுக்கள்...உங்களுக்கும்... இந்திய அணிக்கும்

இராம்/Raam said...

/வெட்டிப்பயல் said...

eppadi ivvalavu seekirama adichi poateenga???/

பாலாஜி,

நல்ல செய்தியை சீக்கிரம் சொல்லனுமின்னு தான் வேகமா அடிச்சேன்..... :)

இராம்/Raam said...

// கோபிநாத் said...

ஏய்ய்ய்ய்ய்ய்...சூப்பர் வெற்றி ;))//

ஆமாம்.... மாப்பி..... :)

இராம்/Raam said...

/எல்லோரும் சண்டை சச்சரவுகளை மறந்து கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு அளித்த இந்திய கிரிக்கெட் அணிக்கு நன்றி!!!
வாழ்த்துக்கள் தோழர்களே!!! :-)//

லவ் சைண்டிஸ்ட்,

ஆஹா என்னவொரு கருத்து.... :)

இராம்/Raam said...

// Arunkumar said...

ivalo fasta va?
oors, kalakkite :)

HAIL INDIA !!!/

ஊர்ஸ்,

நன்றி..... :)

இராம்/Raam said...

//அபி அப்பா said...

என்ன ஃபாஸ்ட் என்ன ஃபாஸ்ட், பதிவ சொன்னம்ப்பா! வாழ்த்துக்கள் ராம், எல்லாருக்கும்!!/

ஹி ஹி நன்றி நட்சத்திரமே..... :)

இராம்/Raam said...

//அவந்திகா said...

Wooww anna.....i am so Happppppppppppppyyyyyyyyyyyyyyyy
:-))))))))))))/

அவந்திகா,


me too...... thanks for your comment.... :)

இராம்/Raam said...

// Anonymous said...

I felt ashamed, when our indian folks disgraced our country flag, by jumping on it...

Naattu kodiye kila pottu athu mela mela rendu moonu per vizhunthu... :-(//

அனானி,

ஹிம் தவறான செயல்தான்.... :( வெற்றி களிப்பிலே எதாவது தப்பு செய்யுறதே வழக்கமா இந்த விளையாட்டு வீரர்கள் வைச்சிருக்காங்க......


வேற என்னத்த சொல்லுறது???? :(

இராம்/Raam said...

விவ்,

நன்றி... :)

/இலவசக்கொத்தனார் said...

சூப்பர்.

நம்ம பசங்க விளையாட்டும், இந்த பதிவைப் போட்ட உம்ம வேகமும்!!//


கொத்ஸ்,

இளவயசு'லே.. வேகம் இருக்கதானே செய்யும்... :))

இராம்/Raam said...

// yazh said...

ivalavu fasta? eppadinga ithallam/

ஹி ஹி....

// கீதா சாம்பசிவம் said...

வாழ்த்துக்கள். ஆனால் ரொம்பக் குதிக்காதீங்க, இந்திய அணி கிட்டே கொஞ்சம் எச்சரிக்கையோடவே இருந்துக்கணும்! :P//

தலைவலி,

வயசானவங்க ஏதோ கருத்து சொல்லுறீங்க..... நாங்க அதை கட்டாயம் ஒத்துக்கிறோம்..... :)

நிலாரசிகன் said...

24 வருடத் தவம்!
நூறு+ கோடி இந்தியர்களின் கனவு!
11 இளம்ரத்தங்களின் உழைப்பு!

பலே இந்தியா!

வாழ்த்துக்கள்.

- யெஸ்.பாலபாரதி said...

//பத்திரிக்கை துறையில் வேலை செய்ய வேண்டிய அளுப்பா நீயி!!!.//

மாத்தி சொல்லுங்க.. விசுவல் மீடியாவில் இருக்க் வேண்டியவர். (சந்தோசமா மாப்ளே,, நீ சொன்ன மாதிரியே சொல்லிட்டேன். ) )

இராம்/Raam said...

// ச.சங்கர் said...

அண்ணாச்சி
மாச்சை ரொம்ப டென்சன்லதான் பாத்துருக்க்ஈங்கன்னு தெரியுது..மிஸ்பா உல் ஹக்...மிசாப் உல் ஹக் ஆயிட்டாரு..
///கடைசி மூணு ஓவர்'லே 35 ரன்கள் தேவைக்கிறப்போ பதான் போட்ட முதல் பால்'லே சிக்ஸ்ர்... ///

அந்த ஓவரைப் போட்டது ஸ்ரீசாந்துங்கண்ணா...தம்பி இங்கன விட்டதைத்தான் கடைசி பந்துல புடுச்சாருங்கோவ்:)

இரூந்தாலும் மாட்ச்சை நல்லா வர்ணனை பண்ணியிருக்கீங்க..பாராட்டுக்கள்...உங்களுக்கும்... இந்திய அணிக்கும்//

சங்கர்,

முதன்முறை வருகைக்கு நன்றி....

தவற்றை சரி செஞ்சுட்டேன்.....

இராம்/Raam said...

// நிலாரசிகன் said...

24 வருடத் தவம்!
நூறு+ கோடி இந்தியர்களின் கனவு!
11 இளம்ரத்தங்களின் உழைப்பு!

பலே இந்தியா!

வாழ்த்துக்கள்.//

நிலாரசிகன்,

நன்றி.... :)

காட்டாறு said...

உங்களை மாதிரி ஃபாஸ்ட்டா நம்ம டீமும் இருந்தால்... இது மாதிரி நெறையா வெற்றிகளை எதிரி பார்க்கலாம். எப்போ சொல்லித்தரப் போறீங்க அவங்களுக்கு?

இராம்/Raam said...

//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//பத்திரிக்கை துறையில் வேலை செய்ய வேண்டிய அளுப்பா நீயி!!!.//

மாத்தி சொல்லுங்க.. விசுவல் மீடியாவில் இருக்க் வேண்டியவர். (சந்தோசமா மாப்ளே,, நீ சொன்ன மாதிரியே சொல்லிட்டேன். ) )//

மாம்ஸ்,

கூவுனதுக்கு அமெண்ட் ஒங்க சுவிஸ் பேங்க் அக்கவுண்ட்'லே போட்டு விட்டாச்சு.... :)


அதை எடுத்தாவது முக்கு டீக்கடை கணக்கை தீர்த்துருங்க..... :)

இராம்/Raam said...

// காட்டாறு said...

உங்களை மாதிரி ஃபாஸ்ட்டா நம்ம டீமும் இருந்தால்... இது மாதிரி நெறையா வெற்றிகளை எதிரி பார்க்கலாம். எப்போ சொல்லித்தரப் போறீங்க அவங்களுக்கு?//

யக்கோவ்,


என்மேலே ஏனிந்த கொலைவெறி..... இந்த பயலுக இன்னிக்கு செயிச்சுப்பிட்டு அடுத்து வரிசையா நாலு மேட்ச் தோத்துப்போவானுக.....

இப்போ சந்தோசமா பதிவா போட்டமாதிரி திட்டிட்டு பதிவு போறத விட்டு என்னத்த போயி அவனுகளுக்கு சொல்லிக்கொடுக்க...... :)))

நாகை சிவா said...

சொன்ன மாதிரி ஜெயிச்சாங்க பத்தியா...

கெலிச்சிட்டோம்ல....

வச்சுட்டோம்ல ஆப்பு...

G.Ragavan said...

வாழ்த்துகள். வெற்றிக்கு வாழ்த்துகள்.