Monday, January 29, 2007

How to convert new blogger

பிளாக்கர் புதிய சேவைக்கு எவ்வாறு மாறுவது என்பதை கிழே படங்களுடன் சின்ன விளக்கம். அத்தோடு தமிழ்மண கருவிப்பட்டை மற்றும் நண்பர்கள் கோபி மற்றும் ஜெகத் ஆகியோர் சரி செய்த பின்னூட்ட பிரச்சினை நிரலியும் சேர்த்துள்ளேன். படித்து பார்த்து இப்பதிவு எவ்வகையில் உதவியா இருந்தது எனச்சொல்லுங்கள்.

அதற்குமுன்னர் உங்களுக்கு தேவையான அடைபலகையை தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.

1)

polo
polo.txt
Hosted by eSnips


2)

bmw
bmw.txt
Hosted by eSnips

3)

tree
tree.txt
Hosted by eSnips


வேண்டிய அடைபலகையை தரவிறக்கம் செய்து உங்கள் Desktop'ல் சேகரித்துக் கொள்ளுங்கள்.

இனி வழிமுறைகள்:-



(Fig:1)

உங்களின் பிளாக்கர் கணக்கில் லாகின் செய்யதவுடன் வட்டமிட்ட பகுதி தென்படும் அதை அழுத்துங்கள்



(Fig:2)

உங்களின் கணக்குமுகவரி மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து டிக் மார்க் செய்து Continue அழுத்துங்கள்.



(Fig:3)


மேற்கண்டவாறு உங்களின் பிளாக், ஒன்றுக்கு மேற்ப்பட்டவையாக இருந்தால் அதையும் வரிசையாக காண்பிக்கும். இப்போ வேறேன்ன Continue அழுத்துங்கள்.




(Fig:4)


இப்போழுது உங்களின் ஜிமெயில் முகவரி கொடுக்க வேண்டும். முன்னாடி ஜிமெயில், பிளாக்கர்க்கு தனித்தனியே முகவரி இருந்தது, தற்பொழுது மேம்படுத்தப்பட்ட பிளாக்கர் கணக்கில் உங்களின் ஜிமெயில் ஐடியும் இணைக்கப்படும். ஆகவே உங்களின் பிரதான ஜிமெயில் ஐடி கொடுத்தால் செளகரியமா இருக்கும்.




(Fig:5)


இவ்வாறு ஒரு செய்தி வந்தெதனில் உங்களின் வலைப்பூ புதிதாக பூக்கவிருக்கிறது என்று பொருள். பூத்து முடிந்ததும் தனியாக மயில் வரும்.





(Fig:6)


முன்னாரே குறிப்பிட்டபடி உங்களின் ஜிமெயில் ஐடி இனிமேல் பிளாக்கரின் ஐடியாக இருக்கும்.





(Fig:7)


மறுபடியும் உங்களின் ஜிமெயில் முகவரி மூலம் லாகின் செய்து அடைபலகை(Template) சொடுக்குங்கள்.




(Fig:8)


கதையை படிக்க பொறுமை இருந்தால் படித்து பார்த்துவிட்டு, அடைப்பலகை மேம்படுத்தும் சுட்டியை சுட்டுங்கள்.




(Fig:9)



வரும் பக்கத்தை ஒன்றும் செய்யாமல் அப்பிடியே சேமியுங்கள்.



(Fig:10)



Upgrade Completed. என்ற செய்தி வந்து விட்டதா'ன்னு உறுதி செய்துக் கொள்ளுங்கள்.




(Fig:11)


இனிமேல் நம்முடைய தனிப்பட்ட (த.ம கருவிப்பட்டை+பின்னூட்ட ஜாங்கிரி நீக்கும் நிரலி) அடைபலகையை உங்களின் Desktop சேமித்து அதை திரும்பவும் Browse செய்து Upload செய்யுங்கள். இம்முறையும் Your changes have been saved. என்ற செய்தி வருகிறது என உறுதி செய்து கொள்ளுங்கள்.





(Fig:12)


இது புதிய பிளாக்கரின் தனிப்பட்ட அதுவும் மேம்பட்ட சேவைகளில் ஒன்று, பழைய HTML+CSS முறையில் நம்மால் Drag Drop செய்யமுடியாது, இப்புதிய சேவை மூலம் நமக்கு தேவையான தலைப்புகளில் Page Element உருவாக்கலாம்.





(Fig:13)

இப்படத்த பாருங்கள். எவ்வளவு எளிதாக element உருவாக்கலாமென்று.


புது பிளாக்கரின் மேம்படுத்தப்பட்ட சேவைகள்:-

1) எளிதான இடைமுகப்பு
2) Drog and Drop வசதி
3) பின்னூட்டங்களில் தனித்தனி வண்ணங்களாக காட்டலாம்
4) அதர் ஆப்சனில் மற்றவர் ஐடி கொண்டு பின்னூட்டமுடியாது.
5) செய்தியோடைகள் இலகுவாக இணைக்கலாம்.
6) XML கொண்டு இயங்குவதால் விரைவாக இருக்கும்
7) ஒரே சொடுக்கில் பதிவுகளை பதிவேற்றமுடியும் (single click publishing)
8) Sidebar'ல் வேண்டிய சுட்டுகளை உருவாக்கலாம்.

29 comments:

said...

எல்லாம் சரி, அப்படியும் ஜிலேபி வந்தா என்ன செய்யறது? உங்களுக்கு அனுப்பவா? பாதி சொல்லிட்டுப் போயிட்டீங்க, நான் பாட்டுக்கு அப்பாவியாக் காத்துட்டே இருந்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

நல்ல பதிவு இராம்!! படங்களுடன் தெளிவா விளக்கியிருக்கீங்க!

said...

பயனுள்ள பதிவு ராயல்...படத்த போட்டு அருமையா பாகம் குறிச்சு இருக்கீங்க :-)

said...

//எல்லாம் சரி, அப்படியும் ஜிலேபி வந்தா என்ன செய்யறது? உங்களுக்கு அனுப்பவா? பாதி சொல்லிட்டுப் போயிட்டீங்க, நான் பாட்டுக்கு அப்பாவியாக் காத்துட்டே இருந்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

வாங்க மேடம்,

ஜிலேபி பிரச்சினையும் சரி பண்ணிட்டாங்க. அதுனாலே நீங்க தைரியமா convert பண்ணலாம். உங்களுக்கு அடிக்கடி வர்ற பப்ளிஷிங்க் பிரச்சினை இனிமேல் இருக்காது :)

said...

//நல்ல பதிவு இராம்!! படங்களுடன் தெளிவா விளக்கியிருக்கீங்க!//

நன்றி கப்பி நிலவா :)

said...

நல்ல பதிவு ராம் அண்ணா!

இந்த மாதிரி விளக்கினாலும் எனக்கு புரியாதுங்கறது வேற விசயம்!

said...

hi,
i like ur templates. can you please include thenkoodu code also. thanks.

said...

//பயனுள்ள பதிவு ராயல்...படத்த போட்டு அருமையா பாகம் குறிச்சு இருக்கீங்க :-)//

வாங்க 12B,

வருகைக்கு நன்றி...

said...

அருமையான போஸ்ட் ராம் அண்ணே...

//Geetha Sambasivam said...
எல்லாம் சரி, அப்படியும் ஜிலேபி வந்தா என்ன செய்யறது? உங்களுக்கு அனுப்பவா? பாதி சொல்லிட்டுப் போயிட்டீங்க, நான் பாட்டுக்கு அப்பாவியாக் காத்துட்டே இருந்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் //

கீதா இந்த லின்க பாருங்க...
http://kaiman-alavu.blogspot.com/2007/01/blog-post_23.html

said...

போலோவை எப்படி டவுன்லோடுவது? கடவுச் சொல் கேட்குதே!!!! :((((

said...

//நல்ல பதிவு ராம் அண்ணா!//

டாங்கீஸ் கதிரு...

//இந்த மாதிரி விளக்கினாலும் எனக்கு புரியாதுங்கறது வேற விசயம்! //

என்னப்பா இதிலே இருக்கு.. 2மணி நேரம் படிச்சே கூட நாமேலே டெம்பிளேட் உருவாக்கிடலாம்.

இந்த சுட்டியிலே போய் பாரு....

said...

//hi,
i like ur templates. can you please include thenkoodu code also. thanks. //

வாங்க அப்துல்லா...

இந்த டெம்பிளேட் நான் பண்ணலை... கூகுளாண்டவரிடம் தேடிய போது கிடைத்தது.


அதில் என்னோட வேலை தமிழ்மண நிரலியும், பின்னூட்ட பிரச்சினைக்காக நண்பர்கள் கோபியும், ஜெகத்தும் எழுதிய நிரலியை சேர்த்ததுதான்.

:)

said...

//அருமையான போஸ்ட் ராம் அண்ணே...//

வாங்க ஜி,

அந்த நிரலியை ஏற்கெனவே இந்த மூன்று அடைபலகையிலே சேர்த்துவிட்டேன். அதுனாலே இதை அப்பிடியே உபயோகப்படுத்தலாம்:)

said...

//போலோவை எப்படி டவுன்லோடுவது? கடவுச் சொல் கேட்குதே!!!! :(((( //

யக்கோவ்,

இப்போ பாருங்க....

எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி அந்த ஸ்கிர்ப்ட்'லே கையை வைச்சேன். அது சரியா வேலை செய்யலை.

ஒரு சந்தேகம் :- XML'லே எப்பிடி Text Area tag சேர்க்கிறது... :)

said...

அப்படியே வலைப்பதிவர் உதவிப்பக்கத்தில் போடலாம் போலிருக்கே...!!!!!!!

said...

நல்ல பதிவு புதியவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளது...

said...

//அப்படியே வலைப்பதிவர் உதவிப்பக்கத்தில் போடலாம் போலிருக்கே...!!!!!!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவி..

said...

என்ன ராம் நீங்க...பெண்களுக்கு ஏற்ற போல ஒரு பூ போட்டு டெம்பளட் செய்யாம..கார் போடு செய்திருக்கிங்க.. :(

said...

royalu ungalukum namma vetti kum...thaniya oru panjaayathu veikanum pola iruku..rendu perum namma Aaalamarathu pakkam vara matengureenga :-)

said...

//வாங்க 12B,

வருகைக்கு நன்றி... //

ennaathu ithu siru pilla thanama...:-)

said...

Vanakkam!!
:) Ungaluku porumai dhaan!!
Naan konjam late- ilati u cud have made things easier...
:) Rombaaaaaaaaa nalavar pola!!

said...

//நல்ல பதிவு புதியவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளது..//


வாங்க மயூரேசன்

முதன் வருகைக்கு மிக்கநன்றி :)

உங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி :)

said...

//என்ன ராம் நீங்க...பெண்களுக்கு ஏற்ற போல ஒரு பூ போட்டு டெம்பளட் செய்யாம..கார் போடு செய்திருக்கிங்க.. :(//

வாங்க தூயா,

இந்த டெம்பிளேட் நான் செய்யலை.... கூகிளாண்டவரிடமிருந்து சுட்டது... :)

said...

//royalu ungalukum namma vetti kum...thaniya oru panjaayathu veikanum pola iruku..rendu perum namma Aaalamarathu pakkam vara matengureenga :-)///

12B,

உங்க பிளாக்'க்கு வந்தேன், அங்கே என்னமோ பூராவும் இங்கிலிபிசா இருந்துச்சா, நமக்குதான் அதை கண்டாலே ஆவாதே, அதுதான் செவனேன்னு வந்துட்டேன் :)))

said...

//வாங்க 12B,

வருகைக்கு நன்றி... //

ennaathu ithu siru pilla thanama...:-)/

ஹி ஹி

நீங்க படம், பாகம்மின்னு சொன்னதும் வேறே ஞாபகம் வந்திருச்சு.... :)

said...

//Vanakkam!!
:) Ungaluku porumai dhaan!!
Naan konjam late- ilati u cud have made things easier...
:) Rombaaaaaaaaa nalavar pola!!////


வாங்க மருதம்,

ரொம்பநாள் கழிச்சு வந்திருக்கீங்க....:)

நான் எப்பவும் நல்லவந்தாங்க... வேணுமின்னா நம்ம நாட்டாமை'க்கிட்டே கேட்டு பாருங்க :)

said...

//வாங்க தூயா,

இந்த டெம்பிளேட் நான் செய்யலை.... கூகிளாண்டவரிடமிருந்து சுட்டது... :)////
அடப்பாவி...நானும் ஏதோ நம்ம ராம் செய்திருக்காரு என்று பெருமையா நினைச்சிட்டு இருந்தேன்..

said...

//அடப்பாவி...நானும் ஏதோ நம்ம ராம் செய்திருக்காரு என்று பெருமையா நினைச்சிட்டு இருந்தேன்..//

அந்தளவுக்கு என்னை பெரிய ஆளுன்னு நினைச்சு பார்த்தீருக்கீங்களே...

ஒங்கட இந்த அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்னோ??? :)))))))))))

said...

ஹி ஹி பெரிசா ஒன்னும் செய்ய வேணாம் ராமு பையா...முடிந்தால் அழகான ஒரு டெம்ப்ளட் சுட்டு (அது தான் சொந்தத்தில முடியாதுன்னு ஆகி போச்சே)குடுங்களேன்...போற வழிக்கு புண்ணியமா போகும் ;)