Wednesday, September 12, 2007

GTalk - தனிப்பயன் - custom - கஷ்டம் - பதிவு

நமது அன்பு தம்பி கப்பிநிலவர் ஏற்படுத்திய டிரெண்ட்'ஐ பின்பற்றி ஒரு பதிவு.......

காலைல அலுவலகத்துக்கு வந்து பொட்டியைத் திறந்து ஜிடாக்ல நுழைஞ்சு custom மெசெஜை(தனிப்பயன் வாசகம் என்று சொல்லலாமா??) மாற்றும்போது ஒரு யோசனை..இந்த கஸ்டம் வாசகங்கள் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி மற்றவர்களைக் கொஞ்சம் கஷ்டப்படுத்தினா என்ன....அதான் கடந்த சில தினங்களில் ஜிடாக்கில் என் தனிப்பயன் வாசகங்கள் கீழே...

ஹி ஹி இதெயெல்லாம் கவிஜ லிஸ்ட்'லிலே சேர்த்துக்கோங்க மக்கா... :)


மன்றாடலின் கடைநிலையில் துளிர்க்கும் புன்னகையில் சிலிர்க்கிறது,
நனைந்த சிறகுகளின் வழியூடும் தென்றலென நமது பிரியம்....

நஞ்சுதோய்ந்த பாம்புகள் அடர்ந்த வனபயணங்களில் வழிகாட்டியென
உந்தன் அன்பு பெருக்கில் பனிக்கும் கண்களின் ஒளி...

வண்ணகலவைகளின் கூட்டணியாய் அமைந்து விட்ட ஓவியமொன்றின் நினைவு,
உந்தன் கோபதாபத்தில் விளைந்த வதனம்.....

வாதங்களும் பிரதிவாதங்களிலும் நிகழந்துவிட்ட
இறுக்கமென்ற இடைவெளி தளர்த்த
சிறகு விரித்து பறந்து போனது
சினேகமென்னும் பறவை....

23 comments:

said...

கவுஜ கவுஜ :))

said...

நல்லாதான் இருக்கு ஐடியா, நானும் இது போல கவிதை எழுதினாதான் உண்டு:-))

said...

இப்பிடித்தான் கவித எழுதனுமா! சொல்லவேயில்லையே!

said...

நஞ்சுதோய்ந்த பாம்புகள் அடர்ந்த வனபயணங்களில் வழிகாட்டியென
உந்தன் அன்பு பெருக்கில் பனிக்கும் கண்களின் ஒளி...
//

இது ஒன்னு மட்டும் தான் புரியுது :)

said...

//
இது ஒன்னு மட்டும் தான் புரியுது :)//

மின்னல்,
ராயல் கவுஜயை புரிஞ்சிக்கிற அளவுக்கு பெரிய இலக்கியவாதியாயிட்ட...

said...

இந்த பதிவை விளக்க இன்னும் 2 பதிவு போடுவிங்களா? :)

said...

கவுஜ? :(

said...

மாப்பி..இதுக்கு பேரு தான் கவுஜயா!! :))

said...

//கப்பி பய said...
கவுஜ கவுஜ :))
//

Repeatoi :)))

said...

//

கப்பி பய said...

கவுஜ கவுஜ :)) //

ஏலேய் கப்பிநிலவா,


கவுஜ'ன்னு தான் சொல்லியாச்சே.... அப்புறமா என்ன ரிப்பிட்டு?

said...

/அபி அப்பா said...

நல்லாதான் இருக்கு ஐடியா, நானும் இது போல கவிதை எழுதினாதான் உண்டு:-)) /

அண்ணே,

இதிலே என்ன உள்குத்து இருக்கு??? :(

said...

//G.Ragavan said...

இப்பிடித்தான் கவித எழுதனுமா! சொல்லவேயில்லையே! //

ஜிரா,

ஒரு சின்ன திருத்தம், கவித இல்ல கவுஜ

said...

//மின்னுது மின்னல் said...

நஞ்சுதோய்ந்த பாம்புகள் அடர்ந்த வனபயணங்களில் வழிகாட்டியென
உந்தன் அன்பு பெருக்கில் பனிக்கும் கண்களின் ஒளி...
//

இது ஒன்னு மட்டும் தான் புரியுது :) //

ஹி ஹி..... மின்னலு மிச்சத்தையெல்லாம் நல்லா படிச்சி பாரு...

புரியும்... :)

said...

//வெட்டிப்பயல் said...

//
இது ஒன்னு மட்டும் தான் புரியுது :)//

மின்னல்,
ராயல் கவுஜயை புரிஞ்சிக்கிற அளவுக்கு பெரிய இலக்கியவாதியாயிட்ட... //

ஏலேய் வெட்டி,

ஒனக்கு ஓவரு நக்கல்தாய்யா... :)

said...

// துரியோதனன் said...

இந்த பதிவை விளக்க இன்னும் 2 பதிவு போடுவிங்களா? :) ///

ஹி ஹி... இல்ல பாஸ்..... :)

said...

//இலவசக்கொத்தனார் said...

கவுஜ? :( ///

கொத்ஸ்,

வொய்... அழுவாச்சி'ப்பான்????

said...

// கோபிநாத் said...

மாப்பி..இதுக்கு பேரு தான் கவுஜயா!! :)) //

ஹிம்.... ஆமாம்.....

/G3 said...

//கப்பி பய said...
கவுஜ கவுஜ :))
//

Repeatoi :))) //

சொர்ணாக்கா,

ஏனிந்த வேலை??? :(

said...

//நஞ்சுதோய்ந்த பாம்புகள் அடர்ந்த வனபயணங்களில் வழிகாட்டியென
உந்தன் அன்பு பெருக்கில் பனிக்கும் கண்களின் ஒளி...//

புளிசாதம் கட்டிக்கிட்டு போன ஊர்ப்பயணங்களில் அளவில்லாத காரத்தினால் ஊற்றெடுக்கும் கண்களில் தண்ணி.

என்னை கவிஞனாக்கிய பின்நவீனத்துவ பெருமான் டாக்டர் ராயல் ராமசாமி வாழ்க வாழ்க.

said...

அகா!...இப்படி ஒரு பதிவா?....கலக்கறீங்க ராம்...... :-)

said...

//கைப்புள்ள said...

//நஞ்சுதோய்ந்த பாம்புகள் அடர்ந்த வனபயணங்களில் வழிகாட்டியென
உந்தன் அன்பு பெருக்கில் பனிக்கும் கண்களின் ஒளி...//

புளிசாதம் கட்டிக்கிட்டு போன ஊர்ப்பயணங்களில் அளவில்லாத காரத்தினால் ஊற்றெடுக்கும் கண்களில் தண்ணி. //

தல,

அம்புட்டுந்தேய்ன்..... அப்பிடியே வார்த்தையே ஒடச்சி அங்கன ஒன்னு இங்கன ஒன்னா போட்டுட்டா அதுதான் கவிதை.... :)


/என்னை கவிஞனாக்கிய பின்நவீனத்துவ பெருமான் டாக்டர் ராயல் ராமசாமி வாழ்க வாழ்க.//


ஹி ஹி யூ வெல்கம்..... :)

said...

/ மதுரையம்பதி said...

அகா!...இப்படி ஒரு பதிவா?....கலக்கறீங்க ராம்...... :-) //

மெளலி,

இதென்னும் நம்ம ஊரு'லே பண்ணுற லந்து இல்லியே????? :)

said...

//இதென்னும் நம்ம ஊரு'லே பண்ணுற லந்து இல்லியே????? :) //

என்னைக்கு நம்மூருல நம்ம லந்து பண்ணறத சொல்லிட்டு பண்ணிருக்கோம் ராம், இப்ப மட்டும் இப்படி கேக்குறீங்க?.... :-)

said...

// மதுரையம்பதி said...

//இதென்னும் நம்ம ஊரு'லே பண்ணுற லந்து இல்லியே????? :) //

என்னைக்கு நம்மூருல நம்ம லந்து பண்ணறத சொல்லிட்டு பண்ணிருக்கோம் ராம், இப்ப மட்டும் இப்படி கேக்குறீங்க?.... :-) //

ரைட்டு.... நீங்களே கன்பார்ம் பண்ணிட்டிங்க...

ரொம்ப டாங்கீஸ்.... :)