Thursday, June 29, 2006

தைத்த கவிதைகள் சில

புத்தகம் படித்தல் என்பது நம்மைப்போன்ற பலருக்கும் பிடித்தமான ஒன்று இல்லையா.சில புத்தகத்தின் பக்கங்கள் சில சமயம் நம்மை பாதித்து அதை
நினைவில் நிறுத்தும்படியும் செய்து விடும்.உதாரணத்திற்க்கு பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது பூங்குழலி தன் காதலர்கள் எனக்கூறி வந்தியதேவனிடம் கொள்ளிவாய் பிசாசுகளை காட்டும் பகுதியில் பயந்தே
போனேன்.அதே மாதிரி கடல்புறா வாசித்தப்போது அநாபயசோழனின் தீர்ப்புக்காக நீதிமன்றகாட்சியில் காஞ்சனாதேவி வில்லில் நாண் ஏற்றி
இளையபல்லவனுடன் தோன்றுவது அப்படியே என் கண்ணில் திரைகாட்சியாக விரிந்தது.
நான் கோவில் செல்லும் பொழுதுகளில் சிலசமயம் காசிஆனந்தனின் நறுக்குகள் நினைவில் வரும்.சில எழுத்துக்கள் ஒருவகையில் அனைவரையும் பாதிக்கும் என்பதில் மாற்று கருத்துகள் இல்லை என நினைக்கிறேன்.

அதுபோல் காம உணர்வுகளை அடிப்படையாக கொண்டு நா.மகுடேஸ்வரனின் காமகடும்புனல் நூலில் என் மனதை தைத்தவைகளில் சில இவை.


உடுப்புகள் கிழித்து
உறுப்புகள் கிள்ளிக்கீறி
மானபங்கப்படுத்தினான்
'உன்தாயாருடையதைப்
போலிருந்ததா'என்றாள்
மானபங்கப்பட்டவள்.


'முறையல்லாதன செய்கிறாய்...
சொன்னால் கேள்அண்ணா....'
கண்ணீர் மல்கப் பேசு தோழி
உன்னை வன்புணரவந்தவன்
திகைத்து நிற்கட்டும்.


இப்பொழுதுதெரிகிறது
பிரம்மச்சாரியம்
கடும்நோன்பு
முதிர்கன்னிமை
கொடிய பட்டினி

ஆணின் வாழ்வோட்டத்தில்
நிச்சயம் ஒளிந்திருக்கிறாள்
இன்னொருத்தி
தாயல்லாத
தாரமல்லாத
சகோதரியல்லாத
மகள்லத்தாத
பரஸ்திரி

மரணப்படுக்கையில் இருப்பவரின்
ஞாபகத்திலாடும்
கடைசி முகங்களிலன்று
ஒரு வேசியினூடதாக
இருக்கலாம்.



என்னெய அடீங்கொ
கொல்லுங்கொ
கண்டதுண்டமொ வெட்டிப்போடுங்கொ
காவலுக்கு ஆள் போடுங்கொ
நீங்கொ பாத்து வெச்சிருக்கிறே
மாப்புள்ளைக்கெ என்னெக் கட்டி வெய்யுங்கொ
கட்டிக்கெறென்.
அவனுக்கு புள்ளெ பெத்துத்தரச்சொல்லுங்கொ
பெத்துக்கெறென்
ஆனா
என்னிக்காவது ஒரு நா
எங்கெய்யாவது ஒரு வாட்டி
அவரு வந்து 'வா போயர்றலாம்'னு
கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ
என்றெ அப்பன் மேலே சந்தியாமச் சொல்றென்
போட்டெதும் போட்டபெடி கெடக்கெ
அப்பிடியெ அவருகூடப்போயிர்ருவென்....ஆமா....


தலைப்பிற்கும் என்னை இந்தலைப்பில் எழுதத்தூண்டிய முகமூடிக்கு நன்றி

15 comments:

said...

தைத்த கவிதைகள் கந்த அமிலம் போல் கண்களைச் சுடுகிறது ... தைத்த கவிதை ... வக்ரங்களை (பு)தைக்கும் கவிதை

said...

கண்ணன் புத்தகத்தை வாங்கி முழுவதையும் வாசித்து பாருங்களேன்.

said...

ராம் கவிதைகள் அனைத்தும் அருமை....அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

said...

நிஜமாகவே மனதைத் தைக்கும் வரிகள்தாம் இவை!

said...

வணக்கம் சிபியண்ணே..
இன்னும் சில கவிதைகள் இருக்கு அதில.ஆனா அதை உங்களுக்கு தனிமடல் அனுப்புறேன்.

said...

//ஆணின் வாழ்வோட்டத்தில்
நிச்சயம் ஒளிந்திருக்கிறாள்
இன்னொருத்தி
தாயல்லாத
தாரமல்லாத
சகோதரியல்லாத
மகள்லத்தாத
பரஸ்திரி
//
அதென்ன ஆணுக்கு மட்டும் ஸ்பெஷல்??

said...

//ராம் கவிதைகள் அனைத்தும் அருமை....அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... //

வாங்க குமரன்,

காமகடும்புனல் நீயூ செஞ்சூரி புத்தக கடையில் கிடைக்கும்.தமிழினி பதிப்பகத்தின் வெளியிடு என நினைகிறேன்.

said...

//அதென்ன ஆணுக்கு மட்டும் ஸ்பெஷல்?? //

எனக்கு தெரியலை பொன்ஸ்,சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகுடேசுவரனிடம் கேட்டு பார்க்கிறேன்.... :-)

said...

//வணக்கம் சிபியண்ணே..
இன்னும் சில கவிதைகள் இருக்கு அதில.ஆனா அதை உங்களுக்கு தனிமடல் அனுப்புறேன்.//

நிச்சயமா அனுப்புங்க ராம்ஸ் தம்பி!

மிக்க நன்றி!

said...

ராம் அருமையான தொகுப்பை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி :)

//உன்னை வன்புணரவந்தவன்
திகைத்து நிற்கட்டும்.//

சரியான சொற்களை உபயோகப்படுத்தியுள்ளார் மகுடேஸ்வரன் .
கற்பழிப்பு என்ற ஆண்தனமான சொல் முற்றிலும் தவறு வன்புணர்ச்சி என்றே சொல்லவேண்டும்!

said...

//ராம் அருமையான தொகுப்பை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி :)//

அடடே வாங்க வாங்க நவின்.உங்களின் பின் எப்படி பார்ப்பதாம்? கவிதைகளை திரும்ப திரும்ப படிக்கிறேன் மனதிலும் நிறுத்துகிறேன்.

said...

நெஞ்சை தைக்கும் கவிதைகள் அனைத்தும்

பகிர்தலுக்கு நன்றி ராம்!

நானும் மகுடேஸ்வர்னின் இக்கவிதைத் தொகுப்ப் வந்ததிலிருந்து சென்னையில் அநேக கடைகளில் தேடிவிட்டேன் கிடைக்கமாட்டேன் என்கிறது :(

said...

//நானும் மகுடேஸ்வர்னின் இக்கவிதைத் தொகுப்ப் வந்ததிலிருந்து சென்னையில் அநேக கடைகளில் தேடிவிட்டேன் கிடைக்கமாட்டேன் என்கிறது :( //

நன்றி ப்ரியன் தங்கள் வருகைக்கு... நீங்கள் பதிவில் இருக்கும் சென்னை தி.நகர் AnyIndian புத்தககடைக்கான தொடுப்பில் வழியே செல்லுங்கள்.அங்கே நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் வாங்கலாம்.

(பி.கு:- தொடுப்பு நா.மகுடேஸ்வரனின் காமகடும்புனல் என உள்ளது)

said...

ரொம்ப கலக்கமான, அதே சமயம், கலக்கலான பதிவு. மனதில் நிற்கிறது. அதுவும் முதல் கவிதையே.

said...

//இன்னும் சில கவிதைகள் இருக்கு அதில.ஆனா அதை உங்களுக்கு தனிமடல் அனுப்புறேன்//
அப்படியே நமக்கு சிசி போட்டு விடுங்கள்.
உள்ளங்களை தைக்கும் கவிதைகள்.