Tuesday, February 5, 2008

எந்த பறவை எழுதியிருக்கும் இந்த கடிதத்தை?

நான்கு நாட்கள் வெளியூருக்குப் போய்விட்டு வந்தால், வீட்டில் எட்டுக் கடிதங்களாவது வந்திருக்கும். தொட்டிலில் கிடக்கிற பிள்ளையைக்கூட அப்புறம்தான் பார்க்கத் தோன்றும். பிரயாண அலுப்பு மாறாத முகமும், கசங்கினஉடைகளுமாக ஒவ்வொரு கடிதத்தையும் வாசிக்க வாசிக்க, விலாப்புறத்தில் மட்டுமல்ல... உடம்பு முழுவதும் சிறகுகளாக முளைத்திருக்கும்.

இரண்டு வாரத்துக்கு முன்னர் வெளிவந்த ஆனந்தவிகடனில் வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி எழுதிய அகமும்புறத்தின் தொடக்க வரிகள் இவை. இந்த இரண்டு வரிகள் நம்முடைய தகவல் பரிமாற்றத்தின் அழகியலை தொலைத்து போன வெறுமை மனதிற்குள் மெல்லமாய் படர்கின்றது.


Success in sight....

தினசரி வழக்கமாகிவிட்டது
தபால் பெட்டியைத் திறந்து
பார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.

இரண்டு நாட்களாகவே
எந்த கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.

இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்.

எந்த பறவை எழுதியிருக்கும்
இந்த கடிதத்தை?

-வண்ணதாசன்

இந்த கவிதை படிச்சதும் என்னை என்னோமோ பண்ணிச்சு... இளமைப்பருவத்தில் என்னுடைய தம்பி எங்கள் சித்தப்பா வீட்டில் வளர்க்கப்பட்டான். அவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் இவனைதான் எட்டாம் வகுப்பு படிப்பு வரை வளர்ந்தார்கள். அதன்பின்னர் நானும் என்னுடய அக்கா எங்கம்மா எல்லாரும் அடம்பிடித்து எங்களுடைய வீட்டிலே கொண்டுவந்தோம். மூன்று வயதிலே இருந்து எங்களை விட்டு போன அவனை பெரும்பாலும் பார்ப்பது தீபாவளிக்கும், முழு ஆண்டு விடுமுறையிலும் தான். தீபாவளி வரும் மாதத்திற்கு முன் மாதம் முதலில் எங்களுடைய ஆரம்பிக்கும் அந்த செயின் லெட்டர்ஸ் பரிமாற்றங்கள். முதலில் அவந்தான் சித்தப்பா எழுதும் கடிதத்தில் கடைசியில் அழகான தன்னோட கையெழுத்திலே ராமூர்த்தீ இந்த தீவாளிக்கு நாமே நூறு வாலா ரெண்டு வாங்கி நீ ஒன்னு நா ஒன்னு வைக்கலாமின்னு எழுதுவான். அதுக்கப்புறம் சித்தப்பா எழுதியதுக்கு அப்பா எழுதும் பதில் லெட்டரிலே நானும் எங்கக்காவும் கொஞ்சமும் எழுதுவோம். எங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பேனா உபயோகப்படுத்தக்கூடாது என்பதினால் பென்சிலில்தான் எழுதுவது. அப்பா பதில் எழுதிவிட்டு இந்தாடா நீயும் எழுதிட்டு போஸ்ட் பண்ணிருன்னு கொடுப்பாரு. அதை வாங்கியதும் எனக்கும் எங்க அக்காவுக்கும் முதலில் சண்டை வரும், யாரு முதலிலே எழுதுறதுன்னு! ஒரு வழியா சமதானம் ஆகி யாராவது எழுத ஆரம்பிப்போம். அதிலே நானாவது என்னோட அக்காவது போன வாரம் பெரிய சண்டை வந்து நான் அவளை அடிச்சிட்டேன்னு நானோ இல்ல என்னோட அக்கா அவனை அடிச்சிட்டேன்னு எழுதாமே அந்த லெட்டரை முடிப்பது இல்லை. சிலசமயங்களிலே எங்கப்பா அதை படிச்சிட்டு சிரிச்சிட்டே பசங்களா என்ன என்னா'டா இன்னமும் எழுத பாக்கி இருக்கு'ன்னு கேட்பாரு? அப்போல்லாம் ஒன்னுமே புரியாது. இப்போதான் நிறைய புரியுது...

இதேமாதிரி எங்க அப்பத்தா சித்தப்பா வீட்டிலே இருந்தா எங்களுக்கு லெட்டர் எழுதுனுமின்னா என்னோட தம்பிதான் எழுதி தருவான். அப்பத்தா'வுக்கு எழுதப்படிக்க தெரியாது. அதுனாலே அவங்க சொல்ல சொல்ல அவன் எழுதுவான். சில சமயங்களிலே பஸ்ஸிலே பிராயணம் பண்ணினது அப்புறம் அங்க ஆஸ்பத்திரிக்கு போயி டாக்டரை பார்த்ததுன்னு என்னத்தாயவது அப்பத்தா சொல்லும். இவனும் அதெய்யல்லாம் கேட்டு அப்பிடியே எழுதிட்டு கிழே சின்ன சின்ன கமெண்ட்ஸ் எல்லாம் போடுவான். அதை படிக்கிறப்போ நாங்க விழுந்து விழுந்து சிரிப்போம். அந்த லெட்டருக்கு நானும் எங்க அக்காவும் ரீப்ளை பண்ணுறோப்போ அதை மாதிரிதான் கமெண்ட் எல்லாம் போட்டு எழுதுவோம். அந்த கடிதங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை நைட் வர மகாபாரதம், இராமயாணம் தொடரை பற்றிதான் இருக்கும். அப்பத்தா எங்க வீட்டுலே இருந்தா நானு,அக்கா எல்லாரும் சேர்ந்துதான் பார்ப்போம். அப்போ நீயூஸ்பேப்பரிலே அந்த தொடருகளோட தமிழ் வசனம் வரும். அதை படிச்சிக்கிட்டே அந்த தொடர் பார்க்கிறது அப்பிடியொரு சுவராசியமா இருக்கும், அப்பத்தா ஊருக்கு போயிட்டா இதை படிச்சி சொன்னியா, அவரு அம்பு விடுறோப்போ இந்த வசனத்தை அப்பத்தா'கிட்டே சரியா சொன்னீயான்னு லெட்டரிலே எழுதுவோம். இன்னும் என்னோம்மோ இருக்கு. இப்போ டைப் பண்ணதான் முடியல.

இப்போல்லாம் எழுதறதோ இல்லை அந்த இண்லாண்ட் லெட்டரை பொறுமையா மடிச்சு ஒட்டுறதுக்கெல்லாம் முடியுமான்னு தெரியலை. படிப்புக்கப்புறம் இப்பவும் நாங்க வெளியூருலேதான் இருக்கோம். இன்னமும் கடிதப்போக்குவரத்து நடக்குது. அது என்ன வீட்டுக்கு அனுப்பவேண்டிய பணத்துக்கு உண்டான செக், அதை போஸ்ட் இல்ல கொரியர் அனுப்பிட்டு உடனே மொபலிலே அவனுக்கு கால் பண்ணி லெட்டர் வந்ததும் எனக்கு உடனே போன் பண்ணுன்னு வைச்சிரதுதான்..... :(

25 comments:

said...

மீ தி ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்.....

said...

ஹீரோ ஹீரோயின் டயலோக் சூப்பர்.


ஓ.. இதுல ஹீரோ ஹீரொயின் இல்லையா?இருங்க பதிவு படிச்சுட்டு வாரேன். :-)

said...

ம்ம்.. அதுவும் ஒரு காலம்தான்.. ஆனா, இப்போ லெட்டர் எழுதுனா, அந்த லெட்டர் போய் சேர்ந்துடுச்சான்னு கேட்கவே 3-4 தடவை கால் பண்ணிடுவோம்.. அதுக்கு நேரா கால் பண்ணி "எப்படிடா இருக்கே? என்ன விஷயம்"ன்னு போன்லேயே கேட்கிறது பெட்டர்ன்னு சொல்ற அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்த்டுச்சு..

good post. :-)

said...

ஹ்ம்ம்...அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே!! எத்தனை எத்தனை நினைவுகள்..ம்ம்

said...

ம்.

காலங்கள் மாறும் பொழுது இதெல்லாம் நடக்குறதுதான். அண்ணன் தம்பிகளோட நிதம் ரெண்டு நிமிஷமாவது சேட் பண்ணிடறோமோ. இதெல்லாம் அப்போ செஞ்சோமா என்ன?

Move on guys!!

said...

Nalla irundhadhu ennayum unga veetuku kootikittu pona madhiri oru feeling. Kalappai illa so englipiece la commenturen

said...

முந்தியெல்லாம் லெட்டர் எழுதுறப்போ வழக்கமா எல்லாரும் எழுதுறாப்புல எழுதப் பிடிக்காது. அதுனால விதவிதமான முறைகள்ள எழுதுவேன். ஒருவாட்டி சுத்திச் சுத்தி எழுதி படிக்கிறவங்க லெட்டரச் சுத்திச் சுத்திப் படிக்க வேண்டியதாப் போச்சு. இப்ப இமெயில், சாட்டிங், ஃபோன்னு இருக்கே. எல்லாம் சரிதான். போறது போறதும்..வர்ரது வர்ரதும்.

said...

\இப்போல்லாம் எழுதறதோ இல்லை அந்த இண்லாண்ட் லெட்டரை பொறுமையா மடிச்சு ஒட்டுறதுக்கெல்லாம் முடியுமான்னு தெரியலை. படிப்புக்கப்புறம் இப்பவும் நாங்க வெளியூருலேதான் இருக்கோம். இன்னமும் கடிதப்போக்குவரத்து நடக்குது. அது என்ன வீட்டுக்கு அனுப்பவேண்டிய பணத்துக்கு உண்டான செக், அதை போஸ்ட் இல்ல கொரியர் அனுப்பிட்டு உடனே மொபலிலே அவனுக்கு கால் பண்ணி லெட்டர் வந்ததும் எனக்கு உடனே போன் பண்ணுன்னு வைச்சிரதுதான்..... :(\\

;((

அழகான நினைவுகள்..

said...

ஆமாம்...போன் பேச்சிலேயே முடிந்துவிடுகிறது எல்லாம் இப்போது...கடிதம் எழுதி..வரும் கடிதங்கள் படித்து..அதெல்லாம் ஒரு காலம்...

said...

எனக்கும் பழைய நினைவுகள் வந்தன உங்கள் எழுத்தை படித்தவுடன். எழுதுவதே குறைந்துவிட்டது. முழுமையாய் இரண்டு பக்கங்கள் எழுதி வருடங்கள் பல ஆகிவிட்டன. 2000 ம் ஆண்டுக்கு பிறகு கடித போக்குவரத்து மிகவும் குறைந்துவிட்டது.

said...

ஆகா.. நல்லா எழுதி இருக்கீங்க ராம்..

பதிவு படிச்சிட்டு .. ஆமால்லா நாம ளும் எப்படி எல்லாம் தாத்தா ஆச்சிக்கு லெட்டர் எழுதி இருக்கோம்,அப்பா எழுதும் போது கீழே.. கொஞ்சமா கிறுக்க்லா கோணல் வரிகளா.. என் பொண்ணை க்கூட ஆரம்பத்துல அம்மா அப்பாக்கு எழுதும் லெட்டர் ல.. ஹை ஹவ் ஆர் யூன்னு எழுத சொல்லிக்குடுத்தேன்.. இப்ப எல்லாம், வாங்க ஸ்கைப்ல.. நேரா பேரன் பேத்தி விளையாடறத பாத்துட்டு அப்படியே எ ன்ன ஒழுங்கா சமைச்சியா வரைக்கும் பேசிடலாம்ன்னு கூப்பிட்டுடறது தான்.. ஹ்ம்.. அந்தக்காலம் அந்தக்காலம் தான்..
ஆனா இந்தக்காலம் இந்தக்காலம் தானே..

said...

MM2,

வளரே நன்னி,

KTM,

ஒன்னோட கொசுவத்தி சுருளையும் சுத்து ராசா... :)

said...

கொத்ஸ்,

என்ன பண்ணுறது..... இந்த வீணாப்போன பொழப்பு பொழக்கிறதிலே எல்லாமே போயி தொலைச்சிருச்சு... :((


ஸ்ரீ,

நன்னி...

said...

ராம்,
நல்லா சொல்லி இருக்கிங்க, ஆனா இந்த கடிதம் எழுதும் வழக்கம்லாம் இன்னும் தொலைஞ்சு போகலை , கம்பியூட்டர் கந்தசாமிகளாக மாறிப்போன நமக்கு தான் அப்படித்தெரியுது, ஊர்ப்பக்கம்லாம் போனா ஒரு கடிதத்திற்காக , போஸ்ட்மேன் வரவை எதிர் நோக்கும் மனிதர்கள் ஏராளம் இருக்காங்க.

அதுவும் சமீபத்தில் கிராம பக்கம் போனப்போது பார்த்தது(முன்னரே இப்படித்தான் இருந்து இருக்கு சின்னவயதில் இதை எல்லாம் கவனிக்கலை), அந்த ஊரில் போஸ்ட்மேன் ஊருக்குள் போகாமல் அங்கே இருக்கும் டீக்கடை/பொட்டிக்கடையில் உட்கார்ந்துக்கொள்கிறார், அவர் அங்கே ஒரு மணி நேரம் இருப்பார் போல அதுக்குள்ள கடிதம் வந்திருக்கானு மக்கள் போய்க்கேட்டு வாங்கிக்கணுமாம் :-))அப்படி வராமல் போனவர்கள் கடிதம் அந்த கடையில் கொடுத்துட்டு போய்டுவார் பிறகு வாங்கிக்கொள்ளவேண்டுமாம்.அதுவும் தினசரிலாம் தபால்காரர் வருவார்னு சொல்ல முடியாது. இப்படிலாம் நம்ம நாட்டில இருக்கும் போது, நம்மை போல கணினி அலைப்பேசினு வாழும் நாம் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள் தான்!

அவர்களுக்குலாம் கணினி, அலைப்பேசி எல்லாம் வர இன்னும் காலம் ஆகும்! ஆனால் அதுவரைக்கும் இப்படி அவர்கள் புலம்பமாட்டார்களாக்கும்!

said...

//இப்ப இமெயில், சாட்டிங், ஃபோன்னு இருக்கே.//

ஜிரா,

என்னத்தான் இருந்தாலும் பழைய காலண்டர் அட்டைய எடுத்து வைச்சிட்டு இந்த லெட்டரை அதுமேலே வைச்சி 'அன்புள்ள.. நான் இங்கு அனைவரும் நலம், அங்கு அனைவரும் நலமறிய ஆவல்'ன்னு எழுதிட்டு அப்புறம் என்ன எழுதுறதுன்னு பேனாவை வாயிலே வைச்சி கடிச்சிட்டு யோசிக்கிறது அழகான அனுபவம் இல்லையா??? :))

நாமே அந்த பழக்கத்தை தொலைச்சிட்டோமா? இல்ல கணினி உலகம் நம்மக்கிட்டேயிருந்து அதை பிடுங்கியிருச்சா??? :(

//அழகான நினைவுகள்..//

கோபி,

நன்னி... :)

said...

//ஆமாம்...போன் பேச்சிலேயே முடிந்துவிடுகிறது எல்லாம் இப்போது...கடிதம் எழுதி..வரும் கடிதங்கள் படித்து..அதெல்லாம் ஒரு காலம்...//

மலர் அக்கா,

அதே அதே... :(

/முழுமையாய் இரண்டு பக்கங்கள் எழுதி வருடங்கள் பல ஆகிவிட்டன. 2000 ம் ஆண்டுக்கு பிறகு கடித போக்குவரத்து மிகவும் குறைந்துவிட்டது.//

பிரேம்ஜி,

எனக்குதான்.... :(

ஒன் ஸ்மால் டவுட்... நீங்கதான் ஆசிம் பிரேம்ஜி'ஆ?? :))

said...

/பதிவு படிச்சிட்டு .. ஆமால்லா நாம ளும் எப்படி எல்லாம் தாத்தா ஆச்சிக்கு லெட்டர் எழுதி இருக்கோம்,அப்பா எழுதும் போது கீழே.. கொஞ்சமா கிறுக்க்லா கோணல் வரிகளா.. //

முத்துக்கா,

அதெல்லாம் இப்போ ஃபிளாஷ்பேக்'லே தான் நினைச்சி பார்க்க வேண்டியதா இருக்கு..... ஹி ஹி கருப்பு-வெள்ளை படமாதான் மனசுக்குள்ளே ஓடுது.. :)

//என் பொண்ணை க்கூட ஆரம்பத்துல அம்மா அப்பாக்கு எழுதும் லெட்டர் ல.. ஹை ஹவ் ஆர் யூன்னு எழுத சொல்லிக்குடுத்தேன்.. இப்ப எல்லாம், வாங்க ஸ்கைப்ல.. நேரா பேரன் பேத்தி விளையாடறத பாத்துட்டு அப்படியே எ ன்ன ஒழுங்கா சமைச்சியா வரைக்கும் பேசிடலாம்ன்னு கூப்பிட்டுடறது தான்.. ஹ்ம்.. அந்தக்காலம் அந்தக்காலம் தான்..
ஆனா இந்தக்காலம் இந்தக்காலம் தானே..//

என்னத்தான் டெக்னாலாஜி வளர்ந்துட்டாலும் லெட்டர் எழுதுறதொரு தனி சுகம்... :)

said...

//ராம்,
நல்லா சொல்லி இருக்கிங்க, ஆனா இந்த கடிதம் எழுதும் வழக்கம்லாம் இன்னும் தொலைஞ்சு போகலை , கம்பியூட்டர் கந்தசாமிகளாக மாறிப்போன நமக்கு தான் அப்படித்தெரியுது, ஊர்ப்பக்கம்லாம் போனா ஒரு கடிதத்திற்காக , போஸ்ட்மேன் வரவை எதிர் நோக்கும் மனிதர்கள் ஏராளம் இருக்காங்க.//


வவ்வால்,

வாங்க..வாங்க... அது என்னம்மோ உண்மைதான்... எங்க கிராமத்துக்கெல்லாம் போன இன்னமும் கடுதாசியெல்லாம் போடமாட்டியாப்பே கேட்கிற பெருசுக இருக்கதான் செய்யுறாங்க.... :)

//அதுவும் சமீபத்தில் கிராம பக்கம் போனப்போது பார்த்தது(முன்னரே இப்படித்தான் இருந்து இருக்கு சின்னவயதில் இதை எல்லாம் கவனிக்கலை), அந்த ஊரில் போஸ்ட்மேன் ஊருக்குள் போகாமல் அங்கே இருக்கும் டீக்கடை/பொட்டிக்கடையில் உட்கார்ந்துக்கொள்கிறார், அவர் அங்கே ஒரு மணி நேரம் இருப்பார் போல அதுக்குள்ள கடிதம் வந்திருக்கானு மக்கள் போய்க்கேட்டு வாங்கிக்கணுமாம் :-))அப்படி வராமல் போனவர்கள் கடிதம் அந்த கடையில் கொடுத்துட்டு போய்டுவார் பிறகு வாங்கிக்கொள்ளவேண்டுமாம்.அதுவும் தினசரிலாம் தபால்காரர் வருவார்னு சொல்ல முடியாது. இப்படிலாம் நம்ம நாட்டில இருக்கும் போது, நம்மை போல கணினி அலைப்பேசினு வாழும் நாம் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள் தான்!//

உண்மைதான்...... அந்த லெட்டரை மெதுவாக கிழிச்சி வழக்கமான விசாரிப்புகளை எல்லாம் முடிச்சிட்டு விசயத்துக்கு வர்றப்போ எப்பிடியொரு த்ரில் இருக்கும்.... :) என்னதான் இருந்தாலும் அதொரு தனியான சுகமான அனுபவம்தான்... :)

//அவர்களுக்குலாம் கணினி, அலைப்பேசி எல்லாம் வர இன்னும் காலம் ஆகும்! ஆனால் அதுவரைக்கும் இப்படி அவர்கள் புலம்பமாட்டார்களாக்கும்!//

உண்மைதான்.... ஆனா சில இடங்களிலே இந்த குட்டிச்சாத்தான் தொல்லை வந்துருச்சே.... :))

said...

Excellent :))))

said...

கல்யாண்ஜியின் சிறந்த ஒரு கவிதையை போட்டு கூடவே உங்களின் இனிமையான இளமைக்கால நிகழ்வுகளையும் சுவையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

இன்லண்ட், கார்டுகள் பயன்படுத்து ஒரு மாமங்கம் ஆகிவிட்டது.

பின்குறிப்பு: நண்பர் குசும்பன் சொல்லி உங்கள் பதிவுக்கு இன்று வரக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நன்றி நண்பா.

said...

சூப்பரா எழுதி இருக்கீங்க தல!

said...

ரெட்பயரு,

வளரே நன்னி..... Tag எழுதியாச்சா???


//கல்யாண்ஜியின் சிறந்த ஒரு கவிதையை போட்டு கூடவே உங்களின் இனிமையான இளமைக்கால நிகழ்வுகளையும் சுவையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.//

மஞ்சூர் ராசா,

நன்றி நன்றி நன்றி... :)

குசும்பன்,

நன்னி.. :)

said...

ராம் பதிவுதானா இது பீல் இல்லாம் குடுக்கிறாருப்பா...

said...

என்ன இருந்தாலும் கைப்பட எழுதிய கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் தருகிற உணர்வு மற்றய எதிலும் கிடைப்பதில்லை என்பது என் கருத்துங்கோ....

said...

ராம் இது நான் முதல் முறையாக பின்னூட்டம் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன் அதுவும் மிக அழகான ஒரு பதிவில்
பழைய நினைவுகள் எப்பொழுதும் சுகமானவைதானே...