Sunday, February 3, 2008

கடவுளின் தேசத்தில்.....

கடந்த இரண்டு மாதங்களாக அலுவலகத்தில் கடுமையான வேலை. எங்களை போன்ற அட்மினிஸ்ட்ரேட்டர் பொழப்பு பொழைக்கிறவனுக்கு வாரயிறுதிகளிலே மட்டுமே எதுவும் புதுசாவோ இல்லை இருக்கிற ஏதாவது மாற்றம் செய்யமுடியும். வாரயிறுதியில் அப்பிடின்னா மத்த வாரநாட்களில் மற்ற வழக்கமான வேலைகளும் ஓர்க் பிளான் தயாரிப்பதிலும் காணாமலே போனது. பொங்கல் விடுமுறை வந்த இரண்டு நாளு தவிர ஆபிசுதான் கதின்னு கிடந்தேன். போன சனிக்கிழமை உடன் வேலை பார்க்கும் மல்லுவுக்கு கோழிக்கோடில் திருமணம், சென்ற மாதமே பத்திரிக்கை வைத்துவிட்டு நீ வந்துதான் ஆகனுமின்னு கட்டாயப்படுத்த ஆபிஸ் வேலையும் சேர்ந்து பாடாய்படுத்த என்ன செய்வதென முழிபிதுங்கிதான் போனது. ஒரு வழியாக சர்வர் லைசென்ஸ் மக்கர் பண்ணதிலே போன வாரயிறுதியில் லீவு கிடைத்தது. கிடைத்த நாளை உருப்படியாக உபயோகப்படுத்தமென இடமே இல்லாத வேன்'லே ஒரமாக இடத்தை பிடிச்சு கோழிக்கோடு போயி சேர்ந்தாச்சு. அங்கயிருந்து அருகிலிருந்த கிராமத்திலேதான் அவருக்கு திருமணம். அங்க எல்லாத்தையும் ஆ'ன்னு வாயை பொளத்து பார்த்துட்டு கேரளா ஸ்டைல் சாப்பாட்டையும் வெட்டு வெட்டிட்டு ஊரை சுத்த கிளம்பிட்டோம்.

நம்ம புரட்சி போட்டோக்கிராபர் அண்ணன் CVR'ன் வழிக்காட்டுதலின் படி ஏதோ என்னாலே முடிஞ்ச அளவுக்கு போட்டோ எடுத்து தள்ளினேன்... :)

இது கோழிக்கோட்டிலிருந்து கண்ணூர் போற வழியிலே எடுத்தது. வேன் பாலத்தை கடந்து போறப்போ எடுத்ததுனாலே சரியா போகஸ் ஆகலை. வண்டியை நிறுத்தி எடுக்கலாமின்னு பார்த்தால் குறுகிய பாலம்கிறதுனாலே நெரிசலான போக்குவரத்து இருந்தது.... :(

culicut lake

கல்யாணம் முடிச்சிட்டு கோழிக்கோடு வர்ற வழியிலே இருந்த கப்பாடு பீச்'க்கு சென்றோம்.அன்னிக்கு பொழுது இருட்டியதும் கோழிக்கோடு திரும்பி புது மாப்பிள்ளை ஏற்பாடு பண்ணியிருந்த தீர்த்தவாரியிலே கலந்துக்கிட்டு சயனத்துக்கு போயாச்சு.

In Beach

In Beach

In Beach

Sunset

மறுநாள் காலையிலே அடிச்சி பிடிச்சி எழுந்திருச்சி வயநாடு'ஐ சுத்தியிருக்கிற எல்லா இடத்தையும் பார்த்திறனுமின்னு வெறியோடு கிளம்பி கேப் டிரைவரை போட்டு பாடாப்படுத்தியாச்சு. அந்த வகையிலே முதலிலே போன இடம் பூக்காடு ஏரி. அந்த ஏரியை சுத்தி மலைகள் சூழந்திருப்பது சிறப்பு. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை படகு சவாரியிலே சுத்திட்டு அடுத்த இடமான எடுக்கல் குகைக்கு கிளம்பினோம்.

பூக்காடு ஏரி:-

Pookad Lake

அந்த குகைக்கு போறதுக்கு கிட்டத்தட்ட 4 -5 கிமீ மலைப்பாதையிலே நடந்து போகனும். அப்போதான் அந்த குகை வாசலையே அடையமுடியும். அதுக்கே கூட வந்தவனுகளுக்கு மூச்சு வாங்க இதுக்கு மேலே அடியெடுத்து வைக்கமுடியாது'ன்னு வெளியே உக்கார்ந்துட்டானுக. கொஞ்ச பேரு மட்டும் உள்ளே போயி வந்தோம். குணா படத்திலே வர்ற குகைய விட கிட்டத்தட்ட பத்து இருபது மடங்கு பெரிதாக இருந்தது. உள்ளே போவதற்கு மிகவும் கடினமான வாசல் வேறு. கிட்டத்தட்ட நம்ம உடம்பை மூணா மடிச்சிதான் உள்ளேயே வாசலிலே நுழையமுடியும். அதுக்கு மேலே ஏறுவதும் பாறைகளுக்கு நடுவே நடக்க வேண்டும்.

குகையின் முன்வாசல்:-




இந்த பாதை ஒரு இடத்திலே மட்டுமே இருக்கு.... மீத பாதைய பாறை வழிதான் கடக்கவேண்டும்.




குகைக்கு உள்ளே:-



குகையோட உள்பகுதியிலே சில பழங்கால எழுத்து முறைகள் இருந்தன. அங்கயிருந்த இதெல்லாம் தமிழ் எழுத்துக்கள், நீம்கள் அறியுமோ'ன்னு வேட்டி கட்டின சேட்டன் சொன்னார். நானும் உத்து உத்து பார்த்தேன். ஒன்னும் சரியா தெரியல, கண்ணாடி எடுத்துட்டு போகலை.... :)


குகைய சுத்தி பார்க்கிறதுக்கே பொழுது சாய ஆரம்பிச்சிடுச்சு. கூட வந்த ஒருத்தன் காணமே போக அவனை தேடி நாலு பேரு போக அந்த நாலு பேரை தேடி இன்னொரு நாலு பேரு போக எல்லாரும் பிரிஞ்சிட்டோம். அப்புறமென்னா குடும்பப்பாட்டை பாடி எல்லாரும் ஒன்னுக்கூடி அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.



telescope lens வழியா எடுத்த போட்டோ... ஹி ஹி ஆர்வக்கோளாறு....

On the way to suchipura falls
Form house


suchipura falls

Suchipura Falls


குகை'க்கு அடுத்து போனது சுச்சிப்புரா அருவின்னு ஒரு இடம். ஜிராசிக் பார்க் 3'ம் பாகத்திலே பாறைகளுக்கு நடுவிலே பாதை இருக்கும் பாருங்க. அதேமாதிரியே ஒரு இடம் இந்த சுச்சிபுரா அருவி. தூரத்திலே தண்ணி சத்தத்தை கேட்டதும் ஹே'ன்னு கத்திக்கிட்டே திடு திடுன்னு ஓடி பாறை மேலெயெல்லாம் ஏறி செம ஆட்டம் போட்டாச்சு. மணி ஆறரைய தாண்டியதும் வனத்துறை சேட்டன்'ஸ் எல்லாம் வந்து இங்காரு புலி வரும், பேசாமே வந்திருங்கன்னு கூட்டியாந்துட்டானுக. அருவியிலிருந்து மேலே ஏறி வர்றவரை ஒரு பூனை கூட வரலை.... :( அப்புறமென்னா அங்கனயிருந்து பெங்களூரூ ஆன ஜிலேபி தேசத்துக்கு நட்டராத்திரியிலே வந்து சேர்ந்து அவனவன் வீட்டுக்கு போயி தூங்கி மதியம் ரெண்டு மணிக்கு ஆபிஸ் வந்து மேனஜர்'கிட்டே முறைப்பு பார்வைய வாங்கினோம்.... :)

21 comments:

ILA (a) இளா said...

பதிவை இன்னும் படிக்கலை. அந்த சூரிய அஸ்ட்தமனம்(?!) படம் அருமை..

Yogi said...

படம் நல்லா இருக்கு!!!

கப்பி | Kappi said...

கேரளா டிரிப்பா...நன்னாயிட்டு கரங்குனுண்டல்லே :)))


படமெல்லாம் பட்டையக் கிளப்புது!!

"போட்டோகிராஃபி புயல்" அண்ணன் இராயல் நற்பணி மன்றம் ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துருச்சு ;))

G.Ragavan said...

இப்பிடி ஒரு பயணத்தையே ஒரே பதிவுல சொல்லீட்டியே :) நல்ல பயணமாத்தான் இருக்கனும்.

வயநாடு எனக்கும் மிகவும் பிடித்தமான சுற்றுலாத் தலம். செம்பரா பீக் போகலை போல. அது டிரெக்கிங் எடம். தேயிலைத் தோட்டம் வழியா மேல ஏறனும். ஏறி எறங்குறதுக்குள்ள தாவு தீந்துரும்.

சூச்சிப்பாறா அருவிக்கு நானும் போயிருக்கேன். நல்ல இயற்கையழகோட இருக்கும்.

எடக்கல் போனதில்லை. அந்தக் கொகை வாசலைப் போட்டோ பிடிச்சிருக்கலாம்ல :)

காமிராச் சித்தர் சிவியார் பாடம் எடுத்ததாலதானோ என்னவோ..ஒவ்வொரு படமும் நச்சுன்னு இருக்கு.

வெட்டிப்பயல் said...

photos super :-))

CVR said...

///அங்க எல்லாத்தையும் ஆ'ன்னு வாயை பொளத்து பார்த்துட்டு ////

எல்லாத்தையுமனா??

படங்கள் எல்லாம் பட்டைய கிளப்புது!!
சூப்பரு பயணக்கட்டுரை!!

சீக்கிரமே உங்கள் ஆணிகள் நிலவரம் சீரடைந்து,இதேபோல பல பதிவுகள் போட்டு கலக்க வாழ்த்துக்கள்!! :-)

கோபிநாத் said...

தலைமறைவுக்கு இது தான் காரணமா!?

மாப்பி படங்கள் எல்லாம் என்னால பார்க்க முடியல..;((

அரை பிளேடு said...

புகைப்படங்கள் அருமை.

Divya said...

'Sun Set' படம் அருமை,
பயணக் கட்டுரை படிக்க சுவாரஸியமாக இருந்தது, படங்கள் சூப்பர்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குடும்பப்பாட்டா அது என்ன பாட்டு பாடினீங்க அப்படி ?

டெலஸ்கோப் படம் கமெண்ட் சூப்பர்.

ALIF AHAMED said...

படம் கண்ணுக்கு தெரியலை இருந்தாலும் நீங்க எடுத்தா நல்லா இல்லாமலா போகும்..!!!


அதனால 2 5 படம் நல்லா வந்த்துருக்கு :)

ALIF AHAMED said...

கோபிநாத் said...
தலைமறைவுக்கு இது தான் காரணமா!?

மாப்பி படங்கள் எல்லாம் என்னால பார்க்க முடியல..;((
//

ரீப்பீட்டேய்ய்ய்

இராம்/Raam said...

இளா,

அது அஸ்தமனம் தான்... பீச்'லே நான் எடுத்ததுதான்... :)

பொன்வண்டு,

வளரே நன்னி.. :)

KTM,

போதும்... இதோட நிறுத்திக்குவோம்... :)

ALIF AHAMED said...

4 vathu photo nallaa irukku

//


telescope lens வழியா எடுத்த போட்டோ... ஹி ஹி ஆர்வக்கோளாறு...

//


இதுவும் !!!

இராம்/Raam said...

//இப்பிடி ஒரு பயணத்தையே ஒரே பதிவுல சொல்லீட்டியே :) நல்ல பயணமாத்தான் இருக்கனும்.//

ஜிரா,

பயணம் நல்லாயிருந்தது....

//வயநாடு எனக்கும் மிகவும் பிடித்தமான சுற்றுலாத் தலம். செம்பரா பீக் போகலை போல. அது டிரெக்கிங் எடம். தேயிலைத் தோட்டம் வழியா மேல ஏறனும். ஏறி எறங்குறதுக்குள்ள தாவு தீந்துரும்.//

செம்பரா'வுக்கு போகலமின்னு பிளான் இருந்துச்சு... ஆனா போற எல்லாஇடத்திலேயும் பட்டறைய போட்டு லேட்டாக்கி கடைசியா 3 -4 இடந்தான் பார்க்க முடிஞ்சது.... :(


//சூச்சிப்பாறா அருவிக்கு நானும் போயிருக்கேன். நல்ல இயற்கையழகோட இருக்கும்.//

ம்ம்... அட்டகாசமான இடம்... :)

//எடக்கல் போனதில்லை. அந்தக் கொகை வாசலைப் போட்டோ பிடிச்சிருக்கலாம்ல :)//

போட்டாச்சு பாருங்க... :)

//காமிராச் சித்தர் சிவியார் பாடம் எடுத்ததாலதானோ என்னவோ..ஒவ்வொரு படமும் நச்சுன்னு இருக்கு.//

குருவோட வழிகாட்டுதலின் படியே எல்லாமே இதெல்லாம்... :))


//வெட்டிப்பயல் said...

photos super :-))//

டாங்கீஸ்'ப்பா...


//எல்லாத்தையுமனா??//

சீக்கிரமே அதையும் விளக்கி போஸ்ட் போடுறேன்... :)

//படங்கள் எல்லாம் பட்டைய கிளப்புது!!//

குருவே,

எல்லாம் உங்களோட ஆசிர்வாதத்தினாலே தான்... :)

//சீக்கிரமே உங்கள் ஆணிகள் நிலவரம் சீரடைந்து,இதேபோல பல பதிவுகள் போட்டு கலக்க வாழ்த்துக்கள்!! :-)//

வளரே நன்னி... :)

இராம்/Raam said...

/கோபிநாத் said...

தலைமறைவுக்கு இது தான் காரணமா!?//

ஹி ஹி போனது ரெண்டு நாளுதாய்யா.... :)

// மாப்பி படங்கள் எல்லாம் என்னால பார்க்க முடியல..;((//

கோபி,

உன்னோட கம்ப்யூட்டரிலே Firefox browser இன்ஸ்டால் பண்ணியிருந்தா, இந்த Plug-in உபயோகப்படுத்தி பாருப்பா.... எதுவும் உதவி வேணுமின்னா சொல்லு, செஞ்சுறலாம்... :)

//புகைப்படங்கள் அருமை.//

அரைபிளேடு'ங்கண்ணா ரொம்ப நன்றிங்கண்ணா... :)

திவ்யா,

வளரே நன்னி... :)

இராம்/Raam said...

முத்துக்கா,

சிங் இன் த ரெயினை தவிர நமக்கு தெரிஞ்ச வேற இங்கிலிபிசு பாட்டு என்ன இருக்கு?? :)

மின்னலு,

அந்த Firefox plug-in யூஸ் பண்ணிட்டு சொல்லுங்கய்யா... :)

//
அதனால 2 5 படம் நல்லா வந்த்துருக்கு :)//

என்ன நக்கலு.... :))

விழியன் said...

படங்கள் நல்லா வந்திருக்கு.

இதே இடங்களுக்கு நாங்களும் சென்று வந்தோம்.

பயணங்கள் தொடரட்டும்.

பாச மலர் / Paasa Malar said...

படங்கள் நல்லாருக்கு..அதுவும் அந்த சூரியன்..

இராம்/Raam said...

//விழியன் said...

படங்கள் நல்லா வந்திருக்கு.

இதே இடங்களுக்கு நாங்களும் சென்று வந்தோம்.

பயணங்கள் தொடரட்டும்.//


நன்றி விழியன்... :)


// பாச மலர் said...

படங்கள் நல்லாருக்கு..அதுவும் அந்த சூரியன்.//


நன்றிக்கா.... :)

சேதுக்கரசி said...

நல்லா இருக்கு இராம்!