Friday, October 6, 2006

கல்யாணக் களை

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துச்சுங்க. அது என்னா கல்யாணக் களை கல்யாணக் களைன்னு சொல்லுறாய்ங்களே அப்பிடின்னா என்னான்னு, நாலஞ்சு பெருசுகளை கூப்பிட்டுக் கேட்டுப் பார்த்தேன். ஒன்னு எனக்கு ஆப்பு வக்கிற கணக்கா சரிப்பா உங்கப்பன்க்கிட்டே சொல்லி சிக்கிரம் கால்கட்டு போடச் சொல்லுறேன்னு சொன்னுச்சு. அட கெரகத்தே நமக்கு நாமே திட்டத்தின்படி ஆப்புவைச்சிக்கிற வேணாமின்னு தெரியமா கேட்டுட்டேன்னு சொல்லி ஓடியாத்திட்டேன். அப்புறம் நம்ம பட்டிக்காட்டு பெருசுக்கிட்டே கேட்டேன். அவரு அதுக்கு ஒரு புது விளக்கவுரை கொடுத்தாரு, என்னானா

"நல்லா விளைஞ்சு கிடைக்கிற வயக்காட்டுலே தேவையில்லமே இருக்கிற செடி,பதறுகளை தான் நாங்கெல்லாம் களைன்னு சொல்லுவோம், ஆனா கல்யாணக் களை'ன்னா உன்னைமாதிரி இளந்தாரி பயலுவெல்லாம் ஒனத்துக்கும் உதவாத களையா மாறிப்போயிடக் கூடாதுன்னு தாப்பா அப்பிடி சொல்லுறது"

அடபாவிங்களா ஒரு ஆளும் உருப்படியான விளக்கம் கொடுக்கமாட்டிங்களா, அப்பிடியே கொடுத்தாலும் நமக்கேதாய்யா ரிப்பிட்டுன்னு வருது. சரி என்னா பண்ணுறது சுயமாவே சிந்திச்சு நம்மகூடவே திரிஞ்ச நாலுப் பயப்புள்ளகளை கவனிச்சிப் பார்த்ததில்லே சின்ன க்ளு கிடைச்சது.

என்னோட கொலிக் ஒருத்தன் எப்பவும் சாயம் போன கலருலே ஒரு சட்டை அப்புறம் பேகிபேரல் பேண்ட்ன்னு தினமும் ஆபிஸ்க்கு வருவான். என்னாய்யா நீ எவ்வளவு பெரிய ஆளூ, நல்லா நாலு டிரெஸ் எடுத்து அதே போட்டுக்கிட்டு வரக்கூடாதா'ன்னா கேட்டா இந்த சட்டை என்னோட மொதல் செமஸ்டருலே எடுத்தது... இந்த பேண்ட்சர்ட் நான் +2 பாஸ் பண்ணினதுக்காக எங்க மாமா எடுத்து கொடுத்ததுன்னு லெக்சர் குடுப்பான்.அந்த லெக்சருக்கே பயந்தே எதுவுமே கேட்குறதில்லே. ஆனா இப்போ பயப்புள்ள கலரு கலரா டிரெஸ் போட்டுக்கிட்டு வர்றான். கூலிங்கிளாஸ், புது கேமரா செல்போன் வித் ஃப்ளுடூத்'ன்னு ஹைடெக்கா வேறே மாறிபோயிட்டான், சும்மாயிருக்க மாட்டாமே என்னாப்பா தீடீரென்னு மாறீட்டேன்னு கேட்டேன். அதுக்கு அவன் ஆமாம் என்னோட வுட்பீ'யோட கட்டளைங்கறான். இந்த மொபைல் அவங்க வாங்கி கொடுத்தது, அதிலே ஆட்இன் கார்டு போட்டு பேசிக்கிட்டு இருக்கோமில்லேன்னு உலகத்துக்கு தேவையான செய்தியே வேற சொன்னான்.

அடபாவி ஒரு செங்கல்கல்லு சைஸ் செல்'லே தூக்கிட்டு வெயிட்டான பார்ட்டியா இருந்தியே! என்னா ஆச்சுடா மக்கா உனக்கு??
பேசுங்கடா நல்லா பேசுங்க! செல்லுலே பேசியே செவிட்டு பயலா போயித் தொலைங்கடா...!

இன்னொரு பயப்புள்ள இவனும் என்கூடதான் குப்பை கொட்டுறான். இவனோட பேரே கல்லுளிமங்கன்னு வச்சிருக்கலாமின்னு நினைக்கத்தோணும். ஒரு முக்கியமான விஷயத்துக்குகூட வாயே தொறக்கமாட்டான். எதானச்சிம் ஒன்னுகேட்டா "ஓ இஸிட்" "ஓகே" இவ்வளவுதான் பதில்லுன்னு சொல்லி மெதுவா காத்தோட உளறுவான். ஆனா என்னா ரசாயான மாற்றம் நடத்துச்சோன்னு தெரியலே இப்போ பயப்புள்ளே நான்ஸ்டாப்'ஆ பேச ஆரம்பிச்சிட்டான். ஒருநாளு சாப்பிடறே நேரத்திலே எப்பிடி இருக்கு இந்த லைப்புன்னு கேட்டுத்தொலைச்சேன். பேசினான் பார்க்கணும் அய்யோ சாமி அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கான். ஓரமா கிடைக்கிற தீட்டின ஆப்புலே நாமே தேடிப் போயி உட்கார்த்தே கதையா பே..பே...ன்னு முழிச்சிக்கிட்டு சோத்தே தின்னேன்.

எங்கூரு பய ஒருத்தன் எப்பவுமே தேமே'ன்னு தான் திரிவான். நல்லநாளு பொல்லநாளுன்னு பார்த்தாலும் மொகத்திலே யாருக்கிட்டேயோ ரெண்டு அடிவாங்கின மாதிரியே திரிஞ்சுக்கிட்டுதான் இருப்பான். இப்போ போனவாரம் ஊருக்குப் போனப்போ ஒரு சாவுவீட்டிலே பார்த்தேன். அவன் பாட்டுக்கு எல்லாத்துக்கிட்டெயும் சிரிச்சிப் பேசிக்கிட்டு இருந்தான். அடபாவி கல்யாணவீட்டிக்கு வந்தா கூட சிரிக்க மாட்டான் ஆனா இங்கே எழவு வீட்டிலே வந்து எல்லா பயலெயும் லந்து விட்டு சிரிக்கிறானே'ன்னு அவனே தனியா கூப்பிட்டு போயி என்னாடா ராசா என்னா ஆச்சு உனக்குன்னு கேட்டேன். அதுதாண்டா கல்யாணம் காட்சின்னு சொல்லுறது'ன்னு பதில் சொன்னான். சரிதான் நமக்கெல்லாம் அதப்பத்தி என்னா தெரியப் போகுதுன்னு செவனேன்னு வந்திட்டேன்.

டிஸ்கி:-

இதெல்லாம் வயித்தெரிச்சல் வந்து நான் போடலேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.

கல்யாணக் களை'ன்னா கிழ்கண்டவைகள் தான் :-

1) நல்லா அழகான பயலுக பூராவும் அசிங்கமா டிரெஸ் பண்ண ஆரம்பிச்சிருவானுங்க!
2) புது டெக்னாலாஜியே உபயோகப் படுத்த ஆரம்பிச்சிருவானுங்க!
3) வாய் கிழிச்சுப் போற அளவுக்கு பேச ஆரம்பிச்சிருவானுங்க!
4) கேட்கிறவன் உண்மையா நம்ம பேசுறதே கேட்கிறானாகூட தெரியாமே பேசி கொல்லுறானுவே!
5) குறையாமே பத்து மணி நேரமாவது போன்லேயே பேசுறாய்ங்கே!

63 comments:

said...

ராம்,

//இதெல்லாம் வயித்தெரிச்சல் வந்து நான் போடலேன்னு உங்களுக்கு நல்லவே தெரியும்.//

அப்படியா?? சரி... சரி..

said...

என்னமோப்பா, அசட்டு களை என்பதை கொஞ்சம் நாசுக்காய் கல்யாண களைன்னு சொல்லுவாங்க- அதுவும் ஆம்பளை பசங்களுக்கு மட்டுமே உரிதான சொல் இது. ;-)

ஆமா! ஏதாவது விசேஷமா ??????

said...

இந்த ஆராய்ச்சிக்கு ஏதோ காரணம் இருக்குனு நினைக்கிறேன்!!!

said...

ஆஹா, வந்தாச்சா!

இதத்தான் கல்யாணக்களைன்னு சொல்வாங்க!

நடக்கட்டும்! நடக்கட்டும்!!

said...

//5) குறையாமே பத்து மணி நேரமாவது போன்லேயே பேசுறாய்ங்கே!//

அப்புறம் எப்படிங்க உங்களுக்கு பதிவு போட நேரம் கிடைச்சுது. பிளாக்குக்கு மட்டும் ஸ்பெஷல் பெர்மிஷனா?

எனிவே வாழ்த்துக்கள் ராம்!

said...

//ராம்,

//இதெல்லாம் வயித்தெரிச்சல் வந்து நான் போடலேன்னு உங்களுக்கு நல்லவே தெரியும்.//

அப்படியா?? சரி... சரி.. //

அடடே வாங்க சி.பா,

நீங்க ஏதாவது உ.கு'வோட தான் சரி, சரின்னு சொல்லீறீங்களா...?? :-)

said...

//என்னமோப்பா, அசட்டு களை என்பதை கொஞ்சம் நாசுக்காய் கல்யாண களைன்னு சொல்லுவாங்க- //

வாங்க மேடம்,

இது நல்ல புது தகவலா இருக்கே...

//அதுவும் ஆம்பளை பசங்களுக்கு மட்டுமே உரிதான சொல் இது. ;-)//

அது என்னா ஆண்குலத்துக்கு மட்டுமே இழைக்கப்பட்ட அநீதியா???
சிறுபான்மை ஆண்குல சிங்ககளே ஓடி வாருங்கள். அது என்ன நமக்கு மட்டும் இந்த அநியாய சொல் சாடல்,

போரடுவோம்!!போரடுவோம்!! இது பொதுவுடமை சொல்'யென ஆகும் வரை போராடுவோம்.

//ஆமா! ஏதாவது விசேஷமா ?????? //

ஆகா இதுயென்னா புதுகெரகம்...

இல்லே மேடம்... என்ன நம்புங்க, அப்பிடியே இருந்தாலும் இப்பிடியெல்லாம் ஆராய்ச்சிப் பண்ணி காமெடி பதிவு போடமுடியுமா...???
:-)))

said...

//இந்த ஆராய்ச்சிக்கு ஏதோ காரணம் இருக்குனு நினைக்கிறேன்!!! //

வாய்யா பாலாஜி,

வரும்போதே இப்பிடியா உ.கு'டோ வர்றது. நான் உன்னோட பெஸ்ட் பிரண்டுப்பா ஏதாவது அசம்பாவிதம் நடந்தா கண்டிப்பா உன்கிட்டே சொல்லுறேன்.

said...

ராம்

உ.கு. எல்லாம் இல்லைங்க... உங்கங்கிட்ட ஏதாவுது விசேசமா?? என்பதை வித்தையாசமா கேட்டேன்.. அம்புட்டுத்தே..

ஆமா ஏதாவது விசயம் உண்டா??? முன்கூட்டியே வாழ்த்துக்கள்!!!

said...

//ஆஹா, வந்தாச்சா!//

வாப்பா கதிரு,

//இதத்தான் கல்யாணக்களைன்னு சொல்வாங்க!

நடக்கட்டும்! நடக்கட்டும்!! //

இந்தமாதிரி நான்சென்ஸ் கேள்வியா கேட்டு கேட்டுதான் ஊருக்குள்ளே என்னோட ரெஸ்பெக்ட்டே போயிருச்சு.... :-)))

said...

ராம். ஊர்க்காரன் நான் உங்களை நம்பறேன்.

கல்யாணகளைக்கு இன்னொரு அடையாளம் வேணுமா? இது வரைக்கும் ஜிம் பக்கமே தலைவச்சுக்கூட படுக்காதவன் எல்லாம் தினம் ஒரு மணி நேரம் ஜிம், ஒரு மணி நேரம் ஜாகிங்ன்னு டவுசரை மாட்டிக்கிட்டி திரிவாய்னுக. அத பாத்திருக்கீங்களா?

said...

என்னடா எல்லாரும் கல்யாணமான்னு கேக்கறாங்களேன்னு வெட்கப்படக்கூடாது....கூச்சப்படாம உண்மையை சொல்லுங்க :)))

said...

இப்படி எதுனா அச்சுப் பிச்சுன்னு பதிவு போடுவாங்க! :)

said...

//அப்புறம் எப்படிங்க உங்களுக்கு பதிவு போட நேரம் கிடைச்சுது. பிளாக்குக்கு மட்டும் ஸ்பெஷல் பெர்மிஷனா?//

வாங்க தள,

அய்யோயோ ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுத விட மாட்டேன்னு சொல்லுதே இந்த சமுகம். இதே கேட்க ஆளே இல்லெயா..... :-))))

//எனிவே வாழ்த்துக்கள் ராம்! //

நமக்கு நாமே திட்டத்தின்படி ஆப்புவைச்சிக்கிறதுக்கு வாழ்த்து சொல்லிறீங்க.... :-((

எனக்கு வேணாம் இந்த வாழ்த்து...
:-)))

said...

//அது என்னா ஆண்குலத்துக்கு மட்டுமே இழைக்கப்பட்ட அநீதியா???
சிறுபான்மை ஆண்குல சிங்ககளே ஓடி வாருங்கள்.
//

கூப்பிட்டீங்களா??

//
அது என்ன நமக்கு மட்டும் இந்த அநியாய சொல் சாடல்,
போரடுவோம்!!போரடுவோம்!! இது பொதுவுடமை சொல்'யென ஆகும் வரை போராடுவோம்.//

இப்படி கோக்குமாக்கா பதிவு போட்டா இப்படித்தான் பழி வரும்...சரி என்ன போராட்டம்??? டீ, காபி, டகிலா, பாயசம் குடிக்கற போராட்டமெல்லாம் தம்பி பதிவுல பண்ணியாச்சு..புதுசா எதுனா சொல்லுங்க..களமிறங்கிடுவோம் :))

said...

//ராம்

உ.கு. எல்லாம் இல்லைங்க... //

நான் நம்பமாட்டேன்.... :-)))

//உங்கங்கிட்ட ஏதாவுது விசேசமா?? என்பதை வித்தையாசமா கேட்டேன்.. அம்புட்டுத்தே..

ஆமா ஏதாவது விசயம் உண்டா??? //

ஆகா இது நேர் குத்து... சி.பா சொன்னா நம்புங்க, எனக்கு கல்யாணமில்லே..கல்யாணமில்லே....!!

//முன்கூட்டியே வாழ்த்துக்கள்!!! //

அது வரும்போது இந்த வாழ்த்தே எடுத்துக்கிறேன்.

said...

//ராம். ஊர்க்காரன் நான் உங்களை நம்பறேன். //

வாங்க குமரன் ததா,

நீங்களாவது என்னையே நம்புனிங்களே!!
அதுப் போதும் எனக்கு,

பாருங்கள் மக்களே உங்களைப் போல் நானும் விடுதலை அடைய முடியாத சிறையில் சிக்க வைக்க முயன்ற திட்டம் பொடி பொடியாகி போனது....:)))

//கல்யாணகளைக்கு இன்னொரு அடையாளம் வேணுமா? இது வரைக்கும் ஜிம் பக்கமே தலைவச்சுக்கூட படுக்காதவன் எல்லாம் தினம் ஒரு மணி நேரம் ஜிம், ஒரு மணி நேரம் ஜாகிங்ன்னு டவுசரை மாட்டிக்கிட்டி திரிவாய்னுக. அத பாத்திருக்கீங்களா? //

ஆகா அந்த கொடுமையே ஏன் வாயாலே எப்பிடி சொல்லுறது... எங்கத் தெருவிலே இருக்கிற ஒரு பயப்புள்ளக்கு கல்யாணமின்னு சொல்லி அதுகூட துணைக்குன்னு நானும் வருனும்மின்னு என்னையே இழுத்திட்டு போனான் அந்த படுபாவி.

சரி பழகின பாவத்துக்கு அவன்கூட போயி மூணுமாசம் ஒலிவா ஜிம்மிலே தூங்கினேன்... :-)))

ஜாக்கிங் வான்னு டவுசர் போட்டுக்கிட்டு மெஜிரா காலேஜ் கிரவுண்டை சுத்தி வருவோம்ன்னு வேறே கூப்பிட்டான். போடா அங்கே தூங்க வசதியில்லேன்னு நான் கூட போகல்லே...:)))

said...

//என்னடா எல்லாரும் கல்யாணமான்னு கேக்கறாங்களேன்னு வெட்கப்படக்கூடாது....கூச்சப்படாம உண்மையை சொல்லுங்க :))) //

வாப்பா கப்பி,

ஏம்பா நீயும் ஓன்னோட பங்குக்கு இப்பிடியெல்லாம் கேள்வி கேட்கிறேன்னு இந்த குத்து குத்துறே...:-)))

எங்கே கூச்சப்படாமெ சொல்ல எனக்கு அழுக்காச்சிதான் வருது.... :(

said...

//இப்படி எதுனா அச்சுப் பிச்சுன்னு பதிவு போடுவாங்க! :) //

வாங்க கொதஸ்,

எனக்கு இப்போ அழுகை பீறிக்கிட்டு வருது.. ஏதோ தப்பா பிரக்டிகல் ரிப்போர்ட் சப்மிட் பண்ணின ஸ்டுடண்ஸ் மாதிரி இருக்கேன் நானு.. :-((((

சாமி இந்த ஆராய்ச்சியே பண்ணக்கூடாது, நமக்கே அது திரும்புது.

said...

கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா... அடி என்னடி கண்ணு!

said...

ஏலே ராயலு,
நெருப்பில்லாம பொகையாதுன்னு சொல்லுவாங்க. கல்யாண களைக்கு முன்னாடி 'கல்யாண ஆசை'னு வேற ஒரு வார்த்தை ஊருக்குள்ள யூஸ் பண்ணுவாங்க. உனக்கு அது வந்துடுச்சுன்னு தான் நெனக்கேன். பயங்கரமான ஆராய்ச்சி கட்டுரை எல்லாம் போட்டு கலக்கிருக்கியே மாப்ளே :)

said...

//கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா... அடி என்னடி கண்ணு//


அடியாத்தி ஆவி,

நீயுமா என்னை இப்பிடி கலாய்க்கிறது... நான் இன்னும் பத்தாம் வகுப்பே பாஸ் பண்ணலே. எங்கப்பாரு அதை பாஸ் பண்ணினதான் மேற்க்கொண்டு ஏதாவது செய்யமுடியமின்னு சொல்லிருக்காரு...

அதானாலே பத்து வருசமா பத்தாவது படிச்சிக்கிட்டு இருக்கேன். சத்தியமா இன்னும் அஞ்சு வருசத்துக்கு அதை பாஸ் பண்ணமாட்டேமில்லே...
இதிலே கல்யாண ஆசை வேறேயா...
:-(((

said...

//ஏலே ராயலு,
நெருப்பில்லாம பொகையாதுன்னு சொல்லுவாங்க. //

வா தல,

கேட்டியே ஒரு கேள்வி..எனக்குன்னு இருந்த மானம், மருவாதே, ரோஷம், பாசம், சூடு,பூடு,சொரணை,கருணை அப்புறம் என்னாவோ அதெல்லாம் இப்போ அந்தரத்திலே ஆடுது.

நீயுமா இவங்களோட சேர்ந்துக்கிட்டு என்னை இந்த ஓட்டு ஓட்டுவே....

ஒரே நம்பிக்கை நீ ஒருத்தர் மட்டும்தான். நீயும் இப்போ கைவிட்டுட்டு அவங்க கூட சேர்ந்திட்டியே.... :-(((

//கல்யாண களைக்கு முன்னாடி 'கல்யாண ஆசை'னு வேற ஒரு வார்த்தை ஊருக்குள்ள யூஸ் பண்ணுவாங்க. உனக்கு அது வந்துடுச்சுன்னு தான் நெனக்கேன்.//


ஆமாம் பலியாட்டுக்கு அலங்காரமெல்லாம் பண்ணி மாலையெல்லாம் போட்டு தரதரன்னு இழுத்து போவங்க.... நீ சொன்ன உதாரணம் இதுக்குதான் சரியா வருது...... :)))


//பயங்கரமான ஆராய்ச்சி கட்டுரை எல்லாம் போட்டு கலக்கிருக்கியே மாப்ளே :) //

இந்த வேலையே இனிமே செய்யவேமாட்டேன். நான் அடுத்தபயலுவெக்கிட்டே தெரிஞ்ச மாற்றத்தே சொன்னா அது எனக்கு நடந்தமாதிரி இட்டு கட்டி விட்டுட்டாங்க...!!!!

ரொம்ப சின்னப்புள்ளதனமாலே இருக்கு....

said...

//என்னமோப்பா, அசட்டு களை என்பதை கொஞ்சம் நாசுக்காய் கல்யாண களைன்னு சொல்லுவாங்க- அதுவும் ஆம்பளை பசங்களுக்கு மட்டுமே உரிதான சொல் இது. ;-)//

இது சரி....அந்த அசட்டு களை அப்படியே தங்கிவிடுகிறது....ஆனால் அதிகார களையினை மட்டும் கட்டுகிற பெண் எடுத்துக்கொண்டுவிடுகிறாள்....

said...

//இது சரி....அந்த அசட்டு களை அப்படியே தங்கிவிடுகிறது....ஆனால் அதிகார களையினை மட்டும் கட்டுகிற பெண் எடுத்துக்கொண்டுவிடுகிறாள்.... //

வாங்க மெளல்ஸ்,

ஆகா உங்க கதை பெரிய சோகக் கதையா இருக்கும் போல... எம்பூட்டு வருசமா அசட்டுக் களை உங்க மொகத்திலே தங்கி இருக்குங்க... கொஞ்சம் விலாவாரியா எடுத்துச் சொல்லுங்களேன்... :-)))

said...

அட ராமா!....

நம்ம கதை எல்லாம் பழசு....அத ஏன் கிளரிக்கிட்டு....நானும் ஒங்கள மாதிரி பலரை பார்த்தத சொன்னேங்க...

பி.கு: நீங்க கதை சொல்ல மட்டும் தான் செய்வீர்கள் என்று நினைத்தேன்....கேட்கவும் அதிக ஆர்வமாக இருக்கிறீர்கள்...

said...

வட்டார வழக்கு கலந்து இந்த பதிவு நகைச்சுவையாக நல்லா எழுதி இருக்கீங்க? ஆனா எதுக்கு தம்பி இந்த ஆராய்ச்சி தனக்குன்னு வரும் போது இதெல்லாம் எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சிக்கணும் என்ற ஆர்வமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

said...

//வட்டார வழக்கு கலந்து இந்த பதிவு நகைச்சுவையாக நல்லா எழுதி இருக்கீங்க? ஆனா எதுக்கு தம்பி இந்த ஆராய்ச்சி தனக்குன்னு வரும் போது இதெல்லாம் எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சிக்கணும் என்ற ஆர்வமா என்ற கேள்வி எழாமல் இல்லை.//

ஏலே ராயலு,
பாத்தியா. நீ எழுதுன டாப்பிக் அப்படி. எல்லாத்துக்கும் இந்த சந்தேகம் வரத் தான் செய்யுது. சரி சட்டுபுட்டுன்னு தங்கச்சி பேரைச் சொல்லிடு...சொந்தமா? அசலா?

said...

//நம்ம கதை எல்லாம் பழசு....அத ஏன் கிளரிக்கிட்டு....நானும் ஒங்கள மாதிரி பலரை பார்த்தத சொன்னேங்க...//

அட மெளல்ஸ்,

பார்த்திங்களா.. கழுவுற மீன்லே நழுவுற மீன் கணக்கா நைசா ஓடிறீங்களே...??? சரி நம்பிக்கையா இருக்கிறோம் உங்க சோகக்கதையேயும் சொல்லீவீங்கன்னு.......

//பி.கு: நீங்க கதை சொல்ல மட்டும் தான் செய்வீர்கள் என்று நினைத்தேன்....கேட்கவும் அதிக ஆர்வமாக இருக்கிறீர்கள்... //

ஹி ஹி கதை சொல்லுறதெல்லாம் எங்க டேமேஜர்கிட்டே மட்டும்தான்.... ஆமாம் பி.கு'ன்னா பின்குத்து ஏதும் அர்த்தம் இருக்கா என்ன..???

:-))))

said...

//வட்டார வழக்கு கலந்து இந்த பதிவு

நகைச்சுவையாக நல்லா எழுதி இருக்கீங்க?//

வாங்க குமரன்,

ரொம்ப டாங்கீஸ்ங்க, உங்களோட வருகைக்கும்,

கருத்துத் தருகைக்கும். அப்புறம் இந்த வட்டார வழக்கு இல்லேன்னா மதுரையிலே கழுதேகூட உதைக்குமுங்க அப்போய்..... :-)))

//ஆனா எதுக்கு தம்பி இந்த ஆராய்ச்சி தனக்குன்னு வரும் போது எல்லாம் எப்படி இருக்குமுன்னு
தெரிஞ்சிக்கணும் என்ற ஆர்வமா என்ற கேள்வி
எழாமல் இல்லை. //

ஏங்க நீங்க எவ்வளவு பெரியவரு அதுவும் நல்லவரு,வல்லவரு, நாலும் தெரிஞ்சவரு...

இப்பிடியெல்லாம் உங்களுக்கு யூகத்திலே கேள்வி வரலாமா..? இந்த எதொச்சதிகார கும்பல் கூடச்
சேர்ந்துக்கிட்டு நீங்களும் என்னை கலாய்க்க ஆரம்பிச்சிட்டிங்களே...????

மக்களே உங்களை பார்த்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.

நீங்கள் எனக்கு கல்யாணமின்னு என்னுடைய எழுத்தை திசைமாற்ற நினைக்கிறீர்கள்.

அதுக்கெல்லாம் சாயாது இந்த அலை! என்னிடம் நிலைக்காது இந்த சதி வலை! பின்னூட்டத்துக்கு பதில் சொல்வது ஒரு கலை! ஆனால் நான் செய்தது அதை கொலை! எனக்கு இன்னும் கொஞ்சம் இருக்கு வேலை!

சோடா கொடுங்கப்பா... :-)))

said...

//ஏலே ராயலு,பாத்தியா. நீ எழுதுன டாப்பிக் அப்படி. எல்லாத்துக்கும் இந்த சந்தேகம் வரத் தான் செய்யுது.//

தல,

நீ வேறே சும்மா இருக்கமாட்டமே எரிஞ்சு அணைஞ்சுபோன நெருப்பை நாலு சுள்ளியே போட்டு பெட்ரோல் ஊத்தி பத்த வைக்கிறீயே... அந்த டாபிக்கோட மோட்டிவே உன்னை வச்சுதான் எழுதினது. நீதான் ஒரு இராஜஸ்தான் அண்ணியே கட்டப்போறீயே!!! அதிலே இருந்துதான் இந்த ஐடியாவே வந்துச்சு.

ஆனா உன்கிட்டே இப்போ நிறைய மாற்றம் வந்திருச்சு தல... ஆமாம் கண்ணாடியே பார்த்தா தலை வாரிகிறியாம், பகுடர் போட்டுக்கிறியாம். சென்ட்'ன்னு சொல்லி ஒரு மருந்தே உடம்பு பூராவும் அடிச்சிருக்கியாமே.....!!!
:-)))

//சரி சட்டுபுட்டுன்னு தங்கச்சி பேரைச் சொல்லிடு...சொந்தமா? அசலா? //

ஹீம் இப்போதான் ஜப்பான் லேப்பிலே செய்யப்போறாங்க ஆர்டிபிசயல்லா......!!! பின்னே நீயே யோசிச்சுப்பாரு ஒரு பொண்ணோட நிலைமையே....???

said...

//தல,

நீ வேறே சும்மா இருக்கமாட்டமே எரிஞ்சு அணைஞ்சுபோன நெருப்பை நாலு சுள்ளியே போட்டு பெட்ரோல் ஊத்தி பத்த வைக்கிறீயே... அந்த டாபிக்கோட மோட்டிவே உன்னை வச்சுதான் எழுதினது. நீதான் ஒரு இராஜஸ்தான் அண்ணியே கட்டப்போறீயே!!! அதிலே இருந்துதான் இந்த ஐடியாவே வந்துச்சு.

ஆனா உன்கிட்டே இப்போ நிறைய மாற்றம் வந்திருச்சு தல... ஆமாம் கண்ணாடியே பார்த்தா தலை வாரிகிறியாம், பகுடர் போட்டுக்கிறியாம். சென்ட்'ன்னு சொல்லி ஒரு மருந்தே உடம்பு பூராவும் அடிச்சிருக்கியாமே.....!!!
:-)))//

உன் கதை கந்தல் ஆவுதுன்னு நீ ஒரு பினாமியை வச்சி எஸ்கேப் ஆவலாம்னு பாக்குறியா? இந்த பருப்பு இங்கே வேகாதுடி செல்லம்
:)

//சரி சட்டுபுட்டுன்னு தங்கச்சி பேரைச் சொல்லிடு...சொந்தமா? அசலா? //

ஹீம் இப்போதான் ஜப்பான் லேப்பிலே செய்யப்போறாங்க ஆர்டிபிசயல்லா......!!! பின்னே நீயே யோசிச்சுப்பாரு ஒரு பொண்ணோட நிலைமையே....???//

லே ராயலு! சுத்த மங்குனியா இருக்கியே லே! நான் அசல்னு சொன்னது அயல்ங்கிற அர்த்தத்துல. என்னென்னமோ பேசுறே?

said...

ராஜஸ்தானி அண்ணி'னு தலய பொட்டு கொடுக்கர வேலயெல்லாம் வேனாம்..அதை தனி ட்ரcக்ல பாதுக்கலாம்..மொதல்ல உன் விஷயதுல ஒரு முடிவுக்கு வருவொம்..

said...

//உன் கதை கந்தல் ஆவுதுன்னு நீ ஒரு பினாமியை வச்சி எஸ்கேப் ஆவலாம்னு பாக்குறியா? இந்த பருப்பு இங்கே வேகாதுடி செல்லம்:)//

யாரு நானா.. பினாமி, சுனாமின்னு நீதான் எஸ்கேப் ஆவுறே...

பருப்பு வேகலைன்னா கொஞ்சம் நல்லெண்ணை ஊத்துனா வெத்துருமின்னு எதிலோ படிச்ச ஞாபகம் தல.... :-)))


//லே ராயலு! சுத்த மங்குனியா இருக்கியே லே!//


அய்யோ அநியாத்துக்கு பாரட்டுறீயே தல... :)))

// நான் அசல்னு சொன்னது அயல்ங்கிற அர்த்தத்துல. என்னென்னமோ பேசுறே//

ம்க்கும் உள்ளூர்லே வக்கிலெமேதான் இருக்கேன். இதிலே அசலூர் பொண்ணு வேறேயா...???

பாவம் தல அந்தப் பொண்ணு....!!!

said...

//ராஜஸ்தானி அண்ணி'னு தலய பொட்டு கொடுக்கர வேலயெல்லாம் வேனாம்..அதை தனி ட்ரcக்ல பாதுக்கலாம்..மொதல்ல உன் விஷயதுல ஒரு முடிவுக்கு வருவொம்.. //

அடபாவி கப்பி மறுபடியும் கவுத்திட்டியே...!!! நான் எத்தனைப் பேருக்குதான் இல்லே.. இல்லேன்னு சொல்லுறது சொல்லு!!!!

தனி ட்ராக்'லே என்னையும் சேர்த்துக்க ராசா... :-)))

said...

வீட்ல விஷேசமா ராம் ?

said...

உங்க ஊட்டு ஃபோன் நம்பர் வேணுமே...உங்க அப்பாட்ட கொஞ்சம் பேச வேண்டியதிருக்கு...

said...

//வீட்ல விஷேசமா ராம் ? //

அய்யோ இல்லேங்க...

said...

//உங்க ஊட்டு ஃபோன் நம்பர் வேணுமே...உங்க அப்பாட்ட கொஞ்சம் பேச வேண்டியதிருக்கு... //

வாங்க தருமி ஐயா,

நீங்களுமா இவங்க கூடச் சேர்ந்துக்கீட்டிங்க....:-) இது என்னோட நண்பர்களிடம் தென்பட்ட மாற்றங்களை சும்மா காமெடியா சொல்லி பதிவுப் போட்டுருக்கேன். அம்பூட்டுந்தேய்ன்...

(Great Escape)

said...

"கத்திரிக்காய் முத்திடுச்சோ டோய் கடை வீதிக்கு வந்துடுச்சோ டோய்"

ராம் அது உனக்கு இல்ல, சும்மா ஒரு பழமொழி சொல்லி பார்த்தேன். உன் பதிவை பற்றி ஏதுவும் சொல்வதற்கு இல்ல. நான் எதாச்சும் சொன்ன என் மேல கோவப்படுற, கடிச்சு வச்சுடுவேன் என்று மிரட்டுற, எனக்கு ஏன் வம்பு.

நீ இம்புட்டு ஆராய்ச்சி செய்து இருந்தாலும், எனக்கு தெரிந்த ஒன்றை சொல்லுறேன் கேட்க்கோ,
துக்கம் வரும் போது சிரிக்கனும் யாரோ பெரியவங்க சொல்லி இருக்காங்க. அதனால் தான் இப்படி கல்யாணம் பண்ண போற பயலுக எல்லாம் சிரிச்சுக்கிட்டு திரியுறானுங்க....

நீ கூட ரொம்ப நாளா சிரிச்சுக்கிட்டு திரிவதாக நம்ம கப்பி சொன்னாப்புல....

said...

//"கத்திரிக்காய் முத்திடுச்சோ டோய் கடை வீதிக்கு வந்துடுச்சோ டோய்"//

வாய்யா வா புலி,

வர்றேப்பவே ஏதாவது ஒரு வில்லங்கத்தோடே வாடி நீயீ... யாருக் கேட்டா இந்த பழமொழி இங்கே.... :-))))


//ராம் அது உனக்கு இல்ல, சும்மா ஒரு பழமொழி சொல்லி பார்த்தேன். //


இதிலே ஒரு ஜல்ஜாப்பு வேறே...

//உன் பதிவை பற்றி ஏதுவும் சொல்வதற்கு இல்ல. நான் எதாச்சும் சொன்ன என் மேல கோவப்படுற, கடிச்சு வச்சுடுவேன் என்று மிரட்டுற, எனக்கு ஏன் வம்பு. //

எப்போ இதெல்லாம் நடந்துச்சு...

//நீ இம்புட்டு ஆராய்ச்சி செய்து இருந்தாலும், எனக்கு தெரிந்த ஒன்றை சொல்லுறேன் கேட்க்கோ,
துக்கம் வரும் போது சிரிக்கனும் யாரோ பெரியவங்க சொல்லி இருக்காங்க.//

யாரு இல்லேன்னு சொன்னா...

// அதனால் தான் இப்படி கல்யாணம் பண்ண போற பயலுக எல்லாம் சிரிச்சுக்கிட்டு திரியுறானுங்க....//

நீ சொன்னதில்லே இதமட்டும் நான் ஏத்துக்கிறேன்.

//நீ கூட ரொம்ப நாளா சிரிச்சுக்கிட்டு திரிவதாக நம்ம கப்பி சொன்னாப்புல.... //

அடபாவி அந்த கயவனின் சதியா இது... :-)))

said...

//அடபாவி அந்த கயவனின் சதியா இது... :-))) //

எது சதி..உங்களுக்கு ஒரு நல்லது நடக்கனுமேன்னு நாலு பெரியவங்க கிட்ட எடுத்து சொன்னா அது சதியா?? ;)

said...

//எது சதி..உங்களுக்கு ஒரு நல்லது நடக்கனுமேன்னு நாலு பெரியவங்க கிட்ட எடுத்து சொன்னா அது சதியா?? ;) //

ஆஹா கப்பி உன்னோட அன்பு மழையில் நனைஞ்சு எனக்கு ஜல்பே வந்திருச்சிப்பா.... :-)))

ஆனா நாலு பெரியவங்கன்னு சொல்லி எப்பிடி புலியே தேர்ந்தெடுந்தே...???

அப்புறம்ப்பா நம்ம போராட்டம் என்னாச்சு....????

said...

//வாய்யா பாலாஜி,

வரும்போதே இப்பிடியா உ.கு'டோ வர்றது. நான் உன்னோட பெஸ்ட் பிரண்டுப்பா ஏதாவது அசம்பாவிதம் நடந்தா கண்டிப்பா உன்கிட்டே சொல்லுறேன்.//
சீக்கிரமே அசம்பாவிதத்தை எதிர்பார்த்து காத்துகிடக்கிறோம் ;-)

said...

உனக்கு ஏதும் பதில் சொல்வதாக இல்லை. அதான் மேட்டரு தெரிஞ்சுடுச்சுல அப்புறம் என்ன தேவையில்லாம வழவழ பேசிக்கிட்டு, ஒரேடியா முடிச்சுட வேண்டியது தான்......

said...

//ஆனா நாலு பெரியவங்கன்னு சொல்லி எப்பிடி புலியே தேர்ந்தெடுந்தே...???//

உள்ளத்தால் பெரியவன், பண்பால் பெரியவன், அறிவால் பெரியவன், திறமையால் பெரியவன் என்ற நாலு பெரியவங்கள் நானும் ஒருத்தன் என்று கப்பி பய அடம் பிடிச்சு எல்லாருக்கிட்டயும் சொல்லிக்கிட்டு திரியுறார். அத நீயும் இப்ப சொல்ல ஆரம்பித்து விட்டாய். ரொம்ப தான் பாசக்கார பசங்களா இருக்கீங்கப்பா நீங்க...

said...

//சீக்கிரமே அசம்பாவிதத்தை எதிர்பார்த்து காத்துகிடக்கிறோம் ;-) //

அடபாவிகளா,

என்னை அழ விட்டுப் பார்க்கணுமின்னு எத்தனை பேருய்யா கிளம்பி இருக்கீங்க....

உன்னையச் சொல்லி குற்றமில்லை, எல்லாம் சி.பாவும் உஷாமேடமும் கொளுத்தி விட்டுப் போன திரி அது..... :-))))

said...

//உனக்கு ஏதும் பதில் சொல்வதாக இல்லை. அதான் மேட்டரு தெரிஞ்சுடுச்சுல அப்புறம் என்ன தேவையில்லாம வழவழ பேசிக்கிட்டு, ஒரேடியா முடிச்சுட வேண்டியது தான்...... //

:-((((

//உள்ளத்தால் பெரியவன், பண்பால் பெரியவன், அறிவால் பெரியவன், திறமையால் பெரியவன் என்ற நாலு பெரியவங்கள் நானும் ஒருத்தன் என்று கப்பி பய அடம் பிடிச்சு எல்லாருக்கிட்டயும் சொல்லிக்கிட்டு திரியுறார்.//

கப்பிக்கு அனோகமா அறிவே இல்லேன்னு நினைக்கிறேன்.... :-)))
தப்பான விஷயங்களை மக்கள்கிட்டே பரப்புனா என்ன தண்டனைக் கூட தெரியமே இருக்காப்பலே கப்பிநிலவன்.... :-)))

//அத நீயும் இப்ப சொல்ல ஆரம்பித்து விட்டாய். ரொம்ப தான் பாசக்கார பசங்களா இருக்கீங்கப்பா நீங்க... //

பாசத்துக்கு என்னத்தே குறைச்சல் அதுதான் நீ எங்களுக்கெல்லாம் புலிப்பொறை வாங்கிட்டு வருவேலே அதுக்குதான் இந்த பாசமெல்லாம் ... :-(((

said...

//அடபாவிகளா,

என்னை அழ விட்டுப் பார்க்கணுமின்னு எத்தனை பேருய்யா கிளம்பி இருக்கீங்க....

உன்னையச் சொல்லி குற்றமில்லை, எல்லாம் சி.பாவும் உஷாமேடமும் கொளுத்தி விட்டுப் போன திரி அது..... :-))))
//
ஆராய்ச்சி பண்ணது நீங்க...
பழிய தூக்கி எதுக்கு அப்பாவி மக்கள் மேல போடறீங்க??? உண்மைய ஒத்துக்கற நேரம் வந்துடுச்சு... சீக்கிரம் சொல்லிடுங்க ;)

said...

here comes 50 ;)

said...

//உள்ளத்தால் பெரியவன், பண்பால் பெரியவன், அறிவால் பெரியவன், திறமையால் பெரியவன் என்ற நாலு பெரியவங்கள் நானும் ஒருத்தன் என்று கப்பி பய அடம் பிடிச்சு எல்லாருக்கிட்டயும் சொல்லிக்கிட்டு திரியுறார்//

யோவ் புலி...நான் நாலு பெரிய மனுசங்க கிட்ட சொல்லிட்டு இருக்கும்போது நீ பக்கத்துல நின்னு ஒட்டுகேட்டுட்டு இப்ப வந்து உன்னை பெரியவன்னு சொன்னேன்னு பில்டப் தர்றியா???

இப்ப பாரு உன்னைத்தான் சொன்னேன்னு நினைச்சு ராயல் பீல் பண்றாப்ல :))

said...

//here comes 50 ;) //

என்ன வெட்டி, செல்வத்துடன் சேர்ந்து உங்களுக்கும் இந்த பழக்கம் வந்துடுச்சா....

said...

//யோவ் புலி...நான் நாலு பெரிய மனுசங்க கிட்ட சொல்லிட்டு இருக்கும்போது நீ பக்கத்துல நின்னு ஒட்டுகேட்டுட்டு //

அதான் கப்பி நானும் சொல்லுறேன், என்ன பத்தி நீ நாலு பெயருக்கிட்ட நல்லாத சொன்னேனு.,

ராயல் பீல் பண்ணுறதுக்கு நம்ம என்ன முடியும் சொல்லு, அவரு வர வர நாய் பொறை எல்லாம் பீல் பண்ணுறாரு.

said...

//ஆராய்ச்சி பண்ணது நீங்க...
பழிய தூக்கி எதுக்கு அப்பாவி மக்கள் மேல போடறீங்க???//

அட அதுக்கு பேரு பழியா....??

//உண்மைய ஒத்துக்கற நேரம் வந்துடுச்சு... சீக்கிரம் சொல்லிடுங்க ;) //

என்னைய விட்டுறுங்கப்பா.... எனக்கு அழகையே வந்திரும் போல இருக்கு..!!! :-))))

said...

//here comes 50 ;) //

டாங்கீஸ்ப்பா

said...

ராயலு,
இம்புட்டு சொன்னே...கால்கட்டு எங்கே எந்த தேதியில போடறாங்கன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலை? கூடகோயில் ஜமீன் பங்களால தான் நடக்குதா?

said...

//என்னைய விட்டுறுங்கப்பா.... எனக்கு அழகையே வந்திரும் போல இருக்கு..!!! :-)))) //

நீ என் தம்பிடா...உன்னை 100 அடிக்க வைக்காம எப்படி விடறது? அளுகப்பிடாது

said...

//யோவ் புலி...நான் நாலு பெரிய மனுசங்க கிட்ட சொல்லிட்டு இருக்கும்போது நீ பக்கத்துல நின்னு ஒட்டுகேட்டுட்டு இப்ப வந்து உன்னை பெரியவன்னு சொன்னேன்னு பில்டப் தர்றியா???//

ஏலேய் புலி உனக்கு கொள்ளை சேட்டைதான். நீ பொய் பொய்யாவா பேசுவே இப்பிடி...
சேம் சேம் பப்பி சேம்'னு தல பாடின poemதான் ஞாபகம் வருது இப்போ.

உனக்கு ஒன்னுச் சொல்லிக்கிறேன்.

வேணாம் புலி ஓவர் விளம்பரம் உடம்புக்கு ஆவாது....!!!

//இப்ப பாரு உன்னைத்தான் சொன்னேன்னு நினைச்சு ராயல் பீல் பண்றாப்ல :)) //

கப்பி நீ நல்லவந்தானே இதிலே வேறே ஏதும் இல்லலே....???

said...

//ராயலு,
இம்புட்டு சொன்னே...கால்கட்டு எங்கே எந்த தேதியில போடறாங்கன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலை? கூடகோயில் ஜமீன் பங்களால தான் நடக்குதா? //

அய்யோ தல நீ என்னா ரிவஞ்ச் எடுக்கிறியா!!!!

நான் இல்லே இல்லேன்னு சொல்லுறேன் நீங்கெல்லாம் ஆமாம் ஆமான்னா அது உண்மையா ஆகிருமா என்னா...?????

said...

//நீ என் தம்பிடா...உன்னை 100 அடிக்க வைக்காம எப்படி விடறது? அளுகப்பிடாது//

ஆமா நூறும் என்னை அழுக விடனுமின்னே இருக்கப் போவுது..... :-)))

said...

// நாகை சிவா said...
//here comes 50 ;) //

என்ன வெட்டி, செல்வத்துடன் சேர்ந்து உங்களுக்கும் இந்த பழக்கம் வந்துடுச்சா....
//
அதெல்லாம் இல்ல புலி.. இது ஆர்குட் பழக்கம் :-)

said...

Malekind yaarum kandukirae maatireengae ram angayum publish paniindungae.....;)

said...

//இதெல்லாம் வயித்தெரிச்சல் வந்து நான் போடலேன்னு உங்களுக்கு நல்லவே தெரியும்.//

நம்பிட்டோம்ல;)