Thursday, November 15, 2007

சொ.செ.சூ

எங்க ஊருக்குள்ளே அடிக்கடி எவனுக்கும் எவனும் ஆப்பு வைக்கமுடியாது, ஆப்புக்கிறது தனியா ஒரத்திலே தான் கிடக்கும் அதை நாமே தேடி வைச்சிக்கிட்டாதான் உண்டு'ன்னு சொலவாடை சொல்லி வெறுப்பேத்துவானுக. அதையெல்லாம் கேட்டு கெடமாடு மாதிரி மண்டய ஆட்டிக்கிட்டு நாமே ஏறி உட்கார்ந்துட்டு அய்யோ அம்மா'ன்னு கத்தி பிரயோசனமில்ல தானே?? என்ன ஆச்சு நம்ம பயப்புள்ள'க்குன்னு நீங்க பதறது புரியுது, அதுவும் ஒன்னுமில்லங்க நானும் டாக்டர் விஜய் நடிச்ச கலைகாவியமான அழகிய தமிழ்மகனை பார்த்து தொலைச்சிட்டேன்.சுருக்கமா புலம்பனுமின்னா வரவனையூருலேருந்து கிளம்புன புனிதபிம்பம் சொன்னமாதிரி சொ.செ.சூ'வே செவ்வாய்க்கிழமை நைட் நானே வைச்சிக்கிட்டேன்.

நன்றி - அருட்பெருங்கோ
படம்மாய்யா அது.. கலை காவியமய்யா!!!??? கருமம் காறி துப்பி துப்பியே தொண்டை தண்ணி வத்தி போச்சு. நம்ம டாக்டரு பெரிய ஓட்டப்பந்தய வீரராம்,(கருமம் பிடிச்ச எழவு) அவரு எல்லா போட்டியிலும் அவருதான் மொதலிலே வந்து தொலைப்பாராம், (பின்னே எந்த ஹீரோ'டா தோத்து போன மாதிரி காட்டி தொலைச்சிருக்கீங்க?) இவருக்கு போட்டியாளர் ஒருத்தருக்கு ஹீரோ போட்டிக்குள்ளே வந்துட்டா நாமே
தோத்துப் போயிருவோம்'ன்னு பயந்து எந்த திரையுலகத்திலேயும் உபயோகப்படுத்த முடியாத டெக்னாலாஜி'யே யூஸ் பண்ணுறாரு, அடேய் அரைடவுசர் ஆப்பாயில் மண்டை வில்லனுகளா ஏண்டா எல்லாரும் ஒரே மாதிரி லூசா'வே திரியுறீங்க, முடியலடா விட்டு தொலைச்சிருங்கடா... அந்த டெக்னாலாஜி என்னா தெரியுமா? கண்ணுக்கு தெரியாத கம்பி ஒன்னை ஹீரோ பைக் ஓட்டிட்டு வர்ற பாதையிலே குறுக்கே கட்டி வைக்கிறாரு, அதெய்யல்லாம் தெரியாமே நம்ம ஹீரோ பைக் ஓட்டிட்டு வந்துறாரு, அந்த சூழ்ச்சியிலே எப்பிடி தப்பிக்கிறான்னு தான் நாமெல்லாம் சீட் நுனியிலே உட்கார்ந்துறானும். (அப்பிடிய நுனியிலே உட்கார்ந்தமாதிரியே வெளியே ஓடி வந்து தொலைக்கனும்) எங்கனயோ இருந்து பட்டாம் பூச்சி ஒன்னு பறந்து வந்து அந்த கம்பியிலே வந்து உட்காருது, ஸ்பீடா கண்ணுமண்ணு தெரியாமே பைக் ஓட்டிட்டு வந்து நம்ம ஹீரோ சடனா என்னாத்தயோ பண்ணி வீலீங்க் எல்லாம் பண்ணி பறக்குறாரு, (எனக்கு அப்பிடியே எங்களை விட்டுருங்கடா பிளிஷ்ன்னு வீல்'ன்னு கத்த தோணுச்சு !!). எங்கிட்டோ இருந்து நாலஞ்சு குண்டனுக வந்து ஆச்சூ,பூச்சுன்னு கத்தி அடிவாங்கிட்டு ஓடி போயிறானுக, ஹீரோ அங்கன இருந்து வந்து பந்தயத்திலே ஓடி பிரைஸ் வாங்கிறாரு.... (கண்ணுல H2O எல்லாம் வத்தி போயி பிளட் வருதுங்க).அப்புறமென்னா முன்னால் முன்னால் வாடா, உன்னால் முடியும் தோழா'ன்னு பாட்டு பாடி தொலைக்கிறாரு, ஆனா இவ்வளவு மொக்கையா ரஹ்மான் பாட்டை கெரியக்கிராபி பண்ணி எந்த டைரக்டரும் ஒப்பேத்துனது இல்லை.

அப்புறமென்ன வெளக்கெண்ண கதாநாயகர் வந்துட்டாருலே, பின்னாடியே அரைலூசு கதாநாயகி களத்திலே குதிச்சு தொலைக்கனுமில்ல. அம்மணி அழகா என்னத்தயாவது காட்டிக்கிட்டே கோவிலுக்குள்ளே இண்ட்ரோ ஆகுறாங்க, அங்கன இருந்த கதாநாயகர் பார்க்கிறாரு, பார்த்த நிமிசத்திலே பத்திக்கிருச்சாம், ஓவரா ஃபீலிங்க் பண்ணுறாரு, பிறகு என்னமோ காமெடி'னு பண்ணிட்டு இருந்தானுக, அதெல்லாம் பார்த்துட்டு முடியலைங்க முடியல... இதுக்கு முன்னாடி பிட்டுக்காக சொந்தமண்ணிலே பொழக்க முடியாமே தடைவாங்கினவங்க வேற வந்து திருவண்ணாமலை ஜோதி, பரங்கிமலை ஜோதி'ன்னு சந்தானத்தை டயலாக் பேச வைக்கிறாங்க, ஆனா நல்லாதாய்யா கேமராசாட்'ஐ வைச்சி தொலையிறீங்க, எழவு நம்ம டாக்டரு வேற அதெ தன்னோட கையாலே ஜாடை வேற செஞ்சு காட்டி தொலைக்கிறாரு....... (இன்னும் அவங்க அப்பா படத்திலே அத்தைக்கு சோப் போட்டு விட்டத மறந்து தொலைக்கலை போலே). இதிலே எல்லாத்தையும் விட பெரிய கொடுமை என்னான்னா இவரு சொல்லுற கவிதை,கவிஜ,கவுஜை'ன்னு ஏதோ ஒன்னை சொல்லி பச்சப்புள்ள பிரைசு வாங்கிட்டு வருது, அந்த புள்ளய வைச்சாவது உருப்படியா கதை கொண்டு போவனுக'னு பார்த்தா ஹீரோ'க்கு ஏதோ வெளக்கெண்ண சக்தி இருக்குன்னும், எதிர்காலத்திலே நடக்கிறத அவரு இப்பவே கணிக்க முடியுமின்னு என்ன எழவயோ கூட்டி அந்த பிள்ளைய கொன்னுருனாக..... :( உண்மையிலே என்ன வெறுப்போட உச்சக்கட்டத்துக்கு கொண்டு போன சீன் அது.(போங்கடா நீங்களும் ஒங்க ஹீரோ'சியமும்) .

அந்த வெறுப்பிலே படம் பார்த்து தொலைச்சா, இவரு அடுத்து இன்னோரு ஓட்டப்பந்தய போட்டியிலே மொக்க காரணத்துக்காக விட்டு கொடுத்து அம்மணி மனசிலே இடம் பிடிக்கிறாரு, அய்யா நல்லவனுகளா அது எப்பிடிடா ஒங்க தியாகத்தை அடுத்தவங்கிட்டே சொல்லுறப்போ கரக்டா பின்னாடி ஹீரோயின் நின்னு தொலையிறாளுக. அப்பிடியே கட் பண்ணி பாட்டு வேற பாடி தொலையுதுக. இனி என்னாலே முடியலைடா'ன்னு நம்ம சோட்டு பய ஓடி போயிட்டான், நான் மட்டும்தாங்க கடைசி வரைக்கும் பார்த்து தொலைச்சேன், தீடீரென்னு டாக்டரு அப்பா இவரே தேடி ஊருக்குள்ளே வர்றாரு, அப்பயே தெரிஞ்சு போச்சு, இன்னொரு எழவே கூட்டி தொலைய போறானுகன்னு, சரியாதான் இருந்துச்சு. ஊர் உலகத்திலே என்னனோமோ கஷ்டமும் வந்து தொலைக்கிது, நமக்கு ஒத்த ஆளு தனியா போயி அம்பது பேரை காப்பாத்திறதை பார்த்து தொலையனுமின்னு கஷ்டம் போலே... :( எப்போடா இன்னோரு டாக்டரை காட்டப்போறீங்கன்னு பார்த்துட்டு இருந்தா வர்றாய்யா அழகுசிங்கம், வாயிலே சிகரெட்'ஐ வைச்சிட்டு நாலு பேத்தை அடிக்கிறாரு, மவனே இதுக்கு பேருதான் ஸ்டைலிஸ் இண்ட்ரோ'வா.... :(

இவரு வந்ததுக்கபுறந்தாங்க கதை சூடு பிடிக்குது, பின்னே நமீதா வர்றாங்களே, சூடு பறக்காதா என்ன? அவ அப்பன் சூரத்திலே துணி வியாபாரம் பண்ணுறானாம், அங்கன மிச்சம் கெடந்த துணியை தைச்சு போட்டு ஆடுது ஆட்டம். பாட்டு முடிஞ்சதும் என்னோமோ நடந்துச்சாம், நல்லவேளை எனக்கு போன் வந்துருச்சு, அதை நான் கவனிக்கலை. தீடீரென்னு பார்த்தா ரெண்டாவது டாக்டரு சென்னைக்கு வந்துறாரு, வந்த இடத்திலே ஸ்ரேயா பார்த்து அவங்க வீட்டுக்கு போறாரு. அங்க போனதும் அவங்க காசுபணத்தை பார்த்தும் ஆள்மாறாட்டம் பண்ணனுமின்னு முடிவு பண்ணிறாரு. இனிமே இந்த வெண்ண படத்த பார்க்கவே கூடாதுன்னு நானெல்லாம் அப்பயே முடிவு பண்ணிட்டேன்.

இவ்வளவு தூரம் டைப் பண்ணினதுக்கே எனக்கே நெஞ்சு வலிக்குதுங்க, அந்த மொக்கை படத்துக்கு இம்புட்டு பெரிய போஸ்டா'ன்னு, அத விட சில பேருக்கு ஹார்ட் -அட்டாக்'ஐ வரும்...

அதன் காரணிகள்:-

1) டாக்டர் விஜய் #1 படத்தில் கல்லூரி மாணவர்

2) டாக்டர் விஜய் #1 பேசுற பஞ்ச் டயலாக் (எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதைப்பண்ண முடியாதா?)

3) டாக்டர் விஜய் #1 கிளைமேக்ஸில் செய்யும் தியாகம்..... (அர்ஜீனா அவார்ட் இல்லன்னா ஆஸ்காரு நிச்சயம்)

4) டாக்டர் விஜய் #1'க்கும் டாக்டர் விஜய் 2'க்கும் உள்ள வித்தியாசம்!!!???!!!???

5) டாக்டர் விஜய் அவர்களை இளையதளபதி அடைமொழியிலிருந்து இதயதளபதி'ஆக இந்த நல்லுலகம் அறியப்பட போவது!!!

45 comments:

குசும்பன் said...

தல ரொம்ப பாதிக்கபட்டு இருப்பீங்க போல:))))))))

குசும்பன் said...

"நமக்கு அப்பிடியே எங்களை விட்டுருங்கடா பிளிஷ்ன்னு வீல்'ன்னு கத்த தோணுச்சு எனக்கு"

கதற கதற அடிச்சு இருக்காங்க போல:)))) ஹா ஹா ஹா

இலவசக்கொத்தனார் said...

நல்லா படம் (அள்ளி) பார்க்கறீங்கப்பா. அங்க ஒருத்தரு வேல் படம் பார்த்துட்டு வீல்னு கத்திக் (அள்ளி) கிட்டு இருக்காரு. இங்க நீங்க இப்படி. இதுக்கு நடுவில ரீச்சர் நல்லா இருக்குன்னு ஒரு(அள்ளி) படத்தைச் சொன்னாங்க. அந்த படம் பேருன்னு கண்டுபிடிக்கவே(அள்ளி) அரை மணி ஆச்சு!!!

நல்லா (அள்ளி) இருங்கடே!!

(நீங்க கேட்டுக்கிட்டா மாதிரி கருத்தில் அங்கங்கே அள்ளித் தெளிச்சாச்சு, இப்போ நான் கருத்து கந்தசாமிங்களா?)

cheena (சீனா) said...

அய்யா.காம் ( நீங்க கொடுத்த சுட்டியா ??) - அதுலேந்து அதம தரவிறக்கம் செய்து வைத்துள்ளென். படம் பார்த்து விட்டு மறுமொழி இடுகிறேன்.( ஏன்யா இவ்வளவு சொன்ன பொறவும் படம் பாக்கணும்மா ?? - கேள்வி கேட்க வேண்டாம் - பாத்துடரேனே )

Arunkumar said...

padam hittu
padam hittu-nu
en solraanuga-nu ippo thaan puriyudhu...
ippidi adi vaangittu vandhu nikkireenga :(((((

Arunkumar said...

//
அது எப்பிடிடா ஒங்க தியாகத்தை அடுத்தவங்கிட்டே சொல்லுறப்போ கரக்டா பின்னாடி ஹீரோயின் நின்னு தொலையிறாளுக.
//

aahnnn.. adhu appidi illa
heroine pinnadi nikkambodhu ivan dialogue vidradhu...

Arunkumar said...

mothathula oru thiraikaaviyam paartha sandhosham unnoda ovvoru ezhuthulayum theriyudhu !!!

வாழ்க வளமுடன்

கோபிநாத் said...

மாப்பி சேதாரம் அதிகம் போல ;)

\\ஆட்டம். பாட்டு முடிஞ்சதும் என்னோமோ நடந்துச்சாம், நல்லவேளை எனக்கு போன் வந்துருச்சு, அதை நான் கவனிக்கலை.\\

நமீதாவுக்கு என்ன நடந்துன்னு திரும்பவும் பார்த்து சொல்லு மாப்பி ;)

கோபிநாத் said...

\\இவரு அடுத்து இன்னோரு போட்டிக்கு விட்டு கொடுத்து அம்மணி மனசிலே இடம் பிடிக்கிறாரு.\\

இதுதான் விஷயமா!!!..கவலைப்படாதா மாப்பி உன் கவிதை பின்னாடியும் பிகருங்க வரும் :)

இராம்/Raam said...

//குசும்பன் said...

தல ரொம்ப பாதிக்கபட்டு இருப்பீங்க போல:))))))))///

யோவ் நீ அண்ணாச்சியே வேற இந்த படத்துக்கு கூட்டிட்டு போவேன்னு ஒத்த காலிலே நிக்கிறியாமே?? :((

/கதற கதற அடிச்சு இருக்காங்க போல:)))) ஹா ஹா ஹா//

வில்லன் சிரிப்பா... :((

இராம்/Raam said...

//(நீங்க கேட்டுக்கிட்டா மாதிரி கருத்தில் அங்கங்கே அள்ளித் தெளிச்சாச்சு, இப்போ நான் கருத்து கந்தசாமிங்களா?)//

பிராண்டட் கொத்ஸ் பின்னூட்டம்... :)

நீங்களும் படத்தை பாருங்க... அப்புறம் யாரு என்ன சொன்னாலும், என்ன பதில் சொல்லுறது தெரியாமே முழிப்பீங்க... :((

இராம்/Raam said...

/ cheena (சீனா) said...

அய்யா.காம் ( நீங்க கொடுத்த சுட்டியா ??) - அதுலேந்து அதம தரவிறக்கம் செய்து வைத்துள்ளென். படம் பார்த்து விட்டு மறுமொழி இடுகிறேன்.( ஏன்யா இவ்வளவு சொன்ன பொறவும் படம் பாக்கணும்மா ?? - கேள்வி கேட்க வேண்டாம் - பாத்துடரேனே )//

நம்ம ஊரு வீரத்துக்கு பெயர் பெற்றதுன்னு நிருபிக்க துடிக்கிறீங்களே ஐயா...... :))

ALIF AHAMED said...

நீயும் நானும் ஒன்னு
காந்தி பொறந்த மண்ணு
டீ கடையில் நின்னு
தின்னு பாரு பண்"னு

ஹா ஹா ஹா

கவுஜ கவுஜ..!!

இராம்/Raam said...

/ Arunkumar said...

padam hittu
padam hittu-nu
en solraanuga-nu ippo thaan puriyudhu...
ippidi adi vaangittu vandhu nikkireenga :(((((//

ஆமாம் ஊர்ஸ், இவனுக எம்புட்டு தான் மொக்கை போடுறானுக'ன்னு கடைசி வரைக்கும் பார்த்து தொலைச்சேன்.... :((

//mothathula oru thiraikaaviyam paartha sandhosham unnoda ovvoru ezhuthulayum theriyudhu !!!

வாழ்க வளமுடன்//

ஏலேய் நானே அடிப்பட்டு கிடக்கிறேனே? ஏதாவது ஆறுதலுக்காவது நல்ல வார்த்தை சொல்லுங்கய்யா... மதுரை லந்து'ஐ எல்லா நேரத்திலேயும் பண்ணனுமா?? :(

இராம்/Raam said...

//நமீதாவுக்கு என்ன நடந்துன்னு திரும்பவும் பார்த்து சொல்லு மாப்பி ;)//

ஏலேய் மாப்பி ஒனக்கு இதெல்லாம் ஓவரா தெரியலை.. :(

//இதுதான் விஷயமா!!!..கவலைப்படாதா மாப்பி உன் கவிதை பின்னாடியும் பிகருங்க வரும் :)//

நான் எப்போ அதெல்லாம் எழுதினேன்???? :(

G.Ragavan said...

விஜய் படத்துக்குப் போவியா?
விஜய் படத்துக்குப் போவியா? சொல்லு...நூறு தோப்புக்கரணம் போடு..

அவர் தமிழ்ல நடிச்சாதான் படம் வெளங்காதுன்னு தெரியும்ல..தெரிஞ்சும் இனிமே போவியா? தெலுங்குல இருந்து காப்பி அடிச்சாதான் அவருக்கு நடிப்பையும் காப்பி அடிக்க வரும்னு தெரிஞ்சும் இனிமே போவியா? சொல்லு? போவியா?

G3 said...

ராமண்ணே சொந்த செலவுல சூன்யம் வெச்சிக்கிட்டு வந்து புலம்பறத கேக்கறச்சே காதுல அப்படியே தேன் வந்து பாயுதே.. அது ஏண்ணே?? :P

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்ப என்னன்னறீங்க... 20 ரூ குடுத்து சிடி வாங்கிப்பாக்கக்கூட இது தகுதியானது இல்லையா.. சரி.. பாக்கல... நன்றி.

Unknown said...

ராம்... தல மட்டும் தான் ஆஞ்சனேயா.. பரமசிவன்..ஜி..ன்னு கண்டபடி கலை சேவை செய்யணுமா... டாக்டர் செய்யக் கூடாதா... இது என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு....

அழகிய தமிழ்மகன் சும்மா ஆரம்பம் தான்.. குருவி வருது பாரு... உனக்கு ஆல் ரெடி டிக்கெட் சொல்லியாச்சு.. ரெடியா இரு

மங்களூர் சிவா said...

//
இன்னும் அவங்க அப்பா படத்திலே அத்தைக்கு சோப் போட்டு விட்டத மறந்து தொலைக்கலை போலே
//
ரிப்பீட் மேல ரிப்பீட் அந்த படத்தை பாத்துட்டு என்னமோ இப்பிடி எழுதறியே 'தல'

நாயமா இது உனுக்கே!!

:-))

மங்களூர் சிவா said...

//
கோபிநாத் said...

நமீதாவுக்கு என்ன நடந்துன்னு திரும்பவும் பார்த்து சொல்லு மாப்பி ;)
//
கோபி உன் கடமை உணர்ச்சி புல் அரிக்குதய்யா!!
:-)))

ஜே கே | J K said...

அண்ணே,

நல்லா என்சாய் பண்ணி இருப்பீங்க போல. :-P

அதான் பாத்துட்டு வந்த்வங்க எல்லாம் குய்யோ, முய்யோனு கத்துராங்களே, அப்புறம் படம் வேண்டிகிடக்கு?...

நடந்தது நடந்துபோச்சு அப்படியே வேல், பொல்லாதவன் படமெல்லாம் பாத்துவந்து விமர்சனம் எழுதிடுங்க.

Anonymous said...

இந்த விளக்கெண்ணை அடுத்த சூப்பரு ஸ்டாரு ஆகனுமின்னு திரியுது.....

இராம்/Raam said...

//விஜய் படத்துக்குப் போவியா?
விஜய் படத்துக்குப் போவியா? சொல்லு...நூறு தோப்புக்கரணம் போடு..

அவர் தமிழ்ல நடிச்சாதான் படம் வெளங்காதுன்னு தெரியும்ல..தெரிஞ்சும் இனிமே போவியா? தெலுங்குல இருந்து காப்பி அடிச்சாதான் அவருக்கு நடிப்பையும் காப்பி அடிக்க வரும்னு தெரிஞ்சும் இனிமே போவியா? சொல்லு? போவியா?/

நானெல்லாம் டாக்டர் நடிச்ச புதிய கீதை'க்கு பிறகு எந்த படத்தையும் தீயேட்டர்'லாம் போயி பார்த்தது கிடையாது... :)

இது நாப்பது ரூபாய்'க்கு MG ரோட்டு'லே வாங்கி பார்த்து முடிச்சிட்டு சுக்கு நூறா ஒடைச்சி, அதை அப்பிடியே தடம் தெரியாமே அழிச்சிட்டேன்... :((((

dubukudisciple said...

paavanga neenga romba bathika patu irukeenga pola.. poi nalla restu edunga.. appurama pesikalam

இராம்/Raam said...

//ராமண்ணே சொந்த செலவுல சூன்யம் வெச்சிக்கிட்டு வந்து புலம்பறத கேக்கறச்சே காதுல அப்படியே தேன் வந்து பாயுதே.. அது ஏண்ணே?? :P/

அடுத்தவன் கஷ்டப்பட்டு புலம்புறான்னா அதை பார்த்துட்டு சிரிக்கிற ஒங்களயெல்லாம் என்னத்த சொல்லுறது.... :(

இராம்/Raam said...

/ முத்துலெட்சுமி said...

இப்ப என்னன்னறீங்க... 20 ரூ குடுத்து சிடி வாங்கிப்பாக்கக்கூட இது தகுதியானது இல்லையா.. சரி.. பாக்கல... நன்றி.///

முத்து'க்கா,

இதுக்கு மேலே அந்த கலை காவியத்தை நீங்க பார்த்திட்டிங்கன்னா மயிலாடுதுறை பஸ்ஸ்டாண்ட்'க்கு எதிரிலே சிலை வைச்சிறலாம்... :) கண்டிப்பா அந்த சிலை கூட நீங்க பேசிட்டு இருக்கிறமாதிரி தான் டிசைன் பண்ணுவோம்... :)

இராம்/Raam said...

//தேவ் | Dev said...

ராம்... தல மட்டும் தான் ஆஞ்சனேயா.. பரமசிவன்..ஜி..ன்னு கண்டபடி கலை சேவை செய்யணுமா... டாக்டர் செய்யக் கூடாதா... இது என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு....//


தேவ்'ண்ணே,

நீங்க சொல்லுற நியாயம் புரியுது..... ஆனா அதெல்லாம் இந்த அளவுக்கு மோசமா இல்லையே??

// அழகிய தமிழ்மகன் சும்மா ஆரம்பம் தான்.. குருவி வருது பாரு... உனக்கு ஆல் ரெடி டிக்கெட் சொல்லியாச்சு.. ரெடியா இரு//

விஜய் நடிக்கும்'ன்னு எங்கனயாவது பார்த்தக்கூட நான் இனிமே தெறிச்சு ஓடிருவேன்.... :(

இராம்/Raam said...

சிவா & JK,

ஒங்க ரெண்டு பேருக்கும் ஓவராதான் ஆகீப்போச்சு... :(

இராம்/Raam said...

/ Anonymous said...

இந்த விளக்கெண்ணை அடுத்த சூப்பரு ஸ்டாரு ஆகனுமின்னு திரியுது.....//

அனானி,

அந்த எழவை கேட்கவே கொடுமையா இருந்து தொலைக்கிதுங்க... :(

ஆறிலிருந்து அறுபது வரை, அவர்கள்'ன்னு சவலான கதாப்பாத்திரங்கள் எடுத்து நடிச்சுதான் சூப்பர்ஸ்டார் பட்டம் வந்துச்சு, இவனுகளுக்கெல்லாம் அவரு ஸ்டைலை மட்டும் இமிட்டேட் பண்ணி காட்டி அந்த பேரு எடுக்கனுமின்னு பகல் கனவு வேற... :(

இராம்/Raam said...

//dubukudisciple said...

paavanga neenga romba bathika patu irukeenga pola.. poi nalla restu edunga.. appurama pesikalam/

DD'க்கா,

இந்த படத்தை பார்த்ததிலே இருந்து தூக்கமே வரமாட்டேங்கிது... :(

செஞ்ச பாவத்துக்கு எங்கன போயி முட்டிக்கிறதுன்னே தெரியலை... :((

இம்சை அரசி said...

அது சரி அந்த படத்துக்கு ஹீரோவுக்கு சம்பந்தமே இல்லாம ஏன் அப்படி பேர் வச்சாங்க???

ஜொள்ளுப்பாண்டி said...

ராமு கொஞ்சம் சேதாரம் அதிகமாத்தேன் இருக்கும் போல ... :)))))))

Unknown said...

டாக்டரு நல்லா 'அறுவை சிகிச்சை' பண்ணிட்டாரு போல? :)

இராம்/Raam said...

//இம்சை அரசி said...

அது சரி அந்த படத்துக்கு ஹீரோவுக்கு சம்பந்தமே இல்லாம ஏன் அப்படி பேர் வச்சாங்க???//

யக்கோவ்,

நீங்க எவ்வளவு தெளிவா கேள்வி கேட்கீறிங்க? ஆனா பல லூசு ஜென்மங்க சரியாதான் பேரு வைச்சிருக்கான்னு சொல்லிட்டு திரியுதுக... :(

இந்த மொக்கை படத்துக்கு ஆனந்த விகடனிலிலே 40 மார்க்'ஆம்..... என்ன கொடுமைய்யா.... :(

இராம்/Raam said...

//ஜொள்ளுப்பாண்டி said...

ராமு கொஞ்சம் சேதாரம் அதிகமாத்தேன் இருக்கும் போல ... :)))))))//


பாண்டிண்ணே,

அதெய்யலாம் ஈடு கட்டனுமின்னா சிட்டிசென்டர்,ஸ்பென்ஸர்,இஸ்பாகானி சென்டர்'ன்னு ஒங்கக்கூட வலம் வந்தா'தான் சரியாகும் போலே.... :)

இராம்/Raam said...

//தஞ்சாவூரான் said...

டாக்டரு நல்லா 'அறுவை சிகிச்சை' பண்ணிட்டாரு போல? :)//


உண்மையிலே அந்த கொடுமையை தாங்கமுடியலைங்க..... :((

ஜி said...

:)))))

இந்த போஸ்ட நான் ரெண்டு நாளைக்கு முன்னாலையே பாத்திருக்க கூடாதா??? :(((

நாகை சிவா said...

உன் நிலைமை எனக்கு புரியுது. ஆனால் என்னால் உனக்கு ஆறுதல் சொல்ல முடியாது.... ஏண்ணா அதே வலி எனக்கும் இருக்கு...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கிருத்திகா said...

ரொம்ப தேங்ஸ்ணா. ஒங்க மனம் திறந்த பாராட்டுக்கு நன்றிங்ண்ணா. தெலுங்கு டப்பிங் படத்திலேயே நான் ஜட்டி கலரைக் கூட மாத்தாம நடிக்கிற ஆளுங்கண்ணா. என்னைப் போயி ஒரிஜினலா நடி ரெண்டு ஜன்னலா நடின்னு.., போங்கண்ணா ரெம்ப குசும்புங்ண்ணா உஙகளுக்கு.

இராம்/Raam said...

ஜியா,புலி,

எனக்கு அடுத்த பெட்'ஆ நீங்க... :( நம்மளை பார்க்க வர்றவங்களா நல்லா ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுவாங்கன்னு பார்த்தா நம்மளை இந்த நிலைமையிலே பார்த்து பரிகாசிக்கிற கூட்டமா தான் இருக்கு...... :(

இராம்/Raam said...

/ கோவை ராஜா said...

ரொம்ப தேங்ஸ்ணா. ஒங்க மனம் திறந்த பாராட்டுக்கு நன்றிங்ண்ணா. தெலுங்கு டப்பிங் படத்திலேயே நான் ஜட்டி கலரைக் கூட மாத்தாம நடிக்கிற ஆளுங்கண்ணா. என்னைப் போயி ஒரிஜினலா நடி ரெண்டு ஜன்னலா நடின்னு.., போங்கண்ணா ரெம்ப குசும்புங்ண்ணா உஙகளுக்கு.///

ஹி ஹி...எப்பிடிங்கணா, நம்ம டாக்டரு மாதிரியே பேசுறீங்க... :)

வருகைக்கு மிக்க நன்றி கோவை ராஜா'ண்ணா... :)

chandru / RVC said...

நானும் கடுமையா பாதிக்கப்பட்டேன். படம் பார்த்து 20 நாள் கழிச்சு விமர்ஜன பதிவு போடற அளவுக்கு ஜன்னி கண்டுருச்சு :)

இராம்/Raam said...

//RVC said...

நானும் கடுமையா பாதிக்கப்பட்டேன். படம் பார்த்து 20 நாள் கழிச்சு விமர்ஜன பதிவு போடற அளவுக்கு ஜன்னி கண்டுருச்சு :)//


ஹாஹா... ஒங்களோட Deep view'ம் படிச்சேங்க.. :)

Anonymous said...

கிகிகிகிகிகிகிகி