Sunday, November 25, 2007

புரொப்பசர் ஞானபிரகாசம்

பாஸ்கர் என்ற நடிகர் இவரை அழுது வடியும் தமிழ் தொலைக்காட்சி நாடகங்களிலும், தமிழ் திரைப்படங்களிலும் துக்கடா வேடங்களிலும் நாம் பார்த்திருக்கலாம். சமிபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன மொழி படத்தில் புரொப்பசர் ஞானபிரகாசம் என்ற கதாபாத்திரமெடுத்து நடித்திருப்பார். படத்தில் அவர் பைத்தியமான மனநிலை கொண்டவராக சித்தரிக்கப்பட்டுருப்பார். அதாவது பழையநினைவுகளை இன்னும் மனதில் வைத்துக்கொண்டு நிகழ்காலத்தில் நடக்கும் எதுவும் தெரியாமால் அதே பழைய காலகட்டத்திலே வாழ்ந்து வருவார். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றமாதிரியே எந்தவொரு மிகைப்படுத்த நடிப்பும் இல்லாமால் எதார்த்தமான முறையில் அழகாவே நடித்திருப்பார். அவர் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் படத்தின் கதையோட்டத்தை இணைந்தே வருவதும் இன்னும் மிக அழகாகவே இருக்கும்.

அதுவும் இறுதிக்காட்சிக்கு முன்னால் தன்னுடைய நிலையை நினைத்து உணர்வுகள் வெடித்து அழும் பாஸ்கரின் நடிப்பை பார்த்து உடனே எனக்கு சட்டென கண்களில் நீர் கோர்த்து கொண்டது. அந்த காட்சியில் தொடங்கும் இந்த வீடியோ'வே பாருங்க.
இந்த கதாபாத்திரத்தை யாராவது முண்ணனி நடிகர் ஏற்று செய்து இருந்தால் அவருக்கு பலவகையான பாரட்டுக்களும்,விருதுகளுக்கும் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுருக்கும். தமிழ் திரைப்படங்களில் துக்கடா கதாபாத்திரம் ஏற்று நடித்து என்னாதான் சிறப்பாக செய்தாலும் அவர்களுக்கு என்னதான் பெரிய பெயர் கிடைத்து விடப்போகிறது? அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்திலில் கொஞ்சமாய் அதிகமாக கிடைக்கும். ஞானபிரகாசம் கதாபாத்திரமாய் வாழ்ந்து காட்டிய பாஸ்கர் சமீபத்தில் வெளியான படங்களில் கதாநாயகர் பின்னால் அலையும் அதே கோமாளி நண்பர்களில் ஒருத்தராக தான் வந்து போனார்.

49 comments:

said...

வாவ்வ்...

ம்ம்.. அதுவும் ரைட்தான்.. என்னதான் அனுபவிச்சு அவர் அந்த கேரக்டராகவே செஞ்சிருந்தாலும் ஜோதிகா கடைசி கட்டதூஉலே அழுவாங்களே, அதுதான் பேசப்பட்டது.. ம்ம்...அவங்களும் அதை சூப்பாரா செஞ்சிருப்பாங்க

said...

அது தமிழ்ப் படங்களின் தலைவிதி

said...

உண்மை ராம் - என்ன செய்வது - துணைப் பாத்திரங்கள் உயிரைக் கொடுத்து நடித்தாலும் பேர் வாங்க முடியாது

said...

மொழி படத்துல எல்லாருமே நல்லா நடிச்சிருந்தாங்க. ஆனா ஜோதிகாவும் பாஸ்கரும் சூப்பர். இவங்க ரெண்டு பேரும் இல்லாம படத்த நெனச்சே பாக்க முடியாது.

நேத்துதான் நீ சொன்னியேன்னு அழகிய தீயேங்குற படத்தப் பாத்தேன். இந்தப் படத்த இத்தன நாள் எப்படி பாக்காம விட்டேன். அப்படியொரு படம். அதுல அவரு அண்ணாச்சீன்னு நடிச்சிருக்காரு. அப்படியே எங்கூர்க்காரரு மாதிரி. நல்லா நடிக்கிறாருப்பா இவரு. நல்ல நடிகர்கள்ள ஒருவர்.

said...

/.:: மை ஃபிரண்ட் ::. said...
வாவ்வ்...

ம்ம்.. அதுவும் ரைட்தான்.. என்னதான் அனுபவிச்சு அவர் அந்த கேரக்டராகவே செஞ்சிருந்தாலும் ஜோதிகா கடைசி கட்டதூஉலே அழுவாங்களே, அதுதான் பேசப்பட்டது.. ம்ம்...அவங்களும் அதை சூப்பாரா செஞ்சிருப்பாங்க
//

ஹிம் அது என்னோமோ உண்மைதான். ஜோதிகா புகழ் பெற்ற நடிகை, ஆனால் இவரோ துக்கடா வேடங்களில் நடிப்பவர் தானே?

மொழி படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் சரியான முறையில் நெறியாளப்பட்டாலும் பாஸ்கரின் நடிப்பு தனியாக தான் தெரிகிறது... :)

ஆனால் பெயரோ,புகழோ தான் சரியாக கிடைக்கலை.. :(

said...

//வீர சுந்தர் said...
அது தமிழ்ப் படங்களின் தலைவிதி
//


வீரசுந்தர்,

ஓரே வரியிலே நிதர்சனத்தை சொல்லிட்டிங்க.... :)

said...

//cheena (சீனா) said...
உண்மை ராம் - என்ன செய்வது - துணைப் பாத்திரங்கள் உயிரைக் கொடுத்து நடித்தாலும் பேர் வாங்க முடியாது
//


ஐயா,

உண்மைதான், கருத்துக்களுக்கு மிக்க நன்றி....

said...

சரியாச் சொன்னீங்க ராம்....நானும் இந்த படத்தை பார்த்த போது நினைத்தேன்.

said...

//G.Ragavan said...
மொழி படத்துல எல்லாருமே நல்லா நடிச்சிருந்தாங்க. ஆனா ஜோதிகாவும் பாஸ்கரும் சூப்பர். இவங்க ரெண்டு பேரும் இல்லாம படத்த நெனச்சே பாக்க முடியாது.//

உண்மைதான் ஜிரா, ஜோதிகா புகழ் பெற்ற நடிகை என்பதுனாலே மேடை முழுவதும் அவரை பற்றியே பேச்சு, ஆனால் பாஸ்கரும் நடிப்பில் அசத்தியிருந்தாலும் சாதாரணமான பாரட்டுதல்கள் கூட கிடைக்க வில்லை.. :(

//நேத்துதான் நீ சொன்னியேன்னு அழகிய தீயேங்குற படத்தப் பாத்தேன். இந்தப் படத்த இத்தன நாள் எப்படி பாக்காம விட்டேன். அப்படியொரு படம்.//


ரொம்பவே நல்ல படம் அது. பிரகாஷ்ராஜ் புரெடியூஸ் பண்ண படங்கள் அனைத்தும் மிகவும் நல்லாயிருக்கும். அடுத்து கண்ட நாள் முதலாய் கிடைத்தால் பாருங்க. அதுவும் நல்லாயிருக்கும்... :)


// அதுல அவரு அண்ணாச்சீன்னு நடிச்சிருக்காரு. அப்படியே எங்கூர்க்காரரு மாதிரி. நல்லா நடிக்கிறாருப்பா இவரு. நல்ல நடிகர்கள்ள ஒருவர்.
//

ஹிம் ஆமாம்.... ஆஸ்பத்திரியிலே வந்து கண்ணு கலங்கி வசனமே சொல்லுவாரு பாருங்க, அட்டகாசம்... :)

said...

\\அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றமாதிரியே எந்தவொரு மிகைப்படுத்த நடிப்பும் இல்லாமால் எதார்த்தமான முறையில் அழகாவே நடித்திருப்பார்\\

உண்மையில் அவருடைய நடிப்பு பாராட்டுக்குறியது. உனக்கு இருக்கும் வருத்தம் எனக்கும் இருக்கு :(

said...

ஹேமா பாஸ்கரைத்தானே சொல்கிறீர்கள்? அவர் காமெடியில் தூள் கிளப்புபவர்.

ஒரு விஷயம், எல்லா நடிப்பையும் விட காமெடி நடிப்புதான் கஷ்டம். சாதாரணமாக காமெடியில் நடிப்பவர்கள் சோகக் காட்சியில் நடிக்கும்போது கதாநாயகனையே தூக்கி சாப்பிட்டு விடுவார்கள்.

உதாரணம் எதிர் நீச்சல், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, இப்போது மொழி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

நியாயம் தான் :)

இங்கு ஹிரோகள் வழிபாடு தானே இருக்கு என்ன பண்ண...

நம்ம ஆள சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் இருந்தே பிடிக்கும்.

அழகிய தீயே படத்திலும் இவர் நடிப்பு ரசிக்கும் படி இருக்கும்

said...

கோபி,

கருத்துகளுக்கு நன்றி...

டோண்டு ஐயா,

உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

said...

/நாகை சிவா said...

நியாயம் தான் :)

இங்கு ஹிரோகள் வழிபாடு தானே இருக்கு என்ன பண்ண...//

புலி,

என்னத்த சொல்ல இருக்கு??? :(

// நம்ம ஆள சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் இருந்தே பிடிக்கும்.//

அதிலே காது கேளாத மாதிரி வருவாரு'லே?? :)

//அழகிய தீயே படத்திலும் இவர் நடிப்பு ரசிக்கும் படி இருக்கும்//

ஹிம்.... இராதா மோகன் மட்டுந்தான் இவரை சரியா உபயோகப்படுத்தின மாதிரி தெரியுது.... :)

said...

//இராதா மோகன் மட்டுந்தான் இவரை சரியா உபயோகப்படுத்தின மாதிரி தெரியுது.... :)//

இது மேட்டரு...அவருக்கு திறமை இருந்தாலும் நம்மாளுங்க யூஸ் பண்ணனும்ல.. :))

துக்கடா அல்லக்கை ரோல்ல வந்தாலும் சரி, இந்த மாதிரி நல்ல ரோலா இருந்தாலும் சரி...பாஸ்கர் அவர் பங்கை எப்பவும் சரியாவே செஞ்சுட்டு வர்றாரு...மார்க் மை வேர்ட்ஸ்..ஹி வில் கோ ப்ளேசஸ் :))))))

said...

மொழி படத்தில் இருந்து நல்ல ஒரு விசயத்த எடுத்துக்காட்டி இருக்கிறீங்க. நான் ரொம்ப ரசித்து பார்த்த காட்சி அது. நல்ல நடிப்பு. அவருக்கு உங்கள் பதிவினூடாக எனது வாழ்த்துக்கள்.

said...

மறக்க முடியாத நடிப்பு...தகுதிகள் அதிகமிருந்தும் வாய்ப்புக் கிடைக்காமல் போன பலரில் இவரும் ஒருவர்...

said...

//இது மேட்டரு...அவருக்கு திறமை இருந்தாலும் நம்மாளுங்க யூஸ் பண்ணனும்ல.. :))//

கப்பி,

உண்மைதாப்பா..... டும் டும் டும் படத்திலேயும் டாக்டர்'ஆ நல்லா பண்ணிருப்பாரு... அதுவும் திருநெல்வேலி பாசை நல்லா பேசியிருப்பார்... :)

//துக்கடா அல்லக்கை ரோல்ல வந்தாலும் சரி, இந்த மாதிரி நல்ல ரோலா இருந்தாலும் சரி...பாஸ்கர் அவர் பங்கை எப்பவும் சரியாவே செஞ்சுட்டு வர்றாரு...மார்க் மை வேர்ட்ஸ்..ஹி வில் கோ ப்ளேசஸ் :))))))/

ஹாஹாஹா.... நல்ல டயலாக்'லே அது... :)

said...

// narmatha said...

மொழி படத்தில் இருந்து நல்ல ஒரு விசயத்த எடுத்துக்காட்டி இருக்கிறீங்க. நான் ரொம்ப ரசித்து பார்த்த காட்சி அது. நல்ல நடிப்பு. அவருக்கு உங்கள் பதிவினூடாக எனது வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் கருத்துக்களும் மிக்க நன்றி நர்மதா...

said...

// பாச மலர் said...

மறக்க முடியாத நடிப்பு...தகுதிகள் அதிகமிருந்தும் வாய்ப்புக் கிடைக்காமல் போன பலரில் இவரும் ஒருவர்...//

முதன்முறை வருகைக்கு மிக்க நன்றி பாசமலர்... :)

said...
This comment has been removed by the author.
said...

amaam Raam... Thamiz thiraiyulagin thalavithithaan

//மார்க் மை வேர்ட்ஸ்..ஹி வில் கோ ப்ளேசஸ் :))))))//

:)))))

said...

சின்னபாப்பா,பெரிய பாப்புவுல கல்லா கட்டினவருதான், அப்புறம் அவரை யாருமே சீண்டலை. பிரகாஷ்ராஜ் தன்னுடைய படங்கள்ல நல்ல வேஷம் குடுக்க சொன்னாரு. நெசத்துல பாலாஜி ரொம்ப சீரியஸ் டைப் ஆசாமி. ஆனா கேமராவுக்கு முன்னாடி வந்துட்டா செம கலக்கல் பார்ட்டி..

said...

நல்ல நடிகர். அந்த டாக்டர் படம், அது என்னய்யா அது கில்லியா?, அதில் கூட ஒரு கும்பலோட வந்தாலும் நல்லாச் செஞ்சு இருப்பாரு. எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் நடிப்பு. அழகிய தீயே, கண்ட நாள் முதலாய் எல்லாம் பார்க்கலை, பார்க்கணும்.

இளா, அதாரய்யா அது பாலாஜி? குழப்புறியே....

said...

ஜியா வளரெ நன்னி... :)

said...

/சின்னபாப்பா,பெரிய பாப்புவுல கல்லா கட்டினவருதான், அப்புறம் அவரை யாருமே சீண்டலை. பிரகாஷ்ராஜ் தன்னுடைய படங்கள்ல நல்ல வேஷம் குடுக்க சொன்னாரு. நெசத்துல பாலாஜி ரொம்ப சீரியஸ் டைப் ஆசாமி. ஆனா கேமராவுக்கு முன்னாடி வந்துட்டா செம கலக்கல் பார்ட்டி..//

விவாஜி,

எல்லாம் சரி.. அதுயாரு பாலாஜி? பாஸ்கரின் உண்மையான பெயரா????!!

எதுக்கு முதல் பின்னூட்டத்தை டெலிட் பண்ணீங்க??

said...

//நல்ல நடிகர். அந்த டாக்டர் படம், அது என்னய்யா அது கில்லியா?, அதில் கூட ஒரு கும்பலோட வந்தாலும் நல்லாச் செஞ்சு இருப்பாரு. எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் நடிப்பு.//


கொத்ஸ்,

அது டும் டும் டும்... அதிலே திருநெல்வேலி பாசை பேசி நடிச்சிருப்பாரு.. :)

// அழகிய தீயே, கண்ட நாள் முதலாய் எல்லாம் பார்க்கலை, பார்க்கணும்.//

ரெண்டயும் பாருங்க... கட்டாயமா நல்லாயிருக்கும்.. :)

//இளா, அதாரய்யா அது பாலாஜி? குழப்புறியே...//

ஓவர் டூ விவாஜி.. :)

said...

நல்ல நடிகர்....எந்த வேடம் குடுத்தாலும் அற்புதமா நடிக்குறார்... முக்கியமா திருநெல்வேலி பாஷையில அசத்துவார்...அலட்டல் இல்லாம் ஆர்பாட்டம் இல்லாம... வேடத்துக்கு தகுந்த வார்த்தைகள், மனோபாவம்... டாப் கிளாஸ்..

இவரைப் பற்றி எழுதிய ராமுக்கு நன்றி

said...

//நல்ல நடிகர்....எந்த வேடம் குடுத்தாலும் அற்புதமா நடிக்குறார்... முக்கியமா திருநெல்வேலி பாஷையில அசத்துவார்...அலட்டல் இல்லாம் ஆர்பாட்டம் இல்லாம... வேடத்துக்கு தகுந்த வார்த்தைகள், மனோபாவம்... டாப் கிளாஸ்..//


மேடம்,

நீங்க சொல்லுறது உண்மைதான்.. ரொம்பவும் எதார்த்தமா அவர்கிட்டேயிருந்து வர்ற அந்த வசன உச்சரிப்புகள் அருமையாக இருக்கும்...

//இவரைப் பற்றி எழுதிய ராமுக்கு நன்றி//

ரொம்ப நன்றி மங்கை மேடம்... :)

said...

//அந்த டாக்டர் படம், அது என்னய்யா அது கில்லியா?,//

//
அது டும் டும் டும்... அதிலே திருநெல்வேலி பாசை பேசி நடிச்சிருப்பாரு.. :)//

யோவ் ராயலு, டும்டும்டும் டாக்டர் படமாய்யா? எனக்குத் தெரிஞ்ச அளவுக்குப் படம் கூட உமக்குத் தெரியாது போல. இதுல டாக்குடரோட அசின் நடிச்சு இருப்பாங்கப்பா. இவரு கூட கேர் ஆப் பிளாட்பாரம் வக்கீலா வருவாரே.. அந்தப் படம்.

said...

---டும் டும் டும்... அதிலே திருநெல்வேலி பாசை பேசி நடிச்சிருப்பாரு---

ஆமாம்!

said...

I think he started as a dubbing artist. Somewhere I read it before. Because of this he can do different modulations in his voice very easily. Good actor. TV serial 'Chinna pappa Periya Pappa' was hit due to him only.

-Arasu

said...

ராம் உன் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்.. பாஸ்கர் ஒரு அருமையான நடிகர்.. மொழி படத்தில் அவர் ஏற்றிருந்த வேடத்தின் மூலம் அவர் தன் தொழிலில் தன்னிருப்பை உயர்த்திக் கொண்டுள்ளார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

said...

//யோவ் ராயலு, டும்டும்டும் டாக்டர் படமாய்யா? எனக்குத் தெரிஞ்ச அளவுக்குப் படம் கூட உமக்குத் தெரியாது போல. இதுல டாக்குடரோட அசின் நடிச்சு இருப்பாங்கப்பா. இவரு கூட கேர் ஆப் பிளாட்பாரம் வக்கீலா வருவாரே.. அந்தப் படம்.//

கொத்ஸ்,


அது சிவ சிவ சிவகாசி... அதுவும் ஒரு கலை காவியம் தான்..... நான் சொன்ன டும் டும் டும் படத்தை பார்த்துட்டு பாஸ்கர் நடிப்பு எப்பிடியிருக்குன்னு சொல்லுங்க... :)

said...

//Boston Bala said...

---டும் டும் டும்... அதிலே திருநெல்வேலி பாசை பேசி நடிச்சிருப்பாரு---

ஆமாம்!/

பாபா,

வருகைக்கு மிக்க நன்றி... :)

said...

//I think he started as a dubbing artist. Somewhere I read it before. Because of this he can do different modulations in his voice very easily. Good actor. TV serial 'Chinna pappa Periya Pappa' was hit due to him only.//

Arasu,

I do agree with your points. அவருடைய Voice modulations ரொம்பவே நல்லாயிருக்கும்... :)

வருகைக்கு மிக்க நன்றி... :)

said...

//தேவ் | Dev said...

ராம் உன் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்.. பாஸ்கர் ஒரு அருமையான நடிகர்.. மொழி படத்தில் அவர் ஏற்றிருந்த வேடத்தின் மூலம் அவர் தன் தொழிலில் தன்னிருப்பை உயர்த்திக் கொண்டுள்ளார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.//

தேவ்'ண்ணே,

கருத்துக்களுக்கு மிக்க நன்றி... :)

said...

நல்ல நடிகரப்பா அவரு. அந்த படத்துல அவர் காமெடியை ரசிச்சேன். உன் ரசனையையும் ரசிச்சேன்.

:)

said...

அட, இன்னிக்குத்தான் இந்த பதிவ படிச்சேன்.

இதுமாதிரி இன்னும் சில நடிகர்கள் இருக்காங்க சார். எனக்கு சட்டுன்னு நினைவுக்கு வர்ரது இளவரசு. (ஆனந்தம்-ல வில்லனா, அன்பே சிவம்-ல போலீஸா, பாய்ஸ்-ல செத்துப்போற மணிகண்டனோட அப்பாவா, ஆட்டோகிராப்-ல 'சந்தோஷம், மகிழ்ச்சி'-னு சொல்லும், அபானவாயு வெளியேற்றும் ஆசிரியரா) நக்கல், வில்லத்தனம்-னு நல்லா பண்ணுவாரு மனுஷன்.

பாஸ்கரும், சும்மா சொல்லக்கூடாது. 'அரசி'-யின் முதல் பாகமான 'செல்வி'-யில் ஒரு வில்லனா அசத்துவாரு.

டாப்பிகலான விஷயம்தான் இது.

சிகரம் பாத்துருக்கீங்களா ? திரைப்பாடகரா ஆசைப்பட்டு குழுப்பாடகர்கள்ள ஒருத்தரா சார்லி இருப்பாரு. அவரு பாடின பாடல்கள் எழுதி வைத்திருக்கிற நோட்டுப்புத்தகத்தை அவரோட தோழி லலிதகுமாரி பாக்க, அதில ஒரே லாலாலா....லீலீலீஈஈஈஈ-னே எழுதி இருக்கறத பாத்ததும் திகைச்சுப்போயி சார்லிய பாக்க, அவரும் ஒரு வலி நிறைஞ்ச புன்னகைய வெளிப்படுத்துவாரு பாருங்க ....

சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமையான துணை நடிக நடிகைகளின் ஒட்டுமொத்த மனோநிலை அது.

எனக்கென்னவோ பாஸ்கர் மாதிரியான நடிகர்கள மையமா வச்சு குணச்சித்திர ரோல் பண்ணவிட்டா தூள் கெளப்புவாங்க-ன்னு தோணுது.

அன்புடன்
முத்து

பி.கு : இது சம்பந்தமா 'மின்மினிப்பூச்சிகள்'-ங்கற தலைப்பில 'தினம் ஒரு கவிதை' குழுமத்துல சில வருடங்கள் முன்ன எழுதி இருந்தேன்.

said...

If anyone is from coimbatore and Studied in Michael's School know about Mr. Seetharaman PT master. (he was one of the best in out of 7 PT masters in my school) He was exactly same. I thought someone told his story to the director or producer so this character came into movie......

This is my 17 years back I saw him...

Any from Coimbatore????????

said...

முத்து & இராம்,
உங்க பகிர்வுக்கு நன்றி.

எனக்கு சட்டுனு நினைவுக்கு வருபவர் 'வின்சென்ட் ராய்'.

தளபதியில் துரோகம் இழைத்து, ரஜினியால் தீக்குளிக்க வைக்கப்படுவார். இந்தக் காட்சிதான் தமிழ் சினிமாவில் வன்முறையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.

அதை விட அருமைநாயகத்துக்கு விசுவாசமான அல்லக்கையாக சத்ரியனில் வருவார். விஜயகாந்த்தை விடுவிக்க இவரை திலகனிடம் ஒப்படைக்க வேண்டுமென்று பேரம் பேசி ஒப்பந்தமாகி, அந்த எக்ஸ்சேஞ்சில் பயம்+கோழைத்தனம்+கையாலாகாத்தனம் என எல்லாம் கலந்து மிரட்டியிருப்பார்.

நிறைய உதிரி பாத்திரங்களில் பார்த்திருக்கிறேன். அருமையான நடிகர்.

நாயகன் ஆக முடியாத நாசர், நாயகன் ஆனாலும் வில்லனுக்கே திரும்பும் பசுபதி, பேய்க்காமனாகவே நினைவில் நிற்கும் சண்முகராஜன் போன்ற ஆண் குணபாத்திரங்களாவது தேவலாம். பெண்கள் மிளிர்வதற்கு சீரியலை விட்டால் வேறு கதிமோட்சமே இல்லை :(

said...

பாஸ்கர், சி.பாப்பா பெ.பாப்பா தொடரின் பொழுதே அவரை ர்ரொம்ப பிடிக்கும். அதுவும் காதை பிடித்தபடி அவர் பேசும் மேனரிஸம் சிரிப்பாக இருக்கும்.

இந்த படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் அருமையாக இருக்கும். திரையரங்கில் படம் பார்க்கும் பொழுது அவர் வரும் ஒவ்வொரு காட்சியின் பொழுதும் படம் பார்ப்பவர்கள் சிரித்தபடி இருந்தார்கள். ஆனால் அவர் ஏன் அப்படி ஆனார் என்ற காரணம் தெரிந்தவுடன் அதன் பிறகு வரும் காட்சியில் யாரும் சிரிக்கவேயில்லை...

said...

/
சிகரம் பாத்துருக்கீங்களா ? திரைப்பாடகரா ஆசைப்பட்டு குழுப்பாடகர்கள்ள ஒருத்தரா சார்லி இருப்பாரு. அவரு பாடின பாடல்கள் எழுதி வைத்திருக்கிற நோட்டுப்புத்தகத்தை அவரோட தோழி லலிதகுமாரி பாக்க, அதில ஒரே லாலாலா....லீலீலீஈஈஈஈ-னே எழுதி இருக்கறத பாத்ததும் திகைச்சுப்போயி சார்லிய பாக்க, அவரும் ஒரு வலி நிறைஞ்ச புன்னகைய வெளிப்படுத்துவாரு பாருங்க ....//

முத்து,

வெற்றி கொடி கட்டு படத்திலெயும் சார்லி நல்லா பண்ணிருப்பார். சூழ்நிலைகள் காரணமா நண்பர்கள் இவரை பைத்தியமின்னு சொல்ல, அந்த நிலைமைய புரிஞ்சுக்கிட்டு பைத்தியம் மாதிரியே பாவனை செய்து காண்ப்பிப்பார். மார்வலஸ் ஸீன் அது... :)

வருகைக்கும் கருத்து பகிர்மைக்கும் மிக்க நன்றி... :)

said...

// Anonymous said...

If anyone is from coimbatore and Studied in Michael's School know about Mr. Seetharaman PT master. (he was one of the best in out of 7 PT masters in my school) He was exactly same. I thought someone told his story to the director or producer so this character came into movie......

This is my 17 years back I saw him...

Any from Coimbatore????????//

அனானி,

அது உருவ ஒற்றுமையா இருக்கலாம்... :)

said...

பாபா,

ஒங்களோட நீண்ட பின்னூட்டத்தை இப்போதான் பார்க்கிறேன்... நீங்க சொன்ன எல்லா காட்சிகளுமே அட்டகாசமா இருக்கும்.... இன்னும் நிறைய இருக்கு... இப்போதைக்கு ஏதுவும் ஞாபத்திலே வரமாட்டேங்கிது... :)

said...

//சீனு said...

பாஸ்கர், சி.பாப்பா பெ.பாப்பா தொடரின் பொழுதே அவரை ர்ரொம்ப பிடிக்கும். அதுவும் காதை பிடித்தபடி அவர் பேசும் மேனரிஸம் சிரிப்பாக இருக்கும்.///

சீனு,

முதன்முறையாக கருத்திட்டமைக்கு மிக்க நன்றி... :)

புரொப்பைல் போட்டோ சூப்பரப்பு... :)

said...

/***** அனானி,

அது உருவ ஒற்றுமையா இருக்கலாம்... :) ***/

Mr.Seetharaman didnot come back to real time till end of his life.....

said...

//
Mr.Seetharaman didnot come back to real time till end of his life.....//

I am sorry.. :(

said...

//பெண்கள் மிளிர்வதற்கு சீரியலை விட்டால் வேறு கதிமோட்சமே இல்லை :(//

பாபா,

இப்போதான் ஞாபகம் வந்துச்சு.... பெண்கள் ஏற்று நடித்த குணசித்திர கதாபாத்திரங்களில் மின்னியதில்,

1) ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா அம்மாவா நடித்தவர், நான் மெளனவிரதமின்னு வாயை தொறந்து சொல்லிட்டு சூப்பரா முழிப்பார்....

2) ஆச்சி, புரட்சிக்கலைஞரின் சின்னகவுண்டர் படத்திலே சுகன்யா-விஜயகாந்த் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் பொழுது ஆரத்தி தட்டை வைத்து கொண்டு முன்னாடி நடந்த சண்டைய மனசில் அசைப்போட்டு சிரிக்க ஆரம்பிப்பார்...இது ரெண்டும் நல்லாயிருக்கும்... ;)