Friday, July 14, 2006

அடடே வாங்க.. வாங்க.... (பாகம்-1)

எதாவது புது விசயம் சொல்லிருப்பேன் நினைச்சு வந்திருந்திங்கனா என்னை மன்னிச்சுருங்க.இந்த மாதிரி எல்லாம் எழுதலாமுனு முடிவுக்கு வந்ததே லக்கிலுக் பதிவு பார்த்துத்தான்.மனுசன் ஒரு நாளைக்கி ரெண்டு பதிவு கணக்கப்போட்டுறார்.அனோகமா ஏதோ சாப்ட்வேர் கம்பெனியில் கஷ்டமான வேலை பாப்பார் போலிருக்கு.அதான் மச்சிக்கு நிறைய நேரம் கிடைக்கிது.நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.உருப்படியில்லாத ஒவ்வொரு விசயமா உருப்படியா பதிவேத்திறதுனு.

அப்பா சாமிகளா நான் எந்த இடத்திலேயும் லக்கிலுக் உருப்படியா ஒன்னும் எழுதவேல்லைனு சொல்லலை.கலகத்த மூட்டிவிட்டு கம்முன்னு கப்பளா கட்டைய கக்கத்தில் வெச்சிக்கிட்டு போயிறாதிங்க....

விசயத்துக்கு வர்றேன்.என்னானு நீங்களை படியுங்களேன். நான் அஞ்சாவது படிச்சப்போ எங்க சித்தாப்பா பைக் ஒன்னு எங்கள் குடும்ப நண்பரிடம் இருந்து வாங்கினார்.அப்போ என் சித்தாப்பா இந்த வண்டி எண் கூட்டுத்தொகை 8 வரலை அதானல கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னார்.என்னா கூட்டுத்தொகை என்னானு எனக்கு ஒரே குழப்பம்.குடும்பநண்பர் அவர்களே எனக்கு விளக்கமளித்தார்.அன்னக்கி பிடித்தது ஒரு வியாதி எந்த பைக் இல்ல காரு எந்த நம்பர் போர்டு இருந்தாலும் அதோட எண்களை கூட்டுத்தொகை பார்க்கிறது.எவ்வளவு அவசர வேலையில் வெளியே போனாலும் சரி இந்த பழக்கம் போக மாட்டேன்னு உயிரை வாங்குது.
ஒரு தடவை நானும் என் பிரண்டும் பைக்கில் சென்று வரும் போது இன்னொரு பைக் மோதி விழுந்தப்போ கூட அந்த இடிச்ச பைக்கோட எண்ணை கூட்டிப்பார்த்தேன்.இங்கே பெங்களுரு வந்ததுக்குப்பறம் அந்த கரும்மாத்தரம் ரொம்ப தான் வளர்ந்துப்போச்சு.ஏன்னா கொஞ்சநஞ்சமா வண்டிவாகனங்களிருக்கு இங்கே.

நானும் எவ்வளவோ மைண்ட் டைவர்ட் பண்ணிப்பார்த்துட்டேன்.ஹீகூம் ஒன்னும் முன்னேற்றத்த காணோம்.ஒரு தடவை டாக்டர்கிட்டே போனப்பே இதை பத்தி கேட்டேன்.அவரு போட்டார் ஒரு குண்டை.என்னனா அது ஒரு மனவியாதியாம்.அதுக்கு பேரு வேற என்னாமோ போபியான்னு சொன்னார்.அது இருந்தா இப்படிதானாம் பைசாக்கு லாயிக்கில்லாத வேலை எல்லாம் பார்க்கச்சொல்லுமாம். அதிலிருந்து எனக்கு மட்டும்தான் கடவுள் அருள் கொடுத்திருக்காரா இல்லை மத்தவங்களுக்கும் இருக்கானு ஒரு சந்தேகம்.இப்போ தீர்ந்துப்போச்சு ஏன்னா இனம் இனத்தோட சேருமுனு எங்கூரு சொலவாடை சொல்லுவாங்க.நல்ல வேளை உங்களுக்கும் அந்த போபியா இருக்கும் போல அதுதான் இதே முழுசா படிச்சிக்கிட்டு இருந்திங்க இல்ல........!!!!!!!!

இது பாகம் ஒன்னுதான்.இன்னும் நிறைய இருக்கு, ஒவ்வொண்ணா எழுதுறேன், வந்து படிங்க...நமக்கு நாமே அதரவு குடுத்தா தான் உண்டு....!

எப்போ தான் தீருமோ இந்த வியாதி நமக்கெல்லாம்..... :-)))))

(பி.கு:- குடும்பநண்பர் யார் எனில் மாண்புமிகு தவத்திரு குன்றக்குடி பொன்னாம்பல அடிகளார்.இது நடந்து 15 வருடங்களாகின்றன.இன்னமும் என் முழு பெயரையும் நினைவில் வைத்து அழைப்பார்.அவருடைய இளமை வயதிலேயே தமிழ்ப்பற்று மற்றும் பேச்சாற்றல் அருமையானது இன்னமும் கூட.என்னுடைய சிறிய வயதில் ஒரு அருமையான தாக்கத்தை ஏற்படித்திய நபர்களில் அடிகளார் முதன்மையானவர்.மேலும் அவருடைய தகவல்களை அடிகளாரின் அனுமதிப்பெற்று ஒரு பதிவிடுகிறேன்.)

14 comments:

said...

பின்னூட்ட கயமை எதுவும் செய்யாதீர்கள். விவரங்களை blogcommentsvigilance.blogspot.comல் காணவும்

said...

நான் லக்கியிடம் மாட்டிக்கிட்டேன்...உங்களிடம் அவர் மாட்டிக்கிட்டாரா ? அவர் வேலைபார்ப்பது அட்வர்டைசிங் நிறுவனம்....சாட்டிங்கில் வந்தாலும் அஞ்சு நிமிடத்தில் வேலை இருக்கு என்று பறந்திடுவார்...

:))

said...

//பின்னூட்ட கயமை எதுவும் செய்யாதீர்கள்.//

சரிங்க போலிஸ்கார்... நான் எதுவும் தப்புப்பண்ணேலே இதுவரைக்கும்.இனிமே அது....

//நான் லக்கியிடம் மாட்டிக்கிட்டேன்...உங்களிடம் அவர் மாட்டிக்கிட்டாரா ? //

எங்க மாட்டிக்கிட்டார்...ஆளாவே காணாம்.

said...

நைனா ஒரு வணக்கம் வச்சுக்கறென்....

said...

//அனோகமா ஏதோ சாப்ட்வேர் கம்பெனியில் கஷ்டமான வேலை பாப்பார் போலிருக்கு.அதான் மச்சிக்கு நிறைய நேரம் கிடைக்கிது.//
//நான் எந்த இடத்திலேயும் லக்கிலுக் உருப்படியா ஒன்னும் எழுதவேல்லைனு சொல்லலை.//
ராம் இத தான் உள்குத்துனு சொல்லுவாங்க. சரியா செஞ்சு இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

நமக்கும் இந்த பழக்கம் உண்டு. வண்டிய பாத்தா மட்டும் இல்ல, போன் நம்பர், தங்குற ரூம் நம்பர், ரயில், பஸ், பிளேன் சீட் நம்பர் எல்லாத்துலையும், 8 வராத மாதிரி பார்த்துக் கொள்ளவேன் பெரும்பாலும், வந்தாலும் அவ்வளவாக கவலைப்பட மாட்டேன்.

அப்பறம் ஒரு விசயம், நம்ம R.T.O. வில் கூட்டுத் தொகை எட்டு வருவது மாதிரி நம்பர் தர மாட்டார்கள். நீங்களாக கேட்டால் மட்டும் தான் தருவார்கள்.

said...

//நைனா ஒரு வணக்கம் வச்சுக்கறென்.... //

வா லக்கிமச்சி நம்மக்கிட்டே ஒதுங்க இம்முட்டு நேரமா...

//சாட்டிங்கில் வந்தாலும் அஞ்சு நிமிடத்தில் வேலை இருக்கு என்று பறந்திடுவார்...//

ரவி சொன்னதாலாம் உண்மையா,நம்பவே முடியலே...
:-)))

said...

//ராம் இத தான் உள்குத்துனு சொல்லுவாங்க. சரியா செஞ்சு இருக்கீங்க. வாழ்த்துக்கள்.//

சிவா உங்களுக்கு கப்ளாக்கட்டை மேட்டர் புரியலையா....?

said...

//உங்களுக்கும் அந்த போபியா இருக்கும் போல அதுதான் இதே முழுசா படிச்சிக்கிட்டு இருந்திங்க இல்ல........!!!!!!!!///

பொழுது போகலையேனு முழுசா படிச்சா அதுக்காக படிக்கறவங்களுக்கும் போபியா இருக்குங்கறீங்களே. :)

said...

//பொழுது போகலையேனு முழுசா படிச்சா அதுக்காக படிக்கறவங்களுக்கும் போபியா இருக்குங்கறீங்களே. :) //

அனுசுயா நான் அப்படியல்லாம் உங்களை சொல்லுவேனா.சும்மா இந்த மாதிரி வெட்டியா சல்லிக்காசு பெறாத விசயங்களை எழுதமுனு நினைச்சு பதிவேத்தினேன் அவ்வளவுதான்.இன்னுமும் வரிசையா வரும்.ஆனா அனுசுயா நீங்க நல்லவங்கனு நினைக்கிறேன்.அதுதான் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தவுடனே கேள்வி கேட்டுடிங்க.... :-))))))

said...

//சிவா உங்களுக்கு கப்ளாக்கட்டை மேட்டர் புரியலையா....? //
புரியலையம்மா!!!!!!!

said...

சிவா அப்படின்னா நாரதர் வச்சிருக்கிற கட்டை அது.அதான் உங்கிட்டே மட்டும் கேட்டேன்.எதோ இன்னோரு உள்குத்து அதுவும் நாகை சிவாக்கு....

said...

அடடா, இப்படி ஒரு நல்ல பெயரா நமக்கு. சரி பரவாயில்ல விடு. ஆசையா கொடுக்குற வேண்டாம் சொன்ன மனசு வருத்த படுவ...
நாரதர் கலகம் எப்பவும் நன்மையில் தான் முடியும்.
ரவிய பாரு, உன் பதிவுக்கு தொடர்ந்து வரார். நன்றி சொல்லு மாமே

said...

Regarding Living Smile Vidhya post, cant able to see.
Check it again

said...

// நாரதர் கலகம் எப்பவும் நன்மையில் தான் முடியும்.ரவிய பாரு, உன் பதிவுக்கு தொடர்ந்து வரார். நன்றி சொல்லு மாமே //

டாங்கிஸ் மாமே....