Thursday, June 28, 2007

பெங்களூரூ வலைப்பதிவர் சந்திப்பு

வணக்கம் நண்பர்களே,


சமீப காலங்களாக வலைபதிவர் சந்திப்பு பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று கொண்டு இருப்பது வரவேற்கதக்கதே.

அந்த வகையில் பெங்களூரூலும் வலைபதிவர் சந்திப்பை வரும் ஜீலை மாதம் 14ம் தேதி சனிக்கிழமை லால்பார்க்'லில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் சற்றே
மாறுப்பட்ட முறையில் இல்லாதவர்களுக்கு உதவும் ஒரு நிகழ்ச்சியாகவும் போட்டோகிராபி பற்றிய சிறிய அறிமுகங்களுடன் நடத்தலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அன்று தினம் காலையில் சந்திப்பு'க்கு பிறகு பெங்களூரூலில் இருக்கும் ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று நம்மால் இயன்ற உதவிகளை செய்து வரலாம். வாய்ப்புக்கள் சரியாக அமையும் பட்சத்தில் அவ்வில்லத்திலே நமது
மதிய உணவு வேளையை அவர்களுடன் சேர்த்து கழிக்கலாம். இதற்கு உங்களின் மேலான கருத்துக்களும் மற்றும் ஆலோசனைகள உங்களுக்கு தெரிந்த இல்லத்தை பற்றிய விபரங்கள் இருந்தாலும் அளிக்கலாம்.

மேலும் புகைப்பட கலை பற்றிய சிறிய அறிமுகத்தை நண்பர் நச்.செல்லா, மற்றும் வெண்பா வாத்தி ஜீவ்ஸ் அளிக்க உள்ளனர்.





இடம்:- பெங்களூரூ லால்பார்க் நாள்:- 14 - 07 -2007 நேரம்:- காலை 10.00

உங்களின் வருகையை உறுதி செய்ய பின்னூட்டத்தில் தகவல்களை அளியுங்கள்.

மேலும் தகவல் தொடர்புகளுக்கு

30 comments:

Santhosh said...

தல எப்படி எப்படி இப்படி கலக்குறீங்க
நல்ல விஷயம் தான் செய்யுங்க.. அடுத்த தபா நானும் கலந்துக்கு முயற்சி செய்யுறேன்.

G.Ragavan said...

நல்ல முயற்சி. இதுவரைக்கும் பெங்களூர்ல பல வலைப்பதிவர் சந்திப்பு நடந்திருக்கு. ஆனா இது புதிய முயற்சி. சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகள்.

ALIF AHAMED said...

வாழ்த்துகள்.

மணிகண்டன் said...

இராம்,உங்களை எட்டு போட அழைச்சிருக்கேன்
http://maru-pakkam.blogspot.com/2007/06/blog-post.html

//
இடம்:- பெங்களூரூ லால்பார்க் நாள்:- 14 - 06 -2007 நேரம்:- காலை 10.00//
ஒரு சிறு திருத்தம்
14-06-2007 இல்லைங்க 14-07-2007

கதிர் said...

வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

பெங்களூரு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸிலோ அல்லது ஒரு கூட்ஸ் வண்டியிலொ எனக்கு ஒரு டிக்கெட் எடுத்துகொடுத்தால் உங்கள் பதிவர் சந்திப்பை சிறப்பிக்க நானும் வருவேன்!!?? இல்லை எனில் வாழ்க வளமுடன் !

(பீர் அங்கே நல்லா இருக்கும் என்பதால் தான் இந்த சிறப்பு அறிவிப்பு)

Unknown said...

சின்னத் தல தம்பி ராம் உங்கள் முயற்சிகள் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

நல்ல முயற்சி, அவசியம் வருகிறேன்...

இதுகுறித்தான அடுத்த பதிவில் மொபைல் நம்பர்கள் போடுங்க...

கப்பி | Kappi said...

சின்னத் தல வாழ்த்துகள்!!

இராம்/Raam said...

ஏலேய் கும்மி கோஷ்டிகளா,

யாரு யாரு வர்றீங்கன்னு பின்னூட்டத்திலே சொல்லுங்கன்னா இங்க வந்து சேட்'ஆ பண்ணிட்டு இருக்கீங்க.... கும்மி பின்னூட்டங்கள் எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டேன்..... :))

ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை நடக்க விடுங்க சாமிகளா!! இன்னமும் யாரு யாரு வர்றீங்கன்னு கன்பார்ம்'ஐ பண்ணலை.. :((

ஜி said...

எண்ணிக்கங்க... :))

லக்கிலுக் said...

நல்ல முயற்சி. சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்!

Sridhar Narayanan said...

நல்ல விஷயம். இந்த சந்திப்பிற்க்கு வர ஆவலாக இருக்கிறேன். யாரை தொடர்பு கொள்வது?

இராம்/Raam said...

சந்தோஷ்,

இந்தியா வந்ததும் போன் பண்ணு மேன்...

ஜிரா,

ஒங்க வீட்டிலே நடந்த சந்திப்பை யாரும் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன்... :)

மின்னல் & கதிர்,

நன்றி...

மணி,

சரி பண்ணியாச்சு... :)

வவ்வால்,

வாங்க!! வந்து Reimbursement பண்ணிக்கோங்க... :)

தேவ்,

நன்றி... :)

கொ.ப.தலைவரே,

மொபைல் நம்பரை மாத்தீட்டிங்களா?? எப்போ போனை போட்டாலும் பீட்டர் அம்மா என்னோமோ ஒப்பிக்கிது.. :(

ஜியா,

நோட் பண்ணியாச்சு.. :)

லக்கி,

நன்றி..:)

ஸ்ரீதர் வெங்கட்,

மெயில் ஐடி கொடுத்துருக்கேன்.... மெயில் பண்ணுங்க... :)

தருமி said...

நல்ல காரியம் நல்லா நடந்தேற
வாழ்த்துக்கள்

கண்மணி/kanmani said...

ஹலோ ராம்
Akarshini Peace foundation [ஆகர்ஷினி பீஸ் பவுண்டேஷன்]ன்னு ஒரு அமைப்பு பேங்களூர்ல இருக்கு.நிறையப் பேருக்கு உதவும் அமைப்பு.ஆனா அனாதை இல்லமான்னு தெரியாது.ராமசுப்பிரமணியன்னு ஒரு தமிழர் அதுல முக்கிய பொறுப்பு.ஒருமுறை அகட விகடம் ஷோ நடத்தி நிறைய ஊனமுற்றவர்க்கு சைக்கிள் ல்லாம் குடுத்தாங்க.விசாரிக்கவும்.அவர் போன் நெம்பர் மறந்துடுச்சு.டிரை பண்ணித் தர முயற்சிக்கிறேன்.

Arunkumar said...

Best wishes. Nalla idea. I am missing :(

ILA (a) இளா said...

ராம், இல்லங்களை பத்தின முழு விவரங்கள் என்கிட்டே இருக்கு. தேவைன்னா சொல்லுங்க. மக்களை தொடர்பு கொள்ள சொல்றேன். நானும் இருந்திருக்கலாம் :(

கோபிநாத் said...

நல்ல முயற்சி மாப்பி.... என் வாழ்த்துகள்

Deepa said...

நல்ல முயர்ச்சி.. மழை இல்லைன்னா நானும் வர பார்க்கிறேன்... விவரங்கள் கேட்டு ஈ-மெயில் அனுப்பறேண்

Balloon MaMa said...

இராம்,
நான் ஒரு "குழந்தைகள் பொழுதுபோக்குக்காரன்" தமிழில் சொல்லவேண்டும் என்றால் Children Entertainer" :-)) . என்னால் 20 முதல் 30 குழந்தைகளை Entertain செய்ய இயலும்.

அதிகமான குழந்தைகள் இருந்தால் அனைவருக்கும் பலூன் பொம்மைகள் செய்து கொடுக்க முடியாது.அப்படி நேரும் பட்சத்தில் குழந்தைகள் சந்தோசமாக இருப்பதற்குபதில் அழுகை,கோபம் என்று ஆர்பாட்டங்கள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அந்த பாவம் எனக்கு வேண்டாம். :-)) வேண்டுமானால் சின்ன மேஜிக் நிகழ்சிகள் செய்யலாம்.

பார்க்கில் நடக்கும் சந்திப்பிற்கு வர இயலுமா என்று தெரியவில்லை. குழந்தைகள் இல்லத்திற்கு வர இயலும் என்றே நினைக்கிறேன்.

குழந்தைகள் இல்லம் பற்றிய இடம் தேர்வானவுடன் சொல்லவும்.எப்படிப்பட்ட குழந்தைகள், அவர்களின் தேவைகள்,எப்படிப்பட்ட பொழுது போக்குகள் அவர்களுக்கு பொறுத்தமானவை என்பதைப் பொறுத்தும் எனது availabilty யைப் பொறுத்தும் உறுதி செய்கிறேன்.

அன்புடன்,
பலூன் மாமா

Anonymous said...

ஏனுங்க, என்னமாதிரி வலைப்பூ படிக்க மட்டும் செய்பவர்களும் வரலாமா?

Anonymous said...

ஆஹா. அன்னிக்கின்னு பார்த்து ஊருக்கு டிக்கெட் போட்டு வெச்சுட்டனே :-(

Iyappan Krishnan said...

Anonymous said...

ஏனுங்க, என்னமாதிரி வலைப்பூ படிக்க மட்டும் செய்பவர்களும் வரலாமா?

Monday, July 02, 2007 11:50:00 AM

கண்டிப்பாக... வலைப்பதிவர்கள் மட்டுமின்றி ஆர்வலர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்

நன்றி

விழியன் said...

வரேன்..

Osai Chella said...

பதிவர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக உள்ளேன்! சனியன்று தங்கி ஞாயிறு மாலை திரும்புவதாக திட்டம். உங்கூருக்கு வந்து ஏழு வருசமாச்சுங்கோ!

அன்புடன்
ஓசை செல்லா

Balloon MaMa said...

இராம்,
குழந்தைகள் இல்லம் தேர்வாகிவிட்டதா?

Anonymous said...

என்னுடைய மொபைல் : 98863 97051.

குழந்தைகள் இல்லம் தேர்வு செய்தாச்சா ?

என்ன மேல் விவரம் ஒன்னும் பதிவுல கானோம் ?

தர்மராஜ் said...

நண்பரே, லால் பாக்கில் எந்த இடத்தில் வைத்து சந்திப்பு நடைபெறும்..

இராம்/Raam said...

விழியன்,

வாங்க...

செல்லா,

ஏழு வருடம் கழித்து பெங்களூரூ மாநகர் வருகை தரும் தானை தலைவர் நச்.புகழ் செல்லா வருக வருக!!'ன்னு ஓசூர் - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையிலே தட்டி வைச்சிருவோமா?? :)

கல்வெட்டு, இரவி,

தனி மெயில் அனுப்பி வைக்கிறேன்....:)

தர்மா,

முதன்முறையாக என்னுடய வலைப்பூ'க்கு வந்தமைக்கு நன்றி...

உங்களின் தனி மெயிலுக்கு தகவல்களை அனுப்புகிறேன்....