Monday, April 16, 2007

வ.வா.சங்கத்து பரிசுப்போட்டி

வணக்கம் மக்கா,

நமது வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பரிசுப்போட்டி ஒன்னை அறிவிச்சிருந்தோம். போட்டின்னா பெருசா ஒன்னும் இல்லிங்க.. நகைச்சுவை பதிவு எழுதி அதை எங்களுக்கு அதை தெரியப்படுத்துங்கன்னு இந்த பதிவிலே அறிவிச்சிருந்தோம். உங்க வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான சம்பவத்தை உங்களை பிரதானப்படுத்தமால் ஏதாவது ஒரு கற்பனை கதாப்பாத்திரத்தோடு பிணைந்து பதிவு எழுதித்தாருங்கள். ஆப்பு வாங்கியிருந்தா கைப்புள்ள கதாபாத்திரமின்னு நினைச்சு எழுதிறாதீங்க, அப்புறம் சங்கத்திலே எங்களாலே மேற்கொண்டு பதிவு போடமுடியாது... :)

எனவே புதுவிதமான பாணியிலே சங்கத்தை மெருக்கேற்ற உங்களின் பதிவு அமைந்தால் நலம். விதிமுறைகளாக பெருசா ஒன்னும் வைக்கலிங்க..1) கட்டாயமாக தமிழில்தான் இருக்கனும்னு சொல்ல மாட்டோம், புரியற மாதிரி இருந்தால் சரி.

2) தனிமனித, சமய, மதம் தாக்குதல் இருக்கக்கூடாது.

3) வ.வா சங்கத்தை களமாக கொண்டு எழுதியிருந்தால் முன்னுரிமை (கைப்புள்ள'யை விட்டுருங்கப்பா)

4) எப்பிடியாவது சிரிக்க வைக்கனும்.

5) சங்கம் பாணி காமெடி தவிர்த்து சங்கத்துக்கானப் புது பாணி காமெடி உருவாக்கும் விதத்தில் உங்கள் பதிவுகள் அமைதல் நலம்.

6) பின்னூட்டம் மூலமாக இடுகையை அறியப்படுத்துங்கள். பதிவரின் பெயரில் மட்டுமே அறியப்படுத்த வேண்டும். Anonymous மூலம் இடுகையை தெரிவித்தல் கூடாது.

7) ஒருவர் எத்தனை இடுகை வேண்டுமானாலும் அனுப்பலாம். எப்பொழுது எழுதியிருந்தாலும் பரவாயில்லை.(காலத்துக்கு அப்பாற்பட்டது நகைச்சுவை. ஹி ஹி)

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பதிவிற்கு இந்திய ரூபாய் ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.

பதிவுகளை அனுப்பி வைக்க கடைசிநாள்:- 22-04-2007 11.59 IST

அப்பிடியே உங்க வலைப்பூவிலே நம்ம சங்கத்தோட பரிசுப்போட்டிக்கு தட்டி வைச்சிட்டிங்கன்னா ரொம்பவே மகிழ்ச்சி, அதுக்காக நீங்க ரொம்ப கஷ்டபடவேணாமிங்க.... கிழே இருக்கிற சுட்டியை ஒரு தடவை கிளிக்'ங்க... அதுவே உங்களை பிளாக்கர் பக்கத்துக்கு கூட்டிட்டு போய் அதுவே எல்லாவேலையும் செஞ்சுரும்.
உங்களோட பங்களிப்பை எதிர்நோக்கும் சங்கத்து சிங்கங்கள்..

31 comments:

said...

ellaarum oddu moththama plan panni ore post podureengge pole?

said...

அய்யா

எனக்கு நகைச்சுவையா எழுத வராது வேணுமின்னா காமெடியா எழுதட்டுங்களா??

said...

//எனக்கு நகைச்சுவையா எழுத வராது வேணுமின்னா காமெடியா எழுதட்டுங்களா??
//

தம்பி காதல் கடிதம் எழுதினாக் கூட எங்களுக்கு காமெடியாத்தான் இருக்கும்!

said...

நானும் ரெண்டு காமெடி போஸ்ட் போடலாம்னு இருக்கேன்!

என்னையும் ஆட்டைல சேர்த்துப்பீங்களா?

said...

இல்லேண்ணா மீடியம் பவரை யூஸ் பண்ணி தம்பி மூலமா போடுறோம்!

தம்பிக்கு மீடியம் பவர் உண்டன்னு கேக்குறீங்களா?

அவருதான் தினமும் எங்க கூட பேசுறாரே!

said...

//நானும் ரெண்டு காமெடி போஸ்ட் போடலாம்னு இருக்கேன்!
//

யேய்! எல்லாரும் ஓடியாங்கோ!

நம்ம அக்கா காமெடி கீமெடி பண்ணப் போறாங்களாம்!

said...

//தம்பி காதல் கடிதம் எழுதினாக் கூட எங்களுக்கு காமெடியாத்தான் இருக்கும்!//

அம்மணி

இதுல இன்னும் கொஞ்சம் மானே தேனே போட்டு பதிவு எழுதுங்க அப்படியே என்னோட போட்டோ ரெண்டு போட்டோ அனுப்பி வைக்கிறேன். அப்பால பரிசு கிடைச்ச உடனே பங்கு பிரிச்சிக்கலாம்
என்ன சொல்ற ஆவி...

said...

//ellaarum oddu moththama plan panni ore post podureengge pole?//

வாங்க ஃபிரண்ட்,

எப்பிடிம்மா கரெக்ட்'ஆ மொத பின்னூட்டம் போடுறீங்க???

சங்கத்து ஆண்டுவிழாவை ஜெகஜோதியா கொண்டாட வேணாமா?? அதுக்குதான் இத்தனை பேரு பதிவு போடுறோம்......

:)

said...

//அய்யா

எனக்கு நகைச்சுவையா எழுத வராது வேணுமின்னா காமெடியா எழுதட்டுங்களா??//

வாப்பா கதிரு,

எப்பிடிய்யா ஒன்னாலே இப்பிடியெல்லாம் காமெடி சாரி நகைச்சுவையா பின்னூட்டம் போடமுடியுது??? :)

said...

இங்கே அனானி விளையாட்டு கூடாது என்று ராம் சொன்னால் அவரை எதிரிப்பீர்களா அதர் ஆப்ஷன் அன்பர்களே???

said...

/தம்பி காதல் கடிதம் எழுதினாக் கூட எங்களுக்கு காமெடியாத்தான் இருக்கும்!//

வாம்மா பாசமலரே,

எப்பிடி இருக்கே ஆவி... ஒன்ன என்னோட பிளாக்'லே பார்த்தே ரொம்ப நாளாகிப்போச்சு :)

said...

//நானும் ரெண்டு காமெடி போஸ்ட் போடலாம்னு இருக்கேன்!
//

//யேய்! எல்லாரும் ஓடியாங்கோ!

நம்ம அக்கா காமெடி கீமெடி பண்ணப் போறாங்களாம்!//

என்ன உலகமடா இது....

said...

//எப்பிடி இருக்கே ஆவி... ஒன்ன என்னோட பிளாக்'லே பார்த்தே ரொம்ப நாளாகிப்போச்சு :)//

நீங்க போஸ்ட் போட்டே ரொம்ப நாள் ஆச்சே

said...

//நானும் ரெண்டு காமெடி போஸ்ட் போடலாம்னு இருக்கேன்!

என்னையும் ஆட்டைல சேர்த்துப்பீங்களா?//

ஒனக்கு பிரைஸ் கொடுக்கனுமின்னா நாங்க எங்க வரனுமின்னு சொல்லிட்டு போ...

அப்புறமா ஒன்னை ஆட்டையிலே சேர்த்துக்கிறோம் :)

said...

//இல்லேண்ணா மீடியம் பவரை யூஸ் பண்ணி தம்பி மூலமா போடுறோம்!

தம்பிக்கு மீடியம் பவர் உண்டன்னு கேக்குறீங்களா?

அவருதான் தினமும் எங்க கூட பேசுறாரே!//

கதிரு,

ஒனக்கு என்னாய்யா ஆச்சு, ஆவிக்கிட்டயெல்லாம் டெய்லி பேசுறீயா???? :)

said...

//
யேய்! எல்லாரும் ஓடியாங்கோ!

நம்ம அக்கா காமெடி கீமெடி பண்ணப் போறாங்களாம்!//

அடபாவிகளா..

குருப்பாதாய்யா திரியுறீங்க??

said...

//அம்மணி

இதுல இன்னும் கொஞ்சம் மானே தேனே போட்டு பதிவு எழுதுங்க அப்படியே என்னோட போட்டோ ரெண்டு போட்டோ அனுப்பி வைக்கிறேன். அப்பால பரிசு கிடைச்ச உடனே பங்கு பிரிச்சிக்கலாம்
என்ன சொல்ற ஆவி...//

ஏலே கதிரு ஒன்னோட போட்டோ'வே பார்த்தா காமெடியா'வா இருக்கு..... சும்மா அழகான ஒரு சிங்கம் கைகட்டி நிக்கிறமாதிரி இருக்கு???

இப்பிடி பேசிப்பிட்டே நீ???

said...

/இங்கே அனானி விளையாட்டு கூடாது என்று ராம் சொன்னால் அவரை எதிரிப்பீர்களா அதர் ஆப்ஷன் அன்பர்களே???//

வேணாம் ராசா.... வெள்ளிக்கிழமை ஒன்னோட போஸ்டை பத்து நிமிசத்திலே தூக்கின கோவத்திலே வந்து இங்கென பட்டறை போடச்சொல்லுறீயா.. அவியங்களே??

said...

//
நீங்க போஸ்ட் போட்டே ரொம்ப நாள் ஆச்சே//

யோவ், ஆபிஸிலே blogger'க்கு ஆப்பு வைச்சிட்டாய்ங்கே'ய்யா.....

என்ன பண்ணுறது :) இப்பிடி இராக்கோழி மாதிரி இந்தநேரத்திலே தான் டைம் கிடைக்கிது :(

அதிலே பதிவுகளை படிக்கிறதிலேயே நேரம் போயிருது.. இதிலே எங்கே பதிவு போடுறது??? :(

said...

அண்ணா,
நான் அனுப்பிய லின்கே இன்னும் வ வா சங்கத்துல இருக்க பட்டியல்ல வரவே இல்லை..:( நீங்க அதுக்கு முன்னடியே ரிசல்ட சொல்லிட்டீங்களே.. என்னை வச்சு காமடி கீமடி பண்ணலயே..

said...

ஹேப்பி பர்த்டே ராயலு :-)

said...

மக்களே நான் தானுங்க அசல் இ ராம் ....இது என்னப்பா குழப்பாமா இருக்கு .தில்லு முள்ளு போல .பேசாம என் ப்ளோக் பெயர் , போட்டோ எல்லாம் புதுப்பிகேறேன் , அப்பா புண்ணியவானே , நான் ஆப்பீடு

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....இராம்...

said...

/மக்களே நான் தானுங்க அசல் இ ராம் ....இது என்னப்பா குழப்பாமா இருக்கு .தில்லு முள்ளு போல .பேசாம என் ப்ளோக் பெயர் , போட்டோ எல்லாம் புதுப்பிகேறேன் , அப்பா புண்ணியவானே , நான் ஆப்பீடு//

கண்ணு,

எல்லைமீறி போயிட்டு இருக்கே??? இதெல்லாம் நாங்க அமைதியா பார்த்து ரசிச்சிட்டு இருக்கோமின்னு மட்டும் நினைக்காதே!!!!

அடின்னு ஒன்னு ஒனக்கு விழந்தா அது ரொம்ப பலமா இருக்கும்... என்னோட மெயில் ஐடி ஒனக்கு தெரியும்,


என்னாலே ஒனக்கு என்னா பிரச்சினைன்னு மெயில் அனுப்பு'ம்மா கண்ணு!!

அது என்னோட தப்பா இருந்தா மன்னிப்பு கேட்க நான் ரெடி,

சங்கத்தோட போட்டிக்கு பதிவு அனுப்புறவங்க'கிட்டே போயி மறுபடியும் கமெண்ட் போட்டு குழப்பாதே...

தனிமடலிலே தொடர்பு கொள்... பேசலாம்..

said...

எனக்கும் ஒரு கமெண்டு வந்தது...நானும் குழம்பிட்டேன்...

நானும் ஒரு அறிக்கை குடுத்துக்குறேன்..

யேப்ப்பா குழப்ப போலி இராம்

எதார்ந்தாலும் பேசி தீத்துக்கலாம்...வெளாட்டு வேணாம்டோய்..

said...

இராம், எங்க நடக்குது போட்டி? நான் ஆட்டைக்கு உண்டா?:-))

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராம்! கச்செரிப்பக்கம் போனேன் அங்க பாத்தா நேத்து ஒருத்தனை 300க்கும் மேல் பின்னூட்டமிட்டு கும்மி இருந்தார்கள், பக்கத்துல போய்ப் பாத்தா அது நீயி!

அடுத்தாப்ல வெட்டியா உன் பிறந்தநாளுக்கு பதிவிட்டிருக்கும் நண்பனுக்கும் ஒரு பின்னூடமிடனும், நாம பண்ணாட்டி வேற யாரு பண்ணூவா நீயே சொல்லு!

அன்புடன்...
சரவணன்.

said...

சபாஷ் !! உன்னோட பொறுமை மற்றும் , கை ஆளும் திறம் கண்டு யாம் பூரிப்பு அடைகிறோம்....அதனால தோல்வி ஏற்றுக்கொண்டு யாம் விடை பெறுகிறோம்...இனிமேல் யாம் உன் வழியில் குறுக்கே வர மாட்டேன்.......வாழ்க நீ பல்லாண்டு .......வளர்க உன் தொண்டு !!!!!!

இப்படிக்கு இராவணன்

said...

//சபாஷ் !! உன்னோட பொறுமை மற்றும் , கை ஆளும் திறம் கண்டு யாம் பூரிப்பு அடைகிறோம்....அதனால தோல்வி ஏற்றுக்கொண்டு யாம் விடை பெறுகிறோம்...இனிமேல் யாம் உன் வழியில் குறுக்கே வர மாட்டேன்.......வாழ்க நீ பல்லாண்டு .......வளர்க உன் தொண்டு !!!!!!

இப்படிக்கு இராவணன்//

செல்லம்,

இன்னும் நீ அடங்கலையா??? அமெரிக்கவிலே இருக்கிறோம் நம்ம யாராலும் தொடமுடியாதுன்னு இறுமாப்பா????

மவனே... கட்டையை கூராக்கி சொருவாங்க'ன்னு கேள்வி கேட்டுருப்பே, ஆனா அதை நீ வாங்கிருவே....


என்னோட பேருலே நீ ஆரம்பிச்ச ஐடியை டெலிட் பண்ணலைன்னு ரொம்பவே வருத்தபடுவே....

said...

//
என்னோட பேருலே நீ ஆரம்பிச்ச ஐடியை டெலிட் பண்ணலைன்னு ரொம்பவே வருத்தபடுவே....
//


ம் பெரியாளா போயிட்ட போலி வர்ர அளவுக்கு

said...

cha, ivlo late a naaan indha post a padikirenga...

modhal'laiey therinchi irundha naanum participate panni irupen...

its ok