Monday, July 9, 2007

போங்கடா! நீங்களும் ஒங்க வேலையும்.....

நம்ம அருமை பெருமையெல்லாம் அடுக்கோ அடுக்கி பதிவா போட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறதையெல்லாம் சொல்லுடா'ன்னு கூப்பிட்ட இத்தனை பேரையும் மதிச்சு பதிவை போடமுடியாமே ஆபிஸிலே வேலையை தவிர வேற எதையும் பண்ணக்கூடாதுன்னு எல்லாத்திலேயும் ஃபீயூஸ் பிடுங்கிட்டானுக! அவனுக கிட்டே சண்டை போட திராணியில்லாமே இப்பிடிதான் தலைப்பு வைச்சிக்க முடியுது... :(

1) கப்பி பய
2) தலைவலி
3) தருமி ஐயா
4) மணிகண்டன்
5) கவிதாயினி
6) கொல்லிமலை ஜே.கே
என்னையும் மதிச்சு கூப்பிட்ட அவங்க பாசத்தை நினைச்சி ஆனந்த கண்ணிரு பெருக்கெடுத்து ஓடுதுங்க.அந்த வெள்ளத்தை தடுத்து நிறுத்திட்டு வந்தா நம்ம ஆனைக்குட்டி லேப்டாப்'லே ஒட்கார்ந்துட்டு அடம்பிடிக்கிது, அதை ஓரமா ஒரு இடத்திலே பார்க் பண்ணிட்டு நம்மோட ஒலக சாதனைகளை ஒவ்வொன்னா எடுத்து விடுறேன். கல்லை விட்டு அடிக்கிறதா இருந்தா ஒவ்வொருத்தரா அடிக்கனும், இப்பிடியெல்லாம் மொத்தமா எல்லாம் சேர்ந்துக்கிட்டு அடிக்கப்பிடாது. டேமேஜ் ரொம்ப பலமா ஆகுதுலே.... :)

1) எங்கன இருந்தாலும் வேஷ்டி இல்ல கைலி, சட்டையோட தான் இருக்கிறது. பெங்களூரூலே தம்பி வேலைப் பார்க்குதே கொஞ்சம் நல்லாலாம் டிரெஸ் போட சொல்லக்கூடாதா'ன்னு எங்க தெருக்காரங்க அம்மா'க்கிட்டே சொல்லிட்டே இருப்பாங்க. ஹிம் அதுக்கு அவங்க ரிக்கார்டட் டயலாக் " பண்டி பய எதைச் சொன்னாலும் கேட்டு தொலையுறான் இல்ல"

2) படிச்சது என்னோமோ கணக்கிலே இளங்கலை பட்டம். ஆனா பார்க்கிறது கம்ப்யூட்டரிலே வேலை. நாமே எடுத்த மார்க்'லாம் இஞ்சினீயர் சீட்டு எல்லாம் கொடுக்கமுடியாது'ன்னு சொல்லிட்டாலும் நாங்கெல்லும் என்னத்தயோ படிச்சி கம்ப்யூட்டர் ஆஞ்சுனேயர் ச்சீ இஞ்சினீயர் ஆகியாச்சுலே...

3) எங்கப்போனாலும் நாமே பேசுற பேச்சு, அப்புறம் பண்ணுற நொணநாட்டியத்தை வைச்சே இது மருதயிலே இருந்து கிளம்புனது'னு ஈஸியா எல்லாரும் கண்டுப்பிடிச்சிருவாய்ங்கே.

4) அப்புறம் இந்த கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன்னு என்னத்தயோ பண்ணக்கிட்டு இருக்கிறது! என்னோட டைரியை படிச்ச ஒரு நல்லவர் ஒங்களுக்கு நல்ல மொழி வளமை??? இருக்குன்னு சொல்லிப்பிட்டார். ஹி ஹி இனி ஒங்க பாடுதான் பெரும் திண்டாட்டம்.

5) பசங்க எல்லாரையும் ஓட்டி லந்து விடுறதுதான் மொத வேலையே! ஒரு பயப்புள்ள கல்யாணத்துக்கு போய் அவனை மேடையிலே வைச்சே செமயா லந்தை விட்டு இன்னவரைக்கும் அவன் எங்கக்கிட்டே பேசுறதே இல்லை.

6) டெக்னாக்லாஜிலே எக்ஸ்பர்ட் ஆகுறேன் பேர்வழின்னு என்னத்தயாவது போட்டு நொண்டோ நொண்டி அதை ஒன்னுமில்லாமே ஆக்கி ஒப்பேத்துறது பெரிய சாதனை மக்கா... எங்கப்பாரு அடிஅடின்னு அடிச்சும் இன்னவரைக்கும் அது குறைஞ்சப் பாடு இல்ல...

7) எத்தனதடவை தான் சொல்லுறதுன்னே தெரியலை.. இப்பவும் சொல்லிக்கிறேன், பொஸ்தகத்தை படிக்க ஆரம்பிச்ச அதை கீழே வைக்கிறதே இல்ல. சின்னவயசிலே அம்புலிமாமா படிக்கிறோப்போ எங்கப்பார் சொல்லுவாரு.. "இந்த பயலை வீட்டிலே விட்டுட்டு போனா திருடன் வந்து திருடிட்டு போனாலும் அவன் பாட்டுக்கு படிச்சிட்டு இருப்பான்!"

8) இதுதாங்க என்னோட அருமை பெருமையெல்லாம் என்னை எல்லாருக்கும் அடையாளம் காட்டுறது. அது என்னான்னா என்னோட சோம்பேறித்தனம். எல்லாரும் ஒன்னா கூடி எங்கய்யாவது வெளியா போலமின்னு இருந்தா நாந்தான் லாஸ்டா நிப்பேன். அம்புட்டு சுறுசுறுப்பான சோம்பேறி.

52 comments:

said...

//1) கப்பி பய
2) தலைவலி
3) தருமி ஐயா
4) மணிகண்டன்
5) கொல்லிமலை ஜே.கே//
Innum oru 3 per tagginappuram ezhudhi irundha 8 per taggiya 8 tagnu pottirukalaam ;)

//படிச்சது என்னோமோ கணக்கிலே இளங்கலை பட்டம். ஆனா பார்க்கிறது கம்ப்யூட்டரிலே வேலை.//
Same pinch :))) Nalla sevakkara alavukku en pera solli neengalae killikonga :P

said...

:)))) ஹி ஹி சூப்பர் தல

said...

//பண்டி பய எதைச் சொன்னாலும் கேட்டு தொலையுறான் இல்ல"//
hehe.. enga veetla ippadi sonna naan kekkara maadir ungalukku edhuvum solla therilannu dialogue adippen :)

//டைரியை படிச்ச ஒரு நல்லவர் //
adha muzhusa padichappavae avarukku nichayam moolaila baadhippu erpattirukkum.. adhukkapuram avar sonnadhayum neenga nambareengala :(

said...

//ஒரு பயப்புள்ள கல்யாணத்துக்கு போய் அவனை மேடையிலே வைச்சே செமயா லந்தை விட்டு இன்னவரைக்கும் அவன் எங்கக்கிட்டே பேசுறதே இல்லை.//
ada paavingala.. idhu konjam overa therila?

//"இந்த பயலை வீட்டிலே விட்டுட்டு போனா திருடன் வந்து திருடிட்டு போனாலும் அவன் பாட்டுக்கு படிச்சிட்டு இருப்பான்!"//
:-))) Innoru murai killikonga :)

said...

//அம்புட்டு சுறுசுறுப்பான சோம்பேறி. //

LOL :)))

said...

1) பொய், பொய். நான் பார்க்கும் போது அப்படி இல்லையே.

2) இது உண்மை. பார்க்க ஆஞ்சநேயர் களை இருந்தது! :))

3) வந்தாய்ங்க, போனாய்ங்க அப்படின்னு பேசுனா எங்களுக்கு புரியாதாக்கும்?

4) மொழி படத்தைப் பார்த்து அந்த மாதிரி பேசாம உன்னை வாயை மூடுன்னு சொல்லி இருக்க போறாங்க.

5) உன்னையும் ஓட்டும் காலம் வரும்.

6) அதாவது நீ நோண்டுனதுக்கு அவரு நொங்கு எடுத்தாராக்கும்.!!

7) பாவம் அவருக்குத் தெரியலை புக்கு படிக்கிறதே ஒரு பெரிய திருடன் அப்படின்னு.

8) இம்புட்டு லேட்டா இந்த பதிவை போட்டதுலயே தெரியுது உம்ம சோம்பேறித்தனம்.

said...

ராமாயி அண்ணே!

இது ஒரு நல்ல பதிவு!!!!

said...

இங்கே அனுமதி உண்டா?

said...

ராம், உங்களை கலாய்க்க கூடாதுங்கிற முடிவோட இருக்கேன். அதுக்காக நல்லா இருக்குன்னு சொல்லி இப்போதைக்கு எஸ்கேப்
//படிச்சது என்னோமோ கணக்கிலே இளங்கலை பட்டம். ஆனா பார்க்கிறது கம்ப்யூட்டரிலே வேலை. நாமே எடுத்த மார்க்'லாம் இஞ்சினீயர் சீட்டு எல்லாம் கொடுக்கமுடியாது'ன்னு சொல்லிட்டாலும் நாங்கெல்லும் என்னத்தயோ படிச்சி கம்ப்யூட்டர் ஆஞ்சுனேயர் ச்சீ இஞ்சினீயர் ஆகியாச்சுலே...//

சேம் பிலட்

said...

இரவு வந்தா பகலு வரும்!
இராமு வந்தா திகிலு வரும்!

said...

//எங்கன இருந்தாலும் வேஷ்டி இல்ல கைலி, சட்டையோட தான் இருக்கிறது//

ஆபீஸ்லயுமா ஆபிசர்? அந்த கம்பெனி பேர் சொன்னீங்கன்னா நானும் சேர்ந்துக்குவேன் :)

said...

//"போங்கடா! நீங்களும் ஒங்க வேலையும்....." //

ரி..ப்..பீ...ட்...ட்..ட்..டூ :(((((

said...

எட்டுலயும் மதுர வாசம் தூக்குது ;)

said...

//Innum oru 3 per tagginappuram ezhudhi irundha 8 per taggiya 8 tagnu pottirukalaam ;)//

வாங்க ஊஞ்சல்ஸ்,

ஹி ஹி இன்னும் 3 பேரு கூப்பிடற அளவுக்கு பெரிய ஆளா நானு??? :)

//Same pinch :))) Nalla sevakkara alavukku en pera solli neengalae killikonga :P//

அதுதான் நேரா பார்த்த அன்னிக்கே கிள்ளுனீங்களே???

//hehe.. enga veetla ippadi sonna naan kekkara maadir ungalukku edhuvum solla therilannu dialogue adippen :)//

ஆஹா .... இது நல்லாயிருக்கே... :))

//adha muzhusa padichappavae avarukku nichayam moolaila baadhippu erpattirukkum.. adhukkapuram avar sonnadhayum neenga nambareengala :(//

அப்பிடியெல்லாம் பேசப்பிடாது... நாளைக்கு ஒரு குருட்டு புலி மாதிரி செவிட்டு எலியை அவுத்து விடப்போறேன்.... :))

said...

// குசும்பன் said...

:)))) ஹி ஹி சூப்பர் தல ///

நன்றி பாஸ்...:)

said...

வாங்க கொத்ஸ்,

முழுசா பதிவை படிச்சீட்டிங்க போலே...:))

//1) பொய், பொய். நான் பார்க்கும் போது அப்படி இல்லையே.//

அப்போ ஆபிஸிலே ஆணி பிடுங்கிட்டு வந்தோமில்ல.... அதுதான் அப்பிடி :))

//2) இது உண்மை. பார்க்க ஆஞ்சநேயர் களை இருந்தது! :))//

ஹி ஹி... அப்பிடியெல்லாம் நமக்கு நாமே திட்டத்தையெல்லாம் இங்க யூஸ் பண்ணக்கூடாது... :)

//3) வந்தாய்ங்க, போனாய்ங்க அப்படின்னு பேசுனா எங்களுக்கு புரியாதாக்கும்?//

வேறயாரு பேசினாலும், என்னாடா மருதக்காரயங்கே மாதிரி பேசுறேன்னு கேட்டுருவாய்ங்கே.....:)

//4) மொழி படத்தைப் பார்த்து அந்த மாதிரி பேசாம உன்னை வாயை மூடுன்னு சொல்லி இருக்க போறாங்க.//

இதுக்கு பேரு பொறாமை'ன்னு எல்லாரும் சொல்லுவாங்க... :)

//5) உன்னையும் ஓட்டும் காலம் வரும்.//

ஹிஹி

//6) அதாவது நீ நோண்டுனதுக்கு அவரு நொங்கு எடுத்தாராக்கும்.!!//

அடி வாங்குறதெல்லாம் என்னைமாதிரி வீரனுக்கு சகஜம்... :)

//7) பாவம் அவருக்குத் தெரியலை புக்கு படிக்கிறதே ஒரு பெரிய திருடன் அப்படின்னு.//

இந்த உண்மையே உலகத்துக்கு எடுத்து சொல்லுங்கன்னு நான் ஒங்கிட்டே கேட்டானா??? :((

//8) இம்புட்டு லேட்டா இந்த பதிவை போட்டதுலயே தெரியுது உம்ம சோம்பேறித்தனம்.//

ஹி ஹி...... என்னப்பண்ணுறது... ஐ யம் ஆல்வேஸ் பிஸீ..... :)

said...

//தம்பி said...

ராமாயி அண்ணே!

இது ஒரு நல்ல பதிவு!!!! //

ஏலேய் இது ஸ்பெல்லிங் மிஸ்டேக்'ஆ.... இல்லே பர்பஸ்'ஆ போட்டதா??? :((

said...

// அனுமதி கோருபவன் said...

இங்கே அனுமதி உண்டா? //

இல்லன்னா என்ன பண்ணுவே????

//விவேக் said...

இரவு வந்தா பகலு வரும்!
இராமு வந்தா திகிலு வரும்! //


ஐயா தத்துவ ஞானி... ஒன்னோட தத்துவம் சகிக்கலை... :((

said...

//இல்லே பர்பஸ்'ஆ போட்டதா//

Purposa Pottathuthan. Ippo Innandra?

said...

//இல்லன்னா என்ன பண்ணுவே????//

Kummi Adippen!

said...

//ராம், உங்களை கலாய்க்க கூடாதுங்கிற முடிவோட இருக்கேன். அதுக்காக நல்லா இருக்குன்னு சொல்லி இப்போதைக்கு எஸ்கேப்//

ரொம்ப சந்தோஷம் விவசாயி... :)

said...

"கம்ப்யூட்டர் அஞ்சனேயர்" ஒத்துக்கத் தான் வேணும். என்னோட ப்ளாகிலே உங்க திறமையைப் பார்த்தேனே! பதிவு போட்டுட்டு சொல்ல வேணாம்? அப்புறம் எப்படி ரஞ்சனி பத்திக் கேட்கிறது? அதை ஏன் எழுதலை? :P

said...

//
ஆபீஸ்லயுமா ஆபிசர்? அந்த கம்பெனி பேர் சொன்னீங்கன்னா நானும் சேர்ந்துக்குவேன் :)//

மணி,

எங்கக்கிட்டே லந்து'ஆ.... அதாவது சும்மா இருக்கிற டைமிலே.... :))

என்ன எழுதுனாலும் டிஸ்கி போட வைக்கிறங்க'ப்பா...:)))

said...

நல்ல பதிவு !!!!

said...

////"போங்கடா! நீங்களும் ஒங்க வேலையும்....." //

ரி..ப்..பீ...ட்...ட்..ட்..டூ :(((((//

கப்பி நிலவா,

ஒனக்கும் சேம் பிளட்'ஆ???? :((

என்னப் பண்ணுறது... சேர்ந்து இப்பிடி அழுவுறதே தவிற??? :((

//எட்டுலயும் மதுர வாசம் தூக்குது ;)//

ஹிஹி டாங்கீஸ்'ப்பா... :)

said...

டியர் கும்மிஸ்,


எனக்கு தூக்கம் வருது'ப்பா.... ஐ யம் சாரி...

:)


தள என்னோமோ தங்கிலிஸிலே பதிவு போட்டுருக்காறாம்.... அங்க போய் கும்முங்க.... :)

said...

//"கம்ப்யூட்டர் அஞ்சனேயர்" ஒத்துக்கத் தான் வேணும். என்னோட ப்ளாகிலே உங்க திறமையைப் பார்த்தேனே! பதிவு போட்டுட்டு சொல்ல வேணாம்?//

ஹி ஹி நன்றி....


//அப்புறம் எப்படி ரஞ்சனி பத்திக் கேட்கிறது? அதை ஏன் எழுதலை? :P//

அவங்கிட்டே பெர்மிஷன் வாங்கிட்டு எழுதுறேன்... :))

said...

//மின்னுது மின்னல் said...

நல்ல பதிவு !!!! //

மின்னலு பதிவையே படிக்கலை போல மக்கா.... :(((

said...

அருமையான பதிவு ராமண்ணா... (நிஜமாலுமே படிச்சேன். நம்புங்க)

நானும் உங்களை இந்த வாரம் கலாய்க்கக்கூடாதுனு முடிவெடுத்ததால நோ மோர் கமெண்ட்ஸ் ;)

said...

//
5) பசங்க எல்லாரையும் ஓட்டி லந்து விடுறதுதான் மொத வேலையே! ஒரு பயப்புள்ள கல்யாணத்துக்கு போய் அவனை மேடையிலே வைச்சே செமயா லந்தை விட்டு இன்னவரைக்கும் அவன் எங்கக்கிட்டே பேசுறதே இல்லை.//

what goes around,comes around.
:-P

நல்ல பதிவு தலைவரே!! :-)

said...

//மின்னுது மின்னல் said...

நல்ல பதிவு !!!! //

மின்னலு பதிவையே படிக்கலை போல மக்கா.... :(((


//

பின்ன படிச்சிருந்தா இப்படி பின்னூட்டம் போடுவாங்களா? :))

said...

ஆனை ச்ச்ச்சோ க்யூட்...

said...

பாவி.. என்னய கணக்குலயே சேக்கலயே? :((

உங்களையும் மதிச்சி 8 போடு ராசான்னு கூப்டனே என்னை சொல்லனும். உங்க பேச்சுக் கா..

said...

ஆமா!! அருமை பெருமைல 'ராயல்' பட்டத்தைப் பத்தி சொல்லலயே தல? இவ்ளோ தன்னடக்கமா?

said...

1.Same pinch..Namba katchi...
2.Good..ellathukkum adipadiyae kannukku pannuradhu dhaanae nu solluraen...
3.Madura madura dhaan
4.Unga blogs paarthavae theriyudhunga Ram:-)
5.Oh neenga ottunar sangathai serundhavara....
6,7...Good..good...

8.:-)

said...

ராமண்ணாஆஆஆஆஆஆஆஆஅஆஅஆஆஅ.......
[emotional]

said...

ஒரு தலை சிறந்த குணத்த மிஸ் பண்ணிட்டியே ராம்..:(

உன் தனித்தன்மைய சொல்லாம விட்டுட்டியே கண்ணா

said...

எங்க மாமாவுக்கு என்மேல எம்புட்டு பிரியம்னு பாத்தீங்களா? அவரோட லேப்டாப் டெஸ்க்டாப்ல என்னோட பேருல ஒரு ஃபோல்டரே போட்டிருக்காக.. அதுல பூரா என்னோட படத்தத்தான் வச்சிருக்காக...

said...

:))))))))))))

said...

//எங்கன இருந்தாலும் வேஷ்டி இல்ல கைலி, சட்டையோட தான் இருக்கிறது.//
ராமண்ணா ஒரு சந்தேகம் ஆபீஸ்ல கூடவா??

//நாமே எடுத்த மார்க்'லாம் இஞ்சினீயர் சீட்டு எல்லாம் கொடுக்கமுடியாது'ன்னு சொல்லிட்டாலும்//
ஹிஹி.. சேம் பிளட்..

//என்னோட டைரியை படிச்ச ஒரு நல்லவர் ஒங்களுக்கு நல்ல மொழி வளமை??? //
சும்மாவே இருக்க மாட்டானுங்க.. எதையாவது கொளுத்திப்போட்டுட்டு போயிடுவானுங்க இதை எல்லாம் பெருசு படுத்தாதிங்க நீங்க.

//பசங்க எல்லாரையும் ஓட்டி லந்து விடுறதுதான் மொத வேலையே! ஒரு பயப்புள்ள கல்யாணத்துக்கு போய் அவனை மேடையிலே வைச்சே செமயா லந்தை//
உங்களுக்கு எப்பங்கண்ணா கல்யாணம் சும்மா ஒரு பொது அறிவுக்காக கேட்டுகிட்டேன் அம்முட்டு தான்.

//இதுதாங்க என்னோட அருமை பெருமையெல்லாம் என்னை எல்லாருக்கும் அடையாளம் காட்டுறது. அது என்னான்னா என்னோட சோம்பேறித்தனம். எல்லாரும் ஒன்னா கூடி எங்கய்யாவது வெளியா போலமின்னு இருந்தா நாந்தான் லாஸ்டா நிப்பேன். அம்புட்டு சுறுசுறுப்பான சோம்பேறி.//
நீயும் என் இனமடா.. அடுத்த எட்டு ஆட்டம் சோம்பேறி ஆட்டம் ஆரம்பிப்போமா?

said...

1) kaili onna kattikittu apdiye tea kadaila dham patha vaikiradha sollave illaye.. :)

2) indha field-la enna maathiri computer padichavanunga thaan kammi :P

3) muthupaandi-na kuthi kondu puduvaanu bayama :)

4) ippidi evan poi sonnalum nambidra andha nalla gunatha kooda ettula onna sollirkalaame oors :)

5) munpagal seyyin pirpagal thaana varum oors.. sangathula ROYAL RAAM THE BOSS nyabagam varudha ?

6) kaasa panama illa ttechnology thaan nambaldha.. chumma poondhu nondi vittu varadhu thaane..
idhellam ellaurm seiyuradhu thaan makka :)

7) studies books thavira-nu oru disci poturkalaam :P

8) inga oruthan irukken.. lastukke last :)

said...

//4) அப்புறம் இந்த கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன்னு என்னத்தயோ பண்ணக்கிட்டு இருக்கிறது! என்னோட டைரியை படிச்ச ஒரு நல்லவர் ஒங்களுக்கு நல்ல மொழி வளமை??? இருக்குன்னு சொல்லிப்பிட்டார். ஹி ஹி இனி ஒங்க பாடுதான் பெரும் திண்டாட்டம்.//

ராமண்ணா, யாரந்த நல்லவர்?

said...

//அருமையான பதிவு ராமண்ணா... (நிஜமாலுமே படிச்சேன். நம்புங்க)//

ஏலேய் வெட்டி... இங்கென என்ன மனப்பாட பகுதி வகுப்பா நடக்குது????

//நானும் உங்களை இந்த வாரம் கலாய்க்கக்கூடாதுனு முடிவெடுத்ததால நோ மோர் கமெண்ட்ஸ் ;)//

இதுக்கு முன்னாடி போட்டதுக்கு பேரு என்ன மேன்??? :)

said...

//what goes around,comes around.
:-P//

வாங்க வெள்ளைக்கார தொரை....

//நல்ல பதிவு தலைவரே!! :-)//

ஹி ஹி டாங்கீஸ்.... :)

said...

//பின்ன படிச்சிருந்தா இப்படி பின்னூட்டம் போடுவாங்களா? :))//

மணி,

ஆஹா... மறுபடியும் லந்தா???? வேர்ல்ட்-கப் சமயத்திலே ஒங்களுக்கு டெவில் ஷோ போட வேண்டியது மிஸ்ஸாகிடுச்சுன்னு இப்போ சொல்லிக்கிறேன்..... ;-)

//பொன்ஸ்~~Poorna said...

ஆனை ச்ச்ச்சோ க்யூட்... //

வாங்க ஆனை படை தலைவியே..... சென்னைக்கு வர்றப்போ இதேமாதிரி ஒன்னு வாங்கியாறேன்.... ;)

said...

/பாவி.. என்னய கணக்குலயே சேக்கலயே? :((

உங்களையும் மதிச்சி 8 போடு ராசான்னு கூப்டனே என்னை சொல்லனும். உங்க பேச்சுக் கா..//


கவிதாயினி,

கோவிச்சுக்காதீங்க.... இப்போ சேர்த்தாச்சு... :)

//ஆமா!! அருமை பெருமைல 'ராயல்' பட்டத்தைப் பத்தி சொல்லலயே தல? இவ்ளோ தன்னடக்கமா?//

ஹி ஹி.... அதேதான் இந்த பதிவிலே சொல்லியாச்சே?? நீங்க படிக்கலையா???

said...

//1.Same pinch..Namba katchi.../

வாங்க ராஜி,

ஹி ஹி நாமே எளியோர் கட்சி.... :)

//2.Good..ellathukkum adipadiyae kannukku pannuradhu dhaanae nu solluraen...//

;)

//3.Madura madura dhaan//

நன்றி! நன்றி!

//4.Unga blogs paarthavae theriyudhunga Ram:-)//

ஹி ஹி இதுக்குமொரு நன்றி...

//5.Oh neenga ottunar sangathai serundhavara....//

ஆஹா... :)

//6,7...Good..good...

8.:-)//

வருகைக்கு மிக்க நன்றி

said...

//ஒரு தலை சிறந்த குணத்த மிஸ் பண்ணிட்டியே ராம்..:(

உன் தனித்தன்மைய சொல்லாம விட்டுட்டியே கண்ணா///

அடர்கானகத்து புலி,

அது என்னா?? எனக்கே தெரியாமே????

said...

// ரஞ்சனி said...

எங்க மாமாவுக்கு என்மேல எம்புட்டு பிரியம்னு பாத்தீங்களா? அவரோட லேப்டாப் டெஸ்க்டாப்ல என்னோட பேருல ஒரு ஃபோல்டரே போட்டிருக்காக.. அதுல பூரா என்னோட படத்தத்தான் வச்சிருக்காக... /

என்னோட மனசிலே ஒன்னோட படந்தான் இருக்கு செல்லம்....:)

// கோபிநாத் said...

:)))))))))))) ///

ஏலேய் மாப்பி,

சிரிச்சது போதும் கிளம்பு.... காத்து வரட்டும்... :)

said...

//ராமண்ணா ஒரு சந்தேகம் ஆபீஸ்ல கூடவா??//

வாப்பா சந்தோஷ்,

மணி'க்கு சொன்ன பதிலே திரும்ப படிச்சிட்டு வாப்பா... :)

//சும்மாவே இருக்க மாட்டானுங்க.. எதையாவது கொளுத்திப்போட்டுட்டு போயிடுவானுங்க இதை எல்லாம் பெருசு படுத்தாதிங்க நீங்க.//


ஹி ஹி.... அப்பிடியெல்லாம் மத்தவங்க சொல்லுறத ஈஸியா விட்டுற முடியுமா??

said...

//1) kaili onna kattikittu apdiye tea kadaila dham patha vaikiradha sollave illaye.. :)//

அதே நம்ம தெற்குமாசி வீதி சொல்லும் மக்கா...:)

//2) indha field-la enna maathiri computer padichavanunga thaan kammi :P//

சரி விடு... :)

//3) muthupaandi-na kuthi kondu puduvaanu bayama :)//

ஹி ஹி

//4) ippidi evan poi sonnalum nambidra andha nalla gunatha kooda ettula onna sollirkalaame oors :)//

ஒங்களுக்கெல்லாம் பொறாமை... :)

//5) munpagal seyyin pirpagal thaana varum oors.. sangathula ROYAL RAAM THE BOSS nyabagam varudha ?//

ஹி ஹி.... லூஸிலே விடு ஊர்ஸ்..

//6) kaasa panama illa ttechnology thaan nambaldha.. chumma poondhu nondi vittu varadhu thaane..
idhellam ellaurm seiyuradhu thaan makka :)//

அடேடே வா வா என் இனமே... :))

//7) studies books thavira-nu oru disci poturkalaam :P//

ஹி ஹி..... :)

//8) inga oruthan irukken.. lastukke last :)//

ஹிம் நீங்கெல்லாம் பீஜி ஆளுல்லே...

said...

//
ராமண்ணா, யாரந்த நல்லவர்?//

பாசமலரே,

அண்ணன் சொன்னா நம்பணும்!!! ஆதாரமெல்லாம் கேட்கப்பிடாது... :)