Tuesday, December 18, 2007

எங்கயிருந்துடா கிளம்புறீங்க?

போன ஜென்மத்திலே பெரிய பெரிய பாவமெல்லாம் பண்ணினதாலேதான் பெரிய பெரிய சிட்டிகளிலே கஷ்டப்படுறோமின்னு மனசுக்குள்ளே நினைச்சிக்குவேன், ஹைதராபாத், சென்னை கடைசியா பெங்களூரூன்னு வாழ்க்கை வருஷமா போயிட்டுருக்கு, இப்போ அதுக்கு என்னாடா'னு கேட்கீறிங்க, ஒங்க கேள்விக்கு பதில் என்னான்னா பேச்சிலரா வண்டியோட்டுறது பெரும் பாடா இருக்குங்க, No more imagination. சோத்துக்கு பெரும்பாடா இருக்கு, காலையிலே ரெண்டு இட்லிய தின்னுட்டு ஆபிஸிக்கு போலாமின்னு பார்த்தா அடர்பச்சை கலரிலே சாம்பார்கிற பேருலே கொடுக்கிறானுக, அதை கஷ்டப்பட்டு எப்பிடியாவது தின்னுட்டு பொழுதை போக்கிட்டு இருந்தா மதியத்துக்கெல்லாம் சரியா சொல்லி வைச்சமாதிரி பசி வந்துருது, பச்சை கலரு பானக்கரம் சாம்பாரை நினைச்சா படக்கென்னு அமுங்கி போயிருது. நம்ம சோட்டு பயலோட கூட்டாளி இங்கன வந்து ரெண்டு நாளு இண்டர்வீயூ'க்கா தங்கியிருந்தான். வேலைக்கு ஆஃபர் லெட்டர் கிடைச்சும் வேணாவே வேணாமின்னு போயிட்டான், அதுக்கு அவன் சொன்ன காரணம்...

"நிக்க வைச்சி சோறு போடுறானுவே! சாம்பார்'னு என்னத்தயோ ஊத்துறானுக, தின்னுமுடிச்சி நாலு மணிநேரத்துக்கும் இனிக்குது"

"ஆட்டோக்காரனை கூப்பிட்டா என்னாம்மோ அவங்கிட்டே கடன்கேட்டமாதிரி நிக்காமே போறான்"

"ஊரு முழுக்க ரோடு மறியல் நடக்கிறமாதிரி வண்டிக்காரனுக ஊர்ந்துக்கிட்டே போறானுக"

நீங்களே இங்க கிடந்து அனுபவிங்கடா, என்னாலே கொட்டமுடிஞ்ச குப்பைய சென்னையிலே கொட்டிக்கிறேன்னு போயிட்டான்.... :(

எங்கயிருந்துடா கிளம்புறீங்க?

______________________________________________________________________________________


வெளியூருலே வந்துதான் நம்ம உசுரை வாங்கிட்டு போனானுகன்னு ஊருக்கு போயிருந்தப்போ நம்ம பேவரைட் கடையிலே ஈரல் ரோஸ்ட்'டோ பொரட்டா சாப்பிட்டு இருக்கிறப்போ எங்க ஏரியா தண்ணி வண்டி ஒன்னு ஆடிட்டே வந்து எப்பக்கத்திலே ஒக்கார்த்துச்சு. வந்ததும் என்னாடா ஊருக்குள்ளே பொழக்க வக்கில்லாமே வெளியூருலே வெளக்கெண்ணை ஜாகை மாத்திக்கீட்டியாமே'னு கேட்டுச்சு. என்னத்த சொல்ல, ஆமாம் இங்கன இருக்கிற ஒன்னமாதிரி இம்சைகதான் என்னை தொரத்திவிட்டிங்கன்னு பதிலு சொன்னேன், அப்போ கடைக்காரன் இலை போட்டதும் அவங்கிட்டே இம்சைய கூட்ட ஆரம்பிச்சிருச்சு. ஏய் இங்காரு, நேத்துதான் எனக்கு ஆம்பிளேட் போட்டுக் கொடுத்து ஏமாத்திட்டே, இன்னிக்காவது பொம்பிளைட் கொடு'ன்னு மொக்கை ஜோக்கை ஒன்னை சொல்லி தானா சிரிச்சுச்சு, ஐயோ அவ்வளவு நேரமா வேகமா வயித்துக்குள்ளே போயிட்டு இருந்த பொரட்டா மெதுவா நகர ஆரம்பிச்சிருச்சு. ஏலேய் பெங்களூரூ'க்கு நான் இருவது வருசத்துக்கு முன்னாடி டூர்'லே வந்திருக்கேன், அங்கதானே லாலுபார்க்கு இருக்கு, அதை சுத்திதானே ஊரு, இப்போ எப்பிடியிருக்கு ஊரு, அப்பிடிதானே இருக்குன்னு கேள்வி கேட்டு தொலைச்சது, என்னத்த பதில் சொல்ல? பொரட்டா பிச்சி போட்டு குழம்பு ஊத்தி திங்க ஆரம்பிச்சதும் இன்னும் தொண தொண'ன்னு கேள்வி கேட்டு ஊசுரை வாங்கிட்டு இருந்துச்சு. அப்போதான் ஏண்டா நாமே ரெண்டு பொரட்டா வாங்கி தொலைச்சோமின்னு வெறுப்பிலே இருந்தேன். கடைக்காரன் குழம்பு ஊத்த வந்தப்ப்போ முதலிலே பச்சை கலருலே சால்னா ஊத்தினே இல்லை, அங்க ஒருத்தர் சாப்பிட்டு இருக்காரு பாரு அந்த் செவப்பு கலரு சாலுனா'வே ஊத்துன்னு கேட்டுச்சு. நான் சாப்பிட்டது போதும் என்னை இவங்கிட்டே இருந்து காப்பத்திரு மீனாச்சியத்தா'னு ஓடி வந்துட்டேன்.

எங்கயிருந்துடா கிளம்புறீங்க?

______________________________________________________________________________________


காலேஜ் படிச்சு முடிச்சதும் ஜீனியரை'யே கரம்பிடித்த நம்ம சோட்டு பய வீட்டுக்கு கூப்பிட்டானேன்னு போயிருந்தேன். அம்மணி மார்கெட் போயிருந்தாங்க, டெய்லி இவந்தான் போவான். இன்னிக்கு ராம் வர்றான், அவங்கிட்டே நாந்தான் எல்லா வேலையும் பார்க்கிறேன்னு தெரியக்கூடாது'ன்னு அவங்க காலிலே விழுந்து எந்திருச்ச தடயத்தை கவனிச்சதும் பயப்புள்ள சன் டீவி, திருவாளர் திருமதி'ன்னு பேச்சை மாத்திட்டான். அந்த நிகழ்ச்சியிலே இவனும் இவன் அம்மணியும் கலந்துக்கனுமின்னு ஆசையா இருக்குன்னு சொன்னான். சரி அது பெரிய ஏதோ குவீஸ் ப்ரோகிராம் போலே, அதிலே இவங்க அறிவை திரட்டி ஜெயிச்சிட்டு வர்றதுக்கு துடிக்கிறானுக'னு கருமம் அந்த நிகழ்ச்சியை பார்க்கிற வரைக்கும் நினைச்சிக்கிட்டேன். கருமத்தை ரெக்கார்ட் வேற பண்ணிவைச்சிருந்து அதை வேற பிளே பண்ணி காட்டினான். அவன் மேலே என்னிக்கும் மரியாதை வைச்சது கிடையாது, இதை பார்த்துட்டு இந்த நிகழ்ச்சியிலே கலந்துக்கனுமின்னு துடிக்கிற அவனை என்னத்த சொல்லி தொலைக்கிறது. Are you mad'னு கேட்டதுக்கு பயப்புள்ள'க்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துருச்சு! முதலிலே ஒங்க வீட்டுக்கு கிளம்புடா'ன்னு பத்தி விட்டுட்டான். அந்நேரம் வீட்டுக்குள்ளே வந்த அவன் சம்சாரம் இரு, சாப்பிட்டு போ'ன்னு சொன்னுச்சு, இவன் உள்ளே இருந்துக்கிட்டு பொறமை பிடிச்சவனுகெல்லாம் சோறு போடாதம்மா'னு சொல்லிட்டான்.... :(


உண்மையிலே கேட்கிறேங்க எங்கயிருந்துதான் இவனுகளுக்கெல்லாம் கிளம்பி வர்றாங்கன்னு தெரியலை...

51 comments:

said...

Ultimate :)

said...

:))))

said...

ஹா ஹா ஹா

புரியுது தம்பி.. புரியுது. ஏதோ ஜினிமாலதான் மலேசியா சிங்கப்பூரு சுச்சருலாந்துன்னு ஆடுறாக பாடுறாக. ஒங்க நம்பரு ஏதோ ஆசையக் கழுத பட்டுத் தொலைச்சிட்டாரு. விட்டுருய்யா :)

அதென்ன பொரட்டா சாலுனான்னு வயித்தெரிச்சல கெளப்புத? இங்ஙன ரொம்பக் கயிட்டப்பட்டு நேத்துத் தோசையச் சுட்டுப் புட்டோம்யா... பயக கண்ணுல தண்ணி. நாங்கழுத உள்ளூருச் சாப்பாடுதான் சாப்புடுறது.

said...

:))

said...

ராம்,
பனாங்கர சாம்பார்ன்னு ஒரு வகை சாம்பார் இருக்கா???
உங்க ஊர்ல தான் கிடைக்குமா?

\\நிக்க வைச்சி சோறு போடுறானுவே! சாம்பார்'னு என்னத்தயோ ஊத்துறானுக, தின்னுமுடிச்சி நாலு மணிநேரத்துக்கும் இனிக்குது"

"ஆட்டோக்காரனை கூப்பிட்டா என்னாம்மோ அவங்கிட்டே கடன்கேட்டமாதிரி நிக்காமே போறான்"

"ஊரு முழுக்க ரோடு மறியல் நடக்கிறமாதிரி வண்டிக்காரனுக ஊர்ந்துக்கிட்டே போறானுக"\\

Ultimate!!

said...

எங்கிருந்து கிளம்புறாங்களோ தெரியாது ஆனா நமக்குனே வந்து சேருவானுங்க...

//போன ஜென்மத்திலே பெரிய பெரிய பாவமெல்லாம் பண்ணினதாலேதான் பெரிய பெரிய சிட்டிகளிலே கஷ்டப்படுறோமின்னு மனசுக்குள்ளே நினைச்சிக்குவேன்,//

இன்னும் நீ கன்பார்ம் பண்ணலையா??

//ஒங்க கேள்விக்கு பதில் என்னான்னா பேச்சிலரா வண்டியோட்டுறது பெரும் பாடா இருக்குங்க, No more imagination. சோத்துக்கு பெரும்பாடா இருக்கு,//

உன் ஆதங்கம் புரியுது. இந்த தடவை உங்க வீட்டுல நான் எடுத்து சொல்லுறேன். 2008 ல உனக்கு சங்கு தான் டி....

said...

ஜூப்பருண்ணே..இழவக்கூட்டறதுக்குன்னே ஊருல இது மாதிரி பலபேரு திரியறானுவ :)))

said...

/இவனும் இவன் அம்மணியும் கலந்துக்கனுமின்னு ஆசையா இருக்குன்னு சொன்னான். சரி அது பெரிய ஏதோ குவீஸ் ப்ரோகிராம் போலே, அதிலே இவங்க அறிவை திரட்டி ஜெயிச்சிட்டு வர்றதுக்கு துடிக்கிறானுக'னு கருமம் அந்த நிகழ்ச்சியை பார்க்கிற வரைக்கும் நினைச்சிக்கிட்டேன். கருமத்தை ரெக்கார்ட் வேற பண்ணிவைச்சிருந்து அதை வேற பிளே பண்ணி காட்டினான். அவன் மேலே என்னிக்கும் மரியாதை வைச்சது கிடையாது, இதை பார்த்துட்டு இந்த நிகழ்ச்சியிலே கலந்துக்கனுமின்னு/

Good one. I feel same way about that show.

Rumya

said...

அதான் பதிவு நெத்திலியே

//தேடிச் சோறுநிதந் தின்று -பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பங்களூருலருந்து மொக்கைபோடும் பயலுஹ போல"//

ன்னு போட்டு வச்சிருக்கியே ராசா - இதுல எதுக்கு இந்தத் தனி மொக்கை?

:-))

said...

ராயலு ரொம்பத்தேன் ரென்சனாகி இருக்க போல! நிதானமுடா.....

said...

அட அம்மூருக்காரவுக ஏதோ சொல்லுறாகண்டு வந்தே....

வெவரணையாதேன் எளுதியிருக்கீக....

ஆமா! அதென்ன "பனாங்கர சாம்பார்",
தெரியலயெ

said...

nice one...

Thanks

said...

:)
திருவாளர் திருமதியில சண்டை போட்டுக்க சொல்லுவாங்களே... கொடுமை...

said...

விவாஜி ஒத்த வரி கமெண்ட்'க்கும் ஜியா சிரிச்சதுக்கும் நன்றி... :)

said...

//புரியுது தம்பி.. புரியுது. ஏதோ ஜினிமாலதான் மலேசியா சிங்கப்பூரு சுச்சருலாந்துன்னு ஆடுறாக பாடுறாக. ஒங்க நம்பரு ஏதோ ஆசையக் கழுத பட்டுத் தொலைச்சிட்டாரு. விட்டுருய்யா :)//

ஜிரா,

இதை அவன் படிச்சானா என்னை சும்மா விடுவானா'னு தெரியலை.... :(

//அதென்ன பொரட்டா சாலுனான்னு வயித்தெரிச்சல கெளப்புத? இங்ஙன ரொம்பக் கயிட்டப்பட்டு நேத்துத் தோசையச் சுட்டுப் புட்டோம்யா... பயக கண்ணுல தண்ணி. நாங்கழுத உள்ளூருச் சாப்பாடுதான் சாப்புடுறது.//

ஹ்ம்ம் என்ன பண்ண?? ஊருக்கு போனதான் அதெல்லாம் சாப்பிடமுடியுது.. :)

said...

/ராம்,
பனாங்கர சாம்பார்ன்னு ஒரு வகை சாம்பார் இருக்கா???
உங்க ஊர்ல தான் கிடைக்குமா?//

திவ்யா,

அது பானக்கரம்... ஹி ஹி நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்'ஐ கவனிக்கலை... :)

பெங்களூரூலே எல்லா ஹோட்டலிலேயும் மங்களூரூ ஸ்டைல் சாப்பாடு தான், சாம்பார்,ரசம்'னு எல்லாத்திலேயும் வெல்லம் போடுவாங்க... :(

said...

//உன் ஆதங்கம் புரியுது. இந்த தடவை உங்க வீட்டுல நான் எடுத்து சொல்லுறேன். 2008 ல உனக்கு சங்கு தான் டி....//

புலி,

நீ என்மேலே பெரிய கொலைவெறியிலே திரியுறேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.... ஒனக்கு ஒரு சிப் சரக்கெல்லாம் விட்டு கொடுத்தேன்'லே? பிளிஷ் என்னை விட்டுறு நான் பாவம்... :)

said...

//ஜூப்பருண்ணே..இழவக்கூட்டறதுக்குன்னே ஊருல இது மாதிரி பலபேரு திரியறானுவ :)))//

KTM,

ஆமாம் ராசா... இன்னும் எவன் எவன் நம்ம பிளாக் படிக்காத ஃபிரண்ட்ஸ் இருக்கானுகளோ அவனுகள பத்தியெல்லாம் எழுதனும்... :)

said...

//delphine said...

:)

simply superb Ram! really enjoyed. Keep it up../

Thanks a lot doctor mam.. :)

said...

rumya,

நன்றி...

சுந்தர்,

என்ன சொல்லவர்றீங்க? ஒன்னுமே புரியலை... :)

said...

/இலவசக்கொத்தனார் said...

ராயலு ரொம்பத்தேன் ரென்சனாகி இருக்க போல! நிதானமுடா.....//

கொத்ஸ்,

நாமே எங்க ரென்சன் ஆகப்போறாம்?? எல்லாம் சும்மா சும்மா.... :)

said...

//Blogger மதுரையம்பதி said...

அட அம்மூருக்காரவுக ஏதோ சொல்லுறாகண்டு வந்தே....

வெவரணையாதேன் எளுதியிருக்கீக....//


மெளலி,

நம்ம ஊரு லந்தை மறக்கமுடியுமா?? :)


// ஆமா! அதென்ன "பனாங்கர சாம்பார்", தெரியலயெ//

ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி பண்ணியாச்சு... :)

said...

அனானி,

நன்றி...


அரைபிளேடு,

ஆமாம், அதுவும் மனைவி கணவனாவும்,கணவன் மனைவியாகவும் இருந்து சண்டை போடனுமாம்... :(

said...

Idhae kelvi ungala paathu oruthar kettaru nyaabagam irukka???

//இம்சை சொல்றது என்னன்னா..
இராம் said...
ஹைய்யா நாந்தான் 3200

Mon Jul 09, 09:51:00 AM

Iyya இராம் unaku santhosama, yenga irunthuya varenga, nalla kedacha gapla poonthu keda vettarengalae

Mon Jul 09, 09:55:00 AM //

:P

said...

//
இராம்/Raam said...
/ராம்,
பனாங்கர சாம்பார்ன்னு ஒரு வகை சாம்பார் இருக்கா???
உங்க ஊர்ல தான் கிடைக்குமா?//

திவ்யா,

அது பானக்கரம்... ஹி ஹி நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்'ஐ கவனிக்கலை... :)

பெங்களூரூலே எல்லா ஹோட்டலிலேயும் மங்களூரூ ஸ்டைல் சாப்பாடு தான், சாம்பார்,ரசம்'னு எல்லாத்திலேயும் வெல்லம் போடுவாங்க... :(

//
தலை என் நிலமைய கொஞ்சமாச்சும் நினைச்சு பாத்தியா????
அவ்வ்வ்வ்வ்வ்

பெங்களூர்ல மங்களூர் சாப்பாடு தேடி தேடி நீ சாப்பிட்டிருக்கன்னு நான் நினைக்கிறேன். நான் நிறைய தடவை யஷ்வந்த புரம்ல நிறைய ஹோட்டல்ல சாப்பிட்டிருக்கேன் நம்ம ஊர் சாம்பார்தான் குடுக்குறாங்க.

said...

\\எங்கயிருந்துடா கிளம்புறீங்க?\\

அதை தான் நானும் கேட்டுகுறேன்...முடியல...;(

said...

இவ்வளவு கஷ்டத்துலயும் இத ஒரு பதிவா போட்ட பாரு … நீதான்யா மதுரக்காரன்!!!

said...

ரசித்துச் சிரித்தேன் :))))

said...

நச் கதைப் போட்டிக்கு கதை அனுப்பலியா? 23 கடைசி தேதி.

said...

தலைப்புலே சொல்லிட்டீங்க... நெசமாவே நானும் நெனச்சிருக்கேன். நமக்குன்னு எங்கேயிருந்தான் வருவானு(ளு)களோன்னு...
:-)

said...

//அருட்பெருங்கோ said...
இவ்வளவு கஷ்டத்துலயும் இத ஒரு பதிவா போட்ட பாரு … நீதான்யா மதுரக்காரன்!!!//

ரிபீட்டே......

said...

:)))))))))

said...

//G3 said...

Idhae kelvi ungala paathu oruthar kettaru nyaabagam irukka??? //

சொர்ணாக்கா,

என்ன சொல்லவர்றீங்க??? :)


//பெங்களூர்ல மங்களூர் சாப்பாடு தேடி தேடி நீ சாப்பிட்டிருக்கன்னு நான் நினைக்கிறேன். நான் நிறைய தடவை யஷ்வந்த புரம்ல நிறைய ஹோட்டல்ல சாப்பிட்டிருக்கேன் நம்ம ஊர் சாம்பார்தான் குடுக்குறாங்க.//

சிவா,

கர்நாடகா சாப்பாடு ஸ்டைலை மங்களூரூ ஸ்டைல் தான் சொல்லுவாங்க.... :)

said...

கோபி,

ஒனக்கும் இதே பிரச்சினைதானா??? :(

காதல் முரசு,

நாங்கெல்லாம் வீரம் வெளஞ்ச மண்ணிலிருந்து வந்தவகன்னு நிருபிக்க வேணாமா??


//ச.சங்கர் said...

ரசித்துச் சிரித்தேன் :))))//

டாங்கீஸ் சங்கர்.. :)

said...

//நச் கதைப் போட்டிக்கு கதை அனுப்பலியா? 23 கடைசி தேதி./

சர்வேசன்,

கடைசி நாளுக்குள்ளே எழுதிறேன்.....


//காட்டாறு said...

தலைப்புலே சொல்லிட்டீங்க... நெசமாவே நானும் நெனச்சிருக்கேன். நமக்குன்னு எங்கேயிருந்தான் வருவானு(ளு)களோன்னு...//

ஹிம் அதே கஷ்டம் தான் எனக்கும்... :(

said...

புரட்சி தமிழன்,

முதன் வருகைக்கு மிக்க நன்றி....


தஞ்சாவூரான்,


பெரும் சிரிப்பு சிரிச்சதுக்கு மிக்க நன்றி... :)

said...

:))))))))))

said...

suppppeeeerrrrrrrrrrr!!!!

said...

// திருவாளர் திருமதி'ன்னு பேச்சை மாத்திட்டான். அந்த நிகழ்ச்சியிலே இவனும் இவன் அம்மணியும் கலந்துக்கனுமின்னு ஆசையா இருக்குன்னு சொன்னான். சரி அது பெரிய ஏதோ குவீஸ் ப்ரோகிராம் போலே, அதிலே இவங்க அறிவை திரட்டி ஜெயிச்சிட்டு வர்றதுக்கு துடிக்கிறானுக'னு கருமம் அந்த நிகழ்ச்சியை பார்க்கிற வரைக்கும் நினைச்சிக்கிட்டேன
//

இதேதான் நமக்கும் கடுப்பாறது... இப்படி ஆளுங்க இருக்கறதாலதான் அவங்க எல்லாம் இப்படி பண்றாங்க

said...

ராமண்ணா, ரொம்ப தான் மனசு நொந்து பதிவு போட்டிருக்கிங்க போல..கிகிகி

//கருத்து கந்தசாமிகளா வாங்க!! வாங்க!!! ஒங்க கருத்துக்களை அள்ளி தெளிங்க..... :)//

கந்தசாமின்னா ஆண்கள் மட்டுமா? கண்டிக்கிறேன்

said...

நல்ல காமெடி ( ஆனா கோச்சுக்கக்கூடாது உங்க கஷ்டத்தை காமெடின்னு சொல்றேனேன்னு )

said...

"என்னான்னா பேச்சிலரா வண்டியோட்டுறது பெரும் பாடா இருக்குங்க, No more imagination. சோத்துக்கு பெரும்பாடா இருக்கு, "

ரஞ்சிட்டோம், சீச்சீ, நம்பிட்டோம்! :P

said...

ரெட்பயர்,

வளரெ நன்னீ..




//இப்படி ஆளுங்க இருக்கறதாலதான் அவங்க எல்லாம் இப்படி பண்றாங்க//


இம்சையக்கோவ்,

என்ன பண்ணலாமின்னு சொல்லுங்க.....

said...

தூயா,

ஏம்மா நீ வேற இப்பிடியொரு பிரச்சினையே கிளப்பி விடுறே? :(

முத்துக்கா,

நம்ம சோகக்கதை தான் எல்லாருக்கும் ஜோக் கதையா போச்சே.... :)

said...

//கீதா சாம்பசிவம் said...

"என்னான்னா பேச்சிலரா வண்டியோட்டுறது பெரும் பாடா இருக்குங்க, No more imagination. சோத்துக்கு பெரும்பாடா இருக்கு, "

ரஞ்சிட்டோம், சீச்சீ, நம்பிட்டோம்! :P/


தலைவலி,

யாராவது இப்போ இதை கேட்டாங்களா? :(

said...

//ரஞ்சிட்டோம், சீச்சீ, நம்பிட்டோம்! :P//

Ranji ??

said...

//தூயா [Thooya] said...

//ரஞ்சிட்டோம், சீச்சீ, நம்பிட்டோம்! :P//

Ranji ??//

பாசமலரே,

ஏம்மா முடிச்சு போன கலவரத்தை திரும்ப ஆரம்பிச்சு வைக்கிறே??? :((

said...

மூன்று நிகழ்ச்சிகளும் சொன்ன முறையில அருமையா இருந்தது இராமசந்திரமூர்த்தி. இரசிச்சுப் படிச்சேன்.

said...

கிளம்பிட்டாய்ங்கய்யா!!!!!!!!கிளம்பிட்டாய்ங்கய்யா!!!!!!!!
அன்புடன் அருணா

said...

குமரன் ததா,

நம்ம ஊரு பாசையிலே சரியா எழுதிட்டேன்னா??? :))


அருணா'க்கா,


வளரே நன்னி.. :)

said...

ultimate!! chancey illa. ROTFL!
agree with u, on every word about jilebi desam!! unga friend ushaar, naama ellam emantha mathiri illama theliva chennai oditar.

enoda friend oruthar, deputationla inga 1 varam vanthar, chennaila irunthu - 2 nal thaku pidika mudila, oditar..