Friday, August 15, 2008

அய்யனார் துணையோடு போட்டிக்காக....

SLR கேமிரா வாங்கி வைச்சு சாம்பிராணி போடாத குறையாக சும்மா கெடந்துட்டே இருக்கு, உருப்படியா நாலு போட்டோ எடுத்து Filckr'லே போடலாமின்னு பார்த்தா கிடைக்கிற டைம்'ஐ உபயோகப்படுத்த தெரியல.

அதுதான் கடைசி நேரத்திலே போட்டிக்காக அய்யனார் துணையோடு போட்டிகளத்திலே குதிச்சாச்சு.

திருகோஷ்டியூர்-பட்டமங்கலம் ரோட்டிலே போனவாரம் ஞாயித்துக்கிழமை எடுத்தது. கேமரா'வே எடுத்ததும் அந்த ஊரு பெருசு சவுண்ட் விட்டுச்சு, வேற என்ன பண்ண ? வண்டியை பின்னாடி எடுத்துட்டு போயி 200MM லென்ஸ் போட்டு எடுத்தது.

நல்லா வந்துருக்குன்னு'கிற நம்பிக்கையிலே இந்த மாதத்து போட்டிக்கு...

அய்யனார்

இது இங்கன பெங்களூரூலே innovative multicity'ன்னு Hollywood studio மாதிரி பெரிய Theme park ஓப்பன் பண்ணியிருக்காங்க, அந்த வாசலிலே எடுத்தது.




என்னோட அக்கா பையன் வினித் குமார், செம சார்ப் கண்கள், இவனை 20 வருசம் மாடல்'ஆ காண்ட்ரெக்ட் பேப்பர்'லே சைன் வாங்கியிருக்கேன்... :)

Innocent Expression


ஏதோ டிரை பண்ணினது...

Glittering Gold Clock

Film City Entertainer.

Theme park Entertainer

பெங்களூரூ லால்பார்க் Glass house:-

Bangalore Lalbagh Glass house


அனைத்து படங்களும் என்னுடைய ஆஸ்தான குரு CVR அவர்களுக்கு சமர்பணம்.... :)

14 comments:

நாதஸ் said...

மீ த பர்ஸ்டு ?
வாழ்த்துக்கள் அண்ணாச்சி !!!

இலவசக்கொத்தனார் said...

முதலிரண்டு போட்டோக்களில் ஷார்ப்னெஸ் இல்லையே. வேண்டுமென்றே அப்படி பினிஷிங் செய்ததா?

ஜியா said...

All the bestu Raam... kalakkunga :)))

இராம்/Raam said...

நாதாஸ்,

அண்ணே, நன்றி'ண்ணே.... :)


கொத்ஸ்,


நீங்க சொல்லுற Sharpness எதுன்னு எனக்கு தெரியல! இந்த ரெண்டு படங்களிலே Subject orientations 'க்காக Try பண்ணினது,
அய்யனார் படத்திலே நிறைய Distraction's இருந்தும், அய்யனார், குதிரையும் தனியா தெரியும்,

இந்த லிங்க்'லே பாருங்க.... :) Width & height components இல்லாமே நல்லாயிருக்கும்... :)

ஜியா,


எல்லாம் ஒன்னோட ஆசி'லே தான்... :)

Anonymous said...

nallaa irukku thala


vetikuNdu
murukeesan 1

CVR said...

ப்ளிக்கரில் இருந்து தொகுக்கப்பட்டிருக்கும் படங்கள் தெளிவாகத்தான் இருக்கின்றன.
அய்யனார் படம் பிக்காசாவில் இருந்து தொடுக்கப்பட்டிருக்கிறது,அதுவும் S400.
http://3.bp.blogspot.com/_dVgXs5npxd8/SKXBXeymoPI/AAAAAAAAB-s/n9sZe5pxy2g/s400/ayyanar1.jpg

S1600 முயற்சித்து பாருங்கள்,அல்லது ப்ளிக்கரில் இருந்து தொடுப்பு குடுத்து பாருங்கள்..

இதை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..
:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கடிகாரம் ஹாக்கி பேட் மாதிரி இருந்ததே அது பிடிச்சது..வாழ்த்துகள்.

MyFriend said...

மூன்றாவது படம் மிகமிக அழகாய் இருக்கிறது. மத்ததும் நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள். :-)

இராம்/Raam said...

வெடிகுண்டு முருகேசன்,

நன்றிண்ணே,


குரு,


நீங்க சொன்னததும்தான் கவனிச்சேன், நைட் 12 மணி ஆனதுனாலே சரியாக்கூட செக் பண்ணாமே விட்டுட்டேன், இப்போ சரி பண்ணியாச்சு, பாருங்க.... :)

முத்துக்கா,

நன்னி, அந்த படம் Film City'லே எடுத்தது, தங்கத்திலே செஞ்சதாம், விலை கேட்டு மயக்கம் போட்டு விழுந்து எந்திரிச்சு எடுத்த போட்டோ அது.... :)

Anonymous said...

Golf Ball படம் சூப்பரோ சூப்பரு
வெற்றிபெச வாழ்த்துக்கள்.
சுபாஷ்

ராமலக்ஷ்மி said...

அய்யனார் அருள் புரிவாராக. வாழ்த்துக்கள்.

மயக்கம் போட்டு விழுந்தெழுந்திருச்சு எடுத்த படம்தான் ரொம்ப மயக்குது:)!

இராம்/Raam said...

சுபாஷ்,


வளரே நன்னி... :)


// ராமலக்ஷ்மி said...

அய்யனார் அருள் புரிவாராக. வாழ்த்துக்கள்.

மயக்கம் போட்டு விழுந்தெழுந்திருச்சு எடுத்த படம்தான் ரொம்ப மயக்குது:)!//

நன்றி நன்றி... :)))

கப்பி | Kappi said...

படங்கள் அட்டகாசம்!!
வாழ்த்துக்கள்ண்ணே!!

திவாண்ணா said...

என்ன ராம், பையன் கான்ட்ராக்ட்ல கைநாட்டு வெச்சுட்டு வாய்ல விரல் போட்டுகிட்டானா?

நல்ல படங்கள். நானும் மேக்ரோல எறும்பை எடுத்தேன். சைட்லேந்து இல்லை. மேலேந்து. கிட்ட போனா லைட் போயிடுது. சைட்ல போனா போகஸ் வரலை. லைட் ரிங்க் போட்டுக்கன்னு ஜீவா சொல்றாரு.