Thursday, March 22, 2007

ஏலேய் நாங்கெல்லாம் மருதக்காரய்ங்கே!!

மதுரை அல்லது மருத என எம்மக்களால் அழைக்கப்படும் சுற்றுவட்டாரத்தின் கலாச்சாரத்தையும் பழக்கவழக்கத்தையும் பிறரிடம் கொண்டுசேர்க்கும் ஊடகங்களான ஏடுகளும்,திரைப்படங்களும் காலம்காலமாய் முயற்சித்து கொண்டுருக்கின்றன. அம்முயற்சியில் வெற்றியெனும் நிலையை அடைய முயற்சித்த திரைப்படம் தான் பருத்திவீரன்.

எம்மண்ணுக்கே உரிய அந்த புழுதிகலந்த காற்றும், எப்பவோ நீர் கண்டு அதைப்போலே திரும்ப கிடைக்குமான்னு எதிர்ப்பார்த்து காத்து கிடக்கும் கரிசல் நிலம்,முன்னோர் காலத்தில் கரை புரண்டு ஓடியதுன்னு அடையாளம் காட்ட வாய்க்கால் இப்பிடி எல்லாவகையும் அப்பிடியே அந்த மண்ணின் மணம் மாறாமல் பார்க்கும் கண்களில் விரியும் படியாகவே காட்சியமைப்புகளில் காண்பித்துவிட்டு கதைமாந்தர் மட்டும் அதற்கு சம்பந்தமில்லாமல் அமைந்துவிட்டால் அது விழலுக்கு இறைந்த நீர்தான்.ஆனால் இந்த நீர் நிலங்களை பசுமைப்படுத்த விளையும் நிலங்களில் பாய்ந்தோடும் தன்மை வாய்ந்தது. பாய்ந்தோடும் வெள்ளம் ரசிக்கும் நம்மை கொஞ்சமாய் சிரிக்கவிடுகிறது,நம் நினைவு மூட்டைகளில் வேகத்துடன் பாய்ந்து அதை சற்றே பிரிந்துவிடுகின்றது. போலி ஒப்பனைப்பூச்சுகளில் பேசித்திரியும் எதார்த்த வசனங்கள் கொஞ்சம் கூட படத்திலே கிடையாது,அனைத்து நிஜமாய் நம் வாழ்வில் நாம் சாதாரணமாக பேசும் பேச்சு வழக்கே இப்படத்தின் பெரிய பலம்.ஆரம்பத்தில் இருந்து படத்தின் இறுதிக்காட்சியின் இறுதி வார்த்தை வரை அப்பிடியே மருதச்சுற்றுவட்டார மொழிவளத்தின் சுத்தநீரில் தோன்றும் பிம்பமே அது, கடுகளவெனும் பிசிறுதனை கண்டுபிடிக்க முடியவில்லை.



பருத்திவீரனாக மார்கண்டய நடிகர் சிவகுமாரின் இளையமகன் கார்த்தி, அவருக்கு சித்தப்பா செவ்வாழையாக சரவணன், முத்தழகாக பிரியாமணியும் இன்னும் பலர் தங்களின் கதாப்பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப அப்பிடியே அச்சுஅசலாக வாழ்ந்து இருக்கின்றனர். படத்தின் தொடக்கத்தில் திருவிழா நடக்கிறது என விரியும் காட்சியில் ஒவ்வொரு அசைவிலும் கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், என கிராமத்து மக்களின் பொழுதுப்போக்கினையும் மொட்டை இடுதல், குழந்தைகளுக்கு காது குத்துதல்,பொங்கல் வைத்தல் என அம்மக்களின் தெய்வநம்பிக்கையும் விளங்க வைத்து இயக்குனர் கதையின் நாயகனான பருத்திவீரனை திருவிழாவில் எக்குத்தப்பாக கத்தியால் குத்துவதாக அறிமுகப்படுத்துகிறார்.அவனுக்கு பெயர் பருத்திவீரன் என்றாலும் அவ்வூரில் அழைக்கப்படும் சண்டியர் என்ற பெயருக்கேற்றமாதிரி வீரனின் கதாபத்திரம் அந்த காட்சியே விளங்கவைத்து விடுக்கிறது, அதேபோல் முத்தழகு என்னும் கதையின் நாயகியும் பள்ளியில் படிக்கும் மாணவியாகவும் அவளுக்கும் கதாநாயகன் மேலே தனிப்பட்ட அழமான பிரியம் இருப்பதாகவும்,அவனுக்காக தம் பெற்றோர்களை எதிர்க்குமளவு தறுதலையை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக வாழ்ந்து இருக்கிறார் பிரியாமணி. அவருக்கு ஏன் அப்பிடியொரு அவன்மேல் அப்பிடியொரு ஈர்ப்பு என்று சொல்ல வெள்ளைகருப்பு காட்சிகள் விரிகின்றன. ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இருக்கும் ஆலமரமும் அதன் வேர்களை பற்றி வானத்தில் பறக்கும் சிறுவர்களும், மரத்தின் நிழலில் அமர்ந்துவிளையாடும் சிறுமிகளும் அடடா காட்சியமைப்பு அட்டகாசம். சிறுவர்கள் விளையாட்டு சண்டையில் ஒரு சிறுவன் முத்தழகை கல்கிடங்கு or கிணத்துக்குள் தள்ளிவிட்டு ஓடிவிட வீரன் தான் தண்ணிரில் குதித்து முத்தழகை காப்பற்றுக்கிறான், அதிலிருந்து அவளுக்குள் பிறக்கிறது கன்னுக்குட்டி காதல். கடைசி காட்சியில் அவனோடு சேர்ந்து வாழப்போகும் போது அம்மாவை அறுவாளால் வெட்டப்போகுமளவுக்கு வெறித்தனமாகவும் மாறுகிறது அந்த காதல்.

கதாநாயகியின் அப்பாவாக பொன்வண்ணன் தன்னையொரு சாதீயபிம்பகாக காட்டி கொண்டு திரிகிறார்। தன் மனைவியின் அண்ணன் குறத்தியொருத்தியிடம் சாராயம் வாங்கிவிக்கும் செயல் தனக்கு பிடிக்காமல் போக, ஒரு பிரச்சினையில் அந்த பெண்மணி இவர்கள் ஆளு ஒருவரை கொலைச் செய்துவிட பழிக்குபழியாக அந்த பெண்மணியை கொலைசெய்கிறார்கள்। அப்பெண்மணியின் மகளை பொன்வண்ணனின் மனைவிஅண்ணன் கல்யாணம் செய்துகொண்டு வர தனக்குள் எந்திரிக்கும் சாதீயபிரவாகத்தில் அவர்களை பிரிந்து வருகிறார்। திருமணம் முடிந்தவர்கள் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து சாலைவிபத்தில் இறந்து போக அதை எடுத்து வளர்க்கும் சித்தப்பா செவ்வாழையாக நடித்து இல்லையில்லை வாழ்ந்துருக்கும் சரவணனின் கதாப்பத்திரம் அற்புதம், ஆனாலும் மகன்முறை வந்தாலும் அவனோடு தண்ணியடிப்பது என உறுத்தினாலும் கிராமங்களில் நிறையவே அந்தமாதிரியான சுவாரசிய மனிதர் பலரை பார்த்திரமுடியும்.




வழக்கமான சினிமாக்களில் கதாநாயகனும் கதாநாயகியும் காதலிக்கும் அதேமாதிரியான நேர்க்கோட்டு திரைப்படங்களில் கொஞ்சமே விலகியே இருக்க இயக்குனர் ரொம்பவே கஷ்டப்பட்டுருக்கிறார், அது எவ்வாறெனில் ஒருதலையாக காதலிப்போர் தீடீரென்று ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டு அப்பிடியே கனவில் வெளிநாட்டில் டூயட் பாட்டு பாடுவதாக காட்சியே வைக்கவில்லை.உசுரை காப்பத்தியவனுக்கே தன்னை அர்பணிக்க போவதாய் வாழும் கதாநாயகியும் ஆனால் அவளின் உள்ளன்பை நிரகரிக்கும் கதாநாயகியாய் நகரும் காட்சியமைப்புகளில் மெல்லிய நகைச்சுவை அதுவும் அந்த மதுரை மண்ணுக்கே உரிய குசுப்பு சேட்டைகளும் திகட்டவே திகட்டாத ஒன்று. மொட்டவெயில் அடிக்கும் கல்குவாரி உச்சியில் உட்கார்ந்து தண்ணியடிப்பதும், கம்பக்காட்டுக்குள்ளே வழியில் போவனை இழுந்து சிட்டு விளையாடி காசு பறிக்கும் காட்சிகள் அருமை.இப்பிடியே கலகலக்கப்பாக படத்தில் உச்சகட்ட காட்சியில் ஒரு சோகம் பிடிக்கப்போகிறது என்ற வழக்கத்துக்கு ஏற்ப காட்சியமைப்புகள் நகர்கிறது, முத்தழகு வீரன் முன்னாடியே அவன் சித்தப்பா பற்றி அவதூறாக பேசிவிட ஆத்திரப்பட்டு அவளை அவன் அடிக்க இன்னும் நகரும் காட்சிகளில் அவனுக்கும் காதல் பற்றிக்கொள்கிறது. எப்பிடியென்றால் முரட்டு கரும்பாறையை கீறி மெல்லியதாய் முளைவிடும் செடியை போல், கரட்டுகட்டு தாடிமுகத்தில் பூக்கும் புன்னகையில் பிறக்கிறது காதல், இதுவரைக்கும் நக்கல் நையாண்டியாய் நகர்ந்த கதை இருவரும் காதலிக்க ஆரம்பித்ததும் இன்னும் வேகமெடுக்கிறது.

இவ்வளவும் இயன்றவரை கதையை சொல்லிவிட்டு அதீத வலியை கொடுக்கும் உச்சக்கட்ட காட்சியை கொடுப்பதுதான் இப்படத்தின் இயக்குநரின் வெற்றியாக அவர் நினைந்திருந்தால் அது நூற்றுக்கு நூறு சதவிகத்தில் அவர் வென்று உள்ளார் என்றே சொல்லவேண்டும். எந்தவொரு கண்டிப்போ, முறைப்படுத்தப்பட்ட பாசப்பிணைப்புகள் அற்ற ஒருத்தன் தான் செய்யும் தவறுக்கு தன் உயிரில் நுழைந்த உறவை இழப்பதினால் மட்டுமே அவனுக்கு தான் செய்த தவறுகளுக்கு கிடைக்கும் தண்டனையென்று மவுனமாய் பதில் அளிக்கிறார் இயக்குநர்.

30 comments:

said...

யய்யா ராமு... இது நீங்க எழுதுனதுதானா??

பயங்கர தமிழூற்றா இருக்குது...

நல்லா இருந்துச்சுண்ணே உங்க திரைப்பார்வை.. :)))))

said...

//இவ்வளவும் இயன்றவரை கதையை சொல்லிவிட்டு அதீத வலியை கொடுக்கும் உச்சக்கட்ட காட்சியை கொடுப்பதுதான் இப்படத்தின் இயக்குநரின் வெற்றியாக அவர் நினைந்திருந்தால் அது நூற்றுக்கு நூறு சதவிகத்தில் அவர் வென்று உள்ளார் என்றே சொல்லவேண்டும். எந்தவொரு கண்டிப்போ, முறைப்படுத்த பாசப்பிணைப்புகள் அற்ற ஒருத்தன் தான் செய்யும் தவறுக்கு தன் உயிரில் நுழைந்த உறவை இழப்பதினால் மட்டுமே அவனுக்கு தான் செய்த தவறுகளுக்கு கிடைக்கும் தண்டனையென்று மவுனமாய் பதில் அளிக்கிறார் இயக்குநர்.//

கரெக்டு தான். ஆனால் கிளைமேக்ஸ் காட்சியின் கோடூரத்துக்காகவே இரண்டாம் முறையாக என்னால் அப்படத்தை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு வலிச்சது என் மனசு :-(

said...

லக்கியின் கருத்தை நானும் ஆமோத்திகிறேன்.. இரண்டாம் முறை அந்தப் படத்தைப் பாக்க விருப்பமிருந்தாலும் கிளைமாஸ் தடுக்கிறது.

said...

அது மட்டுமில்லை ராம் திருந்தியவனுக்குத் தண்டனை அவசியமா? பாவம் அந்த முத்தழகு என்னப் பாவம் பண்ணுச்சு? இப்படியெல்லாம் இயக்குனர் பொலம்ப விட்டுட்டார்.. அதுவும் அவருக்கு வெற்றி தானோ..

said...

ம்ம்ம்ம்ம், முழுப்படத்தையும் பார்க்கிறாபோல விமரிசனம் பண்ணி இருக்கீங்க. இன்னும் பார்க்கலை. அது சரி, எழுதினது நீங்க தானே? :)))

said...

//எழுதினது நீங்க தானே? :)))//

பின்னே? மண்டபத்துலே யாரோ எழுதிக் கொடுத்ததா?

said...

தல

படத்தை பத்தி நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க ;-))

\\அதிலிருந்து அவளுக்குள் பிறக்கிறது கன்னுக்குட்டி காதல். \\

அப்ப உங்களுக்கும் சின்ன வயசுல அந்த கன்னுக்குட்டி காதல் எல்லாம் இருந்ததா??? கொஞ்சம் எங்களுக்கும் தான் சொல்லறது...

said...

மதுரக்காரனுக்கு தமிழ் வராதா...இதப்போய் இம்புட்டு ஆச்சரியமா கேக்கறாய்ங்க....

என்ன கொடுமையிது...

said...

//யய்யா ராமு... இது நீங்க எழுதுனதுதானா??//

வாப்பா ஜியி,

நாந்தாய்யா எழுதுனேன், ஏய்யா இப்பிடி குழப்பத்தை உண்டு பண்ணுறே நீயீ?

//பயங்கர தமிழூற்றா இருக்குது...//

ஹி ஹி அப்பிடியா...

//நல்லா இருந்துச்சுண்ணே உங்க திரைப்பார்வை.. :))))) //

ரொம்ப டாங்கீஸ்ப்பா :)

said...

பொணந்தின்னிய வைக்கப்போர்ல வச்சி அடிக்கற சீன்ல ரெண்டு பேரும் அட்டகாசமா நடிச்சிருப்பாங்க. படம்முழுக்க இதே மாதிரி குசும்புதான் எனக்கு ரொம்ப பிடிச்சது.

//"ஏலேய் நாங்கெல்லாம் மருதக்காரய்ங்கே"//

இப்ப யாரு இல்லன்னு சொன்னது??

said...

அது மட்டுமில்லை ராம் திருந்தியவனுக்குத் தண்டனை அவசியமா? பாவம் அந்த முத்தழகு என்னப் பாவம் பண்ணுச்சு? இப்படியெல்லாம் இயக்குனர் பொலம்ப விட்டுட்டார்.. அதுவும் அவருக்கு வெற்றி தானோ..///


ippadi thavichcha sila kamal padangalum irukkungga. padam mudinju veliya varumpOthu onnum thOnaathu veliyulagatthula suththittiruppeenga.. romba manasu ganaththu pOyirukkum... moonRampiRai oru example.

said...

//கரெக்டு தான். ஆனால் கிளைமேக்ஸ் காட்சியின் கோடூரத்துக்காகவே இரண்டாம் முறையாக என்னால் அப்படத்தை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு வலிச்சது என் மனசு :-( //

வாங்க லக்கி,

அதுதானே இயக்குநருக்கு கிடைத்த வெற்றி, சிரிப்பு எப்போ வேணுமின்னாலும் நினைச்சு சிரிக்கலாம், ஆனா சோகத்தை அந்த நிமிசத்திலே நினைச்சு கலங்குனா'தான் உண்டு,

அந்த வகையிலே படத்தோட கிளைமேக்ஸ் சோகம் அப்பியே ரெண்டு நாளைக்கு நம்மக்கிட்டே இருக்கும்....

வருகைக்கு நன்றி :)

said...

//லக்கியின் கருத்தை நானும் ஆமோத்திகிறேன்.. இரண்டாம் முறை அந்தப் படத்தைப் பாக்க விருப்பமிருந்தாலும் கிளைமாஸ் தடுக்கிறது. //

தேவ்,

இரண்டாம் முறை என்ன முன்றாம் முறைகூட அந்த படத்தை பார்க்கலாம், ஆனா கிளைமேக்ஸ் காட்சியை ஒரு முறை கூட பார்க்கமுடியாது, அப்பா அப்பிடியொரு சோகம்:(

//அது மட்டுமில்லை ராம் திருந்தியவனுக்குத் தண்டனை அவசியமா? பாவம் அந்த முத்தழகு என்னப் பாவம் பண்ணுச்சு? இப்படியெல்லாம் இயக்குனர் பொலம்ப விட்டுட்டார்.. அதுவும் அவருக்கு வெற்றி தானோ.. //

அடடா இதுக்கு என்ன பதில் சொல்லுறது, படைப்பாளியின் வெற்றியே பார்வையாளனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது தானே? அந்த வகையில் அமீர் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார். திரையரங்கத்தை விட்டு வெளியே வரும் போது எல்லாரும் சன்ன அமைதியாகவே வெளியே வருகின்றனர்.

said...

//ம்ம்ம்ம்ம், முழுப்படத்தையும் பார்க்கிறாபோல விமரிசனம் பண்ணி இருக்கீங்க.//

வாங்க மேடம், கருத்துக்கும் பாரட்டுதலுக்கும் மிக்க நன்றி:)


//இன்னும் பார்க்கலை.//

படத்தை பாருங்க, ரசிக்கும்படியான படந்தான்...

//அது சரி, எழுதினது நீங்க தானே? :)))//

என்னத்த சொல்ல...?? :(

said...

//தல

படத்தை பத்தி நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க ;-))//

வாங்க கோபி,

ரொம்ப நன்றிங்க... :)

//அப்ப உங்களுக்கும் சின்ன வயசுல அந்த கன்னுக்குட்டி காதல் எல்லாம் இருந்ததா??? கொஞ்சம் எங்களுக்கும் தான் சொல்லறது... //

எனக்கு நிறையாதான் இருக்கு, ஆனா நம்ம மொகரை கட்டையதான் யாரும் காதலுகத்திரிகாய் பண்ணினதில்லை :)

said...

//மதுரக்காரனுக்கு தமிழ் வராதா...இதப்போய் இம்புட்டு ஆச்சரியமா கேக்கறாய்ங்க....

என்ன கொடுமையிது... //

வாங்க பங்காளி,

முதன்முறையா நம்ம பக்கம் வந்திருக்கீங்க.. ரொம்பநன்றி..:)

ஊர்க்காரனுக்கு ஆதரவு கொடுத்ததுக்கும் மிக்க நன்றி :)

said...

//பொணந்தின்னிய வைக்கப்போர்ல வச்சி அடிக்கற சீன்ல ரெண்டு பேரும் அட்டகாசமா நடிச்சிருப்பாங்க. படம்முழுக்க இதே மாதிரி குசும்புதான் எனக்கு ரொம்ப பிடிச்சது.//

வாப்பா கதிரு,

கிழே இருக்கிற டயலாக் படிச்சு இன்னும் சிரிப்பா சிரி :)

----------------------------------
"எப்ப பாரு, கழுத்திலே துண்டைச் சுத்திக்கிட்டு ஊர்க்குள்ளே பஞ்சாயத்து பண்ணிட்டு திரியுறது?"

----------------------------------
"என்னைய அவிய்ங்கே அடிச்சது கூட வலிக்கலைப்பா... ஆனா அடுத்த தடவை வர்றப்போ பெரிய ஆளை வரச்சொல்லு'ன்னு சொன்னதுதாப்பா வலிக்குது"
----------------------------------



//இப்ப யாரு இல்லன்னு சொன்னது?? //

ஏன் வேணுமின்னா சொல்லிப் பாரு????

said...

// எப்பிடியென்றால் முரட்டு கரும்பாறையை கீறி மெல்லியதாய் முளைவிடும் செடியை போல், கரட்டுகட்டு தாடிமுகத்தில் பூக்கும் புன்னகையில் பிறக்கிறது காதல்
//

ரொம்ப அழகான உதாரணம் :)))

என் ஃப்ரெண்ட் கடைசில ரொம்ப ஃபீல் பண்ணுவ பாக்காதனு சொன்னதால நான் இந்த படத்த பாக்கவே இல்ல.

ஆனா உங்க விமர்சனம் படிச்சதும் படம் பாத்த ஃபீலிங் :)))

said...

இன்னும் படம் பாக்கல ராயலு...ஆனா கிளிப்பிங்ஸ் பாத்தேன்..சரவணன் & கார்த்தி அடிக்கிற லூட்டி சூப்பர் :-)

said...

//ippadi thavichcha sila kamal padangalum irukkungga. padam mudinju veliya varumpOthu onnum thOnaathu veliyulagatthula suththittiruppeenga.. romba manasu ganaththu pOyirukkum... moonRampiRai oru example. //

அனானி நன்றி உங்கள் கருத்துக்கு, அடுத்த முறை தமிழிலில் கருத்திட முயலவும் :)

said...

//ரொம்ப அழகான உதாரணம் :)))//

வாங்க இம்சையரசி,

//என் ஃப்ரெண்ட் கடைசில ரொம்ப ஃபீல் பண்ணுவ பாக்காதனு சொன்னதால நான் இந்த படத்த பாக்கவே இல்ல.

ஆனா உங்க விமர்சனம் படிச்சதும் படம் பாத்த ஃபீலிங் :))) //


இல்ல படத்தை பாருங்க... நல்லா இருக்கும், இங்கே நம்ம ஜிலேபி தேசத்திலே ரிலிஸ் பண்ணலைன்னு நினைக்கிறேன், வேணுமின்னா DVD அனுப்பிவைக்கிறேன்:)

said...

//இன்னும் படம் பாக்கல ராயலு...ஆனா கிளிப்பிங்ஸ் பாத்தேன்..சரவணன் & கார்த்தி அடிக்கிற லூட்டி சூப்பர் :-) ///

வாங்க 12B,

படத்தை கட்டாயமா பாருங்க. அவங்க ரெண்டு பேரு லூட்டிதானே படமே, அவங்களோட டக்லஸ்'ம் சேர்றோப்பா இன்னும் சூப்பரா இருக்கும் :)

said...

நாங்களும் படத்தை பார்த்துட்டோம்லே..

நீங்களும் விமர்சனத்தை சூப்பரா எழுதுறீங்கலே.. :-)

said...

/நாங்களும் படத்தை பார்த்துட்டோம்லே..//

வாங்க ஃபிரண்ட்,



//நீங்களும் விமர்சனத்தை சூப்பரா எழுதுறீங்கலே.. :-)//

அப்பிடியா நன்றி'லா :)

said...

இராம்...என்ன ஒரு விமர்சனம்!?அருமை அருமை...

said...

//இராம்...என்ன ஒரு விமர்சனம்!?அருமை அருமை...//


வருகைக்கும் கருத்து தருகைக்கும் மிக்க நன்றி துர்கா :))

said...

மருதகாரய்ங்களுக்கு விமரிசனம் நல்லா எழுதவராதா?
என்ன இப்படி ஆளாளுக்கு 'நீ எழுதனதா? நீ எழுதனதா? 'ன்னு கேக்குறாய்ங்க.
ஓஓஓஓஓ ஒருவேளை 'மண்டபம்' மருதையிலே இருக்கறதாலா? :-)

எனக்கு வந்த டிவிடியில் கடைசி காட்சி மட்டுப்படுத்தப்பட்டுச் சுருக்கமா இருக்கு.
மத்தவங்க விமரிசனத்துலே இருந்துதான் தெரிஞ்சது 'அந்தக் கொடுமை'யிலே
இருந்து நாங்க தப்புனது.

said...

Eley...marudaiyele ambuttum peraiyum policu pudichu kondu pokuthamle....

paathu pathavisa irumle....


Chennaikkaran

Disclaimer: Comments only for heading....

said...

//மருதகாரய்ங்களுக்கு விமரிசனம் நல்லா எழுதவராதா?
என்ன இப்படி ஆளாளுக்கு 'நீ எழுதனதா? நீ எழுதனதா? 'ன்னு கேக்குறாய்ங்க.//

வாங்க டீச்சர்,

ரொம்ப மாசம் கழிச்சு நம்ம பக்கம் வந்திருக்கீங்க... உங்க தார்மீக ஆதரவுக்கு நன்றின்னு சொல்லாமின்னு பார்த்தா....

//ஓஓஓஓஓ ஒருவேளை 'மண்டபம்' மருதையிலே இருக்கறதாலா? :-)//

இங்கே இப்பிடி சொல்லி கவுத்திட்டிங்களே... :)

//எனக்கு வந்த டிவிடியில் கடைசி காட்சி மட்டுப்படுத்தப்பட்டுச் சுருக்கமா இருக்கு.

மத்தவங்க விமரிசனத்துலே இருந்துதான் தெரிஞ்சது 'அந்தக் கொடுமை'யிலே
இருந்து நாங்க தப்புனது.//


இல்லே டீச்சர், நீங்க தொடர்ச்சியா பாருங்க.... அந்த இறுதிக்காட்சியோட வீரியத்தை உணர்வீங்க...


வருகைக்கு மிக்க நன்றி :)

said...

//Eley...marudaiyele ambuttum peraiyum policu pudichu kondu pokuthamle....

paathu pathavisa irumle....


Chennaikkaran

Disclaimer: Comments only for heading....//


அனானி அண்ணே,


நாங்கெல்லாம் வீரபரம்பரைண்ணே :)

போலிஸ், கீலிஸெல்லாம் எங்களை பயமுருந்த முடியாது.. :)

தலைப்பை பார்க்கிறதோட சரி.. பதிவே யாரும் படிக்கிறதில்லை... :)