Wednesday, October 10, 2007

குட்டி சாத்தான் தொல்லை.....

குட்டிச்சாத்தான்னா என்னான்னு இன்னவரைக்கும் நாமெல்லாம் கண்ணாலே பார்த்தது இல்லலே... நாங்கெல்லாம் ஒன்னோட போட்டோ பார்த்துட்டோமின்னு சொல்லி சிரிக்கிறது தெரியுது, அப்பிடியெல்லாம் பச்சப்புள்ளய நக்கல் பண்ணப்பிடாது. ஆமாம் நீங்க கேள்விக்கேட்க வர்றது புரியுது, இன்னிக்கு நான் பச்சை சட்டைதான் போட்டுருக்கேன். வருசா வருசம் வர்ற வாலெண்டெஸ் டே'க்கு போட்டும் பார்த்தாச்சு, ஒன்னும் நடத்தமாதிரி இல்ல, இன்னிக்கு பச்சைச்சட்டை போட்டு என்னத்த ஆகப்போகுது? பேக் டூ த டாபிக். வாழ்க்கையிலே ஒரே ஒரு தடவை படிச்ச எட்டாவது வகுப்பு முழுப்பரிட்சை லீவு'ப்போ கண்ணாடி போட்டு படம் பார்க்கனுமின்னு சொன்ன முத்துக்குமாரை இழுத்துக்கிட்டு அபிராமி தியேட்டரிலே பார்த்த குட்டிச்சாத்தான் படம். அதுக்கு இப்போ என்னாடா'ன்னு கேட்கீறிங்க? புரியுது! மொக்கைன்னு லேபிள் போட்டோமில்ல இன்னும் இழுப்போமில்ல.

அந்த படத்திலே வர்ற பசங்கிட்டே குட்டிசாத்தான் எந்தமாதிரி நான் வரனுமின்னு கேட்க அவங்க அப்பா வரைஞ்ச படத்திலே இருக்கிறமாதிரி சொல்ல அதை மாதிரி வருவான். இப்போ நாமே எல்லாமே கேட்கமே இன்னொரு குட்டிச்சாத்தான் நம்ம கையிலே உட்கார்ந்து கிடக்கு. அதுதான் கருமம செல்லுபோனு. அய்யோ அதை வைச்சிட்டு நம்மளுக பண்ணுற அலப்பறை நொணநாட்டியம் இருக்கே. கொஞ்சவருசத்துக்கு முன்னாடி கன்னத்திலே கை வைச்சிக்கிட்டு போஸ் கொடுத்தவர் கூவி வித்த ஐநூத்துஒன்னுக்கு ரெண்டு செல்'ஐ வாங்கிட்டு அவனுக்கு ஒன்னு அவன் ஆளுக்கு ஒன்னுன்னு கொடுத்து ஒரே கடலை வருகல்தான். அப்போயும் நானெல்லாம் ஒரே ஒரு போனை தாங்க வைச்சிருந்தேய்ன், ஹிம் இன்னவரைக்கும் அதே கதைதான்.

இத்தாலிலே இருக்கிற சாய்ஞ்ச கோபுரம் மாதிரி கோணிக்கிட்டு தலையை வைச்சிட்டு ஊருக்குள்ளே திரியுறானுக, நடந்துட்டு போறவன் கூட ஸ்டைலுக்கு தோள்பட்டையிலே மொபலை வைச்சிட்டே தலையே சாய்ச்சிக்கிட்டே பேசிட்டு போறானுக. கொஞ்சவருசத்துக்கு முன்னாடி மதுரையிலே குப்பை கொட்டிக்கிட்டு இருக்கிறோப்போ அப்பாகிட்டே அழுது பிடிச்சி எப்பிடியோ ஒரு மொபைல் வாங்கியாச்சி, அதிலே எப்போ ரிங் அடிச்சாலும் இவருக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துரும். ஏண்டா என்னிக்காவது அதை உருப்படியா உபயோகப்படுத்திக்கிறியா? எப்போ பாரு, அதிலே வெட்டிப்பயலுக தான் பேசுறானுக, எழவு நீங்க என்னத்ததான் பேசி தொலையிறீங்கன்னு பிடிப்பட மாட்டங்கிதுன்னு பொலம்புவார்... ஹி ஹி அவருக்கு புரியுறமாதிரி பேசுனுமின்னா இந்த வார கடைசியிலே பெரியார் பஸ்ஸடாண்ட் கடைக்கு வந்துரு, LTC'க்கு மதியம் வந்துருன்னா பேசமுடியும். எல்லாமே கோட் வேர்ட்ஸ்தான். இப்போ போனவருஷத்திலே இருந்து அவரும் ஒரு மொபலை வாங்கி வைச்சிட்டுருக்காரு. அதிலே என்ன ஐ.நா சபை செயலாளர்க்கு அறிவுரை எதுவும் சொல்லுவாரு போலே'ன்னு பார்த்தா, பாலண்ணே, சின்னக்கடைதெரு வெண்மணிக்கு வந்துருங்க, டீ சாப்பிடலாம்,'ன்னு தான் மொக்கை போட்டுக்கிட்டு இருக்காரு. எல்லாம் காலம் செய்த கோலமின்னு பாட்டுதானே அங்கன பாடமுடியும்.

போன் மொக்கைனதும் நம்ம சோட்டு பய ஒருத்தன் ஞாபகம் வந்து தொலைக்கிது, பயலுக்கு சோறுதண்ணி எதுவும் வேணாம், சும்மா தொணதொண'னு அதிலே பேசிட்டே இருந்தா போதும் அதிலே பசியாறி தூங்கவும் செஞ்சு தொலைப்பான். நாமெல்லாம் நைட் தூங்குறப்போ என்ன செய்யுவோம், பெட் பக்கத்திலே குடிக்க தண்ணியும், அலாரம் கிளாக்'ம் எடுத்து வைச்சிட்டு தூங்குவோம், இந்த பயப்புள்ள மொபலை சார்ஜ் போட்டுட்டு, அதிலே கார்ட்-லெஸ்'ஐ எடுத்து காதிலே மாட்டிக்கிட்டு யாருக்காவது மிஸ்டு கால் கொடுத்து தொலைப்பான். மிஸ்டு கால் கொடுத்த பல பேருலே ஒருத்தன் இவனுக்கு கால் பண்ணா போதும், அவனுக்கு பிடிச்சது வினை. இந்த வெளக்கெண்ணே தூங்குறவரைக்கும் அந்த எதிராளி பேசனும், அவன் எதாவது சொல்லி கட் பண்ண போதும், டேய் டேய் இருடா, இன்னிக்கு எங்க ஆபிஸிலே ஒரு ஃபிகரு, கலருன்னு அவனை உசுப்பேத்தி விட்டு இது நல்லா குளிரு காயும், கடைசியா தூக்கம் வந்ததும் ஒன்கிட்டே ஏதோ ஒன்னு சொல்லனுமின்னு நினைச்சிட்டு இருந்தேன், தூக்கம் வேற வருது சரியா ஞாபகம் வரமாடேங்கிது, கோவிச்சிக்காமே நாளைக்கு காலையிலே போன் பண்ணுறீயா'னு பிட்ட போட்டு தூங்கிருவான். ஒனக்கு எப்பிடிடா இதெல்லாம் தெரியுமின்னு கேட்கிறீங்க ? எம்புட்டு கேள்விதான் கேப்பீங்களோ? ஹிம் டெய்லி அவரு பள்ளி கொள்றோப்போ போன் பண்ணுற கேனை நாந்தான். அவனும் பேசிட்டுதான் இருக்கான். அவன் ஆபிஸ் ஃபிகரை தான் இண்ட்ரோ பண்ணி விடமாட்டேன்கிறான்..........

77 comments:

said...

//அவன் ஆபிஸ் ஃபிகரை தான் இண்ட்ரோ பண்ணி விடமாட்டேன்கிறான்..........//

அண்ணே..அந்த ஆபிஸையாவது விட்டு வைங்கண்ணே :))

said...

அடச் சை. செம மொக்கைப்பா.

said...

//அண்ணே..அந்த ஆபிஸையாவது விட்டு வைங்கண்ணே :))//
ஆமாமா, கப்பிக்கு ஒன்னு இரண்டாவது கிடைக்கட்டும், மானாவாரியா நீங்களே சாகுபடி பண்ணிட்டா மத்தவங்க என்ன பண்ணுவாங்களாம்?

said...

//அப்பிடியெல்லாம் பச்சப்புள்ளய நக்கல் பண்ணப்பிடாது.//
யாரு, ராம். பச்சை புள்ளையா? புளுகுற புளுகுல நாட்டுல மழை வராம போயிரப்போவுது. வாயில விரல வெச்சா கடிக்க தெரியாதாம். அது தெரிஞ்சா என்னா தெரியாட்டி என்ன. வெவரமா மத்தது எல்லாம் தெரியுமே...

said...

/அண்ணே..அந்த ஆபிஸையாவது விட்டு வைங்கண்ணே :))//

ஏய்யா நீ வேற வயித்தெறிச்சலை கொட்டிக்கிறே??? :(

said...

/ILA(a)இளா said...

அடச் சை. செம மொக்கைப்பா.//

விவாஜி,

நாங்களே சொல்லிட்டோம்'லே... அப்புறம் என்ன கன்பர்மேஷன் வேர்ட்.. :))

said...

//ஆமாமா, கப்பிக்கு ஒன்னு இரண்டாவது கிடைக்கட்டும், மானாவாரியா நீங்களே சாகுபடி பண்ணிட்டா மத்தவங்க என்ன பண்ணுவாங்களாம்?/

ஆமா..இத சொல்றது விவாஜி!!! என்ன கொடுமை சரவணன் இது :((

said...

ஆவி அண்ணாச்சிகிட்ட டிஸ்கஸ் பண்ணி என் பேரை நான் மாத்தி வச்சிக்கறேன்

said...

/ஆமாமா, கப்பிக்கு ஒன்னு இரண்டாவது கிடைக்கட்டும், மானாவாரியா நீங்களே சாகுபடி பண்ணிட்டா மத்தவங்க என்ன பண்ணுவாங்களாம்?//

ஆஆஆ இந்த ஸ்டேட்மெண்ட் விடுறது யாருப்பா??? பினட்ஸ் பார்மர் விவாஜியா.... :))

said...

டேய் எல்லாத்தையும் ஏன்டா என் பேர்லயே எழுதற? கொஞ்சம் உண்மையும் சொல்லு!!

said...

//ஒனக்கு எப்பிடிடா இதெல்லாம் தெரியுமின்னு கேட்கிறீங்க ?//

கேட்காமலே இவ்வளவு மொக்கை...கேட்டா என்னென்னா ஆகுமோ

said...

/யாரு, ராம். பச்சை புள்ளையா? புளுகுற புளுகுல நாட்டுல மழை வராம போயிரப்போவுது. வாயில விரல வெச்சா கடிக்க தெரியாதாம். அது தெரிஞ்சா என்னா தெரியாட்டி என்ன. வெவரமா மத்தது எல்லாம் தெரியுமே...//

இதிலே எதுவும் வெவகாரமான அர்த்தம் இருக்கா??? :(

said...

இந்த பதிவை படிச்சு எனக்கு பசியே போயிடுச்சு!!

said...

/
ஆமா..இத சொல்றது விவாஜி!!! என்ன கொடுமை சரவணன் இது :((//

கப்பி,

அதுதானே தான் நானும் சொல்லாமின்னு இருந்தேன்......... :))

கிரேட் மேன் திங்ஸ் அலைக்.........
அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

// குட்டிசாத்தான் said...

ஆவி அண்ணாச்சிகிட்ட டிஸ்கஸ் பண்ணி என் பேரை நான் மாத்தி வச்சிக்கறேன//

ஹிம் செல்போன்'னு வைச்சிக்கோ.... :))

said...

/ போன் செய்யும் நண்பன் said...

டேய் எல்லாத்தையும் ஏன்டா என் பேர்லயே எழுதற? கொஞ்சம் உண்மையும் சொல்லு!!//


சொ.செ.சூ'லாம் அடிக்கடி வைச்சிக்கமுடியாது தோஸ்த்.... :)

said...

/ கேள்வி கேட்காதவன் said...

//ஒனக்கு எப்பிடிடா இதெல்லாம் தெரியுமின்னு கேட்கிறீங்க ?//

கேட்காமலே இவ்வளவு மொக்கை...கேட்டா என்னென்னா ஆகுமோ/


அவ்வ்வ்வ்வ்வ்வ்....... நமக்கும் மொக்கை போடத் தெரியுமின்னு இந்த ஊரு உலகத்தை நம்ப வைக்க வேணாமா?? :))

said...

கருத்து கந்தசாமிகளா வாங்க!! வாங்க!!! ஒங்க கருத்துக்களை அள்ளி தெளிங்க..... :)
///


"குட்டி சாத்தான் தொல்லை தாங்கலை"


என்னைய சொல்லலையே.. :)

said...

ஆஹா இன்னைக்கு இங்கதான் :)

said...

ஆமா நீங்க வயலு
நாங்க விதை நெல்லு வைச்சிகிட்டு

தெளிக்க காத்து கிடக்குறோம்

வந்து "கடலை" அறுவடை பண்ணுங்க

said...

/ சாப்பிட போனவன் said...

இந்த பதிவை படிச்சு எனக்கு பசியே போயிடுச்சு!!//

அம்புட்டு நிறைவா'வா இருக்கு.... :))

said...

பதிவை படிக்கனுமா..?

said...

/"குட்டி சாத்தான் தொல்லை தாங்கலை"


என்னைய சொல்லலையே.. :)//

ஆஹா.... வாய்யா எலும்புக்கூடு.... ரொம்ப நாளா இங்கன வந்து கையிலே தீயை கொளுத்தி காட்டாமே இருக்கீயேன்னு நினைச்சேன்....
:))

said...

இராம்/Raam said...
/ சாப்பிட போனவன் said...

இந்த பதிவை படிச்சு எனக்கு பசியே போயிடுச்சு!!//

அம்புட்டு நிறைவா'வா இருக்கு.... :))
//

பேதியில வயத்தை கலக்கி கலக்கி போயிகிட்டேடேடே இருக்கு..

said...

பாவனா பதிவு போடுவீங்க அப்ப்டியே கும்மி அடிக்கலாம் என்று வந்தேன்


ஆனா இன்னும் பதிவை படிக்கலை

பாவனா போட்டோ இருக்கா :)

said...

/சும்மா அதிருதுல said...

பதிவை படிக்கனுமா..?/


ஏலேய்,

நீயும் ஒரு காலத்திலே பதிவு போடுவே'லே.... அப்போ இதையே வந்து நாங்களும் கேட்கிறோம்... :)

said...

ஏலேய்,

நீயும் ஒரு காலத்திலே பதிவு போடுவே'லே.... அப்போ இதையே வந்து நாங்களும் கேட்கிறோம்... :)

//

நான் படிக்கிற மாதிரி பதிவே போடமாட்டேன்


பார்க்கலாம் ரசிக்கலாம் அம்புட்டுதான்

ஒண்லி போட்டோஸ்

ஹி ஹி

said...

குட்டிச்சாத்தான்னா என்னான்னு இன்னவரைக்கும் நாமெல்லாம் கண்ணாலே பார்த்தது இல்லலே...
//

நாங்களும் உங்களை பாத்ததேஇல்லை

அவ்வ்வ்வ்

said...

நாங்கெல்லாம் ஒன்னோட போட்டோ பார்த்துட்டோமின்னு சொல்லி சிரிக்கிறது தெரியுது
/


தெரிஞ்சுடுச்சா சத்தமா சிரிச்சிடேனா


அவ்வ்வ்வ்

said...

நான் பச்சை சட்டைதான் போட்டுருக்கேன். வருசா வருசம் வர்ற வாலெண்டெஸ் டே'க்கு போட்டும் பார்த்தாச்சு, ஒன்னும் நடத்தமாதிரி இல்ல

//


சட்டை மட்டும் போட்டா பத்தாது

பர்ஸும் கனமா இருக்கனும்

ம் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் இன்னும் பய புள்ளைவோ திருந்துற மாதிரி இல்லை

said...

aazndha karuthukaL arumaiyaana nadai
:-)

said...

Appuramaa padichittu vandhu pinootaren

said...

Nalla padhivu

said...

//
சட்டை மட்டும் போட்டா பத்தாது

பர்ஸும் கனமா இருக்கனும்
//

'thala' Kettukkappa

said...

ஒன்னும் நடத்தமாதிரி இல்ல, இன்னிக்கு பச்சைச்சட்டை போட்டு என்னத்த ஆகப்போகுது
//

நீங்க கலங்குவதை பார்த்தால்

பாரதி வருத்த படுவாரு

"தனி மனிதனுக்கு பிகருயில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"

said...

அவன் ஆபிஸ் ஃபிகரை தான் இண்ட்ரோ பண்ணி விடமாட்டேன்கிறான்..........


///

உங்களை தான் சாலமன் பாப்பையா தேடிகிட்டு இருக்காரு

said...

உங்களை தான் சாலமன் பாப்பையா தேடிகிட்டு இருக்காரு
//

எவடி அவ எங்க மாமாவை வம்புக்கு இழுப்பது

மாமா இச் இச் இச்

said...

எவடி அவ எங்க மாமாவை வம்புக்கு இழுப்பது

மாமா இச் இச் இச்

//

பப்ளிக் பிளேஸில் இப்படி பண்ணபிடாது

வீட்டுக்கு கூட்டி போயி வைச்சிக அக்கா !!

said...

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா நாராயணா

said...

ஏ சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டினவன் தாங்க மாட்டான் மொக்கையதாண்டி

said...

\\கப்பி பய said...
//அவன் ஆபிஸ் ஃபிகரை தான் இண்ட்ரோ பண்ணி விடமாட்டேன்கிறான்..........//

அண்ணே..அந்த ஆபிஸையாவது விட்டு வைங்கண்ணே :))\\

:-)))))))))))))))))))))

said...

என்ன கொடுமை சாமி இது..??

said...

இந்த வார கலக்கல் பின்னுட்டம்

பச்சை சட்டை போட்டா மட்டும் போதாது

பர்ஸ்ஸு "கன"மாயிக்கனும்


சும்மா அதுருதில வாழ்த்துகள்

said...

//பாவனா பதிவு போடுவீங்க அப்ப்டியே கும்மி அடிக்கலாம் என்று வந்தேன்


ஆனா இன்னும் பதிவை படிக்கலை

பாவனா போட்டோ இருக்கா :)//

ஹி ஹி.... பாவனா போட்டோ போட்டு இன்னொரு மொக்கை போட்டுருவோம்... :))

said...

//சட்டை மட்டும் போட்டா பத்தாது

பர்ஸும் கனமா இருக்கனும்

ம் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் இன்னும் பய புள்ளைவோ திருந்துற மாதிரி இல்லை//


சூப்பரு'ய்யா..... :)))

சத்தம் போட்டு சிரிக்க வைச்சிட்டே ராசா.... :)

said...

//மங்களூர் சிவா said...

aazndha karuthukaL arumaiyaana nadai
:-)/

ஆஹா அபிஅப்பா வாரிசு.... :))

said...

/நீங்க கலங்குவதை பார்த்தால்

பாரதி வருத்த படுவாரு

"தனி மனிதனுக்கு பிகருயில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"//

அவ்வ்வ்வ்வ்வ்.... எப்பிடி ராசா இப்பிடியெல்லாம்??? :))

said...

// பன்னிக்குட்டி ராமசாமி said...

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா நாராயணா/

போன் வயரு பிஞ்சிப்போயி பத்து நாளாகுது..... :))

ஏலேய் எவன்ய்யா இப்பிடியெல்லாம் கமெண்ட் போடுறது, கொசு ஆராய்ச்சியாளர் புலி தான் பதிவு போட்டுருக்காரு'லே... அங்கன போய்யா ப.கு. ராமசாமி... :)

said...

// கோபிநாத் said...

\\கப்பி பய said...
//அவன் ஆபிஸ் ஃபிகரை தான் இண்ட்ரோ பண்ணி விடமாட்டேன்கிறான்..........//

அண்ணே..அந்த ஆபிஸையாவது விட்டு வைங்கண்ணே :))\\

:-)))))))))))))))))))))/

ஏலேய் கோபி, ஒனக்கு தெரிஞ்சது ரீப்பிட்டேய் இல்லன்னா இந்தமாதிரி இழுவை ஸ்மைலி போடுறதுதானா???

said...

ஏலேய் எவன்ய்யா இப்பிடியெல்லாம் கமெண்ட் போடுறது, கொசு ஆராய்ச்சியாளர் புலி தான் பதிவு போட்டுருக்காரு'லே... அங்கன போய்யா ப.கு. ராமசாமி... :)
//

தல நீங்க ரெடியா அங்க போயி இதே மாதிரி போட்டு வெறுப்பேத்துவோம்

வாங்க வாங்க


ஹய்யா 50 போட்டாச்சி

said...

எனது கமாண்டுக்கு நன்றி சொல்லாத சின்ன தலையை துண்டிப்போம்

said...

/தல நீங்க ரெடியா அங்க போயி இதே மாதிரி போட்டு வெறுப்பேத்துவோம்

வாங்க வாங்க


ஹய்யா 50 போட்டாச்சி//

மின்னலு நன்றி.... :)

said...

பரவை முனியம்மா said...
எனது கமாண்டுக்கு நன்றி சொல்லாத சின்ன தலையை துண்டிப்போம்
//

தைரியம் இருந்தா
கைய்ய வச்சி பாரு

தலய சுத்தி தானா வந்த கூட்டம்

(ஏலேய் எங்கடா போயிட்டீங்க)

said...

// பரவை முனியம்மா said...

எனது கமாண்டுக்கு நன்றி சொல்லாத சின்ன தலையை துண்டிப்போம்//

ஹிக்க்கும் ஒரே பாட்டே திரும்ப திரும்ப பாடிக்கிட்டே இருந்தா??? லேட்டஸ்ட் பாட்டு பாடு அப்பத்தா.. :)

said...

50 போட்ட மின்னலுக்கு நான் என்னையே தருகிறேன்

அவ்வ்வ்வ்வ்வ்

said...

பாவனா said...
50 போட்ட மின்னலுக்கு நான் என்னையே தருகிறேன்

அவ்வ்வ்வ்வ்வ்
//

ஐய்யயோ ஐய்யயோ தம்பி பாத்தா தூக்குல தொங்கிடுவானே

அவ்வ்வ்வ்

said...

பாவனா said...
50 போட்ட மின்னலுக்கு நான் என்னையே தருகிறேன்

அவ்வ்வ்வ்வ்வ்
///

என் மேல அம்புட்டு பாசமா பாவனா

said...

/தைரியம் இருந்தா
கைய்ய வச்சி பாரு

தலய சுத்தி தானா வந்த கூட்டம்

(ஏலேய் எங்கடா போயிட்டீங்க)//

மின்னலு,

எதுக்கு வீண் ஜம்ப கூவல்??? :(((

said...

/ பாவனா said...

50 போட்ட மின்னலுக்கு நான் என்னையே தருகிறேன்

அவ்வ்வ்வ்வ்வ்//

என்னா இது???? கேட்கவே கேவலமா இருக்கு... ;-)

said...

ஹிக்க்கும் ஒரே பாட்டே திரும்ப திரும்ப பாடிக்கிட்டே இருந்தா??? லேட்டஸ்ட் பாட்டு பாடு அப்பத்தா.. :)//

ஐ லவ்யூ லவ்யூ சொன்னாலே
உள்ளத்தை அள்ளி ராமு கையில் தந்தாளே...

said...

உண்மை உலகநாதன் said...
//அப்பிடியெல்லாம் பச்சப்புள்ளய நக்கல் பண்ணப்பிடாது.//
யாரு, ராம். பச்சை புள்ளையா? புளுகுற புளுகுல நாட்டுல மழை வராம போயிரப்போவுது. வாயில விரல வெச்சா கடிக்க தெரியாதாம். அது தெரிஞ்சா என்னா தெரியாட்டி என்ன. வெவரமா மத்தது எல்லாம் தெரியுமே...
//


நாலும் கற்று "கொல்வது" தப்பா
இம்புட்டு பிளீங்ஸ் எதுக்கு..?

said...

/நாலும் கற்று "கொல்வது" தப்பா
இம்புட்டு பிளீங்ஸ் எதுக்கு..?/

மின்னலு,

ஒன்னயதாய்யா மொதல்ல கொல்லனும்... :)

said...

அதர் ஆப்சன்'லே அபிஅப்பா வந்துட்டு போற மர்மம் என்ன???

said...

சூப்பரா நீங்களும் கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களே. கருத்து கந்தசாமி நீங்கதானா?

"கருத்து கந்தசாமிகளா வாங்க!! வாங்க!!!"

said...

:-)))))

said...

Mokkai superaavae irukku anna:)

said...

\:அதிலே என்ன ஐ.நா சபை செயலாளர்க்கு அறிவுரை எதுவும் சொல்லுவாரு போலே'ன்னு பார்த்தா, பாலண்ணே, சின்னக்கடைதெரு வெண்மணிக்கு வந்துருங்க, டீ சாப்பிடலாம்,'ன்னு தான் மொக்கை போட்டுக்கிட்டு இருக்காரு. எல்லாம் காலம் செய்த கோலமின்னு பாட்டுதானே அங்கன பாடமுடியும்.\"

ROTFL...hillarious post Raam.
உங்க அப்பாவையும் கலாய்ச்சிட்டீங்க,

ரொம்ப தமாஷா இருந்தது அந்த ராத்திரி நேர செல் ஃபோன் நண்பனின் தொல்லை.

அருமையான மொக்கை, ரசித்தேன்.

said...

இந்த பதிவு படிக்கறச்சே எனக்கு ஜி3 நியாபகம் வரலே வரலே வரவே இல்லே! :))

said...

நீங்க முதல்ல உங்க ஆபிஸ் பிகரகளை இண்ட்ரோ கொடுக்கனும்... அப்பால உங்களுக்கு யாரும் கொடுக்காட்டி சொல்லுங்க.. நியாயம் கேட்போம்...

கப்பிய பெங்களுர்க்கு டிக்கெட் போட சொல்லவா? ;)

said...

//சூப்பரா நீங்களும் கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களே. கருத்து கந்தசாமி நீங்கதானா?

"கருத்து கந்தசாமிகளா வாங்க!! வாங்க!!!"//

MM2,

என்னா இது? பதிவை படிச்சி கருத்து சொல்லுன்னா, பின்னூட்ட பெட்டி மேலிருக்கிற படிச்சி என்னத்தயோ சொல்லிட்டு இருக்கே? :@

said...

//CVR said...

:-)))))//

:-))))))

எக்ஸ்டரா ஒரு ) போட்டாச்சு...

said...

/ Raji said...

Mokkai superaavae irukku anna:)//

ஹி ஹி டாங்கீஸ் ஜிஸ்டர்... :)

said...

//ROTFL...hillarious post Raam.
உங்க அப்பாவையும் கலாய்ச்சிட்டீங்க,//


ஹி ஹி யாரையும் பாரபட்சமெல்லாம் பார்க்கிறது இல்லை திவ்யா... :)

//ரொம்ப தமாஷா இருந்தது அந்த ராத்திரி நேர செல் ஃபோன் நண்பனின் தொல்லை.

அருமையான மொக்கை, ரசித்தேன்.//


டாங்கீஸ்... :)

said...

//காயத்ரி said...

இந்த பதிவு படிக்கறச்சே எனக்கு ஜி3 நியாபகம் வரலே வரலே வரவே இல்லே! :))//

கவிதாயினி,


ஏனிந்த வேலை??? நீங்க சொல்லாமே இருந்திருந்தா பல பேரு ஞாபகம் வந்துருக்கும், இப்போ எல்லாருக்கும் சொர்ணக்கா ஞாபகந்தான் வரப்போகுது... ;)

said...

//நாகை சிவா said...

நீங்க முதல்ல உங்க ஆபிஸ் பிகரகளை இண்ட்ரோ கொடுக்கனும்... அப்பால உங்களுக்கு யாரும் கொடுக்காட்டி சொல்லுங்க.. நியாயம் கேட்போம்...//


புலி,

எங்க ஆபிஸிலே ஃபிகரா.... ஏய்யா வயத்தெறிச்சலை கிளப்புறே??? :((

// கப்பிய பெங்களுர்க்கு டிக்கெட் போட சொல்லவா? ;)//

எதுக்கு எல்லாரும் அவன் பின்னவே போகுறதுக்கா???? ஏய்யா ஒனக்கு இந்த கொலைவெறி??

said...

Raam.. antha payala enakkum theriyumaa?? aanaalum antha paya pullaiya ippadi post pottu ottirukka koodaathu... :)))

said...

//ஜி said...

Raam.. antha payala enakkum theriyumaa?? //

நமக்கு தெரிஞ்ச பயபுள்ள'தான் அது..... :)


//aanaalum antha paya pullaiya ippadi post pottu ottirukka koodaathu... :)))//

ஹிம், ஒனக்கும் இருக்குடி ஒருநாளு..... :)