Wednesday, May 2, 2007

மதுரை சித்திரை திருவிழா


மதுரை சித்திரை விழா பற்றிய பலவகையான செவி வழி கதைகள் இருந்தாலும், அவ்விழாவின் முக்கியமான அழகர் ஆற்றில் இறங்கும் விஷேசமான சித்ரபெளர்ணமி தினம் பற்றிய என்னுடைய அப்பத்தா சொன்ன கதையோடு சொன்னதை வைத்து விழா பற்றிய சிறு அறிமுகம்.

ஒரு முறை சந்திரன் தான் ஒருவனே நிகரற்ற அழகன் என நினைத்து யானைமுகமும் எலியை வாகனமாக கொண்ட விநாயகரை குருபன் என நிந்திக்க விநாயகர் சந்திரனுக்கு விரைவில் அழகொழிந்து பிறரை நிந்திக்கும் உன்னை போன்றவர்களுக்கு படிப்பினையாக வளர்ந்து தேயும் பாங்காய் இருப்பாய் என சாபம் கொடுக்க, சந்திரன் சிவனிடம் முறையிட சிவனோ உன்னுடைய அகம்பாவத்துக்கு அதுவே சரியான தண்டனை, ஆகவே அதை ஒன்றும் செய்வதற்கில்லை என பதிலுரைக்கிறார். மேலும் சூரியன் சுட்டெரிக்கும் மாதமான சித்திரையிலும் சந்திரனாகிய உன் திறன் உலகுக்கு தெரியவேண்டியும் சித்திரை மாதத்தில் வரும் முழுநிலவு தினமன்று ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தறே உன் பங்கும் இருக்கவேண்டும் என சாபவிமோசனமும் கொடுக்கிறார். அதே சித்திரபெளர்ணமி தினமன்று மீனாட்சி திருவிழா காண வரும் அழகர் ஆற்றை கடக்க முயல்கிறார். அதிலும் ஒரு உட்கதை ஒன்றும் உள்ளது, மண்டூக மகிரிஷி 'க்கு சாபவிமோசனம் அளிக்கவே அழகர் ஆற்றில் இறங்குவதாகவும் அக்கதைகள் நீளும். இக்கதைகள் உண்மையோ, இல்லை உறுதியாக பொய்யாக இருந்தாலும் திருவிழாக்கள் நடப்பதற்குண்டான காரணம் ஒன்றே ஒன்றுதான், அது மக்கள் அனைவரும் எந்த உயர்வும் தாழ்வும் இல்லாமல் ஒரே இடத்தில் குழுமிக்க வேண்டும் என்பதே.

நேற்றிலிருந்து வைகையாற்றிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு விழா நடைப்பெறும் இடம் அருகே நீர் தேக்கப்பட்டது. அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவத்திற்க்காக பிரத்யேகமாக நீர் பாதையும் கட்டப்பட்டு இருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க இன்று காலை சுமார் ஆறு மணியளவில் பச்சை பட்டு உடுத்தி அழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். அதன்பின்னர் நடைப்பெற்ற உற்சவத்திற்கு பிறகு மண்டகப்படி ஆரம்பித்தது. விழாவை நேரடியாக முன்று நான்கு மணி நேரமும் ரசித்ததில் ஒரு சிறிய மனநிறைவு உண்டாகியது.

பிரத்யேக பாதை

அழகர் கடைசி வரைக்கும் என்னோட முணாவது கண்ணுலே சரியாவே வரலை, அதுனாலே சுட்டாச்சு

இனி விழா துளிகள்:-

ரொம்பவே நாட்களுக்கு பிறகு வையாத்திலே தண்ணி வந்தது.

காலை ஒன்பது மணிக்கே சுட்டெரித்த வெயில்

ஆத்திலே மொட்டை எடுக்கனுமா'ன்னு ஒவ்வொரு பத்தடிக்கும் விசாரிக்கும் நபர்கள்.

போலிஸின் கடுமையான கெடுப்பிடிகள்.

வழக்கம் போல் ஊர் முழுவதும் தண்ணிபந்தலும், அதிலே மோரும்,பனங்காரம்,ரஸ்னாவும் கொடுக்கப்பட்டது.

இப்போதைக்கு மதுரையின் சுப்ரபாதமான "டங்கா துங்கா மவுசுக்காரி" எல்லா இடத்திலேயும் பத்தடி உயரத்துக்கு ஸ்பிக்கர் கட்டி அலரவிடப்பட்டுருந்தது.

"ஏண்டி ரோசா அந்த பச்சை சட்டை ஒன்பின்னாடியே ஊரிலே இருந்தே வாறாண்டி, ஏதானாச்சும் என்னானு கேளுடி?" "ஹீக்கும் அந்த கருவாயன் பின்னாடியே வர்றதே தவிர வேற எதுவும் செய்யமாட்டேன்கிறான்!!"

"ஏலேய் மாப்பு, மொட்டையடிக்கிறப்போ மோதிரம் போடுறென்னு சொன்னே? இதுதானா மாப்பிளை அது?என்னாய்யா ஓடுற தண்ணியிலே கறைஞ்சிடும் போலே?"

"மாமா! காது குத்துறவரே காணோம், யாராவது ஆச்சாரி ஆத்துலே இருக்காங்களான்னு பாருங்க?"

"மொக்கயா! நம்ம சந்துவீட்டு பெருசு அரிசி பருப்பு வாங்கிட்டு போச்சே? என்னோமோ அழகர் திருவிழா அன்னிக்கு ஆத்துக்குள்ளே சோறு ஆக்கி போடபோறன்னு? எங்கன்னு தேடு? வந்ததுக்கு சாப்பிட்டாச்சும் போவோம்"

"எத்தேய்! இங்கன எப்போ இடம் வாங்கிப்போட்டே? சாமியெல்லாம் மண்டகப்படிக்கு வந்து போறளவுக்கு சம்பாரிச்சிட்டியா?"

"ஏண்டா ஒனக்கு பார்த்துருக்கிற பொண்ணு வந்துருக்குன்னு சொல்லி காலையிலே இருந்து சுத்துறோம்? எங்கடா அவிய்ங்களே?"

"ஆத்தி ஏழுமணிக்கு ஊமை வெயிலு மண்டையே பொளக்குது, வாங்கடா சீக்கிரமே வீட்டே பாத்தி ஓடுறுவோம்."

ஹி ஹி நமக்கு காது கொஞ்சம் தெளிவாதான் கேக்குமிங்க.... :)

43 comments:

CVR said...

கலக்கறீங்க தலைவரே!!
இதை படிச்ச அப்புறம் எனக்கும் திருவிழாவை பாக்கனும்னு ஆசையா போயிடிச்சு!!
எப்பயாச்சும் கண்டிப்பா வந்து பாக்கனும்!! :-))

MyFriend said...

:-((((((

will read tomorrow

கதிர் said...

ராயலு!

திருவிழால காணாம போகாம வந்து பதிவு போட்டுட்டிங்களே :)

காது இருக்கறதே ஒட்டு கேக்கவும் திட்டு வாங்கும்போது அந்த பக்கம் திருப்பி விடவும்தான் அந்த வேலைய சிறப்பா செஞ்சுபுட்டிங்க.

கதிர் said...

ரஸ்னா குடுப்பாங்களா ராயலு!!!!

Syam said...

ராயலு உங்க காது சூப்பரு...

//இப்போதைக்கு மதுரையின் சுப்ரபாதமான "டங்கா துங்கா மவுசுக்காரி" எல்லா இடத்திலேயும் பத்தடி உயரத்துக்கு ஸ்பிக்கர் கட்டி அலரவிடப்பட்டுருந்தது//

இது அதவிட சூப்பரு :-)

குமரன் (Kumaran) said...

இராமசந்திரமூர்த்தி, நம்மூருல இன்னேரம் இருந்தா அழகரைப்பாக்கப் போயிருக்கலாம். அந்தக் குறையை நீங்க தீர்த்துப்புட்டீங்கப்பூ. ரொம்ப நன்றி.

Geetha Sambasivam said...

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

Ayyanar Viswanath said...

/"ஏண்டா ஒனக்கு பார்த்துருக்கிற பொண்ணு வந்துருக்குன்னு சொல்லி காலையிலே இருந்து சுத்துறோம்?/

ராம் இது உங்களுக்கு சொன்னதுதானே
:)

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லா நம்மூரு நடையிலெ எளுதிட்டிங்க் ராம்....

பதிவில் விட்டுப்போன சில விஷயங்களாவது: நாட்டு சர்க்கரை தீபம், தண்ணீர் பீச்சுதல், அரையர்களது அலங்காரம்....

கோபிநாத் said...

மாப்பி பதிவு நல்லா இருக்கு ;-))

கோபிநாத் said...

\\அய்யனார் said...
/"ஏண்டா ஒனக்கு பார்த்துருக்கிற பொண்ணு வந்துருக்குன்னு சொல்லி காலையிலே இருந்து சுத்துறோம்?/

ராம் இது உங்களுக்கு சொன்னதுதானே
:)\\

என்ன மாப்பி அவுங்களை பார்த்தியா...எப்படி.... ஓகேவா....எப்பா? ;-)))

அபி அப்பா said...

ராம்! இதை படிச்சவுடன் எனக்கு மயிலாடுதறை கடைமுழுக்கு பத்தி எழுதனும் போல இருக்குப்பூ!

balar said...

ராம் சித்திரை திருவிழாவைப் பற்றி அருமையாக எழு்தி முத்திரை பதிச்சிட்டீங்க..
நானும் ஒரு தடவை இந்த விழாவை நேர்ல பார்த்திருக்கேன்.
அப்பறம் அழகர் ஆத்துல இறங்குறதுக்கு முதல் நாள் இரவு எதிர் சேவை நிகழ்ச்சி ரொம்ப அருமையாக இருந்தது..அவ்வளவு கூட்டம் ஒட்டு மொத்த மதுரை பெண்களும் அந்த எதிர் சேவை பார்க்க வந்துருவாங்க..:))

அருமையான பதிவு..

Anonymous said...

dear ram, great write up, i am also from madurai.

congrats from my heart.

kaveri ganesh

இராம்/Raam said...

//கலக்கறீங்க தலைவரே!!
இதை படிச்ச அப்புறம் எனக்கும் திருவிழாவை பாக்கனும்னு ஆசையா போயிடிச்சு!!
எப்பயாச்சும் கண்டிப்பா வந்து பாக்கனும்!! :-))//

CVR,

கண்டிப்பா மதுரைக்கு வாங்க :) அது அடுத்த சித்திரை திருவிழா'வா இருந்தா இன்னும் நல்லா இருக்கும் :)

இராம்/Raam said...

/:-((((((

will read tomorrow//

No issue'la :)

//ராயலு!

திருவிழால காணாம போகாம வந்து பதிவு போட்டுட்டிங்களே :)//

ஏலேய் கதிரு,

என்னாப்பா இப்பிடி கேட்டுப்பிட்டே? 22 வருசமா சுத்துன ஊருப்பா, இங்கன 4வருசமா இருந்தோட்டமின்னா எல்லாமா மறக்கப்போகுது?



//காது இருக்கறதே ஒட்டு கேக்கவும் திட்டு வாங்கும்போது அந்த பக்கம் திருப்பி விடவும்தான் அந்த வேலைய சிறப்பா செஞ்சுபுட்டிங்க.//

ஹி ஹி டாங்கிஸ்ய்யா :)

//ரஸ்னா குடுப்பாங்களா ராயலு!!!!//

ஏலேய் ஒன்னோட நக்கலு அளவே இல்லயா?? நீ ரஸ்னா வைச்சி பண்ண சேட்டைக்கப்புறம் அதை குடிக்கிறதே இல்லை :)

இராம்/Raam said...

//ராயலு உங்க காது சூப்பரு...

//இப்போதைக்கு மதுரையின் சுப்ரபாதமான "டங்கா துங்கா மவுசுக்காரி" எல்லா இடத்திலேயும் பத்தடி உயரத்துக்கு ஸ்பிக்கர் கட்டி அலரவிடப்பட்டுருந்தது//

இது அதவிட சூப்பரு :-)//

வாங்க 12B,

ஹி ஹி நன்றி..... ;)

இராம்/Raam said...

//இராமசந்திரமூர்த்தி, நம்மூருல இன்னேரம் இருந்தா அழகரைப்பாக்கப் போயிருக்கலாம். அந்தக் குறையை நீங்க தீர்த்துப்புட்டீங்கப்பூ. ரொம்ப நன்றி.//


வாங்க ததா,

என்னோட முழு பெயர் சொல்லி கூப்பிடுறது நீங்க ஒருத்தர்தான் :)

அதுக்கே பெரிய நன்றி........ வருகைக்கும் மிக்க நன்றி :)

இராம்/Raam said...

//mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm//

தலைவலி,

உங்க வயித்தெரிச்சலை கிளம்பினதிலே எனக்கு மிக்க சந்தோஷமா இருக்கு .... ஹி ஹி

இராம்/Raam said...

//ராம் இது உங்களுக்கு சொன்னதுதானே
:)///

ஐய்ஸ்,

ஏனிந்த கொலை வெறி?

நாமே என்ன ஒரு பொண்ணை மட்டுமா பார்க்கபோறோம்? அப்பிடியே பார்த்தாலும் மத்தவய்ங்கலாம் கோவிச்சுக்க மாட்டாங்க... ஹி ஹி

இராம்/Raam said...

//நல்லா நம்மூரு நடையிலெ எளுதிட்டிங்க் ராம்....//

வாங்க மெளல்ஸ்,

ரொம்ப நன்றிங்க பாரட்டுதலுக்கு :)

//பதிவில் விட்டுப்போன சில விஷயங்களாவது: நாட்டு சர்க்கரை தீபம், தண்ணீர் பீச்சுதல், அரையர்களது அலங்காரம்....//

ஹிம் ஆமாங்க... போட்டோ எடுத்தேன்,ஆனா வெயில் அடிச்சதுனாலே சரியா போகஸ் வரலை :(

இராம்/Raam said...

/மாப்பி பதிவு நல்லா இருக்கு ;-))//

வா மாமு...ரொம்ப நன்றி மக்கா :)

//என்ன மாப்பி அவுங்களை பார்த்தியா...எப்படி.... ஓகேவா....எப்பா? ;-)))//

அடபாவிகளா.....ஏய்யா இப்பிடி கொலைவெறியோட திரியுறீங்க?

இராம்/Raam said...

//ராம்! இதை படிச்சவுடன் எனக்கு மயிலாடுதறை கடைமுழுக்கு பத்தி எழுதனும் போல இருக்குப்பூ!//


அடடே சீக்கிரமே எழுதுங்கண்ணே :)

இராம்/Raam said...

//ராம் சித்திரை திருவிழாவைப் பற்றி அருமையாக எழு்தி முத்திரை பதிச்சிட்டீங்க..

முதன் வருகைக்கு மிக்க நன்றி பாலா :)

//நானும் ஒரு தடவை இந்த விழாவை நேர்ல பார்த்திருக்கேன்.//

அப்பிடியா! மிக்க சந்தோஷம் :)

//அப்பறம் அழகர் ஆத்துல இறங்குறதுக்கு முதல் நாள் இரவு எதிர் சேவை நிகழ்ச்சி ரொம்ப அருமையாக இருந்தது..அவ்வளவு கூட்டம் ஒட்டு மொத்த மதுரை பெண்களும் அந்த எதிர் சேவை பார்க்க வந்துருவாங்க..:))//

அதே அதே..... நம்மளை மாதிரி இளந்தாரிகளுக்கு அதுமட்டுந்தான் கண்ணுலே தெரியணும் :))

ஹி ஹி

இராம்/Raam said...

//dear ram, great write up, i am also from madurai.

congrats from my heart.

kaveri ganesh//

வாங்க காவேரி,

நீங்களும் மதுரைன்னு கேட்கிறோப்பவே சந்தோஷமா இருங்க.... நன்றி மீண்டும் வாங்க :)

ALIF AHAMED said...

raam CM


::)))



சொல்லவே இல்லை

MyFriend said...

சித்திரை திருவிழான்னு முதன் முறை கேள்வி படுறேன். அதுக்கும் நல்ல ஒரு விளக்கம். :-)

உங்க காது நல்லாதான் கேட்குது!!! :-P

கப்பி | Kappi said...

ஹும்...ஆத்துல இறங்கி எம்புட்டு வருசம் ஆச்சு!

G.Ragavan said...

என்னப்பு இத்தோட முடிச்சிட்ட! விட்டுப்போனதுகள்ள ரெண்டு இங்க.

ஏலே ராமேய்...அங்கயே பாக்கதல. அந்தப் பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணம் ஆய்ட்டு.

இந்தா...ரப்பன விடு..ஒன்னயத்தான் ராமுங்காங்களா. பொறப்புடுறப்பயே சிலுக்குவார்ப்பட்டீல ஆத்தா சொல்லுச்சு

இராம்/Raam said...

//raam CM


::)))



சொல்லவே இல்லை//

மின்னலு,


நீ என்ன சொல்லவர்றேன்னே புரியலை மக்கா??? :)

இராம்/Raam said...

//ஹும்...ஆத்துல இறங்கி எம்புட்டு வருசம் ஆச்சு!//

வாப்பா கப்பிநிலவா!

அடுத்த வருசம் மருத'க்கு ஜோடியா வந்திருங்க.... போய் சாமி தரிசனம் பண்ணிட்டு வந்திரலாம் :)

இராம்/Raam said...

/என்னப்பு இத்தோட முடிச்சிட்ட! விட்டுப்போனதுகள்ள ரெண்டு இங்க.//

வாங்க ஜிரா,

:)) ஏங்க இப்பிடியெல்லாம் கிளப்பி விடுறீங்க????



//ஏலே ராமேய்...அங்கயே பாக்கதல. அந்தப் பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணம் ஆய்ட்டு.//

ஹி ஹி அப்பிடியெல்லாம் நாங்க பார்க்கமாட்டோம் :)

//இந்தா...ரப்பன விடு..ஒன்னயத்தான் ராமுங்காங்களா. பொறப்புடுறப்பயே சிலுக்குவார்ப்பட்டீல ஆத்தா சொல்லுச்சு//

இந்தமாதிரி ஒரு பொண்ணும் வந்து கேட்கமாட்டேங்கிது :((((

வெட்டிப்பயல் said...

ராமண்ணா,
பொண்ணு பார்த்துருக்காங்களா???

சொல்லவே இல்லை.

வாழ்த்துக்கள் அண்ணா. அண்ணியை விசாரித்ததாக கூறவும். பக்கத்து ஊருனா என்ன ஊரு? எனக்கு மதுரையை பத்தி சுத்தமா தெரியாது.

Pandian R said...

அழகான பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

ALIF AHAMED said...

//

மின்னலு,


நீ என்ன சொல்லவர்றேன்னே புரியலை மக்கா??? :)

///


சிரிப்பான் போட்டு புரியலனு சொல்லு....

முதல்வன்ல வர்ர ரகுவரன் கனக்கா ஒரு நாளைக்கு உனக்கும் குடுப்பாரு...
சங்கத்து சிங்கம்தானே நீ பயபிடாம வாங்கிப்பே...::)

Anonymous said...

என்ன மாப்பி அவுங்களை பார்த்தியா...எப்படி.... ஓகேவா....எப்பா?

ராமண்ணா,
பொண்ணு பார்த்துருக்காங்களா???

சொல்லவே இல்லை.

வாழ்த்துக்கள் அண்ணா. அண்ணியை விசாரித்ததாக கூறவும்.

//


என்ன நடக்குது இங்க ஒரு இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தானே என்னயே அவுட்டாக்குனாங்க

இப்ப ராமுவா நடக்கட்டும் நடக்கட்டும் நமக்கும் ஒத்தாசைக்கு ஆளு வேணும்மில...

இராம்/Raam said...

//ராமண்ணா,
பொண்ணு பார்த்துருக்காங்களா???

சொல்லவே இல்லை.//

வாப்பா வெட்டிக்காரு,

ஹிம் நீ என்னோமோ என்னை ரிவெஞ்ச் எடுக்கனுமின்னே திரியுறே??? நடத்து நடத்து :)

//வாழ்த்துக்கள் அண்ணா. அண்ணியை விசாரித்ததாக கூறவும். பக்கத்து ஊருனா என்ன ஊரு? எனக்கு மதுரையை பத்தி சுத்தமா தெரியாது.//

யோவ் எப்பிடியா இப்பிடியெல்லாம் யோசிச்சு குத்து வைக்கிறீங்க??? தாங்கமுடியலை சாமிகளா :(

இராம்/Raam said...

//அழகான பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி.//

முதன்முறை வருகைக்கும் பாரட்டுதலுக்கும் மிக்க நன்றி பாரதி :)

இராம்/Raam said...

//சிரிப்பான் போட்டு புரியலனு சொல்லு....

முதல்வன்ல வர்ர ரகுவரன் கனக்கா ஒரு நாளைக்கு உனக்கும் குடுப்பாரு...
சங்கத்து சிங்கம்தானே நீ பயபிடாம வாங்கிப்பே...::)//

ஓ அதுவா, நம்ம பேருதான் மொழக்கணக்கா இருக்கே? அதுதான் ஸ்கூல் படிக்கிறோப்போ பசங்க சுருக்கி வைச்சாங்க... அதுவே பஞ்சதந்திரம் படத்திலே தலைவர் கமலுக்கு வந்ததுக்கபுறம் நம்ம பேரு ரொம்பவே பேமஸ் ஆகிட்டிச்சு :)

//
என்ன நடக்குது இங்க ஒரு இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தானே என்னயே அவுட்டாக்குனாங்க

இப்ப ராமுவா நடக்கட்டும் நடக்கட்டும் நமக்கும் ஒத்தாசைக்கு ஆளு வேணும்மில...///

மின்னலு,

இதெல்லாம் ஒன்னோட வேலைதானா??? ஏனிந்த கொலைவெறி ஒனக்கு??? :(

இராம்/Raam said...

//சித்திரை திருவிழான்னு முதன் முறை கேள்வி படுறேன். அதுக்கும் நல்ல ஒரு விளக்கம். :-)//

தங்கச்சிக்கா,

இன்னும் நிறைய இருக்கு தமிழ்நாட்டிலே... சீக்கிரமே வந்து அதெல்லாம் கண்டு அனுபவிங்க... :)

//உங்க காது நல்லாதான் கேட்குது!!! :-P//

ஹி ஹி .... டாங்கீஸ் :)

Syam said...

கொஞ்சம் பயந்துக்கிட்டேதான் எட்டி பாத்தேன்...ஹி...ஹி...நல்லா இருங்கப்பு :-)

இராம்/Raam said...

/கொஞ்சம் பயந்துக்கிட்டேதான் எட்டி பாத்தேன்...ஹி...ஹி...நல்லா இருங்கப்பு :-)//

ஹே ஹே....

டெவில் ஷோ இங்கவா போடுவோம்???

பாருங்க சீக்கிரமே வரும் :)

உங்கள் நண்பன்(சரா) said...

ராம் எனக்கு சித்திரைத்திருவிழா நினைவுகளை மலரச்செய்துவிட்டாய், இந்த ஆண்டு செல்ல முடியவில்லை! உன் பதிவின் மூலம் திருப்தி.அதற்காக உனக்கு ஒரு "ராயல்" சல்யூட்.

ஆனால் இதுவரை மதுரையில் பார்த்ததில்லை!
நமக்கு பரமக்குடிதான்யா லாயக்கு! நம்ம ஊரு, பூரம் நம்ம பயக!சித்திரைத்திருவிழா அன்னிக்கி அந்த நிலா வெளிச்சத்தில் ராத்திரிப் பூரம் மப்போட ஆத்துல திரியிறது ஒரு சொகம்தேன், ஆனால் கரெக்ட்டா வருசா வருசம் அழகர் எறங்கும் போது நமக்கும் "எறங்கி" எங்கேயாவது மட்டையாயிடுறது! மக்காநாளுதே பயக செல்லுவாய்ங்க அவரு என்ன கலரு பட்டுனு,

அடுத்தநாள் காக்காத் தோப்புத் திருவிழா நடக்கும் அதுதேன் அங்க ஜோர், சாயங்காலம் ஆரம்பிச்சதும் கிருஷ்ணா தேட்டருக்கு(பெயர்தான் கிருஷ்ணா, போடுரது பூராம் ஷகீலா நடிச்ச "பின்"நவீனத்துவப் படம்) எதுத்தாப்புல இருக்குற காக்காத் தோப்புல சனம் பூரம் கூடும், ராட்டுனமும்,அதுல சுத்துற செவப்பு ரிப்பன் புள்ளகளும்தேன் நமக்கு திருவிழா,

ஆனாலும் ஆட்டுத்தோலில் பை செஞ்சு அதுல மஞ்சத்தண்ணியப் பீச்சி, பீச்சி கரிக்கிட்டா மொகத்துலயே அடிப்பாய்ங்க! அப்போ ஒரு ராகத்துல"அழகர்மழையானே கோவிந்தா" பாட்டுக் கேட்குற சுகமே தனிதாம்பூ...


அன்புடன்...
சரவணன்.