Thursday, August 17, 2006

எஸ்.கே. அவர்களின் கவனத்திற்கு

திரு.எஸ்.கே ஐயா அவர்களுக்கு என்னுடைய முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய முந்தைய கவிதை பதிவில் பிழைகளை சுட்டிகாட்டியதற்கு. உங்களின் பெரிய மனது என்னை நிலைகுலைய வைக்குதய்யா. தாங்கள் எங்கே.. அற்பன் நான் எங்கே,
நீங்கள் வந்து என்னிடம் மன்னிப்பு என்ற வார்த்தையை உபயோகபடுத்தலாமா..?

நான் வெள்ளிக்கிழமை திருப்பதி போற அவசரத்தில எதையும் உருப்படியாக செய்யாமால் போய்விட்டேன். முதலில் பிரிவாற்றண்மை'னு தலைப்பு வச்சிட்டு அதுல கால் மிஸ்ஸாடுச்சின்னு கப்பி சொன்னவுடனே திரும்ப தலைப்பை மாற்றினேன்.

தரிசனம் முடிந்து சொந்த ஊர் மதுரைக்கு சென்றுவிட்டேன். அதன்பின் அதற்கு வந்த பின்னூட்டங்களை நான் பார்க்க முடியவில்லை. நீங்கள் இட்ட பின்னூட்டத்தை திங்கள்கிழமை அன்றே நான் பார்க்கநேரிட்டது. ஆனால் அந்த இடத்தில் Unicode எழுத்துகள் சரியாக தெரியவில்லை.ஒரு பின்னூட்டம் நீங்கள் இட்டது என்பதனால் படிக்கமாலயே பிரசுரித்தேன்.

புதனன்று ஆபிஸ் வந்து பார்த்தப்பதான் முழுவிபரங்களும் தெரிந்தது. தாங்களின் பரித்துரைகளை உடனே நிறைவேற்றி விட்டேன். முக்கியமான ஒன்றான தலைப்பை மாற்றவேண்டும் என்பதனால் தமிழ்மணத்தில் சென்று தலைப்பை மாற்றக்கோரி விண்ணப்பமிட்டேன். இதுவரையில் எனக்கு எதுவும் தகவல் வரவில்லை.

இவ்விளக்கங்கள் உங்களிடம் தனியாக சென்றடைய தாங்களின் மின்னஞ்சல் முகவரி என்னிடம் இல்லை. ஆகவே இதையே பதிவாக இடுகிறேன்.

வேல்தாங்கி அருள்பாலிக்கும்
என்னப்பன் முருகனின்
புகழ்பரப்பும் தாங்களின்
கரங்களை பற்றியெடுத்து
நன்றிதனை நவில்கிறேன்.
தாங்களின் இருப்பிடதிசை
நோக்கி மெய்நிகராய்.

11 comments:

said...

அன்பு திரு. ராம்,
மனித நேயத்தைக் காட்டும் உங்கள் பதிவு கண்டு மனமுவந்தேன்!
தவறெனில் தான் மன்னிக்கச் சொன்னேன்!
நீங்கள் இவ்வளவு நீண்ட விளக்கம் கொடுத்து, அதனைப் பதிவிலும் இட்டு உயர்ந்திருக்கிறீர்கள்!
நன்றி எனச் சொல்லுவது தவிர, வேறு சொற்கள் கிடைக்க வில்லை!

said...

//அன்பு திரு. ராம்,
மனித நேயத்தைக் காட்டும் உங்கள் பதிவு கண்டு மனமுவந்தேன்!
தவறெனில் தான் மன்னிக்கச் சொன்னேன்!//

அய்யா அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி.

//நீங்கள் இவ்வளவு நீண்ட விளக்கம் கொடுத்து, அதனைப் பதிவிலும் இட்டு உயர்ந்திருக்கிறீர்கள்!//

நன்றி அய்யா...

said...

மிக்க மகிழ்ச்சி!நண்பர் திரு.ராம் மற்றும் அண்பர் திரு.SK அவர்களே...

வாழ்க தமிழ்!

வளர்க!அடுத்தவர்களின் மேல் கொண்டுள்ள மரியாதையும், மனித நேயமும்,

உங்களிருவரின் "சக பதிவாளரை" மதிக்கும் பண்புக்கு ஒரு பெரிய ஓ..


அன்புடன்...
சரவணன்.

said...

இராமசந்திரமூர்த்தி. நானும் ஒரு பிழைதிருத்தம் சொல்லிக்கொள்கிறேன். :-) 'நன்றி அய்யா' என்பதை 'நன்றி ஐயா' என்று எழுதினால் மகிழ்வேன்.

சரி. சரி. என் பெயரைத் தலைப்பில் போட்டு தனியாக ஒரு பதிவெல்லாம் போடவேண்டாம். ஊர்ப்பாசத்திற்காக ஒரு பதில் பின்னூட்டம் போட்டால் போதும். :-)

said...

//மிக்க மகிழ்ச்சி!நண்பர் திரு.ராம் மற்றும் அண்பர் திரு.SK அவர்களே...

வாழ்க தமிழ்!

வளர்க!அடுத்தவர்களின் மேல் கொண்டுள்ள மரியாதையும், மனித நேயமும்,//

வாங்க சரவணன், மிக்க நன்றிகள் உரித்தகாட்டும் தாங்களின் மேன்மையான கருத்துக்கு...

//உங்களிருவரின் "சக பதிவாளரை" மதிக்கும் பண்புக்கு ஒரு பெரிய ஓ..//

:-))))


அன்புடன்...
சரவணன். //

said...

//இராமசந்திரமூர்த்தி. நானும் ஒரு பிழைதிருத்தம் சொல்லிக்கொள்கிறேன். :-) //

குமரன் ததா,

வாங்க எவ்வளவு நாளைச்சு நீங்க வந்து... நல்ல இருக்கிங்களா...

//'நன்றி அய்யா' என்பதை 'நன்றி ஐயா' என்று எழுதினால் மகிழ்வேன்.
//

மாற்றம் செய்து விட்டேன். பாருங்களேன்.

//சரி. சரி. என் பெயரைத் தலைப்பில் போட்டு தனியாக ஒரு பதிவெல்லாம் போடவேண்டாம். ஊர்ப்பாசத்திற்காக ஒரு பதில் பின்னூட்டம் போட்டால் போதும். :-) //

உங்களுக்கு ரொம்ப ஆசைதான்....
:-)))

said...

ராம்!
நானும் தான் உன் தவறை சுட்டிக் காட்டேனேன். என் பெயர விட்டுட்ட. எஸ்.கே. சொன்னா மட்டும் தான் கேட்பிய்யா.....
நாங்க எல்லாம் உனக்கு ஆட்களாக தெரியவில்லையா..... grrrrrrr.....

எஸ்.கே., எப்போதும் அப்படி தான். தவறாக பொருள் கொண்டு விடக்கூடாது என்பதற்க்காக மன்னிக்க சொன்னேன் போன்ற பெரிய வார்த்தைகளை எல்லாம் பயன் படுத்துவார். ஆனால் மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். நீ அவரை பத்தி தவறாக சொன்னால் கூட பொறுத்துக் கொள்ளும் பெரிய மனம் படைத்தவர்........

said...

//ராம்!
நானும் தான் உன் தவறை சுட்டிக் காட்டேனேன். என் பெயர விட்டுட்ட. எஸ்.கே. சொன்னா மட்டும் தான் கேட்பிய்யா.....//

புலி,
அடபாவி உனக்கே இது ஓவரா தெரியலே.. அவரு சொன்னதை அப்பிடியே ரீபிட்டு அடிச்சுபிட்டு பேச்சை பாரு... சின்னபிள்ளதனமா....:-)

//நாங்க எல்லாம் உனக்கு ஆட்களாக தெரியவில்லையா..... grrrrrrr.....//

ரொம்ப உருமாதே.... ஹெல்த்'கு ஆகாது

//எஸ்.கே., எப்போதும் அப்படி தான். தவறாக பொருள் கொண்டு விடக்கூடாது என்பதற்க்காக மன்னிக்க சொன்னேன் போன்ற பெரிய வார்த்தைகளை எல்லாம் பயன் படுத்துவார். //

அதான் பார்த்தேன் அவருடைய தயாளகுணத்தை...

//ஆனால் மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். நீ அவரை பத்தி தவறாக சொன்னால் கூட பொறுத்துக் கொள்ளும் பெரிய மனம் படைத்தவர்........ //

அடபாவி போறப்போக்குல என்னத்தையோ பத்தவச்சிட்டு போறமாதிரில இருக்கு....

said...

ஹே ராம் !

வைத்தியர் சாதாரண வைத்தியர் அல்ல
கட்டிப் புடி வைத்தியர் !

விடாதிங்க நன்றாக பிடித்துக் கொள்ளுங்கள் :)

said...

// ஹே ராம் !

வைத்தியர் சாதாரண வைத்தியர் அல்ல
கட்டிப் புடி வைத்தியர் !

விடாதிங்க நன்றாக பிடித்துக் கொள்ளுங்கள் :) //

வாங்க கோவி.கண்ணன்,

எஸ்.கே. சார் டாக்டர்'ஆ, எனக்கு தெரியாது, தகவலுக்கு நன்றி....:-)

இனி நிறைய பிடிச்சிக்க வேண்டியதுதான்...

said...

இதுதான்யா சான்றோர் நட்பு!