Wednesday, April 11, 2007

அழகென்ற சொல்லுக்கு....

ஒரு நாள் அர்த்தராத்திரியிலே சேட் பண்ணிட்டு இருக்கிறப்போ தீடிரென்னு கதிர் வந்து அழகுன்னா நீ என்ன நினைக்கிறே'ன்னு கேட்டார். எனக்கு அப்போ சொல்லுறதுக்கு ஒன்னும் தோணலை.எதோ ஒன்னை சொன்னேன், அவர் நம்ம கொத்ஸ்'கிட்டே போயி விளக்கம் கேட்க அவரும் தன்னோட முதுமையிலே கூட இன்னும் தான் இளமையாக எழுதுறதுதான் அழகுன்னு சொல்லி கதிரை ஏமாத்தினதும் மட்டுமில்லாமே அழகை பத்தி பதிவென்னு இட்டு சங்கிலி தொடரா ஆரம்பிச்சி விட்டார். அது அங்க சுத்தி இங்க சுத்தி நம்ம கவிஞர் அய்யனாரும் எழுதி கடைசியா என்னை இழுந்து விட்டுட்டாரு...

அழகுன்னா என்ன'ன்னு ரொம்பவே யோசிச்சு யோசிச்சு பார்த்துட்டேங்க.. ஆனா கொஞ்சகாணு மேட்டர் கிடைச்சிருக்கு, இதெல்லாம் அழகா'ன்னு முழுசா படிச்சிட்டு கேட்டு அடிக்க வந்துறாதீங்க, ஏன்னா ஒங்களை மாதிரி நல்லவங்களுக்கெல்லாம் அது அழகு இல்லை :)

முருகன்:-


அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா

சுடராக வந்தவேல் முருகா - கொடும்
சூரரைப் போரிலே வென்றவேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழமுன்னை யல்லாது பழமேது முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீயல்லவோ முருகா
சக்தியுமை பாலனே முருகா - மனித
சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா

இந்த பாடலை கேட்கிறேன்,கேட்டு கொண்டே இருக்கேன். எனக்கு முழுவதுமாக கடவுள் நம்பிக்கை கிடையாது, அதுவும் என்னையறியமாலே குழப்பத்துடனே சில கடவுள் நம்பிக்கை உண்டு, கடவுள் இருக்கா இல்லையா என தர்க்கரீதிக்கு இடைப்பட்ட நிலையில் இருக்கிற Agnostic கோஷ்டியை சேர்ந்தவந்தான் நானும். ஆனால் முருகனை கடவுள் உருவமாய் உருவகப்படுத்த முடியவில்லை. கல்லூரி தினங்களுக்கு அப்புறம் Agnostic நிலையில் தீவிரமான பின்னும் இன்னமும் முருகனை மட்டும் ஏத்துக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவனை என் தோழனாய், என் சகோதரனாயாய் நினைத்துக்கொண்ட சிறுவயது பழக்கம்தான் அது. ஒரு காலகட்டத்தில் முழுவதுமான ஆத்திகவாதியோ இல்லை நாத்திகவாதியோ ஆனால் கூட எந்தமிழின் செல்வன் முருகன் தான் என்றென்றும் அழகன்.

குறும்பு:-

பெரியாளாக வளர்ந்து விட்டாலும் இன்னமும் என்னை சுற்றுவட்டாரத்தில் அடையாளப்படுத்தபடும் வார்த்தை ரெட்டைசுழி வாலு. அந்தளவுக்கு ரொம்பவே குறும்பு பண்ணிருக்கேன். அஞ்சு அல்லது ஆறு வயசு சமயத்திலே ஏதோவொரு இடத்திலே ஓசி சர்க்கரை பொங்கல் வாங்கப்போயி ரொம்ப நேரம் கழிச்சி வந்தேன். படிக்கமாமே வெட்டியா ஊர் சுத்தப்போயிட்டேன்னு அம்மா என்னை குச்சியாலே அடிக்க போறப்போ நான் குனிய போக குச்சி தலையிலே பட்டு பொல பொலன்னு ரத்தம்... அவங்க அதை பார்த்து அழுது நானும் அழுதுட்டே ஆஸ்பத்திரி போறப்போ "அம்மா அந்த சர்க்கரை பொங்கலை வீட்டுக்கு போனதும் சாப்பிடுறேன்"ன்னு சொன்னதும் அழுதுட்டு இருந்த அம்மா சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

இன்னொரு சம்பவம் இதேமாதிரிதான் அதுவும் அதே வயசுன்னு தான் நினைக்கிறேன். எங்க மாமா கல்யாணம் திருப்பரங்குன்றத்திலே நடந்துச்சு, கல்யாண முதல் நாள் வரவேற்பிலே நான் எங்கேயோ வழித்தெரியாமே தொலைஞ்சு போயிட்டேன். கோவிலுக்கு பக்கத்திலே நின்னுட்டு அழுதுட்டு இருந்தோப்பா ஒருத்தர் போலிஸ் ஸ்டேசன்'லே கொண்டு விட்டார்..அங்கே போனதிலே இருந்து ஒரே அழுகைதான், போலிஸெல்லாம் பயந்து போயி என்னாடா வேணும் ஒனக்குன்னு கேட்க.. நான் இதுதான் சான்ஸ்'ன்னு முட்டை பொரட்டா கேட்டேன், ஏன்னா அதுக்கு மொதநாளுதான் எங்கப்பா வாங்கிதரமாட்டேன்னு சொல்லிட்டாரு, அவங்களும் அதை வாங்கிட்டு வர்ற போனநேரத்திலே எங்க சொந்தபந்தம் எல்லாரும் வந்துட்டாங்க.. எங்கப்பாவும் அம்மாவும் அழுதுட்டே என்னை கூட்டிட்டு போறப்பா அப்போவும் "அப்பா அந்த போலிஸ்ண்ணே எனக்கு முட்டை பொரட்டா வாங்கிட்டு வந்துருப்பாங்க"ன்னு சொன்னதும் எங்க மாமா புதுமாப்பிள்ளை விட்ட சாபம் இன்னமும் ஞாபகத்திலே இருக்கு, "அடேய் ஒனக்கும் இதே திருப்பரங்குன்றத்திலே கல்யாணம் நடக்கும், நீயும் இப்பிடிதான் என்னை மாதிரி அலைய போற?" :)

இன்னமும் எங்க சொந்தகாரங்க என்னை இப்போ பார்த்தா நம்பவே மாட்டாங்க.. நானா இப்பிடி மாறிப்போயிட்டேன்னு....

குழந்தைகள்:-

எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயங்களிலே இதுவும் ஒன்னு. என்னோட அக்காவுக்கு குழந்தை பொறந்தப்போ என்கிட்டேதான் சர்க்கரை தண்ணி ஊத்துன்னு சொன்னாங்க. (தாய்ப்பால் தவிர வேற எதுவும் தரக்கூடாதுன்னு டாக்டர் அட்வைஸ்). அப்போதான் பிறந்து சிலமணி துளிகள் ஆனா அவனை மடியிலே வைச்சு சும்மாகாச்சிக்கு சர்க்கரை தண்ணின்னு சொல்லி ஸ்பூனை காட்டுன்னேன். அடடா என்னவொரு அழகு பூமாதிரி மெல்லியதாய் விரல்களும்,பஞ்சு பொதி மாதிரி மொத்த உடலும் இன்னமும் நினைச்சாலும் ரொம்பவே அழகாக உணர்வேன். இன்னமும் எங்க போனாலும் குழந்தைகளை கண்டா குஷி வந்துரும், அவங்க கூட போயி அவங்ளோட கிள்ளைமொழி கேட்கிறது அப்பிடியொரு அழகாக உணர்வேன்.

தனிமை:-

இதை பத்தி நான் ஏற்கெனவே எழுதி தள்ளிட்டேன். ஆனா என்னை பொருத்தவரைக்கும் அது என்னை ஆட்கொண்டது ரொம்பவே அதிகம், சிறுவயசிலே ரொம்பவே அதிகமாக வாயாடிட்டு இப்போ கொஞ்சமே அமைதியான மனோபவத்தை வளர்ந்துக்கிட்ட பிறகு தனிமை தனிமை தான். சிலவருடங்களுக்கு முன்னாடி குற்றால அருவிகளுக்கு சுற்றுலா போயிட்டு ரெண்டு நாள் பசங்ககூட சுத்திட்டு இருந்தேன், ஆனா தீடிரென்று தனிமையிலே இருக்கனுமின்னு தோணினதும் யாருக்கிட்டேயும் சொல்லமே காட்டுக்குள்ளே நான்மட்டும் தனியா 8மணி நேரம் இருந்துட்டு வந்தேன். எந்தவொரு கோட்பாடு இல்லாத சாலைகளும், உதிர்ந்து கருகிய சருகுகளும், சின்ன சின்ன பூச்சிகளும், ரீங்காரவண்டுகளும் அப்பிடியொரு அழகு. அப்போ கவிதை எழுத கிடைச்ச எண்ணங்கள் நிறைய... அதெல்லாம் கவிதையா வடிச்சி சூடு ஆறிப்போயி என்னோட டைரியிலே தூங்கிட்டு இருக்கு...


மதுரை:-

கழுதைக்கும் எங்கூருக்கும் எனக்கும் வைச்சு நீங்க பழமொழி சொன்னீங்கன்ன சிரிச்சிட்டே ஏத்துக்குவேன். ஏன்னா என்னாந்தான் வெளிநாடு,வெளிமாநிலமின்னு இருந்தாலும் நாமே அட்லிஸ்ட் ஒரு வினாடியாவது நம்மோளோட அந்த சொந்தமண்ணை நினைச்சு பார்க்கமே இருக்கமுடியாது. அந்தமாதிரி மழைநாளிலே வெளிவரும் மண்மணத்திலே நம்மளயறியாமலே சொந்த ஊர் ஞாபகம் வர ஆரம்பிச்சிடும். அதுக்கு காரணம் என்னான்னா சின்னவயசிலே விளையாடுறப்போ மழை வந்துடுச்சேன்னு வீட்டுக்குள்ளே ஓடி போயி சன்னல் வழியா சொட்டா சொட்டா வானம் பூமியிலே தண்ணி ஊத்தி விளையாடுற அந்த விளையாட்டை ரசிக்கிறப்போ வர்ற மண் வாசம் நுகர்ந்தவங்க எங்கே இருந்தாலும் அதே தருணம் திரும்ப நடக்கிறப்போ சொந்தமண்ணை நினைக்க ஆரம்பிச்சிரும்.

அந்தவகையிலே என்னோட ஊர் ரொம்பவே அழகு, மீனாட்சி அம்மன் கோவில் எதிரிலே இருக்கிற பள்ளிக்கூடத்திலே படிச்சிட்டு மதியவேளைகளிலே கோவிலுக்கு போயி விளையாடுற அந்த தருணங்கள் இன்னமும் அழகு.

தமிழ்:-

மதுரையும் தமிழையும் தனித்தனியான அழகுன்னு பிரிச்சு எழுதுறதுக்கு எனக்கே பிடிக்கலை. எனக்கு ரொம்ப பிடித்தமான அழகுன்னா நம்ம மொழியோட அழகுதான். இரட்டை கிளவிகளும், வெண்பாக்களும்,குறளும், காப்பியங்களும் தமிழ்மொழியின் சிறப்புகள். ஒவ்வொரு பகுதியிலும் வேவ்வேறுவிதமா பேசினாலும் அதொட தனித்தன்மையை இழக்காமல் இருக்கிறது அழகு. எந்த மொழிக்கும் அழகே அதோட எந்தவொரு பிறமொழி கலந்தாலும் அம்மொழியோட வளம் கெட்டு விடக்கூடாது. அந்தவகையில் நமது தமிழ் சொல்வளமிக்க மொழி. இன்னமும் அதை நல்லமுறையில் பயன்படுத்தி பிற்சந்ததியினரும் நம்தமிழ் மொழியை நினைத்து பாரதி சொன்னது போல பெருமிதப்பட வேண்டும்.

என்னையும்,உங்களையும் இணைந்த நம் தாய்மொழி தமிழ் அழகு, அதைவிட மொழிக்கு முன்னால் வரும் இரட்டைஎழுத்து சொல்லுக்கு உரியவள் என்றென்றும் அழகு..

இதுப்போல அழகாக??? பதிவு எழுத நான் அழைக்கும் மூவர்:-

மருத இளவரசர் தருமி ஐயா..
.
மருத சிங்கம் குமரன்...
சந்திரமதி அக்கா... (அண்ணா'ன்னு சொன்னா அடிக்க வருவாங்களா??)

சிறப்பு அழைப்பாளராக எங்கள் மருத சிங்கத்திலென்று பங்காளி
(அண்ணே நான் கூப்பிட்டுட்டேன், யாரும் கூப்பிடாமலே பதிவு போட்டாச்சுனு ஃபீல் பண்ணாதீங்க)

49 comments:

said...

அழகு முருகனில் ஆரம்பிச்சி, அழகா கொண்டு போயி (நடுவில ஒரு இடத்தில் தும்மல் வந்தாலும்) மருத தமிழில் முடிச்சிட்டீரே. கூப்பிட்டது எல்லாம் பெரும் பார்ட்டிங்க.

//நானா இப்பிடி மாறிப்போயிட்டேன்னு.//

ஏன் இப்போ எல்லாம் சர்க்கரைப் பொங்கலை வீட்டுக்கு கொண்டு வராம கிடைச்ச இடத்திலேயே கபளீகரம் பண்ணிடறீரா? :)

said...

எல்லாமே அழகுதாங்க!
அதுவும் அந்த முருகன் பாட்டு, மார்கழி மாசம் நினைவுக்கு வந்துடும். பெருமாள் கோயில்ல தினமும் அதிகாலைல போடுவாங்க. ஒருநாள் திருவிளையாடல் கதைவசனம், மறுநாள்
அழகென்ற சொல்லுக்கு முருகா...
முருகனை கூப்பிட்டு முறையிட்ட...
கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி...
உள்ளம் உருகுதய்யா முருகா....
தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத.....
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா...

இதுக்கெல்லாம் மேல் நான் மிகவும் ரசிப்பது டி.எம்.எஸ் குரலைத்தான். இவரைத் தவிர வேற யார் பாடினாலும் பொருந்தவே பொருந்தாது.

அழகான பதிவுப்பா!

said...

சூப்பரான பதிவு தலைவரே!!
இதெல்லாம் பாத்தா நான் என்ன எழுத போறேன்னு கவலையா இருக்கு!! :-(

said...

//விளையாடுறப்போ மழை வந்துடுச்சேன்னு வீட்டுக்குள்ளே ஓடி போயி சன்னல் வழியா சொட்டா சொட்டா வானம் பூமியிலே தண்ணி ஊத்தி விளையாடுற அந்த விளையாட்டை ரசிக்கிறப்போ வர்ற மண் வாசம் நுகர்ந்தவங்க எங்கே இருந்தாலும் அதே தருணம் திரும்ப நடக்கிறப்போ சொந்தமண்ணை நினைக்க ஆரம்பிச்சிரும்.
//
கரெக்டா சொன்னீங்க ராம்.

குறும்பு, குழந்தை எல்லாருக்கும் பொருந்துற மாதிரி இருக்கும். அதை அழகா சொன்னீங்க!

said...

//அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன்
//

உண்மை உண்மை இது இராம்.. முருகனின் ஓவியத்தையோ பழநி போன்ற கோவில்களில் அவரது சிலையையோ பார்த்துவிட்டால், பார்த்துகொண்டே இருக்கலாம்.. அவருக்கு மட்டும் அப்படியொரு அழகு..

said...

//மதுரையும் தமிழையும் தனித்தனியான அழகுன்னு பிரிச்சு எழுதுறதுக்கு எனக்கே பிடிக்கலை.//

கவலைப்படாதே இராம்.. பாரதிதாசன் தமிழுக்கு அமிழென்று பேர் ன்னு இதைபத்தி ஒரு கவிதையே எழுதியிருக்கிறார்

said...

எல்லாம் சரி அது என்ன கவிஞர் அய்யனார்?? ..குசும்புயா மதுரக்காரங்களுக்கு..
:))


மழை,மண்வாசம்,தனிமை எல்லாம் நல்லா இருந்திச்சி

said...

அழகு ராம் தம்பி, அழகான பதிவு:-)

said...

ஒரே ஊர்க்காரவுகன்னா ப்ரியம் இருக்க வேண்டியதுதான். ஆனாலும் "இளவரசர்" எல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை..??!! அதுவும் இப்ப நான் இருக்க கோலத்தைப் பாத்தீங்க..மருத வெண்தாடி வேந்தர்னு கூப்பிட்டிருப்பீங்க...

நீங்கதாங்க மருத இளவரசர்.. நானெல்லாம் 'அதையும் தாண்டி .. புனிதமான .... fill up the blanks

said...

:)) azagukku azagu serpathu ethu?

said...

குழந்தையழகு..
குறும்பழகு..
தனிமையழகு..

இது மூன்றும் நான் ரசிக்கும் அழகும்தான்.. :-)

said...

சின்ன பையா ராம்..

நீ ஒரு அழகை மிஸ் பண்ணீட்டப்பா..

சித்தார்த் அழகை சேர்த்துக்கலையே???

said...

ராம்.. நீங்க சின்ன வயதில் பண்ணிய குறும்புகளை ரசித்தேன். ஒரு குழந்தை + குறும்பு.. அதிலே ஒரு கலக்கல். ;-)

said...

/அழகு முருகனில் ஆரம்பிச்சி, அழகா கொண்டு போயி (நடுவில ஒரு இடத்தில் தும்மல் வந்தாலும்) மருத தமிழில் முடிச்சிட்டீரே. //

வாங்க கொத்ஸ்,

பதிவை அழகாக எழுதிருக்கென்னு சொல்லுறீங்களா??? இல்லையா??? :)

கவுஜ'ன்னா தானே தும்மல் வரணும், ஆனா நான் சொன்னது கவிதை தானே?? :)

//கூப்பிட்டது எல்லாம் பெரும் பார்ட்டிங்க.//

அந்த பெரியவங்கல்லாம் சிறுவன் என் அழைப்பை ஏற்று எழுதுனா மிக்க மகிழ்ச்சி என்பது அதை தவிர வேற எதுவும் இல்லை.....

//ஏன் இப்போ எல்லாம் சர்க்கரைப் பொங்கலை வீட்டுக்கு கொண்டு வராம கிடைச்ச இடத்திலேயே கபளீகரம் பண்ணிடறீரா? :)//

பின்னே... வீட்டுக்கு கொண்டு போனாதானே அடிவிழும், கிடைச்ச இடத்திலே வாயிலே போட்டுட்டு தான் வீட்டுக்கே போறது... :)

said...

//அழகு பூமாதிரி மெல்லியதாய் விரல்களும்,பஞ்சு பொதி மாதிரி மொத்த உடலும் இன்னமும் நினைச்சாலும் ரொம்பவே அழகாக உணர்வேன்//

எனக்கும் flash back போயிருச்சு.. அழகா இருக்கு

ஹ்ம்ம்..நல்லா இருக்கு ராம்..

said...

// எனக்கு முழுவதுமாக கடவுள் நம்பிக்கை கிடையாது//

சேம் பிளட் ராயலு..இருந்தாலும் இந்த மாதிரி பாட்டு எல்லாம் எப்பொ கேட்டாலும் மனசுக்கு அமைதியா இருக்கும்...சில நேரம் அன்பே சிவம்ல சொல்ற மாதிரி இந்த மாதிரி பாட்டு தான் கடவுளோனு கூட தோனும் :-)

said...

//கழுதைக்கும் எங்கூருக்கும் எனக்கும் வைச்சு நீங்க பழமொழி சொன்னீங்கன்ன சிரிச்சிட்டே ஏத்துக்குவேன். ஏன்னா என்னாந்தான் வெளிநாடு,வெளிமாநிலமின்னு இருந்தாலும் நாமே அட்லிஸ்ட் ஒரு வினாடியாவது நம்மோளோட அந்த சொந்தமண்ணை நினைச்சு பார்க்கமே இருக்கமுடியாது//

அருமையா சொன்னீங்க ராயலு...மொத்தத்துல சூப்பர் அழகான பதிவு :-)

said...

Madurai is always beautiful. So no hesitations in it.

said...

அழகென்ற சொல்லுக்கு.....................இராயல்!!!!


இவண்
7.5-வது வட்ட இராயல் இராம் நற்பணி மன்றம்.

said...

//அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா//

படத்தோட பாடலையும் போட்டு எங்களைப் பரவசப் படுத்திட்டீங்க இராம்! மிக்க நன்றி!

//அதற்கு காரணம் அவனை என் தோழனாய், என் சகோதரனாயாய் நினைத்துக்கொண்ட //

அடடே! நானும் அப்படித்தான்! சில சமயம் தோழன்! சில சமயம் கண்ணாமூச்சி ஆட்டம் சிறுபிள்ளை!
சில நேரம் ஆசான்! இப்படி எல்லாமாகவும் இருப்பான்!

said...

//சொல்லமே காட்டுக்குள்ளே நான்மட்டும் தனியா 8மணி நேரம் இருந்துட்டு வந்தேன்//

ஆமா! காட்டுலே இருந்த சிங்கம், புலிய எல்லாம் கவிதை சொல்லி விரட்டி விட்டுட்டீங்களா?

said...

//அம்மா என்னை குச்சியாலே அடிக்க போறப்போ நான் குனிய போக குச்சி தலையிலே பட்டு பொல பொலன்னு ரத்தம்//

எனக்குக் கிடைக்காம எல்லாப் பொங்கலையும் திரும்ப திரும்ப வரிசைல நிண்ணு வாங்குனியல்ல! உனக்கு நல்லா வேணும்!

said...

//எல்லாமே அழகுதாங்க!
அதுவும் அந்த முருகன் பாட்டு, மார்கழி மாசம் நினைவுக்கு வந்துடும். பெருமாள் கோயில்ல தினமும் அதிகாலைல போடுவாங்க. ஒருநாள் திருவிளையாடல் கதைவசனம், மறுநாள்
அழகென்ற சொல்லுக்கு முருகா...
முருகனை கூப்பிட்டு முறையிட்ட...
கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி...
உள்ளம் உருகுதய்யா முருகா....
தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத.....
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா...//

வாப்பா கதிர்,//இதுக்கெல்லாம் மேல் நான் மிகவும் ரசிப்பது டி.எம்.எஸ் குரலைத்தான். இவரைத் தவிர வேற யார் பாடினாலும் பொருந்தவே பொருந்தாது.//

உண்மைப்பா :)

//அழகான பதிவுப்பா!//

நன்றி கதிரு

said...

//சூப்பரான பதிவு தலைவரே!!//

வாங்க CVR,

பாரட்டுதலுக்கு மிக்க நன்றி

//இதெல்லாம் பாத்தா நான் என்ன எழுத போறேன்னு கவலையா இருக்கு!! :-(//

அடடா இப்போதான் ஒங்களோட பதிவே படிச்சிட்டு வந்தேன், என்ன அருமையா எழுதிட்டு இங்க வந்து இப்பிடி கமெண்ட் போடுவீங்க?? :))

said...

//கரெக்டா சொன்னீங்க ராம்.

குறும்பு, குழந்தை எல்லாருக்கும் பொருந்துற மாதிரி இருக்கும். அதை அழகா சொன்னீங்க!//

வாங்க காட்டாறு,

நமக்கு எல்லாருக்கும் பிடிச்சதே குழந்தைகள் தானே :))

வருகைக்கு மிக்க நன்றி

said...

//உண்மை உண்மை இது இராம்.. முருகனின் ஓவியத்தையோ பழநி போன்ற கோவில்களில் அவரது சிலையையோ பார்த்துவிட்டால், பார்த்துகொண்டே இருக்கலாம்.. அவருக்கு மட்டும் அப்படியொரு அழகு..//

உண்மை கார்த்திக்....

வருகைக்கும் கருத்து தருகைக்கும் மிக்க நன்றி :)

said...

//எல்லாம் சரி அது என்ன கவிஞர் அய்யனார்?? ..குசும்புயா மதுரக்காரங்களுக்கு..
:))//

ஹி ஹி உண்மையை சொன்னா அதுக்கு பேரு குசும்பா??? :)


//மழை,மண்வாசம்,தனிமை எல்லாம் நல்லா இருந்திச்சி//

ரொம்ப நன்றி அய்யனார் :)

said...

//அழகு ராம் தம்பி, அழகான பதிவு:-)//

நன்றிண்ணே :)

//ஒரே ஊர்க்காரவுகன்னா ப்ரியம் இருக்க வேண்டியதுதான். ஆனாலும் "இளவரசர்" எல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை..??!! அதுவும் இப்ப நான் இருக்க கோலத்தைப் பாத்தீங்க..மருத வெண்தாடி வேந்தர்னு கூப்பிட்டிருப்பீங்க...//

ஐயா,

என்ன இப்பிடி சொல்லிட்டிங்க?? நீங்க எந்த கெட்-அப் போட்டாலும் அழகா தான் இருப்பீங்க... :)

//நீங்கதாங்க மருத இளவரசர்.. நானெல்லாம் 'அதையும் தாண்டி .. புனிதமான .... fill up the blanks///

Fill பண்ணிருவோம்....

அதையும் தாண்டி புனிதமான, என்றொன்றும் அழகு குன்றாத பேரோளி இளவரசர்....

ஹிஹி

said...

//:)) azagukku azagu serpathu ethu?//

ஏலே ஜியா,

இன்னும் வேற என்னவெல்லாம் இருக்கு?? கேளு?

கழுதையை எங்கிட்டு பார்த்தாலும் அழகுதானாம் :)

said...

//குழந்தையழகு..
குறும்பழகு..
தனிமையழகு..

இது மூன்றும் நான் ரசிக்கும் அழகும்தான்.. :-)//

வாங்க தங்கச்சிக்கா,

ஏதோ வெள்ளக்காரனுவே பழமொழி ஒன்னு இருக்குமே... அது என்ன?? ஆங்..

அறிவாளிக பூராவும் ஒரே மாதிரிதான் யோசிப்பாங்கன்னு.... அதுமாதிரி ரசிப்பாங்கன்னும் வைச்சிக்கோவோம் :)

//சின்ன பையா ராம்..

நீ ஒரு அழகை மிஸ் பண்ணீட்டப்பா..

சித்தார்த் அழகை சேர்த்துக்கலையே???///

மண்ணாங்கட்டி :((

//ராம்.. நீங்க சின்ன வயதில் பண்ணிய குறும்புகளை ரசித்தேன். ஒரு குழந்தை + குறும்பு.. அதிலே ஒரு கலக்கல். ;-)///

நன்றி நன்றி :)))

said...

இராம். அழைப்பிற்கு நன்றி.

நானும் பல நேரங்களில் என்னை அக்னாஸ்டிக்காக உணர்ந்திருக்கிறேன். இறை நூல்களில் ஆர்வமும் இறையனுபவங்களும் இருந்தாலும் அறிவியல் முறைப்படி அவற்றை விளக்கமுடியும் என்றும் மனத்தின் ஒரு பகுதி சொல்லிக் கொண்டே இருக்கும். :-)

அழகு என்றாலே நினைவிற்கு வருகின்ற அழகர்கள் இருவரில் ஒருவரை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்; இன்னொருவரை பங்காளி சொல்லிவிட்டார். நான் யாரைச் சொல்வது?

said...

சூப்பரா எழுதி இருக்கீங்க...என்னவோ காபி டீ ரைட் எல்லாம் சொன்னீங்களே ...க்ரேட் மென் திங்க்ஸ் அலைக்..விடுங்க.

குறும்பு அழகுபத்தி படிச்சு நல்லா ரசிச்சு சிரிச்சேன் ...

said...

ராம்
சுருக்கமாக சொன்னால் எல்லாமே அழகுதான். அதுவும் உங்கள் குறும்புபை படித்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை

மதுரையும், தமிழும் ரொம்ப அழகாக எழுதியிருக்கீங்க.

said...

//எனக்கும் flash back போயிருச்சு.. அழகா இருக்கு

ஹ்ம்ம்..நல்லா இருக்கு ராம்..//

முதன்முறை வருகைக்கு மிக்க நன்றி'க்கா :)

நல்லா இருக்குன்னு எனக்காக பொய் சொன்னதுக்கும் பெரிய நன்றி :)))

said...

ராயலு,

எல்லாமே அழகா சொல்லியிருக்கீங்க. முருகன்ல தொடங்கி முட்டைப்பரோட்டா தொட்டு, குழந்தை, தனிமை, மதுரை, தமிழ்னு எல்லாமே ரொம்ப சூப்பர்.

அதிலயும்

//எந்தவொரு கோட்பாடு இல்லாத சாலைகளும், உதிர்ந்து கருகிய சருகுகளும், சின்ன சின்ன பூச்சிகளும், ரீங்காரவண்டுகளும் அப்பிடியொரு அழகு.//// அந்தமாதிரி மழைநாளிலே வெளிவரும் மண்மணத்திலே நம்மளயறியாமலே சொந்த ஊர் ஞாபகம் வர ஆரம்பிச்சிடும். அதுக்கு காரணம் என்னான்னா சின்னவயசிலே விளையாடுறப்போ மழை வந்துடுச்சேன்னு வீட்டுக்குள்ளே ஓடி போயி சன்னல் வழியா சொட்டா சொட்டா வானம் பூமியிலே தண்ணி ஊத்தி விளையாடுற அந்த விளையாட்டை ரசிக்கிறப்போ வர்ற மண் வாசம் நுகர்ந்தவங்க எங்கே இருந்தாலும் அதே தருணம் திரும்ப நடக்கிறப்போ சொந்தமண்ணை நினைக்க ஆரம்பிச்சிரும்.//

//என்னையும்,உங்களையும் இணைந்த நம் தாய்மொழி தமிழ் அழகு, அதைவிட மொழிக்கு முன்னால் வரும் இரட்டைஎழுத்து சொல்லுக்கு உரியவள் என்றென்றும் அழகு..//

இப்படி நீங்க எழுதியிருக்கிறது அழகோ அழகு!

எனக்குப் பிடிச்ச ஊர் ஆளாவேற போயிட்டீங்க. [யாருங்க அங்க, இவங்களுக்குப் பிடிக்காத ஊர் எதுன்னு சவுண்ட் விடுறது? ;)]
இப்பதான் இரண்டு டாக் போட்டு ஓய்ஞ்சு இருக்கிறதால கொஞ்ச நேரம் குடுங்க. எழுதிர்ரேன்.

அழைப்புக்கு நன்றி ராம்.

-மதி

பி.கு.:

//சந்திரமதி அக்கா... (அண்ணா'ன்னு சொன்னா அடிக்க வருவாங்களா??)//

அக்கான்னாலும் அடிப்பேன்! ;)

said...

ஒரே கொசுவத்திச் சுருள். துளசி
சொன்ன வார்த்தை.
மதுரை,மழை,தமிழ்
மண்வாசம்,மீனாட்சி அம்மன்,
திருப்பரங்குன்றம்
இன்னும் என்ன வேணும் சொன்னாலே அழகு.
நினைத்தாலும் அழகு.
டி.எம்.எஸின் இன்னோரு'
நான் பாட வரம் தாராய்'
விட்டுப் போச்சே.
கேட்டாலே முருகன் வந்த உணர்வு வருமே.
முன்பு வீர பாண்டியக் கட்டபொம்மன் வசனம்,மதுரை வீரன் எல்லாம் ஒலிபெருக்கியில் கேட்டெ மனப்பாடம் ஆகிவிடும்.
ரொம்ப நல்லா பதிஞ்சுட்டீங்க ராம்.

நன்றி.
ஒரு இலவச மதுரை பயணத்துக்கு.

said...

/சேம் பிளட் ராயலு..இருந்தாலும் இந்த மாதிரி பாட்டு எல்லாம் எப்பொ கேட்டாலும் மனசுக்கு அமைதியா இருக்கும்...சில நேரம் அன்பே சிவம்ல சொல்ற மாதிரி இந்த மாதிரி பாட்டு தான் கடவுளோனு கூட தோனும் :-)//

வாங்க 12B,

எனக்கெல்லாம் நானெல்லாம் மனுசான்னு கூட சமயத்திலே சந்தேகம் வரும்.... அப்பிடி இருக்கிறப்போ எப்பிடி கடவுள் நம்பிக்கையெல்லாம் முழுசா வரப்போகுது ???

வருகைக்கு மிக்க நன்றி :)

//அருமையா சொன்னீங்க ராயலு...மொத்தத்துல சூப்பர் அழகான பதிவு :-)//

நன்றி நன்றி :)

said...

//Madurai is always beautiful. So no hesitations in it./

வாங்க தலைவலி,

நீங்க அமெரிக்காவிலே இப்போ இருந்தா இப்பிடிதான் இங்கிலிபிசிலே கமெண்ட் போடுவீங்களா??? :)

//அழகென்ற சொல்லுக்கு.....................இராயல்!!!!


இவண்
7.5-வது வட்ட இராயல் இராம் நற்பணி மன்றம்.///

ஏலேய் கப்பி,

கையிலே கிடைச்ச மவனே, நீ சட்னிதாம்'லே :((

said...

//படத்தோட பாடலையும் போட்டு எங்களைப் பரவசப் படுத்திட்டீங்க இராம்! மிக்க நன்றி!//

வாங்க தள,

முருகனை பத்தி எழுதனுமின்னு முடிவு பண்ணியாச்சு, அதுதான் எல்லாத்தையும் கொண்டு வந்துட்டேன் :)

//அடடே! நானும் அப்படித்தான்! சில சமயம் தோழன்! சில சமயம் கண்ணாமூச்சி ஆட்டம் சிறுபிள்ளை!
சில நேரம் ஆசான்! இப்படி எல்லாமாகவும் இருப்பான்!//

எனக்கும் தான் :)

//ஆமா! காட்டுலே இருந்த சிங்கம், புலிய எல்லாம் கவிதை சொல்லி விரட்டி விட்டுட்டீங்களா?//

ஹி ஹி தட் இஸ் சீக்ரெட்.. :)

//எனக்குக் கிடைக்காம எல்லாப் பொங்கலையும் திரும்ப திரும்ப வரிசைல நிண்ணு வாங்குனியல்ல! உனக்கு நல்லா வேணும்!//

அடடே உமா,

எப்பிடிலே இருக்கே??? நானே மறந்துட்டேன், ஒன்னை ஏமாத்தி பொங்கல் வாங்கிட்டு போனதே நீ எப்பிடி இன்னும் ஞாபகம் வைச்சிருக்கே??? :)

said...

// இராம். அழைப்பிற்கு நன்றி.//

வாங்க ததா :)

//நானும் பல நேரங்களில் என்னை அக்னாஸ்டிக்காக உணர்ந்திருக்கிறேன். இறை நூல்களில் ஆர்வமும் இறையனுபவங்களும் இருந்தாலும் அறிவியல் முறைப்படி அவற்றை விளக்கமுடியும் என்றும் மனத்தின் ஒரு பகுதி சொல்லிக் கொண்டே இருக்கும். :-)//

ஹிம் எனக்கும் அந்த மாதிரி தோணினா நானும் உங்களைமாதிரி ஆத்திகவாதியா ஆகிறானா'ன்னு பார்க்கலாம்?? :)

//அழகு என்றாலே நினைவிற்கு வருகின்ற அழகர்கள் இருவரில் ஒருவரை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்; இன்னொருவரை பங்காளி சொல்லிவிட்டார். நான் யாரைச் சொல்வது?//

அடடா இன்னும் அவங்க அழகே பத்தி எழுத எவ்வளவோ இருக்கு ததா,

நீங்களும் எழுதுங்க.. :)

said...

//சூப்பரா எழுதி இருக்கீங்க...என்னவோ காபி டீ ரைட் எல்லாம் சொன்னீங்களே ...க்ரேட் மென் திங்க்ஸ் அலைக்..விடுங்க.//

வாங்க முத்துலெட்சுமி,

இது உங்களின் முதன்முறை வருகை'ன்னு நினைக்கிறேன் :)

கிரேட் மேன்ஸ் சொல்லிருக்கீங்களே??? அப்போ நீங்க சொல்லுறத பார்த்தா நான் நல்லவனா??? ஹி ஹி

//குறும்பு அழகுபத்தி படிச்சு நல்லா ரசிச்சு சிரிச்சேன் ...//

நன்றி லெட்சுமி :)

said...

//ராம்
சுருக்கமாக சொன்னால் எல்லாமே அழகுதான். அதுவும் உங்கள் குறும்புபை படித்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை//

வாங்க கோபி,

நன்றி நன்றி... :) சொந்த கதையை சொன்னா எல்லாரும் சிரிக்கிறாங்கப்பா :)

//மதுரையும், தமிழும் ரொம்ப அழகாக எழுதியிருக்கீங்க.//

நன்றிப்பா

said...

//ராயலு,

எல்லாமே அழகா சொல்லியிருக்கீங்க. முருகன்ல தொடங்கி முட்டைப்பரோட்டா தொட்டு, குழந்தை, தனிமை, மதுரை, தமிழ்னு எல்லாமே ரொம்ப சூப்பர்.

அதிலயும்///

வாங்க மதி அக்கா...

உங்களின் முதன்முறை வருகைக்கு நன்றி ... :)


//
இப்படி நீங்க எழுதியிருக்கிறது அழகோ அழகு!///

பாரட்டுதலுக்கு மிக்க நன்றிக்கா :)

//
எனக்குப் பிடிச்ச ஊர் ஆளாவேற போயிட்டீங்க. [யாருங்க அங்க, இவங்களுக்குப் பிடிக்காத ஊர் எதுன்னு சவுண்ட் விடுறது? ;)]//

ஏய் யாருப்பா அது...??? யாரா இருந்தாலும் முன்னாடி வந்துருங்கப்பா... அக்கா பார்க்கனுமாம் :)

//இப்பதான் இரண்டு டாக் போட்டு ஓய்ஞ்சு இருக்கிறதால கொஞ்ச நேரம் குடுங்க. எழுதிர்ரேன்.
அழைப்புக்கு நன்றி ராம்.

-மதி//

அந்த அழைப்பை ஏத்துக்கிட்டே உங்களுக்குதான் நான் நன்றி சொல்லனும்க்கா... :)//அக்கான்னாலும் அடிப்பேன்! ;)//

ஹி ஹி நான் எந்த ஒரு இடத்திலயாவது அக்கா'ன்னு சொல்லிருக்கேனா'னு பாருங்க.... ஹி ஹி

said...

//ஒரே கொசுவத்திச் சுருள். துளசி
சொன்ன வார்த்தை.
மதுரை,மழை,தமிழ்
மண்வாசம்,மீனாட்சி அம்மன்,
திருப்பரங்குன்றம்
இன்னும் என்ன வேணும் சொன்னாலே அழகு.
நினைத்தாலும் அழகு.
டி.எம்.எஸின் இன்னோரு'
நான் பாட வரம் தாராய்'
விட்டுப் போச்சே.
கேட்டாலே முருகன் வந்த உணர்வு வருமே.
முன்பு வீர பாண்டியக் கட்டபொம்மன் வசனம்,மதுரை வீரன் எல்லாம் ஒலிபெருக்கியில் கேட்டெ மனப்பாடம் ஆகிவிடும்.
ரொம்ப நல்லா பதிஞ்சுட்டீங்க ராம்.//

வாங்க வல்லியம்மா..

நீங்க லைன் பை லைனா எழுதியிருக்கிறது பார்க்கிறப்போ கவுஜ மாதிரியே இருக்கு... ஹி ஹி,

கவுஜ'ன்னா என்னகிறத நம்ம பரோட்டா பாவலர் அண்ணன் கொத்ஸ் விளக்குவார்...... :)))

//நன்றி.
ஒரு இலவச மதுரை பயணத்துக்கு.//


மிக்க நன்றி.. உங்களின் வருகைக்கு :)

said...

neer ennale malaysian sistersiku vakalathu vaangurey?..naan raamar aaluthaan , athu ellam unai pol paamaranukku puriyathu!!!intha comment podu paarpom!!

said...

//neer ennale malaysian sistersiku vakalathu vaangurey?..naan raamar aaluthaan , athu ellam unai pol paamaranukku puriyathu!!!intha comment podu paarpom!!///

கண்ணு,

நீ சொன்னமாதிரியே செஞ்சாச்சு'ம்மா!! வேற என்ன செய்யணும்'ன்னு சொல்லிட்டு போடி கண்ணு :))))

said...

ராமண்ணா நீங்க அழகுன்னு எனக்கு முன்னாடியே தெரியும் :)

said...

//ராமண்ணா நீங்க அழகுன்னு எனக்கு முன்னாடியே தெரியும் :)//

வாம்மா பாசமலரே,

நான் அழகுன்னு சொல்லிட்டு சிரிப்பானை போட்டு வைச்சா அதுக்கு என்ன அர்த்தம் :)))

ஹி ஹி

said...

//வாம்மா பாசமலரே,

நான் அழகுன்னு சொல்லிட்டு சிரிப்பானை போட்டு வைச்சா அதுக்கு என்ன அர்த்தம் :)))//

இது கூட தெரியாதா??
என் அண்ணன் அழகு என்பதால் வரும் பெருமை புன்னகை அது..