மஞ்சுவிரட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு கொஞ்சவருஷத்துக்கு முன்னாடி வேடிக்கை பார்க்க போயிருந்தோம். பின்னே நீயெல்லாம் என்ன மாடு பிடிக்கவா போயிருக்க போறேன்னு காமெடியெல்லாம் பண்ணபிடாது. என்னாங்கய்யா வருச வருசமும் மாடு தலை தெறிக்க ஓடி வருது ,அதுக பின்னாடி நாலு பேத்திலிருத்து நாப்பது பேரு வரைக்கும் ஓடி விரட்டுறாங்க. அதிலே யாருக்கும் பிடி குடுக்கமே ரெண்டு பேத்தயாவது கொம்பாலே குத்தி கிழிக்குது, இல்லேன்னா தூக்கி விட்டுடெறியது, இப்பிடியெல்லாம் செய்தியா டிவியிலே பார்த்திட்டு இல்லேன்னா நீயூஸ் பேப்பரிலே படிச்சு பார்த்திட்டு வீரம் பொங்கோன்னு பொங்கி என்னாடா நம்மளே மாதிரி இருக்கிற மனுசங்க தானே அந்த வீரவிளையாட்டெல்லாம் விளையாடுறாங்க.
நம்மளும் ஓரமா கொஞ்சகாணு ஒரு இடத்தே பிடிச்சு வேடிக்கை பார்த்துட்டு வந்திரலாமின்னு எங்க கோஷ்டியிலே முடிவு பண்ணி அலங்காநல்லூர்'க்கு வண்டி கட்டுனோம், அப்போல்லாம் பாண்டிய மகாராசா பேரு போட்டுதானே ஊருக்குள்ளே பஸ்ஸெல்லாம் ஓடும். அதிலே படி ஏறுற இடத்திலே கிடைச்ச இம்முனுகாணு இடத்திலே நாலு பேரு தொங்கிட்டு போனோம், மருத சனம பூராப் பேரும் பஸ்ஸிலே இருக்கிறமாதிரி பேக்கூட்டமய்யா. ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு மணிநேரத்துக்குள்ளே போயி சேர்ந்தாச்சு, ஆனா அதுக்குள்ளே எங்களை மாதிரியே கொள்ள சனங்க அங்கேனே காத்து கிடந்தாங்க.
ம்ஹீம் சீக்கிரமே வந்தாச்சு, வந்ததுக்கு ஜல்லிக்கட்டை பத்தி ஏதாவது தகவல் சேகரிக்கனுமின்னு நாலஞ்சு பேத்துக்கிட்டே விசாரிச்சாம், முதலில் சிக்கினது ஒரு வயதான பெரியவர்:
"ஐயா , எதுக்கு மாட்டை துரத்திறதுக்கு ஜல்லிக்கட்டுன்னு பேரு வைச்சிங்க???"ன்னு எடுத்தவுடனே எகத்தாளமா ஒரு கேள்வி கேட்டோம், அதுக்கு அந்த பெரியவர் ஒன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன்னு சொல்லுறமாதிரி பார்வை பார்த்திட்டு "அப்பே அது ஜல்லியில்லே சல்லி!!!! அந்தகாலங்களில் நம்ம புழங்குற காசுக்கு சல்லின்னு பேரு இருந்தாச்சு, அதே முடிப்புலே கட்டி மாட்டு கழுத்திலே தொங்கவிட்டுறுவாங்க, அதே அத்திட்டு வர்றதுக்குதானோ என்னவோ சல்லிக்கட்டுன்னு வந்துச்சு"ன்னு பதில் சொன்னாரு. "அப்பிடியா நாமேதான் சொல்வழக்கிலே சல்லிக்கட்டே ஜல்லிக்கட்டு'ன்னு சொல்லுறோமோ?? சரிய்யா அதெயென் மஞ்சு விரட்டுன்னு பேரு வந்துச்சு"ன்னு அடுத்த கேள்வி கேட்டோம்.
"ஏலே எதயும் உருப்படியா தெரிச்சு வைச்சிருக்கமாட்டிங்களா, பட்டணத்திலே இருக்கிற பயலுக பூராவும் இப்பிடிதாய்யா போட்டு கொடாய்றீங்க, மஞ்சுவிரட்டுன்னா மஞ்சின்னு ஒரு மாலை செஞ்சு மாட்டுக கழுத்திலே தொங்கவிட்டுறுப்பாக, அதே அத்தெறியிற தானாலே கூட அந்த பேரு வந்திருக்கலாம் ,ஆனா முழுசா தெரியாதுப்பே"ன்னு ஜகா வாங்கிருச்சு பெருசு. அடுத்தடுத்து அவர் சொல்லுற பதிலிலே மேலும் தெரிஞ்சுக்கிறனுமின்னு ஆர்வத்திலே நிறைய கேள்வி கேட்டோம், அதிலே இப்போதைக்கு எனக்கு ரெண்டு மூணு தான் ஞாபகத்திலே இருக்கு.
வாடிவாசல்'ன்னா மாடுக வரிசையிலே வர்றதுக்காக பிரத்யோகமா அமைக்கப்பட்ட கொஞ்சம் குறுகலான வாசல், அது முனியாண்டி கோயில் சன்னதிக்கு ஓட்டி இருக்கும், இன்னும் வாடிவாசல் பத்தி விளக்கமா சொன்னாரு நாந்தான் மறந்திட்டேன். எதுக்கு இந்த ரத்தம் பார்க்கிற விளையாட்டுன்னு கேட்டதுக்கு "தமிழனுக்கு வீரந்தாய்யா அழகு, விலை ஒசந்த சொக்கா மாட்டுனா அழகாயிருவானா தமிழன்???, தமிழன் தன்னோட வீரதீரத்தை உலகத்துக்கு நிருபிச்சு காட்டுற விளையாட்டு தான் இந்த மஞ்சுவிரட்டு பந்தயமெல்லாம்!."
அவருக்கிட்டே பேசிமுடிச்சிட்டு அங்கே நடக்கிற எல்லாத்தையும் கவனிக்க ஆரம்பிச்சோம்.மாடுகளுக்கு நல்ல அலங்காரம் செய்யப்பட்டு கொம்பை ஊசி முனைக்கு ஈடா தீட்டி செதுக்கிவிட்டுறுந்தாங்க, அதுப்போக மாடுக மேலே கலர்ப்பொடிகளை தூவி கொம்புக்கு வர்ணம் பூசி கூட்டத்திலே ஓடிவர்றப்போ அடையாளம் தெரியதுறக்காக அந்த அலங்காரமெல்லாம் உபயோகப்படும். இப்பிடியே பிராக்கு பார்த்திட்டே இருக்கிறப்போ விரட்டு ஆரம்பிக்க போகுதுன்னு சொன்னவுடனே ஓடிப்போயி ஒரு கரண்டு கம்பத்துக்கிட்டே இருந்த சின்ன இடத்திலே ரெண்டு பேரும் தொங்கிட்டே பார்த்தோம், அப்பிடியே நேரமாக நேரமாக முண்டியடிச்சு முன்னுக்கு வந்து மாடு ஓடி வர்ற பாதைக்கு முன்னாடி வந்துச்சாசு, ஆஹா நாம்மெல்லும் வீரதீரத்தே நிருபிச்சு முன்னுக்கு வந்தாச்சுன்னு நினைச்சா அதுதான் வினையே.
மாடு ஓடி வர்றப்போ தூசி அம்புட்டும் நம்மதலையிலே விழுகுது, எல்லாப்பேரும் முண்டியடிச்சு பார்க்கனுமின்னு வந்து நம்ம மேலேதாய்யா சாயறாய்ங்கே, அந்தா இந்தாதான் ஜல்லிக்கட்டு ஆரம்பிச்சதது, யப்பே என்னா சத்தம், ஆராவாரம் ஒவ்வோரு மாடும் வாடிவாசலிருந்து வெளியே வர்றோப்போ பார்க்க நமக்கு உசுரு போயி திரும்ப வருது.
ஆனா வாசலில் மேலே உடகார்த்திட்டு மாடு வெளியே வந்ததும் சடக்கென்னு கிழே குதிச்சு அது மதிலை பிடிக்க பின்னாடியே துரத்தி ஓடுறாங்ங்க, அதுக என்னாடானா மூர்க்கதனமா எல்லாபேரையும் தூக்கி எறியுதுக, கிழே விழுந்தும் நம்ம பயலுக அதுகளை விடவே கூடாதுன்னு பின்னாடியே ஓடி மறுபடியும் மதிலை தவ்வி சவாரி போறாங்க. அதிலே ஆனா அமளிதுமளியிலே எல்லாக்கூட்டமும் ஒன்னுக்குமேலே ஒன்னா விழ சாமி அன்னிக்கு உசுரு தப்பினதே பெரியவிசயம்.
17 comments:
எதோ உன் வீரம் தீரம் எல்லாம் பயன்படுத்தி மாடு புடிக்கல்லன்னாலும் மாடு புடிக்கற விவரத்தை நல்லாத் தான் புட்டிச்சுட்டு வந்துறுக்கே நல்லாயிருக்கு அம்புட்டு போட்டோவும் நீ எடுத்தீயா?
இப்படி வேடிக்கை பார்த்துட்டு வந்ததுக்கு தான் போன பதிவுல அவ்வளவு பில்டப்பா?? ;))
நல்லா விவரமா எழுதியிருக்கீங்க ராயல்..
//எதோ உன் வீரம் தீரம் எல்லாம் பயன்படுத்தி மாடு புடிக்கல்லன்னாலும் மாடு புடிக்கற விவரத்தை நல்லாத் தான் புட்டிச்சுட்டு வந்துறுக்கே நல்லாயிருக்கு அம்புட்டு போட்டோவும் நீ எடுத்தீயா? //
வாங்க தேவ்,
என்ன இப்பிடி வீரதீரத்தே பத்தி இப்பிடி கேட்டு பிட்டிங்க, அன்னிக்கு வேடிக்கை பார்க்கவே எம்புட்டு தெகிரியம் வேணுமின்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
அப்புறம் போட்டோவேல்லாம் ஜல்லிப்பதிவிலே இருக்கிற சுட்டியிலே இருந்து சுட்டது. :)
சரி, போன பதிவுக்கு இது கொஞ்சம் பெட்டர். வெறும் படத்தைப் போட்டு ஓப்பேத்தலை.
சரி, இப்படி'சல்லிக்கட்டு' சமாச்சாரத்தைப் பத்தி ரெண்டு பதிவு போட்டு சமாளிச்சாச்சு. அம்புட்டுதானா, இன்னும் இருக்கா?
அப்புறம் வெண்பா எழுதப் போறேன்னு கேள்விப் பட்டேன். வாழ்க வளமுடன். :)
//இப்படி வேடிக்கை பார்த்துட்டு வந்ததுக்கு தான் போன பதிவுல அவ்வளவு பில்டப்பா?? ;))
நல்லா விவரமா எழுதியிருக்கீங்க ராயல்.. //
வாப்பா கப்பி நிலவா,
நம்ம ஊரு பக்கம் நடக்கிற வீரதீர பராக்கிரமத்தை நம்மை சொல்லாமே வேறே யாரும் சொல்லுறதுக்கு முன்னாடியே நான் முந்திக்கிட்டேன், :)
//சரி, போன பதிவுக்கு இது கொஞ்சம் பெட்டர். வெறும் படத்தைப் போட்டு ஓப்பேத்தலை. //
வாங்க கொத்ஸ்,
அது சோதனைப் பதிவு புது பிளாக்கர் மாத்தினதுக்காக ஜல்லியடிச்சது... :)
//சரி, இப்படி'சல்லிக்கட்டு' சமாச்சாரத்தைப் பத்தி ரெண்டு பதிவு போட்டு சமாளிச்சாச்சு. அம்புட்டுதானா, இன்னும் இருக்கா? //
இல்லே அம்புட்டுதான், அதே பத்தி தெரிஞ்சு வைச்சிருந்த சரக்கு தீர்ந்து போயிருச்சு. :)
//அப்புறம் வெண்பா எழுதப் போறேன்னு கேள்விப் பட்டேன். வாழ்க வளமுடன். :) //
வாத்தி இருக்க எனக்கு கவலையில்லை :)
ஆகா சல்லிகட்டு,மஞ்சி விரட்டு பத்தி நல்லா எழுதி இருக்கீங்க...
//பேப்பரிலே படிச்சு பார்த்திட்டு வீரம் பொங்கோன்னு பொங்கி//
அப்படிதான் நானும் ஒரு மூனு தடவ போய்ருக்கேன் அலங்காநல்லூருக்கு அப்புறம் நம்ம வீரத்த பாத்து மாடுக பயப்படுதுன்னு சொன்னாங்க அதுனால் தள்ளி நின்னு வேடிக்கை மட்டும் பார்திட்டு வந்துருவேன்...:-)
போன பதிவில பொங்கல் வாழ்த்து சொல்றதுக்கு பதிலா புத்தாண்டு வாழ்த்து சொல்லிட்டேன்...ஸ்பெல்லிங் மிஸ்டேக் :-)
அத்தனை காளைகள் சேர்ந்து ஒரு காளைய அடக்குறதுக்கு பேரு வீரமா?
அப்போ வெற்றி யாருக்கு போய் சேரும்?
ஒரு காளை ஒரு ஆளு அப்படி அடக்கினா ஒத்துக்கலாம்.
வேடிக்கை பாக்குறதுக்கு கூட தெகிரியம் வேணும்னு தெரிஞ்சிகிட்டேன்.
நல்ல பதிவு.
நான் போன பதிவுல போட்ட கமெண்ட்ட போடவே இல்ல...
ம்ம்ம்.. அதே கெமெண்ட் இங்கேயும்... மாட்டுக்கு நன்றின்னு சொல்லிட்டு, அந்த மாட்ட இந்த பாடு படுத்துறீங்களே... மதுர பக்கம்லாம் சோனியா காந்தி பொண்ணு வர மாட்டாங்களா?
அப்புறம்.. அருமையா செய்திய சேகரிச்சிருக்கீங்க :))
//பின்னே நீயெல்லாம் என்ன மாடு பிடிக்கவா போயிருக்க போறேன்னு காமெடியெல்லாம் பண்ணபிடாது.//
வெட்கக் கேடு...மானக் கேடு. ஒரு வீரன் நீ...இந்நேரம் ஒரு பத்து காளையைப் புரட்டிப் போட்டுட்டு இந்தப் பதிவைப் போட்டிருந்தீன்னா அதை பாத்து சந்தோஷப் பட்டிருப்பேன். இப்படி நம்ம வீரத்தைச் சந்தி சிரிக்க வச்சிட்டியே? இருந்தாலும் போட்டா படமெல்லாம் நல்லாவே இருக்கு. அதுனால ஒன்னை மன்னிச்சு விட்டுடறேன்.
//"மஞ்சுவிரட்டு" //
எந்த மஞ்சு?????
//நான் போன பதிவுல போட்ட கமெண்ட்ட போடவே இல்ல...//
ஜி,
எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே! இது உங்களுக்கு பிடித்த வசனமா?
ஹாய் ராம்,
மதுரையில நடந்த ஜல்லிக் கட்டுல உங்க வீரத்தை விட, அதை பதிவுல நீங்க சொன்ன விதம் (antha slang)
ஆஹா.. எனக்கு ரொம்ப பிடிச்சுதுங்க.
waiting for your sudar post :-)
hai i am heartly welcome in my village
Post a Comment