Wednesday, October 10, 2007

விவாஜி'க்கு எதிர் கவுஜை....


இன்னல இருந்து உனக்கு குருப்பார்வைன்னு
தெரு முக்கு ஜோசியர் சொன்னாரு!
நம்ப மறுத்த என்னோட பிடிவாதத்தை
அன்னிக்குதான்டா அதையே தளர்த்திக்கிட்டேன்!

நீ நம்ம தெருவிலே குடியேறின முதல் நாள்
என்னோட நண்பனா மாறிட்டே!
என்னோட கடங்கார அட்டையெல்லாம்
எடுக்க விடாமே நீயே காசு கொடுத்துட்டே!

பாட்டில் ஓப்பன் பண்ணும்போது மட்டும்
உனக்கு எப்பிடியோ மூக்குக்கு மேலே கோவம் வந்திருது!
இருக்கிற எதையும் குடிக்கவிடாமே செய்யற
ஒன்னாலே எனக்கு மண்டை காயுது.

டீ கடைக்கு நான் போறத
யார் சொல்லாமலும் உனக்கு எப்பிடி தெரியுது?
தங்கராசா வடிகட்டி வாங்கினா மட்டும் நீ இப்பிடி
டென்சன் ஆகுறேன்னு எவனுக்கும் தெரியாது.

சம்பள நாள் வந்தா கவரு வருதோ இல்லியோ!
ஆபிசுக்கு சிரிச்சிகிட்டே வந்து ஸ்டைலா நிப்பே!
மாசத்திலே கொஞ்சமாவது சேமின்னு
யாரும் சொல்லாத அட்வைஸ் பண்ணிட்டு போவே!

சுனாமி வந்து ஊரையெல்லாம் தூக்குச்சு
உனக்கு ஒன்னும் ஆகலைன்னு போன் பண்ணி கேட்டே?
கழுதையா பார்த்தா யோகமாம், ஊருலே சொன்னாங்க!
உன்னை நண்பனை அடைச்ச நான் யோகவந்தாண்டா!

உன் நட்பு வேணாமின்ன யாரும் சொன்னா?
சொன்னவன் திரும்ப வருவான்னு போடுவேன் எங்க வீட்டுக்கு பெரிய "Gate"டா!
இந்த வருசம் ஆகஸ்ட் பர்ஸ்ட் விக்கெண்ட்'லே
வைப்ப்போம் ஊருக்கெல்லாம் பெரிய ட்ரீட்டா!


விவாஜி எதிர்மறை கவுஜை

22 comments:

ILA (a) இளா said...

எதிர் கவிதைக்கு எதிர் கவிதை போட்டதான் இன்றிலிருந்து உங்களை எதிர் கவிதாயினி கவுஜன் என்று இந்த உலகம் விளி(ழி)க்கட்டும்

Anonymous said...

//நீ நம்ம தெருவிலே குடியேறின முதல் நாள்
என்னோட நண்பனா மாறிட்டே!//
என்னை ராம் கிட்டே இருந்து காப்பாத்துங்க. ப்ளீஸ்.

Anonymous said...

//டீ கடைக்கு நான் போறத//
கடன் வெக்கதானே

Anonymous said...

//மாசத்திலே கொஞ்சமாவது சேமின்னு//
ஐ நோ ஒன்லி சேமியா

Anonymous said...

//எங்க வீட்டுக்கு பெரிய "Gate"டா//
எனக்கேவா?

Anonymous said...

//அன்னிக்குதான்டா அதையே தளர்த்திக்கிட்டேன்!//
அதிகமா சாப்பிட்டா பேண்ட் டை ஆவத்தான் செய்யும். அப்போ 'லைட்டா" லூஸாக்கிக்கனும்

Anonymous said...

//என்னோட நண்பனா மாறிட்டே!//
இதுக்கு நான் தற்கொலை பண்ணிக்கலாம்.

Anonymous said...

//குருப்பார்வைன்னு
தெரு முக்கு ஜோசியர் சொன்னாரு!//
அந்த ஆளுக்கு நல்லா பார்வை இருக்கா?

Anonymous said...

இது ஒரு ஆபாச பதிவு. அதுவும் அம்மண கட்டையோட பசங்க. உவ்வே

Anonymous said...

//இருக்கிற எதையும் குடிக்கவிடாமே //
ஆமா. ஊறுகாய எல்லாம் தின்னுபுட்டா, என்னா பண்றது. இருக்கிற சைட் டிஷே அதுதான்.

Anonymous said...

நான் போட்டதே எதிர் கவிதைக்கு எதிர் கவிதை போட்ட ராமே, எதிரி கவிதைக்கு எதிர் கவிதைகு எதிர் கவிதை போட எந்த எதிர் கவிதை கவிஞர் வருவாரு?

G.Ragavan said...

ஒன்னோட கவுஜைக்கும் விவாஜியோட கவுஜைக்கும் எதிர்க்கவுஜ இங்க

http://gragavan.blogspot.com/2007/10/blog-post.html

ILA (a) இளா said...

//நான் போட்டதே எதிர் கவிதைக்கு எதிர் கவிதை போட்ட ராமே, எதிரி கவிதைக்கு எதிர் கவிதைகு எதிர் கவிதை போட எந்த எதிர் கவிதை கவிஞர் வருவாரு?//
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க. இன்னும் எத்தனை பேர் இப்படி கெளம்ப போறாங்களோ தெரியலையே

கோபிநாத் said...

ஹைய்யா....எதிர் கவுஜ...எதிர் கவுஜ ;)

மங்களூர் சிவா said...

எதிர்கவ்விதைய விட அனானி கமெண்ட்கள்

சூப்பரோ சூப்பர்

:-)))))

Unknown said...

:)))

MyFriend said...

கமேண்ட்ஸ் சூப்பர். :-)))))

நாகை சிவா said...

:))))

கப்பி | Kappi said...

:))))

குசும்பன் said...

நிர்வாணபடங்கள் போட்டு கட்டுடைக்கும் இளய தல, இனி அய்யனாருடன் சேர்ந்து கவிதை எழுதுவார் என்பதை இங்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறேன்!!!

மங்களூர் சிவா said...

//
நிர்வாணபடங்கள் போட்டு கட்டுடைக்கும் இளய தல, இனி அய்யனாருடன் சேர்ந்து கவிதை எழுதுவார் என்பதை இங்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறேன்!!!
//

நானும் கூட சேர்ந்து 'கொல்லு'கிறேன்

Raji said...

neenga pottu naan padicha kavidhaiyilae idhu dhaan enakku therinja wordsaa irukku..aana purinjudha puriyalayaanu dhaan enakkae theriyala ...