Wednesday, March 7, 2007

மடச்சாம்பிராணி'யின் பா.கே.ப.பி

பொன்ஸ்'க்கா என்னிடம் ஒப்படைத்த, பார்த்ததில், கேட்டதில் படித்ததில் பிடித்தது சங்கிலித்தொடர்'க்கு என்னத்தை எழுதலாமின்னு யோசிச்சி யோசிச்சு பார்த்தேன், அப்புறந்தான் தெரிஞ்சது முளை இருக்கிறவங்க யோசிச்சாதான் எதாவது வரும், என்னைமாதிரி காலிமனை கோஷ்டிகளுக்கெல்லாம் ஒன்னுமே தோணாதுக்கிற உலக ரகசியத்தை ரொம்ப நேரமா விட்டத்தை வெறிச்சு பார்த்திட்டே ஒரு பேனா கையிலே பிடிச்சிட்டு அதை வேற முகவாட்டுலே தட்டிக்கிட்டே இருந்தப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

"என்னத்தை படிச்சாலும் நீ ஒன்னத்தக்கும் தேறதே மடசாம்பிராணியா இருக்கே...? நாலு நல்ல விஷயத்தையாவது பார்த்து தெரிஞ்சுக்கோ அதிலே என்ன புதுவிஷயமிருக்கோ அதை கத்துக்கோ..!!" இது எங்கப்பா சன்ரைஸ் விளம்பரத்திலே வர்றமாதிரி அடிக்கடி உபயோகப்படுத்துற வார்த்தைகள்.. அதை பொறுமையா கேட்டாலும் இன்னமும் மடசாம்பிராணியாதான் இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சது :)

ஓகே ஸ்டார்ட் மீசிக்....பார்த்ததில்:-

ரஜினி ரஜினியாய் நடிச்ச எல்லாப்படங்களும் பிடிக்கும்.
ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், காயத்திரி......

கமலின் மிகைப்படுத்தபடாத நடிப்பில் வந்த பல படங்கள் பிடிக்கும்.


இந்தி:-

ஷோலே

லகே ரஹோ முன்னாபாய்

டான் (original & Duplicate)


ஆங்கிலம்:-The Pied piper of Hamelin. (புத்தகத்திலே படிச்சதை விட படத்திலே நல்லா இருந்துச்சு)


ERIN BROCKOVICH (ஜீலியா ராபர்ட்ஸ்'க்காக பார்க்கலாமேன்னு பார்த்த படம், ஆனா படம் பார்த்ததுக்கப்புறம் ஜீலியா பேர் மறந்து "எரின்" தான் கண்ணுக்குள்ளே தெரிஞ்சாங்க)


The Matrix (Neo'வே லினக்ஸ் Tux'க்கு கற்பனை பண்ணிட்டு படம் பார்த்தேன்)

இன்னும் லேட்டஸ்டா இதை ரொம்பவே ரசித்தேன்...

கேட்டதில்:-


நாயகன் படத்திலே கமல் பாடிய "தென்பாண்டி சீமையிலே.."

திருமதி பழனிசாமி படத்திலே வர்ற "பாத கொலுசு பாடிவரும்"

ரோஜா படத்திலே வர்ற "தமிழா தமிழா.. நாளை உந்நாளே"

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஜெயசந்திரன் பாடிய "ஒரு தெய்வம்"

பிரிட்டனியக்கா குதிச்சு குதிச்சு பாடிய "ஓ பேபி பேபி"

JLO'வோட "வெயிடிங் ஃபார் டுநைட்"

ரிக்கியோட "மரியா...மரியா..."

படிச்சதிலே:-

--கல்கி--
பொன்னியின் செல்வன்,
சிவகாமியின் சபதம்,

--சாண்டில்யன்--
கடல்புறா,
கடல்ராணி,
யவனராணி,
இராஜதிலகம்,
........

--வைரமுத்து--
கள்ளிக்காட்டு இதிகாசம்,
கவிராஜன் கதை,
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்,
பெய்யெனப் பெய்யும் மழை,
தண்ணீர்தேசம்,
வில்லோடு வா நிலவே,
கருவாச்சி காவியம் (இன்னும் படிக்க கொஞ்சம் பக்கங்கள் இருக்கு)

--தபூசங்கர்--
விழியிர்ப்பு விசை,
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்,
திமிருக்கும் அழகென்று பெயர்,
எனது கருப்புப்பெட்டி,
மழையானவள் (இது ஓசிலே போயிருச்சு)

--இன்னும் சில--

வடிவேலுவின் "வடி வடி வேலு வெடிவேலு"
ஆண்டாள் பிரியதர்ஷணியின் "மன்மதஎந்திரம்"
சிசு செல்லப்பாவின் "வாடிவாசல்"
தா.பாண்டியனின் "சேகுவாரா"
புலவர் செம்பியன் நிலவழகனின் "பழகுதமிழ்ப் பாட்டெழுதும் பாங்கு"
முனைவர் தமிழ்ப்பிரியனின் "அனைவருக்கும் பயன்தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்"

--என்றென்றும்--

ஐயனின் திருக்குறள்..
முண்டாசு கவிஞனின் அனைத்தும்..


இவ்வளவு தூரம் படிச்சிங்களே... வழக்கம்போலே மொக்கதனமான பதிவாதான் இருந்துச்சுல்லே... அப்போ நான் மடச்சாம்பிராணிதான்னு நீங்க கன்பார்ம் பண்ணிக்கோங்க....

சரி அடுத்து இந்தமாதிரி எழுதச்சொல்லுறதுக்கு என் கண்ணு முன்னாடி வந்துப்போன உருவம், வரவனை'யிலிருந்து கிளம்பி இப்போதைக்கு தூத்துக்குடி கலங்கரைவிளக்காக இருக்கிற குட்டப்புஸ்கி செந்தில் தான்..... ;)

வாங்க வரவனையான், நீங்க குடிச்சதிலே பிடிச்சது வில்ஸ்பிட்டரும் & பழைய மங்கனுமின்னு எங்களுக்கு தெரியும் ஆனா பார்த்ததிலே பிடிச்சதும், கேட்டத்திலே பிடிச்சதும், படிச்சத்திலே பிடிச்சதும்....?? என்னென்னு சொல்லுங்க...

43 comments:

said...

அது என்னங்க அந்துமணி மேட்டர்.?

பொன்ஸ் அக்காதான் கேக்க சொன்னாங்க :))

சென்ஷி

said...

//நாயகன் படத்திலே கமல் பாடிய "தென்பாண்டி சீமையிலே.."//

எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு. ஏதாவது போட்டியில் என்னை பாடச்சொன்னால் என்னை அறியாமல் இப்பாட்டைத்தான் என் வாய் முனுமுணுக்கும். நடிகர் விக்ரம் கூட ஒரு பேட்டியில் தனக்குப் பிடித்த பாட்டு எனக்கூறியிருந்தார்.

said...

முதலில் சுடர், அடுத்தது இந்த சங்'கிலி'த் தொடர். இப்படி யாராவது வந்து கூப்பிட்டாதான் எழுதற! இல்லைன்னா இந்தப் பக்கமே காணறது இல்லை. என்ன மேட்டர்? செட் ஆயிருச்சா? ;))

said...

கிட்டதட்ட என்னுடைய வரிசையும் இதுதான் ரெண்டை தவிர்த்து(பிரிட்டனியக்கா குதிச்சு குதிச்சு பாடிய "ஓ பேபி பேபி"
JLO'வோட "வெயிடிங் ஃபார் டுநைட்- ஆங்கில பாடல் பக்கம்ரொம்ப போறதில்லை)

அப்புறம் ஒரூ சின்ன தகவல் பிழை


//கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் உன்னிமேனன் பாடிய "ஒரு தெய்வம்//

அது உன்னிமேனன் இல்லைங்க ஜெயசந்திரன்

said...

வெரிகுட். நம்மளைத்தவிர மீதி எல்லாரும் படிப்பாளியாத்தாம்யா இருக்காங்க..

செந்தழல் ரவி

said...

//அது என்னங்க அந்துமணி மேட்டர்.?

பொன்ஸ் அக்காதான் கேக்க சொன்னாங்க :))

சென்ஷி//

சென்ஷி.,

வாங்க நீங்க நம்ம பக்கத்துக்கு வர்றது இதுதான் மொததடவை... :)

அக்கா கேட்க சொன்னாங்க, ஆட்டுக்குட்டி கேட்க சொன்னாங்கன்னு என்ன சின்னப்புள்ளதனமா... போயி என்னோட பழைய பதிவை படிச்சு பாருங்க... அதிலே நம்ம கொலைவெறி படை தலைவர் என்னை விரட்டி விரட்டி அடிச்சிருப்பாரு :)

said...

//
எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு. ஏதாவது போட்டியில் என்னை பாடச்சொன்னால் என்னை அறியாமல் இப்பாட்டைத்தான் என் வாய் முனுமுணுக்கும். நடிகர் விக்ரம் கூட ஒரு பேட்டியில் தனக்குப் பிடித்த பாட்டு எனக்கூறியிருந்தார்.//

வாங்க தங்கவேல்,

உங்களை மாதிரி தான் நானும் என்னையறியமாலே பாட்டை முணுமுணுத்திட்டே இருப்பேன்....:)

வருகைக்கு மிக்கநன்றி....

said...

//முதலில் சுடர், அடுத்தது இந்த சங்'கிலி'த் தொடர். இப்படி யாராவது வந்து கூப்பிட்டாதான் எழுதற! இல்லைன்னா இந்தப் பக்கமே காணறது இல்லை. என்ன மேட்டர்? செட் ஆயிருச்சா? ;)) //

வாங்க கொத்ஸ்,

என்னப் பண்ணுறது, ஆணிப்பிடுங்குற இடத்திலே ரெண்டு வெடிக்குண்டே விசினா தான் சரியா வருவானுக போலே... நம்மை மேலே இருக்கிற பயம் கொஞ்சம் கொஞ்சமா போயி இப்போ நம்மையே வேலை பார்க்க சொல்லுற அளவுக்கு வளர்ந்துட்டானுக.. ஹிம் இன்னும் ரெண்டு மாசத்திலே அப்ரைசல்'க்கிற ஒரே காரணத்துக்காக தான் அதெய்யல்லாம் பொறுத்துட்டு போகிறமாதிரி இருக்கு :)

அப்புறம் செட் அதுஇது'ன்னு பத்தவைச்சாச்சா??? நல்லா இருக்கங்கய்யா:)

said...

//கிட்டதட்ட என்னுடைய வரிசையும் இதுதான் ரெண்டை தவிர்த்து(பிரிட்டனியக்கா குதிச்சு குதிச்சு பாடிய "ஓ பேபி பேபி"
JLO'வோட "வெயிடிங் ஃபார் டுநைட்- ஆங்கில பாடல் பக்கம்ரொம்ப போறதில்லை)//

வாங்க மீனா..

முதன்முறை வருகைக்கு மிக்க நன்றிங்க.... நானும் எப்போவோ தான் இங்கிலிபிசு பாட்டெல்லாம் கேட்கிறது... ஆனா இன்னவரைக்கும் அதுக்கெல்லாம் அர்த்தம் ஒரு வரிக்கூட தெரியாது :)

//அப்புறம் ஒரூ சின்ன தகவல் பிழை


//கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் உன்னிமேனன் பாடிய "ஒரு தெய்வம்//

அது உன்னிமேனன் இல்லைங்க ஜெயசந்திரன் //

சரி பண்ணிட்டேன்... அது நைட் 2.30 மணிக்கு டைப் பண்ணினது... தூக்க கலக்கத்திலே டெக்னிக்கல் பால்ட் ஆகிருச்சு :)

said...

//ஷோலே

லகே ரஹோ முன்னாபாய்

டான் (original & Duplicate)//

அண்ணே நாம பாத்ததே இந்த மூணு படமாத்தான் இருக்கும், பில்டப்பு கொஞ்சம் ஓவரா இருக்கே!

கடைசியா நீங்க பாத்த இங்கிலிஸ் படம்???

அது என்னப்பா சுடரேத்துரிங்க, பாத்தது கேட்டதுன்னு கலக்கறிங்க நம்ம பக்கம் ஒண்ணும் வரமாட்டிகிதே... :((

said...

முள்ளும் மலரும் எனக்கும் மிகவும் பிடித்த படம். படமென்று சொல்வதை விட அதைக் காவியம் என்று சொல்வேன். காயத்ரியும் ஓரளவு நல்ல படமே. சரியாக வெற்றி பெறவில்லை என நினைக்கிறேன். பாடல்கள் எல்லாம் பிரமாதமாக இருக்கும். குறிப்பாக பி.எஸ்.சசிரேகா பாடிய "வாழ்வே மாயமா வெறுங்கனவா கடும்புயலா" என்ற பாடலும் சுஜாதா பாடிய "காலைப் பனியில் ஆடும் மலர்கள்" என்ற பாடலும் மிக அருமை.

வைரமுத்துவோட ரசிகர் போல நீங்க?

said...

//நம்ம கொலைவெறி படை தலைவர் என்னை விரட்டி விரட்டி அடிச்சிருப்பாரு :)//

இண்ட்ரஸ்டிங்கான மேட்டரா இருக்கும் போல இருக்கே? லிங்க் கொடுக்க முடியுமா?

said...

//வெரிகுட். நம்மளைத்தவிர மீதி எல்லாரும் படிப்பாளியாத்தாம்யா இருக்காங்க..

செந்தழல் ரவி //

வாங்க கொலைவெறி படை தலைவரே!

என்னாதிது அதர் ஆப்சனிலே வந்திருக்கீங்க... பிளாக்கர் இன்னும் எதாவது பிரச்சினை பண்ணுதா? :)))

என்னமோ படிப்புன்னு சொல்லிருக்கீங்க.... அதை என்னை பொறுத்தவரைக்கும் கதை புத்தகம்தானே சொல்லிருப்பிங்கன்னு நினைக்கிறேன் :)

said...

////ஷோலே

லகே ரஹோ முன்னாபாய்

டான் (original & Duplicate)//

அண்ணே நாம பாத்ததே இந்த மூணு படமாத்தான் இருக்கும், பில்டப்பு கொஞ்சம் ஓவரா இருக்கே!//

வாப்பா தங்கக்கம்பி,

என்னப்பா இப்பிடி கேட்டுப்பிட்டே... எனக்கு இந்தி தெரியாதுதான் ஆனா அதுக்காக இப்பிடியா ஓட்டுறது...?

//கடைசியா நீங்க பாத்த இங்கிலிஸ் படம்???//

ஹிஹி Casino Royale

//அது என்னப்பா சுடரேத்துரிங்க, பாத்தது கேட்டதுன்னு கலக்கறிங்க நம்ம பக்கம் ஒண்ணும் வரமாட்டிகிதே... :(( //

என்னப்பா இப்பிடி பீலிங்ஸே போடுறே? நீ இம்புட்டு ஆர்வமா இருக்கிறேன்னு தெரிஞ்சிருந்தா சுடர் or இல்லேன்னா இதைக்கூட ஒனக்கு Tag எடுத்துருப்பேனே??? :)

said...

//முள்ளும் மலரும் எனக்கும் மிகவும் பிடித்த படம். படமென்று சொல்வதை விட அதைக் காவியம் என்று சொல்வேன்.//

வாங்க ஜிரா,

அந்த படத்தோட இயக்குனர் மகேந்திரனுக்கே அவரு டைரக்ட் பண்ணின படத்திலே இது ரொம்ப பிடிச்ச படமின்னு சொல்லிருக்காரு :)

//காயத்ரியும் ஓரளவு நல்ல படமே. சரியாக வெற்றி பெறவில்லை என நினைக்கிறேன். பாடல்கள் எல்லாம் பிரமாதமாக இருக்கும். குறிப்பாக பி.எஸ்.சசிரேகா பாடிய "வாழ்வே மாயமா வெறுங்கனவா கடும்புயலா" என்ற பாடலும் சுஜாதா பாடிய "காலைப் பனியில் ஆடும் மலர்கள்" என்ற பாடலும் மிக அருமை.//

காய்த்ரி படத்துக்கு கதை எழுதினது சுஜாதா'ன்னு நினைக்கிறேன்... :)

//வைரமுத்துவோட ரசிகர் போல நீங்க? //

ஹிம் ஆமாம்.... அவரை தவிர இன்னும் நிறைய எழுத்தாளர்களோட புத்தகங்களும் படிப்பேன் :)

said...

/இண்ட்ரஸ்டிங்கான மேட்டரா இருக்கும் போல இருக்கே? லிங்க் கொடுக்க முடியுமா? //

வாங்க லக்கிண்ணே...

எதுக்குண்ணே அந்த சொ.செ.செ மேட்டரு இப்போ??? :)

said...

//இல்லைன்னா இந்தப் பக்கமே காணறது இல்லை. என்ன மேட்டர்? செட் ஆயிருச்சா? //

நானும் வழிமொழிகிறேன் :-)

said...

அந்த ERIN காக எத்தனை தடவ வேணும்னாலும் ERIN BROCKOVICH பாக்கலாம் :-)

said...

////இல்லைன்னா இந்தப் பக்கமே காணறது இல்லை. என்ன மேட்டர்? செட் ஆயிருச்சா? //

நானும் வழிமொழிகிறேன் :-) //

வாங்க 12B,

நான் பேச்சிலரா இருக்கிறது புதரகத்திலே இருக்கிறவங்களுக்கு பிடிக்கலை போலே :(((

//அந்த ERIN காக எத்தனை தடவ வேணும்னாலும் ERIN BROCKOVICH பாக்கலாம் :-)//

உங்களுக்கும் அந்த படம் பிடிந்திருந்ததா??? அந்த படத்துக்காக ஜீலியா'வுக்கு ஆஸ்கர் விருது கிடைச்சது... :)

said...

//நான் பேச்சிலரா இருக்கிறது புதரகத்திலே இருக்கிறவங்களுக்கு பிடிக்கலை போலே :(((//

ஆமாய்யா ஆமாம். விரைவில் பேச்சிலர் என்ற பதவி போயி 'பேச்சு இலர்' என்ற பதவி வர வாழ்த்துக்கள்!

said...

தல...

முதல்ல சுடர், இப்ப சங்கிலின்னு எதையாவது கையில வச்சிக்கிட்டே இருக்கீங்க ;)))

படம், பாடல்ன்னு.....அப்புறம் வைரமுத்துன்னு நமக்கும் புடிச்ச விஷயத்தை சொல்லியிருக்கீங்க....

said...

//முதலில் சுடர், அடுத்தது இந்த சங்'கிலி'த் தொடர். இப்படி யாராவது வந்து கூப்பிட்டாதான் எழுதற! இல்லைன்னா இந்தப் பக்கமே காணறது இல்லை. என்ன மேட்டர்? செட் ஆயிருச்சா? ;))//

ஓ இது தான் மேட்டரா??? ;)

அண்ணே ஏதாவது விசேஷம்னா சொல்லிவிடுங்கண்ணே! பட்டைய கிளப்பிடலாம்... சரியா???

said...

Superb Ram... unga fav songs enakkum pudikkum..

said...

//உங்களுக்கும் அந்த படம் பிடிந்திருந்ததா??? அந்த படத்துக்காக ஜீலியா'வுக்கு ஆஸ்கர் விருது கிடைச்சது...//

ராயலு நான் அந்த படத்த பாக்கல...நீங்க பதிவுல போட்டுறுந்த படத்த சொன்னேன் :-)

said...

//நான் பேச்சிலரா இருக்கிறது புதரகத்திலே இருக்கிறவங்களுக்கு பிடிக்கலை போலே//

பேச்சிலரா இருக்கறவங்க தாய்யா செட் பண்ண முடியும்...நாங்க எல்லாம் நினைச்சா கூட முடியுமா.... :-)

said...

//ஆமாய்யா ஆமாம். விரைவில் பேச்சிலர் என்ற பதவி போயி 'பேச்சு இலர்' என்ற பதவி வர வாழ்த்துக்கள்//

அப்படி போடுங்க கொத்ஸ் அருவாள
:-)

said...

ivvalavu books padichirukeenggala, Raam?

said...

//முதலில் சுடர், அடுத்தது இந்த சங்'கிலி'த் தொடர். இப்படி யாராவது வந்து கூப்பிட்டாதான் எழுதற! இல்லைன்னா இந்தப் பக்கமே காணறது இல்லை. என்ன மேட்டர்? செட் ஆயிருச்சா? ;)) //

ada.. ada.. ithai nanum kedkanumnnu nenachen.. sollungga raam.. :-)

said...

//படிச்சதிலே:-//

இம்மாம் படிச்சு இருக்கியா நீ. இவ்வளவு பெரிய தில்லாங்கடினு எனக்கு தெரியாம போச்சே

said...

//ஆமாய்யா ஆமாம். விரைவில் பேச்சிலர் என்ற பதவி போயி 'பேச்சு இலர்' என்ற பதவி வர வாழ்த்துக்கள்//


ஏன்னய்யா நீ ராயல் ராம்ல் இருந்து ராயல் ராபாட்டாக மாறி மேட்டர இவங்களுக்கு தெரியாதா என்ன?

said...

/ஆமாய்யா ஆமாம். விரைவில் பேச்சிலர் என்ற பதவி போயி 'பேச்சு இலர்' என்ற பதவி வர வாழ்த்துக்கள்! //

கொத்ஸ்,

இது பார்க்கிறதுக்கு வாழ்த்துக்கள் சொல்லுறமாதிரியே இல்லியே??? :)))

said...

ராம் நீங்க இவ்வளவு புத்தகம் படிப்பீங்களா?நீங்கள் ஒரு மடச்சாம்பிராணி என்று கூப்பிட மனம் வரவில்லை.நண்பராக போய் விட்டீர்கள்...:)))
//ஏன்னய்யா நீ ராயல் ராம்ல் இருந்து ராயல் ராபாட்டாக மாறி மேட்டர இவங்களுக்கு தெரியாதா என்ன//


ராம் ரொம்ப ஓவராக ஆணி புடுங்கிட்டீங்களோ!!!!

said...

//தல...

முதல்ல சுடர், இப்ப சங்கிலின்னு எதையாவது கையில வச்சிக்கிட்டே இருக்கீங்க ;)))//

வாங்க கோபி,

நம்மளையும் மதிச்சு கூப்பிட்டு எழுதச்சொல்லிருக்காங்க.... ஹி ஹி அதுதான் எழுதி போட்டாச்சு :)

//படம், பாடல்ன்னு.....அப்புறம் வைரமுத்துன்னு நமக்கும் புடிச்ச விஷயத்தை சொல்லியிருக்கீங்க....//

ஆஹா.. எனக்கும் பிடிச்சதிலே ஒங்களைமாதிரி பெரிய மனுசகளுக்கெல்லாம் பிடிச்சதிலே அடியேன் தன்யனானேன்... :)

said...

//ஓ இது தான் மேட்டரா??? ;)//

வாய்யா இளையதளபதி,

மேட்டரு, சட்டரு'ன்னு ஏதாவது ஒன்னை வச்சு காமெடி பண்ணலை'ன்னா உங்களுக்கு பொழுது போகதே???? இதுக்கு நானும் எடுக்கிறேய்யா ரிவெஞ்ச் :))

//அண்ணே ஏதாவது விசேஷம்னா சொல்லிவிடுங்கண்ணே! பட்டைய கிளப்பிடலாம்... சரியா??? //

கட்டாயமா சொல்லுறேய்யா... :(

said...

//Superb Ram... unga fav songs enakkum pudikkum.. //

வாங்க தூயா,

நன்றி உங்களின் வருகைக்கும், கருத்து பகிர்மைக்கும்... :)

said...

//ராயலு நான் அந்த படத்த பாக்கல...நீங்க பதிவுல போட்டுறுந்த படத்த சொன்னேன் :-) //

அதுசரி.. ஜீலியா ராபார்ட்ஸ் நடிச்ச இன்னொரு படம் பார்த்தீங்களா??? ரொம்ப சூப்பரா இருக்கும்.. ஹி ஹி

//பேச்சிலரா இருக்கறவங்க தாய்யா செட் பண்ண முடியும்...நாங்க எல்லாம் நினைச்சா கூட முடியுமா.... :-) //

என்னப்பண்ணுறது.. நானும் பெண்களூரூலே மூணு வருசமா இருக்கேன்... ஒன்னும் நடக்கலை.. :(
அதை நினைச்சா சமயத்திலே பீலீங்ஸா இருக்கும் :(

//அப்படி போடுங்க கொத்ஸ் அருவாள //

அவரு பத்த வைச்சிட்டு போயிருக்காரு...நீங்க அதை நல்லா ஊதி கொளுத்தி விட்டுட்டு போங்க... புலி வேறே வந்து இன்னும் கொஞ்சம் ஜெகஜோதியா ஏத்திவிட்டுருக்கு :((

said...

//ivvalavu books padichirukeenggala, Raam? //

வாங்க் ஃபிரண்ட்,

இன்னும் நிறைய படிக்கவேண்டிய புத்தகளும் இருக்குங்க.... :)

/ada.. ada.. ithai nanum kedkanumnnu nenachen.. sollungga raam.. :-) //

அடடா...இன்னுமொரு ஆளா.. நடத்துங்க..

எல்லாரும் சேர்ந்து என்னையே வெச்சு காமெடி பண்ணனுமீன்னு முடிவு பண்ணிட்டிங்க... அதிலே வேற என்ன சொல்லுறது :)

said...

/இம்மாம் படிச்சு இருக்கியா நீ. இவ்வளவு பெரிய தில்லாங்கடினு எனக்கு தெரியாம போச்சே //

வா புலி,

என்னய்யா? பொஸ்தகத்தை படிச்சே தில்லாங்கடியா... என்னோமே போ.. :)

//ஏன்னய்யா நீ ராயல் ராம்ல் இருந்து ராயல் ராபாட்டாக மாறி மேட்டர இவங்களுக்கு தெரியாதா என்ன? //

என்ன அவ்வோளோதானா இல்லே இன்னுமிருக்கா???

said...

//ராம் நீங்க இவ்வளவு புத்தகம் படிப்பீங்களா?நீங்கள் ஒரு மடச்சாம்பிராணி என்று கூப்பிட மனம் வரவில்லை.நண்பராக போய் விட்டீர்கள்...:)))//


வாங்க துர்கா,

முதன்முறையா வந்து இருக்கீங்க... நானெல்லாம் பொஸ்தகம் படிச்சும் தேறாத மடச்சாம்பிராணி தாங்க :)
//ராம் ரொம்ப ஓவராக ஆணி புடுங்கிட்டீங்களோ!!!! //

ஹிம் என்னத்தை சொல்ல... ஆபிஸிலே இந்த டேமேஜருக தொல்லை தாங்கமுடியலை :(

said...

//வாங்க துர்கா,

முதன்முறையா வந்து இருக்கீங்க... நானெல்லாம் பொஸ்தகம் படிச்சும் தேறாத மடச்சாம்பிராணி தாங்க //

ராம் இதில் இருந்து எனக்கு ஒன்று தெரிகின்றது.உங்களுக்கு என்னைப் பற்றி தப்பு தப்பாக புரிந்து வைத்து இருக்கின்றீர்கள்.கிழே உள்ள சுட்டியை பாருங்கள்.உங்களுக்கு தன்னடக்கம் அதிகம்.அதனால்தான் உங்களை போல ஒரு மேதையை மடச்சாம்பிராணி என்று கூறுகின்றீர்கள்.
http://raamcm.blogspot.com/2007/01/blog-post_16.html

said...

ஆடின வரைக்கும் போதும், இந்தாங்க 40 :))))

said...

//ராம் இதில் இருந்து எனக்கு ஒன்று தெரிகின்றது.உங்களுக்கு என்னைப் பற்றி தப்பு தப்பாக புரிந்து வைத்து இருக்கின்றீர்கள்.கிழே உள்ள சுட்டியை பாருங்கள்.//

ஓ சாரி'ம்மா அவசரப்பட்டு ஏதோ ஒன்னு சொல்லிட்டேன் :) நீங்க வந்தது இப்போ ரெண்டாவது தடவை :)

//உங்களுக்கு தன்னடக்கம் அதிகம்.அதனால்தான் உங்களை போல ஒரு மேதையை மடச்சாம்பிராணி என்று கூறுகின்றீர்கள்.///

ஐயோ பாவம்.. உண்மையான மேதையெல்லாம் இதை படிச்சிட்டு சுவத்திலே முட்டிக்க போறாங்க :)


//ஆடின வரைக்கும் போதும், இந்தாங்க 40 :)))) //

டூ லேட் ஸ்டார்... :)

said...

//ரிக்கியோட "மரியா...மரியா..."
//

ricky = Santana. right?