Friday, July 28, 2006

காதலியை காதலிக்கிறவர்களுக்காக



இந்த மாதிரி என்னைபத்தி
கவிதை எழுதிறதுதான் உனக்கு வேலையா
வேற பொழப்பில்லையா என வினவுகிறாய்!
சரிதான் உன்நினைப்புதானடி என்னோட
பொழப்பை கெடுக்கிறது....






உன் வீட்டுக்கு முறைவாசல்
வருகின்றபோது உங்கள்
பகுதி செய்தித்தாள் போடும்
பையனிடம் ஒரு பரஸ்பர ஒப்பந்ததுடன்
தற்காலிகமாய்
அந்த வேலை என்னிடம்...






நீ அனுப்பிய கவிதையை
என் தோழிகள் படித்துவிட்டர்கள்
என கோபத்துடன் வார்த்தைகளாக
கூறுகிறாய்,
ஆனால் உன் கண்களில்
அன்று பொறமைதீ
எரிந்திருக்கும் எனக்கு
தெரியாதா என்னா.....






உனக்காக
காத்திருந்து காத்திருந்து
ரொம்ப கடுப்பா போச்சுடின்னு
பொய் கோபம் வெடிக்கிறது
என்னுள்
அதற்கு நீ கொடுக்கும்
சமாதானமுத்தங்களை
வேண்டி...






திரும்ப திரும்ப
ஒரே மாதிரிதான்
உனக்கு ஒரு வேலையை
செய்ய தெரியுமா என
கேட்கிறாய் விழிக்கிறேன் நான்
உன் கன்னங்களிலிருந்து
என் உதடுகளை
எடுக்கும் பொழுது....






புத்தகத்தை திரும்பவேண்டி
உன் வீட்டிற்க்குள் நுழையும் முன்னே
அண்ணே உங்களுக்கு யார் வேணும்
விளிக்கிறாள் உன் அண்ணன்மகள்
உன்னிடமிருந்து புத்தகத்தை பெற்று
கிளம்பி வாசலடையும் முன்னே
செல்லம் அவரு உனக்கு மாமா
அண்ணன் இல்லையின்னு எனக்கு
மட்டுமே கேட்கும்படி
சத்தமாய் சொல்கிறாய்.....






திபாவளியன்று
பலகாரங்களை சுமந்து
முதன்முறையாக என்இல்லத்தினுள்
பெளர்ணமியென
நுழைகிறாய்...
விடயமாய் வலதுகாலை
முன்வைத்து...






உனக்கு கித்தார்
வாசிக்க தெரியுமாடா..
வினவும் நீ
நான் என்னவென
பதிலளிப்பேன் என
அறிந்தும் வார்த்தைகள்
வரட்டும் என்று
விஷமத்துடன்
என் கண்களை
ஊடுறுவுகிறாய்....






உன் தோழியிடம்
பேசும்பொழுது அவளை
கட்டிபிடிக்கிறாய்
ஹீம் எனக்கு இப்போது
விளங்கின்றது உன்னுடைய
குறிப்பால் உணர்த்தும் தன்மை...







தலைக்கு சிக்கெடுக்கும் பொழுது
உன்னை மாதிரி நல்ல லூசா
இருந்தா என்னா என
என்னை சுட்டிகாட்டி
உலகத்திற்கு தெரியாத
உண்மையை அறிவித்துவிட்டதாக
சிரித்துக்கொள்கிறாய்...

32 comments:

நாமக்கல் சிபி said...

கவிதை நன்றாக இருக்கிறது!
பாராட்டுக்கள்!

இராம்/Raam said...

//கவிதை நன்றாக இருக்கிறது!
பாராட்டுக்கள்! //

ரொம்ப நன்றி சிபியார் அவர்களுக்கு,

Anonymous said...

\\திரும்ப திரும்ப
ஒரே மாதிரிதான்
உனக்கு ஒரு வேலையை
செய்ய தெரியுமா என
கேட்கிறாய் விழிக்கிறேன் நான்
உன் கன்னங்களிலிருந்து
என் உதடுகளை
எடுக்கும் பொழுது....\\


This lines are amazing.... I like very much.

இராம்/Raam said...

//This lines are amazing.... I like very much.//

ஏய் யாருப்பா இது இங்கிலிஸ்'லாம் பேசறது.....?

Anonymous said...

கவிதைகள் அருமை! காதலை அசை போடுகிறீர்களா இல்லை இப்ப தான் ஆரம்பமா.... :-)

Anonymous said...

\\ஏய் யாருப்பா இது இங்கிலிஸ்'லாம் பேசறது.....? \\

I am not appa, I am a girl. Anyway Thanks again.

இராம்/Raam said...

//I am not appa, I am a girl. Anyway Thanks again. //

ஓ அப்படியா. மிக்க நன்றி பெயர் தெரியா தோழி அவர்களுக்கு....

இராம்/Raam said...

//கவிதைகள் அருமை! காதலை அசை போடுகிறீர்களா இல்லை இப்ப தான் ஆரம்பமா.... :-) //

வருகைக்கு நன்றி ஜான். எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்.இந்த கவிதைகளை எழுதினல்லாம் என் நண்பர்களின் அனுபவங்கள்தான். அதை என்னுடைய வரிகளாக மாற்றிக்கொண்டேன்....:-)))

கார்த்திக் பிரபு said...

ada naveen(adhalinaal) than engalai
paaadai paduthukirar endraal ..neengalauma..unmaiyileye solrane romba nal irku sir ungal kavidhaigal..valthukkal

நவீன் ப்ரகாஷ் said...

அட ராம் நீங்களா ?? !!
கவிதைகள் எதார்த்தமாகவும் அழகாகவும் சிணுங்குகின்றன :)

//உனக்காக
காத்திருந்து காத்திருந்து
ரொம்ப கடுப்பா போச்சுடின்னு
பொய் கோபம் வெடிக்கிறது
என்னுள்
அதற்கு நீ கொடுக்கும்
சமாதானமுத்தங்களை
வேண்டி...//

இதழ்'கள்' ! வேண்டுமா? :)

//திரும்ப திரும்ப
ஒரே மாதிரிதான்
உனக்கு ஒரு வேலையை
செய்ய தெரியுமா என
கேட்கிறாய் விழிக்கிறேன் நான்
உன் கன்னங்களிலிருந்து
என் உதடுகளை
எடுக்கும் பொழுது....//

சலிக்காத அலுக்காத கவிதை முத்தங்களைப் போன்றே !

//செல்லம் அவரு உனக்கு மாமா
அண்ணன் இல்லையின்னு எனக்கு
மட்டுமே கேட்கும்படி
சத்தமாய் சொல்கிறாய்.....//

எப்படி ராம் ??:)

அழகான கவிதைகள் வாழ்த்துக்கள் ராம் மேலும் கவியுங்கள் :)

இராம்/Raam said...

//ada naveen(adhalinaal) than engalai
paaadai paduthukirar endraal ..neengalauma..///

வாங்க கார்த்திக்,நவின் எங்கே..நான் எங்கே....? நவினுடைய கவிதைகளுக்கு பக்கமாவது நிற்குமா என்னோட வரிகள். சும்மா அவரோட மாதிரி முயற்சி செய்து பார்த்தேன்.

//unmaiyileye solrane romba nal irku sir ungal kavidhaigal..valthukkal //

அதயும் நல்ல இருக்குனு வேற சொல்லிட்டிங்க.... நன்றி கார்த்திக்

மனதின் ஓசை said...

//காதலியை காதலிக்கிறவர்களுக்காக" //

யாரோட காதலியை?

ரவி said...

ராசா...கெளப்பிட்ட்டீங்க

கதிர் said...

ரொம்ப ஏக்கம் போல? (((:

இராம்/Raam said...

//அட ராம் நீங்களா ?? !!
கவிதைகள் எதார்த்தமாகவும் அழகாகவும் சிணுங்குகின்றன :)//

நவின் மிக்க நன்றி உங்களின் வருகைக்கு,

உங்களிடமிருந்து இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என சத்தியமாக தெரியாது. இனிமேல் உங்களுடைய பாணியை பின்பற்றியே கவிகிறேன்.

கைப்புள்ள said...

//இனிமேல் உங்களுடைய பாணியை பின்பற்றியே கவிகிறேன்//
எதுக்கு? இந்த மாதிரி கவிதை எல்லாம் எழுதி முயற்சி பண்ணி தோத்துப் போன என்னை மாதிரி ஆளுங்களை மேலும் வெறுப்பேத்தவா?
:)

//திபாவளியன்று
பலகாரங்களை சுமந்து
முதன்முறையாக என்இல்லத்தினுள்
பெளர்ணமியென
நுழைகிறாய்...
விடயமாய் வலதுகாலை
முன்வைத்து...//
இது ரொம்ப நல்லாருக்கு. எல்லாம் ஒரு முன்னோட்டம் தான்.

யாருப்பா அங்கே? நல்லா கேட்டுக்கங்க...நவீன் மாதிரி ஜில்ஜில் கவிதை எழுத இன்னொருத்தரு இங்கன கடை போட்டு குந்தியிருக்காரு.
:)

இராம்/Raam said...

//யாரோட காதலியை? //

வாங்க சார் வாங்க...

ஆஹா பெரிய வில்லங்கத்தை உண்டு பண்ணிருவிங்க போல..... :-))))

நான் இந்த ஆட்டத்திற்கு வரலே.... ஜீட்..... :-)

இராம்/Raam said...

//ராசா...கெளப்பிட்ட்டீங்க//

வாங்க ரவி...

என்னா பீதி'யேவா.... :-))))

இராம்/Raam said...

//ரொம்ப ஏக்கம் போல? (((: //

வாங்க தம்பி,

ஏக்கம்தான் ஒரு பொண்ணு கூட சிக்கமாட்டேன்கிது. நான் கவிதைன்னு இதைமாதிரி எதாவது சொல்லிறவேனு பயப்படறாங்க போல..... :-)))))

(மாதர்குலங்கள் மன்னிக்க)

துபாய் ராஜா said...

அன்பு ராம்,அழகான படங்கள்.
அருமையான கவிதைகள்.பதிவுகள்
தொடர வாழ்த்துக்கள்.

இராம்/Raam said...

//இந்த மாதிரி கவிதை எல்லாம் எழுதி முயற்சி பண்ணி தோத்துப் போன என்னை மாதிரி ஆளுங்களை மேலும் வெறுப்பேத்தவா? //

வாங்க தல,
உங்கள போய் நான் வெறுப்பேத்துவனோ.... வேணுமினா கலாய்க்கிறேன்... :-)

அதப்பிடி வ.வா.தலைவரே தன்னைப்பத்தி புகழ்ந்து கவிதை எழுதிக்க முடியும். கவிதையே கவிதை எழுத முடியுமா.... நான் ஒன்னு எழுதுறேன் சீக்கிரம் உங்களப்பத்தியும்....

இராம்/Raam said...

//அன்பு ராம்,அழகான படங்கள்.
அருமையான கவிதைகள்.பதிவுகள்
தொடர வாழ்த்துக்கள். //

வாங்க ராஜா,

நிறைய நன்றிகள் உரித்தாக உங்களின் வருகைக்கு...

Udhayakumar said...

//திரும்ப திரும்ப
ஒரே மாதிரிதான்
உனக்கு ஒரு வேலையை
செய்ய தெரியுமா என
கேட்கிறாய் விழிக்கிறேன் நான்
உன் கன்னங்களிலிருந்து
என் உதடுகளை
எடுக்கும் பொழுது....//

இதெல்லாம் ஓவர்... ஆனாலும் நடந்தா நல்லாத்தான் இருக்கும்...

இராம்/Raam said...

//இதெல்லாம் ஓவர்... ஆனாலும் நடந்தா நல்லாத்தான் இருக்கும்... //


வாங்க உதய்குமார்,

உங்களுக்கும் அவங்களுக்கும் எதாவது பிரச்சினையா என்னா.... :)

கவலையே படாதிங்க நல்லதே நடக்கும்.... :-))))))

Vaa.Manikandan said...

செம டைட்டில் தல :)

Vaa.Manikandan said...

kavithai nallaa illayaannu ketkaathiinga? athuvum nallaa irukku

இராம்/Raam said...

//செம டைட்டில் தல :) //

வாங்க மணிகண்டன்,

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி

Unknown said...

Super :)

நாகை சிவா said...

மாப்பு, எனக்கு ஒன்னுமே புரியல, நானும் தினமும் வந்து படிச்சுட்டு போறேன். ஹுக்கும் விளங்க மாட்டேங்குது.
கவுஜ மட்டும் தான் புரியது.
நான் வரலனு நீ தப்பா எடுக்க கூடாது பாரு. அதான் இந்த பின்னூட்டம். நமக்கு விளக்குற மாதிரி ஒரு பதிவு போடு. வந்து விளையாடுவோம்.

இராம்/Raam said...

//Super :) //


வாங்க தேவ்,
நிறைய நன்றிகள் உங்களின் வருகை மற்றும் பாரட்டுக்களுக்கும்.....

இராம்/Raam said...

//மாப்பு, எனக்கு ஒன்னுமே புரியல, நானும் தினமும் வந்து படிச்சுட்டு போறேன். ஹுக்கும் விளங்க மாட்டேங்குது.//

என்னா சிவா இப்பிடி சொல்லிப்புட்டே...? ஒன்னும் விளக்கமாட்டேன்கிறதா....? சுத்தமா வார்த்தை விளக்கறமாதிரி கைப்பு பத்தி வீரதீரகவிதை எழுதிறேன்...!!!

//கவுஜ மட்டும் தான் புரியது.//

அட அதாவது புரிஞ்சதா....!

//நான் வரலனு நீ தப்பா எடுக்க கூடாது பாரு. அதான் இந்த பின்னூட்டம்.//

இதுக்காக ஒரு மிகபெரிய நன்றிபாரட்டுகள் உனக்கு. ---/\---

//நமக்கு விளக்குற மாதிரி ஒரு பதிவு போடு. வந்து விளையாடுவோம். //

அடுத்ததா தல கைப்பூவின் வீரதீர காவியம் கவிதையாய் வருது...! வந்து விளையாடு..... :-))))

கதிர் said...

கவிஞ்சர் ராயலுக்கு!

தங்கள் அனைத்து கவிதைகளையும் படித்தேன். நாடி நரம்பு அத்தனையிலும் ரத்தத்துக்கு பதிலாக காதல் ரசம் ஓடினால் மட்டுமே இது போன்ற கவிதைகளை வடிக்க முடியும்.

தங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.