Friday, April 6, 2007

வெட்டிகாரு செப்பண்டி........

சில சமயத்திலே ஆபிஸிலே காலங்காத்திலே ஓவரா ஆணி பிடுங்க விட்டு கடுப்பேத்துவானுக. அந்தமாதிரி சமயத்திலே இருக்கிற கடுப்புக்கு எவனாவது ஒருத்தனை பிடிச்சு வம்பிழுக்கமின்னு தோணும், அப்பிடியொரு நொந்து நூலாகி நூடுல்ஸாகி வெறுப்பான சூழ்நிலையிலே மாட்டினவர் தான் நம்ம பாஸ்டன் புயல், பாலாஜி. அன்னிக்குன்னு பார்த்து தான் அவரு கொல்டி - சில திடுக்கிடும் உண்மைகள்'னு பதிவு போட்டுருந்தார். அது போதாது நமக்கு வம்பிழுக்க... ஹி ஹி...

நான்:- "வாப்பா பாலாஜி, இன்னும் தூங்கலையா?"

வெட்டி:- "வாங்க.. இப்போலாம் எனக்கு சரியா தூக்கம் வரதில்லை?"

நான்:- "ஓ இப்போ கனவெல்லாம் சுமா தானா?"

வெட்டி:- "ஐயோ நீங்களுமா? அது சும்மா கதைக்காக வந்த கதாபாத்திரம் பேருங்க!"

நான்:- "திரும்ப திரும்ப பொய் பேசுனா அது உண்மை'ன்னு ஆகிறுமா?"

வெ:- "பார்த்தீங்களா? நீங்களே அதே பொய்'ன்னு ஒத்துக்கிறீங்க?"

நா:- "ஏலேய் நான் சொன்னது நீயி எங்ககிட்டே சொல்லுவியே? இல்லே! இல்லேன்னு சொல்லுற அந்த பொய்யை பத்தி மக்கா"

வெ:- "அண்ணே! ஒங்களுக்கு இன்னிக்கு வேலை எதுவும் இல்லியா?"

நா:- "ஆமாம்.. ஆனா இன்னிக்கு ஒன்க்கிட்டெயிருந்து உண்மை வரவைக்கிறது இன்னிக்கு என்னோட பெரிய வேலையே!"

வெ:-" அப்போ சரி! அதை உண்மைன்னு வைச்சுக்கோங்க! இப்போ வேற டாபிக் பேசலாம்!"

நா:- "இன்னொரு நாள் அந்த வேற டாபிக்கை பத்தி பேசலாம்! இன்னிக்கு சுமா டாபிக் பத்தி மட்டுமே பேசுவோம்!"

வெ:- ":(((((((((((("

நா:- "எதுக்கு இத்தனை அழுவாச்சியை போடுறே?"

வெ:-" பின்னே அழாமே? என்ன செய்யுறது? நீங்க இந்தமாதிரியெல்லாம் கேள்வி கேட்கிறது வெளிநாட்டு சதினாலே தான்!"

நா:- "ஏலேய்! என்ன சதி இடியாப்பத்துக்கு சொதி'ன்னு பேசிட்டு இருக்கே? உண்மைய சொல்லு? அது நிஜத்திலே நடந்த கதையா? இல்லய்யான்னு?"

வெ:-"ஐயோ அது கற்பனை கதை தாண்ணே!"

நா:- "அப்பிடின்னா ஏன் அடுத்து இந்தியா வர்றப்போ சென்னைக்கோ இல்ல பெங்களூருக்கோ வர்றாமே நேரா ஹைதராபாத்'க்கு போறே? சரி இதுக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லுவே! அந்த கதை நீ சொல்லுற அதே எழுதி எவ்வளோ நாள் ஆச்சு! இப்போ எதுக்கு தூசு தட்டி மறுபடியும் எடுத்து வைச்சிருக்கே? அப்போ ஏதோ காரணம் இருக்கு இல்லியா?"

வெ:- "இப்போ வாய் விட்டு அழுதுட்டு இருக்கேன்! என்னை விட்டுருங்க!"

நா:- "டேய் டேய் நீயாவது அழுவுறதாவது? அதெல்லாம் செய்யமாட்டே'ன்னு தெரியும், ஆமா லவ் பண்ண பொண்ணு தேடுனோப்போ ஏன் தெலுங்கு பொண்ணை செலக்ட் பண்ணினே? கொல்டிஸ் நிறைய வரதட்சிணை கொடுப்பாங்கன்னா?"

வெ:-" அண்ணே நான் ஆணியே பிடுங்கலே! என்னை இப்போதைக்கு விட்டுறுங்க!"

நா:- "அடடே இப்பிடியெல்லாம் வடிவேல் வசனம் பேசுனா நாங்க சிரிச்சிட்டு விட்டுருவோமா? உண்மைய சொல்லுடி கண்ணு? எதுக்கு ஒன்னோட விமானம் ஹைதராபாத்'லே தரையிறங்க போகுது'ன்னு?

வெ:- "ஐயோ! எதுக்கு இப்பிடி அப்பிராணியே போட்டு பாடாப்படுத்துறீங்க? நான் நல்லவண்ணே!"

நா:- "இப்போ யாரு நீ நல்லவன் இல்ல! கெட்டவன்னு சொன்னது! இப்பிடி கண்டம் விட்டு கண்டம் பேசுறதே சுமா'ன்னா யாரு? அவளோட உண்மை பேரு என்னான்னு தெரிஞ்சுக்க தான்?"

வெ:-"அண்ணே டிவியிலே வர்றமாதிரியே பேசுறீங்க! நான் சீக்கிரம் இந்தியா வர்றது உண்மைதான், ஆனா ஒங்களுக்கு எப்பிடி தெரிஞ்சுச்சு? அதுமில்லாமே ஹைதராபாத் வரதுக்கு எப்பிடி தெரிஞ்சது?"

நா:- "அதுதானே! அப்பிடி வா வழிக்கு? அப்போ நீ இந்தியா வர்றதும் உண்மை அதிலே ஹைதராபாத் போறதும் உண்மை! அதிலே சுமா'வே மீட் பண்ணப்போறதும் உண்மைதானே?"

வெ:-"உண்மை!உண்மை'ன்னு ஏண்ணே இப்பிடி பேசியே உசுரை வாங்குறீங்க?"

நா:- "நீ எவ்வளோ நாளா அந்த சுமா பொய் பொய்'ன்னு சொல்லிட்டு இருந்தே? நீ வர்றப்போ ஒன்னயே வரவேற்க பெரிய ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு ராசா!"

வெ:- "என்ன எல்லாருக்கும் பண்ணுறமாதிரி கரகாட்டம் வைச்சு வரவேற்க போறீங்களா??"

நான்:- "என்னாப்பா இப்பிடி சொல்லிட்டே? நீ இங்கே வந்து இறங்கிறப்போ ஏர்போர்ட்'க்கே சாம்பிராணிப்புகை போடுற நாலு பேரை கூட்டிட்டு வந்து புகைமண்டலம் உண்டாக்கி விடுறோம்! ஒரு பக்கம் நீ நடந்து வர்றப்போ இன்னொரு பக்கத்திலே இருந்து சுமா நடந்து இல்ல ஓடிவர்றாங்க, ஒங்களுக்கு சைடுலே துணை நடிகை நாலு பேருக்கு உஜாலா'லே முக்கியெடுத்த துணியை உடுத்த சொல்லிட்டு ஓடி வர்ற சொல்லுவோம், இந்த மூவ்மெண்ட் எல்லாமே லூஸ் மோஷன்'லே நடக்கும். இன்னொரு முக்கியமா டொய்ங் டொய்ங்கு'ன்னு காட்டுதனமா ஒரு பாட்டை தெலுங்கு மீசீக் டைரக்டரை விட்டு பாட்டு பாடச்சொல்லி பேக்கிரவுண்ட்'லே வேற போடுவோம்! "

வெ:- "அடபாவிகளா! ஏய்யா இப்பிடியெல்லாம் கொலைவெறியோட திரியீறீங்க?"

நா:- "ஆஹா இன்னொன்னு மிஸ் ஆகிடிச்சு! நீ ஒரு பக்கம், சுமா ஒரு பக்கம் இன்னொரு பக்கம் துணை நடிகைஸ், அதிலே இன்னொரு பக்கம் நாங்கெல்லாம் ஒட்கார்ந்துகிட்டெ பார்ப்போம்"

வெ:-" நாங்கெல்லாமின்னா யாரு? யாரு?"

நா:- "ம்ம் அதுவா? நானு,தம்பி,புலி,ஜிரா,விவசாயி,அபிஅப்பா,கொத்ஸ், இன்னும் இங்கே நான் சொன்னதவிட நிறைய பேருக அதாவது ஒன்னோட ரசிககண்மணிகள் எல்லாரும் வருவாங்க!"

வெ:- "ஆஹா மொத்ததிலே என்னைய வெச்சு படமே எடுக்க போறீங்க! எனக்கு தூக்கம் வருது! போயி தூங்குறேன்!"

நா:- "கனவிலே சுமா மட்டுமே வர்ற வாழ்த்துக்கள்"

மக்களே இந்தமாதிரி நாமெல்லாம் ஜாலியா பேசுவோமா? உங்க ஐடி கொடுங்க.....

123 comments:

said...

நாந்தான் இங்கேயும் ஃபர்ஸ்ட்டா?

said...

இப்படில்லாம் நடக்குதா, இல்ல நடக்குமா
ஒண்ணுமே புரியல. அப்போ அது கதையல்ல நிஜமா...

நல்லவேள ராம் நீங்க உண்மைய போட்டு ஒடச்சிங்க.

said...

//நாந்தான் இங்கேயும் ஃபர்ஸ்ட்டா?///

ஏம்மா நீங்க எல்லாத்துலயும் பர்ஸ்ட்டு
பாஸ்ட்டு எல்லாமே
அடுத்தவங்களுக்கும் சான்ஸ் குடுக்கணுமில்ல இப்படியெல்லாம் அழிச்சாட்டியம் பண்ணக்கூடாது.

said...

//நாந்தான் இங்கேயும் ஃபர்ஸ்ட்டா?//

தங்கச்சிக்கா, இங்கேயும் நீங்கதான் ஃபர்ஸ்ட் :))

said...

//இப்படில்லாம் நடக்குதா, இல்ல நடக்குமா
ஒண்ணுமே புரியல. அப்போ அது கதையல்ல நிஜமா...//

என்னாப்பா இப்பிடி கேட்டுப்பிட்ட.... அது உண்மையிலே நடந்தது தான்... இங்கே பெங்களூரூலே இருக்கிறப்போ அந்த பய சுமா... சுமா'ன்னு பொலம்பிட்டு பாயை பிரண்டி வைச்சான், ஆன இப்போ நான் பெட்'லே தான் படிப்பேன்னு டகால்டி விடுறான் :)

//நல்லவேள ராம் நீங்க உண்மைய போட்டு ஒடச்சிங்க.//

ஹி ஹி

said...

வெட்டியை பழி வாங்கனும்ன்னு இப்படி எத்தனை நாள் கங்கணம் கட்டி திரிஞ்சீங்க ராம்?

said...

அடடே! என் தம்பி வெட்டிக்கே அண்ணனாயிட்டதை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குடா தம்பி.. :-D

தம்பி, வெட்டி ரொம்ப அழுவுறார். அவருக்கு ஒரு குச்சி மிட்டாய் கொடுத்து சமாளிசிருக்கலாமே? :-P

said...

அவ்வள்வு வயசுக்கப்புறம் ஜைசங்கர், டெல்லி கணேஷ் எல்லாம் ஆடி இருக்கும் போது நான் மட்டும் வேடிக்கை பார்க்கணுமா?

அஸ்கு புஸ்கு. நானும் ஆடுவேன்.

said...

//நா:- "கனவிலே சுமா மட்டுமே வர்ற வாழ்த்துக்கள்"//

பார்த்தீங்களா ராம்.. யார் யாருக்கோ தினமும் வாழ்த்து.. எனக்கு மட்டும் தினமும் திட்டு.. நீங்க ரொம்ப மோசம்..

said...

//ஒரு பாட்டை தெலுங்கு மீசீக் டைரக்டரை விட்டு பாட்டு பாடச்சொல்லி பேக்கிரவுண்ட்'லே வேற போடுவோம்! "//

எப்படி? ரெண்டு பேரும் ஏர்போர்ட்டிலேயே டான்ஸா? அதுக்குள்ள ரெண்டு பேரும் வெளிநாட்டுலதானே டூயட் பாடுவாங்க!!!!

ஆடியன்ஸ் எங்களுக்கெல்லாம் டிக்கட்டு?

said...

/வெட்டியை பழி வாங்கனும்ன்னு இப்படி எத்தனை நாள் கங்கணம் கட்டி திரிஞ்சீங்க ராம்?///


இப்பிடியெல்லாம் கேட்கப்பிடாது தங்கச்சிக்கா :))

said...

//ஏம்மா நீங்க எல்லாத்துலயும் பர்ஸ்ட்டு
பாஸ்ட்டு எல்லாமே
அடுத்தவங்களுக்கும் சான்ஸ் குடுக்கணுமில்ல இப்படியெல்லாம் அழிச்சாட்டியம் பண்ணக்கூடாது. //

@தம்பி:

நீங்க லேட்டா வந்துட்டு இப்படி சொல்லப்படாது..:-P

said...

அன்புள்ள ராம் அண்ணாவுக்கு.

நீங்கள் அனைவரும் பாலாஜி மீது வைத்திருக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றிகள் ஆயிரம்.

நான் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பாலாஜியை சந்திக்க போகிறேன். இந்த நாளுக்காகத்தான் நான் இவ்வளவு நாள் காத்திருந்தேன். சென்னை வராமல் ஐதராபாத் வர திட்டம் போட்டதே நண்பர்களை தவிர்க்கத்தான். இப்படி நீங்கள் கூட்டமிட்டால் நாங்கள் சந்திப்பதற்கு இடைஞ்சலாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் வருகைக்காக நான் பலநாட்கள் எனக்குள் ஒத்திகை பார்த்து அதன்படி செய்ய நினைத்திருந்தேன் அப்படி நடக்கவே வேண்டும். உங்கள் நட்பு போற்றக்கூடியதுதான் நான் வேண்டுமானால் உங்களை எல்லாம் சந்திக்க ஒரு நாள் ஒதுக்க அவரிடம் சொல்கிறேன்.

பப்ளிசிட்டியை அவர் என்றுமே விரும்பியதில்லை.

உங்கள் நட்பை நான் மதிக்கிறேன் அதுபோலவே காதலுக்கு மரியாதை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

சுமா

said...

//அன்புள்ள ராம் அண்ணாவுக்கு.

நீங்கள் அனைவரும் பாலாஜி மீது வைத்திருக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றிகள் ஆயிரம்.

நான் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பாலாஜியை சந்திக்க போகிறேன். இந்த நாளுக்காகத்தான் நான் இவ்வளவு நாள் காத்திருந்தேன். சென்னை வராமல் ஐதராபாத் வர திட்டம் போட்டதே நண்பர்களை தவிர்க்கத்தான். இப்படி நீங்கள் கூட்டமிட்டால் நாங்கள் சந்திப்பதற்கு இடைஞ்சலாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் வருகைக்காக நான் பலநாட்கள் எனக்குள் ஒத்திகை பார்த்து அதன்படி செய்ய நினைத்திருந்தேன் அப்படி நடக்கவே வேண்டும். உங்கள் நட்பு போற்றக்கூடியதுதான் நான் வேண்டுமானால் உங்களை எல்லாம் சந்திக்க ஒரு நாள் ஒதுக்க அவரிடம் சொல்கிறேன்.

பப்ளிசிட்டியை அவர் என்றுமே விரும்பியதில்லை.

உங்கள் நட்பை நான் மதிக்கிறேன் அதுபோலவே காதலுக்கு மரியாதை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

சுமா//

அடப்பாவிங்களா ஒரு பச்ச புள்ளையை இப்படி அழ வெச்சிடிங்களே இது நியாயமா. இப்ப தான் தெரியுது ஏன் பிளாக் மக்கள் யாருமே சேட்டில் இருப்பதில்லை அப்படின்னு. இது மாதிரி கொலை வெறி யோட ஒரு கும்பல் தொரத்து சாமியோவ்.

said...

//அவ்வள்வு வயசுக்கப்புறம் ஜைசங்கர், டெல்லி கணேஷ் எல்லாம் ஆடி இருக்கும் போது நான் மட்டும் வேடிக்கை பார்க்கணுமா?//

கொத்ஸ்,

அவங்கெல்லாம் சின்னப்புள்ளக... ஆடுவாங்க... நீங்கெல்லாம் வயசானுவக...கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாமே?? :)

//அஸ்கு புஸ்கு. நானும் ஆடுவேன். //

ஓகே, ஆடுங்க... ஆனா சைடு தட்டியிலே தலைவர் கொடுக்கிற ஸ்டைல் மாதிரி போஸ் கொடுத்து ஆடணும் :)

said...

//இந்தமாதிரியெல்லாம் கேள்வி கேட்கிறது வெளிநாட்டு சதினாலே தான்!"//

வி.வி.சி :-)

செம ரகளை பதிவு!!! அடுத்தவங்கள கலாய்க்கரத படிக்கற சுகமே தனி தான் :-)

//மக்களே இந்தமாதிரி நாமெல்லாம் ஜாலியா பேசுவோமா? உங்க ஐடி கொடுங்க..... //
எனக்கென்னமோ இத படிக்கும் போது சொந்த செலவுல சூனியம் வெச்சுக்க வாங்கன்னு கூப்பிடற மாதிரியே தெரியுதே ;-)

said...

என் தோழிக்கு கல்யாணம் நல்லபடியா முடியணும்னு ஏழுமலையான் வெங்கடாஜலபதியை வேண்டிக்கறேன். எங்க வீட்டுக்காரர கூட விமானநிலையத்துக்கு வரவேணாம்னு சொல்லிட்டா அந்த சுமா!
இருக்காதா பின்ன...

said...

//பார்த்தீங்களா ராம்.. யார் யாருக்கோ தினமும் வாழ்த்து.. எனக்கு மட்டும் தினமும் திட்டு.. நீங்க ரொம்ப மோசம்.. //

ஹிக்கும்.. அந்த வீணா போன பய சித்தர்த்த் பத்தி சொன்னா வாழ்த்து வேற செய்யணுமா??? என்ன???

said...

கொல்டிக்கு ச்சி நண்பனுக்கு வாழ்த்துக்கள்.

எனக்கு தெரியாம இவ்வளவு நடந்திருக்கா ஒண்ணுமே சொல்லலியே அவன்

said...

//எப்படி? ரெண்டு பேரும் ஏர்போர்ட்டிலேயே டான்ஸா? அதுக்குள்ள ரெண்டு பேரும் வெளிநாட்டுலதானே டூயட் பாடுவாங்க!!!!//

இப்போ எதுக்கு இந்த லாஜிக் கொஸ்டிஸ்ன் ஆப் டென்சன் எல்லாம்.... ஏற்கெனவே நம்ம ஹிரோ வெளிநாட்டிலே இருந்துதானே வர்றாரு... அவரு தன்னோட மாமியார் ஊருலே டூயட் பாடட்டும் :))

//ஆடியன்ஸ் எங்களுக்கெல்லாம் டிக்கட்டு?
//

எல்லாருக்கும் ஓசி டிக்கெட் தான் :))

said...

வெட்டி உசுரை நல்லாத்தான் வாங்கியிருக்கீங்க இராம்.. ஆமா, சுமாங்கிறது சும்மா ஒரு கேரெக்டரா...இல்ல நிஜமான ஆளா.. கடைசி வரைக்கும் வெட்டி அதை சொல்லவே இல்லியே.. போடுங்கப்பா இன்னொரு சாட்டை

said...

//நீங்க லேட்டா வந்துட்டு இப்படி சொல்லப்படாது..:-P //

கதிரு,

தங்கச்சிக்கா சொன்ன பேச்சே கேளுப்பா :))

said...

இராம், இனிமே நீங்க ஆன்லைனில் வந்த கொஞ்சம் உசாராத் தான் இருக்கணும்.. இல்லைன்னா அசின் என்னோட லவ்வர்ங்கிற உண்மையை ஒத்துக்குவச்சிடுவப்பா :-)

said...

//அவங்கெல்லாம் சின்னப்புள்ளக... ஆடுவாங்க... நீங்கெல்லாம் வயசானுவக...கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாமே?? :)//

நம்ம டார்கெட் கொல்டிதானே தவி்ர கொத்ஸ் அல்ல என்பதை கும்மியடிப்பாளர்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

said...

இன்னைக்கு இராத்திரி ராயலுக்கு டெவில் ஷோ இருக்கு

அன்புடன்
வெட்டி

said...

இழுத்துவச்சி இஸ்திரி, குனிய வச்சி கும்மி, ஓடவிட்டு அடி வாங்கறது இதெல்லாம் எங்க தல வெட்டிக்கு சாதாரணம். பாஸ் வந்து சொல்ல்ல்லுங்க பாஸ்ஸ்ஸ்ஸ்

said...

ஆகா ஆகா ராமண்ணே... பல நாளா வரனும்னு நினச்சு இன்னைக்கு தான் இங்க வறேன்..

பின்னிப் பெடல் எடுத்துர்க்கீங்க வெட்டிய :)

சூப்பர் ரவுசான பதிவு.


//
மக்களே இந்தமாதிரி நாமெல்லாம் ஜாலியா பேசுவோமா? உங்க ஐடி கொடுங்க.....
//
அதாவது சொந்த செலவுல சூனியம் வச்சிக்க சொல்றீங்க.. அதானே? :)

@வெட்டி,
சும்மா சும்மா கொல்டு பதிவ போட்றது இந்த சுமாவுக்காகத்தானா?
சொல்லவே இல்ல...


ஆங் சொல்ல மறந்துட்டேன் பாருங்க... அந்த சுமா கமெண்டு டாப்பு டக்கரு. அவிகள வாழ விடுங்கப்பா :P

said...

ஆணி அதிகம்...

அப்பறமா வரேன்...

said...

//இன்னைக்கு இராத்திரி ராயலுக்கு டெவில் ஷோ இருக்கு//

பொதுவில் போட்டு உடைத்ததற்காக ராயலை கட்டம் கட்டுவதை எதிர்க்கிறேன். முடிஞ்சா எங்க தல ஷார்ஜா சிங்கம் கோபிநாத்க்கிட்ட மோதிபாரு வெட்டி.

said...

//ஆணி அதிகம்...

அப்பறமா வரேன்...//

எங்கள் தல இப்போது நிஜமாகவே ஆணி புடுங்க போகிறார், எதிர்க்கட்சிகள் அவரை புறமுதுக்கிட்டு ஓடுவதாக நினைக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன்.

said...

சீக்கிரம் அந்தாள சீக்கிரமா இந்தியாவுக்கு பார்சல் பண்ணுங்கப்பா, எப்ப எங்க வீடியோ கடைக்கு வந்தாலும் தெலுகுபடம் குடு, ரிவியூ எழுதணும்னு நச்சரிப்பு தாங்க முடியல, மொக்கை படத்தை கூட ஒரு மாசம் வச்சிருந்து பாக்கறாரு.

said...

//சுமா said...
அன்புள்ள ராம் அண்ணாவுக்கு.

நீங்கள் அனைவரும் பாலாஜி மீது வைத்திருக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றிகள் ஆயிரம்.

நான் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பாலாஜியை சந்திக்க போகிறேன். இந்த நாளுக்காகத்தான் நான் இவ்வளவு நாள் காத்திருந்தேன். சென்னை வராமல் ஐதராபாத் வர திட்டம் போட்டதே நண்பர்களை தவிர்க்கத்தான். இப்படி நீங்கள் கூட்டமிட்டால் நாங்கள் சந்திப்பதற்கு இடைஞ்சலாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் வருகைக்காக நான் பலநாட்கள் எனக்குள் ஒத்திகை பார்த்து அதன்படி செய்ய நினைத்திருந்தேன் அப்படி நடக்கவே வேண்டும். உங்கள் நட்பு போற்றக்கூடியதுதான் நான் வேண்டுமானால் உங்களை எல்லாம் சந்திக்க ஒரு நாள் ஒதுக்க அவரிடம் சொல்கிறேன்.

பப்ளிசிட்டியை அவர் என்றுமே விரும்பியதில்லை.

உங்கள் நட்பை நான் மதிக்கிறேன் அதுபோலவே காதலுக்கு மரியாதை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

சுமா
//

வாம்மா பாசமலர் சுமா,
ஒன்னையே நினைச்சு நினைச்சு எங்க இளையதளபதி தவியோ தவின்னு தவிச்சிட்டு இருக்கான்:)

எப்பிடியோ நீ வந்துட்டே? அவன் ஒனக்காக தெலுங்கு கத்துக்கிட்டே மாதிரி நீ அவனுக்காக தமிழ் எல்லாம் கத்துக்கிட்டு இப்பிடி அழகா பின்னூட்டம் போட்டுருக்கே!!!!

நீ கிரேட்'ம்மா

said...

சூட்டோட சூட்டா வெ.க.ச ஆரம்பிக்கலாமா!

said...

//அடப்பாவிங்களா ஒரு பச்ச புள்ளையை இப்படி அழ வெச்சிடிங்களே இது நியாயமா. இப்ப தான் தெரியுது ஏன் பிளாக் மக்கள் யாருமே சேட்டில் இருப்பதில்லை அப்படின்னு. இது மாதிரி கொலை வெறி யோட ஒரு கும்பல் தொரத்து சாமியோவ். //

சந்தோஷ்,

வாப்பா.. என்னாப்பா சேம் சைடு கோல் போடுறே??? நாங்கெல்லாம் சுமா'வோட நலம்விரும்பிகள் :)

said...

//எப்பிடியோ நீ வந்துட்டே? அவன் ஒனக்காக தெலுங்கு கத்துக்கிட்டே மாதிரி நீ அவனுக்காக தமிழ் எல்லாம் கத்துக்கிட்டு இப்பிடி அழகா பின்னூட்டம் போட்டுருக்கே!!!!//
சுமாவுக்காக வெட்டி தெலுங்கு கத்துகிறதும் வெட்டிக்காக சுமா தமிழ் கத்துகிறதையும் பாக்கும் பொழுது அட்ட்டா தில்லானா மோகனாம்பாள் படத்துல வர சிவாஜி பத்மினி மாதிரியே இருக்குதுப்பா :))

said...

//வி.வி.சி :-)

செம ரகளை பதிவு!!! அடுத்தவங்கள கலாய்க்கரத படிக்கற சுகமே தனி தான் :-)//

வாங்க ஊஞ்சல்ஸ்,

முதன்முறையா வந்திருக்கீங்க... நன்றி,,நன்றி,, நன்றி

//மக்களே இந்தமாதிரி நாமெல்லாம் ஜாலியா பேசுவோமா? உங்க ஐடி கொடுங்க..... //
எனக்கென்னமோ இத படிக்கும் போது சொந்த செலவுல சூனியம் வெச்சுக்க வாங்கன்னு கூப்பிடற மாதிரியே தெரியுதே ;-) //

ஹி ஹி அப்பிடியெல்லாம் பயப்படாதீங்க,, நான் நல்லவந்தான் :))

said...

////எப்பிடியோ நீ வந்துட்டே? அவன் ஒனக்காக தெலுங்கு கத்துக்கிட்டே மாதிரி நீ அவனுக்காக தமிழ் எல்லாம் கத்துக்கிட்டு இப்பிடி அழகா பின்னூட்டம் போட்டுருக்கே!!!!//
சுமாவுக்காக வெட்டி தெலுங்கு கத்துகிறதும் வெட்டிக்காக சுமா தமிழ் கத்துகிறதையும் பாக்கும் பொழுது அட்ட்டா தில்லானா மோகனாம்பாள் படத்துல வர சிவாஜி பத்மினி மாதிரியே இருக்குதுப்பா :))//

எச்சூஸ் மி, சந்தோஷ், ப்ளீஸ். தில்லானா மோஹனாம்பாள் படம் பாத்து இருக்கியா மேன்? அந்தப் படத்துல பத்மினி பீபீ வாசிக்க கத்துக்கிட்டாங்களா? இல்லை சிவகாசி கணேசருதான் பட்டு பொடவை எல்லாம் சுத்திக்கிட்டு டேண்ஸ் ஆடுனாரா?

அப்புறம் எதுக்கு மேன் அவங்களை எல்லாம் இழுத்துக்கிட்டு. காதலுக்காக ஆளுக்கொரு லேங்குவேஜ் கத்துக்கிட்ட இவங்க எங்க? அவரு சரியா சேவிங் பண்ணாம கட் பண்ணிக்கிட்டு பிளட் வர அதைப்பார்த்து கண்ணாலயே ஒரு சேவிங் சரியாப் பண்ணத் தெரியலை உனக்கு காதல் ஒரு கேடான்னு கேட்ட அவங்க எங்க? கொஞ்சம் கூட மேனேர்ஸ் இல்லாம, கண்ட்ரீ ப்ரூட்ஸ்..

(என்னாது, அந்தப் படம் அப்படி இல்லையா? டெவில் ஷோ ப்ரேக்ல அந்த பரோட்டா மண்டையன் அப்படித்தானேய்யா கதை சொன்னான். எதோ கொல்டிப் படம் பார்த்து அரைகுறையாப் புரிஞ்சுக்கிட்டு தப்பா ரிவ்யூ எழுதறானா, அவனை.....)!!!

said...

// "ம்ம் அதுவா? நானு,தம்பி,புலி,ஜிரா,விவசாயி,அபிஅப்பா,கொத்ஸ், இன்னும் இங்கே நான் சொன்னதவிட நிறைய பேருக அதாவது ஒன்னோட ரசிககண்மணிகள் எல்லாரும் வருவாங்க!"
//

என்னையும் அந்த ரசிகர்கள் லிஸ்ட்ல சேத்துக்கோங்க அண்ணே!! :-D

said...

//இராம், இனிமே நீங்க ஆன்லைனில் வந்த கொஞ்சம் உசாராத் தான் இருக்கணும்.. இல்லைன்னா அசின் என்னோட லவ்வர்ங்கிற உண்மையை ஒத்துக்குவச்சிடுவப்பா :-) //

அடடடடா!!!!
உங்களுக்கு கொஞ்சம் ஊத்தி கொடுத்து என்னிக்காவது உண்மைய வாங்கிட்டு நான் ஒரு பதிவா போட்டுடறேன்!! :-D

said...

அடப்பாவி வெட்டி...

இதுக்குத்தான் நான் இந்தியா கெளம்பும்போது, 'ஹைதராபாத் வழியா போ' ன்னு நச்சரிச்சியா??

said...

//நாந்தான் இங்கேயும் ஃபர்ஸ்ட்டா? //

இவங்க கைய கட்டிப்போட யாருமே இல்லையா???

மலேசியா மங்கையே... உங்களுக்கெல்லாம் ஆணியே கொடுக்க மாட்டாங்களா??

said...

//சூட்டோட சூட்டா வெ.க.ச ஆரம்பிக்கலாமா! //

நானும் அதுல மெம்பர்... சீக்கிரம் ஆரம்பிங்க வெட்டி...

said...

ராமண்ணே...

உங்க ஐடிய நான் ப்ளாக் பண்ணிட்டேன். அதுனால நான் எப்பவுமே ஆஃப்லைன்லதான் இருப்பேன். சரியா??

said...

ஆகா.. வெட்டிய வெட்டி சாய்கறதுன்னு முடிவோட இருக்கீங்க போலிருக்கு.. :)

இதுல அடுத்து யாருன்னு அவங்களே வந்து உங்க கிட்ட கழுத்த காமிக்கனும்.. நல்லாத்தான்யா கிளம்பியிருக்கீங்க...

இந்த ரவுசு பண்றீங்க..

said...

//நானு,தம்பி,புலி,ஜிரா,விவசாயி,அபிஅப்பா,கொத்ஸ்

//

wt abt me???? :@@@@@@@

said...

என் பிதாவின் மைந்தர்களே,
இவ்வாறாக சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாள் இதே நாளிள்தான் ஒரு நல்ல மேய்ப்பர் மேல் இந்த பாவிகள் பழி சுமத்தி (சுமாவோ சுமதியோ இல்லைங்க. நல்லா படிச்சி பாருங்க அது சுமத்தி) சிலுவையில் அறைந்தனர்.

அவர் உங்கள் அனைவரின் பாவத்திற்காக இரத்தம் சிந்தினார்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு பின்னும் அது தொடர்வது உங்களுக்கெல்லாம் வருத்தமாக இருக்கிறது என்பது எனக்கு தெரியும்.

இருப்பினும் உங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டிருக்கும் எனக்காக யாரும் கலங்க வேண்டாம்.

கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பெயராலே - வெட்டி (இதை பிதா, சுதன்.. ஸ்டைலில் படிக்கவும்)

said...

எல்லாம் வசதியும் செஞ்சு குடுக்க நீங்க யார்? எஉங்களுக்கு என்ன தொழில்? அப்படின்னு வெட்டி கேட்க சொன்னாருங்கன்னா? அவ்ளொதான்.
வெயில் கொஞ்சம் ஜாஸ்தியாவும் இருக்கும் ஏ.ஸி மிஷினும் வெச்சுருங்கோ ராயலு

said...

என் பின்னூட்டத்தை அரை மணி நேரமாக வெளியிடாமலிருக்கும் ராயலை நான் கன்னா பின்னா கண்டிக்கிறேன்

மேலும் இது என் ஆருயிர் தம்பி கப்பி, அருமை நண்பன் புலியும் இல்லாத நேரத்தில் பதிவிட்ட காரணத்தையும் மக்கள் மறக்க மாட்டார்கள்...

said...

மாப்பிய கலாய்சா என் அருவா தான் மொதோ அருவா:-))

said...

ஸாரி, மக்கா "தம்பி" போடவேண்டிய பின்நவீனத்துவவூட்டத்தை நான் பப்ளிஷ் செய்ய வேண்டியதா போச்சு, அவர் பிளாக் சொதப்புது அதனால:-))

said...

//ILA(a)இளா said...

எல்லாம் வசதியும் செஞ்சு குடுக்க நீங்க யார்? எஉங்களுக்கு என்ன தொழில்? அப்படின்னு வெட்டி கேட்க சொன்னாருங்கன்னா? அவ்ளொதான்.
வெயில் கொஞ்சம் ஜாஸ்தியாவும் இருக்கும் ஏ.ஸி மிஷினும் வெச்சுருங்கோ ராயலு //

விவா,
நச்சுனு கேட்டுட்டீங்க...
ராயலு வேற மானஸ்தன். கோபத்துல தம்பிய வெட்டி போட்டுட போறாரு. யாராவது அவர தடுத்து நிறுத்துங்கப்பு...

said...

\\தம்பி said...
//இன்னைக்கு இராத்திரி ராயலுக்கு டெவில் ஷோ இருக்கு//

பொதுவில் போட்டு உடைத்ததற்காக ராயலை கட்டம் கட்டுவதை எதிர்க்கிறேன். முடிஞ்சா எங்க தல ஷார்ஜா சிங்கம் கோபிநாத்க்கிட்ட மோதிபாரு வெட்டி.\\

எல....உனக்கு ஏன் இந்த கொலைவெறி ஆசை எல்லாம்.

said...

\\தம்பி said...
சூட்டோட சூட்டா வெ.க.ச ஆரம்பிக்கலாமா!\\

இது எல்லாம் ஒரு கேள்வியா?.....சீக்கிரம்

said...

\\
நா:- "ம்ம் அதுவா? நானு,தம்பி,புலி,ஜிரா,விவசாயி,அபிஅப்பா,கொத்ஸ், இன்னும் இங்கே நான் சொன்னதவிட நிறைய பேருக அதாவது ஒன்னோட ரசிககண்மணிகள் எல்லாரும் வருவாங்க!"\\

ராமண்ணே....நானும்...நானும்...

said...

ராம்ண்ணே...உண்மையில்.... எனக்கு இப்படி ஒரு விஷயம் கிடைச்சிருக்கு. சீக்கிரம் அதை பதிவ போட்டுடுறேன் ;-))))

said...

\\அபி அப்பா said...
மாப்பிய கலாய்சா என் அருவா தான் மொதோ அருவா:-))\\

அபி அப்பா ;-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

said...

/என் தோழிக்கு கல்யாணம் நல்லபடியா முடியணும்னு ஏழுமலையான் வெங்கடாஜலபதியை வேண்டிக்கறேன். எங்க வீட்டுக்காரர கூட விமானநிலையத்துக்கு வரவேணாம்னு சொல்லிட்டா அந்த சுமா!
இருக்காதா பின்ன...//


வாம்மா ராஜி, நீயி சுமா'வோட ஃபிரண்ட்'ஆ??? :)

said...

நான் வந்துட்டேன்.லேட்டா வந்தாலும் லேடஸ்டாக வந்துட்டேன்

said...

ஏன் வெட்டியை எப்படி வாட்டி எடுத்து இருக்கீங்க?.

said...

//கொல்டிக்கு ச்சி நண்பனுக்கு வாழ்த்துக்கள்.

எனக்கு தெரியாம இவ்வளவு நடந்திருக்கா ஒண்ணுமே சொல்லலியே அவன்//


கார்த்திக் நீயும் வந்திட்டியா??? வாப்பா வந்து எங்களுக்கு தார்மீக ஆதரவு கொடு :)

said...

/வெட்டி உசுரை நல்லாத்தான் வாங்கியிருக்கீங்க இராம்..//

வாங்க கார்த்திக்,

ஹி ஹி நம்ம வேலையே அதுதானே :)


//ஆமா, சுமாங்கிறது சும்மா ஒரு கேரெக்டரா...இல்ல நிஜமான ஆளா..//

இருக்கு ஆனா இல்லைன்னு சொல்லுற மாதிரி பேசிட்டு திரியுறான்.... :)

//கடைசி வரைக்கும் வெட்டி அதை சொல்லவே இல்லியே.. போடுங்கப்பா இன்னொரு சாட்டை//

இதோட ரெண்டாவது பாகம் போடச்சொல்லுறீங்க..... சீக்கிரமே போட்டுருவோம்... ஹி ஹி

said...

//இராம், இனிமே நீங்க ஆன்லைனில் வந்த கொஞ்சம் உசாராத் தான் இருக்கணும்.. இல்லைன்னா அசின் என்னோட லவ்வர்ங்கிற உண்மையை ஒத்துக்குவச்சிடுவப்பா :-)/

ஹலோ மிஸ்டர் எனிமி,

நாங்கெல்லாம் பெங்களூரூலே இவ்வளோ பொண்ணுக பார்த்தாலும் அசின் அசின்'ன்னு திரியுற பசங்க.... எங்ககிட்டேவா???

மோதி பார்த்துருவோம், எஜமான் படத்திலே வர்றமாதிரி ஒரு ரேக்ளா ரேஸ் வைச்சு நான் தலைவர் மாதிரி சந்து பொந்துக்குள்ளயெல்லாம் ஓட்டிட்டு வந்து டூயட் பாடிட்டு இருப்பேன்... நீங்க சோகத்திலே ஒட்கார்ந்து இருக்க போறீங்க :)

said...

/நம்ம டார்கெட் கொல்டிதானே தவி்ர கொத்ஸ் அல்ல என்பதை கும்மியடிப்பாளர்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.//

ஆமா கதிரு.... நல்லவேளை ஞாபகப்படுத்தினே :)

said...

//
இன்னொரு பக்கம் நாங்கெல்லாம் ஒட்கார்ந்துகிட்டெ பார்ப்போம்"

வெ:-" நாங்கெல்லாமின்னா யாரு? யாரு?"//

நானும் :)

said...

/இன்னைக்கு இராத்திரி ராயலுக்கு டெவில் ஷோ இருக்கு//

வெட்டிக்காரு, ஹி ஹி இந்தமாதிரியெல்லாம் பேசப்பிடாது,

டெவில்ஷோ'வெல்லாம் போடுற அளவுக்கு பெரிய ஆளா நானு :)

said...

//இழுத்துவச்சி இஸ்திரி, குனிய வச்சி கும்மி, ஓடவிட்டு அடி வாங்கறது இதெல்லாம் எங்க தல வெட்டிக்கு சாதாரணம். பாஸ் வந்து சொல்ல்ல்லுங்க பாஸ்ஸ்ஸ்ஸ்//

ஹி ஹி

said...

//வாம்மா ராஜி, நீயி சுமா'வோட ஃபிரண்ட்'ஆ??? :)//

நீ கொல்டி கதைய படிச்சியா இல்லயான்னு டவுட்டா இருக்குது.

said...

//ஆகா ஆகா ராமண்ணே... பல நாளா வரனும்னு நினச்சு இன்னைக்கு தான் இங்க வறேன்..

பின்னிப் பெடல் எடுத்துர்க்கீங்க வெட்டிய :)

சூப்பர் ரவுசான பதிவு.//


வாங்க அருண்,

முதன்முறையா நம்ம பக்கம் வந்திருக்கீங்க... மிக்க நன்றி :)


//
அதாவது சொந்த செலவுல சூனியம் வச்சிக்க சொல்றீங்க.. அதானே? :)//

ஐயோ நான் ரொம்ப நல்லவங்க :)

//@வெட்டி,
சும்மா சும்மா கொல்டு பதிவ போட்றது இந்த சுமாவுக்காகத்தானா?//

இன்னும் கேளுங்க அவன்க்கிட்டே :))
சொல்லவே இல்ல...


ஆங் சொல்ல மறந்துட்டேன் பாருங்க... அந்த சுமா கமெண்டு டாப்பு டக்கரு. அவிகள வாழ விடுங்கப்பா :P//

said...

/ஆணி அதிகம்...

அப்பறமா வரேன்...///

ஹிம் வாப்பா சீக்கிரம் :)

said...

என்ன ஆச்சு ராயலு ஏன் திடீர்னு இந்த கொலை வெறி...:-)

said...

வெட்டி இவ்வளவு அழகா கதை எழுதும்போதே நினைச்சே இதுக்கு பின்னாடி அனுபவம் இருக்குன்னு...சரிதான் :-)

said...

//நாந்தான் இங்கேயும் ஃபர்ஸ்ட்டா? //

மை பிரண்ட்...இங்க பர்ஸ்ட் வரது இருக்கட்டும்...எக்ஸாம்ல முதல்ல பர்ஸ்ட் வாங்க :-)

said...

/பொதுவில் போட்டு உடைத்ததற்காக ராயலை கட்டம் கட்டுவதை எதிர்க்கிறேன். முடிஞ்சா எங்க தல ஷார்ஜா சிங்கம் கோபிநாத்க்கிட்ட மோதிபாரு வெட்டி.///

எங்கண்ணன் துபாய் சுறாவளி கோபிநாத்'கிட்டே மோதி பாரு நீயீ....

அதை விட்டுட்டு டெவில் ஷோ அது இதுன்னு சொல்லி என்னைமாதிரி சின்னபசங்களையெல்லாம் ஒன்னைமாதிரி பெரிய ஆளா ஆக்கிவிடாதே :)

said...

வெட்டிப் பயலார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

சுமா வீட்லேர்ந்து பாலாஜிக்கு டாட்டா சுமா வேற கொடுக்குறாங்களாமே! உண்மையா?

said...

//எங்கள் தல இப்போது நிஜமாகவே ஆணி புடுங்க போகிறார், எதிர்க்கட்சிகள் அவரை புறமுதுக்கிட்டு ஓடுவதாக நினைக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன். //

வாங்குற காசுக்கு நல்லாதாய்யா கூவுறிங்க :))

said...

//சீக்கிரம் அந்தாள சீக்கிரமா இந்தியாவுக்கு பார்சல் பண்ணுங்கப்பா, எப்ப எங்க வீடியோ கடைக்கு வந்தாலும் தெலுகுபடம் குடு, ரிவியூ எழுதணும்னு நச்சரிப்பு தாங்க முடியல, மொக்கை படத்தை கூட ஒரு மாசம் வச்சிருந்து பாக்கறாரு. //

மொதலாளி,

நாலு ஃபிரஞ்ச் மொழி படமும் கொடுங்க.... பயலுக்கு பக்கத்து சீட் வெள்ளைக்கார பொண்ணும் ரூட் போடுதாம்.... சுமா இல்லன்னா அதையாவது கரெக்ட் பண்ணட்டும் :)

said...

//சூட்டோட சூட்டா வெ.க.ச ஆரம்பிக்கலாமா! //

என்ன சின்னப்புள்ளதனமான கேள்வியிது ராஸ்கல்...

ஆரம்பிச்சிட்டேன்னு வந்து சொல்லு... அப்போ நீ வீரன் :)

said...

//சுமாவுக்காக வெட்டி தெலுங்கு கத்துகிறதும் வெட்டிக்காக சுமா தமிழ் கத்துகிறதையும் பாக்கும் பொழுது அட்ட்டா தில்லானா மோகனாம்பாள் படத்துல வர சிவாஜி பத்மினி மாதிரியே இருக்குதுப்பா :))
//

காதல் கத்திரிக்கா'ன்னு வந்துட்டாலே இதெல்லாம் நடக்கும்ப்பா :)

எங்கே நமக்கெல்லாம் அதை பத்தி தெரிய போகுது :)))

said...

//(என்னாது, அந்தப் படம் அப்படி இல்லையா? டெவில் ஷோ ப்ரேக்ல அந்த பரோட்டா மண்டையன் அப்படித்தானேய்யா கதை சொன்னான். எதோ கொல்டிப் படம் பார்த்து அரைகுறையாப் புரிஞ்சுக்கிட்டு தப்பா ரிவ்யூ எழுதறானா, அவனை.....)!!!
//

கொத்ஸ்,

நீங்க இளையதளபதியை பரோட்டா மண்டையன்னு சொன்னதுக்காக ஒங்கமேலே ஒரு முக்கியமான ஆளு பிராது கொடுத்து இருக்காங்க :)

said...

//என்னையும் அந்த ரசிகர்கள் லிஸ்ட்ல சேத்துக்கோங்க அண்ணே!! :-D //

வாங்க CVR,

உங்களையும் அந்த லிஸ்ட்'லே update பண்ணிருவோம் :)

said...

//அடடடடா!!!!
உங்களுக்கு கொஞ்சம் ஊத்தி கொடுத்து என்னிக்காவது உண்மைய வாங்கிட்டு நான் ஒரு பதிவா போட்டுடறேன்!! :-D /


சீக்கிரமே போடுங்க... வீ ஆர் வெயிட்டிஸ் :))

said...

//அடப்பாவி வெட்டி...

இதுக்குத்தான் நான் இந்தியா கெளம்பும்போது, 'ஹைதராபாத் வழியா போ' ன்னு நச்சரிச்சியா?? /

வாங்கய்யா ஜியா,

அமெரிக்கா'விலே இருக்கிறப்பவே அந்த நச்சரிப்புன்னா இங்கே வந்ததுக்கப்புறம் பாருலே அந்த பயலோட அலும்பை :)

said...

//இவங்க கைய கட்டிப்போட யாருமே இல்லையா???

மலேசியா மங்கையே... உங்களுக்கெல்லாம் ஆணியே கொடுக்க மாட்டாங்களா?? //

விடுய்யா...எப்பிடி பார்த்தாலும் அவங்க நம்ம அக்கா.... :)

said...

//நானும் அதுல மெம்பர்... சீக்கிரம் ஆரம்பிங்க வெட்டி... //


ஏலே மக்கா என்னா ஆச்சு ஒனக்கு,
ஆரம்பின்னு வெட்டி'கிட்டே போயி கேட்கிறே??

நம்ம கதிரு'கிட்டே கேட்டாவது சரியா இருந்துருக்கும் :)

said...

//ராமண்ணே...

உங்க ஐடிய நான் ப்ளாக் பண்ணிட்டேன். அதுனால நான் எப்பவுமே ஆஃப்லைன்லதான் இருப்பேன். சரியா?? //

ஏய்யா இப்பிடியெல்லாம் தப்பான முடிவு எடுத்த??? :(

said...

//ஆகா.. வெட்டிய வெட்டி சாய்கறதுன்னு முடிவோட இருக்கீங்க போலிருக்கு.. :)

வாங்க ACE,

முதன்முறை வருகைக்கு மிக்க நன்றி
:)

//இதுல அடுத்து யாருன்னு அவங்களே வந்து உங்க கிட்ட கழுத்த காமிக்கனும்.. நல்லாத்தான்யா கிளம்பியிருக்கீங்க...

இந்த ரவுசு பண்றீங்க.. //

ஹி ஹி பேசிக்'ல்லி ஐ யம் குட் பாய்... யூ நோ :)

said...

////நானு,தம்பி,புலி,ஜிரா,விவசாயி,அபிஅப்பா,கொத்ஸ்

//

wt abt me???? :@@@@@@@ //

இம்சை நீங்க தான் அந்த புரோகிராம்'க்கு MOC பண்ணப்போறீங்கன்னு முன்னாலே சொன்னோமில்லே...

இப்போ வந்துக்கிட்டு ஆடியன்ஸிலே சீட் வேணுமின்னு அடம்பிடிக்கிறீங்க???

:)

said...

//என் பிதாவின் மைந்தர்களே,
இவ்வாறாக சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாள் இதே நாளிள்தான் ஒரு நல்ல மேய்ப்பர் மேல் இந்த பாவிகள் பழி சுமத்தி (சுமாவோ சுமதியோ இல்லைங்க. நல்லா படிச்சி பாருங்க அது சுமத்தி) சிலுவையில் அறைந்தனர்.

அவர் உங்கள் அனைவரின் பாவத்திற்காக இரத்தம் சிந்தினார்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு பின்னும் அது தொடர்வது உங்களுக்கெல்லாம் வருத்தமாக இருக்கிறது என்பது எனக்கு தெரியும்.

இருப்பினும் உங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டிருக்கும் எனக்காக யாரும் கலங்க வேண்டாம்.

கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பெயராலே - வெட்டி (இதை பிதா, சுதன்.. ஸ்டைலில் படிக்கவும்) //

எமி வெட்டிக்காரு,

இப்பிடியெல்லாம் வரலாற்று பொஸ்தகத்திலே இருக்கிறதை யெல்லாம் போட்டா ஒன்னோட சுமா'வுக்கு ரொம்ப பிடிக்குமின்னுதானே இதயெல்லாம் வேலை மெனகெட்டு டைப் பண்ணிருக்கே?????

said...

//எல்லாம் வசதியும் செஞ்சு குடுக்க நீங்க யார்? எஉங்களுக்கு என்ன தொழில்? அப்படின்னு வெட்டி கேட்க சொன்னாருங்கன்னா? அவ்ளொதான்.//


இந்தமாதிரி கூவினதுக்கு பேமெண்ட் செட்டில் ஆகிருச்சா???

//வெயில் கொஞ்சம் ஜாஸ்தியாவும் இருக்கும் ஏ.ஸி மிஷினும் வெச்சுருங்கோ ராயலு //

அப்போ நீங்களும் ஆடியன்ஸ் தானா??? :)

said...

//என் பின்னூட்டத்தை அரை மணி நேரமாக வெளியிடாமலிருக்கும் ராயலை நான் கன்னா பின்னா கண்டிக்கிறேன்//

அடபாவி,

ஆணிபிடுங்கிற இடத்திலே வெள்ளக்காரனுக கூட மீட்டிங்'லே இருந்தேய்யா?? அதுக்குள்ளே இம்புட்டு சவுண்டா???

//மேலும் இது என் ஆருயிர் தம்பி கப்பி, அருமை நண்பன் புலியும் இல்லாத நேரத்தில் பதிவிட்ட காரணத்தையும் மக்கள் மறக்க மாட்டார்கள்... //

ஹி ஹி....

said...

//மாப்பிய கலாய்சா என் அருவா தான் மொதோ அருவா:-)) //

வாங்க அபி அப்பா,

முதன்முறையா வந்திருக்கீங்க ஆனா வந்தவுடனே காமெடி பண்ணுறீங்க... :)

said...

ராம், நல்லா வெட்டி, பலி போட்டிருக்கீங்க...நடத்துங்க.

said...

//ஸாரி, மக்கா "தம்பி" போடவேண்டிய பின்நவீனத்துவவூட்டத்தை நான் பப்ளிஷ் செய்ய வேண்டியதா போச்சு, அவர் பிளாக் சொதப்புது அதனால:-)) //

அடடா அப்பிடியா????

said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் 90 பின்னூட்டங்கள்... தூக்குங்க அப்படியே... இதோ வரேன் நான்..

said...

//விவா,
நச்சுனு கேட்டுட்டீங்க...
ராயலு வேற மானஸ்தன். கோபத்துல தம்பிய வெட்டி போட்டுட போறாரு. யாராவது அவர தடுத்து நிறுத்துங்கப்பு... ///

ஐயோ தமாசு தமாசு :)

said...

வெட்டிப்பயல் கிட்ட சொல்லி அந்த கொல்ட்டி டிவிடிய எல்லாம் குடுத்துட்டு போக சொல்லுங்க. கடைல இப்போ ஒரு கொல்ட்டி டிவிடி கூட இல்லை...

said...

/எல....உனக்கு ஏன் இந்த கொலைவெறி ஆசை எல்லாம். //

ஓவர் டூ தம்பி :)

said...

//ராமண்ணே....நானும்...நானும்...

//

கட்டாயம் உங்களுக்கும் இடமிருக்கு கோபிண்ணே :)

//ராம்ண்ணே...உண்மையில்.... எனக்கு இப்படி ஒரு விஷயம் கிடைச்சிருக்கு. சீக்கிரம் அதை பதிவ போட்டுடுறேன் ;-)))) //

அட அப்பிடியா... அந்த விஷயத்தை தனிமெயிலே அனுப்புங்க :)

said...

//"கனவிலே சுமா மட்டுமே வர்ற வாழ்த்துக்கள்"//

ராம் அண்ணா, அவருக்கு (போங்க, பேர் சொல்ல கூச்சமா இருக்கு) கனவே வரக் கூடாதுன்னு அதிக ஆணி புடுங்க சொல்லி தூங்க விடாமால் செய்கிறார்கள்... எங்கு சென்று புகார் சொல்வது எனக்கு தயை செய்து சொல்லுங்கள்...

said...

///நான் வந்துட்டேன்.லேட்டா வந்தாலும் லேடஸ்டாக வந்துட்டேன் //

வாம்மா துர்க்கையம்மா,

//ஏன் வெட்டியை எப்படி வாட்டி எடுத்து இருக்கீங்க?. //

அவன் நல்லவன்ங்க... அதுதான் அப்பிடி வாட்டியாச்சு :)

said...

ராம், இதென்ன 3 மணிக்கு கமெண்ட் மாடரேசன்... ஆணி ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப அதிகமோ???

said...

99 இருக்கு இது 100 ஆ :-)

said...

//எங்கே நமக்கெல்லாம் அதை பத்தி தெரிய போகுது :)))//

ஆமா இவருக்கு ஒண்ணுமே தெரியாது. இப்படியே இருடி அடுத்த டெவில் உனுக்குதான்.

said...

//இருப்பினும் உங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டிருக்கும் எனக்காக யாரும் கலங்க வேண்டாம்.//

வெட்டி, சுமா வேற மாதிரி சொல்லிட்டு இருக்காங்க...

said...

//நீ கொல்டி கதைய படிச்சியா இல்லயான்னு டவுட்டா இருக்குது. //

கதிரு,

ஏய்யா இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டு அந்த பய'கிட்டே திட்டு வாங்கி தர்ற??

said...

////
இன்னொரு பக்கம் நாங்கெல்லாம் ஒட்கார்ந்துகிட்டெ பார்ப்போம்"

வெ:-" நாங்கெல்லாமின்னா யாரு? யாரு?"//

நானும் :) //

வாங்க உண்மை ,

ஒங்க பெயரையும் லிஸ்ட்'லே சேர்த்தாச்சு :)

said...

//தம்பி said...

//வாம்மா ராஜி, நீயி சுமா'வோட ஃபிரண்ட்'ஆ??? :)//

நீ கொல்டி கதைய படிச்சியா இல்லயான்னு டவுட்டா இருக்குது. //

அடப்பாவி மக்கா...

கதைய படிக்காமத்தான் நீங்க இவ்வளவு ரவுஸு விடறீங்களா???

நம்ம கதையெல்லாம் நீங்க படிப்பிங்களா??? :-(((

உங்க ரேஞ்சே வேறையாச்சே...

தம்பி,
நீ என்ன எவ்வளவு வேணா ஓட்டிக்கலாம். உனக்கு உரிமை இருக்கு. கதை நல்லா இல்லைனாலும் வந்து பாராட்டிட்டு போற நல்லவன் நீயி...

said...

//
எச்சூஸ் மி, சந்தோஷ், ப்ளீஸ். தில்லானா மோஹனாம்பாள் படம் பாத்து இருக்கியா மேன்? அந்தப் படத்துல பத்மினி பீபீ வாசிக்க கத்துக்கிட்டாங்களா? இல்லை சிவகாசி கணேசருதான் பட்டு பொடவை எல்லாம் சுத்திக்கிட்டு டேண்ஸ் ஆடுனாரா?//
கொத்ஸ் இது ஒரு நல்ல கேள்வி. (நல்ல கேள்வின்னா விடை தெரியலை அப்படின்னு அர்த்தம். ஒரு எதுகை மோனைக்கு அப்ப்படியே சொல்லிட்டேன் கருத்து சொன்னா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது)

said...

ram

azhaku ezhuthuppa

permission vangama kupduden

kochikkama ezhuthuppa

said...

//என்ன ஆச்சு ராயலு ஏன் திடீர்னு இந்த கொலை வெறி...:-)//

12B,

எப்போவும் அந்த கொலைவெறியோட தான் இருக்கிறது...:)

நீங்கதான் ஆன்லைன்லே வர்றதே இல்லியா... நீங்களும் வந்தா இதேமாதிரி ஒரு போஸ்ட் போட்டுறாலாம் :)

said...

//வெட்டி இவ்வளவு அழகா கதை எழுதும்போதே நினைச்சே இதுக்கு பின்னாடி அனுபவம் இருக்குன்னு...சரிதான் :-)//

ஹி ஹி அது என்னோமோ உண்மைதானே :)

said...

//வெட்டிப் பயலார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!//

தளபதி,
இளையதளபதிக்கு
வாழ்த்துக்கள்
சொல்லுறாறே!
ஆச்சரியக்குறி

:)

//சுமா வீட்லேர்ந்து பாலாஜிக்கு டாட்டா சுமா வேற கொடுக்குறாங்களாமே! உண்மையா?//

அதுமட்டுமா கொடுக்கிறாங்க.... இன்னும் ஏகப்பட்ட சீர்செனத்தியெல்லாம் கொடுக்கிறாங்களாம்:)

said...

//ராம், நல்லா வெட்டி, பலி போட்டிருக்கீங்க...நடத்துங்க.//


வாங்க சவுண்ட் ரொம்ப நாளு கழிச்சு வந்திருக்கீங்க :))


//ரொம்ப நாளைக்கு அப்புறம் 90 பின்னூட்டங்கள்... தூக்குங்க அப்படியே... இதோ வரேன் நான்..//

நம்ம பாஸ்டன் புயல் பெயரை போட்டதுக்கு அதுக்கூட வரலைன்னா என்ன ஆகுறது?? :)

said...

//வெட்டிப்பயல் கிட்ட சொல்லி அந்த கொல்ட்டி டிவிடிய எல்லாம் குடுத்துட்டு போக சொல்லுங்க. கடைல இப்போ ஒரு கொல்ட்டி டிவிடி கூட இல்லை...//

மொதலாளி,

நீங்க சொன்னமாதிரியே சொல்லிட்டேங்க.... ஆனா அவரு இந்தியா வர்றவரைக்கும் இருக்கட்டுமின்னு கேட்கிறார்....

கொஞ்சம் தயவு பண்ணி அனுமதி கொடுங்களேன் :)

said...

//ராம் அண்ணா, அவருக்கு (போங்க, பேர் சொல்ல கூச்சமா இருக்கு)//


அடடா.. அம்மணிக்கு வெக்கத்தை பாருடா :)

//கனவே வரக் கூடாதுன்னு அதிக ஆணி புடுங்க சொல்லி தூங்க விடாமால் செய்கிறார்கள்... எங்கு சென்று புகார் சொல்வது எனக்கு தயை செய்து சொல்லுங்கள்...//

அப்பிடியா... விடும்மா, சீக்கிரமே ஐநா சபையிலே இதை பத்தி பிரச்சினை எழுப்ப சொல்லுவோம்,

நமக்கு ஐநா சபை வரைக்கு பவர் இருக்குன்னு காட்டுவோம், அப்புறம் யாரு உங்களை டூயட் பாடுறதுக்கு பிரச்சினை பண்ணுறாங்கன்னு பார்ப்போம் :)

said...

//ராம், இதென்ன 3 மணிக்கு கமெண்ட் மாடரேசன்... ஆணி ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப அதிகமோ???//


ஆணி இல்லே.. பாலாஜி மேலே இருக்கிற பாசம் :)

said...

/99 இருக்கு இது 100 ஆ :-)/

12B,

நல்லா ஏமாந்தீங்களா??? ;)

said...

//ஆமா இவருக்கு ஒண்ணுமே தெரியாது. இப்படியே இருடி அடுத்த டெவில் உனுக்குதான்.//

ஹி ஹி

said...

//
அடப்பாவி மக்கா...

கதைய படிக்காமத்தான் நீங்க இவ்வளவு ரவுஸு விடறீங்களா???

நம்ம கதையெல்லாம் நீங்க படிப்பிங்களா??? :-(((

உங்க ரேஞ்சே வேறையாச்சே...//

:(((

ஏம்ப்பா இப்பிடியெல்லாம் சொல்லுற... நான் எல்லா கதையும் படிச்சிருக்கேன்ப்பா:)


//தம்பி,
நீ என்ன எவ்வளவு வேணா ஓட்டிக்கலாம். உனக்கு உரிமை இருக்கு. கதை நல்லா இல்லைனாலும் வந்து பாராட்டிட்டு போற நல்லவன் நீயி...//

ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல.. :)

said...

//கொத்ஸ் இது ஒரு நல்ல கேள்வி. (நல்ல கேள்வின்னா விடை தெரியலை அப்படின்னு அர்த்தம். ஒரு எதுகை மோனைக்கு அப்ப்படியே சொல்லிட்டேன் கருத்து சொன்னா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது)///

சந்தோஷ்,


தங்கிலிஷ்'லே என்னோமோ ஒரு வார்த்தை சொல்லுவாங்க... அது பேரு கூட............................................

ஆங்.. சமாளிபிகேஷன்..:)

அதுக்கு சரியான எடுத்துக்காட்டு இந்த ஒன்னோட கமெண்ட் :)

said...

//ram

azhaku ezhuthuppa

permission vangama kupduden

kochikkama ezhuthuppa//


என்ன அய்யனார் இப்பிடி சொல்லிட்டிங்க... சீக்கிரமே எழுதுறேன் :)

said...

//நீங்கதான் ஆன்லைன்லே வர்றதே இல்லியா... நீங்களும் வந்தா இதேமாதிரி ஒரு போஸ்ட் போட்டுறாலாம்//

இந்த போஸ்ட் படிச்சிட்டு ஆப்லைன் போனதுதான்...வீன் வம்புக்கு போகாத...தானா வந்தாலும் ஓடிப்போயிறுன்னு எங்க அப்பா சொல்லி இருக்கார் :-)

said...

//மக்களே இந்தமாதிரி நாமெல்லாம் ஜாலியா பேசுவோமா? உங்க ஐடி கொடுங்க..... //

இந்த பேச்சு பேசிட்டு ID வேற கேக்கறியா?? ரொம்பதாய்யா தகிரியம் உனக்கு...